Jump to content

நீட் தேர்வு தற்கொலை: விடிய விடிய படிப்பு; தேய்த்து வைத்த துணிகள்: மாணவர் தனுஷின் கடைசி தருணங்கள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீட் தேர்வு தற்கொலை: விடிய விடிய படிப்பு; தேய்த்து வைத்த துணிகள்: மாணவர் தனுஷின் கடைசி தருணங்கள்

  • ஏ எம் சுதாகர்
  • பிபிசி தமிழுக்காக
36 நிமிடங்களுக்கு முன்னர்
மாணவர் தனுஷுக்கு வைக்கப்பட்டுள்ள அஞ்சலி பதாகை
 
படக்குறிப்பு,

மாணவர் தனுஷுக்கு வைக்கப்பட்டுள்ள அஞ்சலி பதாகை

நீட் தேர்வில் இரு முறை தோல்வியை கண்ட மேட்டூரை அடுத்த கூலையூரைச் சேர்ந்த மாணவன் தனுஷ் நேற்று (12-09-2021) நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்தாக காவல்துறை தெரிவிக்கிறது.

சேலம் மாவட்டம் மேட்டூரைச் அடுத்த கூலையூரைச் சேர்ந்த பி.வி.சி பைப் தயாரிக்கும் தனியார் கம்பெனி ஆபரேட்டர் சிவகுமார் இவரது மனைவி ரேவதி இவர்களுக்கு நிஷாந்த், தனுஷ் என இரு மகன்கள் உள்ளனர்.

நிஷாந்த் தனியார் கல்லூரியில், பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.தனுஷ் மேட்டூர் மாசிலாபாளைத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து முடித்துவிட்டு, தொடர்ந்து நீட் தேர்வு எழுதினார் ஆனால் இரு முறை நீட் தேர்வு எழுதியும் தோல்வி அடைந்துள்ளார்

இந்நிலையில் நேற்று மூன்றாவது முறையாக மேச்சேரி காவேரி கல்லூரியில் நீட் தேர்வு எழுதுவதற்காக தயாராகிக் கொண்டிருந்த போது, இதில் மீண்டும் தோல்வி அடைந்து விடுவோமோ என அச்சமடைந்து வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என அவரது குடும்பத்தினரும், காவல்துறையினரும் கூறுகின்றனர்..

தற்கொலை வழக்கு

தனுஷின் உடலை மீட்ட காவல்துறையினர், இது குறித்து கருமலைக்கூடல் போலீசார் தற்கொலை என வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் மாணவன் இரு முறை நீட் தேர்வில் தோல்வியுற்ற நிலையில் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று தேர்வு எழுதி மீண்டும் தோல்வி அச்சத்தில் இது போன்ற தவறான முடிவெடுத்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது என இது குறித்து காவல்துறையினர் கூறினர்.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வு காரணமாக தற்கொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அனிதா தற்கொலை தொடங்கி வரிசையாக ஒவ்வோர் ஆண்டும் மாணவர்கள் நீட் தேர்வு அச்சத்தில் பலியாகி வருகிறார்கள்.

இதனால் தமிழ்நாடு அரசு நீட் தேர்வை ரத்து செய்யும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக ஏற்கனவே முன்னாள் நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு அறிக்கை சமர்பிக்கப்பட்டு இருக்கிறது. இன்று சட்டசபையில் இதற்காக சட்ட முன்வரைவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தனுஷின் தந்தை சிவகுமார்

தனுஷின் தந்தை சிவக்குமாரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம் "விடிய விடிய படிச்சான்.. இரண்டு முறை தோல்வி அடைந்த அச்சத்தில் இப்படி செய்து கொண்டான். பரிட்ச்சைக்கு போக டிரஸ்ல்லாம் தேச்சி வச்சிருந்தோம்... ஊரெல்லாம் நடந்தது இப்ப என் வீட்லேயும் நடக்கும்னு கனவுலயும் நினைக்கல" என கண்ணீர் விடுகிறார்.

உறவினர்கள் என்ன சொல்கிறார்கள்?

ஏற்கனவே இரண்டு முறை தோல்வி அடைந்ததால் மன வருத்தத்தில் இருந்தான். டாக்டர் படிப்பு படிக்க வேண்டும் என்று அவனே இஷ்டப்பட்டுதான் படித்தான். நேற்று 12 மணி வரை படித்தான் 12 மணி பிறகு படுக்கச் சென்றான். 3 மணியிருக்கும் எழுந்து போய் தற்கொலை செய்து கொண்டான். இது வரை நீட் தேர்வுக்கு 13 மாணவர்கள் தமிழ்நாட்டில் இறந்து விட்டதாக சொல்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு நீட் வேண்டாம் என தனுஷின் சித்தப்பா கூறினார். இவர் பெயரும் சிவகுமார்தான்.

ஜே.ஈ.ஈ தேர்வில் தேர்ச்சி பெற்றான் அதேபோல ஆர்கிடெக்ட் தேர்விலும் தேர்ச்சி பெற்றான். ஆனால் அவனுக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்ற எண்ணம் தான் இருந்தது இந்நாட்டில் இனி யாரும் நீட் தேர்வில் சாகக்கூடாது என்றார் அவரது தாய் மாமா முருகன்.

