Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

சின்னப்பன்றி: அகரன்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சின்னப்பன்றி: அகரன்

Sinnapantry.jpg?resize=838%2C1184&ssl=1

அதிசயமாக அன்று காலை இயல் என்னை எழுப்பினாள். நாம் எழும்புவதற்கு கால் மணி நேரம் இருந்தது. கண்கள் அதிசயிக்கும்படி தானாகவே குளித்து, தன்னை அழகு படுத்தி, தனக்கு பிடித்த ‘அனா’ சட்டையை அணிந்திருந்தாள். காதுகள் அதிரும்படி பிரெஞ்சு மொழியில் ‘’Petit cochon réveille-toi’’என்றாள். (சிறிய பன்றி கண்விழி) எனது வாழ்வில் என்னை ‘சின்ன பன்றி’ என்று அழைத்தது, நான்கு வயதை நிறைத்துக் கொண்டிருந்த என் இயல். நான் பதறிப் போனேன். அவள் ‘பெரிய பன்றி’ என்றிருந்தால் பதட்டத்தின் அளவு குறைந்திருக்கும்.

பொதுவாக தமிழில் பன்றி, எருமை, குரங்கு, நாய் என்று ஊரில் திட்டு வேண்டியதால் அவை ‘கெட்ட’ வார்த்தைகள் என்று என்னிடம் படர்ந்திருந்தது. ஒரு இருட்டு மேகம் போல முகத்தை மாற்றி ‘’ இதை யார் உனக்கு சொல்லித் தந்தார்கள் ? ‘’ என்றேன். அவள் மீண்டும் ஒருமுறை அதை சொல்லிச்சிரித்தவாறு ‘என் நண்பி கிளாரா ‘ என்றாள்.

என்னை வெற்றி கொண்டு விட்டதான முகச் சாயலில் ஒரு படி மேல் சென்று ‘’ réveille-toi papa grenouille ‘’ (அப்பா தவக்கிளையே ! எழுந்திரு.) என்றாள். எனது மனதெங்கும் பஞ்சில் ஊறும் இரத்தம் போல் வேதனை படர்ந்தது. ‘’மகளே அந்த வார்த்தைகள் சொல்லக் கூடாது ! அது மகிழ்ச்சியற்ற வார்த்தைகள். மீண்டும் சொன்னால் அப்பா கவலைப்படுவேன்’’ என்றேன்.

அவள் ‘’ இல்லை அப்பா ! இது கெட்ட வார்த்தை இல்லை’’ என்றாள். என்னால் ஒருபோதும் அதை நம்ப முடியாது. இரண்டு வருடமாக பள்ளிக்குச் செல்லும் இயல் ஒரு போதும் இப்படி வார்த்தையை பயன்படுத்தவில்லை. அதைவிட நாளை அவளுக்கு இரண்டாவது ஆண்டில் முடிவுக்கான பெரிய விடுமுறை ஆரம்பிக்கிறது. இந்த நேரம் பார்த்து கிளாரா கெடுத்து விட்டாள் என்று நினைத்துக் கொண்டேன்.

எனது பெயரை பிரான்சில் முழுமையாக ‘’முத்துலிங்கம் தயாளநேசன்’’ என்று உச்சரிக்கும் இயலின் ஆசிரியரான எமிலியிடம் இயல், கொடும்சொல் சொல்லப்பழகியதை பேசிவிட வேண்டும் என்று தீர்மானித்து பள்ளிக்குச் செல்லத் தயாரானேன்.

நிறைந்து வழியும் இளமையும், நிறுத்தாத புன்னகையும், மெல்லிய சங்கிலிகள் போன்ற கட்டம் கட்டப்பட்ட அளகமும், வைத்திருந்தாள் எமிலி. பார்ப்பவர் எல்லோரையும் பாடாய்ப்படுத்தும் அழகு. இடியமீன்கள்கூட சின்ன மீன்குஞ்சுகள் போல ஆகிவிடுவார்கள். இளங்கோ அடிகள் இவளைப்பாடி இருந்தால் ‘’ புரிகுழல் அளகத்து நகை !’’ என்றிருப்பார். தமிழ்ப்பெண்களின் நீண்ட கருங்குழல் பேரழகென்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் பொன்போன்று மினுங்கும் முடியை வைத்திருப்பவளுக்கு ‘பொன்நகை’ தேவையற்றுப் போய்விடுகிறது. கம்பர் எமிலியைக் கண்டிருந்தால் ‘’ கஞ்சா இருக்கும் மலர்க்கூந்தல்’’ என்றிருப்பார். என்ன செய்வது ? இளங்கோ, கம்பர், இன்னும் பெண்களை ஆராதித்த புலவர்பெருமக்களுக்கு வாய்த்தது அவ்வளவுதான் ! அவர்கள் மேற்குநாடுகளுக்கு ஏதிலியாகியிருந்தால் எத்தனை புதுச்சொற்கள், அழகுப்பாடல்களை தமிழ் கண்டிருக்கும் ? .

எமிலியிடம் பேசுவதில் ஒரு ஆபத்து இருந்தது. இயலைக் கண்டதும் ‘mon cœur’ (என் இதயமே) ஓடி வா’ என்று அவளை அணைத்து விட்டு என்னைப் பார்த்து உலகின் அற்புதமான சிரிப்பை உற்பத்தி செய்வாள். ஒரு கவிதை சொல்வது போல நளினமாக ‘முத்துலிங்கம் தயாளநேசன் çava ? (நலமா ?) என்பாள். நான் பேச நினைத்ததை எல்லாம் மறந்துவிடுவேன்.

பள்ளி வாசலில், எல்லாப்பிள்ளைகளும் திரும்பி திரும்பி தாய்க்கோ, தந்தைக்கோ கைகாட்டி உதடுகளில் வலது கையை வைத்து முத்தங்களை அனுப்புவார்கள். பெற்றோரும் அனுப்புவார்கள் எனக்கு அந்த வாய்ப்பு வருவதில்லை. இயல் எமிலியை கண்டதும் என்னை முழுவதுமாக, மறந்து விடுவாள். ஒருபோதும் திரும்பிப் பார்ப்பதில்லை. மற்றப் பிள்ளைகளின் முத்தங்களை இரவல் வேண்டி இயலி முதுகை நோக்கி முத்தத்தை அனுப்புவேன். அது திரும்பி வராது. எதிர்காலத்தில் அவள் ‘சின்னப் பன்றி’ என்ற வார்த்தையை எல்லோருக்கும் முன்னால் அனுப்பாமல் இருந்தால் போதும் என்று நினைத்து கொண்டேன்.

