Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ஜெனிவாவை நோக்கி ஒன்றுதிரள முடியாத தமிழர்கள் – நிலாந்தன்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவாவை நோக்கி ஒன்றுதிரள முடியாத தமிழர்கள் – நிலாந்தன்.

September 12, 2021
 

கடந்த 31ஆம் திகதி இலங்கை வெளிவிவகார அமைச்சு கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கும் ஐநாவுக்கும் ஓர் அறிக்கையை அனுப்பியது. ஆங்கிலத்தில் 14 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையின் தலைப்பு “மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைகள்” என்பதாகும். வரும் 14ஆம் தேதி தொடங்கவிருக்கும் ஐநா கூட்டத்தொடரையொட்டித் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையில் அரசாங்கம் பின்வரும் விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கிறது.

முதலாவதாக அனைத்துலக விசாரணை மற்றும் அனைத்துலக தகவல் சேகரிப்பு பொறிமுறைகள் தொடர்பாக பின்வருமாறு கூறப்பட்டுள்ளது..“உள்ளகப் பொறிமுறைகள் சோர்வின்றி முன்னெடுக்கப்பட்டுவரும் ஒரு சூழலுக்குள் நாட்டுக்கு வெளியிலான வெளியக தகவல் சேகரிப்பு பொறிமுறைகளை அரசாங்கம் நிராகரிக்கிறது” பெருந்தொற்றுநோய்க்கு எதிராக அரசாங்கம் போராடிக் கொண்டிருக்கும் ஒரு பின்னணியில் அதற்காக பெருமளவு நிதி தேவைப்படும் ஒரு பின்னணியில் அனைத்துலக பொறிமுறைக்காக பெருமளவிலான ஒரு நிதி ஒதுக்கப்பட்டதை நியாயப்படுத்த முடியாது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக வெளியக தகவல் சேகரிப்பு பொறிமுறை என்பது “அரசியலாக்கப்பட்ட” ஒரு நடவடிக்கை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது சாராம்சத்தில் ஜெனிவாத் தீர்மானம் எனப்படுவது அரசியலாக்கப்பட்ட ஒன்று. அதாவது அரசியல் நோக்கங்களைக் கொண்டது என்றும் அது கூறுகிறது.

பொறுப்புக்கூறல் என்பது சாராம்சத்தில் அரசியல்தான். இலங்கை மீதான அழுத்தம் என்பதும் அரசியல்தான். அது சீனாவுக்கு எதிரான அரசியல் என்பதில் சந்தேகமில்லை. அந்த அரசியலில் இனப்பிரச்சினை ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதும் உண்மைதான். இவ்வாறு வெளியகப் பொறிமுறைகளை அரசியலாக்கப்பட்ட ஒன்று என்று கூறி நிராகரிக்கும் அரசாங்கம் அதேசமயம் உள்ளகப் பொறிமுறைகளில் கடந்த 20மாதங்களில் தான் சாதித்தவைகள் என்றுகூறி மிகநீண்ட பட்டியல் ஒன்றை அங்கே முன்வைத்திருக்கிறது. இந்தப்பட்டியலில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் புள்ளிவிவரங்களை தொகுத்துப்பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. முன்னைய ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின் காலத்தில் நிலைமாறுகால நீதிச் செய்முறைகளுக்காக அதாவது பொறுப்புக்கூறலுக்காக உருவாக்கப்பட்ட கட்டமைப்புக்களின் இதுவரைகாலச் செயற்பாடுகள் என்று கூறப்படும் விடயங்கள் அங்கே தொகுக்கப்பட்டிருக்கின்றன.

இதன்படி ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் உருவாக்கப்பட்ட காணாமல் போனோருக்கான அலுவலகம், இழப்பீட்டு நீதிக்கான அலுவலகம், ஓநூர்(ONUR) என்று அழைக்கப்படும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் போன்றவற்றின் செயல்பாடுகள் குறித்து விரிவான புள்ளிவிவரங்கள் அங்கே தொகுக்கப்பட்டிருக்கின்றன. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபொழுது மேற்படி கட்டமைப்புகளை சினேக பாவத்தோடு அணுகவில்லை. மாறாக அக்கட்டமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட வழங்கள் குறைக்கப்பட்டன. அக்கட்டமைப்புகள் நிதிஅமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டன. மேலும் அக்கட்டமைப்புக்களுக்கு ஐநா வழங்கிவந்த தொழில்சார் உதவிகள் கடந்த டிசம்பர் மாதத்தோடு நிறுத்தப்பட்டன. அதற்குரிய உடன்படிக்கை பின்னர் புதுப்பிக்கப்படவில்லை. இவை தவிர முக்கியமாக கடந்த 20 மாதங்களாக அரசாங்கம் முன்னெடுத்துவரும் ராணுவ மயமாக்கும் நடைமுறையின் கீழ் இந்த அலுவலகங்களுக்குள்ளும் ஓய்வுபெற்ற படைப்பிரதானிகள் நியமிக்கப்பட்டார்கள். அவ்வாறு நியமிக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய முன்னாள் பொலிஸ் மா அதிபர் சில வாரங்களுக்கு முன் சுகவீனம் காரணமாக இறந்து போய்விட்டார் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இவ்வாறு கடந்த 20 மாதங்களாக மேற்படி கட்டமைப்புகளை அரசாங்கம் மிகக்குறைந்த வளங்களோடு மந்தநிலையில் இயங்க அனுமதித்தது. கடந்த மாதம் கிளிநொச்சியில் காணாமல் போனோருக்கான அலுவலகம் ஒன்று ரகசியமாக திறக்கப்பட்டதையும் இங்கு சுட்டிக்காட்டலாம். இப்பொழுது மேற்கண்ட அலுவலகங்களின் செயற்பாடுகள் என்று கூறி அரசாங்கம் ஒரு பெரிய பட்டியலை முன்வைக்கின்றது. அதிலும் குறிப்பாக கடந்த பட்ஜெட்டின்போது இழப்பீட்டு நீதிக்கான அலுவலகத்துக்கு அதிகரித்த தொகை நிதி ஒதுக்கப்பட்டதை மேற்படி அறிக்கை மிகக்குறிப்பாக சுட்டிக்காட்டுகிறது.

எனவே தொகுத்துப் பார்த்தால் ஒன்று தெரிகிறது. ரணில் விக்கிரமசிங்க உருவாக்கிய கட்டமைப்புகளை இந்த அரசாங்கம் உள்நோக்கத்தோடு பேணியிருக்கிறது. அதுமட்டுமல்ல கடந்த பட்ஜெட்டின்போது இழப்பீட்டு நீதிக்கான அலுவலகத்துக்கு அதிகரித்த நிதியை ஒதுக்கியமை என்பது ஜெனிவாவை நோக்கி செய்யப்பட்ட வீட்டுவேலைதான். இதை எனது கட்டுரைகளில் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறேன். எனவே ஐநாவுக்காக கண்துடைப்பாக ஒரு தொகுதி வீட்டு வேலைகளை செய்துவிட்டு அரசாங்கம் அவற்றை எல்லாம் அறிக்கையாகத் தொகுத்திருக்கிறது.

இந்த அறிக்கை தொடர்பில் தமிழ் கட்சிகளும் குடிமக்கள் சமூகங்களும் குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களின் சங்கங்களும் எதிர்வினையாற்ற வேண்டியுள்ளது. இந்த அறிக்கையில் கூறப்படும் புள்ளிவிவரங்கள், தகவல்கள் தொடர்பில் ஐநாவுக்கும் உலகசமூகத்துக்கும் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு தமிழ்த் தரப்புகளுக்கு உண்டு. இதுதொடர்பில் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றில் பொறுப்பான பதவி வகிக்கும் எனது நண்பரொருவர் சுட்டிக்காட்டியது போல மேற்படி அறிக்கையில் உள்ள தகவல்களின் உண்மைத் தன்மை நாட்டிலுள்ள எல்லா தூதரகங்களுக்கும் நன்கு தெரியும். இது ஒரு சம்பிரதாய பூர்வமான அறிக்கைதான். ஆனால் அரசாங்கம் ஜெனிவாவை ஏதோ ஒருவிதத்தில் சுதாகரிக்க முற்படுகிறது என்பதனை அது நமக்கு உணர்த்துகிறது.

மேற்கண்ட சுதாகரிப்புக்களின் மையமாக பசில் ராஜபக்ச காணப்படுகிறார். அவர் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பின் இலங்கைத் தீவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான வெளியுறவுச் சூழல் ஒப்பீட்டளவில் மாற்றம் அடைந்திருக்கிறது. பஸில் நிதியமைச்சராக வந்ததால் நாட்டின் நிதிநிலைமை தேறியதோ இல்லையோ இலங்கைத் தீவுக்கும் மேற்கு நாடுகள் மற்றும் இந்தியாவுக்கும் இடையிலான வெளிவிவகாரச் சூழலை அவர் மாற்றத்தொடங்கியிருக்கிறார். புதிய வெளிவிவகார அமைச்சராக மேற்கிற்கு பிடித்தமான ஜி எல் பீரிஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். மிலிந்த மொரகொட ஒரு மூலோபாய திட்டத்தோடு இந்தியாவுக்கு போகிறார். அயோத்தியில் கட்டப்படும் சர்ச்சைக்குரிய ராமர் கோயிலுக்கு சீதா எலியவில் இருந்து ஒரு கல்லைக் கொண்டு போகிறார். அமெரிக்கா தலைமையிலான குவாட் நாடுகளுக்கு திருகோணமலையில் ஒரு தொகுதி காணி வழங்கப்படும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அரசாங்கம் மேற்கத்திய நிதி முகவர் அமைப்புகளான உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம் போன்றவற்றிடம் கடன்வாங்கத் தொடங்கியிருக்கிறது.

உலக வங்கியும் பன்னாட்டு நாணய நிதியமும் நிபந்தனைகளோடுதான் கடனை வழங்கும். சீனாவை போல நிபந்தனையின்றி கடன் கொடுப்பதில்லை. அந்த நிபந்தனைகளில் மனித உரிமைகள் விவகாரம், இனப்பிரச்சினைக்கான தீர்வு,பொறுப்புக்கூறல் மற்றும் மானியங்களைக் குறைதல், வரிகளை அதிகரித்தல் போன்ற பல விடயங்களும் அடங்கி இருக்கக்கூடும். அதாவது பொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஏதோ ஒரு விதத்தில் மேற்கு நாடுகளுடன் சுதாரிக்க முற்படுவதை இது காட்டுகிறது. கடந்த ஜூலை மாதம் இருபத்தியோராம் திகதி ஜனாதிபதி தனது ட்விட்டர் செய்தியில் என்ன எழுதினார் என்பது பின் வரக்கூடிய நகர்வுகளை ஊகிக்க போதுமாக இருந்தது. அதாவது அரசாங்கம் மேற்கு நோக்கியும் இந்தியாவை நோக்கியும் சுதாகரிக்கத் தொடங்கிவிட்டது. அவ்வாறு சுதாரிக்க வேண்டிய ஒரு நிலைமையை covid-19 ஏற்படுத்தியிருக்கிறது.

இங்கு குறிப்பாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் நிலைமாறுகால நீதிக்குரிய கட்டமைப்புக்களை தொடர்ந்து இயங்க விட்டமையும் கடந்த பட்ஜெட்டில் அந்தக் கட்டமைப்புகளில் ஒன்றுக்கு அதிகரித்த நிதி ஒதுக்கப்பட்டமையும்;ஒருதொகுதி அரசியல் கைதிகளை விடுதலை செய்தமையும்;பயங்கரவாதத் தடைச்சசடடத்தை திருத்தப் போவதாகக் கூறுவதும் ஐநாவில் எடுத்துக்காட்டுவதற்காக செய்யப்பட்ட வீட்டுவேலைகள்தான். அதாவது அரசாங்கம் ஒருபுறம் பொறுப்புக்கூறலுக்கான ஐநா தீர்மானத்துக்கு ரணில் விக்கிரமசிங்க வழங்கிய அனுசரணையில் இருந்து பின்வாங்கிவிட்டது. அதேநேரம் இன்னொருபுறம் ராஜபக்ச பாணியிலான ஒரு பொறுப்புக்கூறலுக்கு தயார் என்ற சமிக்கைகளை காட்டுகிறது. அதற்காக கடந்த 20 மாதங்களாக வீட்டு வேலைகளை செய்து வருகிறது.

அவர்கள் ஓர் அரசுடையதரப்பு. எல்லாவற்றுக்கும் அவர்களிடம் கட்டமைப்புக்கள் உண்டு. வெளியுறவுக் கொள்கையில் சுதாகரிப்புக்களைச் செய்வது என்று முடிவெடுத்தபின் பசிலை கொண்டுவந்து ஒரு முக மாற்றத்தை காட்டிவிட்டு எல்லாவற்றையும் செய்கிறார்கள். அவ்வளவுதான். ஆனால் அரசற்றதரப்பு ஆகிய தமிழ் மக்கள் அதுவும் சிறிய மக்கள் கூட்டமாகிய தமிழ் மக்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? தமிழ்த்தரப்பு ஒருங்கிணைத்து வீட்டுவேலைகள் எதையும் செய்வதாகத் தெரியவில்லை. அதற்கு வேண்டிய கட்டமைப்புகளும் இல்லை. ஜெனிவாவை ஏற்றுக்கொண்ட கட்சிகளிடமும் அதற்குரிய கட்டமைப்புகள் இல்லை. வழிவரைபடங்கள் இல்லை. ஜெனிவாவுக்கு வெளியே போகவேண்டும் அனைத்துலக நீதிமன்றங்களுக்கு போகவேண்டும் என்று கேட்கும் கட்சிகளிடமும் அதற்கு வேண்டிய கட்டமைப்புகள் இல்லை.

அரசாங்கத்திடம் எல்லாவற்றுக்கும் கட்டமைப்புக்கள் உண்டு. ஐநா ஓர் உலகளாவிய கட்டமைப்பு. அனைத்துலக நீதிமன்றங்களும் கட்டமைப்புகள்தாம். கட்டமைப்புக்களை எதிர்கொள்வதற்கு கட்டமைப்பு ரீதியாகத்தான் செய்யப்படலாம். அது அதற்குரிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். எந்தத் தமிழ்க் கட்சியிடம் அப்படிப்பட்ட கட்டமைப்புகள் உண்டு? கடந்த 20 மாதங்களில் அவ்வாறு உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளை கட்சிகள் முன் வைக்கட்டும் பார்க்கலாம்.

இப்படிப்பட்டதொரு பரிதாபகரமான வெற்றிடத்தில்தான் கடந்தகிழமை தமிழ்க்கட்சிகள் ஜெனிவாவுக்கு கடிதங்களை அனுப்பின. வழமைபோல ஒரே கூட்டுக்குள் இருந்து கொண்டு இரு வேறுகடிதங்களை அனுப்பின. மொத்தம் 3 க்கும் குறையாத கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. ஒரு இத்துணூண்டு மக்கள்கூட்டம், ஏற்கனவே இனப்படுகொலையால் சிறுத்துப்போன ஒரு மக்கள் கூட்டம், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி மக்கள் புலம்பெயர்ந்து சென்றதால் நீர்த்துப்போன ஒரு மக்கள்கூட்டம், கட்சிகளாகவும் அமைப்புக்களாகவும் சிதறிக் காணப்படுகிறது. கடந்த 20 மாதங்களாக செய்த வீட்டுவேலைகளும் குறைவு. அதிலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு வீட்டுவேலையைக்கூட ஒற்றுமையாக செய்ய முடியவில்லை.

ஆனால் அரசாங்கம் செய்திருக்கிறது. அது ஒரு சம்பிரதாயபூர்வமான வீட்டு வேலைதான். அந்த வீட்டுவேலை இறுதி விளைவை தீர்மானிக்காது. இறுதி விளைவைத் தீர்மானிக்கப் போவது குவாட் நாடுகளுக்கு திருகோணமலையில் காணிகளை கொடுப்பதா இல்லையா என்ற தீர்மானம்தான். மேற்கத்தைய நிதி முகவரமைப்புக்களின் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்வதா இல்லையா என்று முடிவெடுப்பதுதான். ஏனென்றால் அரசாங்கம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது போல தூய பொறுப்புக்கூறல், தூய நீதி என்று எதுவும் கிடையாது. எல்லாமே அரசியலாக்கப்பட்ட நீதிதான்.