எடப்பாடி பழனிசாமி அஞ்சலி

தனுஷுக்கு அஞ்சலி செலுத்தும் எடப்பாடி பழனிசாமி
 
படக்குறிப்பு,

தனுஷுக்கு அஞ்சலி செலுத்தும் எடப்பாடி பழனிசாமி

மாணவனின் சடலம் கூழையூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. அங்கு ஏராளமானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் மாணவன் தனுஷ் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேரடியாகச் சென்று மாணவனின் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து மாணவனின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார். பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசுவதை தவிர்த்த எடப்பாடி பழனிசாமி புறப்பட்டு சென்றார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர் செம்மலை வந்திருந்தார் அவர் செய்தியாளர்களிடம் "மத்திய அரசு நீட் தேர்வு நடத்துவதை கைவிடாது என்பதை உனர்ந்து கொண்ட நாங்கள் நீட் தேர்வு குறித்து பயிற்சி மையங்கள் அமைத்து மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்தோம். ஆனால் திமுகவினர் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை நீக்குகோம் என வாக்குறுதி கொடுத்தனர். அதை நம்பி மாணவர்களும் இருந்தனர். தற்போது தேர்வு நடைபெறும் என்றவுடன் இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன" என்றார்.

அஞ்சலி செலுத்தும் உதயநிதி
 
படக்குறிப்பு,

அஞ்சலி செலுத்தும் உதயநிதி

அஞ்சலி செழுத்திய பின் உதயநிதி ஸ்டாலின் ரூபாய் 10 லட்சம் நிதி உதவியை பெற்றோரிடம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது "நீட்தேர்வு நிரந்தரமாக வேண்டாம், நீட் தேர்வால் ஒட்டுமொத்த மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால்தான் திமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றும், இதற்கு முயற்சி எடுப்போம் என்றும் தெரிவித்து இருந்தோம்" என கூறினார்.

இது ஒரு மாணவரின் பிரச்னை மட்டுமல்ல, எல்லா வீட்டு மாணவர்களின் பிரச்னையாகும். எல்லா அரசியல்வாதிகளின் குழந்தைகளும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். எனவேதான் நீட்தேர்வு வேண்டாம் என தொடர்ந்து ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். திமுக ஆட்சி மாணவர்களுக்கு துணையாக இருக்கும். எனவே மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை. யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/india-58543614

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் இன்னொரு நீட் தேர்வு தற்கொலை: பள்ளியில் முதலிடம் பெற்ற அரியலூர் மாணவி கனிமொழி மரணம்

2 மணி நேரங்களுக்கு முன்னர்
அரியலூர் மாணவி கனிமொழி

நீட் தேர்வு சரியாக எழுதவில்லையோ என்ற அச்சத்தில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் 12ஆம் வகுப்பில் 600க்கு 562.28 மதிப்பெண்களைப் பெற்றிருந்தார்.

அரியலூர் சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயலட்சுமி - கருணாநிதி தம்பதியினர். இருவரும் வழக்கறிஞர்களாகப் பணியாற்றிவருகின்றனர். இவர்களுக்கு கனிமொழி, கயல்விழி என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் அரியலூரில் உள்ள துளாரங்குறிச்சியில் வசித்துவந்தனர்.

முதல் மகள் கயல்விழி பள்ளிப்படிப்பை முடித்து செவிலியருக்கான படிப்பை படித்து வருகிறார். இரண்டாவது மகள் கனிமொழி ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்புவரை படித்தார். அதற்குப் பிறகு நாமக்கல்லில் உள்ள க்ரீன் கார்டன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் படித்து, 12ஆம் வகுப்புத் தேர்வில் 600க்கு 562.28 மதிப்பெண்களைப் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.

இதையடுத்து மருத்துவக் கல்லூரியில் சேர விரும்பிய கனிமொழி, கடந்த 12ஆம் தேதி தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வை எழுதினார். ஆனால், அந்தத் தேர்வை சரியாக எழுதவில்லையோ என கனிமொழி மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

கனிமொழியை பெற்றோர் தொடர்ந்து தேற்றிவந்தனர். திங்கட்கிழமையன்று பெற்றோர் இருவரும் உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றனர். இரவு எட்டு மணியளவில் வீட்டிற்குத் திரும்பிவந்தபோது, மாணவி கனிமொழி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதற்குப் பிறகு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இப்போது மாணவியில் உடல் அவரது சொந்த ஊரான சாத்தம்பாடிக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

மாணவர் தனுஷுக்கு வைக்கப்பட்டுள்ள அஞ்சலி பதாகை
 
படக்குறிப்பு,

மாணவர் தனுஷுக்கு வைக்கப்பட்டுள்ள அஞ்சலி பதாகை

கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று சேலம் மாவட்டம் கூழையூரைச் சேர்ந்த விவசாயி சிவக்குமாரின் இரண்டாவது மகன் தனுஷ் ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி அடையாத நிலையில், இந்த முறை அந்தத் தேர்வை எதிர்கொள்ள அச்சப்பட்டு தேர்வு நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

திங்கட்க்கிழமையன்று, நீட் தேர்வு இல்லாமல், 12 வகுப்புத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மாணவர்களை மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கையை நடத்துவதற்கான சட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது.

இந்தச் சட்டம் தற்போது ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே இந்தச் சட்டம் அமலுக்கு வரும்.

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளுக்கான நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இதுவரை 10க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் தற்கொலைசெய்துகொண்டுள்ளனர்.

https://www.bbc.com/tamil/india-58555829

Link to comment
Share on other sites

இவ்வாறு தேர்வில் சரியான மதிப்பெண் கிடைக்கவில்லை, கிடைக்காது என்ற பயம் போன்ற காரணங்களால் தற்கொலை செய்கின்ற மாணவர்களின் கடைசித் தருணங்கள், படங்கள், அனுதாபங்கள் எல்லாம் போட்டு பிரபலப்படுத்தினால் மேலும் மேலும் தற்கொலைகளைத் தான் தூண்டும்.