அந்தப்பள்ளியில் எல்லோருக்கும் தெரிந்தவளாக இயல் இருந்தாள். அவளது நிறம் அங்கு புதுமையாக இருந்தது. வீட்டைவிட பள்ளியை விரும்பும் ஒருத்தியாகவும் இயல் இருந்தாள். பள்ளியில் இருந்து ஒவ்வொரு மாலையும் 04 மணி 30 நிமிடத்துக்கு அழைத்துப் போவேன். எல்லா பிள்ளைகளும் பெற்றோரிடம் பசுவைத்தேடும் கன்றாக கண்களை நிமிர்த்தி காத்திருப்பார்கள். இயல் மட்டும் எமிலியிடம் ஏதேதோ கேட்டுக் கொண்டிருப்பாள். இறுதியாக எமிலி ‘’ உன் அப்பா வந்துவிட்டார், அங்கேபார்’’என்ற பின்னரும் என்னை பார்த்துவிட்டு எமிலியுடன் பேச்சை நீட்டிக்கொண்டிருப்பாள்.

எமிலி என் கரங்களில் இயலைத்தரும்போது ‘’ உங்கள் மகள் என்னோடு வந்துவிடுவாள்போல் இருக்கிறது’’ என்பாள். நான் எமிலிக்காக சிரிப்பேன். என்னிடம் நடுக்கடலில் தத்தளிக்கும் அகதியின் மனநிலை இருக்கும்.

அன்று எந்தத்தடைகளுமற்று சூரியன் வந்த காலையில் எமிலியிடம் இயலை கொடுத்ததும் ‘’எமிலி உங்களிடம் இரண்டு நிமிடம் இருக்குமா ? பேசவேண்டும் ! ‘’ என்றேன். ‘’என்னவிடயம்பற்றி முத்துலிங்கம் தயாளநேசன் ? என்று என்பெயரை பாடிக்கொண்டிருந்தாள்.

‘’இயல் இன்றுகாலை ’Petit cochon réveille-toi’’, réveille-toi papa grenouille என்ற வார்த்தைகளை கூறுகிறாள். அதிர்ச்சியாக இருக்கிறது இந்த வார்த்தைகள்.. ‘என்று முடிக்க முதல் இரண்டு நிமிடம் முடிந்து விடும் என்ற அவசரத்தில் ‘’ஓ.. நேசன் அது ஒரு செல்ல வார்த்தை. அன்பானவர்களை பிரஞ்சு மொழியில் அப்படி அழைப்பது வழக்கம். நீங்கள் பயப்படத்தேவையில்லை ‘’ என்றாள். என்னால் இரண்டு வெட்கங்களைத் தாங்கவேண்டி இருந்தது.

சிரித்துக்கொண்டே வேலைக்குச் சென்றேன். என் எதிரே சென்றவர்கள் தனியே சிரிப்பதை கடைக் கண்ணால் பார்த்துச் சென்றார்கள். சிரிப்பது வீதியில் அதிசயமாகத் தான் இருந்தது. எனக்கும் இது புது வகை பழக்கமாக தோன்றிவிட்டிருந்தது. சொல்லிச் சிரிக்க யாரும் இல்லாததால் தனியே சிரிப்பது ஒன்றும் தவறில்லை. ஆனால் எல்லை தாண்டினால் வைத்தியசாலை செல்ல வேண்டி வரலாம். அவ்வளவுதான்.

எனது வேலை நேரத்தை அந்த நிறுவனம் இரண்டாக வெட்டித் தந்திருந்தது. அது ஒரு மகளை வைத்திருக்கும் எனக்காக செய்த விதிவிலக்கு. காலை 10 மணியிலிருந்து மாலை 3 மணி வரை. பின்னர் மாலை 07 மணியிலிருந்து இரவு 11 மணி வரை. இயலை பள்ளியில் விடவும் பின்பு அழைத்து வந்து பணிவிடைகளையும் உலகத்தின் உன்னத பொறுமையை எனக்குக் கற்றுத்தந்த உணவூட்டும் பணியையும் செய்ய அது பொருத்தமாக இருந்தது.

மாலை 6 மணிக்குப் பின்னர் அந்த தீப்பெட்டி போன்ற வீட்டில் நான் செய்வது சட்டப்படி குற்றமானது. ஒரு குழந்தையை தனியே விட்டு விட்டு செல்வது. ஆனால் என்னிடம் வேறு தீர்வு இருக்கவில்லை. அந்த நகரத்தில் அறிந்த தமிழர்களோ, இரவில் பிள்ளையைப் பார்க்கும் பணியாளர்களோ இல்லை. பணம் கொடுத்து பிள்ளையை பார்க்கும்படி வங்கி நிலுவையும் இல்லை. கோடைகால கிணறு போல் மாத முடிவில் ஆழம் சென்றிருக்கும்.

இயல் தான் பிறந்து பதினோராவது நாளில் இருந்து எனக்கு இந்த விடயத்தில் முழுமையான ஒத்துழைப்பை தருகிறாள். அவள் இரண்டு வயதை தொட்ட போது ஒரு நாள் மட்டுமே என்னை அதிரச் செய்தாள்.

அன்று மாலை வேலைக்குச்சென்றபோது வீட்டுக்கதவை பூட்டாமல் சென்றுவிட்டேன். இரவு 11 மணி கடந்து நான் வீட்டை அடைந்த போது, அவள் வீட்டை விட்டு வெளியேறி படிகளில் இறங்கிக் கொண்டிருந்தாள். (யாரும் பார்க்கவில்லை.) வாரி அணைத்து அறையில் சென்று அவளுக்கு மொழி புரியாத போதும் பேசிக்கொண்டே இருந்தேன். அவள் என் கண்களை தடவி நீரைத் தொட்டு விளையாடினாள்.

