Jump to content

நட்சத்திரங்களின் வாக்குமூலம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

நட்சத்திரங்களின் வாக்குமூலம்

இதழிலும், இடது கன்னத்திலும் மிருதுவான முத்தங்களை வழங்கி கழுத்துக்குச் சென்று வியர்வை வாடையைப் பொருட்படுத்தாது கீழிறங்கினான். முத்தமிட்டப்படியே அவள் மார்பகங்களுக்குச் சென்றடைந்தான். அவ்வப்போது தலையைத் தூக்கி செயலிலிருந்து விடுபட்டு அவள் முகம் காணவும் தவறவில்லை. கண்கள் சொக்கி மோனத்தில் இருந்தாள். அவளின் மேலாடையைக் களைய முற்படும் போதே அவனுள் எழுந்த படபடப்பு அவனைத் தொந்தரவுக்குள்ளாக்கியது. எவ்வகையிலாவது இம்முறை மன வேலியை கடந்து சென்று விட வேண்டும் என்றெண்ணி முனைப்புடன் கூடலில் ஈடுபடலானான். மேலுள்ளாடையையும் அவிழ்த்து அவள் மார்பகங்களைத் தற்போது, அரிதாக நடைபெறும் ஒரு நிகழ்வை கண்டதைப் போல் வெறித்துக் கொண்டிருந்தான்.

நினைவு திரும்பியவள் போல் கண்களை முழுதாகத் திறந்து புன்முறுவலுடன் அவனை நோக்கி “என்ன?” என்பது போல் புருவமேற்றினாள். அவன் சொல்லற்று திகைத்துப் போயிருந்தான். அவளே அவன் தலையை வருடிக் கொடுத்து ஊக்குவித்துத் தன் மார்பகங்களுக்கு இட்டுச் சென்றாள். அவன் இயக்கப்பட்ட பொம்மை போல் செயலாற்றத் தொடங்கினான். ஆனால், அவன் ஆழ்மனதில் ஒளிந்து கொண்டிருக்கும் அந்தக் கண்கள் அவனை எப்போது வேண்டுமானாலும் தாக்கும் என்றவன் அறியாமலில்லை. முகத்தை முலைகளில் பதித்துக் கொண்டான். முலைக்காம்புகளை மெல்லச் சுவைக்கத் தொடங்கும் போது அவளிடமிருந்து “ஜோ…..ஷு….வா……” என்ற முனகலோசை கேட்டது.

இவன் சட்டென்று எதனாலோ தாக்கப்பட்டது போல் அவளுடலிலிருந்து விலகினான். பிம்ப அலைகள் அவனுள் எழுந்த படியே இருந்தன. அதிலிருந்து தப்பிக்க அவனுக்கு இன்று வரை வழி தெரியவில்லை. தலையை வேகமாக ஆட்டி ஆட்டி பிம்ப நிரையிலிருந்து விடுபட முயன்றான். பல பிம்பங்களுக்கு நடுவே ஒரே ஒரு பிம்பம் தனித்து எழத் தொடங்கியது. இடது பக்கக் கண். கூரிய கண். பிறரை பார்வையாலேயே துளைத்து எடுக்கும் கண். கண்களின் ஒளியில் பிறரை எரியச்செய்யும் வீரியம் மிகுந்த கண். ஆனால், அத்தகைய கண் வேண்டுதலின், கெஞ்சுதலின் எல்லைக்குச் செல்வதாக உருமாறத் தொடங்கியது. சற்று உற்று நோக்கினால், கருவிழிகளில் அவன் முழு உருவையும் பிரதிபலிக்கும் மாபெரும் கண். கைகளை நீட்டி ஆதி மானுட தர்மங்களைக் கோரி நிற்கும் கண்.

வேகமாக மூச்சு வாங்கிக்கொண்டே இருக்கக் கட்டிலின் விளிம்பிற்குச் சென்றான். தலையில் கை வைத்துக் கொண்டு ஐந்து நிமிடம் முழுதாகப் பேச்சற்று அமர்ந்திருந்தான். சற்றே சமநிலைக்கு வந்தபின் அருகே இருந்த சிகரெட் பாக்கெட்டிலிருந்து ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தபடியே பின் திரும்பி அவளிடம் “வேண்டுமா?” என்று தலையசைப்பால் கேட்டான். அவள் அவனைப் பிரமிப்புடன் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

சில மணித்துளிகளுக்குப் பிறகு “இல்ல இப்போ வேணாம்” என்று பதிலுரைத்தாள். பின், ஆடைகளைச் சரி செய்து கொண்டு அவனருகே அமர்ந்து தன் கைகளை அவன் இடது கையின் இடைவெளியில் பொருத்தி அவன் தோளில் சாய்ந்து கொண்டு,

“ஜாஷ். நான் ரொம்பப் பொறுமையா தான் இருக்கேன். ஆனா, இப்படியே கன்டினியூ பண்ண முடியாது என்னால” என்றாள். கடைசிச் சொல் தயக்கம் மற்றும் ஏக்கம் கலந்த அழுகுரலுடன் வெளிவந்ததைக் கவனித்துச் சிகரெட்டை அணைத்து விட்டு அவளை நேருக்கு நேராக நோக்கினான்.

“பிரார்த்தனா, ஐ நோ. ஆனா, சில விஷயங்கள விட்டு வர முடியல என்னால.”

“உன்னால கிளைமாக்ஸ நெருங்க முடியல. எதுவோ உன்னைய தடுக்குது..…. எனக்கு உன்னைய புரிஞ்சுக்க முடியல. எது உன்னைய தடுக்குது?”

“நான் என்னால முடிஞ்சத செஞ்சுட்டு தான் இருக்கேன். யோசிச்சுப் பாரு. மூணு மாசம் முன்னாடி வரைக்கும் உன்னைய தொட கூட முடியாம இருந்தேன்”

“ஜாஷ். எனக்கு உன்னைய ரொம்ப புடிக்கும். அது உனக்கும் தெரியும்.. எனக்குப் புரியுது நீ ஏதோ ஒரு ட்ராமால (trauma) இருக்கனு. பட் ஐ நீட் யூ ஃபிசிக்கல்லி அஸ் வெல். அந்தப் பாழாப் போன பூனேல போன வருஷம் என்ன நடந்ததுனு சொல்லாம என் உயிர வாங்குற” என்று கூறி அழத் தொடங்கினாள்.

ஜோஷுவா செய்வதறியாது அவளைக் கட்டியணைத்தான்.

“டே… அழாதடா. நான் என்ன சொன்னாலும் உனக்குப் புரியவைக்க முடியாது”

“டிட் யூ ஹேவ் செக்ஸ் வித் அதர் வுமன்?” அவனணைப்பிலிருந்து கோபத்துடன் விடுபட்டு அவனை நோக்கி சீறினாள்.

“….”

“சொல்லித் தொலையேன்” என்று குரலை உயர்த்தினாள்.

“நோ”

“அப்புறம் என்ன எழவு தான் நடந்துச்சு? நான் வெறும் செக்ஸ்காக ஆர் என்னுடைய ப்ளெஷருக்காகச் சொல்லல. எனக்கு உண்மையிலேயே உனக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணனும்னு தோணுது. அப்படி என்னால ஹெல்ப் பண்ண முடியலைன்னா “பார்ட்னர்”னு நான் எதுக்கு இருக்கேன்? “

“சொல்றேன். கொஞ்ச நாள் ஆகட்டும். தெரப்பி இஸ் ஹெல்பிங்”

“மண்ணாங்கட்டி. மெடிக்கேஷன் போயிட்டே தான் இருக்கு. எதுவும் இம்ப்ரூவ் ஆகுற மாதிரி தெரியல”

“நீ அப்டி சொல்ற. பட் ஐ கேன் ஃபீல் தி டிஃபரென்ஸ்.” என்று ஜோஷுவா முடித்தான்.

தேவைக்கதிகமாகப் பொரிந்து தள்ளிவிட்டோமோ என்றெண்ணி, சற்றே நிதானத்துக்கு மீண்டு அவனை மீண்டும் அணைத்துக் கொண்டே, “சரி. உனக்கு எப்போ விருப்பமோ அப்போ சொல்லு. நான் உன்னைய ஜட்ஜ் பண்ண மாட்டேன்.”

சில நொடிகள் இருவரும் பேசவே இல்லை. திறந்திருந்த பால்கனியிலிருந்து உள்நுழைந்த பெங்களூரின் நள்ளிரவு காற்று அவர்களைச் சற்று இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தது.

அடர்த்தியான அந்த அமைதியைக் கலைக்க அவனே வேறு திசை நோக்கி பேச்சை மடை மாற்றினான்,

“நான் அடுத்து எப்போ க்ளாஸ் எடுக்க வரணும்?”

“அடுத்த வாரம் வா”. சற்று இடைவெளி விட்டு, “என்னுடைய சீனியர் டைரக்டர் உன்னைய பாக்கணும்னு சொன்னாங்க.”

“எதுக்கு?”

“நீ இவ்ளோ நாளா சப்போர்ட் பண்றதுக்கு ஏதோ அப்ரிஷியேட் பண்ணப் போறாங்களாம். காசும் கொடுக்குற. அப்பப்போ வந்து கிளாஸ்லாம் எடுக்குற.”