பரீட்சைகள் வாழ்வின் முடிவல்ல என்ற தெளிவு பிள்ளைகளுக்கு இருக்க வேண்டும். அதை பெற்றோர்கள் கொடுக்க வேண்டும். இல்லாவிடின் தற்கொலைகளை தடுக்க முடியாது. 

ஒரு கேள்வி இருக்கின்றது.

தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய மானிலங்கள் நீட் தேர்வினை எவ்வாறு எதிர்கொள்கின்றன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நிணைக்கிறேன், இந்த NEET பரீட்சை என்பது, பிரிட்டனில் மருத்துவ மாணவர்களுக்கான UK CAT மற்றும் B MAT பரீட்சை போன்றவை தான் என்று.

அவை aptitude பரீட்சைகள்.

அப்படியாயின் பரீட்சை தேவையான ஒன்று.

ஆனாலும், வட இந்தியரை, தமிழகத்தின் மருத்துவ கல்லூரியினுள், பம்மாத்து வேலைகள் மூலம், தள்ள பயன்படுத்தப்படுமாயின் தவறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

நான் நிணைக்கிறேன், இந்த NEET பரீட்சை என்பது, பிரிட்டனில் மருத்துவ மாணவர்களுக்கான UK CAT மற்றும் B MAT பரீட்சை போன்றவை தான் என்று.

அவை aptitude பரீட்சைகள்.

அப்படியாயின் பரீட்சை தேவையான ஒன்று.

ஆனாலும், வட இந்தியரை, தமிழகத்தின் மருத்துவ கல்லூரியினுள், பம்மாத்து வேலைகள் மூலம், தள்ள பயன்படுத்தப்படுமாயின் தவறு.

தவறு:

There are a total of 180 questions asked in the exam, 45 questions each from Physics, Chemistry, Botany and Zoology. Each correct response fetches 4 marks and each incorrect response gets -1 negative marking. The exam duration is 3 hours (180mins). The exam is of 720 marks (maximum marks).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவராக அல்லது விமானி போன்ற தொழில்கல்வியை தேர்ந்தெடுப்போர் மனரீதியாக வலிமையுடையவராக இருக்க வேண்டும். மனவலிமை இல்லா விட்டால் எப்படி இந்த தொழிலை செய்வது?

தற்கொலை தவறான முடிவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, நிழலி said:

இவ்வாறு தேர்வில் சரியான மதிப்பெண் கிடைக்கவில்லை, கிடைக்காது என்ற பயம் போன்ற காரணங்களால் தற்கொலை செய்கின்ற மாணவர்களின் கடைசித் தருணங்கள், படங்கள், அனுதாபங்கள் எல்லாம் போட்டு பிரபலப்படுத்தினால் மேலும் மேலும் தற்கொலைகளைத் தான் தூண்டும்.

பரீட்சைகள் வாழ்வின் முடிவல்ல என்ற தெளிவு பிள்ளைகளுக்கு இருக்க வேண்டும். அதை பெற்றோர்கள் கொடுக்க வேண்டும். இல்லாவிடின் தற்கொலைகளை தடுக்க முடியாது. 

ஒரு கேள்வி இருக்கின்றது.

தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய மானிலங்கள் நீட் தேர்வினை எவ்வாறு எதிர்கொள்கின்றன?

நீங்கள் சொல்வது 100% சரி, பிள்ளைகளுக்கு கற்று முன்னேற பல வழிகள் இருப்பதை பெற்றோர் ஆசிரியர் உணர்த்த வேண்டும்.
ஆனால் இதுக்குள்ளும் சாக்கடை அரசியல் செய்கிறார்களே!

தவறான விடைக்கு புள்ளி கழித்தல் முறை இருக்காம். இது கொஞ்சம் பிஜேபி வேலை மாதிரி இருக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய மானிலங்கள் நீட் தேர்வினை எவ்வாறு எதிர்கொள்கின்றன?

நியாயமன கேள்வி 👍

தமிழ்நாட்டில் இதை வைத்து நன்றாக அரசியல் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

இவ்வாறு தேர்வில் சரியான மதிப்பெண் கிடைக்கவில்லை, கிடைக்காது என்ற பயம் போன்ற காரணங்களால் தற்கொலை செய்கின்ற மாணவர்களின் கடைசித் தருணங்கள், படங்கள், அனுதாபங்கள் எல்லாம் போட்டு பிரபலப்படுத்தினால் மேலும் மேலும் தற்கொலைகளைத் தான் தூண்டும்.

பரீட்சைகள் வாழ்வின் முடிவல்ல என்ற தெளிவு பிள்ளைகளுக்கு இருக்க வேண்டும். அதை பெற்றோர்கள் கொடுக்க வேண்டும். இல்லாவிடின் தற்கொலைகளை தடுக்க முடியாது. 

ஒரு கேள்வி இருக்கின்றது.

தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய மானிலங்கள் நீட் தேர்வினை எவ்வாறு எதிர்கொள்கின்றன?

பிற மாநிலங்களில் அதுவும் வட மாநிலங்களில் இதை சரியாக எதிர் கொள்கிறார்கள் ...வரவேற்கிறார்கள் என்று ராஜவன்னியன் ஒரு திரியில் [அதுவும் ஒரு தற்கொலை திரியாய்த் தான் இருக்கும் ] பதில் சொல்லி இருந்தார் .