அன்றிலிருந்து இரவு பசித்தால் குடிக்க அருகே அவளது பால்புட்டியும், உறவினர்களான பூனைப்பொம்மை, மிக்கிமௌஸ், க்கோன், டெடிபியர், நூனூஸ்பொலர், பேர்நுவல், புலி, யானைக்குட்டி, என அவளுக்கு மட்டும் பெயர் தெரிந்த இன்னும் பல பொம்மைகளையும் கட்டில் அருகில் வைப்பேன். இயல் பேசி, பாடி, பாடம்சொல்லி, தூங்க அவர்கள் துணை வேண்டும். கடவுளுக்கு கொடுக்க வைத்திருந்த முத்தத்தையும் கொடுத்த பின்னர் கதவை பூட்டி விட்டு சிலநிமிடம் கதவில் காதுவைத்து கேட்பேன். தன் பொம்மைகளுக்கு கட்டளையிடும் சத்தம் கேட்கும். இந்தச் சீதையை கடத்த எந்த புட்பக விமானமும் வரமுடியாதென்று நினைப்பேன். இவள் இராவணன் வளர்க்கும் சீதை ! என்று எனக்குள் நம்பிக்கை ஊட்டிவிட்டு வேலைக்குச் செல்வேன்.

இரவு 11 மணி கடந்து வரும்போது பால் புட்டி தீர்ந்திருக்கும். பொம்மைகள் இயலுக்கு மேலும் அருகிலும் தூங்கியிருப்பார்கள். இயல் ஒரு இளவரசியின் தோரணையில் தூங்கியிருப்பாள்.

நான் ஒவ்வொரு இரவும் சில நிமிடங்கள் அந்த காட்சியை தினமும் குடித்து விட்டுத்தான் குளிக்கச் செல்வேன்.

எனக்கு எந்த விதத்திலும் துன்பத்தை தராமல் தனிமையில் இரவின் பாதியைக் கழித்து வளரும் இயல் ஓர் இரும்பு பெண்ணாக கரும்புபோல் வளர்வாள் என எண்ணிக்கொள்வேன். அவள் எனக்கு சசியை நினைவூட்டிக்கொண்டே வளர்ந்தாள்.

சசியின் வயிற்றுக்குள் இயல் வளர்ந்தபோது தமிழ் பெயர்தான் வைக்க வேண்டும் என்று நான் பிரசங்கம் செய்துகொண்டிருந்தேன். ஆனால் என்னால் ஒரு பெயரைக்கூட தேடிப்பெற முடியவில்லை. ஒருநாள் மாலை 14 ம் லூயி மன்னன் கட்டிய சிலுவைக் குளத்தினருகே இருவரும் புல்வெளியில் இருந்தபோது « ‘இயல்’ என்ற பெயரை வைப்போமா ? » என்று இயல்பாகக் கேட்டாள். அதிகமாக பேசிக்கொண்டு கனவுகளில் வாழ்ந்து கொண்டு நான் இருப்பேன். சசியோ செயல்களிலேயே எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருப்பாள். நான் வேலைக்கு போகும் போது வாசலில் ஒரு பவுத்த புன்னகை நிறைத்து பார்த்துக் கொண்டிருப்பாள்.

இயல் பிறந்து பதினோராவது நாள் அந்த நதி தீர்ந்தது. இரவு 11 மணிக்கு ஆவலோடு வீடு வந்தேன். இயலை மடியில் வைத்து சசி காத்திருந்தாள். ‘’இயலை பிடியுங்கோ எனக்கு ஏதோ செய்கிறது.’’ என்றாள். ‘’ எனக்கு தலை சுற்றுகிறது’’ என்று விட்டுச் சென்றாள். முழுமையாக மணிக்கூட்டின் பெரிய கம்பி ஒருமுறை சுற்றிவர முதல் ஒரு அலறல் சத்தம் கேட்டது. யுத்தம் நடந்த நிலத்தில் இருந்த எனக்கு ஒரு போதும் கேட்டிராத கதறலாக அது இருந்தது. ச….. சி என்று மனமெங்கும் மிரண்டிருக்க கதவை திறந்தேன். சசி இரத்தத்திற்கு மேல் இரண்டாக மடிந்து கிடந்தாள். சசிக்கு தலைவலிப்பு வந்து தூக்கி வீசியதில் அந்த மலசலகூடத்தின் வெள்ளைமாபிள் மேல் விழுந்ததால் அவள் முறிந்துவிட்டாள்.

‘ஐ..யோ…ஓ..’ என்ற நீண்ட ஒலியைமட்டும் எழுப்பிவிட்டு நான் அமைதியாகி போனேன். எதிர் வீட்டு ‘கினே’ என்ற நாட்டைச் சேர்ந்த அரேபியாவும், சிண்டாவும் அந்த அறையில் இருந்து சசியை தூக்க முயன்றார்கள்,. முடியவில்லை. பின்னர் அவசர வைத்திய உதவியை அழைத்தார்கள. ஒரு சிவப்பு நிற வைத்திய அவசர வண்டியில் வந்தவர்கள் கடும் முயற்சியில் கதவை கழற்றியபின்னர்தான் சசியை வெளியே எடுத்து பெரும்படைசூழ கொண்டு சென்றார்கள். நான் இடியேறு விழுந்த தென்னை போல மடியில் இயலுடன் சரிந்து இடந்தேன்.

 அப்படித்தான் நானும், இயலும் வாழ ஆரம்பித்தோம். இயலுக்கு ஏதும் தெரிந்திருக்காது. அவள் எதிர்காலத்தில் அறிவாள். சசியின் அம்மா மட்டக்களப்பில் இருந்து பேசும் போது அடிக்கடி சொல்வார்- ‘ஒரு கரைச்சலும் உங்களுக்கு தராத இயல் தெய்வக்குழந்தை, சின்ன வயதில் பெரியவள் போல் வளர்கிறாள்’ என்று. நான் நினைப்பேன், குழந்தைகள் எல்லாம் தெய்வமாக பிறக்கிறது. நாம் ஏன் மனிதராக மாற்றுகிறோம் ?

அன்று வழமைபோல மாலை இயலை அழைத்து வரச் சென்றேன். இயலின் முகம் முற்றாக இருட்டியிருந்தது. மூன்று மாதம் பள்ளி இல்லை என்ற தகவல் அவள் மகிழ்ச்சி உலகத்தை குலைத்திருந்தது. எமிலி தன் குழந்தையை பிரிவது போல பல நிமிடங்கள் இயலைக் கட்டி அணைத்துக் கொண்டிருந்தாள். எமிலி முகத்திலும் முதன்முதல் சிரிப்பைக் காணமல் இருந்தேன்.

