Jump to content

இலங்கையில் உள்ளாடை பஞ்சம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உள்ளாடை பஞ்சம்?

spacer.png

இலங்கையில் உள்ளாடைகள் இறக்குமதிக்குத்தடை சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி ஊடகங்களில் கேலிசித்திரங்கள் வரை சென்றுள்ளது.

இலங்கைக்குச் செல்வோர் எதை மறந்தாலும் ஜட்டிகளை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள், மறந்தீர்களானால் கச்சை யுடன் தான் அலையவேண்டும். அந்த நாட்டின் சூடான காலநிலைக்கு "கச்சை " பல "இச்சை"களைத் தோற்றுவித்துவிடும் அபாயத்தையும் கவனத்தில் கொள்கவென சிலர் வாரிவிட ஊடகங்களோ ஜட்டிகளை அமெரிக்க தயாரிப்பாக்கி கோவணத்தை உள்ளுர் மட்டத்திற்கு இறக்கிவிட்டுள்ளன.

 

https://www.thaarakam.com/news/ca993f8c-c683-4d4b-a50a-19dd94c6b2c4

 

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் இந்த அறிவிப்பால்….

6-DA27-D73-A80-C-4-A30-B2-DF-BC250-B1740

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை, ஒருத்தர், கொஞ்சம் பசைப்பார்ட்டி.

உங்க பிள்ளைகள் படிச்சிட்டினம்......

யாபாரம், காணி விசயம் எண்டு மாசம், இரண்டுதரமாவது போய் வந்தவர், ஊரிலை சின்னவீடு செற்றப் பண்ணிப் போட்டார்.

உங்க வீட்டுக்குள்ள, இருக்கிறதுக்கு, அங்க போய், வெவசாயம் செய்து கொண்டிருக்கலாம், எண்டு ஊசி இரண்டையும் போட்டு கொண்டு போனவர், அங்க, புதுவித வைரசாம் எண்டு மிரண்டு போய், அங்கையும், வீட்டுக்க பதுங்கி இருக்கிறாராம்.

உதுக்கு அங்கயே இருந்திருக்கலாம் எண்டு புலம்பிக் கொண்டிருக்கிறாராம். ஆணையிறவு தாண்ட ஏலாது.....

மனிசிக்காரிக்கு இப்பத்தான் தெரியும்.... பசை இருக்கிற படியால, ஜ டோன்ற் கேர்....நிலைப்பாடு.

ஆசையும், மோகமும் ஆரை விட்டது? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Happy Lungi Dance GIF by Brodha V

நான்... உள்ளாடை அணிவது இல்லை என்ற படியால்.
எனக்கு இது.... பிரச்சினை  இல்லை. :grin:  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

Happy Lungi Dance GIF by Brodha V

நான்... உள்ளாடை அணிவது இல்லை என்ற படியால்.
எனக்கு இது.... பிரச்சினை  இல்லை. :grin:  🤣

ஏன் அணிவதில்லை???????? பிளீஸ் ரெல் மீ 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

ஏன் அணிவதில்லை???????? பிளீஸ் ரெல் மீ 😎

காப்பதற்கு பெறுமதியாக எதுவும் இல்லையாக்கும்😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, குமாரசாமி said:

ஏன் அணிவதில்லை???????? பிளீஸ் ரெல் மீ 😎

 

25 minutes ago, கிருபன் said:

காப்பதற்கு பெறுமதியாக எதுவும் இல்லையாக்கும்😜

தோய்த்து… கொடியில், காயப் போட… யாரோ களவு எடுத்துக் கொண்டு போகிறார்கள் என்பதால், 😂

உள்ளாடையை… அணியாமல் விட்டு விட்டேன். இப்பதான் நிம்மதியாக இருக்கு. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, தமிழ் சிறி said:

தோய்த்து… கொடியில், காயப் போட… யாரோ களவு எடுத்துக் கொண்டு போகிறார்கள் என்பதால்,


UK இல் பெண்களின், அதுவும் இளம் பெண்கள் அணியும் தோற்றமுள்ள உள்ளாடைகள் தான் திருடப்பட்டது.

உங்கட நாட்டுக்காரருக்கு  taste ஏ இல்லாமல் போய்விட்டது.