ஒவ்விரு மாநிலத்திற்கும் வித்தியாசமான பாட திட்டம் அவர்களுடையது ... மாநிலங்களவில் 12 வகுப்பில் நல்ல புள்ளிகள் எடுத்தாலும்  மத்திய அரசின் இந்த பொது பரீட்சையில் பாசகா விட்டால் யூனிக்கு போக முடியாது ....மருத்துவம் படிக்க முடியாது 
 
Link to comment
Share on other sites

5 hours ago, நிழலி said:

பரீட்சைகள் வாழ்வின் முடிவல்ல என்ற தெளிவு பிள்ளைகளுக்கு இருக்க வேண்டும். அதை பெற்றோர்கள் கொடுக்க வேண்டும். இல்லாவிடின் தற்கொலைகளை தடுக்க முடியாது

சிறந்த கருத்து நிழலி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

தவறு:

There are a total of 180 questions asked in the exam, 45 questions each from Physics, Chemistry, Botany and Zoology. Each correct response fetches 4 marks and each incorrect response gets -1 negative marking. The exam duration is 3 hours (180mins). The exam is of 720 marks (maximum marks).

உப்பிடி நீங்களே பிழை திருத்தம் செய்தால் - பிறகு நான் என்ன செய்யுறது🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலை ஒரு முடிவல்லத்தான். மாணவர்களுக்கு தெம்பூட்ட வேண்டும்தான்.

ஆனால் இது சாதாரண பரீட்சைக்கு, பரீட்சை ரிசல்டுக்கு பயப்படும் மாணவர் மன பிரச்சனை அல்ல. அதை விட கொடிய சாதி, தீண்டாமை, வர்க பின்ணணி கொண்டது.

நீட்டுக்கு முன் தமிழ்நாட்டின் மருத்துவ கல்வித்தரம் என்ன அதளபாதாலத்திலா இருந்தது ? அப்போதே லண்டனில் இருந்து தமிழ்நாடு போய் சிகிச்சை செய்தோரை எனக்கு தெரியும். 

நீட்டுக்கு பின் அது என்ன பல மடங்கு முன்னேறி விட்டதா?

இந்திய அரசியல் சட்டமும், தமிழ்நாட்டில் அமல்படுத்தபட்டுள்ளதுமான இட ஒதுக்கீட்டை பின் வழியால் இல்லாமல் செய்யும் திட்டத்தின் ஓரங்கமே நீட்.

இவ்வாறு ஒரு இலகு சமன்பாட்டை போட எப்போதும் முடியாதாகினும், ஏழைகள் அநேகர் தாழ்த்தபட்ட சமூகத்தை சார்ந்தவர்கள். 

ஆனால் நீட் தேர்வானது - அதன் முறையானது - தொடர்சியான கோச்சிங், பயிற்சி பரீட்சைகள், அதி உச்ச தயார்படுத்தல் மூலமே வெற்றி கொள்ள தக்கதாக இருக்கிறது.

ஒரு முறை தயார் படுத்த 5-10 லட்சம் தேவை படும் என்கிறார்கள்.

எத்தனை திறமையாக இருந்தாலும் எவ்வளவு புள்ளிகள் எடுதாலும் ஏழைகள் இந்த கோச்சிங் இல்லாமல் இதில் பாஸ் பண்ணுவது கடினம். கிட்டதட்ட முடியாது.

இதை முன்னர் தமிழ் நாட்டில் இருந்த சிஸ்டர்துடன் ஒப்பிடும் போது - அதில் கோச்சிங், பிரத்யோக வகுப்புகளால் அதிக தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை.

சுருங்க சொல்லின்,

தமிழ் நாட்டின் முன்னைய சிஸ்டம் hard work ஐ அடிப்படையாக கொண்டது.

நீட் smart work ஐ அடிப்படையாக கொண்டது.

பழைய சிஸ்டத்தில் கடும் உழைப்பை போட்டு தேறலாம்.

ஆனால் நீட்டில் எப்படி சுளிப்பது என்பதை யாராவது சொல்லி தந்து, தொடர் பயிற்சியும் தரவேண்டும். அதற்குத்தான் 5 லட்சம்.

இதில்தான் ஏழைகளும், தாழ்தப்பட்டவர்களும் தள்ளி வைக்கப்படுகிறார்கள்.

இரெண்டுமே வித்தியாசமான பரீட்சை முறைகள். தவிர ஒன்று நல்லது மற்றையது சரியில்லை என்பதல்ல.

அப்படி என்றால் நீட்டுக்கு முன் தமிழ்நாட்டு வைத்தியர்களும், வைத்திய துறையும் மோசமானதாக இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லை. இந்தியாவில் எப்போதும் வைத்தியத்தில் முதன்மை மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.

இதுதான் நீட் ஏன் தமிழ்நாட்டுக்கு உகந்ததல்ல என்பதன் விளக்கம்.

அடுத்து - கல்வி ஆரம்பத்தில் மாநில பட்டியலில் இருந்தது. ஏனென்றால் இந்தியா ஒரு ஒன்றியம். ஆனால் 42ம் சட்ட திருத்தம் மூலம் இது பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது.

இது மாநில சுயாட்சி தத்துவத்துக்கு எதிரானது. தமிழ் நாட்டில் இருப்பது ஒரு மாநில அரசு. மாகாண சபை அல்ல. அது தனது கல்வி கொள்கையை தீர்மானிக்கும் வல்லமை உடையதாக இருக்க வேண்டும்.

குறிப்பாக - மாநில அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையை மத்திய அரசின் நீட் மூலம் நீர்த்து போக செய்ய முயலும் போது.

அடுத்து - அரசியல் (நினைவில் இருந்து எழுதுகிறேன், தவறு இருந்தால் சுட்டவும்).

இது காங்கிரஸ்(திமுக கூட்டணி) காலத்தில் முயற்சித்து பின் கைவிடப்பட்டது.

ஆனால் பின்னர் பாஜக ஆட்சியில் நிறைவேறியது.