இயல் படலை தாண்டிய போதும் மீண்டும் ஓடிப்போய் இரு கைகளாலும் இதயத்தை செய்து காட்டினாள். எமிலியும் பதிலுக்கு செய்தாள். அந்த இதயங்களை பார்க்க மட்டுமே முடிந்தது.

இயல், தொட்டால் கலைந்துவிடும் தேன்கூடு போல முகத்தை வைத்திருந்தாள். நான் பேச்சை தொடுக்கவில்லை. பாதி வழியில், தன்னால் நடக்க முடியாது, கால் வலிக்கிறது என்றாள். அவளை தூக்கித் தோள் மீது இருத்தினேன். என் தலையைப் பிடித்தபடி ‘papa on peut retourner à l’école’ என்றாள். நான் வந்த பாதையில் மீண்டும் பள்ளிக்கு சென்றேன் எல்லோரும் சென்று சென்றுவிட்டிருந்தார்கள். பள்ளி தனித்திருந்தது. தோளில் இருந்தவாறு பள்ளிப்படலையை பிடித்தவாறு ‘ஏமிலி.. ஏமிலி.. ‘என்று தன் ஆசிரியரை அழைத்தாள். பள்ளி பதிலளிக்கவில்லை.

மழை திடீரென வந்து சேர்ந்தது. என்னிடம் குடை இல்லை. என் தோளில் இயலும் நானும் நனைந்து கொண்டே வீடு வந்தோம். அந்த மழை எனக்கு வசதியாக இருந்தது. இயலுக்கும்.

குளிப்பு தொட்டியில் இயலை இறக்கி தோயவார்த்தேன். தலை துவட்டி கட்டிலில் இருத்தினேன். பொம்மையை மடியில் இழுத்து வைத்து அதன் தலையைத் தடவினாள். ‘இயல் அப்பா தோய்ந்துவிட்டு வருகிறேன் இருங்கோ’ என்றேன். பொம்மையை பார்த்தவாறு தலையை ஆட்டினாள்.

தோய்ந்து விட்டு வந்து சூடாக்கிய பாலுடன் இயலின் கட்டிலை நெருங்கினேன். சசி யாழ்பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற புகைப்படம் ஒன்று தான் வீட்டில் தொங்கியது. அதை இறுக கட்டியவாறு தன் தாயைப் பார்த்துக் கொண்டிருந்தாள் இயல். çva va (நலமா ?) இயல் ? என்றேன். தலையைத் தடவியவாறு ‘papa je veux maman’(அப்பா, எனக்கு அம்மா வேணும் ! ) என்றாள்.

Mon ‘petit cochon’ je veux toi ! ’(என் சின்னப்பன்றியே ! எனக்கு நீ வேண்டும் !) என்றேன். எமிலியை கட்டி அணைத்ததுபோல பாய்ந்து என்னை இறுகக் கட்டி அணைத்தாள்.

மழைபெய்த வானம் தூர நின்றது. வெள்ளை முகில்கள் பிய்ந்து அலைந்தது. கிழக்கில் கருமேகங்கள் திரண்டு கொண்டிருந்தன, மேற்கில் சூரியன் பின்வாங்கிக் கொண்டிருந்தது. விடுபட்ட இடமெல்லாம் நீலம் நின்றது. இன்று மாலை வேலைக்குச் செல்வது என் வலுவுக்கு ஏற்றதில்லை என்று வானம் சொன்னது.

 

அகரன் 

 

பிரான்ஸில் வசித்துவரும் எழுத்தாளர். அரசியல் தத்துவ இறுக்கமில்லாத, அழகியல் கற்பனைத் திறன்கொண்ட படைப்பிலக்கியவாதியாக விமர்சகர்களால் மதிப்பிடப்படுகிறார்.

 

https://akazhonline.com/?p=3572

 • Like 5
 • Thanks 1
 • Sad 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

quelle magnifique histoire .......என்ன ஒரு அழகான கதை.......!  🌹

நன்றி கிருபன்.......! 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 அழகான ஒரு அப்பா மகள் கதை. பகிர்வுக்கு நன்றி . எழுதியவருக்கு என் பாராட்டுக்கள். 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

“இவை யாவும் கற்பனை” என இறுதியில் எழுதியிருந்தால் மனம் ஆறுதல் அடைந்திருக்கும்.. அவ்வளவுதான்.. 

எவ்வளவுதான் அருமையாக எழுதியிருந்தாலும் கதையை பாராட்ட முடியவில்லை.. என்னைப்பொறுத்தவரை மிகவும் தவறான உதாரணத்தை இந்த கதை கூறுகிறது.. 

 

 

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த கதை கற்பனை கதையாக இருந்தாலும் கூட எனக்கு இந்த கதையில் வரும் சம்பவம்/செயல் சந்தேகத்தையும் வேதனையையும் தருகிறது.. 

என்னதான் பணம் உயிர் வாழ தேவை என்றால் கூட இந்த மாதிரி குழந்தையை தனியே விட்டு போவார்களா? கற்பனை என்றாலும் கூட ஏன் இந்த மாதிரி செயல்களை எழுதவேண்டும்? சமூகபொறுப்புணர்வு எழுத்தாளர்களுக்கு வேண்டாமா? 

இல்லை கற்பனைக்கு பஞ்சம் ஏற்பட்டு எதை எழுதுவது என தெரியாமல் எழுதுவது, நியாயப்படுத்துவது!!!

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்த கதை கற்பனை கதையாக இருந்தாலும் கூட எனக்கு இந்த கதையில் வரும் சம்பவம்/செயல் சந்தேகத்தையும் வேதனையையும் தருகிறது.. 

என்னதான் பணம் உயிர் வாழ தேவை என்றால் கூட இந்த மாதிரி குழந்தையை தனியே விட்டு போவார்களா? கற்பனை என்றாலும் கூட ஏன் இந்த மாதிரி செயல்களை எழுதவேண்டும்? சமூகபொறுப்புணர்வு எழுத்தாளர்களுக்கு வேண்டாமா? 

இல்லை கற்பனைக்கு பஞ்சம் ஏற்பட்டு எதை எழுதுவது என தெரியாமல் எழுதுவது, நியாயப்படுத்துவது!!!

