Jump to content

ஒருநாளைக்கு இரண்டுவேளை மாத்திரம் சாப்பிடுங்கள் – அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டுகோள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒருநாளைக்கு இரண்டுவேளை மாத்திரம் சாப்பிடுங்கள் – அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டுகோள்

ஒருநாளைக்கு மூன்றுவேளை உண்பவர்கள் இரண்டு நேரமாக அதனை குறைக்கவேண்டும் ; தியாகம் செய்யவேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார வேண்டுகோள் விடுத்துள்ளார்.
jagath-kumara.jpg
தற்போதைய கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்படும் வரை அடுத்தசில நாட்களிற்கு மக்கள் தியாகங்களை செய்யவேண்டும் மூன்றுவேளையும் உணவுண்பதை தவிர்த்து இரண்டுவேளை சாப்பிடவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டின் அனேகமான மக்கள் அவலநிலையில் உள்ளனர் என நான் நினைக்கின்றேன்,எவரும் 2000 ரூபாயுடன் வாழமுடியாது என்பதால் நாங்கள் அது குறித்து கவலையடைந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
2000 ரூபாய்க்கு பதில்; 20,000 ரூபாயை அரசாங்கத்தினால் வழங்க முடியும் என்றால் வழங்கியிருப்போம் என தெரிவித்துள்ள அமைச்சர் நாங்கள் அனைவரும் தியாகங்களை செய்யவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

நாங்களும் எங்கள் சம்பளத்தினை கொவிட் நிதியத்திற்கு வழங்கியிருந்தோம், அனைவரும் இதுவரை ஒருநாளைக்கு மூன்றுவேளை சாப்பிடுபவர்களாகயிருந்தால் அவர்கள் இன்னும் சில நாட்களிற்கு இரண்டுவேளைமாத்திரம் உணவுண்ணவேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்,
அவ்வாறு வாழ்ந்தவாறு இந்த கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தால் நாங்கள் செய்யும் தியாகங்களே எங்கள் பிள்ளைகளின் எதிர்காலமாக அமையும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

https://thinakkural.lk/article/136800

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சரே நாங்க இருவேளை தான் உண்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகள்,வயோதிபர்கள் எப்படி இரண்டு வேளை மட்டும் உண்பது..நடை முறையில் சாத்தியம் இல்லாத ஒன்று.சொல்பவருக்கு மனர்ஸ் இல்லயா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, யாயினி said:

குழந்தைகள்,வயோதிபர்கள் எப்படி இரண்டு வேளை மட்டும் உண்பது..நடை முறையில் சாத்தியம் இல்லாத ஒன்று.சொல்பவருக்கு மனர்ஸ் இல்லயா..?

உங்களுக்கு நீரோ மன்னன் கதை தெரியும் தானே!
பாண் இல்லை மன்னா என்று சொல்ல கேக் சாப்பிட சொன்னவராம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வறுமைகோட்டின்கீழ் உள்ள நாடுகளில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் மூன்று வேளையும் உண்பதில்லை,  உண்ண அவர்கள் வருவாய் இடம் கொடுப்பதில்லை,

இலங்கை ஒரு வறுமைகோட்டின்கீழ் உள்ள நாடு ஏற்கனவே பல்லாயிரம் குடும்பங்கள் இரண்டுவேளைதான் உண்டிருப்பார்கள் , இப்போ அவர்கள் நிலமை பட்டினி சாவின் விளிம்பில் இருக்கும்.

தமிழர்கள் ஓரளவு பரவாயில்லை சனதொகையும் குறைவு வெளிநாட்டில் பத்து குடும்பங்களில் ஒருத்தராவது இருப்பார்கள் நெருக்கடியை சமாளித்து கொள்வார்கள், அதற்காக தமிழர்களில் வறியோர் இல்லையென்று அர்த்தமல்ல, ஒப்பீட்டளவில் அவர்களைவிட  குறைவு.

சிங்களவர்களின் நிலை அப்படியல்ல, இதனால் அதிக பாதிப்படைவது சிங்கள குடும்பங்களே, எம்மைவிட சில மடங்கு சனதொகை அதிகமாக உள்ள அவர்களில் கிராமபுறங்களில் வாழும் பல லட்சம் சிங்களவர் ஒரு றாத்தல் பாணும் பருப்போடும் ஒரு நாளை ஓட்டியவர்கள், அந்த வறுமையின் காரணமாகவே ஆமிக்கும் போனார்கள்.

உலக யுத்தங்களின் போதும், பெரும் பஞ்சத்தின் போதும் அரசுகள் தமது குடிமக்களை அளவாக உண்ணும்படி வேண்டுகோள் விடுத்ததாக அறிந்திருக்கிறோம், உலகின்  ஏழைநாடுகள் பலவே பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் இலங்கையவிட எங்கோ போய்விட்ட இக்காலத்தில்  இலங்கையின் பொருளாதாரம் பங்களாதேசத்திடம் கடன் வாங்கும் நிலையில் போய் நிற்கிறது.

ஒரு காலம் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் பங்களாதேச காரருக்கு நம்மவர்கள்  ஐரோப்பியர் ரேஞ்சுக்கு விலாசம் காட்டியிருப்பார்கள் .இப்போ வங்காளிகள் எங்கு இலங்கையரை கண்டாலும் நாங்கள் உங்கள் நாட்டுக்கு  கடன் கொடுத்திருக்கிறோம் என்று விரட்டி விரட்டி சொல்வார்கள், அவர்கள் பழக்க வழக்கம் அப்படித்தான்.