2016இல் இந்த சட்டம் ராஜ்யசபாவில் நிறைவேறும் போது, திமுகவிற்கு அங்கே சீட் இல்லை. ஆனால் லோக்சபாவில் எதிர்த்து வாக்களித்தது.  

அப்போ பாஜக விற்கு ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லை.  அதிமுக எதிர்த்து வாக்களித்திருந்தால் சட்டம் ராஜ்யசபாவில் தோத்திருக்கும். ஆனால் அதிமுக வெளிநடப்பு செய்ததால் - சட்டமூலம் சட்டமாகியது.

முடிவாக,

இது வெறும் சோதனை பெயிலான மாணவர் தற்கொலை செய்யும் விடயம் அல்ல.

இதிலே அரசியல் இருக்கிறது. இட ஒதுக்கீட்டை மறைமுகமாக தோற்கடிக்கும் சதி இருக்கிறது. ஏழைகள் டாக்டருக்கு படிக்கமுடியாது தடுக்கும் வர்க நலன் இருக்கிறது. மாநிலங்களின் உரிமைகளை பறித்து, ஒற்றை இந்தியாவக்கும் சங்பரிவாரின் திட்டமும் இருக்கிறது.

ஆகவே இது எதிர்கப்பட வேண்டியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

நீங்கள் சொல்வது 100% சரி, பிள்ளைகளுக்கு கற்று முன்னேற பல வழிகள் இருப்பதை பெற்றோர் ஆசிரியர் உணர்த்த வேண்டும்.
ஆனால் இதுக்குள்ளும் சாக்கடை அரசியல் செய்கிறார்களே!

தவறான விடைக்கு புள்ளி கழித்தல் முறை இருக்காம். இது கொஞ்சம் பிஜேபி வேலை மாதிரி இருக்கு!

தவறான விடைக்கு ஒரு புள்ளி கழிக்கிறார்கள் (-1). ஆனால், பதிலெதுவும் போடாது விட்டாலோ, இரண்டு பதில்களைக் கொடுத்தாலோ "0". எனவே பரீட்சை முறையில் சதியில்லை! நோக்கம் கோசான் சொல்லும் உள் நோக்கமாக இருந்தால் சதி போலத் தான் தெரிகிறது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

பிற மாநிலங்களில் அதுவும் வட மாநிலங்களில் இதை சரியாக எதிர் கொள்கிறார்கள் ...வரவேற்கிறார்கள் என்று..

வட மானிலங்கள் மட்டுமல்ல தமிழ்நாடு தவிர்ந்த தென்மனிலத்தவர்களும் இந்த பரிட்சை எழுதுகிறார்கள், வரவேற்கிறார்கள், எதிர்ப்பு இல்லை. எனக்கு மாணவர் விசாவில் உள்ள உண்மையான தெலுங்கர் ஆந்திரா மனிலத்தை சேர்ந்தவரை தெரியும் அவரிடம் கேட்ட போதும் நல்ல திட்டம் என்றே சொன்னார். வறுமை சாதி வெறி என்றாலும் தமிழ்நாட்டைவிட மற்ற மானிலங்களில் தானே இன்னும் அதிகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீட் நல்லதோ கெட்டதோ எனக்குத் தெரியாது. எனக்கு விளங்கியவரையில் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகள் அதிகம். இந்த மருத்துவக் கல்லூரிகளுக்குள் தமிழகம் அல்லாத மற்ற மாநிலத்துக்காரரை புகுத்துவதற்கான தேர்வுதான் நீட் என நினைக்கின்றேன். அதனால் மற்ற மாநிலத்துக்காரர்கள் இதை எதிர்க்க மாட்டார்கள் மாறாக வரவேற்பார்கள். கிட்டத்தட்ட எங்கட தரப்படுத்தல் மாதிரி என எண்ணுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

தற்கொலை ஒரு முடிவல்லத்தான். மாணவர்களுக்கு தெம்பூட்ட வேண்டும்தான்.

ஆனால் இது சாதாரண பரீட்சைக்கு, பரீட்சை ரிசல்டுக்கு பயப்படும் மாணவர் மன பிரச்சனை அல்ல. அதை விட கொடிய சாதி, தீண்டாமை, வர்க பின்ணணி கொண்டது.

நீட்டுக்கு முன் தமிழ்நாட்டின் மருத்துவ கல்வித்தரம் என்ன அதளபாதாலத்திலா இருந்தது ? அப்போதே லண்டனில் இருந்து தமிழ்நாடு போய் சிகிச்சை செய்தோரை எனக்கு தெரியும். 

நீட்டுக்கு பின் அது என்ன பல மடங்கு முன்னேறி விட்டதா?

இந்திய அரசியல் சட்டமும், தமிழ்நாட்டில் அமல்படுத்தபட்டுள்ளதுமான இட ஒதுக்கீட்டை பின் வழியால் இல்லாமல் செய்யும் திட்டத்தின் ஓரங்கமே நீட்.

இவ்வாறு ஒரு இலகு சமன்பாட்டை போட எப்போதும் முடியாதாகினும், ஏழைகள் அநேகர் தாழ்த்தபட்ட சமூகத்தை சார்ந்தவர்கள். 

ஆனால் நீட் தேர்வானது - அதன் முறையானது - தொடர்சியான கோச்சிங், பயிற்சி பரீட்சைகள், அதி உச்ச தயார்படுத்தல் மூலமே வெற்றி கொள்ள தக்கதாக இருக்கிறது.

ஒரு முறை தயார் படுத்த 5-10 லட்சம் தேவை படும் என்கிறார்கள்.

எத்தனை திறமையாக இருந்தாலும் எவ்வளவு புள்ளிகள் எடுதாலும் ஏழைகள் இந்த கோச்சிங் இல்லாமல் இதில் பாஸ் பண்ணுவது கடினம். கிட்டதட்ட முடியாது.