 

நீங்க என்ன குற்றம் கண்டீர்கள் கதையில் என்று நேற்றைய பின்னூட்டத்தை பார்த்து நினைத்தேன். இப்போது விளங்கிக் கொண்டேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஏராளன் said:

நீங்க என்ன குற்றம் கண்டீர்கள் கதையில் என்று நேற்றைய பின்னூட்டத்தை பார்த்து நினைத்தேன். இப்போது விளங்கிக் கொண்டேன்.

அரைகுறையான கருத்தை எழுதியதற்கு மன்னிக்கவேண்டும் ஏராளன்..பெரும்பலான சமயங்களில் நான் நினைப்பதை முழுமையாக எழுதுவதில்லை, வீண் விவாதங்கள்-கல்லெறி படக்கூடாது என்பதற்காக🙂.. ஆனாலும் சில சமயங்களில் எழுத நினைப்பதை எழுதாமலும் இருப்பதில்லை.. அப்படியான ஒரு நிலைதான் இந்த கதையில் என் கருத்து..

முதலில் இந்த கதைபற்றிய எனது எண்ணத்தை எழுதிவிட்டு பின்பும் மனத்திருப்தி ஏற்படாதமையாலேயே மீண்டும் எனது கருத்தை பதிந்தேன்.. 

அப்பா-மகள் பாசம் என்பதை அழகாக எழுதியிருப்பதாக கூறினாலும் எந்த பெற்றோரும் செய்யக்கூடாத விடயத்தை , குழந்தையை தனியே விடுவது - கற்பனை என்றாலும் கூட நல்ல எடுத்துக்காட்டு இல்லை என்பதால் இந்த கதையே நல்லதொரு கதை என கூறமுடியாது.. 