“அப்ரிஸியேஷன்லாம் தேவையே இல்லாத விஷயம்.”

“அவங்களோட விருப்பம் அது. க்ராட்டிட்யூட்னு சொல்லலாம். ஆல்சோ, புதுசா ஒரு பொண்ணு வந்துருக்கா. போன வாரம்.”

“கவுண்ட் அதிகமாயிட்டே இருக்கே”

“என்ன பண்றது சொல்லு. விமன் ஹேவ் டு ரீஸ்டார்ட் தெயர் லைஃப். அதுவும் வெறும் விக்டிமா இருக்கும் போது எதுக்கு பதுங்கி ஒதுங்கி உட்காரனும்?”

“பட், சொஸைட்டிங்கிற புல்ஷிட் இருக்கே. நம்ம எல்லாருக்கும் என்ன நடந்ததுன்னு சொல்லிக்கிட்டே இருக்கும்”

“ஆமாம். ஆனா அத எல்லாம் பாத்தா வேலைக்காகுமா?. இப்பிடியே பயந்துட்டு இருந்தா வாழவே முடியாது. நாம லவ் பண்றப்போ இருந்த சப்போர்ட் பத்து மாசத்துக்கு முன்னாடி லிவ்-இன் ஸ்டார்ட் ஆனதுலேர்ந்து இல்ல. வாட் டு டூ..”

“100%”

“நமக்குப் புடிச்ச மாதிரி வாழ்ந்தா போதும் வித் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி. அத தான் எங்க ஹோம்ல இருக்குற பொண்ணுங்களுக்குத் தினமும் சொல்லிட்டு இருக்கோம்”

“கிரேட்”

சில நொடி மௌனத்திற்குப் பின்,

“ஆனா, நீ சரி இல்ல. நான் லவ் பண்ணது வேற ஜாஷ். உன்னுடைய ட்ராமா அண்ட் டிப்ரெஷன்க்கு நானும் பலிகடா ஆகுறேன். அதுவும் கரெக்ட்டா லிவ்-இன் ஆரம்பமாகும் போது நீ பேயடிச்ச மாதிரி ஆயிட்ட”

அவன் எதுவும் பேசாமல் இன்னொரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தான்.

***

பிறிதொரு நகரம் என்ற சுவடே இல்லாதவாறு பெங்களூரின் சாயலை பூண்டிருந்தது பூனே. மொழியும், மனித முகங்களும் வேறு. ஓலா, நெடும்பாலங்கள், இரைச்சல் மிகுந்த மக்கள் கூட்டம், அமேசான் மற்றும் நெடஃபிளிஸ் தளத்தில் வெளியாக இருக்கும் அல்லது வெளியான படங்களின், இணையத் தொடர்களின் வண்ண விளம்பரங்களைத் தாங்கிய மாபெரும் பேனர்கள் என்று கண்களுக்குப் புலப்படும் கலாச்சார ஒப்புமைகள் விரவிக் கிடந்தன.

ஜோஷுவாவும் அவன் நண்பன் மயன்கும்(Mayank), மயன்கின் நண்பனின் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர். ஒவ்வொரு வருடமும் பூனேயில் நடைபெறும் “என்.எச்.7 வீக்கெண்டர்” இசைத் திருவிழாவை பற்றி ஜோஷுவா அண்மையில்தான் கேள்வி பட்டிருந்தான். அதுவும் இவ்வருடம் அவனுக்குப் பிடித்த இசைக் குழுவான “காட் ஐஸ் அன் ஆஸ்ட்ரானாட்” பங்கு பெறுவதாகக் காதுக்குச் செய்தி வந்தவுடன் அலுவலகத்தில் ஒத்த இசை ரசனையுடைய நண்பன் மயன்கிடம் கலந்தாலோசித்துப் பூனே பயணத்திற்கு ஏற்பாடு செய்தான். தங்குவதற்கு மயன்க் ஏற்பாடு செய்வதாகக் கூறினான்.

மூன்று நாள் இசைத் திருவிழா. பெரும்பாலும் ராக் மற்றும் போஸ்ட் ராக் இசைக் குழுக்கள். வண்ண விளக்குகள். தலை ஒடிந்து விழும் அளவிற்கு அதிவேகமாக உச்சபட்ச இசைக்கேற்ப தலையை ஆட்டிக்கொண்டே இருக்கப் போகும் மக்கள் கும்பல். ஜோஷுவா இவ்வனைத்தையும் எதிர்பார்த்தவாறு அவனுக்குப் பிடித்த போஸ்ட் ராக் இசையிலேயே மூழ்கி இருந்தான் கடந்த சில நாட்களாக.

ஓலாவிலிருந்து இறங்கிய ஜோஷுவாவையும், மயன்கையும் மயன்கின் நண்பன் வரவேற்றான். முகமன்களுக்குப் பிறகு மூவரும் மயன்கின் நண்பனின் வீட்டிற்கு நடக்கத் தொடங்கினர். சுற்றிலும் வில்லாக்கள். மயன்கின் நண்பன் வசிப்பது மாபெரும் வில்லா. ஆனால், மனித நடமாட்டமே இல்லை. ஜோஷுவா ஆர்வம் மிகுந்து அங்குள்ள வீடுகள் பற்றி நிறைய கேட்கத் தொடங்கினான். அவ்வீடுகள் அனைத்தும் யாருமற்று பராமரிப்பின்றி இருப்பதாக மயன்கின் நண்பன் கூறினான்.

வீட்டிற்குள் நுழைந்தவுடன் ஜோஷுவா கஞ்சா நெடியை முகர்ந்தான். டூப்லெக்ஸ் வீடு. மயன்கிற்கும் ஜோஷுவாவிற்கும் ஒதுக்கப் பட்டமாடி அறைக்குக் கூட்டிச்சென்றான். மாடிப்படியெங்கும் பல இசை குழுக்கள் மற்றும் திரைப்படங்களின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அவர்கள் இருவருக்குமான அறையைக் காட்டிவிட்டு அவர்களை எவ்வித கூச்சமுமின்றி இருக்கச் சொல்லி பற்கள் தெரியாதவாறு சிரித்துவிட்டு அவ்விடத்தை விட்டு விலகினான் அவன் நண்பன்.

***

எழ முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் உடலெனும் பெருஞ்சுமையை எப்பாடு பட்டாலும் அவனால் அசைக்க முடியவில்லை. சுற்றம் முழுக்க மெழுகுவர்த்திச் சுடரிலிருந்து வெளிவரும் புகை வாடை. ஒரு வழியாக உடல் சற்றே இசைந்து கொடுத்தது. மாபெரும் தேவாலயம். இவ்வளவு உயரமான உச்சவரம்பை உடைய தேவாலயத்தை அவன் வாழ்நாளில் கண்டதில்லை. பக்கவாட்டில், எளிதில் கணக்கிட முடியா நாற்காலிகள் அமைதியாக ஜெபிப்பதைப் போல் தோன்றியது. தூரத்தில் நான்கைந்து பேர் மட்டுமே சேர்ந்து அசைக்கக் கூடிய நுழைவாயில் கதவு. வாசலை பார்த்தவாறு அமர்ந்திருக்கிறோம் என்றுணர்ந்து உடலை திருப்ப முயன்றான். திரும்பும் போது சுற்றிலும் நோட்டம் விட்டான். சுவரெங்கும் கர்த்தரின் படங்கள். சிலுவையில் அறையப்பட்ட கர்த்தர், ஆட்டுக்குட்டியுடன் கர்த்தர், கடைசி இரவுணவை சீடர்களுடன் உண்ணும் கர்த்தர் என்று பல வண்ண ஓவியங்கள்.

ஒரு வழியாக மறுப்பக்கம் திரும்பிய பின் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் அதிர்ச்சியின் உச்சத்தை அடைந்தான். கர்த்தரே அவன் முன் சிவப்பு அங்கியில் நின்று கொண்டிருந்தார். அவன் பேச்சு மூச்சற்று அவரையே சில நொடிகள் வைத்த கண் எடுக்க மனமின்றிக் கண்டுகொண்டிருந்தான். ஏனென்று சொல்லவியலாத கழிவிரக்கம் திடீரென்று அவனிடம் தோன்ற கண்களில் துளிர்த்து நின்ற கண்ணீர் பூச்சரமாய்க் கன்னச் சதைகளை ஈரமாக்க தன் கையை அவரை நோக்கி நீட்டினான். விரிந்த இதழ்களுடன் கர்த்தரும் அவனை நோக்கி கையை நீட்ட முற்பட்டார்.

ஆனால், சட்டென்று புருவத்தை நெளியச்செய்து பாதி வழியில் கையைக் கீழிறக்கி பின்னே நகர ஆரம்பித்தார். அவன் ஒன்றும் புரியாதவனாக அவரை நோக்கி முன்னேறினான். ஆனால், அவர் மிக வேகமாக அவனைப் பார்த்துக் கொண்டே பின்னேறினார். ஒரு கட்டத்தில் அவனால் தொட முடியாத எல்லைக்குச் சென்று விட்டார். அவன் கை அவரின் பற்றுதலுக்காக அந்தரத்தில் நீண்டு கொண்டே இருந்தது. அவன் கண்களின் முன்பே அவர் சிலையாகி சுவரில் மாட்டப்பட்ட படமாகிப் போனார்.