இதை முன்னர் தமிழ் நாட்டில் இருந்த சிஸ்டர்துடன் ஒப்பிடும் போது - அதில் கோச்சிங், பிரத்யோக வகுப்புகளால் அதிக தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை.

சுருங்க சொல்லின்,

தமிழ் நாட்டின் முன்னைய சிஸ்டம் hard work ஐ அடிப்படையாக கொண்டது.

நீட் smart work ஐ அடிப்படையாக கொண்டது.

பழைய சிஸ்டத்தில் கடும் உழைப்பை போட்டு தேறலாம்.

ஆனால் நீட்டில் எப்படி சுளிப்பது என்பதை யாராவது சொல்லி தந்து, தொடர் பயிற்சியும் தரவேண்டும். அதற்குத்தான் 5 லட்சம்.

இதில்தான் ஏழைகளும், தாழ்தப்பட்டவர்களும் தள்ளி வைக்கப்படுகிறார்கள்.

இரெண்டுமே வித்தியாசமான பரீட்சை முறைகள். தவிர ஒன்று நல்லது மற்றையது சரியில்லை என்பதல்ல.

அப்படி என்றால் நீட்டுக்கு முன் தமிழ்நாட்டு வைத்தியர்களும், வைத்திய துறையும் மோசமானதாக இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லை. இந்தியாவில் எப்போதும் வைத்தியத்தில் முதன்மை மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.

இதுதான் நீட் ஏன் தமிழ்நாட்டுக்கு உகந்ததல்ல என்பதன் விளக்கம்.

அடுத்து - கல்வி ஆரம்பத்தில் மாநில பட்டியலில் இருந்தது. ஏனென்றால் இந்தியா ஒரு ஒன்றியம். ஆனால் 42ம் சட்ட திருத்தம் மூலம் இது பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது.

இது மாநில சுயாட்சி தத்துவத்துக்கு எதிரானது. தமிழ் நாட்டில் இருப்பது ஒரு மாநில அரசு. மாகாண சபை அல்ல. அது தனது கல்வி கொள்கையை தீர்மானிக்கும் வல்லமை உடையதாக இருக்க வேண்டும்.

குறிப்பாக - மாநில அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையை மத்திய அரசின் நீட் மூலம் நீர்த்து போக செய்ய முயலும் போது.

அடுத்து - அரசியல் (நினைவில் இருந்து எழுதுகிறேன், தவறு இருந்தால் சுட்டவும்).

இது காங்கிரஸ்(திமுக கூட்டணி) காலத்தில் முயற்சித்து பின் கைவிடப்பட்டது.

ஆனால் பின்னர் பாஜக ஆட்சியில் நிறைவேறியது.

2016இல் இந்த சட்டம் ராஜ்யசபாவில் நிறைவேறும் போது, திமுகவிற்கு அங்கே சீட் இல்லை. ஆனால் லோக்சபாவில் எதிர்த்து வாக்களித்தது.  

அப்போ பாஜக விற்கு ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லை.  அதிமுக எதிர்த்து வாக்களித்திருந்தால் சட்டம் ராஜ்யசபாவில் தோத்திருக்கும். ஆனால் அதிமுக வெளிநடப்பு செய்ததால் - சட்டமூலம் சட்டமாகியது.

முடிவாக,

இது வெறும் சோதனை பெயிலான மாணவர் தற்கொலை செய்யும் விடயம் அல்ல.

இதிலே அரசியல் இருக்கிறது. இட ஒதுக்கீட்டை மறைமுகமாக தோற்கடிக்கும் சதி இருக்கிறது. ஏழைகள் டாக்டருக்கு படிக்கமுடியாது தடுக்கும் வர்க நலன் இருக்கிறது. மாநிலங்களின் உரிமைகளை பறித்து, ஒற்றை இந்தியாவக்கும் சங்பரிவாரின் திட்டமும் இருக்கிறது.

ஆகவே இது எதிர்கப்பட வேண்டியது.

ஆனால் சமூக நீதி பேசும் திமுகவின் கூட்டணி காங்கிரஸ் ஆட்சியில் தான் சட்டம் உருவாக்கப்பட்டது. பிஜேபி அமுல்படுத்தியது.
மாநில அரசின் கீழ் இருந்து கல்வியை மத்தியின் கீழ் கொண்டு போகும்போது வாளாவிருந்த மாநில அரசு யாருடையது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

ஆனால் சமூக நீதி பேசும் திமுகவின் கூட்டணி காங்கிரஸ் ஆட்சியில் தான் சட்டம் உருவாக்கப்பட்டது. பிஜேபி அமுல்படுத்தியது.
மாநில அரசின் கீழ் இருந்து கல்வியை மத்தியின் கீழ் கொண்டு போகும்போது வாளாவிருந்த மாநில அரசு யாருடையது?

1. நீட் முதன்முதலில் திமுக-காங் கூட்டணி ஆட்சியில்தான் உருவாக்கப்பட்டது என்பதை மேலே சொல்லியுள்ளேன். ஆனால் வழக்குகள் போடப்பட்டதால் அப்போ அது சட்டமாகவில்லை.