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது
 • Thanks 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ந‌ம்பியா அணிய‌ வ‌ள‌த்து விட்ட‌து தென் ஆபிரிக்கா கிரிக்கேட் வாரிய‌ம் ஓமான் நாட்டில் கிரிக்கேட் விளையாடுப‌வ‌ர்க‌ள் கூட‌ இந்தியா ம‌ற்றும் பாக்கிஸ்தான்  வ‌ம்சாவ‌ழியின‌ர்  பப்புவா நியூகினி அவுஸ்ரேலியா நியுசிலாந் க‌ண்ட‌த்தை ஒட்டி இருக்கிற நாடு , அவ‌ர்க‌ள் என‌க்கு தெரிந்து 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பையில் எல்லாம் விளையாடி இருக்கின‌ம்.............. 20003ம் ஆண்டு இந்தியா கூட‌ சிமி பின‌ல் விளையாடின‌ கென்னியா அணி எங்கை என்று அற‌வே தெரியாது.............2003ம் ஆண்டு ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை வைத்து இருந்த‌து கென்னியா அணி அப்கானிஸ்தான் அணிய‌ ப‌ற்றி 9வ‌ருட‌த்துக்கு முத‌ல் நான் யாழ்க்க‌ள‌த்தில் எழுதினேன் க‌லைஞ‌ன் அண்ணாக்கு அண்ணா இவ‌ங்க‌ள் பாருங்கோ எதிர் கால‌த்தில் ந‌ல்லா விளையாடுவாங்க‌ள் என்று அப்ப‌ அவ‌ர் எழுதினார் அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ள் த‌ம்பி ப‌ந்துக்கு ப‌தில் குண்டை கொண்டு வ‌ந்து விளையாட‌ மாட்டாங்க‌ள் தானே என்று ப‌ம்ப‌லாய் எழுதினார் இப்ப‌ அப்கான் அணியின் அசுர‌ வ‌ள‌ர்ச்சியை க‌ண்டு ப‌ல‌ர் விய‌ந்து போய் நிக்கின‌ம் ஒரு நாள் அப்கானிஸ்தானிட‌ம் இந்தியா தோல்விய‌ ச‌ந்திக்கும் நாள் வ‌ரும் ஹா ஹா...................😁😀  
  • தமிழர் அரசியலில், மூலோபாய கூட்டு ஒன்றின் தேவை?- யதீந்திரா இந்தியாவின் வெளியுறவுச் செயலர் தமிழ் கட்சிகளின் ஒற்றுமை தொடர்பில் வலியுறுத்தியிருந்தார். ஆகக் குறைந்தது 13வது திருத்தச்சட்டத்திலாவது, தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதையே இந்தியா விரும்புகின்றது. நீங்கள் சில அப்படையான விடயங்களில் ஒன்றுபடாவிட்டால், இந்தியாவினால் பெரிதாக எதனையும் செய்ய முடியாது என்பதுதான் இதன் பொருள். இந்திய வெளியுறவுச் செயலரின் விஜயத்தை தொடர்ந்து, மாகாண சபை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது. எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் தேர்தலை வைப்பது தொடர்பில் அரசாங்கம் ஆலோசித்துவருவதாக கூறப்படுகின்றது. எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடருக்கு முன்பதாக, தேர்தலுக்கான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டால், அதில் ஆச்சரியமில்லை. மாகாண சபை தேர்தல் ஒன்றுதான் அரசாங்கத்தினால் நிறைவேற்றக் கூடிய ஒரேயொரு விடயமாக இருக்கின்றது. இறுதியாக இலங்கை மீது கொண்டுவரப்பட்ட ஜெனிவா பிரேரணையிலும், மாகாண சபை தேர்தல் தொடர்பில் வலியுறுத்தப்பட்டிருப்பதால், தேர்தலை தொடர்ந்தும் பிற்போடுவதால், சர்வதேசத்தை எதிர்கொள்ளுவது கடினம் என அரசாங்கம் கருதலாம். ஆனால் இந்த இடத்தில் ஒரு விடயத்தை தெளிவாக புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். அதாவது, அரசாங்கம் மாகாண சபை தேர்தலை நடத்த முற்படுவதும், 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துதல் என்பதும் ஒன்றல்ல. 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதை வழமைபோல் அரசாங்கம் இழுத்தடித்துக் கொண்டே செல்லலாம். இதுவரை செய்யாதது போல். இந்த இடத்தில்தான், இந்திய வெளியுறவுச் செயலர் வலியுறுத்தியிருக்கும் ஆகக் குறைந்தது, 13வது திருத்தச்சட்ட விடயத்திலாவது, தமிழ் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்னும் கோரிக்கை முக்கியத்துவம் பெறுகின்றது. புதுடில்லி சில விடயங்களை வெளிப்படையாக கூறாது. கூறவும் முடியாது. நாங்கள்தான் அதில் உள்ளடங்கியிருக்கும் அரசியலை புரிந்துகொள்ள வேண்டும். இலங்கை விவகாரத்தில் இந்தியா நேரடியாக தலையீடு செய்த காலத்தில், 1985இல் திம்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றது. கருத்து முரண்பாடுகள் இருந்த போதும் தமிழ் இயக்கங்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியும் திம்புவில் ஒன்றுபட்டிருந்தன. விடுதலைப் புலிகள் இயக்கம் கூட, தனித்து செல்லவில்லை. ஈழத் தேசிய விடுதலை முன்னணி என்னும் பெயரிலேயே விடுதலைப் புலிகள் திம்புவில் பங்குகொண்டனர். அன்றைய காலத்தின் பிரதான இயக்கங்களான புளொட், தவிர்ந்த ஏனைய நான்கு இயக்கங்களும் ஈழத் தேசிய விடுதலை முன்னணியாக ஒன்றுபட்டிருந்தன. புளொட் செயலதிபர் உமா மாகேஸ்வரனுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கும் இடையிலான தனிப்பட்ட முரண்பாடுகளால், ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் புளொட் இணையவில்லை ஆனால், திம்புவில் அரசியல்ரீதியில் அனைவரும் ஒரணியாகவே நின்றனர். உண்மையில் திம்பு பேச்சுவார்த்தையில் இயக்கங்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஓரணியாக அரசாங்கத்தை எதிர்கொண்டமையானது கொள்கைரீதியான ஒன்றல்ல. அது முற்றிலும் மூலோபாயம் சார்ந்தது. பிராந்திய சக்தியான இந்தியாவின் அனுசரணையில் முன்னெடுக்கப்படும் ஒரு முயற்சியின் போது, ஒவ்வொருவரும் தனித்து நின்றால், அது தமிழர்களின் பேரம்பேசும் ஆற்றலை பலவீனப்படுத்திவிடும் என்பதால்தான் அன்று அனைவரும் ஓரணியில் நின்றனர். ஏனெனில் ஆயுத இயக்கங்களுக்கிடையில் கொள்கை ரீதியில் வேறுபாடுகள் இருந்தன. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈரோஸ் ஆகியவை இடதுசாரி கருத்தியில்மீது நம்பிக்கை கொண்ட இயக்கங்களாக இருந்தன. ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் டெலோ ஆகியவை அவ்வாறான கருத்தியல் போக்கில் நாட்டம் கொண்டிருக்கவில்லை. அவ்வாறாயின் திம்புவில் எவ்வாறு இவர்களுக்கிடையில் இணைவு ஏற்பட்டது? இந்த அடிப்படையில்தான் நான் திம்புவை ஒரு மூலோபாய ரீதியான தமிழ் கூட்டு என்று குறிப்பிடுகின்றேன். இன்று அப்படியானதொரு மூலோபாய அரசியல் கூட்டு தொடர்பில் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் சிந்திக்க வேண்டியிருக்கின்றது. ஏனெனில் அப்படியானதொரு மூலோபாய கூட்டையே புதுடில்லி விரும்புகின்றது. அதனைத்தான் அவர்கள் மறைமுகமாக உணர்த்த முற்படுகின்றனர். இந்தக் கூட்டு 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துதல் என்னும் இலக்கை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். இதுவும் புதுடில்லியின் விரும்பம்.   