 

https://globaltamilnews.net/2021/165839

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 12/9/2021 at 16:04, கிருபன் said:

தீர்மானிக்கப் போவது குவாட் நாடுகளுக்கு திருகோணமலையில் காணிகளை கொடுப்பதா இல்லையா என்ற தீர்மானம்தான். மேற்கத்தைய நிதி முகவரமைப்புக்களின் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்வதா இல்லையா என்று முடிவெடுப்பதுதான். ஏனென்றால் அரசாங்கம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது போல தூய பொறுப்புக்கூறல், தூய நீதி என்று எதுவும் கிடையாது. எல்லாமே அரசியலாக்கப்பட்ட நீதிதான்.

அரசியலாக்கப்பட்ட நீதி சிறிலங்காவுக்கு கிடைத்து விட்டது...  இனி ஐந்து வருடங்களுக்கு தமிழ் மக்களின் உரிமைக்காக  போராடுவதாக சம்பந்தர் கோஸ்டி நாடகம் ஆடும் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் புலம்பெயர் நாடுகளிலிருந்து எவரும் பெருவாரியாகக் கவனயீர்ப்பில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கமுடியாது. ஏன் ஒரு பத்து இருபதுபேராவது கலந்துகொள்வார்களென்பதே சந்தேகமே.

காரணம் ஒரு சிறிய இனக்குழுமம் தங்களுக்குள் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து ஆழுக்கு ஒரு லெட்டர்பாட் வைத்துக்கொண்டு கடிதமெழுதுவதை சக தமிழனே காமடியாகத்தான் பார்க்கிறான். பல்வேறு சந்தர்ப்பங்களில் அனைவருக்கும் சொல்லியாச்சு. தேர்தல் அரசியலை நீங்கள் எப்படியாவது நடத்திக்கொள்ளுங்கள் ஆனால் ஒரு பொதுவான முக்கிய கொள்கைத்திட்டங்களை முதன்மையாக வைத்து உள்ளூரிலும் சர்வதேசத்திலும் ஒன்றுபட்டுக்குரல் கொடுங்கள் என ஆனால் யாரும் அதைப்பத்திச் சிந்திப்பதே இல்லை.

புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் உறவுகள் அப்படியே போட்டது போட்டபடி எல்லாத்தையும் விட்டெறிஞ்சு தங்கள் வேலையைப் பார்ப்போம் என ஒதுங்கும் மணோநிலைக்கு வந்துவிட்டார்கள்.

அடுத்ததாக மறைந்த போராளிகளது நினைவுநாள் வணக்கநிகழ்வுகளுடன் ஒரு மட்டுப்படுத்தல்களுக்குள் வரவேண்டியதுதான்.

அதைவிட இன்னுமொரு விடையம் உசிதமானது.

புலம்பெயர் தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து சர்வதேசத்திடம்நீங்கள் புடுங்கிய ஆணியெல்லாம் போதும் ஒதுங்குங்கள் நாம் இனிமேல் உங்களிடம் வந்து மன்றாட மாட்டோம் எதிர் காலத்தில் நாம் வாழும் தேசங்கள் எங்கும் எமது தமிழ்ச் சாதியின் கல்வி மற்றும் பொருளாதார மேம்படுகளுக்கான வழிவகைகளை நாம் வாழும் நாடுகளில் ஏற்படுத்தும் நோக்கில் செயற்படப்போகிறோம் உங்கள் உலகமயமாக்கல் அரசியலைச் செய்வதற்கு வேறு யாரையும் தேடவும் எனக்கூறலாம். 

 • Sad 1
Link to comment
Share on other sites

நிதிகளை (கடன்) பெறும் வகையில் இலங்கை அரசு செயற்படும்.
புலம் பெயர் தமிழர்கள் தத்தம் நாடுகளின் அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்து சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம்.
 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, nunavilan said:

நிதிகளை (கடன்) பெறும் வகையில் இலங்கை அரசு செயற்படும்.
புலம் பெயர் தமிழர்கள் தத்தம் நாடுகளின் அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்து சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம்.
 

இன்னுமா நம்புகிறீர்கள் நீங்கள்

Link to comment
Share on other sites

19 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இன்னுமா நம்புகிறீர்கள் நீங்கள்

கொடுக்கலாம் என்று தானே சொல்லி உள்ளேன்.
வங்குரோத்து நிலைமை ஏற்கனவே வந்து விட்டது. இதை எல்லோரும் நம்பித்தான் ஆக வேண்டும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

கொடுக்கலாம் என்று தானே சொல்லி உள்ளேன்.
வங்குரோத்து நிலைமை ஏற்கனவே வந்து விட்டது. இதை எல்லோரும் நம்பித்தான் ஆக வேண்டும்.

நம்பி நம்பியே நகர்கின்றன நாட்களும் வருடங்களாக 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழ் அமைப்புகளது அழுத்தம் எந்தவகையிலும் எடுபடாது காரணம் அவ்வமைப்புகளிடம் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எந்த ஒரு பிரதிநிதியும் இல்லை தாயகத்தில் மக்கள் பிரதிநிதிகள் இரண்டுபட்டல்ல நாலுபட்டு நிற்கையில் எம்மால் எதுவுமே செய்ய முடியாது.

கடந்த காலங்களில் நான் நேரடியாக நான் வாழும் நாடுகளின் வெளிவிவகார அமைச்சின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடும்போது அவர்கள் எம்மிடம் கேட்ட ஒரு கேள்வி "அதுசரி நீங்கள் போர்க்குற்றம் அது சர்வதேச விசாரணை என வேண்டுகோள் விடுக்கிறேர்கள் ஆனால் இலங்கைத்தீவில் தமிழர்களால் தெரிவுசெய்யப்பட்ட அவர்களது பிரதிநிதிகள் அப்படி எந்தவித வேண்டுகோளையும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அதிகாரிகளைச் சந்திக்கும்போது விடுப்பதில்லையே"

ஏன் நீங்கள் அவர்களது எண்ணத்துக்கு முரண்படுகிறேர்கள் " எஙிறார்கள் 

ஏதாவது பதில் எதுவும் எம்மிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

காரணம் அவர்கள் எதிர்பார்ப்பது மக்கள் பிரதிநிதிகளது கருத்துக்களைத்தான்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 15/9/2021 at 09:47, Elugnajiru said:

புலம்பெயர் தமிழ் அமைப்புகளது அழுத்தம் எந்தவகையிலும் எடுபடாது காரணம் அவ்வமைப்புகளிடம் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எந்த ஒரு பிரதிநிதியும் இல்லை

புலம்பெயர்ந்துள்ள நாடுகளின் மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்யும் கணிசமான வாக்குகளை தம்மகத்தே கொண்டுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகளது அழுத்தம் எந்தவகையிலும் எடுபடாதா? கனடாவிலும், நோர்வேயிலும், சுவிற்சலாந்திலும், பிரான்சிலும், இங்கிலாந்திலும் புலம்பெயர்ந்த தமிழர்களையே மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்ய முன்னி்ன்று உழைத்து வெற்றிபெற்ற இந்த அமைப்புகள், தாம் ஆட்சிக்கு கொண்டுவந்த அரசுகளிடம் மிகுந்த செல்வாக்கை கொண்டுள்ளன. இந்த அரசுகளிடம் புலம்பெயர் தமிழ் அமைப்புகளது செல்வாக்கு இலங்கை அரசினதிலும் பார்க்க பலமடங்கு சக்திவாய்ந்தது.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By கிருபன்
   உள்ளாடைக்கும் தட்டுப்பாடா? நிலாந்தன்!
   September 19, 2021

    
   நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்தாகி விட்டதா ? என்று இந்திய ஊடக நண்பர் ஒருவர் கேட்டார். நாட்டின் பொருளாதாரம் சரிந்துவிட்டது என்பது உண்மை. அமெரிக்க டொலரைக் காணமுடியவில்லை. ஆனால் நாங்கள் இன்னமும் பாணைச் சீனியில் தொட்டு சாப்பிடும் ஒரு நிலைக்கு வரவில்லை என்று அவரிடம் சொன்னேன். ஆனால் இன்னும் சில மாதங்களில் நிலைமை மேலும் மோசமடையலாம் என்று பொருளியல் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
   இந்திய யூடியூப்பர்களும் சில இணைய ஊடகங்களும் இலங்கைத் தீவின் பொருளாதார நெருக்கடியை குறித்து அதிகமாக செய்திகளை வெளியிடுகின்றனர். இச்செய்திகள் உள்நோக்கத்தோடு மிகைப்படுத்தப்பட்டவை என்று இலங்கைத்தீவில் ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். ஆனால் கடந்தவாரம் அரசாங்கம் 623 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு சில நிபந்தனைகள் விதித்திருக்கிறது. அப்பொருட்ட்களுக்குள் உள்ளாடைகளும் அடங்கும். அதன்படி பொருட்களை இறக்குமதி செய்ய விரும்பும் வணிகர்கள் கொள்வனவு விலைக்கு நிகரான தொகையை வங்கியில் வைப்பிலிட வேண்டும் என்று அரசாங்கம் கூறுகிறது. ஏனெனில் அரசாங்கத்தின் இறக்குமதி சக்தி குறைந்து விட்டது என்றும், அதற்கு காரணம் வெளிநாட்டு செலவாணி ஒதுக்கீடு குறைந்தமைதான் என்றும் பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
   நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கியது இப்பொழுதுதான் என்பதல்ல. வைரஸ் தொற்றுக்கு முன்னரே நாட்டின் சுற்றுலாத்துறை மோசமாகமாக பாதிக்கப்பட்டிருந்தது. ஈஸ்டர் குண்டு வெடிப்பையடுத்து நாடு உல்லாசப் பயணிகளை கவரும் தன்மையை பெருமளவுக்கு இழந்துவிட்டது. வைரஸ் வந்து நிலைமையை மேலும் மோசமாக்கியிருக்கிறது. நாட்டுக்கு வெளிநாட்டு செலாவணியை ஈட்டித்தரும் துறைகளான ஆடை உற்பத்தித்துறை, சுற்றுலாத்துறை, புலம் பெயர்ந்து உழைக்கும் இலங்கையர்களின் உழைப்பு மற்றும் ஏனைய ஏற்றுமதித்துறைகள் போன்றவற்றில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் வெளிநாட்டு செலவாணி ஒதுக்கீடு குறைந்துவிட்டது. அதனால் அரசாங்கம் பல பொருட்களில் இறக்குமதியை நிறுத்தியது என்று பொருளியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
   வசதி படைத்தவர்கள் ஓடும் வாகனங்கள் முதற்கொண்டு கீழ் மத்தியதர வர்க்கத்தினரின் மோட்டார்சைக்கிள்கள் உள்ளடங்கலாக வாகனத் இறக்குமதி நிறுத்தப்பட்டுவிட்டது. அதைப்போலவே மஞ்சள்,உரம் உட்பட பல்வேறு பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் 623 பொருட்களில் இறக்குமதிக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நிபந்தனைகள் மறைமுகமாக இறக்குமதியை கட்டுப்படுத்துகின்றன. குறிப்பாக அது சிறிய நடுத்தர ஏற்றுமதியாளர்களை அதிகம் பாதிக்கக்கூடியது. அதற்கு கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு முன்பு அரசாங்கம் அவசரகால சட்ட விதிகளின்படி அத்தியாவசிய உணவுப் பொருட்களை நிர்வகிப்பதற்கு ஒரு மேஜர் ஜெனரலை பொறுப்பாக நியமித்தது. அத்தியாவசியப் பொருட்களை அவசரகாலச் சட்டத்தின் கீழ் நிர்வகிக்க வேண்டிய ஒரு நிலைமை தோன்றியபோதே இலங்கை தீவு பொருளாதார ரீதியாக வங்குரோத்து நிலையை அடைந்து விட்டது என்று வெளிநாட்டு ஊடகங்கள் கருதும் ஒரு நிலைமை தோன்றியது.
   இவ்வாறு அத்தியாவசிய உணவுப் பொருட்களை அவசரகால சட்ட விதிகளின்கீழ் கொண்டுவந்த பின்னர் போலீசார் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் உள்ள பெரிய மற்றும் சிறிய பண்டகசாலைகளின் மீது திடீரென்று பாய்ந்தனர் .இதன்போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி,மா,சீனி போன்ற பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. மேற்கண்ட நடவடிக்கைகளின்மூலம் அத்தியாவசிய பொருட்களை பதுக்குவோர் மீது அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று ஒரு உணர்வு நாடு முழுதும் உருவாக்கப்பட்டது.