விழிப்புத் தட்டியது. மணி நான்கு. அவனுக்குப் பதட்டம் அதிகமாகும் முகூர்த்த நேரமிது. எழுந்த உடனேயே மாபெரும் வெறுமையை உணர்ந்தான். அதைக் கடக்க அறைக்குள்ளேயே அங்கும் இங்கும் வேகமாக நடக்கத் தொடங்கினான். பதட்டம் நிற்கும் வரை வேக நடை என்பது அவன் கண்டுகொண்ட வழி. நடக்கும் போது விரல்களில் சொடுக்கு எடுத்துக் கொள்வதும், அவ்வப்போது கைகளை உதறிக்கொள்வதும் அவனது வழக்கம். பிரார்த்தனாவின் அறைக்குச் சென்று அவளை எழுப்பிப் பேசலாம் என்றால் அதற்கும் மனம் ஒப்ப மறுத்தது. கடந்த வருடம் லிவ்-இன் ஆரம்பமாகும் போதே இவன் கேட்டுக்கொண்டதற்கிணங்க இருவரும் தனி அறையில் உறங்கத் தொடங்கினர்.

தூக்கம் பிடிக்காமல் பால்கனி கதவுகளைத் திறந்து மிச்சமிருந்த நட்சத்திரங்களையும், நிலவையும் பார்க்கத் தொடங்கினான். மெதுவாகத் தனக்குள் “சாரி, சாரி, ஐயம் வெரி சாரி” என்று கண்களில் கண்ணீர் தேங்க கூறிக்கொண்டே இருந்தான். சில மாதங்களுக்கு முன் வரை நட்சத்திரம் மற்றும் நிலவை கண்டாலே பிரக்ஞை இழந்து எதுவோ ஆக்கிரமித்தது போல் செயலழிந்து சிலையாக மாறி அவனுடல் நடுங்கியது. எக்ஸ்போஷர் தெரப்பி மூலம் படிப்படியாகத் தினமும் நட்சத்திரத்தையும் நிலவையும் கண்டு கண்டு சற்று அலுக்கத் தொடங்கியது. ஆனாலும், அதிகாலையில் உணர்ச்சி உச்சத்தில் இருக்கும் சமயங்களில் நட்சத்திரங்களையும் நிலவையும் காணும் தோறும் அவனிடம் குடிபுகும் பதட்டத்தைக் குறைக்க முடியவில்லை.

கடந்த ஒரு வருடத்தில் இரண்டு வேலைகள் மாற்றலாகினான். அலுவலகத்தில் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு எப்போதும் தன்னை நிரப்பிக் கொண்டே இருந்தான். அலுவலகத்தில் ஏதாவது பெண்ணின் மேலாடை கலைந்திருப்பதைக் கண்டுவிட்டால் அவன் மனம் படபடக்க ஆரம்பமாகும். அதுவும் பெண் ஊழியர்கள் அவனிடம் கை குலுக்கக் கை நீட்டும் போது மிகுந்த தயக்கத்துக்குப் பின் மட்டுமே தன் கையை நீட்டுவான். பல நாட்கள் வீட்டில் இருந்து கொண்டே வேலை பார்த்தான்.

வீட்டில் பிரார்த்தனா இருந்தால் அவளுடன் பேச்சு கொடுத்துக் கொண்டே இருப்பான். பிரார்த்தனா அருகே இல்லையெனில் மிகக் கடினமான புத்தகம் ஒன்றை எடுத்து வைத்து உட்கார்ந்துவிடுவான் அல்லது யூட்யூபில் தத்துவம் மற்றும் உளவியல் சம்பந்தப்பட்ட உரைகளைக் கேட்டுக்கொண்டிருப்பான். தர்க்கத்திலோ அல்லது ஆழ்ந்து சிந்திக்கக் கூடிய கடினமான விஷயங்களிலோ எப்போதும் உலவி கொண்டிருப்பது தன் எண்ணங்களை வேண்டாத இடங்களுக்குச் செல்லப் போடும் தடை என்றறிந்து கொண்டான்.

சில நாட்களில் பல மணி நேரமாகக் குளித்துக் கொண்டே இருப்பான். தண்ணீர் அவனுடலுக்கு ஏனென்று தெரியாத மன நிம்மதியை கொடுத்தது. நீர் அவன் துயரங்களையும் பாரங்களையும் இல்லாமலாக்குவது போல் இருந்தது. பக்கெட் முழுக்கத் தண்ணீர் நிரப்பி, தலையை முழுவதுமாக முக்க அவன் விரும்புவான். சில நாட்களில், குளியலின் போது உடலின் வழியே தண்ணீரும் கண்ணீரும் சேர்ந்து பயணிக்கும். அழுவது இவ்வளவு ஆறுதல் தரும் செயலென முன்னெப்போதும் அவன் உணர்ந்ததில்லை. சமயத்தில் கத்தவும் தோன்றும். அவ்வொலி குளியலறையில் எதிரொலித்து அவன் காதையே அடையும் போது வினோதமாக உணர்வான்.

அலுவலகத்திலோ பிரார்த்தனாவிடமோ கூட சற்றே அதிகமாகச் சிரித்துப் பேச நேர்ந்தால் அவன் மனம் உடனடியாக இருட்டை நோக்கிப் பயணப்பட விருப்பப்பட்டது. தான் ‘எப்படிச் சிரித்து மகிழ்ந்து இவ்வுலகில் இருக்கலாம்’ என்ற விசித்திர கேள்வி அவனைத் துரத்தியது. அதே சமயம், முன்னைப்போல் வெகு இயல்பாக இருக்கவும் முயற்சி செய்து கொண்டிருந்தான். இவ்வாறு முன்னும் பின்னும் ஆடிக் கொண்டு அவனகத்துள் நுழைந்த முரண்பாட்டினால் தலைவலி எடுத்து தூக்கமற்று பல இரவுகளைக் கழித்தான். அனைத்தையும் பழக்கத்தினூடாக மாற்றி விடலாம் என்றெண்ணினான். உடற்பயிற்சியில் தீவிரமாக இறங்கிய பின்பு இரவில் தூக்கம் வருவது சற்றே எளிதாக இருப்பதாகக் கருதினாலும் வெகு சில நாட்களில் அதுவும் பயனளிக்கத் தவறியது.

கடந்த சில மாதங்களாக எண்ணங்கள் அவனை ஆக்கிரமித்து இம்சிக்கும் போதோ, ‘நான் நல்லவன் தான். அப்டி என்ன நான் பெருசா தப்புப் பண்ணிட்டேன்’ என்று உள்ளிருந்து ஒரு குரல் எழும்போதோ, அவன் தன்னையே அறைந்து கொள்ளும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டான். ஏதேனும் ஒரு வகையில் அவன் வலியை உணர விழைந்தான்.

***

மஹாலக்ஷ்மி பேலஸ் மைதானத்திற்கு மதியம் மூன்று மணி அளவில் சென்றடைந்தனர். ஜோஷுவாவுடன் மயன்க், மயன்கின் நண்பன், நண்பனின் காதலி மற்றும் வேறு சில நண்பர்களும் உடனிருந்தனர். அவர்களின் சம்பாஷணைகளில் ஜோஷுவாவால் நுழைய முடியவில்லை. அனைவருமே தன்னை விடக் குறைந்தது மூன்று வயது இளையவர்கள். சிறு வயதிலிருந்தே ஆங்கிலம் மட்டுமே பேசும் பள்ளி, கல்லூரிகளில் படித்து வளர்ந்த ஜென் Z மக்கள். ஜோஷுவா, தனதுலகம் வேறு அவர்களின் உலகம் வேறு என்பதை மிகத் தெளிவாக உணர்ந்து கொண்டான். அவ்வப்போது அவர்கள் இவனைப் பார்த்து எதையோ கூறும் போதெல்லாம் வெறுமனே சிரித்து வைத்தான்.

அரைக் கிலோ மீட்டர் நடந்து மைதானத்தின் மையத்திற்கு வந்தடைந்தனர். அப்போதே பல இசைக் குழுக்கள் வெவ்வேறு மூலைகளில் இசை வெள்ளத்தை வழங்கிக்கொண்டிருந்தனர். மைதானத்தில் அங்கங்கு ஸ்டேஜ் அமைக்கப்பட்டிருந்தது. புறா கூட்டம் போல் இங்கொன்றும் அங்கொன்றுமாக மக்களும் கூடியிருந்தனர். நூறு பேருக்கு ஒரே சமயத்தில் சாமி வந்து ஆடுவதைப் போல் ட்ரம்ஸ்களின் இசைக்கேற்ப தலைகளை ஆட்டியபடி ஈடுபட்டிருந்தனர் அனைவரும். முழுக்கால் சட்டை அணிந்த எந்தப் பெண்ணையும் பார்க்க முடியவில்லை. மைதானத்தின் நுழைவாயிலில் மது விற்பனை ஏகபோகமாக நடந்து கொண்டிருந்தது. ஒருவர் கையிலும் மதுவோ, சிகரெட்டோ இல்லாமல் இல்லை. ஜோஷுவாவும் அவனுடனிருந்தவர்களும் நிகழ்ச்சி நிரலை சரி பார்த்துக் கொண்டு ஒரு இசை குழுவின் நிகழ்ச்சி நடந்து முடிந்ததும் அடுத்த இசை குழுவிற்குத் தாவிக் கொண்டிருந்தனர்.

