Jump to content

தமிழீழ தேசியத் தலைவரை அதிகம் நேசித்த புலமைப்பித்தன் ஐயா காலமானார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ தேசியத் தலைவரை அதிகம் நேசித்த புலமைப்பித்தன் ஐயா காலமானார்

spacer.png

தமிழீழ விடுதலைப்போராட்டத்தை ஆதரித்தவரும்  தமிழீழ   தேசியத்தலைவரைஅதிகம் நேசித்தவரும் அ.தி.மு.க. மேனாள் அவைத்தலைவராகவும் இருந்த  ,  பாடலாசிரியர் புலமைப்பித்தன் ஐயா   திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில்  இன்று  (08.09.2021) காலை  9.33 மணிக்கு உயிரிழந்தார்
 

https://www.thaarakam.com/news/5fc1ecda-e350-4790-9ab5-3a417efff201

தமிழ் – தமிழர் – தமிழீழம் என இலக்கியமாகவும் அரசியலாகவும் வாழ்பவர் புலவர் புலமைப்பித்தன்

breaking

தமிழ் – தமிழர் – தமிழீழம் என இலக்கியமாகவும் 

அரசியலாகவும் வாழ்பவர் புலவர் புலமைப்பித்தன்

புலவர் புலமைப்பித்தன் மறைவிற்கு  

தமிழ்க்கலை இலக்கியப் பேரவை தலைவர் 

கவிஞர் கவிபாஸ்கர் புகழ்வணக்கம்!


 

புலவர் புலமைப்பித்தன் (வயது 86)  மறைந்தார் (08.09.2021) என்ற செய்தி பேரதிர்ச்சியாய் இருக்கிறது. 

 

இராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட புலமைப்பித்தன் மரபுப் பாக்களில் தனக்கென ஓர் உத்தியை கையாண்டு தமிழ்க் கவிதை வரலாற்றில் மிக உயரத்தில் நின்றவர்! என்போன்றோர்க்கு வழிகாட்டியவர்.

 

தமிழ்த்திரைப்பட பாடலாசிரியர்களில் புலமைப்பித்தனைப் போல் மெட்டுக்கு நேர்த்தியாகவும் சரியாகவும் யாரும் இதுவரை எழுதியதில்லை. மெட்டுக்குள் சொல் அடுக்குகளை கச்சிதமாக புகுத்தியவர் புலமைப்பித்தன் மட்டும்தான் என்றால் அது மிகையில்லை. காரணம், அவர் தமிழ் இலக்கண மரபில் தன்னை ஆழமாக ஆட்படுத்தி கொண்டவர்.

 

தமிழ் இனத்தை, தமிழ்மொழியை சமூக நீதியை, தமிழர் வாழ்வியலை  திரைப்பாட்டுக்குள் தொடர்ந்து பதிவுசெய்தவர். இலக்கியத்தோடு நின்றுவிடாமல் இனத்திற்காகவும் தமது இறுதிகாலம் வரை பாடாற்றிய பாடலாசிரியர் புலவர் புலமைப்பித்தன்!

 

சங்க இலக்கியத்திற்குள் புதைந்து கிடக்கும் அரிய சொற்களை திரைப்பாடலுக்குள் கைபிடித்து அழைத்து வந்ததில் புலமைப்பித்தனுக்கு பெரும்பங்குண்டு. எம்.ஜி.ஆர் தொடங்கி இன்றைய வடிவேல் வரை அவர் எழுதிய பாடல்கள் இலக்கியச்சுவை மிக்கவை!

 

தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடங்கிய காலம் முதல் தொடர்ந்து தமது ஆதரவு நிலைபாட்டில் உறுதியாய் நின்றவர். தமிழீழத்தேசியத்தலைவர் பிரபாகரன் சென்னையில் தங்கியிருந்த காலங்களில், அவரோடு நெருக்கமாக இருந்தவர் புலவர். அவரது இல்லத்தில் அவரை தங்கவைத்து தமது மகனை போல் கொண்டாடியவர் புலவர். பாடலாசிரியன் என்ற இடத்திலிருந்து தமிழ் இனப்போராட்டத்தின் தேவையை உணர்ந்து தமிழீழ விடுதலை உணர்வாளராக இருந்தவர் புலவர். அதுமட்டுமல்ல எம்.ஜி.ஆர். ஈழப் போராட்டத்திற்கு ஆதரவு நிலைப்பாடு எடுக்கக் காரணமானவரும் புலமைப்பித்தன் அவர்கள்தான்.

 

புலவர் புலமைப்பித்தனின் மகள் கண்ணகி மரணமடைந்து போது இடுகாடுவரை வந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர் தலைவர் பிரபாகரன்  அந்த அளவிற்கு புலவருடன் நெருங்கிப் பழகியிருக்கிறார் பிரபாகரன்.

 

தமிழினப்பற்றோடு தமது படைப்பிலக்கியத்தை படைத்து, தமிழ் – தமிழர் – தமிழீழம் என இறுதிவரை உறுதியாய் நின்ற புலமைப்பித்தனின் திரைப் பாட்டிலக்கியம் – மற்றும் அவரது தமிழின அரசியல் பங்களிப்பு தமிழ்த்தேசிய இனத்திற்கான ஒளிகாட்டும் வழித்தடங்கள்!

 

தமிழுக்கு தொண்டு செய்தோன் சாவதில்லை! புலவர் புலமைப்பித்தன் தமிழின அரசியல் வழியாகவும், தமிழ்த்திரைப்பாட்டு இலக்கியத்தின் ஊடாகவும் நம்மோடு வாழ்கிறார்!

 

புலவர் புலமைப்பித்தனின் மறைவுக்கு தமிழ்க் கலை இலக்கியப் பேரவையின் சார்பில் எமது ஆழ்ந்த புகழ் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்!
 

https://www.thaarakam.com/news/b2cdf946-fba8-496d-b405-34e68b186da3

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிவரை  உறுதியான நின்று  எமக்காக ஆதரவு தந்தவரை நாம் இழந்துவிட்டோம். 
கண்ணீர் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை... நாம், என்றும் மறவோம். 🙏
கண்ணீர் அஞ்சலிகள்... ஐயா.  😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள் ஜயா…🙏 இப்பொழுது எல்லாம் எம்மவர்களே வீரஞ்செறிந்த அந்த போராட்டத்தை,வரலாற்றை,கடந்துவந்த பாதைகளை, வலிகளை மறந்து ஒரு வார்த்தையில் எல்லாவற்றையும் தூற்றிவிட்டு போகையில் தமிழக சொந்தங்கள் எதையும் மறவாமல் அந்த வரலாற்று நினைவுகளை சுமந்துகொண்டு அன்று புலிகள் இருந்தபோது எப்படி இருந்தார்களோ இன்றும் அப்படியே அந்த உணர்வுகளுக்கு உண்மையாக இருப்பதை பார்க்கும்போதெல்லாம் எம்மை அறியாலமே பாசத்தோடு கண்கள் பனிக்கின்றன..🙏🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசியத்தின் மீது பற்றும் தேசியத்தலைவர் மேல் பாசமும் கொண்ட கவிஞர். மனதில் நிற்கும் பாடல்களை  தந்த அற்புதக் கவிஞர்.ஐயாவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.