   எனினும் உள்ளூர் கடைகளிலும் பல்பொருள் அங்காடிகளிலும் சீனிக்கும் மாமாவுக்கும் பால்மாவுக்கும் இப்போதும் தட்டுப்பாடு உண்டு. பெரும்பாலான பல்பொருள் அங்காடிகளில் சீனி,பால்மா இருக்கும் இடங்கள் காலியாக இருக்கின்றன. பெரும்பாலான பல்பொருள் அங்காடிகளில் விலை பொறிக்கப்பட்ட சீனிப் பொதிகளை காண முடியவில்லை. மிகச்சில பல்பொருள் அங்காடிகளில் சீனி சொரியலாக விற்கப்படுகிறது. பால்மா பக்கட்டுக்ககளை குறிப்பிட்ட தொகைக்கு மேல் பொருட்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சில பல்பொருள் அங்காடிகள் ரகசியமாக கொடுக்கின்றன. அந்தப் பெட்டிகளை ஒரு பேப்பர் பைக்குள் வைத்து ரகசியமாக கொடுக்கும் அளவுக்குத்தான் நாட்டில் பால்மா கிடைக்கிறது. அதாவது அத்தியாவசிய பொருட்களுக்கு ஆணையாளராக ஒரு மேஜர் ஜெனரலை நியமித்த பின்னரும் பொருட்களின் விலை இறங்கவில்லை என்று பொருள்.
   அண்மையில் இது தொடர்பில் ஊடகங்களுக்கு பதில் கூறிய அஜித் கப்ரால் வணிகர்கள் பொருட்களை பதுக்கிய படியால்தான் செயற்கையாக தட்டுப்பாடு ஏற்பட்டது என்றும் பொருட்களின் விலை அதிகரித்தது என்றும் விளக்கம் கூறுகிறார். இவர் ராஜாங்க அமைச்சராக இருந்து இப்பொழுது மதியவங்கியின் ஆளுநராக பதவியேற்றுள்ளார். ஆனால் வணிகர்கள் ஏன் பொருட்களை பதுக்குகிறார்கள்? ஏனென்றால் பொருட்களின் இறக்குமதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் எதிர்காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் என்ற ஊகத்தின் அடிப்படையில் அதிக லாபத்தை பெறும் நோக்கத்தோடுதான். இவ்வாறு பதுக்கப்பட்ட பொருட்களை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகளும் காவல்துறையும் திடீர் பாய்ச்சல்களின் மூலம் கைப்பற்றுகின்றனர். கைப்பற்றப்பட்ட பொருட்கள் அரசாங்கத்தால் சதோச மூலம் வினியோகிக்கப்படுதாக செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் கைப்பற்றப்பட்ட பொருட்களை அரசாங்கம் அதைப் பதுக்கிய வர்தகர்களிடமே சந்தை விலைப்படி கொள்வனவு செய்வதாகவும் அதை பதுக்கிய முதலாளிகள் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவதில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.
   எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் அத்தியாவசிய பொருட்களும் உட்பட பல பொருட்களுக்கு நாட்டில் நெருக்கடி உண்டு. அரசாங்கம் அந்த நெருக்கடிகளை கட்டுப்படுத்துவதற்காக ராணுவத்தனமாக சில நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. ஆனால் அவை எதிர்பார்த்த விளைவுகளை இக்கட்டுரை எழுதப்படும் இந்நாள் வரையிலும் தரவில்லை. அதுமட்டுமல்ல அரசாங்கம் வேறு ஒரு உத்தியையும் கையாள்கின்றது. சில பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டதால் வரக்கூடிய விளைவுகளை எதிர்கொள்வதற்காக அல்லது பொதுசனங்களின் கோபத்தை திசைதிருப்புவதற்காக அரசாங்கம் உள்ளூர் உற்பத்தி,சுற்றுச்சூழலை பாதுகாப்பது,மண்வளத்தை பாதுகாப்பது போன்ற கவர்ச்சியான பசுமை கோஷங்களை முன்வைக்கின்றது. இப்பசுமைக் கோஷங்கள் உன்னதமான அரசியல் பொருளாதார இலட்சியங்கள்தான். ஆனால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபின் அதிலும் குறிப்பாக ஒரு பெருந்தொற்றுச்சூழலில் அவற்றை திடீரென்று அமல்படுத்த முடியாது. அவை போன்ற உன்னதமான இலட்சியங்களை அடைவதற்கு நீண்டகால திட்டங்கள் வேண்டும். நீண்டகால அணுகுமுறைகள் வேண்டும்.
   மாறாக இறக்குமதியை திடீரென்று நிறுத்திவிட்டு, இடைக்கிடை சமூக முடக்கங்களை அறிவித்துக் கொண்டு,மக்களை உள்ளூர் உற்பத்திக்கு திரும்புமாறு கேட்பது பொருத்தமானதா? இது ஒரு பெரும்தொற்றுக் காலம். உலகம் முழுவதும் ஒரு அசாதாரணச் சூழல் நிலவுகிறது. இப்படிப்பட்ட ஓர் அசாதாரணச்சூழலில் இதுபோன்ற பரிசோதனைகளையும் நீண்டகால நோக்கிலான திட்டங்களையும் எப்படி முன்னெடுப்பது? உதாரணமாக மஞ்சளின் இறக்குமதியை அரசாங்கம் நிறுத்தியது. அதனால் பெருந்தொகை பணத்தை அரசாங்கம் சேமித்தது. உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பதாக கூறிக்கொண்டு மஞ்சளை உள்ளூரில் உற்பத்தி செய்யுமாறு விவசாயிகளை ஊக்குவித்தது. ஆனால் அதன்மூலம் நாட்டின் மஞ்சள் தேவையில் அரை வாசியைத்தான் ஈடுசெய்ய முடிந்தது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மஞ்சள் கஞ்சாவை போல மாறிவிட்டது. அது இந்தியாவில் இருந்து கடத்தி வரப்படுகிறது. கடத்திவரப்படும் கஞ்சாவைக் கைப்பற்றும் அரசாங்கம் அதை முன்பு எரித்தது. ஆனால் இப்பொழுது சதொசவில் சந்தை விலைக்கு விற்கிறது.
   இப்போது அரசாங்கம் 623பொருட்களுக்கு இறக்குமதிக்கான நிபந்தனைகளை விதித்திருக்கிறது. இதனால் மேற்படி பொருட்களும் இனிமேல் கஞ்சாபோல கடத்தப்படலாம் என்று தெரிகிறது. சில நாட்களுக்கு முன் கிடைத்த ஒரு தகவலின்படி இந்தியாவில் இருந்து மஞ்சளுடன் சேர்த்து வீட்டுத் தேவைக்கான மின்னியல் சாதனங்களும் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. அதாவது அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள் நிதி முகாமைத்துவம் போன்றவை கள்ளச்சந்தையைத்தான் ஊக்குவிக்கின்றனவா? அதேபோல அரைச்சமூக முடக்கமும் நாட்டில் பதுக்கலையும் கொரோனா சந்தைகளையும்தான் உற்பத்தி செய்திருக்கிறது.
   அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள் மற்றும் நிதி முகாமைத்துவம் மட்டும் அல்ல ராணுவ மயமாக்கல் கொள்கையும் பொருளாதாரத்தைப் பாதிக்கின்றது என்று சில பெரிய வணிகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். உதாரணமாக சுங்கப் பகுதிக்கும் துறைமுக அதிகார சபைக்கும் ஓய்வுபெற்ற படை அதிகாரிகளே பொறுப்பாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மிகக்குறிப்பாக துறைமுக அதிகாரசபைக்கு அவ்வாறு நியமிக்கப்பட்ட படைஅதிகாரி விவகாரங்களை முறையாக நிர்வகிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. உதாரணமாக இலங்கையின் கொழும்பு துறைமுகம் இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத்தை விடவும் பெரியது. எனவே தூத்துக்குடிக்கு வரும் பெரிய கப்பல்கள் இடைத்தங்கல் நிலையமாக கொழும்பைப் பயன்படுத்துகின்றன. ஆனால் புதிய நிர்வாகத்தின்கீழ் இவ்வாறு வரும் கப்பல்களின் தொகை வீழ்ச்சியடைந்து விட்டதாகவும் நிர்வாகத் தாமதங்கள் காரணமாக கப்பல் கொம்பனிகள் துபாய் நோக்கி செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. துறைமுகத்தில் கொள்கலன்கள் தேங்கிக் கிடக்கின்றன என்றும் அவற்றை காலிசெய்து புதிய ஏற்றுமதி பொருட்களை அவற்றின் நிரப்புவது தாமதமாகிறது என்றும் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகர்கள் தெரிவிக்கிறார்கள்.
   இவ்வாறாக அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள்,நிதி முகாமைத்துவம்,ராணுவ மயமாக்கல் போன்றவற்றால் மொத்த பொருளாதாரமும் நெருக்கடிக்குள் சிக்கிவிட்டது என்று பொருளியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். நெருக்கடியை சமாளிப்பதற்கு அரசாங்கம் பசில் ராஜபக்சவை நிதி அமைச்சராக நியமித்தது. அவர் நிதியமைச்சராக வந்ததிலிருந்து கிழமைக்கு ஒரு புதிய முடிவு எடுக்கப்படுகிறது. ஆனால் இவை எவற்றாலும் சரிந்துவிழும் பொருளாதாரத்தை இன்றுவரையிலும் நிமிர்த்த முடியவில்லை. ஏன் ?
   நாட்டின் பொருளாதாரம் சரிந்து விழுந்தமைக்கு தனிய பெருந் தொற்றுநோய் மட்டும் காரணமல்ல. அல்லது அதற்கு முன் நிகழ்ந்த ஈஸ்டர் குண்டு வெடிப்பு மட்டும் காரணமல்ல.காரணம் அதைவிட ஆழமானது. தென்னாசியாவின் திறந்த சந்தைப் பொருளாதாரத்துக்கு முதலில் திறக்கப்பட்ட நாடு இலங்கைத்தீவுதான். ஆனால் இலங்கைத் தீவுக்கு பின் அவ்வாறு திறக்கப்பட்ட பல நாடுகள் எங்கேயோ போய்விட்டன. இந்தோனேஷியா வியட்நாம் பங்களாதேஷ் போன்றவை இலங்கையை விடவும் முன்னேறிவிடடன. ஆனால் சிறிய இலங்கைத்தீவு எல்லாவிதமான வளங்களையும் கொண்டிருந்த போதிலும் முன்னேற முடியவில்லை. காரணம் மிகவும் எளிமையானது. பல்லினத்தன்மை மிக்க ஒரு தீவை கட்டியெழுப்ப இலங்கைத்தீவில் தொடர்ச்சியாக வந்த ஆட்சியாளர்கள் தவறி விட்டார்கள். அதாவது இனப்பிரச்சினைதான் இலங்கைத்தீவின் பொருளாதாரம் சரிந்துவிழக் காரணம்.
   எல்லாவிதமான வளங்களையும் கொண்டிருந்த அழகிய சிறியதீவை பல்லினத்தன்மை மிக்க ஒரு நாடாகக் கட்டியெழுப்ப சிங்களத் தலைவர்களால் முடியவில்லை.அதன் விளைவாக பொருளாதாரம் சீரழியத் தொடங்கியது. யுத்தம் இலங்கைத்தீவின் முதலீட்டு கவர்ச்சியை இல்லாமல் செய்துவிட்டது. அப்படிப்பார்த்தால் 2009ஆம் ஆண்டுக்குப்பின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தியிருக்க வேண்டும். ஆனாலும் முடியவில்லை.ஏன்?
   ஏனென்றால் யுத்த வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்ற அரசாங்கத்தால் முடியவில்லை.அது மட்டுமல்ல ராஜபக்சக்கள் யுத்த வெற்றியை குடும்ப வெற்றியாக மாற்றி அந்த அடித்தளத்தின் மீது ஒரு கட்சியையும் கட்டி எழுப்பி விட்டார்கள். இப்பொழுது அவர்கள் யுத்த வெற்றிக்கு தலைமை தாங்குகிறார்கள். யுத்த வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்றத் தவறியதால்தான் அதாவது இனப்பிரச்சினைக்கு தீர்வை கண்டுபிடிக்க தவறியதால்தான் கடந்த12 ஆண்டுகளாக அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியவில்லை. அரசியல் ஸ்திரத்தன்மை இல்லை என்றால் நாட்டின் முதலீட்டு கவர்ச்சி அதிகரிக்காது. இதுதான் அடிப்படைப் பிரச்சினை.
   பசிலை மட்டுமல்ல வேறு யாரைக் கொண்டு வந்தாலும் பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கு ஒரே ஒரு முன்நிபந்தனைதான் உண்டு. யுத்த வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்றுவது. பல்லினத் தன்மை மிக்க ஓரழகிய சிறிய தீவை கட்டியெழுப்புவது. ஆனால் யுத்த வெற்றிவாதத்திற்கு தலைமை தாங்கிக் கொண்டு அந்த வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்ற முடியுமா?
    