இன்று தமிழர் உரிமையரசியலை முன்னெடுக்கும் கட்சிகள் மூன்று அணிகளாக இருக்கின்றன. பிரதான அணியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கின்றது. ஒப்பீட்டடிப்படையில் கூட்டமைப்பே பிரதான தலைமையாகும். அதே வேளை கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் இருக்கின்றது. இந்த மூன்று அணிகளும் ஒரு மூலோபாய கூட்டாக இயங்க வேண்டியது காலத்தின் தேவையாகும். ஆனால் 13வது திருத்தச்சட்டத்தை ஆரம்பப் புள்ளியாக ஏற்றுக்கொண்டு பயணிப்பதில் கஜேந்திரகுமார் உடன்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. ஆனால் ஏனையவர்கள் ஒரு மூலோபாய கூட்டுக்குள் இணைந்து கொள்வதில் பெரிய தடைகள் எவையும் இல்லை. இந்த இடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய அடிப்படையான ஒரு விடயமுண்டு. அதாவது அடிப்படையில் இது 13வது திருத்தச்சட்டம் தொடர்பான விடயமல்ல. இந்த விடயத்தை சிலர் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை அல்லது அவர்களால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. இன்றைய சூழலில் 13வது திருத்தச்சட்டம் என்பது அடிப்படையில் இந்திய-ஈழத் தமிழர் அரசியல் ஊடாட்டத்திற்கான அடித்தளமாக இருக்கின்றது. எனவே புதுடில்லி தொடர்ந்தும் வலியுறுத்திவரும் ஒன்றை மிகச் சாதாரணமாக நிராகரித்துவிட்டு, புதுடில்லியுடன் ஈழத் தமிழர் தலைமைகள் உரையாடலை மேற்கொள்ளவே முடியாது. தமிழ் தலைமைகள் என்போர், இந்த விடயத்தை சரியாக விளங்கிகொள்ள முயற்சிக்க வேண்டும். தேர்தல் மேடைகளில் எதையும் பேசலாம் ஆனால் கடந்த பன்னிரெண்டு வருடங்களில் அரசியல் தீர்வு விடயத்தில், தமிழ் தலைமைகளால் எதையாவது சாதிக்க முடிந்திருக்கின்றதா? நம்பிக்கையுடன் நோக்கப்பட்ட, மேற்குலக அழுத்தங்களின் விளைவான, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையிலும் கூட, 13வது திருத்தச்சட்டம், வினைத்திறனான மாகாண சபை என்பவைதான் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் சூழலில் பிறிதொரு தவறான புரிதலும் உண்டு. அரசியல்வாதிகள் மட்டுமன்றி, சில அரசியல் கருத்துருவாக்கிகளும் இந்த தவறான புரிதலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதவாது, 13வது திருத்தச்சட்டத்தை ஒரு ஆரப்ப புள்ளியாக ஏற்றுக்கொண்டுவிட்டால், பின்னர் அதற்கு மேல் நாங்கள் பயணிக்க முடியாது. இது முற்றிலும் தவாறான அரசியல் பார்வை. இன்றைய சூழலில் முன்வைக்கப்படும் ஒன்றுதான் எக்காலத்திற்கும் பொருந்தும் என்று எண்ணுவது தவறானது. அரசியல் சூழல் தமிழர்களுக்கு சாதகமாக மாறுகின்ற போது, புதிய கோரிக்கைகளுடன், புதிய சூழலை தமிழர்கள் எதிர்கொள்ள முடியும். ஆனால் இப்போதுள்ள அரசியல் யதார்த்தம் என்ன என்பதுதான் இங்குள்ள கேள்வி. எனவே இந்த கட்டுரை வலியுறுத்தும் மூலோபாய கூட்டு என்பது, அடிப்படையில் 13வது திருத்தச்சட்டம் தொடர்பானதல்ல. இது அடிப்படையில் இந்திய-ஈழத் தமிழர் அரசியல் உரையாடலை மீளவும் புதுப்பதற்கான ஒரு அரசியல் தயார்படுத்தல். இதனை பிறிதொரு வகையில் கூறுவதானால், இது தமிழ் கட்சிகள் தாங்களாகவே, தங்களை திம்பு இரண்டிற்கு தயார்படுத்துதல். திம்பு ஒன்று பற்றி இப்போது பிரஸ்தாபிப்பதில் எவ்வித பயனும் இல்லை. ஏனெனில் அதன் விளைவாக வந்ததுதான் இந்திய-இலங்கை ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தின் விளைவாக வந்ததுதான் 13வது திருத்தச்சட்டம். இந்;த திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைக்கக் கூடிய உரிமையும் தகுதியும் ஈழத் தமிழர் அரசியலுக்கு இருக்கின்றது. ஏனெனில் இதனை முழுமையாக அமுல்படுத்தும் கடப்பாட்டை இலங்கை அரசாங்கங்கள் இதுரையில் நிறைவேற்றவில்லை. யுத்தத்தில் வெற்றிபெற்ற மகிந்த ராஜபக்ச, 13 பிளஸ் தொடர்பில் இந்தியாவிற்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் வாக்குறுதி வழங்கியிருந்தார். ஆனால் இன்றுவரையில் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதுவும் தமிழர்களுக்கு சாதகமான ஒன்று. இந்த அடிப்படையில் நோக்கினால், 13வது திருத்தச்சட்டத்திலிருந்து செல்லுதல் என்பது, ஒரே நேரத்தில், இந்தியாவுடனும் மேற்குலகத்தோடும் இணைந்து பயணிப்பதற்கான அரசியல் அடித்தளம் ஒன்றை வழங்குகின்றது. ஆனால் இந்த அடிப்படையில் அரசியலை முன்னெடுக்க வேண்டுமாயின், அதற்கு இந்த கட்டுரை பரிந்துரைக்கும் மூலோபாய கூட்டு கட்டாயமான ஒன்றாகும். இந்த மூலோபாய கூட்டு ஒரு அரசியல் நிலைப்பாட்டை பிரகடணம் செய்யலாம். அதாவது, நாங்கள் அனைவரும், புதுடில்லியின், மேற்குலகத்தின் விரும்பத்திற்கு அமைவாகவே 13வது திருத்தச்சட்டத்திலிருந்து பயணிக்க இணங்குகின்றோம். ஆனால் 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதை அரசாங்கம் தொடர்ந்தும் தட்டிக்கழித்தால் இந்தியாவும், மேற்குலகும் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். இவ்வாறானதொரு நிலைப்பாட்டை தமிழ் கூட்டுத் தலைமை முன்வைக்கும் போது, அதுவே அரசாங்கத்தின் மீதான கடுமையான அழுத்தமாக மாறும். 13வது திருத்தச்சட்டத்தையாவது, முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்னும் நிர்பந்தம் அரசாங்கத்திற்கு ஏற்படலாம். இந்திய- இலங்கை ஒப்பந்தம் இடம்பெற்ற காலத்தில் இருந்தது போன்ற நிலைக்கு மாகாண சபைகள் இயங்கக் கூடிய சூழல் உருவாகினால் அதுவே போதுமானது. அவ்வாறானதொரு சூழல் உருவாகினால், இந்தியாவின் உதவியுடன் வடக்கு கிழக்கை மீளவும் கட்டியெழுப்ப முடியும். இந்தியா நிச்சயம் தமிழர்களின் கோரிக்கையை தட்டிக்கழிக்காது. ஆனால் இவை அனைத்திற்கும், இந்த கட்டுரை பரிந்துரைக்கும் ஒரு மூலோபாய கூட்டு அவசியம். மாகாண சபை தேர்தலை இந்த மூலோபாய கூட்டை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும். அத்துடன், தற்போதுள்ள நிலையில் வடக்கு கிழக்கு மாகாண சபையில் மூன்று அணிகளாக போட்டியிட்டால், வடக்கு மாகாண சபையில் கூட, கூட்டமைப்பு அறுதிப் பெரும்பாண்மையை பெற முடியாமல் போகலாம். அதே வேளை, ஏனையவர்களும், தனியாக போட்டியிடுவதன் மூலம், எதனையும் சாதிக்கப் போவதில்லை. விக்கினேஸ்வரன் தலைமையிலான அணியினர் தனியாக போட்டியிடுவதன் மூலம், ஆகக் கூடியது நான்கு அல்லது ஐந்து ஆசனங்களை பெறலாம். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நிலைமையும் அப்படியான ஒன்றுதான். இதனால் ஏற்படப் போகும் நன்மை என்ன? வடக்கு கிழக்கு மாகாண சபைகளில், அரச தரப்பு, பலமான நிலையில் இருப்பதற்கே, இது வழிவகுக்கும். அதே வேளை, இந்தக் கட்டுரை பரிந்துரைக்கும் மூலோபாய கூட்டு ஒரு கவர்ச்சிகரமான அரசியல் சுலோகமாகவும் இருக்கும். இதன் மூலம் மக்கள் மத்தியில் ஒரு தேர்தல் எழுச்சியையும் உருவாக்க முடியும். தமிழ் தலைவர்கள் என்போரிடம் தெளிவுண்டானால் மூலோபாய கூட்டு என்பது எட்டாக் கனியல்ல.   http://www.samakalam.com/தமிழர்-அரசியலில்-மூலோபா/