அருகாமையில் உள்ள உலகின் அதிக சனதொகையை கொண்ட இந்தியா சீனாகூட இப்படி ஒரு கோரிக்கையை தமது குடிமக்களுக்கு விடுத்ததாக நினைவில் இல்லை, மேற்குலகமும் இந்தியாவும் பெரிதாக உதவாமல் ஒதுங்கி கொண்டன இனிமேல் ஆட்சி மாற்றம் ஒன்று இலங்கையில் நிகழும்வரை கண்டுகொள்ளவே மாட்டார்கள்.

 இன்னும் எத்தன காலம் பயங்கரவாதம், புலிகள், யுத்த வெற்றியை வைத்து சிங்களவர் மத்தியில் வண்டி ஓட்டுவீர்கள், இனி அதுபற்றி பேசினால் சிங்களவர்களே கடுப்பாவார்கள்.

ராஜநாகத்தின் வாலை பிடித்து இழுத்தால் அது திரும்பி நம்மைவிட உயரத்திற்கு எழுந்து படம் எடுத்து வந்து கொல்லவரும், அதுபோல்தான் சேர்த்த பழிபாவம் திரும்பி வந்து உங்களைவிட உயரமாய் எழுந்து நிற்கிறது அது இனி உங்களை ஆட்சி கட்டிலில் ஒருபோதும் அமரவிடாது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் அநேகம் பேர் இந்த லொக் டவுனில்  தோட்டம் செய்தல்,கோழி ,ஆடு வளர்த்தல் போன்ற வேலைகளில் இறங்கி விட்டார்கள் ...இதை முதலிலே செய்திருந்தால் பொருளாதாரம் ஓரளவுக்கு தன்னிறைவு அடைந்திருக்கும் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

உங்களுக்கு நீரோ மன்னன் கதை தெரியும் தானே!
பாண் இல்லை மன்னா என்று சொல்ல கேக் சாப்பிட சொன்னவராம்.

இதென்ன கதை வேறை மாதிரி போகுது?   😷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

உங்களுக்கு நீரோ மன்னன் கதை தெரியும் தானே!
பாண் இல்லை மன்னா என்று சொல்ல கேக் சாப்பிட சொன்னவராம்.

ஏராளன், நீரோ மன்னன் றோம் எரியும் போது பிடில் வாசிச்ச ஆள்!

"பாண் இல்லா விட்டால் கேக் சாப்பிடச் சொல்லு!" என்றது பிரெஞ்சு ராணி மேரி அன்ரனெற்! ஆட்சி கவிழ்ந்த பின்னர் இவரது தலையைக் கொய்து பொது இடத்தில் பார்வைக்கு வைத்தார்களாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இதென்ன கதை வேறை மாதிரி போகுது?   😷

நானும் வாசித்த போது யோசிச்சன். 

பிறகு ரோம் எண்டா என்ன, பரிஸ்/வெசாயில்ஸ் என்றால் என்ன எல்லாம் நம்ம ஈயு சொந்தங்கள்தானே எண்டு விடுட்டன்🤣.

54 minutes ago, Justin said:

ஏராளன், நீரோ மன்னன் றோம் எரியும் போது பிடில் வாசிச்ச ஆள்!

"பாண் இல்லா விட்டால் கேக் சாப்பிடச் சொல்லு!" என்றது பிரெஞ்சு ராணி மேரி அன்ரனெற்! ஆட்சி கவிழ்ந்த பின்னர் இவரது தலையைக் கொய்து பொது இடத்தில் பார்வைக்கு வைத்தார்களாம்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இம்மாதிரி வேண்டுகோள் மக்களிடம் வைக்கும் போதெல்லாம் மக்கள் அதனை வரவேற்றதாக வரலாறு எங்கேயும் கிடையாது. 1967ல் பஞ்சம் ஏற்பட்டபோது தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான காங்கிரஸ் (பழைய காங்கிரஸ். அப்போதே இந்திரா காங்கிரஸ் என ஒன்று தோன்றி பின்னர் அதுவே காங்கிரஸ் ஆன கதை வேறு) மக்களை எலிக்கறி சாப்பிடச் சொன்னது, தற்செயலாக அதைத் தொடர்ந்து வந்த பொதுத்தேர்தலில் பேசு பொருளானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

ஏராளன், நீரோ மன்னன் றோம் எரியும் போது பிடில் வாசிச்ச ஆள்!

"பாண் இல்லா விட்டால் கேக் சாப்பிடச் சொல்லு!" என்றது பிரெஞ்சு ராணி மேரி அன்ரனெற்! ஆட்சி கவிழ்ந்த பின்னர் இவரது தலையைக் கொய்து பொது இடத்தில் பார்வைக்கு வைத்தார்களாம்!

இல்லை இந்தக் கதை ஒருதடவை இலங்கை பார்லிமென்டிலும்  ஒலித்தது...என் எம் பெரெரா காலம்...அரிசி இல்லையெண்டால் கோழி சாப்பிடலாமென்றும் சொன்னவை....காலம் நினைவில் இல்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

இதென்ன கதை வேறை மாதிரி போகுது?   😷

அவசரத்திற்கு சரியா நினைவு வரேல்ல!

9 hours ago, Justin said:

ஏராளன், நீரோ மன்னன் றோம் எரியும் போது பிடில் வாசிச்ச ஆள்!

"பாண் இல்லா விட்டால் கேக் சாப்பிடச் சொல்லு!" என்றது பிரெஞ்சு ராணி மேரி அன்ரனெற்! ஆட்சி கவிழ்ந்த பின்னர் இவரது தலையைக் கொய்து பொது இடத்தில் பார்வைக்கு வைத்தார்களாம்!

நன்றி அண்ணை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.