   https://globaltamilnews.net/2021/166212
  • By கிருபன்
   ஜெனிவாவை நோக்கி மூன்று கடிதங்கள் ? நிலாந்தன்!
   தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட ஐந்து கட்சிகளின் தலைவர்களும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து கைச்சாத்திட்ட ஒரு பொதுக் கடிதம் நேற்று ஐநாவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. ஐநா கூட்டத் தொடரையொட்டி இப்படி ஒரு கடிதத்தை அனுப்ப வேண்டும் என்று டெலோ இயக்கம் முன்னெடுத்த முயற்சிகளின் விளைவாக இப்படி ஓர் ஆவணம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
   தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் கடந்த பல மாதங்களாக டெலோ இயக்கம் ஈடுபட்டு வந்தது. அம் முயற்சிகளை முதலில் தொடங்கியது மாவை சேனாதிராசாதான். அம்முயற்சிகளில் அவர் ஒரு கட்டத்தில் மதத்தலைவர்களையும் ஒருங்கிணைத்தார்கள் . Covid-19 சூழலுக்குள் மாவை சேனாதிராசாவின் மேற்படி முயற்சிகள் அடுத்தடுத்த கட்டங்களுக்கு போகவில்லை. இடையில் டெலோ இயக்கம் ஒரு புதிய ஒருங்கிணைப்பு முயற்சியை முன்னெடுத்தது. இது தொடர்பில் மாவை சேனாதிராஜா அணிக்கு மனஸ்தாபங்கள் உண்டு என்று தெரிகிறது.
   டெலோ முன்னெடுத்த இந்த முயற்சிகளின் ஒரு கட்டத்தில் கடந்த 21ஆம் திகதி ஒரு மெய்நிகர் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. இச்சந்திப்பின்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்துகொள்ளவில்லை. புளொட் இயக்கமும் கலந்து கொள்ளவில்லை. இச்சந்திப்பில் சுமந்திரன் அழைக்கப்படவில்லை. கட்சித் தலைவர்களுக்கான சந்திப்பு அது என்றபடியால் சுமந்திரன் அழைக்கவில்லை. உரையாடலின் போக்கில் ஒரு கட்டத்தில் ஸ்ரீகாந்தா ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியிருக்கிறார். தமிழரசுக் கட்சியின் தலைவராக மாவை இதில் பங்கு பற்றினாலும் இங்கு எடுக்கப்படும் முடிவுகளை சுமந்திரன் ஏற்றுக் கொள்வாரா? என்று. அதையடுத்து சந்திப்பை ஒழுங்குபடுத்திய டெலோ இயக்கம் சுமந்திரனை சந்திப்புக்குள் கொண்டுவந்தது. கிட்டத்தட்ட சந்திப்பின் இறுதி கட்டத்தில் நுழைந்த சுமந்திரன் தன்னுடைய நிலைப்பாட்டை வழமைபோல தெரிவித்தார். ஜெனிவா கூட்டத் தொடரையொட்டி கட்சிகள் ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வந்து ஒரு பொது ஆவணத்தை அனுப்புவது என்று அச்சந்திப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அப்பொது ஆவணத்தில் இணைக்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டது.
   இச்சந்திப்பின்போது சுமந்திரன் தானும் சில தரப்புக்களும் இணைந்து ஐநாவுக்கு அனுப்புவதற்காக ஓர் ஆவணத்தை தயாரித்திருப்பதாக கூறியிருக்கிறார். அந்த ஆவணத்தை ஏனைய கட்சிகளுக்கு அனுப்புவதற்கும் அவர் உடன்பட்டிருக்கிறார். ஆனால் அந்த ஆவணத்தை அவர் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் வரையிலும் அனுப்பியிருக்கவில்லை. இக்காலப்பகுதிக்குள் டெலோ இயக்கம் ஏற்கனவே தயாரித்த ஆவணத்தை சந்திப்பில் கலந்து கொண்ட கட்சிகளுக்கு அனுப்பி அவற்றின் பரிந்துரைகளையும் திருத்தங்களையும் இணைத்து இறுதிவரைபை கடந்த புதன்கிழமைளவில் தயாரித்திருந்தது. அந்த ஆவணத்தை அவர்கள் எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பியிருக்கிறார்கள்.
   தமிழ் தேசிய மக்கள் முன்னணி,தமிழ் அரசுக் கட்சி, அனந்தி சசிதரனின் கட்சி ஆகிய மூன்று தரப்புக்களும் அதில் கையெழுத்திடவில்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னணி தொடக்கத்திலிருந்தே ரெலோவின் முயற்சிகளுக்கு சாதகமாக பதில்வினை காட்டவில்லை. அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களுக்கு பதில் கூறவில்லை என்றும் தெரிகிறது. கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் நோய்த் தொற்றுக்கு உள்ளானதும் அவருடைய குடும்ப அங்கத்தவர்கள் நோய்த் தொற்றுக்கு உள்ளானதும் சிலவேளை ஒரு காரணமாக இருக்கலாம்.
   அனந்தி சசிதரன் தனது கட்சியின் மத்திய குழுவைக் கூட்டி அது தொடர்பில் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆனால் இறுதிவரை அவர் முடிவை கூறவில்லை.
   மாவை சேனாதிராஜா ஏனைய கட்சிகளுடன் இணைந்து கடந்த 26ஆம் திகதி நடந்த மெய்நிகர் சந்திப்பில் பங்குபற்றியிருக்கிறார். பொது கடிதத்தில் கையெழுத்திட மாட்டேன் என்று தெளிவாக கூறவில்லை. சுமந்திரன் அனுப்புவதாக கூறிய கடிதம் கிடைத்தபின் இரண்டு கடிதங்களையும் ஒப்புநோக்கி ஒரு பொது ஆவணத்தைத் தயாரிக்கலாம் என்ற தொனிப்பட மாவை பதில் கூறியிருக்கிறார். எனினும் சுமந்திரன் தான் அனுப்புவதாக கூறிய கடிதத்தை கடந்த வெள்ளி இரவே அனுப்பியதாக தெரிகிறது. அக்கடிதத்தை மேற்சொன்ன ஐந்து கட்சிகளும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிகிறது.
   இதனிடையே மாவை சேனாதிராஜா நேற்று முன்தினம் அதாவது வெள்ளிக்கிழமை ஊடகங்களை அழைத்து அதில் தன் நிலைப்பாட்டை தெரிவித்திருக்கிறார். அதிலவர் “நாங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்தில் நாங்கள் தனித்தனியாக பிளவுபட்டு தனித்தனி கட்சிகளாக செயல்படுவது எங்களை பலவீனப்படுத்திவிடும். எங்களுடைய இலக்கை அடைய முடியாது கொரோனா நேரத்தில் இவ்வாறான கருத்துக்களுக்கு இடமளிக்கக்கூடாது” என்று கூறியுள்ளார்.
   எனினும் மாவை சேனாதிராஜா ஐந்து கட்சிகளின் கடிதத்தில் கையெழுத்திட மாட்டார் என்பதனை உணர்ந்த ஏனைய ஐந்து கட்சிகளும் இணைந்து நேற்று அதாவது சனிக்கிழமை காலை அந்தகடிதத்தை ஐநாவுக்கு அனுப்பியுள்ளன.
   தமிழ் கட்சிகள் இவ்வாறு இணைந்து ஐநாவுக்கு கடிதம் அனுப்புவது என்பது இதுதான் முதற்தடவை அல்ல. ஏற்கனவே இந்த ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதி அப்படி ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. நடந்துமுடிந்த ஜெனிவாகூட்டத்தொடரை முன்னிட்டு அந்த ஆவணம் தயாரிக்கப்பட்டது. மன்னாரைச் சேர்ந்த தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சிவில் சமூக பிரதிநிதிகள் இணைந்து மேற்படி ஒருங்கிணைப்பை முன்னெடுத்தார்கள். அது ஒரு வெற்றிகரமான ஆவணம்.கடந்த 12 ஆண்டு காலப் பகுதிக்குள் தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் யாவும் இணைந்து அப்படி ஒரு கடிதம் அனுப்பியது என்பது அபூர்வமான ஒரு அரசியல் நகர்வு.
   ஆனால் கடந்த சனிக்கிழமை அதாவது நேற்று அனுப்பப்பட்ட கடிதத்தில் தமிழரசுக் கட்சியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணையவில்லை. குறிப்பாக தமிழரசுக் கட்சி இதுவிடயத்தில் கடைசிவரை முடிவெடுக்காமல் முடிவு கூறுவதைக் ஒத்திப்போட்டுக்கொண்டு வந்ததாக ஒருங்கிணைப்பு முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் கூறுகிறார்கள்.மாவை சேனாதிராஜா தொடக்கத்திலிருந்தே ரெலோவின் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் தொடர்பில் சாதகமான மனநிலையோடு இருக்கவில்லை. ஒரே கூட்டமைப்புக்குள் இருந்தபடி தான் ஏற்கனவே தொடங்கிய ஒருங்கிணைப்பு முயற்சிகளை இடை முறித்து டெலோ ஒரு புதிய ஒருங்கிணைப்பு முயற்சியில் ஈடுபட்டமை தொடர்பில் அவர் சந்தோஷமாக இல்லை என்று தெரிகிறது. இதுதவிர தமிழரசுக் கட்சியின் உயர்மட்டம் டெலோவின் முன்னெடுப்புக்களை பரிசீலிக்க தயார் இல்லை என்றும் தெரிகிறது. சுமந்திரன் தயாரித்த கடிதத்தை தமிழரசுக் கட்சி தனியாக அனுப்பும் என்று தெரிகிறது. ஆனால் அக்கடிதம் கூட்டமைப்பு என்ற பெயரிலா அனுப்பப்படும்?
   தன்னை ஒரு தூய மிதவாத கட்சியாக கருதும் தமிழரசுக் கட்சி ஆயுதப்போராட்ட பாரம்பரியத்தில் வந்த கட்சிகளின் பின்னே செல்ல தயார் இல்லையா ? அல்லது கூட்டமைப்புக்குள் உள்ள மிகப் பெரிய கட்சியாகவும் நாடாளுமன்றத்தில் தமிழ் கட்சிகளில் அதிக எண்ணிக்கையான உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாகவும் காணப்படுவதால் ஏனைய கட்சிகள் தன்னை பின்பற்ற வேண்டுமே தவிர தான் ஏனைய கட்சிகளின் முன்னெடுப்பின் கீழ் இணைந்து போக முடியாது என்று தமிழரசுக் கட்சி கருதுகின்றதா?
   எனவே தொகுத்துப் பார்த்தால் ஒரு பெருந்தொற்று நோய் சூழலுக்குள்ளும் தமிழ் கட்சிகள் தங்களுக்கிடையே ஒரு பொதுக் கருத்துக்கு வர முடியவில்லை என்று தெரிகிறது. ஒரே கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டு கட்சிகள் இருவேறு கடிதங்களை அனுப்பும் ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன்,கலையரசன் ஆகியோர் இணைந்து தனியாக ஒரு கடிதத்தை ஐனாவுக்கு ஏற்கனவே அனுப்பியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஒப்பீட்டளவில் ஐந்து கட்சிகள் ஒரு பொதுக் கருத்துக்கு வந்திருக்கின்றன. ஆனால் இரண்டு கட்சிகள் குறிப்பாக நாடாளுமன்றத்தில் ஏழு ஆசனங்களைக் கொண்டிருக்கும் இரண்டு கட்சிகள் வெளியே நிற்கின்றன. ஐநாவை நோக்கி தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கு எடுக்கப்பட்ட இரண்டாவது முயற்சியும் முழு வெற்றி பெறவில்லை என்பதை மேற்கண்ட மூன்று கடிதங்களும் நிரூபிக்கின்றன.
   இந்த ஆண்டு மேற்கண்ட கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கு இருவேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. இவ்விரண்டு முயற்சிகளின் அடிப்படையிலும் சிந்தித்தால் பின்வரும் கேள்விகள் எழுகின்றன. கட்சிகளாக முயன்று ஓர் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாதா? அப்படி ஏற்படுத்தினாலும் அதில் எல்லாக் கட்சிகளையும் ஒருங்கிணைக்க முடியாதா?. ஏனென்றால் ஒரு கட்சியை ஏனைய கட்சிகள் அங்கீகரிக்காத அல்லது ஒரு கட்சியின் தலைமைத்துவத்தை ஏனைய கட்சிகள் ஏற்றுக்கொள்ளாத நிலைமைகளே அதிகம் உண்டு. மாறாக தேர்தல் நோக்கு நிலையிலிருந்து சிந்திக்காத ; தேர்தல் அபிலாசைகள் இல்லாத; அரசியல் சந்நியாசிகளாக காணப்படும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து முன்னெடுக்கும் ஒருங்கிணைப்பு முயற்சிகள்தான் ஒப்பீடடளவில் வெற்றி பெறுமா?
   கடந்த ஜனவரி மாதம் முன்னெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பு முயற்சியின் போதும்கூட பொதுக் கடிதம் அனுப்பப்பட்டபின் சம்பந்தப்பட்ட கட்சிகள் தங்களுக்கிடையே பகிரங்கமாக மோதிக் கொண்டன. அது ஒரு அசிங்கமான மோதல்.தமிழ் மக்கள் ஒரு திரளாக இல்லை என்பதனை அல்லது தமிழ் மக்களை ஒரு திரளாக கூட்டிக்கட்ட இந்த கட்சிகளால் முடியாது என்பதை நிரூபித்த அருவருப்பான ஒரு மோதல்.அதோடு சிவில் சமூகங்களுக்கு இருக்கக்கூடிய வரையறைகளை உணர்த்திய ஒரு மோதல் அது. அதில் ஏற்பட்ட சலிப்பு காரணமாக சிவில் சமூகங்கள் இதுபோன்ற முயற்சிகளில் எதிர்காலத்தில் ஈடுபடுவதற்கு முன் கடுமையாக யோசிக்க வேண்டியிருக்கிறது என்று தெரிகிறது.
   இப்படிப்பட்ட பாரதூரமான தோல்விகரமான ஒரு வெற்றிடத்தில் நேற்று ஜனாவுக்கு அனுப்பப்பட்ட கடிதமானது ஒப்பீட்டளவில் அதிக எண்ணிக்கையிலான கட்சிகள் இணைந்து அனுப்பிய ஒரு பொதுக் கோரிக்கை என்ற முக்கியத்துவத்தை கொண்டிருக்கிறது. எனினும் தமிழரசுக் கட்சி தனியாக ஒரு கடிதத்தை அனுப்ப இருப்பது எதைக் காட்டுகிறது? தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இணையவில்லை என்பது எதைக் காட்டுகிறது? கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு கடிதத்தை அனுப்பி இருப்பது எதைக் காட்டுகிறது ? தமிழ் மக்கள் இப்பொழுதும் ஒரு பெருந்திரளாக ஒரு தேசமாக இல்லை என்பதையா?
    