இருளத் தொடங்கியது. வண்ண விளக்குகள் மேடையில் அதன் மாயாஜாலத்தைக் காட்டிக்கொண்டிருந்தது. ஒளி, ஒலி, மது, சிகரெட் என்றனைத்தும் கலந்து மக்களை வேறொரு நிலைக்கு இட்டுச் சென்றது. ஆண்களும் பெண்களும் நடு மைதானத்தில் முத்தங்களைப் பரிமாறத் தொடங்கினர். நீண்ட இதழ் முத்தங்கள். இசை, வெட்டவெளி, போதை, தனக்குப் பிடித்த துணை, இரவு. பலரின் வாழ்வில் இத்தருணங்கள் மிக முக்கியமான ஒன்றாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

ஜோஷுவா சுற்றிலும் நோட்டம் விட்டு ஏக்கத்தில் திளைக்கத் தொடங்கினான். தனியாக ஓரிடத்தில் அமர்ந்து இசையில் மட்டும் கவனத்தைக் கொண்டு வர முயற்சித்தான். அவன் அமர்ந்த இடத்திற்கு அருகே இருவர் முத்தங்கள் கொடுத்த உணர்ச்சி வேகத்தில் பிறர் பற்றிய பிரக்ஞை அன்றி வேறு சில செயல்களிலும் இறங்கத் தொடங்கினர். பிரார்த்தனாவிற்குக் குறுஞ்செய்தி அனுப்பிப் பார்த்தான். அவளுடன் எப்போது கடைசியாகக் கூடினோம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் அதே வேலையில் அவளிடமிருந்து பதில் வந்தது.

“சொல்லு டா. இப்போ ஒரு சின்ன பிரெச்சனைல இருக்கேன். ஒரு விக்டிமோட ஃபேமிலி எக்கச்சக்க பிரச்சன பன்றாங்க. போலீஸ் கிட்ட போக வேண்டியிருக்கும்னு நெனைக்கிறேன். அப்புறம் சொல்றேன் டீட்டைல்டா ” என பதில் வரவும் அவள் பதற்றத்தைப் புரிந்துகொண்டான்.

“ஓ… ஓகே” என்ற குறுஞ்செய்தியுடன் நிறுத்திக் கொண்டான்”

பிரார்த்தனாவுடன் தொடங்கப் போகும் லிவ்-இன் வாழ்க்கையைப் பற்றிய கனவில் மூழ்கி சிகரெட்டை இழுத்துக் கொண்டிருந்தான். புகைக்கு நடுவே மக்கள் கூட்டம் மங்கலாகத் தெரிந்தது.

***

இரவு அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர். வீட்டில் ஏற்கனவே சிலரும் இருந்தனர். வீட்டிலும் இரைச்சல் மிகுந்த இசை. மயன்கும் ஜோஷுவாவும் அவர்களின் மாடி அறைக்குச் சென்று குளித்து விட்டு வந்து சேர்ந்துகொள்வதாகச் சென்றனர்.

அறையில் வேறொரு மனித நாடமாட்டம். பணிப்பெண் அறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள். “கித்னா டைம்?” என்று மயன் கேட்க “தஸ் மினிட் பையா.” என்று நிமிர்ந்து பதிலளித்தாள் பணிப்பெண். “டீக் ஹை.. தோடா ஜல்தி..” “டீக் ஹை பையா.”

எதிர்பார்த்தபடி ஜோஷுவாவால் எதிலும் முழு மனதுடன் இயங்க இயலவில்லை. பிரார்த்தனாவின் குறுஞ்செய்தியை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். இந்நேரம் பெங்களூரில் இருந்திருந்தால், பிரார்த்தனாவிற்கு உதவியிருக்கலாமே என்றெண்ணத் தொடங்கினான். ஏனென்று விளங்காத குற்றவுணர்வு அவனை ஆக்கிரமித்தது. பிரார்த்தனா அங்கு யாரோ ஒரு பெண்ணிற்கு உதவி செய்து கொண்டிருக்கிறாள். தான் இங்குக் குடி, கஞ்சா, சிகரெட், அதிரச் செய்யும் இசை, உரையாட முடியாத மக்கள் கூட்டம் போன்றவற்றில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பதாக எண்ணினான்.

ஆனால், வந்தாயிற்று. ஜோதியில் ஐக்கியமாவதை தவிர வேறு வழியில்லை என்று சுய சமாதானத்துக்குத் தன்னைக் கட்டாயப்படுத்திக் கொண்டான்.

***

பொன்னிற சிகை முன் விழுந்திருக்கச் சொற்ப உடையை அணிந்த மாதர்களின் படை சூழ தான் கானகத்தின் நடுவே கட்டிலில் கட்டுண்டிருப்பதை உணர்ந்தான். சுற்றிலும் பெரிய மரங்களும் பல மிருகங்களின் கூச்சல்களும் அவன் புலன்களுக்கு எட்டியது. அழகிகள் கூட்டமாக அவனை நெருங்கி அணிந்திருந்த ஆடையையும் களைந்து அவனைத் தூண்டிக்கொண்டிருந்தனர். மார்பகங்களும் யோனிகளும் அவன் கண்களை நிரப்பின.

எப்பாடுப் பட்டாவது இக்கனவின் பிடியிலிருந்து வெளியேற வேண்டும் என்று உடலை வேகமாக அசைக்க முயன்றான். கனவுலகில் தன் செய்கைகளைத் தான் கட்டுப்படுத்த முடியும் என்று நம்பினான். கைகளையும் கால்களையும் கனவுலகில் ஆட்டி அசைத்துக்கொண்டே இருந்தால் ஒரு புள்ளியில் விடுபட்டு விடலாம் என்று கணித்தான். அதற்குள் பெண்கள் அவனுடலை தீண்டத் தொடங்கினர். அவன் அச்சம் கொண்டு அழத் தொடங்கும் வேலையில் திடீரென்று எங்கிருந்தோ வந்து குதித்த பிரார்த்தனா மற்ற அழகிகள் அனைவரையும் அகற்றினாள். அனைவரும் காட்சியிலிருந்து மறைந்தனர். இவனுக்குப் படபடப்பு நின்று சொற்ப நேர அமைதி கிட்டிய அதே வேலையில் பிரார்த்தனாவும் தன் ஆடைகளைக் களைய ஆரம்பித்து அவன் தொடையின் இடுக்கில் அழுத்தமாகக் கையைப் பதித்தாள். “ப்ளீஸ் பிரார்த்தனா. வேண்டாம் டா. அவ இதெல்லாம் நடக்க விடமாட்டா” அழுகுரலுடன் கெஞ்சினான். பிரார்த்தனா, “யாரு?” என்றாள். “அவள உனக்குத் தெரியாது” என்று கூறி பதட்டப்பட்டான்.

பிரார்த்தனா சத்தம் போட்டு சிரித்தாள். இவன் அவளைப் பிரம்மித்துப் பார்க்கும் அதே வேளையில் அவளுருவம் மறைந்து வேறொரு பெண்ணின் உருவம் நுழைந்தது. “பிரார்த்தனா?” என்று வினவினான். புதிதாகக் காட்சியில் குதித்தவளின் குனிந்த முகம் கூந்தலினால் மறைக்கப்பட்டிருந்தது. அவன் அமைதியானான். பின் மெதுவாகத் தலையை உயர்த்தி இடது கண் மட்டும் தெரியுமாறு அவனைக் கண்டது அந்த உருவம். இவன் பேதலித்தவன் போல் உளறத் தொடங்கினான். அலறினான். கைகளை வெகு வேகமாக ஆட்ட முயன்று தோற்றான். அமானுஷ்ய பெண்ணுருவம் அவனுடலின் மீதேறி சில நொடிகளுக்கு அப்பால் அவன் குறியை ஓங்கி மிதித்தது.

திடுக்கிட்டு விழிக்கும் போது மணி ஐந்து. வழக்கம் போல் மூச்சு வாங்கலும் படபடப்பும் அதிகமாக, அறையினுள் நடக்கத் தொடங்கினான். வெளியே ஓட செல்லலாமா என்று யோசித்தான். பின், பிரார்த்தனாவின் அறைக்குச் சென்று அவளருகே போய்ப் படுத்துக் கொண்டான். அவளின் அருகாமை சற்றேனும் நிம்மதியைக் கொடுக்கும் என்று நம்பினான். ஓசை எழாதவாறு அவளருகில் சென்று படுத்துக் கொண்டாலும் அவள் சலனப்பட்டுத் துயில் களைந்து விழித்துப் பார்த்தாள். இருவரும் நீண்ட நேரம் கண்ணோடு கண் நோக்கினர்.

“என்னாச்சு? ட்ரீம்ஸ் எகைன்?” அவள் குரலில் தூக்கம் கலந்திருந்தது.

“எஸ்”

“என்ன கனவு?”

“சொல்ற மாதிரி எதுவும் இல்ல?”