  • வல்வெட்டித்துறை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் கைது! October 23, 2021 இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டனர் என வல்வெட்டித்துறையை சேர்ந்த இரண்டு மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியை சேர்ந்த , வீ.நிமலதாஸ் மற்றும் த. கஜீபன் ஆகிய இரு மீனவர்களையும் நேற்றைய தினம் இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர். இரு மீனவர்களும் கடந்த 21ஆம் திகதி மீன் பிடிப்பதற்காக வல்வெட்டித்துறையில் இருந்து சென்ற நிலையில் , இந்திய கோடியக்கரைக்கு கிழக்கே 16.5 கடல் மைல் தொலைவில் இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை தாம் கைது செய்ததாக இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இரு மீனவர்களும் , வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழு ஆய்வாளர் ஊடாக வேதாரண்யம் கடற்கரை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.  விசாரணைகளின் பின்னர் இருவரையும் எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதித்துறை நடுவர் முன் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://globaltamilnews.net/2021/167588  
  • கொரோனா வைரஸ்: டெல்டா பிளஸ் புதிய கொரோனா திரிபு அதிவேகமாக பரவக் கூடியதாக இருக்கலாம் மிஷெல் ராபர்ட்ஸ் சுகாதார ஆசிரியர், பிபிசி இணைய செய்திகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, கொரோனா வைரஸ் - மாதிரிப் படம் கொரோனா வைரசின் புதிய திரிபை சிலர் 'டெல்டா பிளஸ்' என்று அழைக்கிறார்கள். அத்திரிபு வழக்கமான டெல்டா திரிபை விட எளிதாக பரவக்கூடியதாக இருக்கலாம் என பிரிட்டனைச் சேர்ந்த நிபுணர்கள் தற்போது கூறுகின்றனர். யூகே ஹெல்த் செக்யுரிட்டி ஏஜென்சி எனப்படும் சுகாதார பாதுகாப்பு அமைப்பு, இத்திரிபை 'ஆய்வில் உள்ள திரிபு' என வகைப்படுத்தியுள்ளது. இந்த புதிய டெல்டா பிளஸ் திரிபு ஏற்கெனவே உள்ள திரிபுகளைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என் சொல்வதற்கு ஆதாரம் இதுவரை இல்லை. தற்போது பயன்பாட்டில் இருக்கும் கொரோனா தடுப்பூசிகளே, இந்த திரிபுக்கு எதிராகவும் சிறப்பாக வேலை செய்யும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் ஏற்படும் கொரோனா தொற்றில் வழக்கமான டெல்டா திரிபால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. தற்போது டெல்டா பிளஸ் அல்லது AY.4.2 என்றழைக்கப்படும் இந்த திரிபால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒட்டுமொத்த கொரோனா பாதிப்புகளில் ஆறு சதவீதம் பேர் இந்த திரிபால் பாதிக்கப்பட்டிருப்பதாக சமீப கால அதிகாரபூர்வ தரவுகள் கூறுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, கொரோனா வைரஸ் பிரிட்டனின் டெல்டா திரிபை விட, டெல்டா பிளஸ் திரிபின் பரவும் விகிதம் அதிகமாக இருப்பதாக சில ஆரம்பகட்ட ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, டெல்டா திரிபைப் போல, டெல்டா ப்ளஸ் திரிபு கவலைக்குரிய திரிபு வகைகளில் ஒன்றாக கருதப்படவில்லை. இது தான் கொரோனா திரிபுகளின் ஆபத்தை பொறுத்து வழங்கப்படும் படிநிலைகளில் உச்சபட்சமானது என்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் பல கொரோனா திரிபுகள் உள்ளன. வைரஸ் பிறழ்வு எப்போதுமே வழக்கமாக நடக்கும் ஒன்று தான், எனவே புதிய திரிபைக் காண்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. "நடிகர் விவேக்கின் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல" - ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன? 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி என்ற மைல் கல்லை இந்தியா அடைந்தது எப்படி? AY.4.2 திரிபில் உள்ள சில புதிய பிறழ்வுகள் மனித உடலுக்குள் இருக்கும் செல்களை பாதிக்க வைரஸ் பயன்படுத்தப்படும் ஸ்பைக் புரதங்களை பாதிப்பதாக உள்ளன. கொரோனா பெருந்தொற்று தொடங்கியதிலிருந்தே Y145H மற்றும் A222V பிறழ்வுகள் பல்வேறு கொரோனா துணைவரிசைகளில் காணப்பட்டன. தற்போது இருக்கும் கொரோனா வைரசின் பல்வேறு திரிபுகளுக்கு எதிராக, புதிய கொரோனா தடுப்பூசி மேம்பாடு தொடர்பாக எந்த வித பரிந்துரைகளும் இல்லை. "எல்லா கொரோனா திரிபுகளுக்கும் ஒரே மாதிரியான பொது சுகாதார அறிவுரைகள்தான் வழங்கப்படுகின்றன. யார் எல்லாம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்களோ, அவர்கள் எல்லாம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள், உங்களுக்கு எப்போது பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள அழைப்பு விடுக்கப்படுகிறதோ, அப்போது முன்வந்து பூஸ்டர் டோஸை செலுத்திக் கொள்ளுங்கள்" என பிரிட்டனின் சுகாதார பாதுகாப்பு முகமையின் மருத்துவர் ஜென்னி ஹாரிஸ் கூறியுள்ளார். "எப்போதும் எச்சரிக்கையோடு இருங்கள். மக்கள் நெருக்கமாக இருக்கும் இடங்களில் முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள், மற்றவர்களை உள் அரங்குகளில் சந்திக்கும் போது காற்றோட்டத்துக்காக ஜன்னல் கதவுகளை திறந்துவிடுங்கள். கொரோனா அறிகுறிகள் இருந்தால் பிசிஆர் சோதனை செய்து கொள்ளுங்கள், நெகட்டிவ் என சோதனை முடிவு கிடைக்கும் வரை சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்" என்கிறார் ஜென்னி. https://www.bbc.com/tamil/science-59020011
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.