   https://athavannews.com/2021/1237685
    
    
  • By கிருபன்
   வக்சினே சரணம் ? நிலாந்தன்!
   September 5, 2021

   “அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மையே கொரோனா வைரஸ் நிலைமை மோசமடைவதற்கு காரணம்.கொரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்கு மருத்துவ நிபுணர்கள் தலைமை தாங்கவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான எரான் விக்கிரமரட்ண. எனது கடந்த வாரக்கட்டுரையில் நான் குவிமையப்படுத்திய விடயமும் இதுதான்.“இலங்கை ஒரு சிறியதீவு எங்களால் பாதிப்பை கட்டுப்படுத்தியிருக்க முடியும்.அரசாங்கம் உணர்வுபூர்வமாக இருக்காததால் மருத்துவநிபுணர்கள் தலைமை வகிக்க முடியாமல்போய்விட்டது” எனவும் எரான் தெரிவித்துள்ளார்.
   ஆனால் அரசாங்கம் வைரசுக்கு எதிரான போராட்டமும் உட்பட நாட்டின் எல்லாத் துறைகளையும் ராணுவமயப்படுத்தி வருகிறது. பைசர் வக்சினை கையாளும் பொறுப்பு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. பைசர் தடுப்பூசியை கையாள்வதில் சிவில் தரப்புக்கள் போதிய அளவிற்கு வினைத்திறனுடன் நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.கொழும்பு லேடி ரிச்வே மருத்துவமனையில் மிக முக்கியமான பிரமுகர்களுக்கு பைஸர் தடுப்பூசிகள் ரகசியமாக விநியோகிக்கப்பட்டன என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தமிழ்ப்பகுதிகளில் மன்னாரில் பைசர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. தடுப்பூசிகளை பெறுவதற்காக யாழ்ப்பாணம் புத்தளம்,சிலாபம் போன்ற இடங்களிலிருந்து பலர் மன்னாருக்கு சென்றதாக தெரியவருகிறது. குறிப்பாக மேற்கத்திய நாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்வோரும் சீன இந்தியத் தடுப்பூசிகளை நம்பாதவர்களும் பைசர் தடுப்பூசிகளை பெறுவதற்காக மன்னாருக்கு சென்று அங்கே பொய்யான ஆவணங்களை கையளித்து தடுப்பூசிகளை பெற்றிருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.
   இவ்வாறான விமர்சனங்களின் விளைவாக அரசாங்கம் பைசர் தடுப்பூசியை இராணுவத்திடம் கொடுத்துவிட்டது. அதாவது ஒரு குறிப்பிட்டவகை தடுப்பூசியை இனி படைத்தரப்பிடம் மட்டும்தான் பெற்றுக்கொள்ளலாம். மேற்கத்திய நாடுகள் சீனத் தயாரிப்பு தடுப்பூசிகளை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே மேற்கத்திய தயாரிப்பான பைசர் மோடோர்னா போன்ற தடுப்பூசிகளை பெற்றால்தான் மேற்கத்திய நாடுகளுக்கு பயணம் செய்யலாம். இதனால் அடிக்கடி மேற்கு நாடுகளுக்கு பயணம் செய்பவர்கள் பைசர் தடுப்பூசியை விரும்புகிறார்கள். இவ்வாறானவர்கள் இனிமேல் இராணுவத்திடம் போய்த்தான் அதைப் பெற்றுக் கொள்ளலாம்.
   “பைசர் தடுப்பூசியை இராணுவத்திற்கு மாத்திரம் கொடுக்கும் தீர்மானத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இராணுவத்திற்குத் தடுப்பூசியை வழங்குவதானால், போரின் போது சுகாதாரத் துறைக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்” என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்திய நிபுணர் நவீன் டி சொய்சா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
   தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை பொதுச் சுகாதார துறையினரும் மருத்துவத் துறையும் போதிய அளவுக்கு வினைத்திறனோடு முன்னெடுக்கவில்லை என்று கூறி அதனை படைத்தரப்பு பொறுப்பேற்றது. இதன்மூலம் மருத்துவ ஊழியர்களால் மருத்துவ சுகாதார நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட வேண்டிய தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் ஒரு ராணுவ நடவடிக்கைபோல முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த மாதம் நடுப்பகுதிக்குள் முப்பது வயதுக்கும் மேலான அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டுவிடும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. அதற்காக இரவு பகலாக தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை படைத்தரப்பு ஓய்வு ஒழிச்சலின்றி முன்னெடுக்கிறது. எனவே தடுப்பூசி போடும் நடவடிக்கைகளில் ஏற்படக்கூடிய தவறுகளுக்கு படைத்தரப்பும் அரசாங்கமும்தான் பொறுப்பே தவிர சுகாதாரப் பிரிவினர் அல்ல என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
   இவ்வாறாக கடந்த 20 மாதங்களுக்கு மேலான இராணுவ மயமாக்கலின் அடுத்தகட்டமாக அரசாங்கம் கடந்தவாரம் பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆவது பிரிவின்மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய அத்தியாவசிய உணவு விநியோகத்துடன் சம்பந்தப்பட்ட அவசரகால விதிமுறைகளை பிரகடனப்படுத்தியுள்ளது. சாதாரண பொதுமக்களின் வாழ்க்கை நிலையை இயல்பு நிலையில் பேணுவதற்குத் தேவையான நெல், அரிசி, சீனி உள்ளிட்ட ஏனைய நுகர்வுப் பொருட்களை விநியோகிப்பதை ஒருங்கிணைப்பதற்காக, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகமாக, மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.
   இதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்தலாம் என்று அரசாங்கம் சிந்திக்கின்றது. அரசாங்கம் அறிவித்திருக்கும் முழுமையற்ற சமூக முடக்கம் காரணமாக விலைகள் மேலும் அதிகரிக்கின்றன. அரசாங்கம் இதற்கு முன்னரும் சில பொருட்களுக்கு விலைகளை நிர்ணயித்திருக்கிறது. ஆனால் அவ்வாறு விலைகளை நிர்ணயிப்பதன் மூலம் வணிகர்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே கடந்தகால அனுபவமாகக் காணப்படுகிறது. இம்முறையும் அறிவிக்கப்பட்டிருக்கும் சமூக முடக்கமானது சமூகத்தை முழுமையாக முடக்கவில்லை.
   “மகாநாயக்க தேரர்களின் வேண்டுகோளை நிராகரிக்க முடியாத காரணத்தால்தான் நாடு முடக்கப்பட்டது. அந்த நேரத்தில் அரசாங்கம் நாட்டை முடக்குவதற்கு தீர்மானித்திருக்கவில்லை” என்று கூறியிருக்கிறார் அமைச்சர் மஹிந்தானந்த. அப்படியென்றால் அரசாங்கம் துறைசார் நிபுணர்களின் வேண்டுகோளை ஏற்றுக் ஏற்றுக்கொள்ளவில்லை என்று பொருள். அதாவது துறைசார் நிபுணர்களின் நோக்கு நிலையிலிருந்து இந்த சமூகமுடக்கம் அறிவிக்கப்படவில்லை.
   அரசாங்கத்தின் பொருளாதார நோக்கு நிலையிலிருந்தே இந்த சமூகமுடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் அரசாங்கம் அண்மைய மாதங்களில் அறிவித்த சமூக முடகங்களுக்கு வெவ்வேறு பெயர்களை வைத்தது. சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது பயணக் கட்டுப்பாடு என்று அழைக்கப்பட்டது. இப்பொழுது அறிவிக்கப்பட்டிருப்பது தனிமைப்படுத்தல் ஊரடங்கு என்று அழைக்கப்படுகிறது. மேலும் ஹைபிரிட் சமூக முடக்கம் என்ற ஒரு பெயரையும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அண்மையில் தெரிவித்திருந்தார். அதாவது இது முழுமையான அர்த்தத்தில் சமூக முடக்கம் அல்ல என்று பொருள். மருத்துவ நோக்கு நிலையிலிருந்து இது அறிவிக்கப்படவில்லை. பொருளாதார நோக்கு நிலையிலிருந்தே இது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
   சமூக முடக்க காலத்தில் அத்தியாவசிய சேவைகள் என்ற பட்டியலின் கீழ் ஒரு தொகுதி தொழிற்துறைகள் தொடர்ந்தும் இயங்குவதற்கு அரசாங்கம் அனுமதித்திருக்கிறது. இதை வசதியாகப் பயன்படுத்தி சனங்கள் வீட்டுக்கு வெளியே வருகிறார்கள். நகரங்களின் மையங்களில்தான் சன நடமாட்டம் குறைவாக இருக்கிறது. புறநகர் பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் ஜனங்கள் வழமைபோல நடமாடுகிறார்கள். சந்தைகள் மூடப்பட்டதால் தற்காலிக சந்தைகள் எல்லாக் கிராமங்களிலும் திறக்கப்பட்டு விட்டன. இச்சந்தைகளில் பொருட்களின் விலைகள் வழமையைவிட அதிகமாக காணப்படுகின்றன.உதாரணமாக திருநெல்வேலிச் சந்தையில் இருந்து கிட்டத்தட்ட ஒரு மைல் தூரத்தில் தெருவோரங்களிலும் உள்வீதிகளிலும் திறக்கப்பட்டிருக்கும் சந்தைகளில் பொருட்களின் விலை வழமையைவிட அதிகமாக இருக்கிறது.
   யாழ்ப்பாணத்தில் இது நல்லூர் திருவிழாக் காலம். இக்காலகட்டத்தில் மரக்கறி விலை பொதுவாக கீழே வந்துவிடும். ஆனால் இம்முறை கோயிலும் பூட்டு. சந்தையும் பூட்டு. ஆனால் விலைகளோ உச்சத்தில். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வைரஸ் தொற்றிவிடும் என்ற அச்சத்தோடு வீட்டுக்கு வெளியே வரும் சனங்கள் ஒருபுறம் வைரசை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இன்னொருபுறம் விலையேற்றத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அனர்த்த காலத்தை தமக்கு வசதியாக பயன்படுத்தி வர்த்தகர்கள் உழைக்கத் தொடங்கி விட்டார்கள். சில பொருட்கள் பதுக்கப்பட்டதற்கும் பெருமளவுக்கு வணிகர்களே காரணம். எதிர்காலத்தில் குறிப்பிட்ட பொருட்களின் விலைகள் உயரலாம் என்று ஊகத்தின் அடிப்படையில் வணிகர்கள் பொருட்களை பதுக்குகிறார்கள். இதுசாதாரண ஜனங்களுக்கு சமூக முடக்கத்தை வேதனை மிகுந்த ஒன்றாக மாற்றிவிட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான் அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களுக்கு என்று ஒரு மேஜர் ஜெனரலை பொறுப்பாக நியமித்திருக்கிறது.
   எனவே தொகுத்துப்பார்த்தால் தடுப்பூசிக்கும் ராணுவம்தான் பொறுப்பு. அத்தியாவசியப் பொருட்களுக்கும் ராணுவம்தான் பொறுப்பு. அரசாங்கம் நம்புகின்றது வேகமாக தடுப்பூசியை போடுவதன் மூலம் நோய் பரவும் வேகத்தையும் இறப்பு விகிதத்தையும் குறைக்கலாம் என்று. இந்த இலக்கை முன்வைத்து தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் படையினரிடம் தரப்பட்டிருக்கின்றன. அடுத்தமாதம் நடுப்பகுதியளவுக்குள் நாட்டிலுள்ள முப்பது வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு விடும் என்று அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துவிட்டது. 30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தின்படி அரசாங்கம் கிட்டத்தட்ட அறுபது வீதத்துக்கு மேல் முன்னேறி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் பின்னரே பாடசாலைகளையும் அலுவலகங்களையும் முழுமையாக திறக்கலாம் என்று அரசாங்கம் சிந்திக்கின்றது. இது விடயத்தில் சில மேற்கத்திய நாடுகளின் முன்னுதாரணத்தை பின்பற்றி தடுப்பூசிகளை வேகமாக போட்டு முடித்தால் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என்று அரசாங்கம் நம்புகின்றது. சீனாவைப் போலவே வக்சினேற்றும் நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கமும் சாதனை படைக்க முயற்சிக்கிறது
   ஆனால் தடுப்பூசி போடுவதற்கான தேசிய கொள்கையின்படி60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டு முடிக்காமல் 30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடுவது என்று அரசாங்கம் கொள்கையை மாற்றியது என்றும் இது தொடர்பில் சுகாதாரப்பிரிவுடன் அரசாங்கம் கலந்தாலோசிக்கவில்லை என்றும் ஜேவிபி குற்றம்சாட்டுகிறது. இவ்வாறு திட்டத்தை மாற்றியதால்தான் அதிகளவு முதியோர் அண்மைக்காலங்களில் இறந்தார்கள் என்றும் அக்கட்சி கூறுகிறது. ஓகஸ்ட் மாதம் மொத்தம் 4850 பேர் கோவிட் தொற்றினால் இறந்திருக்கிறார்கள் அவர்களின் 3000 பேர் தடுப்பூசி போடாத 60வயதுக்கு மேற்பட்ட முதியோர்களே என்று ஜேவிபி சுட்டிக்காட்டியுள்ளது. முதியோரை அதாவது ஓய்வூதியர்களைச் சாகவிட்டால் அதனால் அரசாங்கத்துக்கு லாபமுண்டு. ஏனென்றால் சேமிப்பில் உள்ள ஓய்வூதியம் அரசாங்கத்துக்கு கிடைக்கும்அதேநேரம் இளவயதினரை பாதுகாத்தால் அதனாலும் லாபம் உண்டு. ஏனென்றால் அவர்களுடைய உழைப்பால் வருமானம் கிடைக்கும். எனவே தடுப்பூசி கொள்கையை அரசாங்கம் திடடமிட்டே மாற்றியிருக்கலாம் என்று ஓர் அரசு ஊழியர் கூறினார்.
   வைரஸ் புதிய திரிபுகளை அடையும் பொழுது தடுப்பூசி மட்டும் ஒரு தீர்வு அல்ல என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். ”தடுப்பூசிகளை மாத்திரம் நம்பியிருப்பதால் கொள்கை வகுப்பாளர்களும் – பொதுமக்களும் பெருந்தொற்றை தடுப்பதற்கு செய்யவேண்டியதை செய்யத் தவறுகின்றனர்”என்று கொழும்பு பல்கலைகழக பேராசிரியர் மனுஜ் வீரசிங்க தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்திக்கொள்வது மிகவும் அவசியமானது அது உயிரிழப்புகளை குறைத்து நோயின் தீவிர தன்மையை குறைக்கின்றது. ஆனால் நீங்கள் பாதிக்கப்படுவதையோ அல்லது ஏனையவர்களிற்கு நோய் தொற்றச் செய்வதையோ தடுப்பூசிகள் தடுக்காது…..எந்தவொரு வைரசையும் சமாளிப்பதற்கு சமூகத்தின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது அவசியம். கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசிகள் முக்கிய பங்கை வகிக்கின்றன. ஆனால் அவை மாத்திரமே தீர்வல்ல.இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு தடுப்பூசி மாத்திரம் போதுமானது என நாங்கள் நினைத்தால் நாங்கள் ஏனைய முக்கியமான நடவடிக்கைகளை முன்னெடுக்கமாட்டோம்,மக்கள் என்னசெய்யவேண்டும் என்பது குறித்து அவர்களிற்கு நாங்கள் அறிவூட்டமாட்டோம்” என பேராசிரியர் மனுஜ் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
   மருத்துவர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளை பெருமளவுக்கு புறக்கணித்துவிட்டு ஆகக்கூடியபட்சம் தடுப்பூசியைப் போடுவதன்மூலம் நிலமையை கட்டுப்படுத்தலாம் என்று அரசாங்கம் சிந்திக்கின்றது. நாடு முழுவதும் தடுப்பூசி போட்டு முடிக்கப்படுவதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இழப்புகளைத் தாங்கினால் சரி என்று அரசாங்கம் சிந்திக்கின்றது. இது விடயத்தில் அரசாங்கம் திட்டமிடுவதுபோல நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டபின் நிலைமை கட்டுக்குள் வருமா? வைரஸ் வைக்கும் சோதனையில் அரசாங்கம் சித்திபெறுமா?
    