2. வடிவாக தெரியவில்லை - இந்த மாற்றம் கொண்டு வரப்பட்ட சமயம் - திமுக ஆட்சி கலைக்கப்பட்டு, தமிழகம் ஆளுனர் ஆட்சியில் இருந்துள்ளது. காங்கும் திமுகவும் அப்போ பரம எதிரிகள். ஆகவே இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து இருக்கும் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீட் எழுதிய மாணவர்களின்.. மன அழுத்தத்தை போக்க புதிய திட்டம்.. அமைச்சர் மா.சு தொடங்கி வைத்தார்

VigneshkumarUpdated: Wed, Sep 15, 2021, 13:07 [IST]

சென்னை: நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் அவர்களுக்குத் தொலைப்பேசி வழியே ஆலோசனை வழங்கும் திட்டத்தை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

மாணவர் தற்கொலை

இருப்பினும், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு தர முடியாது என்பதில் மத்திய அரசு திட்டவட்டமாக உள்ளது. இந்தச் சூழலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 1.10 லட்சம் மாணவர்கள் எழுதினர். நீட் தேர்வு நடைபெற்ற அன்று காலை அச்சம் காரணமாக தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

மன அழுத்தம்

அதேபோல நீட் எழுதிய பிறகு, குறைவான மதிப்பெண்கள் பெற்றுவிடுவோமோ என்ற அச்சத்தில் நேற்று மாணவி கனிமொழி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தொடர்ச்சியாக நிகழும் மாணவர் தற்கொலை மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் மத்தியில் ஏற்படும் அழுத்தம் காரணமாகவே தற்கொலைகள் நடைபெறுகின்றன.

புதிய திட்டம்

இந்நிலையில், மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்த, அவர்களுக்கு மன நல ஆலோசனை கொடுக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை இன்று காலை 10.30 மணியளவில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள 104 மருத்துவ தகவல் மற்றும் மன நல ஆலோசனை மையத்தில் (104 call centre) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா .சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

நீட் விலக்கு தீர்மானம்

முன்னதாக தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற தீர்மானம் கடந்த திங்கள்கிழமை சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த இந்த தீர்மானத்திற்கு அதிமுக, பாமக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் ஆதரவை அளித்தன. அதேநேரம் நீட் விலக்கு சட்ட முன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக, வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

https://tamil.oneindia.com/news/chennai/minister-ma-subramanian-to-start-a-program-to-provide-phone-counseling-to-neet-students/articlecontent-pf593926-432938.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீட் தேர்வு அச்சம்: தற்கொலை செய்துகொண்ட வேலூர் கூலி தொழிலாளி மகள்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
செளந்தர்யா
 
படக்குறிப்பு,

செளந்தர்யா 12ஆம் வகுப்பு பொது தேர்வில் 600க்கு 510 மதிப்பெண்கள் பெற்றவர்

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வான காரணமாக தமிழ்நாட்டில் மேலும் ஒரு தற்கொலை மரணம் நிகழ்ந்துள்ளது.

கடந்த சனி மற்றும் ஞாயிறுக்கு இடைப்பட்ட இரவில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் மற்றும் திங்களன்று அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனிமொழி என்று மாணவி தற்கொலை செய்துகொண்ட கனிமொழி என்று மாணவி தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில், இன்று வேலூர் மாவட்டத்திலும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நீட் தேர்வு எழுதிய மாணவி செளந்தர்யா குறைந்த மதிப்பெண் பெற்று விடுவோம் என்ற அச்சத்தால் தற்கொலை செய்துகொன்டுள்ளார் என்று காவல்துறை தெரிவிக்கிறது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு - ருக்மணி தம்பதியரின் மகள் செளந்தர்யா.

17 வயதாகும் இவர் வேலூர் தோட்டப்பாளையம் அரசினர் பெண்கள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ளார். சௌந்தர்யா பன்னிரண்டாம் பொது தேர்வில் 600க்கு 510 மதிப்பெண்கள் பெற்றவர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை(செப்டம்பர் 12) அன்று காட்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் நீட் மருத்துவ நுழைவுத் எழுதியுள்ளார்.

தேர்வெழுதி மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையில் நீட் தேர்வில் மதிப்பெண்‌ குறைவாக பெற்றுவிடுவோமோ என்ற அச்சத்தில் இருந்துள்ளார். சௌந்தர்யாவின் தந்தை மற்றும் தாய் இருவருமே விவசாய தினக்கூலி வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பொற்றோர் இருவருமே இன்று வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளனர். இதற்கிடையில் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றுவிடுவோம் என்ற அச்சத்தில் இருந்த மாணவி சௌந்தர்யா தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தகவலறிந்து வந்த வேலூர் லத்தேரி காவல் நிலைய போலீசார் மாணவியின் உடலை மீட்டு, வேலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு செய்ய அனுப்பியுள்ளனர்.

Presentational grey line

மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

https://www.bbc.com/tamil/india-58569255

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, நிழலி said:

பரீட்சைகள் வாழ்வின் முடிவல்ல என்ற தெளிவு பிள்ளைகளுக்கு இருக்க வேண்டும். அதை பெற்றோர்கள் கொடுக்க வேண்டும். இல்லாவிடின் தற்கொலைகளை தடுக்க முடியாது. 

நீங்கள் கூறுவது சரியாக இருந்தாலும் பெற்றோர்களுக்கும் இந்த தெளிவு அவசியம் என்பது எனது கருத்து.

 “மருத்துவராகிய பின் வரும் நன்மைகளில்தான் குடும்பத்தின் பொருளாதாரம் தொடக்கம் அந்தஸ்து வரை  உள்ளது” என பிள்ளைகளின் மேல் வெளிப்பார்வைக்கு தெரியாத அழுத்தங்களை பிரயோகிக்கும் பெற்றோர்களும் உள்ளனர் என்பதால் பெற்றோர் தொடங்கி பிள்ளைகள் வரை இந்த மருத்துவம் துறை இல்லாது விடில் இன்னொரு துறையில் முன்னேற முடியும் என்ற தெளிவு வேண்டும்.. 