சற்றே கனிந்த குரலில் “நீ எதுவும் சொல்லவும் மாட்ட, தேம்பி தேம்பி அழ மட்டும் செய்யுற. ஷேர் பண்ணுடா. கொஞ்சம் பாரம் குறையும்”

“பண்றேன் பண்றேன். இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு”

“ஸீ. இப்போ நான் சொல்லப் போறது உனக்குக் கேட்டு கேட்டு புளிச்சு போயிருக்கலாம். “இட்ஸ் ஓகே டு பி நாட் ஓகே”. எங்க ஹோம்க்கு வர்ற எல்லார்கிட்டயும் இதைத் தான் சொல்வோம். “எவரித்திங் ஹேப்பன்ஸ் ஃபார் எ ரீசன்”. “நீங்க எழுந்து நிக்கணும்……”

“ப்ளீஸ். தயவு செய்து எதையும் ஆரம்பிக்காத. எனக்குக் கொஞ்சம் தூக்கம் வேணும். எனக்கு என்ன நடக்குதுன்னு எனக்கு நல்லா தெளிவாவே தெரியும். நாளைக்குக் குரியன் கூடத் தெரப்பிச் செஷன் இருக்கு”

“அப்புறம் என்ன மயித்துக்கு என் கூடப் படுக்க வந்த?”

கண்களை அகல விரித்து விடுக்கென்று எழுந்து சென்றாள்.

***

குளித்து விட்டு கீழே சென்றனர். குறைந்தது ஆறிலிருந்து ஏழு பேர் சுற்றி அமர்ந்திருந்தனர். “விர்ஜின் ஸ்டஃப்..” என்று கூறி மயன்கின் நண்பன் பழைய செய்தித்தாள்களால் ஆன பெரிய பொட்டலம் ஒன்றை திறந்து, அதிலுள்ள கஞ்சா இலைகளை மேஜையில் கொட்டி, சுத்தம் செய்து, இலைகளைத் தேர்ந்தெடுத்து நசுக்கி, மெல்லியத்தாளில் அதைப் பரப்பி, சிகரெட்டிலிருக்கும் புகையிலையை எல்லாம் அதில் கலக்காமல் அந்த மெல்லிய தாளை மும்முறை நாவினால் தேய்த்து அதை ஒட்டச்செய்தான்.

மயன்கும் அவனது நண்பனும் ஹிந்தியில் உரையாடத் தொடங்கினர்.

“இங்கேயேவா?” என்று வினவினான் மயன்க்.

“மொட்டைமாடி” என்று கூறி நிறுத்திய நண்பன் மயன்கின் சந்தேகத்தை ஊகித்தவாறு,

“கண்டிப்பாக இசை உண்டு. இசையில்லாமல் கஞ்சா உள்ளே சென்றால் உனக்கு மட்டுமல்ல எங்கள் யாருக்குமே சரி வராது. பக்கத்து மொட்டைமாடி, நான் முன்னரே கூறியது போல் ஆள் நடமாட்டம் அற்ற இடம். மேலும், ஆட்டோ ஓட்டுனர்கள் அவர்கள் குடிப்பதற்கு உபயோகப்படுத்தும் இடமும் மொட்டைமாடிதான். ஆதலால் நம் இசை மொட்டைமாடியில் ஒலித்தாலும் யாரும் கேட்கப் போவதில்லை”

ஜோஷுவாவிற்கு அவர்கள் ஹிந்தியில் பேசிக் கொண்டது ஓரளவுக்குப் புரிந்தது போல் இருந்தது.

“ஓ மை காட். தட்ஸ் வியர்ட்”

“ஹாஹா. விசித்திரம் தான். அவர்களுக்கு ‘காவி’ அரசியலாளர்களிடம் தொடர்பு உண்டு. ‘தாமரை’ தான் அவர்களுக்கு பின்பலம். ஆதலால் அவர்களை விரோதித்துக் கொள்வது கடினம்” மீண்டும் ஹிந்தியில் விளக்கி முடித்தான் மயன்கின் நண்பன்.

“பாரத்மாத்தாக்கி.…” என்று மயன்க் அனைவருக்கும் கேட்கவேண்டுமென்று சற்று உறக்கக் கத்திச் சொன்னான்.

***

“ஜெய்…” என்று கூக்குரலிட்டாள் போதையிலிருந்த ஒரு பெண். 

அனைவரும் சிரிக்கத் தொடங்கினர்.

கீழ் தளத்திற்கும் வந்து பணிப்பெண் சுத்தம் செய்யத் தொடங்கினாள். ஜோஷுவா, “இது போன்ற குப்பைகள் பரவிக் கிடக்கும் உயர் வர்க்கத்து வீடுகளைப் பெருக்கி சுத்தம் செய்து என்ன பயன்?. எப்படியும் நாளை காலை மறுபடியும் வீடு வீசி எறியப்பட்ட பாலீத்தின் பைப்போன்று தான் மாறப் போகிறது” என்றெண்ணினான். வழக்கம் போல் ஜோஷுவா தனித்து விடப்பட்டவனாக உணர்ந்தான். இசை, கஞ்சா, மது எங்கும் நிறைந்திருந்தன. எதனாலோ உந்தப்பட்டவனாகப் பெருக்கிக் கொண்டிருந்த பணிப்பெண்ணுக்கு உதவ முனைந்தான். நாற்காலிகளை நகர்த்தி வைத்தான். கீழே கிடந்தவற்றை மேஜையின் மேலே எடுத்து வைத்தான். மயன்கின் நண்பன் ஜோஷுவாவைப் பார்த்து விட்டு, விளக்க இயலாத பதட்டத்துடன் மயன்கின் காதுகளில்,

“உட்கார சொல் அவனை” என்று  ஹிந்தியில் கிசுகிசுத்தான்.

“அவன் அப்படித்தான். விட்டுவிடு. இது போன்ற வேலையாட்கள் மேல் மிகுந்த பரிவு காட்டுவான். இவர்கள் போன்றவர்களுக்கு நிறைய பண உதவி செய்து கொண்டிருக்கிறான். அலுவலகத்தில் இவன் இதற்காகவே நன்கு அறியப்பட்டவன். மேலும், இன்று நிறைய குடித்திருக்கிறான்” என்று பதிலளித்தான் மயன்க்.

பணிப்பெண் வேலைகளை முடித்து விட்டு, மயன்கின் நண்பனிடம் கூறிவிட்டு விடைபெற்றாள். ஜோஷுவாவிடம் தனியாக மெல்லிய புன்னகையை உதிர்த்து கைகளைக் கூப்பி வணக்கம் வைத்து வீட்டிலிருந்து வெளியேறினாள். ஜோஷுவா, முகம் மலர்ந்த சிரிப்புடன் அவளுக்கு விடைகொடுத்தான். மொட்டை மாடியை வந்தடைந்தனர். நாற்காலிகளும், தரையில் போடப்பட்டிருந்த மெத்தைகளும் ஆங்காங்கே சிதறிய படி இருந்தன. கஞ்சா ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குக் கை மாற்றப் பட்டுக் கொண்டே இருந்தன.

ஜோஷுவா மனக் கலக்கத்துடன் கூட்டத்தில் கலந்து கொண்டான். ஆனால், கஞ்சாவை ஒரு இழுப்பு இழுத்தவுடன் அவன் மனம் முற்றிலும் மாறியது. விர்ஜின் கஞ்சாவை இழுத்துக் கொண்டே இருந்தான். அனைவரும் திகைத்தனர். மயன்க் மிக மெதுவாக ஜோஷுவா அருகே சென்று கஞ்சாவை பிறரிடமும் பகிரச் சொன்னான்.

ப்ளூடூத் ஸ்பீக்கரில் தொடர்ந்து இசை ஒலித்த படியே இருந்தது. சில மணி நேரம் கடந்தது. மயன்க் மற்றும் அருகில் இருந்த அனைவரும் இசையிலும் புகை வெள்ளத்திலும் மூழ்கி தங்களுக்குள் ஆழ்ந்திருந்தனர். லேசாகக் குளிரத் தொடங்கியிருந்தது. காற்று எளிதாக ஊடுருவ வசதியாக இருக்கும் சட்டையையும், தொடை தெரியும் கால் சட்டையையும் அணிந்திருந்த அனைவருமே சிறிது நேரம் கழித்துத் தள்ளாடியபடியே கீழே செல்லத் தொடங்கினர்.

***

“எப்படி இருக்குப் பிரார்த்தனா கூடச் செக்ஸ் லைஃப்?” என்றார் உளவியல் மருத்துவர் குரியன்.

“இருந்தா தான..” சலிப்பில் வெளிவந்தது குரும்புன்னகை.

“ஓடுங்க காலைல எழுந்து, நிறையப் பழம் சாப்புடுங்க, எமோஷனல் பேலன்ஸ் தேவ. பதினோரு மாசம் ஆச்சுன்னு நெனைக்கிறேன், நாம பேச ஆரம்பிச்சு”

“எஸ். இம்ப்ரூவ் ஆகுற மாதிரியும் இருக்கு, ஆகாதா மாதிரியும் இருக்கு.  பல நேரங்கள்ல எக்கச் சக்க கோபம் வருது. ஆங்கர் மேனேஜ்மேண்ட் செஷன்க்கு போலாமானு யோசிச்சுட்டு இருக்கேன்”

“தாராளமா போகலாம். பென்சோடையாசேப்பின்ஸ் இன்னும் எடுத்துட்டு தான இருக்கீங்க??”