   https://globaltamilnews.net/2021/165529
    
  • By கிருபன்
   போரும் வைரசும் ஒன்றல்ல! நிலாந்தன்!
   August 29, 2021
   ஒரு தனிப்பட்ட உரையாடலின்போது ஒரு ராஜதந்திரி என்னிடம் சொன்னார் உங்களுடைய நாட்டில் மிக அடிமட்டம் வரையிலும் இறங்கி வேலை செய்யும் ஒரு சுகாதாரக் கட்டமைப்பு உண்டு.வீடுவீடாக வந்து நுளம்புப் பெருக்கத்திற்கான வாய்ப்புக்கள் உண்டா இல்லையா என்பதனை நுணுக்கமாக ஆராய்கிறார்கள்.இது ஒரு முன்னேற்றகரமான சுகாதாரச் செய்முறை என்று.
   உண்மைதான் இலங்கைத்தீவின் சுகாதார வைத்திய அதிகாரி (MOH)கட்டமைப்பு என்பது தனித்தன்மை மிக்கதாக வர்ணிக்கப்படுகிறது.மிகக் குறைந்த செலவில் மிகக் கூடுதலான வினைத்திறனோடு செயற்படும் ஒரு பொதுச் சுகாதார கட்டமைப்பாக அது போற்றப்படுகிறது.பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டத்துறையில் பரவிய கொழுக்கிப் புழு தொற்றுநோய் காரணமாக அதிகரித்து உயிர்ச்சேதம் ஏற்பட்டபோது அதை தடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒருகட்ட விளைவே அதுவெனலாம். அமெரிக்க மருத்துவத் தொண்டு நிறுவனமான ரொக்கெபெலர் நிதியத்தால்(Rockefeller Foundation) பெருந்தோட்டத்துறையில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட சுகாதார நடவடிக்கைகள் திருப்தியான விளைவுகளைத் தரத்தவறிய ஒரு பின்னணியில் பெருந்தோட்டத்துறைக்கு வெளியே ஒரு குறிப்பிட்ட பகுதியை-மேல் மாகாணத்தில் களுத்துறை பிரதேசத்தை-பரிசோதனைக்களமாக தெரிந்தெடுத்து இலங்கைத் தீவின் முதலாவது மருத்துவ சுகாதார அலுவலர் கட்டமைப்பு 1926ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.அக்கட்டமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவரான டொக்டர்.எஸ்.எப்.செல்லப்பா என்ற ஒரு தமிழரே இலங்கைத்தீவின் முதலாவது மருத்துவ சுகாதார அதிகாரியாவார்.
   இவ்வளவு பெருமைமிக்க ஒரு கட்டமைப்பை கொண்டிருக்கும் இலங்கை தீவு ஒரு பெருந் தொற்று நோய்க்கு எதிராக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக என்ன செய்துகொண்டிருக்கிறது?அண்மையில் சமூக வலைத்தளங்களில் ஒரு படம் வெளியாகி இருந்தது.அதில் களைத்து துவண்டு போன ஒரு பொதுச் சுகாதார பரிசோதகர் சிறிய பிளாஸ்டிக் கதிரை ஒன்றில் உடலை நீட்டி அயர்ந்து தூங்கும் காட்சி காணப்பட்டது. அது ஒரு குறியீடு.உலகில் மிகவும் போற்றப்படும் ஒரு பொதுச் சுகாதார கட்டமைப்பு களைத்துப் போயிருப்பதை அது காட்டுகிறதா? பெருமைக்குரிய அடிமட்ட சுகாதார கட்டமைப்பை கொண்டிருக்கும் ஒரு நாடு பெருந்தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் தடுமாறுகிறதா?கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட சமூக முடக்கம் அதைத்தான் காட்டுகிறதா?அது மேலும் நீடிக்கப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டிருப்பதும் அதைத்தான் காட்டுகிறதா?
   சமூக முடக்கத்தை அறிவிக்குமாறு சுகாதாரத் துறைசார் நிபுணர்களும் மருத்துவர்களும் சமூக அக்கறை கொண்ட சக்திகளும் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக கேட்டுவந்தனர்.ஆனால் அக்கோரிக்கைகளை பொருட்படுத்தாத அரசாங்கம் இரண்டு மகாநாயக்க தேரர்கள் கேட்டதும் சமூக முடக்கத்தை அறிவித்தது. தனித்துவம் மிக்க ஒரு பொதுச் சுகாதார கட்டமைப்பின் எச்சரிக்கைகளை விடவும் மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைகளைத்தான் இந்த அரசாங்கம் செவிமடுக்குமா? மேலும் அறிவிக்கப்பட்ட சமூகமுடக்கமும் முழுமையானது அல்ல.முன்னைய சமூகமுடக்கங்களைப் போலவே அது அரைகுறையானது. ஒவ்வொரு முறையும் அது வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. இம்முறை அது தனிமைப்படுத்தல் ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
   அதைவிட முக்கியமாக அந்த சமூகம் முடக்கம் அறிவிக்கப்பட்ட விதம் ஒரு சிவில் நடவடிக்கை போன்றதல்ல.அது ஒரு ராணுவ நடவடிக்கை போலவே திடீர் என்று அறிவிக்கப்பட்டது. அரசாங்கம் ஒரு சமூக முடக்கத்தை அறிவிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு தொடர்ச்சியாக பத்திரிகை வாசிப்பவர்கள்மத்தியில் இருந்தது.ஆனால் அரசாங்கம் அதனை வெளிப்படையாகச் சொல்லவில்லை. திடீரென்று ஒருநாள் முன்னதாக அதனை அறிவித்தது.அப்படி அறிவிக்கப்பட்டால் சாதாரண குடிமக்கள் என்ன செய்வார்கள் ?கிடைக்கும் கால அவகாசத்தில் சேமிக்கக் கூடிய பொருட்களை சேமிப்பார்கள். அதுதான் வெள்ளி பின்னேரம் நடந்தது. எல்லா தெருக்களிலும் சனத்திரள் திருவிழாக் காலம் போல பண்டிகைக் காலம் போல பிதுங்கி வழிந்தது.சந்தைகளின் முன்னும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்:பல்பொருள் அங்காடிகள்; மருந்தகங்களின் முன்னும் மக்கள் நிரம்பி வழிந்தார்கள். தெருக்களில் வாகனங்கள் நெரிசலாக காணப்பட்டன.எதற்காக சமூகம் முடக்கப்படுகிறது? வைரஸ் தொற்றும் வேகத்தை குறைப்பதற்காகத்தானே? ஆனால் பத்து நாட்களுக்குள் ஏற்படக்கூடிய தொற்றை சில மணித்தியாலங்களுக்குள் ஏற்படுத்தியமைதான் திடீர் அறிவிப்புகளின் விளைவு எனலாமா?
   கொரோனா தொற்று பரவி மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமைக்கு ஜோசப் ஸ்டாலின்கொத்தணி, சஜித் கொத்தணி மற்றும் அனுர கொத்தணி போன்றவையே காரணம் என்று நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.ஆனால் திடீர் சமூக முடக்க அறிவிப்பால் நாட்டில் பெட்ரோல் செட் கொத்தணி ; ஃபூட் சிற்றி கொத்தணி ; பார்மசி கொத்தணி போன்ற கொத்தணிகள் உருவாகாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
   அரசாங்கம் ஏன் இப்படித் திடீர் என்று அறிவிக்கிறது? சமூக முடக்கத்தை அறிவிப்பது என்று தீர்மானித்தால் அதை ஏற்கனவே மக்களுக்கு வெளிப்படையாகக்கூறி மக்களை சில நாட்களுக்குள் அதற்கு தயாராகும்படி கேட்கலாம்தானே? வெள்ளியன்று ஜனாதிபதி ஆற்றிய உரையை சில நாட்களுக்கு முன்பே செய்திருக்கலாம்தானே? முன்கூட்டியே அறிவித்தால் வைரஸ் ஓடி ஒளித்துவிடும் என்ற பயமா? இவ்வாறு திடீரென்று அறிவித்தமை என்பது ஒருவித ராணுவத்தனமான அறிவிப்புதான்.அது சிவில்த்தனமானது அல்ல.
   வைத்திய நிபுணர்கள்,துறைசார் அதிகாரிகள்,அக்கறை கொண்ட தரப்புக்கள்,ஊடகங்கள் போன்றன சில மாதங்களாக கேட்டுக்கொண்ட போதிலும் சமூகத்தை முடக்கத் தயாரற்றிருந்த அரசாங்கம் இரண்டு மகாநாயக்கர் கேட்டதும் அதை முடிவெடுத்ததா? அல்லது அரசாங்கம் முடிவெடுக்கும் சக்தியின்றி தடுமாறுகிறதா ? ஒரு தென்னிலங்கை நண்பர் கேட்டார் “இறுதிக்கட்டப் போரில் நாட்டை ஆட்சி செய்தவர்கள்தான் இப்பொழுது அரசாங்கத்தில் இருக்கிறார்கள்.போரை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான முடிவுகளை அப்போது எடுத்த இவர்களால் இப்பொழுது வைரசுக்கு எதிராக முடிவுகளை ஏன் எடுக்க முடியாதுள்ளது? என்று.
   ஆனால் இறுதிக்கட்டப் போரில் அவர்கள் என்ன முடிவை எடுத்தார்கள்?.யுத்தத்தின் வெற்றிக்காக தமது குடிமக்களில் ஒரு பகுதியினரின் உயிர்களை பொருட்படுத்துவதில்லை என்று முடிவெடுத்தார்கள்.அப்படி ஒரு முடிவை எடுத்து யுத்தத்தை வெல்வது ஒரு பெரிய காரியமும் அல்ல.அதாவது ஒரு இனப்படுகொலை மூலம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பெரிய வீரம் தேவையில்லை.அதுமட்டுமல்ல போரின் இறுதிக்கட்டத்தில் தமிழ் மக்களின் இழப்புக்களை தடுப்பதற்கு இந்தியாவோ அல்லது ஐநாவோ பொருத்தமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை.இறுதிக்கட்ட போரில் ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்கு அதுவும் ஒரு காரணம்.அதாவது போரில் அரசாங்கம் வென்றதற்கு அதுவுமொரு காரணம்தான்.
   ஆனால் வைரசும் போரும் ஒன்றல்ல என்பதனை கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேலான காலம் நிரூபித்துவிட்டது. எனினும் அரசாங்கம் ஒரு யுத்த களத்தில் முடிவெடுப்பது போலவே இப்பொழுதும் முடிவெடுக்கிறது.கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் சமூக முடக்கத்தை ஏன் அரசாங்கம் ஒத்திவைத்தது என்பதற்கு விளக்கங்களை வழங்கினார்.அதாவது வைரசை முடக்குவது என்றால் சமூகத்தை முடக்க வேண்டும்.சமூகத்தை முடக்கினால் பொருளாதாரம் முடங்கிவிடும். ஏற்கனவே முடங்கிப் போயிருக்கும் பொருளாதாரத்தை மேலும் முடக்குவதற்கு அரசாங்கம் தயங்குகிறது. அதனால்தான் சமூகத்தை முழுமையாக முடக்க அரசாங்கம் தயங்குகிறது.பொருளாதாரத்தை பாதுகாப்பதற்காக உயிரிழப்புக்களை தாங்கிக் கொள்ளலாம் என்பதும் ஒருவித யுத்தகளச் சிந்தனைதான்.
   இப்பொழுது அறிவிக்கப்பட்டிருப்பதும் ஓர் அரைச்சமூக முடக்கம்தான். பிரதான சாலைகளில்தான் நடமாட்டங்கள் பெருமளவிற்கு குறைந்திருக்கின்றன.ஆனால் நாட்டின் உட்தெருக்களிலும் குக்கிராமங்களிலும் வாழ்க்கை வழமை போல இயங்குகிறது.கொரோனாச் சந்தைகள் ஆங்காங்கே திறக்கப்பட்டுவிட்டன. வணிகர்கள் கடைகளின் முன்கதவை மூடி பின்கதவால் வியாபாரம் செய்கிறார்கள். அப்படியென்றால் வைரஸ் பெருஞ்சசாலைகளின் வழியாகத்தான் வருமா?அல்லது பின்கதவின் வழியாகத்தான் வருமா? இவ்வாறான ஒரு அரைச்சமூக முடக்கத்தைக்கூட அரசாங்கம் சிவில்த்தனமாக அறிவிக்காமல் ராணுவத் தனமாகவே அறிவித்திருக்கிறது.
   இந்த அரசாங்கம் வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒரு போரை போலவே முன்னெடுக்கிறது.ஒரு பெருந்தொற்றுநோய் காலத்தில் நாட்டை அதிகம் ராணுவ மயப்படுத்திய ஓர் அரசாங்கம் இது.சுகாதார அமைச்சின் செயலாளராகவும் ஒரு முன்னாள் படைப்பிரதானியே காணப்படுகிறார்.புதிய சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவுக்கு வைத்திய ஆய்வக விஞ்ஞானிகளின்,நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் பின்வருமாறு அறிவுறுத்தியுள்ளார்……“நீங்கள முதுகெலும்புள்ள சுகாதார அமைச்சராக செயல்பட விரும்பினால் உங்களை தாண்டிவரும் உத்தரவுகளை அமல்படுத்துவதிலிருந்து சுகாதார செயலாளருக்கு உடனடியாகத் தடைவிதியுங்கள்.இல்லையெனில் சுகாதார சேவையில் சரியான தீர்மானங்களை எடுப்பதில் சீரான தன்மையைப் பேணுவது கடினம்”
   அரசாங்கம் ஏன் வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை அதிகம் ராணுவ மயப்படுத்துகிறது?அதற்கு பின்வரும் காரணங்கள் உண்டு.முதலாவது காரணம் இந்த அரசாங்கத்துக்கும் படைத்தரப்புக்கும் இடையிலான உறவு ரத்தமும் சதையும் போன்றது.இந்த அரசாங்கத்தின் அடிப்படைப் பலமே யுத்த வெற்றிதான். எனவே போர்வெற்றியின் பங்காளியான படைத்தரப்பில்தான் இந்த அரசாங்கம் அதிகம் தங்கியிருக்கும்.அதிலும் குறிப்பாக தமிழ் மக்களால் போர்க்குற்றம் சாட்டப்படும் ஒரு படைத்தரப்பை பாதுகாத்தால்தான் இந்த அரசாங்கம் தன்னையும் பாதுகாக்கலாம்.எனவே படைத்தரப்பை தண்டிக்கப்பட முடியாத ஒரு தரப்பாக மகிமைப்படுத்த வேண்டிய தேவை இந்த அரசாங்கத்திற்கு உண்டு.யுத்தத்தை வென்ற ஒரு படையை வைரசுக்கு எதிரான போரிலும் நிறுத்தி அதில் வெற்றி கொள்ள வைப்பதன் மூலம் படைத்தரப்பின் அந்தஸ்தை உயர்த்தலாம் என்று இந்த அரசாங்கம் சிந்தித்தது.இது முதலாவது காரணம்.
   இரண்டாவது காரணம்,அனர்த்த காலங்களில் படைத்தரப்பை உதவிக்கு அழைப்பது ஒரு உலகப்பொது இயல்பு.இலங்கைத்தீவில் அதிக ஆளணியும் அதிக வளங்களும் கொண்ட வினைத்திறன் மிக்க ஒரு அரசஉபகரணம் படைத்தரப்பே.குறிப்பாக அரசாங்கத்துக்கு அதிகம் விசுவாசமான ஒரு உபகரணமும் அதுதான்.எனவே அந்த உபகரணத்தை வைத்து அரசாங்கம் வைரசை எதிர்கொண்டது.அதனால் தொடக்கத்தில் வெற்றிகளையும் பெற்றது. அண்மை மாதங்களாக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை ஒரு படைநடவடிக்கை போல வேகமாக முன்னெடுத்து வரும் அரசாங்கம் அதில் ஒரு முன்னுதாரணத்தை காட்டியும் இருக்கிறது. இது இரண்டாவது காரணம்.
   மூன்றாவது காரணம் வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் படைத்தரப்பை முன்னிலைப்படுத்தும்பொழுது அதுதொடர்பில் விமர்சனங்களை முன் வைப்பதற்கு எதிர்கட்சிகளும் ஊடகங்களும் சிங்களப் பொது உளவியலும் தயங்கும்.போரில் ரிஸ்க் எடுத்து உயிரைக்கொடுத்து வெற்றி கொண்டது போலவே இப்பொழுது வைரசுக்கு எதிராகவும் படைத்தரப்பு ரிஸ்க் எடுக்கிறது என்ற ஒரு படிமத்தை அரசாங்கம் கட்டியெழுப்ப முயன்றது. வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை விமர்சிப்பது என்பது அதில் முன்னணி செயற்பாட்டாளர்களாகக் காணப்படும் படைத்தரப்பையும் விமர்சிப்பதுதான்.தமது யுத்தவெற்றி நாயகர்களை விமர்சிக்க தயங்கிய சிங்களக் கூட்டு உளவியலை அரசாங்கம் நன்கு பயன்படுத்தியது.
   இதனால் இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட உலகின் மிக நூதனமான ஒரு பொதுச் சுகாதாரக் கட்டமைப்பும் சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணத்துவமும் பெருமளவுக்கு படைத்தரப்பின் முகாமைத்துவத்தின் கீழ் கொண்டுவரப்பட்டபொழுது அதற்கு பெருமளவிற்கு எதிர்ப்பு முதலில் தோன்றவில்லை.வெல்ல முடியாத ஒரு போரில் வெற்றிபெற்ற ஒரே தகுதி காரணமாக உலகின் மிக வினைத்திறன் மிக்க முன்னுதாரணமான ஒரு பொதுச் சுகாதாரக் கட்டமைப்பை படைத்தரப்பு மேலாண்மை செய்யும் ஒரு நிலை தோன்றியது.நாட்டுமக்கள் மூன்றாவது தடுப்பூசியை அதாவது பூஸ்டர் டோஸை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதனையும் சில நாட்களுக்கு முன் படைத்தளபதியே அறிவித்திருந்தார்.
   ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலான தொகுக்கப்பட்ட அனுபவமானது வைரஸும் யுத்தமும் ஒன்று அல்ல என்பதை நிரூபித்து விட்டது. ஹெகலிய ரம்புக்வெல கூறியதுபோல விடுதலைப் புலிகளை தோற்கடித்த அதே படைத்தரப்பால் வைரஸை எதிர்பார்த்த வேகத்தில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிகொள்ள முடியவில்லை.அரசாங்கத்தால் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.தலைநகரத்தில் அரிதாக கிடைப்பது அமெரிக்க டொலர்.எங்கும் கிடைப்பது வைரஸ் என்றாகிவிட்டது. போரில் வெற்றி பெற்ற ஒரு படைத்தரப்பு வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு கலையத் தொடங்கிவிட்டது.இதை இன்னும் ஆழமாகச் சொன்னால் யுத்தவெற்றிகளின் பளபளப்பின்மீது வைரஸ் பரவத் தொடங்கிவிட்டதா ?
    
   https://globaltamilnews.net/2021/165174
    
  • By கிருபன்
   வக்சினைப் போடுங்கள் ஆனால் கடவுளை நம்புங்கள்? நிலாந்தன்!
   August 22, 2021