Link to comment
Share on other sites

4 hours ago, குமாரசாமி said:

ஏன் அணிவதில்லை???????? பிளீஸ் ரெல் மீ 😎

பாவனையில் இல்லாத பொருளுக்கு ஜட்டி அணிந்தோ, அனியாவிட்டாலோ எல்லாம் ஒன்றுதான்.😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

உள்ளாடையை… அணியாமல் விட்டு விட்டேன். இப்பதான் நிம்மதியாக இருக்கு. 🤣

கேடி ராகவா எபெக்டோ? 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

Happy Lungi Dance GIF by Brodha V

நான்... உள்ளாடை அணிவது இல்லை என்ற படியால்.
எனக்கு இது.... பிரச்சினை  இல்லை. :grin:  🤣

சங்கத்து ஆள் போல இருக்கு!😂
கடைக்காறர் விலை கூட்டி விப்பாங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, MEERA said:

எல்லாம் இந்த அறிவிப்பால்….

6-DA27-D73-A80-C-4-A30-B2-DF-BC250-B1740

இந்த தகவல் மூலத்தை கொடுக்க முடியுமா? நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

தோய்த்து… கொடியில், காயப் போட… யாரோ களவு எடுத்துக் கொண்டு போகிறார்கள் என்பதால், 😂

அதை களவெடுத்து கொண்டு போய் என்னத்த..........:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

Happy Lungi Dance GIF by Brodha V

நான்... உள்ளாடை அணிவது இல்லை என்ற படியால்.
எனக்கு இது.... பிரச்சினை  இல்லை. :grin:  🤣

Very nice,,

எதிர்காலத்தில் இப்படியொரு பிரச்சனை வரும் என்று தெரிந்தே அந்தகாலத்தில்  விஸ்வநாதன் ராமமூர்த்தி அருமையாக தமிழ்சிறிக்காக இசையமைத்த ஒரு பாடல்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

இந்த தகவல் மூலத்தை கொடுக்க முடியுமா? நன்றி.

ஏன் மூலம் இருந்தால் தான் நம்புவீர்களா…?😂

Google இல்  “ sri lanka import restrictions “ எனத் தேடிப்பாருங்கள் போதியளவு உள்ளது.

(தமிழ் மொழி இணைய  ஊடகங்களில் இல்லை)

https://island.lk/margin-deposit-requirement-against-importation-of-non-essential-goods/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யும் உள்ளாடைகளை  சதொச ஊடாக  விற்பனை செய்ய நடவடிக்கை - பந்துல குணவர்தன

(இராஜதுரை ஹஷான்)

இறக்குமதி செய்யப்படும் 623 அத்தியாவசியமற்ற பொருட்களின் உத்தரவாத தொகை அதிகரித்துள்ளமையால்  உள்ளாடை பாவனைக்கு தட்டுப்பாடு ஏற்படாது. விலையும் அதிகரிக்கப்படாது. தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யும் உள்ளாடைகளை  சதொச விற்பனை  நிலையத்தின் ஊடாக  குறைந்த விலைக்கு விற்பனை செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன  தெரிவித்தார்.

வர்த்தகத்துறை அமைச்சில் இன்று சனிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவா று குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அந்நிய செலாவணியை வலுப்படுத்துவதற்காகவே  இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியமற்ற 623 பொருட்களின் உத்தரவாத விலை தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படவில்லை. இறக்குமதியாளர்கள். முழு  தொகையினையும் ரூபா பெறுமதியில் வைப்பிலிட்ட பிறகு இறக்குமதி செய்ய முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது சாதாரணதொரு செயற்பாடாகும்.

இதனை எதிர்தரப்பினர் தங்களின் குறுகிய அரசியல் சேறு பூசல் பிரசாரத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் உள்ளாடைக்கு தட்டுப்பாடு  ஏற்பட போகிறது என சமூக வலைத்தளங்களிலும்,  ஊடக சந்திப்புக்களிலும் கீழ்த்தரமான முறையில் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

இவ்வாறான வெறுக்கத்தக்க கருத்துக்கள் தேசிய மட்டத்திலான ஆடைத்தொழில் துறைமை அவமதிப்பதாக காணப்படும்.  இலங்கையின் தைத்த ஆடைகளுக்கு உலக சந்தையில் அதிக கேள்வி நிலவுகிறது. தேசிய மட்டத்தில் தைக்கப்படும்உயர்தரமான  ஆடைகளை குறைந்த விலையில் மக்கள் பெற்றுக் கொள்கிறார்கள்.

தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. இலங்கையில் தயாரிக்கப்படும் உள்ளாடைகளுக்கு சர்வதேச சந்தையில் அதிக கேள்வி காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் நாட்டு மக்களின் பாவனைக்கு உள்ளாடை பற்றாக்குறை ஏற்படும் என்று குறிப்பிடும் கருத்துக்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நாட்டு மக்களின்  பாவனைக்கு தேவையான உள்ளாடைகள்  போதுமான அளவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக பிரதான நிலை உள்ளாடை உற்பத்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. எக்காரணிகளுக்காகவும் உள்ளாடைக்கான தட்டுப்பாடும், விலை அதிகரிப்பும் ஏற்படாது.  என்பதை வர்த்தகத்துறை அமைச்சர் என்ற ரீதியில் பொறுப்புடன் குறிப்பிட்டுக் கொள்கிறேன். சதொச விற்பனை நிலையம் ஊடாக உள்ளாடைகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய எதிர்பார்த்துள்ளோம். என்றார்.

 

https://www.virakesari.lk/article/113122

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறித்தம்பி! இதில எது உங்கடை?   😎

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/9/2021 at 10:20, தமிழ் சிறி said:

Happy Lungi Dance GIF by Brodha V

நான்... உள்ளாடை அணிவது இல்லை என்ற படியால்.
எனக்கு இது.... பிரச்சினை  இல்லை. :grin:  🤣

நெருங்கும் ஜல்லிக்கட்டு.. காளைகள் திருட்டால் மதுரை மக்கள் அதிர்ச்சி !

பாயுற மாட்டுக்குத்தான் மூக்கணாங் கயிறு போடணும்.......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

நெருங்கும் ஜல்லிக்கட்டு.. காளைகள் திருட்டால் மதுரை மக்கள் அதிர்ச்சி !

பாயுற மாட்டுக்குத்தான் மூக்கணாங் கயிறு போடணும்.......!   😁

செத்த கிளிக்கு தேவையில்ல😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தைத்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து ,  பிராண்ட் பேர் போட்டு திரும்பவும் ஊருக்கு போகுது ...அதை அதிக விலை குடுத்து வாங்காமல் வீட்ல தைச்சு போடுங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ரதி said:

இலங்கையில் தைத்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து ,  பிராண்ட் பேர் போட்டு திரும்பவும் ஊருக்கு போகுது ...அதை அதிக விலை குடுத்து வாங்காமல் வீட்ல தைச்சு போடுங்கோ 

ஏன் நீங்கள் முன்னர் தைச்சு போட்டனீங்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

இலங்கையில் தைத்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து ,  பிராண்ட் பேர் போட்டு திரும்பவும் ஊருக்கு போகுது ...அதை அதிக விலை குடுத்து வாங்காமல் வீட்ல தைச்சு போடுங்கோ 

60 களில் எல்லோருமே தைத்து தான் போட்டார்கள்.

நகரங்களில் வசித்த சிலர் வசதி படைத்தவர்கள் என்று விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே வாங்கிப் போட்டார்கள்.
பெட்டைகளும் இப்ப மாதிரி இல்லாமல் சிறிய இறுக்கிய யங்கி மாதிரி தைத்து போட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இங்கு design design ஆ போட்டுக் கொண்டு அங்கு உள்ளவர்களை தைச்சு போடு என்பது சரியா?

ஆட்சியில் உள்ளவர்களின் தவறுக்கு சாதாரண மக்கள் பலிக்கடாவா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

நாங்கள் இங்கு design design ஆ போட்டுக் கொண்டு அங்கு உள்ளவர்களை தைச்சு போடு என்பது சரியா?

ஆட்சியில் உள்ளவர்களின் தவறுக்கு சாதாரண மக்கள் பலிக்கடாவா???

தமிழர்கள் கட்டாயம் சிங்களம் படிக்க வேணும்....
வீட்டுத்தோட்டம் செய்து நாட்டை தன்னிறைவு ஆக்கவேணும்....
கோவணம் அவையவையே தைச்சு போடோணும்...

 உந்த கதையள் எல்லாம் சிங்கள இனவாத அரசியலுக்கு வெள்ளை அடிக்கிற வேலை கண்டியளோ🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெயில் படுத்திறபாட்டுக்கு உள்ளாடையெல்லாம் தேவையா?!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.