“எஸ்.”

சில நொடி மௌனத்திற்குப் பிறகு,

“உங்களுக்கு உங்கள பத்தின இமேஜ் ஷேட்டர் ஆயிருக்கு உள்ளுக்குள்ள. அத மாத்த நீங்க 

என்னென்னவோ முயற்சி பண்றீங்க”

“ஆமா. ஏதோ ஒரு பேலன்ஸ் தேவ படுது. நிறையப் பேருக்கு பண உதவி பண்ணிட்டு         இருக்கேன், அப்புறம் பிரார்த்தனா ஓட என்.ஜி.ஓக்கு போயி   அங்க இருக்குறவங்களுக்குக்    கிளாஸ்லாம் எடுக்குறேன்”

“குட். நிறைய ஆக்டிவிட்டீஸ் இருக்கு அப்போ? ஹவ் டு யூ ஃபீல்?”

“ஓ…கே. கிரேட்னு சொல்ல முடியாது. எந்த விஷயத்த பண்ணாலும் ஏதோ ஒரு மனத் தொந்தரவு இருந்துட்டே தான் இருக்கு.”

“சுத்தம். வருஷ கணக்காக் கூட ஆன்க்சைட்டி அட்டாக், டிப்ரெஷன்னு மக்கள் இருக்காங்க. பட் யூ டோன்ட் கெட் பாதர்ட். சரியாயிடும் எல்லாம்.”

“பட் எனக்கு இருக்கறது ரொம்ப வியர்ட் ல?”

“வீ ஆல்வேஸ் திங்க் லைக் தட்.. நம்முடைய உணர்ச்சிகள் எதுவுமே யுனீக் இல்ல. நம்மள நாமே அப்படிக் கற்பனை பண்ணிக்கிறோம். வலிய அனுபவிக்கும் போது கூட யுனீக்கா இருக்கணும்னு நெனைக்கறது மனுஷனோட இயல்பா போச்சு..”

“அப்படி இல்ல.…” என்றிழுத்துக் கொண்டே,

“நான் ரொம்ப அழுறேன். அதுல ஒரு நிம்மதி கிடைக்குது. கிட்டத்தட்ட   தினமும், பதினோரு மாசமா.”

“குட். ஆனா, கம்மி ஆகிட்டே வரணும் அதுவும்.”

சிறிது தயக்கத்திற்குப் பின் ஜோஷுவா, “சில நேரங்கள்ல ஸ்யூசைடல்  தாட்ஸ் வந்துட்டே 

இருக்கு”

“ஸ்டில்?”

“எஸ்”

“நட்சத்திரங்கள பயம் இல்லாம, நடுக்கம் இல்லாம பாக்க முடியுதா?”

“ஓரளவுக்கு.”

“குட். போர் அடிக்கணும். பயந்து ஒதுங்குற விஷயங்கள நாம நேருக்கு   நேரா பாத்துக்கிட்டே இருந்தா சலிப்பு வந்துடும். யூ ஹேவ் டு ரீச்  தட் ஸ்டேட்”

“கனவு?”

“அது வரும். இன்னும் சில விஷயங்கள் உங்கள தொந்தரவு பண்ணுது.ஒரு ஸ்டேஜ்க்கு அப்புறம் அதுவும் நின்னுடும். டோன்ட் வொர்ரி. எர்லி மார்னிங் ஆன்க்சைட்டி ஆர் காம்மன் ஃபார் பீப்பிள் வித் டிப்ரெஷன். திடீர்னு பயங்கர எனர்ஜி வரும், திடீர்னு ஒண்ணுமே நடக்காமலேயே ஸ்ட்ரெஸ்  ஆகும்.  யூ ஆர் நாட் அலோன் இன் திஸ்”

***

இப்போது மாடியில் ஜோஷுவா மட்டும் தனித்திருந்தான். கண்கள் சொக்கியபடி இருந்தாலும் அவன் தூக்கத்திற்குச் செல்லவில்லை. உலகமே நின்று நிதானமாகச் சென்று கொண்டிருப்பது போல் இருந்தது. சிரிக்கத் தொடங்கினான். சத்தம் வராதவாறு. எவ்வளவு நேரம் என்றறியாமல் தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருந்தான்.

நிலையின்றி அலைந்து ஏதோ ஒரு சூழலில் சிக்கித் தவிப்பது போல் உணர்ந்தான். தலை சுற்றிக் கொண்டே இருப்பது போலத் தோன்றியது. அருகில் பல பாடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஒலித்துக் கொண்டிருந்தன. ஒரு நிமிடம் என்பது ஒரு நிமிடமே அல்ல என்றுணர்ந்தான். “ஐன்ஸ்டைன் சொன்னது சரி தான்” என்று தனக்குள் கூறிக்கொண்டான். கைகளை விரித்தான். குதித்தான். எதைச் செய்தும் அவனுள் அடங்க மறுத்த தவிப்பு மன நிலை அவனைத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. “மனுஷன்னா யாரு..? தனக்குள்ள இருக்குற மிருகமா? இல்ல மென்மையான குணங்கள் அப்பப்போ வெளிவர்ற உன்னதமா? நான் யாரு” என்று வாய் விட்டு உளறத் தொடங்கினான். கிட்டத் தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அப்படியே உட்கார்ந்து கொண்டிருந்தான். பேச்சுத் துணைக்கும் இப்போது யாருமில்லை.

சற்றுத் தெளிவாகத் தொடங்கியது. அருகிலிருந்த ஸ்பீக்கரை அணைத்தான். பின், அருகே உள்ள மொட்டை மாடியிலிருந்து வரும் ஓசை ஒன்று அவன் கவனத்தைக் கோரியது. என்னவென்று காண, மிகுந்த உழைப்பிற்குப் பின் எழுந்தான்.

நடு மொட்டைமாடியிலிருந்து விளிம்பு வரை செல்வதென்பது பல மணி நேரம் போல் இருந்தது. மேலே நோக்கினான் பல நட்சத்திரங்கள் மின்னி மின்னி மறைந்தன. நிலவை தேடினான். அவன் கண்ணிற்கு எளிதில் அகப்படவில்லை. நடந்து கொண்டே தலையை இடதும் வலதுமாக ஆட்டிக்கொண்டே இருந்தான். தலையை அப்படி ஆட்டிக்கொண்டே இருப்பது சுகமாக இருப்பதைப் போல் உணர்ந்தான். ஏன் நடந்து கொண்டிருக்கிறோம் என்று அவனுள் கேள்வி எழுந்தது. “ஹாங்… சத்தம். ஏதோ சத்தம் கேட்டது” என்று நீண்ட யோசனைக்குப் பிறகு நினைவுக்குக் கொண்டு வந்தான். சட்டென்று தலையை தூக்கி வானை நோக்கினான். அரை நிலவு மிகப் பிரகாசமாக மேகங்கள் அதன் மேல் கடக்க வானில் ஒட்டப் பட்டது போல் இருந்தது. “யூ ஆர் சோ பியூட்டிஃபுல்” என்று நிலவை பாராட்டினான்.

சட்டென்று ஒரு பெண்குரல் கேட்டதைப் போல் உணர்ந்தான். தலையை நேராக்கிக்கொண்டு மீண்டும் நடக்கத் தொடங்கினான். இம்முறை அவனுடைய நடை துரிதமாக இருந்தது. அக்குரல் வெகுவாக வெளிவரத் துடித்தும் இயலாது தவிப்பது போலிருந்தது. ஒரு வழியாக மொட்டை மாடியின் விளிம்பில் இடுப்பளவுக்கு உள்ள தடுப்புச் சுவருக்கு வந்து சேர்ந்தான். அருகிலிருக்கும் மரங்கள் அசையாதிருப்பது காற்றின் இன்மையை உறுதிப்படுத்தியது. அனைத்தும் ஸ்தம்பித்துப் போன நிலையில் இருக்க அடுத்த வீட்டு மொட்டை மாடியில் சில உருவங்கள் நிழலாடுவதைக் கண்டான். கண்களைத் தொலைவில் தெரியும் அசைந்தாடும் அவ்வுருவங்களில் நிலைக்கச் செய்தான்.

பின், காட்சிகள் தெளிவாகியது. இரண்டு ஆட்டோ ஓட்டுநர்களும் அந்தப் பணிப் பெண்ணும். ஆம், வீட்டை கூட்டி சுத்தம் செய்த அதே பணிப்பெண். காக்கி கால் சட்டையையும், இடுப்பை சுற்றிக் கட்டியிருந்த காக்கி சட்டையையும் வைத்து அவர்கள் அட்டோ காரர்கள் தான் என்பதும் விளங்கியது. அப்பெண்ணின் வாயில் எதையோ அடைத்து வைத்திருப்பது போலிருந்தது. ஜோஷுவாவிற்குத் தான் காண்பது உண்மையிலேயே நடந்துக்கொண்டிருக்கிறதா என்ற சந்தேகம் வந்தது. அவனிடம் போதை இல்லை என்பதை மிகத் தெளிவாக உள்ளுணர்ந்தான்.

