Jump to content

11.09.2007 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் புதியதொரு வரலாற்றை படைத்துச் சென்ற ஆழக்கடலோடிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

11.09.2007 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் புதியதொரு வரலாற்றை படைத்துச் சென்ற ஆழக்கடலோடிகள்

spacer.png

உலக வல்லரசுகள் இலங்கைக்கு வழங்கிய செய்மதித் தகவல்களின் அடிப்படையில். 10.09.2007அன்று இலங்கையிலிருந்து ஆயிரத்து ஐநூறு கடல்(1500NM )மைல்களுக்கப்பால் அதாவது சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழத்திற்க்குப் பலம் சேர்க்கின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் இரு வணிகக் கப்பல்களும் அவைகளுக்கு எரிபொருள் வழங்குவதற்காக வந்த எண்ணெய்க் கப்பலும் தமது வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் கடற்படையின் கப்பல் வருவதை (எந்த நாட்டுக் கடற்படையென்று அவருக்குத் தெரியாது )அவதானித்த வணிகக் கப்பலொன்றின் தலைவரான எழில்வேந்தன் கப்பல்களை பிரிந்து வெவ்வேறு திசைகளில் செல்லப் பணித்ததுடன் இத்தகவல்களை தமிழீழத்திலுள்ள கட்டளை மையத்திற்க்கும் அறிவித்தார்.

 

 

மூன்று கப்பல்களும் வெவ்வேறு திசைகளில் பயணித்துக் கொண்டிருக்கும் போது முறையே மதியம் ஒருமணியளவில் லெப்.கேணல் சோபிதன் தலைமையிலான வணிகக் கப்பலும் லெப் கேணல் செம்பகச்செல்வன் தலைமையிலான எண்ணெய்க்கப்பலும் தாக்குதலுக்குள்ளாகி மூழ்கின .

 

D5H3KPevVKIu2jeFxpIO.jpg

 

இச்சம்பவத்தில் அதிலிருந்த போராளிகளும் இயக்க மரபிற்கிணங்கசயனைற் அருந்தி கடலிலே காவியமானார்கள்.முன்றாவது வணிகக்கப்பலான லெப் கேணல் எழில்வேந்தனது கப்பலை நோக்கி வந்த கடற்படையினர் மீது கப்பலிலிருந்த மோட்டாரை பயன்படுத்தி கடற்படையினர் மீது தாக்குதல் நாடாத்த கடற்படையின் கப்பலுக்கருகில் வீழ்ந்த எறிகணையால் சற்று நிலைகுலைந்த கடற்படையினர் கிட்டநெருங்காமல் தொலைவிலிலிருந்தே தாக்குதலை தொடர்ந்தனர் .

 

 

இருந்தாலும் இவர்களும் தாக்குதல்களை தொடர்ந்து நாடத்தியவாறு ஓடிக்கொண்டிருந்தனர்.ஒரு கட்டத்தில் அதாவது அடுத்தநாள் அதிகாலை மூன்றுமணியளவில் கடற்படைக்கப்பலின் பாரிய குண்டுத் தாக்குதலொன்று இவர்களது கப்பலின் அடிப்பகுதியில் தாக்க கப்பல் கடலிலே மூழ்கியது. இந்த இடைப்பட்ட நேரத்தில் இவர்களது தியாகமும் வீரமும் கற்பனைபண்ணிக்கூடப் பார்க்கமுடியாது இக்கப்பலிலிருந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சயனைற் இல்லாதிருந்ததால் அங்கிருந்த மருத்துவப் போராளியான லெப் கேணல் தமிழ்மாறன் இருமருந்துகளைக் கலந்து நஞ்சாக்கி ஊசியில் ஏற்றி சயனைற் இல்லாதிருந்தவர்களுக் கொடுத்தார்.

7OWoiqQMIxqcLCGYZ5dK.jpg

 

 

அடுத்தது லெப்.கேணல் வேங்கை மற்றும் லெப் கேணல் திருவருள் தரையில் மட்டுமே பயன்படுத்தும் 120mm மோட்டாரை கப்பலில் வெல்டிங் பண்ணி நிலைப்படுத்திக்கொடுக்க சகபோராளிகள் அம்மோட்டாரின் மூலம் கடற்படைக்கெதிராக தாக்குதல் நடாத்தினார்கள் .

 இதற்கிடையில் மேஐர் தமிழ்நம்பி கப்டன் அருணன் கப்பலின் ஒருபகுதியை எரித்தபோது 

அத்தீயை அணைத்து கொண்டிருக்கும் சமநேரத்திலும் அத்தீக்குள்ளாலும் சகபோராளிகள் மோட்டார் எறிகணைகளை எடுத்து வந்து கடற்படைகெதிராக தாக்குல் நடாத்தினார்கள் இறுதிவரை மிகவும் மூர்க்கத்தோடும் உறுதியோடு களமாடி 11.09.2007 அன்று கடலிலே புதியதொரு வரலாற்றை படைத்துச் சென்றார்கள்.

 

எழுத்துருவாக்கம்.சு.குணா.

https://www.thaarakam.com/news/d29d99ce-e2f0-4ac9-a4ad-1a121e646ea1

 

 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.