    
   பவித்ரா வன்னியாராச்சியிடமிருந்து சுகாதார அமைச்சு பறிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெருந்தொற்று நோய்க் காலத்தில் ஒரு நாட்டின் சுகாதார அமைச்சராக இருப்பது என்பது சோதனை மிகுந்தது. அந்தச் சோதனையில் அவர் சித்திபெறவில்ல. தொடக்கத்தில் இருந்தே அவர் சொதப்பி விட்டார். மந்திரித்த நீரை ஆறுகளில் கலப்பதிலிருந்து தொடக்கி உள்ளூர் வெதமாத்தையாவான தம்மிகாவின் கொரோனாப் பாணியை அங்கீகரித்து அருந்தியதுவரை அவர் மாந்திரீகம் மருந்து எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு குழப்பிவிட்டார். இப்போது அவருடைய இடத்துக்கு ஹெகலிய ரம்புக்வெல வந்திருக்கிறார். இவர் யுத்தகாலங்களில் பாதுகாப்புத்துறை பேச்சாளராக இருந்தவர். அந்நாட்களில் இவர் எப்படி உண்மைகளை விழுங்கினார் என்பது எல்லாருக்கும் தெரியும். எனவே இனிவரும் காலங்களில் வைரஸ் பற்றிய உண்மைகளும் விழுங்கப்படும் என்று எடுத்துக் கொள்ளலாமா? ஆனால் அவர் சுகாதார அமைச்சராக வருவதற்கு முன்னரே நாடு உண்மைகளை விழுங்க தொடங்கிவிட்டது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
   பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் பின்வருமாறு கூறுகிறார்….“கொரோனா தொற்று தொடர்பாகச் சரியான புள்ளிவிபரங்கள் கிடைக்கவில்லை. இரசாயான ஆய்வுகூடத்திற்கு அனுப்பப்படும் பி.சி.ஆர். அறிக்கை மாத்திரம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. நாளாந்தம் சுகாதார பிரிவில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனை மற்றும் விரைவான அன்டிஜன் பரிசோதனை தொடர்பான அறிக்கை புள்ளிவிபரத்தில் இடம்பெறுவதில்லை. அவர்கள் வேண்டும் என்றே செய்கிறார்களோ அல்லது அவர்களின் கவனக் குறைவோ எனத் தெரியவில்லை.”
   இப்பொழுது ஹெகலிய வந்துவிட்டார். அவர்,வந்தகையோடு பத்துநாள் சமூகமுடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவர் உத்தியோகப்பற்றற்ற ஒரு தணிக்கையை அமுல்படுத்துவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சவேந்திர சில்வாவுக்கும் அவருக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு எப்படியிருக்கும் என்ற கேள்வியும் இங்கு முக்கியம்.
   எனினும் அரசாங்கம் அமைச்சரவையில் மேற்கொண்டிருக்கும் மாற்றங்கள் நாடு இப்பொழுது எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளை சமாளிக்கும் நோக்கிலானவை என்பதில் சந்தேகமில்லை. இது அமைச்சரவை பொறுத்து இரண்டாவது மாற்றம். முதலாவது பசில் ராஜபக்சவை உள்ளே கொண்டு வந்தது. இப்பொழுது அமைச்சரவை மாற்றம். இதன்மூலம் அரசாங்கம் உள் நோக்கியும் வெளி நோக்கியும் சில சமிக்ஞைகளை காட்டவிரும்புகிறதா ?
   சலித்துப் போயிருக்கும் சிங்கள மக்களுக்கு ஒரு மாற்றம் என்ற செய்தியை அரசாங்கம் உள்நோக்கிக் காட்ட விளைகிறது. அதேசமயம் வெளியுறவு அமைச்சராக ஜி.எல்பீரிஸை நியமித்ததன்மூலம் வெளிநோக்கி மேற்கு நாடுகளுக்கு ஏதோ ஒன்றை கூறவிரும்புகிறதா? ஏற்கனவே பீரிஸ் சுமந்திரனை இலங்கைக்கான அமெரிக்க தூதுவரின் இல்லத்தில் சந்தித்திருக்கிறார். எனவே அரசாங்கம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளோடு பேச்சுக்களை தொடங்குவதன் மூலம் ஜிஎஸ்பி பிளஸ் சலுகை தொடர்பாக மேலும் சுதாகரிப்புக்களை செய்யப்போகிறதா? நேற்றுமுன்தினம் அரசுத்தலைவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தைத்த ஆடை ஏற்றுமதித் துறை பற்றி அழுத்திக் கூறியிருக்கிறார். நாட்டை நீண்டகாலம் முடக்கினால் ஆடை ஏறுமதித் துறை சரிந்து விடும் என்ற அச்சம் அங்கே தெரிகிறது. ஆடை ஏறுமதி என்றால் அங்கே ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகையைப் பற்றியும் கவனிக்க வேண்டும்.
   கடந்த ஆட்சியின்போதும் ஜிஎஸ்பி பிளஸ் சலுகை தொடர்பில் ஐரோப்பிய யூனியன் நிபந்தனைகளை விதித்தது. குறிப்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் அல்லது அனைத்துலகத் தரத்துக்கு ஏற்ப அதில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றம் நிபந்தனை விதித்தது. அப்பொழுது கூட்டமைப்பு அரசாங்கத்தை பிணை எடுத்தது. அதன்மூலம் நிபந்தனையோடு அந்த சலுகை வழங்கப்பட்டது. இப்பொழுது மறுபடியும் அதேபோன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றம் இலங்கை அரசாங்கத்தை எச்சரித்திருக்கிறது. இதனால் அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்காக ஒரு குழுவை நியமித்திருந்தது. அந்த குழுவின் தகைமை குறித்து நிபுணர்கள் ஏற்கனவே கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அரசாங்கம் பெயரளவிலாவது பயங்கரவாத தடைச் சட்டத்தில் சில திருத்தங்களை செய்யக்கூடும். அதன்பின் கூட்டமைப்பு அரசாங்கத்தை பிணை எடுக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
   ஆனால் பசில் அதற்கான வேலைகளை தொடங்கிவிட்டார் என்பது மட்டும் தெரிகிறது. இது முதலாவது. இரண்டாவது-அதையும் பஸில்தான் முன்னெடுக்கிறார். திருகோணமலை துறைமுகத்தை அண்டிய ஒரு தொகுதி காணிகளை அரசாங்கம் அமெரிக்கா தலைமையிலான குவாட் நாடுகளுக்கு கொடுக்கத் தயாராகி வருவதாக செய்திகள் வெளிவந்தன. இதற்குரிய அமைச்சரவை பத்திரமும் தயாரிக்கப்படுவதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது. ஆப்கானில் இருந்து அமெரிக்கா வெளியேறி இருக்கும் ஒரு பின்னணியில் திருகோணமலை துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் காணிகளை பெற்றுக்கொள்ள கொள்ள அமெரிக்கா முயற்சிக்கிறதா? என்ற கேள்விக்கு விடைகாண வேண்டும். இது இரண்டாவது.
   மூன்றாவது-அதுவும் பசிலின் வருகையோடுதான் முடுக்கிவிடப்பட்டி ருப்பதாக கருதப்படுகிறது. என்னவெனில் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவரான மிலிந்த மொரகொட இந்தியாவுடன் சேர்ந்து செயல்படுவதற்காக இரண்டு ஆண்டுத் திட்டம் ஒன்றை வரைந்திருப்பதாக வெளிவந்திருக்கும் செய்திகள் கோட்டாபய ஜனாதிபதியாக வந்ததும் மிலிந்த மொரகொடவை இந்தியாவுக்கான தூதுவராக நியமித்தார். அவருக்கு அமைச்சரவை அந்தஸ்து வழங்கப் போவதாக அரசாங்கம் அறிவித்தது. ஆனால் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக அந்த நியமனம் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு நிலைமை காணப்பட்டது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இந்தியா அவருக்கு அமைச்சரவை அந்தஸ்து வழங்க தயாரில்லை என்று கூறப்படுகிறது. அப்படி மிலிந்த மொரகொடவிற்கு அமைச்சரவை அந்தஸ்து வழங்குவதாக இருந்தால் அதைப்போல கொழும்பில் இருக்கும் இந்தியத் தூதுவருருக்கும் அமைச்சரவை அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என்று இந்தியா நிபந்தனை விதித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பசில் வந்தபின் மிலிந்தவின் நியமனம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. அவர் அமைச்சரவை அந்தஸ்தோடு டெல்லிக்குப் போகிறாரா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் மிலிந்த மொறக்கொட இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதற்கென்று தயாரித்த ஒன்றிணைந்த மூலோபாயத் திட்டம் ஒன்றைப்பற்றி அரசியல் வடடாரங்களில் அதிகம் பேசப்படுகிறது.
   அதாவது அரசாங்கம் இந்தியா தொடர்பான அதன் அணுகுமுறைகளில் மாற்றங்களை செய்ய விரும்புகிறது என்று பொருள்.இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தியா முதலில் என்பதே அதன் வெளியுறவுக் கொள்கை என்று கூறிக்கொண்டாலும் நடைமுறையில் அது இந்தியாவுக்கு ஏமாற்றமளிக்கும் விதத்திலேயே பல விடயங்களிலும் நடந்துகொண்டது.குறிப்பாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் மற்றும் மேற்கு முனையம் விடயங்களில் இலங்கை அரசாங்கம் இந்தியாவை திருப்திப்படுத்த தவறியது.அடுத்ததாக பலாலி விமான நிலையத்தை அடுத்தகட்டமாக புனரமைப்பதற்கு இந்தியா தயாராக இருந்த போதிலும் அரசாங்கம் covid-19ஜக் காரணமாக கட்டி அதை தள்ளிப்போட்டு வருகிறது.அது ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு காரணமாகவும் பார்க்கப்படுகிறது. மூன்றாவது காங்கேசன்துறையில் இருந்து இந்தியாவை நோக்கிய ஒரு கப்பல் பாதையை திறப்பதற்கும் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக ஒப்புதல் தரவில்லை.நாலாவது யாழ்ப்பாணத்தின் தீவுகளில் புதுப்பிக்கப்படும் எரிசக்தித் திட்டத்தை சீன நிறுவனத்துக்கு கொடுத்தமை.
   இவ்வாறாக அரசாங்கம் இந்தியாவை திருப்திப்படுத்தும் விதத்தில் சில விடயங்களில் நடந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. மாறாக முதலீடு என்ற அடிப்படையிலும் கடன் உதவி என்ற அடிப்படையிலும் அரசாங்கம் மேலும் சீனாவை நோக்கி சாயும் நிலைமையே காணப்படுகிறது. இவ்வாறான ஒரு பின்னணியில் பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்துக்குள் வந்ததும் அவர் ஒரே நேரத்தில் அமெரிக்காவை நோக்கியும் இந்தியாவை நோக்கியும் அனுகூலமான அசைவுகளை காட்டத் தொடங்கியிருப்பதாக தெரிகிறது.இவ்வாறான அசைவுகளில் ஆகப் பிந்திய ஒன்றுதான் வெளிவிவகார அமைச்சராக பீரிஸ் நியமிக்கப்பட்டிருப்பதும். ஜி.எல்.பீரிஸ் ஏற்கனவே சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட ஒருவர். மேற்கைப் பொறுத்தவரையிலும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவோடு ஒப்பிடுகையில் கையாள்வதற்கு இலகுவான ஒருவர். அப்படிப்பட்ட ஒருவரை வெளியுறவு அமைச்சராக நியமித்ததன்மூலம் அரசாங்கம் மேற்கு நாடுகளுக்கு சாதகமான சில கதவுகளை திறக்க முயற்சிக்கின்றதா?
   எனவே மேற்கண்ட அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் நமக்கு கிடைக்கும் சித்திரம் என்னவென்றால் நாட்டில் ஏற்பட்டிருக்கும் பலவகைப்பட்ட நெருக்கடிகள் காரணமாக அரசாங்கம் தனது சில நிலைப்பாடுகளை தளர்த்தத் தொடங்கியிருப்பதாக தெரிகிறது.ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை முன்னிட்டு அரசாங்கம் மேலும் தனது நிலைப்பாடுகளில் நெகிழ்வை காட்டக்கூடும்.. ஆனால் பசில் ராஜபக்ச பொருளாதார ராஜதந்திரப் பரப்புகளில் முன்னெடுக்கும் இதுபோன்ற சுதாகரிப்புக்கள் யாவும் வைரசுக்கு எதிரான போரில் அரசாங்கம் தனது கவனத்தை முழுமையாக குவிப்பதற்கு உதவுமா?
   இக்கட்டுரை எழுதப்படும் காலகட்டத்தில் நாட்டில் ஒக்சிசனுக்கு தட்டுப்பாடு வந்துவிட்டது.அரசாங்கம் இந்தியாவிடம் ஒக்சிசனை வாங்கத் தொடங்கியிருக்கிறது.டெல்டா திரிபு வைரஸ் மேல் மாகாணத்தை கடந்து நாடு முழுவதும் பரவிவருகிறது.எட்டு நிமிடத்துக்கு ஒருவர் வைரஸ் தொற்றினால் இறக்கிறார்.நாடு முடக்கப்பட்டிருக்கிறது.இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டதைப்போல கெஹலிய ரம்புக்வெல பெருந்தொற்று நோய் தொடர்பான புள்ளிவிபரங்களில் உண்மைகளைக் கூறலாம் கூறாமல் விடலாம். ஆனால் அவர் covid-19 தொற்றத் தொடங்கிய காலகட்டத்தில் ஒரு விடயத்தை பிரகடனம் செய்ததை இந்த நினைவூட்ட வேண்டும்.
   விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடித்த அரசாங்கத்துக்கு ஒரு வைரஸை தோற்கடிப்பது பெரிய காரியம் இல்லை என்ற தொனிப்பட அவர் கருத்துத் தெரிவித்திருந்தார். ஆனால் வைரசுக்கு எதிரான போரும் இன முரண்பாடுகளின் விளைவாக வந்த போரும் ஒன்று அல்ல என்பதை கடந்த சுமார் ஒன்றரை ஆண்டுகாலம் நிரூபித்திருக்கும் பின்னணியில், அமைச்சரவை மாற்றத்திற்கு சில நாட்களுக்கு முன்பு ரம்புக்வெல கூறினார் தடுப்பூசியைப் போடுங்கள் ஆனால் கடவுளைப் பிரார்த்தியுங்கள் என்ற தொனிப்பட. இப்பொழுது அவர்தான் சுகாதார அமைச்சர். இனியும் அவர் அப்படித்தான் கூறுவாரா? ஏனெனில், மருத்துவர்களும் துறைசார் நிபுணர்களும் சொல்லிக் கேட்காத அரசாங்கம் இரண்டு மகாநாயக்கர்கள் சொன்னபின்தானே நாட்டை முடக்கியது?
   https://globaltamilnews.net/2021/164950
 • Topics