ஜோஷுவா செய்வதறியாது வெகு இயல்பாக உட்கார்ந்து கொண்டான். எங்கே அவர்கள் கண்ணில் பட்டுவிடுவோமோ என்ற அச்சம் அவனை ஆக்கிரமித்துக்கொண்டன. அவர்கள் இருவரும் அப்பெண்ணை வலுக் கட்டாயமாகப் படுக்க வைத்தனர். துணியை வைத்து அடைத்திருந்தது போதாது என்று ஒருவன் அவளுடைய வாயின் மீது அழுந்த பிடித்திருந்தான். அவள், தலையை இடமும் வளமும் வேகமாக ஆட்டுவது மிகத் தெளிவாக தெரிந்தது.

ஜோஷுவா, கைப்பிடி சுவற்றிற்கு மேல் கண்களும் தலையும் மட்டும் தெரியுமாறு பார்த்துக்கொண்டான். அவர்களில் ஒருவன் மிக அவசரமாக தனது கால் சட்டையை அவிழ்க்கத் தொடங்கினான். அவளின் கால்கள் துடித்துக் கொண்டிருந்தன. ஜோஷுவாவிற்கு மனம் வெடித்துக் கொண்டிருந்தது. இதயத் துடிப்பு பன்மடங்காக ஆகத் தொடங்கியது. ஒரு நிமிடம் அசைவற்றுக் கிடந்தான். காட்சிகள் அரங்கேறத் தொடங்கின. காக்கிகளால் போர்த்தப் பட்ட உருவம் அப்பெண்ணின் மீது விரைவாக இயங்கத் தொடங்கின. இதைக் கண்டு கொண்டே இருந்த ஜோஷுவாவின் கண்கள் விரிந்தன.

‘கத்தி பார்க்கலாம். ஆனால், யாரும் நமக்குத் துணை வரப்போவதில்லை. எவருமே சுய நினைவில் இல்லை. அனைவரும் போதையின் கிறக்கத்தில் இருப்பர். நான் தனியாக அகப்பட்டுக் கொண்டால்? ஐயோ, இவர்கள் முரடர்கள். என்னை ஏதாவது செய்துவிட்டால்? அப்பா, அம்மா, பிரார்த்தனா, வேலை, லிவ்-இன்… எல்லாம் மண்ணாகிப் போகும். என் வாழ்வே இனி தான் தொடங்குகிறது. நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று 10 நொடிக்குள் எண்ணற்ற கேள்விகள். இதையும் கடந்து தன்னைப் பற்றிய பல பிம்பங்கள் அவன் மனதில் வந்து போயின. “நான் ஒரு சோசியல்லி ரெஸ்பான்சிபிள் பெர்சன்னு பேரு வாங்குனவன். ஐ காண்ட் டூ திஸ்.’ என்று ஒரு முரண் குரல் எட்டி பார்த்தது. ஆனால் அதற்குள் மறுமுனையிலிருந்து, “பட் வாட் கேன் ஐ டூ? திஸ் கண்ட்ரி இஸ் ஃபக்ட் அப். நான் என்ன செய்ய முடியும்? இப்படியான அக்கிரமங்கள் நடக்கத் தான் செய்யும். நானா தவறு செய்கிறேன்? நான் சாதாரண மனிதன். ஆம். நான் ஒரு மத்திய வர்கத்துக் காரன். இதோ, குடித்துக் கொண்டும் புகைத்துக் கொண்டும் எவ்விதக் கவலையும் இன்றி அலைந்து திரிந்துக் கொண்டும் இருக்கும் இவ்வீட்டு ஆட்களில் ஒருவன் தன்னந்தனியாக இப்படியான ஒரு காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தால் அமைதியாகத்தான் இருந்திருப்பான். நான் வெறும் பார்வையாளன். என் மீது தவறில்லை. எந்நேரத்திலும் தற்காப்பு முக்கியம். அதை மீறியே அறம் மற்றும் எல்லா மண்ணாங்கட்டியும்’ ஜோஷுவாவின் சிந்தனைகள் பல புள்ளிகளைத் தொட்டுச் சென்றுக்கொண்டிருந்தது. அவனின் அச்சத்தைக் கூட்டி அவனின் செயலாற்றாமைக்குத் தேவையான அனைத்து விளக்கங்களையும் தன் மனதினுள் ஏற்றிக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் அவன் சமாதானம் அடைந்து அக்காட்சியைச் சற்று ரசிக்கவும் தொடங்கி விட்டான். அப்பெண்ணின் மீது முழு உடலெடையுடனும் இயங்கிக் கொண்டிருந்தான் ஆட்டோக்காரன்.

ஜோஷுவாவிற்குத் தன்னிலை மறந்து வேறொரு நிலைக்குச் சென்று கொண்டிருந்தான். தான் அணிந்திருந்த டிராக் பாண்ட்டை கீழிறக்கினான். அணிந்திருந்த உள்ளாடையையும் களைந்தான் ஜோஷுவா. அவனுடைய குறி மொட்டை மாடியின் தரையில் உரசத் தொடங்கியது. ஜோஷுவா கண்ணிமைக்காமல் தொலைவில் நடந்து கொண்டிருந்த காட்சியைக் கண்டு கொண்டே இருந்தான். அந்த ஆட்டோகாரன் அந்தப் பெண்ணின் மீது இயங்குவது போலவே ஜோஷுவா இங்கு இயங்கிக்கொண்டிருந்தான். தன்னை அந்த ஆட்டோகாரனாகவே கற்பனை செய்து கொள்ளத் தொடங்கினான். அவன் பிருட்ட பாகங்களில் சில்லிட்ட காற்று மோதி சென்றது. சுற்றியிருந்த மரங்களும் அசையத் தொடங்கின. ஆனால், அவன் அக்காட்சியிலிருந்து கண்களை விளக்காதவாறு, செயலிலும் தீவிரம் கொண்டிருந்தான். சுற்றம் மறந்த நிலை. எவ்வளவு மணி நேரம் இப்படியாகக் கழிந்தது என்று ஜோஷுவாவிற்குத் தெரியவில்லை. ஆனால், முற்றிலும் ஐக்கியமாகி இருந்தான். திடீரென்று நீண்ட நேரம் அச்செயலில் ஈடுபட்டிருப்பதாக உணர்ந்தான்.

தற்போது வாயை பொத்திக் கொண்டிருந்த இன்னொரு ஆட்டோக்காரன் அதே போன்று செயலில் மூழ்கினான். ஜோஷுவா எவ்வித மாற்றமும் இன்றி மீண்டும் அதே போல் மிக மெதுவாகத் தன் குறியை தரையில் தேய்த்துக் கொண்டிருந்தான். சட்டென்று உச்சமடைந்தான். வேகம் அதிகரித்தது. அவன் கண்களும் விரிவடைந்தது. தரையை மிக வேகமாக உராயத் தொடங்கினான். உள்ளிருந்த அனைத்து ஆற்றலும் அவன் தலைக்குச் செல்வது போல் அவனுணர்ந்தான். உச்சக்கட்டத்தை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தான். அங்கிருந்த ஆட்டோக்காரர்கள் மறைந்து விட்டனர். அக்காட்சியில் தானே பங்கெடுப்பது போல் உணரத் தொடங்கினான்.

சில நொடிகள் கழித்து ஜோஷுவா பெருமூச்சு வாங்கினான். ஆனால் அவன் கண்களை விளக்கவில்லை. அவன் முழு கவனமும் அக்கட்சியிலேயே இருந்தது. வெகு நேரம் கழித்தே, வெளிவந்த விந்துவினால் அவன் குறி ஈரத்துடன் இருப்பதை உணர்ந்தான். உள்ளாடையையும், டிராக் பாண்ட்டையும் மேலே ஏற்றிக் கொண்டான்.

ஜோஷுவாவிற்குத் தான் செய்தது என்னவென்று இன்னும் சரியாக விளங்கவில்லை என்றாலும் மனம் உறுத்த தொடங்குவதை போல் உணர்ந்தான். ஆட்டோக்காரர்கள் களியாட்டத்தில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்ததால் அவர்கள் அப்பெண்ணின் முகத்தைக் காணவில்லை. முழுமையாகச் செயலிலேயே மூழ்கி இருந்தனர். ஜோஷுவா சட்டென்று ஒரு விஷயத்தைக் கூர்ந்து கவனித்தான். ஆம். நிஜம் தான். அவளுடைய கண் அவனை நோக்கிக் கொண்டிருந்தது. கூரிய கண். பிறரை பார்வையாலேயே துளைத்து எடுக்கும் கண். கண்களின் ஒளியில் பிறரை எரியச்செய்யும் வீரியம் மிகுந்த கண். ஆனால், அத்தகைய கண் வேண்டுதலின், கெஞ்சுதலின் எல்லைக்குச் செல்வதாக உருமாறத் தொடங்கியது. சற்று உற்று நோக்கினால், கருவிழிகளில் அவன் முழு உருவையும் பிரதிபலிக்கும் மாபெரும் கண். கைகளை நீட்டி ஆதி மானுட தர்மங்களைக் கோரி நிற்கும் கண்.