 • Posts

  • கடற்படையினரின்... அராஜகமானது, அரசாங்கத்தின் உண்மையான மனநிலையை வெளிக்காட்டியுள்ளது- சார்ள்ஸ் மன்னார்- வங்காலைபாடு  கிராமத்தில் இருந்து கடற்றொழிலுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு சென்று வந்த கிராமத்தவர் ஒருவரை, மதுபோதையில் இருந்த கடற்படையினர் வழிமறித்து எவ்விதக் காரணமும் இல்லாமல் கடுமையாக  தாக்கியுள்ளனர். அதனை நேரில் பார்த்த கிராம சேவகர் ஒருவர், அவரை ஏன் தாக்குகின்றீர்கள் என கடற்படையினரை கேட்கசென்றபோது, 10க்கும் மேற்பட்ட கடற்படையினர் சேர்ந்து அக்கிராம சேவகரையும் தாக்கியுள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்க சென்றபோது, முறைப்பாட்டை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இந்நிலையில் உடனடியாக அவர்களின் உடல்நலம் கருதி பேசாலை வைத்தியசாலையில் ஏனையோர் அனுமதித்தப்போது, மேலதிக சிகிச்சைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை சம்பவ இடத்திற்கு  நேரில் சென்று நிலைமைகளை அவதானித்த நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளதாவது, “கடற்படையினரின் இந்த அராஜகமானது தற்போது இருக்கும் அரசாங்கத்தின் உண்மையான மனநிலையை வெளிக்காட்டியுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவமானது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆகவே அதற்கு எனது  கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2021/1241171
  • ஹனா சிங்கர் மற்றும் சாரா ஹல்டனுடன்... கூட்டமைப்பு தனித்தனியே சந்திப்பு! ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி ஹனா சிங்கர் மற்றும் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் ஆகியோருடன் தனித்தனியான கலந்துரையாடலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்தியுள்ளது. இதன்போது வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு மற்றும் மார்ச் மாதத்தில் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் உள்ளீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து பேசப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கடந்த திங்கட்கிழமை இடமபெற்ற ஹனா சிங்கருடனான சந்திப்பின்போது குறித்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டிருந்தார். அத்துடன், நில அபகரிப்பு தொடர்பான ஆவணங்கள் மற்றும் தரவுகள் அடங்கிய விடயங்களை அவருடன் பகிர்ந்து கொள்வது பற்றி கவனம் செலுத்தப்பட்டது என்றும் அவர் கூறினார். இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை பிரித்தனிய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் இதன்போது இணை அனுசரனை வழங்கும் நாடுகளுக்கு தலைமை வகிக்கும் பிரித்தானியாவின் பங்களிப்பு குறித்து பேசப்பட்டது என்றும் சுமந்திரன் தெரிவித்தார். மேலும் புலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பை வரவேற்பதாக தெரிவித்த சுமந்திரன், இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் விடயங்கள் குறித்து இதுவரையில் தமிழ்த்தரப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தாதமை குறித்து சுட்டிக்காட்டியதாகவும் கூறினார். (நன்றி கேசரி ) https://athavannews.com/2021/1241266
  • புலம்பெயர்ந்த தமிழர்களை நோக்கி, ஜனாதிபதியின் அழைப்பு – நிலாந்தன்! ஏறக்குறைய ஒரே காலப்பகுதியில் இரண்டு ராஜபக்ச சகோதரர்களும் மேற்கு நாடுகளுக்கு விஜயம் செய்திருக்கிறார்கள்.ஜனாதிபதி கோட்டபாய அமெரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களை நோக்கி உள்ளக விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அழைப்பு விடுத்திருக்கிறார். உள்நாட்டு பொறிமுறைக்கு ஒத்துழைக்குமாறு உள்நாட்டில் உள்ள மக்கள் பிரதிநிதிகளை நோக்கிக் கேட்காத நாட்டின் தலைவர் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை நோக்கி ஏன் கேட்கிறார் ? சில மாதங்களுக்கு முன் அவருடைய அரசாங்கம் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் சிலவற்றையும் தனி நபர்களையும் தடை செய்து ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தது. ஒரு பெரும் தொற்றுநோய்க் காலத்தில் மேற்குநாடுகளில் வாழும் தமிழர்களின் அமைப்புகள் சில வடக்கு-கிழக்குக்கு உதவ விரும்பியபொழுது அதனை அரசாங்கம் நிராகரித்தது.அந்த உதவிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஊடாக தருவதற்கு அவை முயற்சித்தன.அந்த நாடாளுமன்ற உறுப்பினரும் அந்த உதவிகளை வடக்கு கிழக்குக்கு என்று வாங்காமல் முழு நாட்டுக்குமாக வாங்கினால் நல்லது என்று அந்த அமைப்புகளுக்கு ஆலோசனை கூறியிருக்கிறார்.அவர்களும் சம்மதித்திருக்கிறார்கள்.ஆனால் அந்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துவிட்டது. அதற்கு இரண்டு காரணங்கள் கூறப்பட்டன. ஒன்று அந்த உதவியை பெற்றால் அது புலம்பெயர்ந்த தமிழ் தரப்பை அங்கீகரிப்பது ஆகிவிடும், எனவே அதை செய்ய அரசாங்கம் விரும்பவில்லை என்று கூறப்பட்டது.இரண்டாவது காரணம் தமிழ்த் தரப்புக்கள் கறுப்பு பணத்தை வெள்ளைப் பணமாக்க முயற்சிக்கின்றன என்று ஒரு சந்தேகம். இவ்வாறு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளை தடை செய்து அவற்றிடமிருந்து ஒரு பெரும் தொற்றுநோய் காலத்தில் கிடைக்கவிருந்த மனிதாபிமான உதவிகளையும் நிராகரித்த ஓர் அரசாங்கம் இப்பொழுது அதே புலம்பெயர்ந்த சமூகத்தை நோக்கி என் வேண்டுகோளை விடுகிறது? நீதிக்கான கோரிக்கையைப் பொறுத்தவரை உள்நாட்டுத் தரப்புகளை விடவும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள்தான் அதிகம் வினைத்திறனோடு தொடர்ச்சியாக செயல்படுகிறார்கள் என்று கருதியதால் அரசாங்கம் அவ்வாறு வேண்டுகோளை விடுத்திருக்கலாம்.ஆனால் அரசாங்கம் கேட்பதுபோல உள்நாட்டுப் பொறிமுறையை தமிழ்மக்கள் நம்பக் கூடிய அளவிற்கு இந்த அரசாங்கத்தின் கடந்த சுமார் 20 மாத கால ஆட்சி அமையவில்லை. கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலம் அல்லது ராஜபக்சக்களின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின் கடந்த சுமார்20 மாதங்களைத் தொகுத்துப் பார்த்தால் நமக்குக் கிடைக்கும் சித்திரம் உள்நாட்டு நீதிப் பொறிமுறை குறித்தோ அல்லது நல்லிணக்கத்தை குறித்தோ அல்லது சமாதான சகவாழ்வு குறித்தோ அல்லது இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்தோ அல்லது குறைந்த பட்சம் நிலைமாறுகால நீதி குறித்தோ நம்பிக்கை கொள்ளத்தக்க ஒரு சித்திரம் அல்ல. நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்த ஓர் அரசாங்கம் இது. ஒரு பெரும் தொற்றுநோய் காலத்தில் சிறிய தேசிய இனங்களின் உரிமைகளை அதிகம் புறக்கணித்த ஓர் அரசாங்கம் இது. தனக்குக் கிடைத்த மூன்றிலிரண்டு பெரும்பான்மையை தனிச் சிங்கள பௌத்த மூன்றிலிரண்டு பெரும்பான்மையாக வியாக்கியானம் செய்த ஓர் அரசாங்கம் இது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்து மையத்தில் மேலும் அதிகாரங்களைக் குவித்துக் கொண்ட ஓர் அரசாங்கம் இது கடந்த சுமார் 20 மாதங்களாக நாட்டை முன்னெப்பொழுதையும் விட அதிகரித்த அளவில் ராணுவ மயப்படுத்திய ஓர் அரசாங்கமும் இது. தனிச்சிங்கள மூன்றில் இரண்டு பெரும்பான்மை எனப்படுவது ஏனைய இனங்களின் இருப்பையும் தனித்துவத்தையும் பல்லின சூழலையும் பல்சமய சூழலையும் நிராகரிக்கும் ஒரு கோட்பாடாகும். இவ்வாறு தன்னை தனிச்சிங்கள மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற ஓர் அரசாங்கமாக காட்டிக்கொள்ளும் இந்த அரசாங்கம் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் போன்றவைகள் தொடர்பில் விசுவாசமாக செயற்படும் என்று தமிழர்கள் எப்படி நம்புவது? இந்த 20 மாதங்களில் பின்னணியில் வைத்துப் பார்த்தால் ஜெனீவாவிலும் வொஷிங்டனிலும் அரசுப் பிரதானிகள் தெரிவித்த கருத்துக்களை தமிழ் மக்கள் நம்புவது கடினம்.குறிப்பாக வொஷிங்டனில் ஐநா பொதுச்செயலரை சந்தித்தபோது ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்த கருத்துக்களும் ஐநாவில் அவர் ஆற்றிய உரையும் உள்நாட்டுப் பொறிமுறையை வலியுறுத்துபவைகளாகக் காணப்படுகின்றன.ஆனால் உள்நாட்டு நீதிபரிபாலன கட்டமைப்பின் தோல்வி அல்லது போதாமை காரணமாகத்தான் அனைத்துலக சமூகம் ஐநாவில் கடந்த 2015 செப்டம்பர் மாதம் நிலைமாறுகால நீதிக்கான 30/1தீர்மானத்தை நிறைவேற்றியது.நிலைமாறுகால நீதி எனப்படுவது உள்நாட்டு நீதியின் தோல்வியை அல்லது போதாமையில் விளைவாகத்தான் அனைத்துலக சமூகத்தால் பரிந்துரைக்கப்பட்டது. அத்தீர்மானத்தை கொண்டுவந்த ரணில் விக்கிரமசிங்க தன்னால் முடிந்தளவுக்கு உள்நாட்டு நீதிப்பொறிமுறைக்கு வெள்ளையடிக்க முயற்சித்தார்.அதற்கு கூட்டமைப்பும் மறைமுகமாக ஆதரவை நக்கியது. எனினும் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிலைமாறுகால நீதியின் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரிபால சிறிசேன அக்குழந்தையை அனாதையாக்கினார்.அதன்பின் குற்றுயிராய் கிடந்த அந்தச் சிசுவை தொடர்ந்தும் சாகவிடாமல் ஆனால் அதற்குப் பாலும் கொடாமல் இந்த அரசாங்கம் பராமரித்து வருகிறது.அவ்வாறு ஜெனிவாவில் கணக்கு காட்டுவதற்காக பொய்யாகச் செய்யப்படும் வீட்டுவேலைகளை தொகுத்து கடந்த 31ஆம் திகதி அரசாங்கம் நாட்டிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கும் ஐநாவுக்கும் ஒரு அறிக்கையை அனுப்பியது. இவ்வாறு நிலைமாறுகால நீதியை ஐநாவுக்காகச் செய்யப்படும் வீட்டு வேலையாக காண்பிப்பது என்பது ஏற்கனவே ரணிலின் காலத்திலேயே தொடக்கப்பட்ட ஒரு உத்தி. அதனைத்தான் இந்த அரசாங்கமும் பின்பற்றுகிறது. ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால் ரணில் நிலைமாறுகால நீதியின் பெற்றோரில் ஒருவராகக் காணப்பட்டார்.இந்த அரசாங்கம் அவ்வாறு கூறவில்லை.அதில் ஒரு வெளிப்படைத்தன்மை உண்டு.இந்த அரசாங்கம் நிலைமாறுகால நீதியை ஐநா பரிந்துரைக்கும் வடிவத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக ராஜபக்ச பாணியிலான ஒரு வடிவத்தில் அதை நாட்டில் நடைமுறைப்படுத்தத் தயார் என்று கடந்த கூட்டத்தொடரில் வெளிப்படுத்தியிருக்கிறது. அதேசமயம் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட சான்றுகளை திரட்டுவதற்கான பொறிமுறை தொடர்பில் இந்த அரசாங்கம் ஐநாவோடு முரண்படுகிறது. இப்பொழுது அரசாங்கத்துக்குள்ள தாண்டக் கடினமான தடையும் அதுதான். அப்பொறிமுறை இந்த ஆண்டு முடிவதற்கிடையில் இயங்க தொடங்கும் என்று ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நடந்துமுடிந்த கூட்டத் தொடரில் தனது வாய்மூல அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.அப்பொறிமுறைக்கு தேவையான நிதியில் பெரும் பகுதியை பிரித்தானியாவும் ஆஸ்திரேலியாவும் ஏற்கனவே வழங்கிவிட்டன. அப்பொறிமுறையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று அரசாங்கம் தெளிவாகக் கூறிவிட்டது. ஆனால் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமோ இல்லையோ அந்த பொறிமுறை இயங்கப்போகிறது. அரசாங்கம் அப்பொறிமுறையை நாட்டுக்குள் இயங்க அனுமதிக்குமோ இல்லையோ அது நாட்டுக்கு வெளியிலாவது இயங்கப்போகிறது. எதிர்காலத்தில் படைத்தரப்புக்கு எதிராக குற்றம்சுமத்த தேவையான ஆதாரங்களை திரட்டக்கூடிய ஒரு பொறிமுறையாக அரசாங்கம் அதைப் பார்க்கிறது.எனவே அப்பொறிமுறையை எப்படி உள்நாட்டு மயப்படுத்தி பலவீனப்படுத்தலாம் என்று சிந்திக்கிறது. அதனால்தான் ஜனாதிபதி புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தை நோக்கி அப்படி ஒரு கோரிக்கையை முன்வைத்தார். போர்க்குற்றம் தொடர்பான சான்றுகளை திரட்டு பொறிமுறையை தமிழ் மக்கள் மத்தியில் உள்ள எல்லா தரப்பும் ஒருமித்து ஏற்றுக்கொள்ளவில்லை. அது தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் உண்டு. ஆனால் அரசாங்கம் அப்பொறிமுறையை ஓர் அச்சுறுத்தலாகவே பார்க்கிறது. ஏனெனில் படைத்தரப்பை விசாரிக்க தேவையான சான்றுகளை திரட்டும் பொறிமுறையானது இறுதியிலும் இறுதியாக எதிர்காலத்தில் தமக்கும் எதிரானது என்று இந்த அரசாங்கத்தின் பிரதானிகளை காணப்படும் இரண்டு சகோதரர்களும் கருத இடமுண்டு.குற்றம் சுமத்தப்படும் படையினருக்கு உரிய கட்டளைகளை வழங்கும் அரசியல் தீர்மானங்களை எடுத்தது இந்த இரண்டு சகோதரர்களும்தான்.எனவே அந்தப் பொறிமுறையை எப்படி பலவீனப்படுத்தலாம் என்று அரசாங்கம் சிந்திக்கிறது. அதைப் பலவீனப்படுத்துவது என்றால் ஒப்பீட்டளவில் சாத்தியமான இரண்டு வழிகள் உண்டு. முதலாவது மேற்கு நாடுகளையும் ஐநாவையும் அனுசரித்துப் போய் தனக்குச் சாதகமாக கையாள்வது. இரண்டாவது குற்றச்சாட்டுக்களை தொடர்ச்சியாக முன்நகர்த்திக் கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தை சமாளிப்பது. கையாள்வது. ஐநாவை கையாள்வது என்பது ஐநாவில் அங்கம் வகிக்கும் அரசுகளை கையாள்வதுதான். குறிப்பாக போர்க் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து முன்னிறுத்தும் மேற்கு நாடுகளை சமாளிப்பதுதான். அந்த வேலையை ஏற்கனவே பசில் ராஜபக்ச தொடங்கிவிட்டார். அதில் அவரும் ஜி எல் பீரிசும் ஒப்பீட்டளவில் முன்னேறத் தொடங்கியிருப்பதைத்தான் கடைசியாக நடந்த கூட்டத்தொடரில் மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை காட்டுகிறதா ? மேற்கு நாடுகளை வெற்றிகரமாக கையாண்டால் ஐநாவில் இருந்து அரசாங்கத்திற்கு வரக்கூடிய அழுத்தம் ஓரளவுக்கு குறையும். சீனாவிடம் மட்டும் கடனுதவி பெறுவதற்கு பதிலாக மேற்கு நாடுகளின் நிதி முகவர் அமைப்புகளான உலக வங்கி பன்னாட்டு நாணய நிதியம் போன்றவற்றிடமும் உதவிகளைப் பெறுமாறு ரணில் விக்கிரமசிங்க ஆலோசனைக் கூறியது என்பது covid-19ககுப் பின்னரான துருவமயப்படும் உலகச் சூழலில் இச்சிறிய தீவு சிக்குப்படுவதை தடுக்கும் நோக்கிலானதே.அரசாங்கமும் அது விடயத்தில் பசில் ராஜபக்ச, பீரிஸ், மிலிந்த மொரகொட. போன்றவர்களை முன்னிறுத்தி காய்களை நகர்த்தி வருகிறது இக்காய்நகர்த்தல்களில் ஆகப் பிந்தியதுதான் ஜனாதிபதி புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தை நோக்கி விடுத்த கோரிக்கைகள் ஆகும். இக்கோரிக்கைகளை புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது ? முதலில் ஒன்றை குறிப்பிட வேண்டும் புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகம் என்பது தட்டையான ஒற்றைப் பரிமாணத்தைக் கொண்ட ஒன்றிணைந்த ஒரு கட்டமைப்பு அல்ல.அது பல அடுக்குகளைக் கொண்ட பல்வேறு பிரிவுகளைக் கொண்ட பல்வேறு கருத்துநிலைகளைக் கொண்ட அதிகம் சிதறிக் காணப்படும் ஒரு சமூகம். உலகின் மிகவும் கவர்ச்சி மிக்க ஒரு புலம்பெயர்ந்த சமூகமாக அது காணப்படுகிறது. அதேசமயம் மிகமோசமாக சிதறுண்டிருக்கும் ஒரு சமூகமாகவும் அது காணப்படுகிறது. அதை வெற்றிகரமாகப் பிரித்தாள முடியும் என்பதனை ரணில் விக்கிரமசிங்க நிரூபித்திருந்தார்.அவர் ஒரு தொகுதி புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களையும் தனிநபர்களையும் தடைநீக்கி அரவணைத்தார்.அதில் குறிப்பிடத்தக்க அளவிற்கு வெற்றியுமீட்டினார். முன்னைய ஐநா தீர்மானங்கள் தொடர்பில் புலம்பெயர்ந்த தமிழ்த்தரப்புக்கள் இரண்டுபட்டுநின்றன. ஒரு பகுதி நிலைமாறுகால நீதியை வலியுறுத்தியது. இன்னொரு பகுதி பரிகார நீதியை வலியுறுத்தியது. இவ்வாறு புலம்பெயர்ந்த தமிழ் பரப்பை பிரித்து ஆள்வதில் ரணில் குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேறியும் இருந்தார்.அவரைப்போல புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தை கையாள கோட்டாபாயவால் முடியாது.ஏனெனில் இவரிடம் நல்லிணக்க முகமூடி கிடையாது. எனினும் அப்படி ஒரு முகமூடியை அரசாங்கம் அணிய முயற்சிக்கிறதா என்ற சந்தேகத்தை அதன் அண்மைக்கால செயற்பாடுகள் அதிகப்படுத்துகின்றன. ஐநாவுக்கு கணக்கு காட்டும் கண்துடைப்பான வீட்டு வேலைகள் நல்லிணக்கத்தை உருவாக்காது. அல்லது புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகத்தை பிரித்தாள்வதும் நல்லிணக்கத்தை உருவாக்காது. நிலைமாறுகால நீதியை உள்நாட்டு வடிவத்தில் நடைமுறைப்படுத்தப்போவதாக அரசாங்கம் கட்டியெழுப்பும் பொய்த்தோற்றத்தை அதன் ராஜாங்க அமைச்சர்களில் ஒருவரான லோகான் ரத்வத்த அம்பலப்படுத்தி இருக்கிறார்.அனுராதபுரம் சிறைச்சாலையில் அவர் நடந்துகொண்டவிதம் அரசாங்கத்தின் நல்லிணக்க முகமூடியை கிழிக்கக் கூடியது. அது போலவே நல்லூரில் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்னே நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனை பொலிசார் கையாண்ட விதமும் அரசாங்கத்தின் உள்நாட்டு வடிவிலான நிலைமாறுகால நீதி ஒரு பொய் என்பதை நிரூபித்திருக்கிறதா? https://athavannews.com/2021/1241208
  • புலம்பெயர் அமைப்புகள் மீதான... தடையினை, ஜனாதிபதி நீக்க வேண்டும்- துரைரெட்ணம் கோரிக்கை புலம்பெயர் அமைப்புகளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு முன்னர் அவர்கள் மீதான தடையினை முதலில் ஜனாதிபதி நீக்கவேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.பத்மநாபா மன்ற தலைவருமான இரா.துரைரெட்ணம் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் இரா.துரைரெட்ணம் மேலும் கூறியுள்ளதாவது, “இனவாதங்கள் பேசி தாங்கள் நினைத்ததை செய்துவிடலாம் என்ற இறுமாப்போடு இருந்த நிலையில், ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்றமை பெரிய விடயமாகும். இராஜதந்திர ரீதியாக உள்வாங்கப்பட்டு உள்நுழைவதென்பது பல விடயங்களை சாதகமாக கொண்டுவருவதற்கான சந்தர்ப்பங்களாகும். இதேவேளை புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு தமிழர் விவகாரம் தொடர்பாக அழைப்பு விடுத்தது, இலங்கையில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக அதனை உள்விவகாரம் என்று சொல்வது எந்தளவிற்கு சரியானது என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றது. யுத்தத்தில் தமிழர்களால் இனப்படுகொலை நடந்திருக்கின்றது என்று கூறுகின்ற நிலைமையில் இறந்தவர்களுக்கு மரணப் பத்திரம் வழங்க முடியும் என்று ஜனாதிபதி கூறிய விடயங்கள் தமிழ் மக்கள் மத்தியில் கேள்விக்குறியாக மாறியுள்ளது. ஆனால் பிரச்சினையை தீர்க்கக்கூடிய நிர்வாகக் கட்டமைப்பிற்குள் போனதென்ற விடயத்தில் சில சாதகமான விடயங்கள் இருக்கின்றன. ஆனாலும் அதில் ஆபத்தான விடயங்களும் உள்ளன.ஜனாதிபதி புலம்பெயர் அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்ததற்கு அப்பால் ஜனாதிபதி இலங்கை அரசாங்கம் ஊடாக பல நாடுகளில் செயற்பட்டுவந்த சில அமைப்புகளுக்கு தடைவித்திக்கப்பட்டிருந்தது. புலம்பெயர்ந்த சில அமைப்புகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த விவகாரம் எந்தளவுக்கு நியாயமானது. அந்த புலம்பெயர் அமைப்புகளை தமிழர் விவகாரம் தொடர்பில் பேசுவதற்கு அழைப்பு விடுவது என்பது ஒன்றுக்கொன்று முரண்பட்ட விடயமாகவுள்ளது. ஆகவே, ஜனாதிபதி முதலில் புலம்பெயர்ந்த அமைப்புகள் மீது விதித்துள்ள தடைகளை நீக்குவதன் ஊடாக அந்த அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் உள்ளன. மேலும், விடுக்கப்பட்ட அழைப்புகளுக்கு செயல்வடிங்களை அரசாங்கம் கொடுக்கவேண்டும். இதேவேளை உள்ளகப்பொறிமுறையென்று கூறும் விடயங்களில் தமிழர்களுக்கு பல கேள்விகள் உள்ளது. தமிழர்களைப் பொறுத்தரையில் இறுதி இனப்படுகொலை நடைபெற்ற காலப்பகுதியில் இன்றுள்ள ஜனாதிபதியே பல அதிகாரங்களை கொண்டிருந்தார். இவ்வாறான ஒருவர், தொடர்ச்சியாக உள்ளகப்பொறிமுறைதான் அமுலுக்கு வரவேண்டும் என்று சொல்வதை தமிழ் மக்கள் நிராகரிக்கின்றார்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2021/1241213
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.