ஜோஷுவா அப்படியே பக்கவாட்டில் சரிந்து வீழ்ந்தான். வானில் நிறைய நட்சத்திரங்கள். தூரத்தே தெரியும் அரை நிலவு. நீண்ட நேரம் அவைகளையே பார்த்துக் கொண்டிருந்தான். நேரம் கடப்பதை அவன் உணரவே இல்லை. கிட்டத் தட்ட ஒரு மணி நேரம் கழித்துப் பெருமுயற்சிக்குப் பின் எழுந்து, களியாட்டம் அரங்கேறிய காட்சியிடத்தைப் பார்த்தான். அங்கு எவரும் இல்லை. மீண்டும் நட்சத்திரங்களையும் அரை நிலவையும் பார்க்கத் தொடங்கினான். அப்படியே ஒரு புள்ளியில் தூங்கிப் போனான்.

***

“ரிவைவ்” என்ற பெயரைத் தாங்கிய பலகையைக் கடந்து ஜோஷுவாவும் பிரார்த்தனாவும் உள்ளே சென்றனர்.

“சரி. நான் என்னுடைய சீனியர் டைரக்டர பாக்கணும். நீ உள்ள போய் ஸ்டார்ட் பண்ணு. நான் மீட்டிங் முடிஞ்ச உடனே உன்ன வந்து பாக்குறேன்” என்று பிரார்த்தனா அவனைக் கட்டி அணைத்து விட்டு விடைப்பெற்றாள்.

ஏற்கனவே அவன் பல முறை வகுப்பெடுத்திருப்பதால் அவனை எல்லோருக்கும் தெரிந்தே இருந்தது. முகமன் வைத்துவிட்டுத் தன்னுடைய லேப்டாப்பை வெளியே எடுத்து அதன் ஸ்டார்ட் பொத்தானை அழுத்தினான். நிமிர்ந்து பார்த்தப் போது அண்மையில் ஹோமிற்குப் புதிதாக வந்த பெண்ணை கண்டுகொண்டான்.

முழுதாக 1 நிமிடம் ஸதம்பித்து நின்றான். கண்களை அப்பெண்ணிடமிருந்து எடுக்கவே இல்லை. அப்பெண் அவனை பார்த்து சிரிக்க முயன்றாள். அவன் புருவச் சுருக்கங்கள் கலையாமல் சிலைப் போல் இருந்தான். நிலைத்த பார்வை. தான் ஏன் இவ்வாறு உற்றுப் பார்க்கப்படுகிறோம் என்று புதிதாக வந்த பெண்ணிற்கு விளங்கவில்லை. அவ்வகுப்பில் இருந்த அனைவரும் அப்பெண்ணைப் பார்க்கத் தொடங்கினர்.

ஜோஷுவா பைக்குள்ளிருந்த தனது கையை எடுத்தான். கை முழுவதும் வியர்த்திருந்தது. அவன் நெற்றியிலும் வியர்க்கத் தொடங்கியது. உதடுகள் துடிக்கத் தொடங்கின. மனம் படபடத்தது. அது துடிக்கும் ஓசையை அவனால் கேட்க முடியும் என்று அவன் நம்பினான். இப்போது தான், 5 கிலோமீட்டர் ஓடிவந்து நிற்பது போல் வாய் வழியாக  மூச்சு வாங்கிக் கொண்டே இருந்தான். அங்கிருந்த அனைவருக்கும் ஏதோ வித்தியாசமான ஒரு காட்சி நடப்பது புரிந்தது. அப்பெண் ஏனென்று தெரியாமல் மெதுவாக எழுந்து நின்றாள். அவளின் புருவமும் சுருங்கத் தொடங்கின. ஜோஷுவா அவளுடைய கண்களை உற்றுப் பார்த்தான். அதிலுள்ள பளிங்கு போன்ற கருக் குமிழ்கள் இவன் நன்கு அறிந்தவை.

நினைவு திரும்பியவனாக ஒரு கட்டத்தில் உணர்ந்தான். அவ்விடத்தை விட்டு உடனே வெளியேற அவனுடல் பரபரத்தது. அவள் மீது வைத்த கண்களை எடுக்காதவாறு பக்கவாட்டில் கால்களை எடுத்து வைத்து  நடக்கத் தொடங்கினான். மேசையில் மோதி கணினி கீழே விழுந்தது. அங்கிருந்த அனைவரும் பதற்றத்துடன் ஆச்சரியப்பட்டனர். இவனுக்கு அவையெல்லாம் உள்ளே செல்லவே இல்லை. அப்படியே அறையிலிருந்து விலகிப் போனான்.

தனக்குப் பழக்கப்பட்ட வழி என்பதால் வாகனத்தை எவ்வித பிரக்ஞையுமின்றி ஓட்டினான். வாகனம் அவனை வீட்டில் சேர்த்தது. அவனுடைய படபடப்பு இன்னும் குறையவில்லை. முழுதாக 20 நிமிடங்கள் வீட்டினுள் வேகமாக நடந்தான். ஆனால், அவன் எல்லைகள் கடந்து போவது போல உணர்ந்தான். மொத்த உடலும் தற்போது ஆடிக் கொண்டிருந்தது. நட்சத்திரம், அரை நிலவு, கண்கள். மூன்றும் மாறி மாறி அவன் சிந்தனையில் தட்டுப் பட்டுக் கொண்டே இருந்தன. 

சட்டென்று தான் போட்டிருந்த பெல்ட்டை விடுவித்து கொண்டு கால் சட்டையை முழுவதுமாக அவிழ்த்தான். சொங்கி சுருங்கிப் போயிருந்த தன் குறியை ஒரு நிமிடம் பார்த்தான். திடீரென்று ஏதோ தோன்றச் சமையல் அறைக்குள் சென்றான். அங்கிருந்த மிகப் பெரிய ஜப்பானியக் கத்தி ஒன்றை எடுத்தான். இடது கையில் குறியைத் தூக்கிப் பிடித்துக்கொண்டான். முகத்தில் எவ்வித வேறுபாடுமின்றி வலது கையில் உள்ள கத்தியை மிக மெதுவாகக் குறியை நோக்கிக் கொண்டு சென்றான்.


பிரசன்னகிருஷ்ணன், பெங்களூரில் வசிக்கிறார். சொந்த ஊர் நாகப்பட்டினம். ஒரு தனியார் நிறுவனத்தில் Data Analyst ஆக வேலை செய்கிறார். அப்பா மற்றும் தாத்தாவின் வழியாக சிறு வயதிலிருந்தே இலக்கிய வாசிப்பில் ஈடுபாடு உண்டு. சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். நாடக நடிப்பிலும் ஈடுபாடு உண்டு.

https://vallinam.com.my/version2/?p=7863

 

 

 

Link to comment
Share on other sites

ஒரு பெண்ணை கூட்டுப் பாலியல் உறவு செய்யும் போது அதை தடுக்க துணியாமல் பயந்து செல்வதை கூட ஏற்றுக் கொள்ளலாம். ஏனெனில் பொதுசனத்தில் 90 வீதம் அப்படித்தான் பயப்பிடுவர். ஆனால் அதை ரசித்து, சுய இன்பம் ஒருவர் காணுவது எல்லாம் எந்த அறமும் அற்ற எழுத்து. அப்படிச் செய்த பின் குற்றவுணர்வில் அல்லாடுவது எல்லாம், அந்த செயலை நியாயப்படுத்துவதாகத் தான் தெரிகின்றது.

அறமற்ற இலக்கியம் என்பது ஆதிக்க சக்திகளை நியாயப்படுத்துவது. இங்கு ஆண்களின் வன்முறையை,பாலியல் குற்றங்களை பிரசன்ன கிருஷ்ணன் தன் அறமற்ற எழுத்தின் மூலம் நியாயப்படுத்தி உள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நிழலி said:

ஒரு பெண்ணை கூட்டுப் பாலியல் உறவு செய்யும் போது அதை தடுக்க துணியாமல் பயந்து செல்வதை கூட ஏற்றுக் கொள்ளலாம். ஏனெனில் பொதுசனத்தில் 90 வீதம் அப்படித்தான் பயப்பிடுவர். ஆனால் அதை ரசித்து, சுய இன்பம் ஒருவர் காணுவது எல்லாம் எந்த அறமும் அற்ற எழுத்து. அப்படிச் செய்த பின் குற்றவுணர்வில் அல்லாடுவது எல்லாம், அந்த செயலை நியாயப்படுத்துவதாகத் தான் தெரிகின்றது.

அறமற்ற இலக்கியம் என்பது ஆதிக்க சக்திகளை நியாயப்படுத்துவது. இங்கு ஆண்களின் வன்முறையை,பாலியல் குற்றங்களை பிரசன்ன கிருஷ்ணன் தன் அறமற்ற எழுத்தின் மூலம் நியாயப்படுத்தி உள்ளார்.

200% உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்… 

குற்றவுணர்வில் அல்லாடுவதாக கூறுவதைக்கூட என்னால் ஏற்கமுடியாது.. அப்படி குற்றவுணர்வில் அல்லாடுவதாக கூறும் ஒருவரால் இன்னொருவருடன் இருப்பதே கடினம்.. இந்த கதை முழுக்க முழுக்க வன்முறையை நியாயப்படுத்துவதாகவே உணரமுடிகிறது.. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.