அதே போல இந்த நீட் தேர்வைப்பற்றி அறிந்தவகையில் இதனால் அதிகம் பயனடையப்போவது தனியார் கோச்சிங் சென்டர்களும், பணவசதி படைத்தவர்களின் பிள்ளைகளுமே.. 

வர்க்க ஆதிக்கம் + சாதியம் = நீட்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

தற்கொலை ஒரு முடிவல்லத்தான். மாணவர்களுக்கு தெம்பூட்ட வேண்டும்தான்.

ஆனால் இது சாதாரண பரீட்சைக்கு, பரீட்சை ரிசல்டுக்கு பயப்படும் மாணவர் மன பிரச்சனை அல்ல. அதை விட கொடிய சாதி, தீண்டாமை, வர்க பின்ணணி கொண்டது.

நீட்டுக்கு முன் தமிழ்நாட்டின் மருத்துவ கல்வித்தரம் என்ன அதளபாதாலத்திலா இருந்தது ? அப்போதே லண்டனில் இருந்து தமிழ்நாடு போய் சிகிச்சை செய்தோரை எனக்கு தெரியும். 

நீட்டுக்கு பின் அது என்ன பல மடங்கு முன்னேறி விட்டதா?

இந்திய அரசியல் சட்டமும், தமிழ்நாட்டில் அமல்படுத்தபட்டுள்ளதுமான இட ஒதுக்கீட்டை பின் வழியால் இல்லாமல் செய்யும் திட்டத்தின் ஓரங்கமே நீட்.

இவ்வாறு ஒரு இலகு சமன்பாட்டை போட எப்போதும் முடியாதாகினும், ஏழைகள் அநேகர் தாழ்த்தபட்ட சமூகத்தை சார்ந்தவர்கள். 

ஆனால் நீட் தேர்வானது - அதன் முறையானது - தொடர்சியான கோச்சிங், பயிற்சி பரீட்சைகள், அதி உச்ச தயார்படுத்தல் மூலமே வெற்றி கொள்ள தக்கதாக இருக்கிறது.

ஒரு முறை தயார் படுத்த 5-10 லட்சம் தேவை படும் என்கிறார்கள்.

எத்தனை திறமையாக இருந்தாலும் எவ்வளவு புள்ளிகள் எடுதாலும் ஏழைகள் இந்த கோச்சிங் இல்லாமல் இதில் பாஸ் பண்ணுவது கடினம். கிட்டதட்ட முடியாது.

இதை முன்னர் தமிழ் நாட்டில் இருந்த சிஸ்டர்துடன் ஒப்பிடும் போது - அதில் கோச்சிங், பிரத்யோக வகுப்புகளால் அதிக தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை.

சுருங்க சொல்லின்,

தமிழ் நாட்டின் முன்னைய சிஸ்டம் hard work ஐ அடிப்படையாக கொண்டது.

நீட் smart work ஐ அடிப்படையாக கொண்டது.

பழைய சிஸ்டத்தில் கடும் உழைப்பை போட்டு தேறலாம்.

ஆனால் நீட்டில் எப்படி சுளிப்பது என்பதை யாராவது சொல்லி தந்து, தொடர் பயிற்சியும் தரவேண்டும். அதற்குத்தான் 5 லட்சம்.

இதில்தான் ஏழைகளும், தாழ்தப்பட்டவர்களும் தள்ளி வைக்கப்படுகிறார்கள்.

இரெண்டுமே வித்தியாசமான பரீட்சை முறைகள். தவிர ஒன்று நல்லது மற்றையது சரியில்லை என்பதல்ல.

அப்படி என்றால் நீட்டுக்கு முன் தமிழ்நாட்டு வைத்தியர்களும், வைத்திய துறையும் மோசமானதாக இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லை. இந்தியாவில் எப்போதும் வைத்தியத்தில் முதன்மை மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.

இதுதான் நீட் ஏன் தமிழ்நாட்டுக்கு உகந்ததல்ல என்பதன் விளக்கம்.

அடுத்து - கல்வி ஆரம்பத்தில் மாநில பட்டியலில் இருந்தது. ஏனென்றால் இந்தியா ஒரு ஒன்றியம். ஆனால் 42ம் சட்ட திருத்தம் மூலம் இது பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது.

இது மாநில சுயாட்சி தத்துவத்துக்கு எதிரானது. தமிழ் நாட்டில் இருப்பது ஒரு மாநில அரசு. மாகாண சபை அல்ல. அது தனது கல்வி கொள்கையை தீர்மானிக்கும் வல்லமை உடையதாக இருக்க வேண்டும்.

குறிப்பாக - மாநில அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையை மத்திய அரசின் நீட் மூலம் நீர்த்து போக செய்ய முயலும் போது.

அடுத்து - அரசியல் (நினைவில் இருந்து எழுதுகிறேன், தவறு இருந்தால் சுட்டவும்).

இது காங்கிரஸ்(திமுக கூட்டணி) காலத்தில் முயற்சித்து பின் கைவிடப்பட்டது.

ஆனால் பின்னர் பாஜக ஆட்சியில் நிறைவேறியது.

2016இல் இந்த சட்டம் ராஜ்யசபாவில் நிறைவேறும் போது, திமுகவிற்கு அங்கே சீட் இல்லை. ஆனால் லோக்சபாவில் எதிர்த்து வாக்களித்தது.  

அப்போ பாஜக விற்கு ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லை.  அதிமுக எதிர்த்து வாக்களித்திருந்தால் சட்டம் ராஜ்யசபாவில் தோத்திருக்கும். ஆனால் அதிமுக வெளிநடப்பு செய்ததால் - சட்டமூலம் சட்டமாகியது.

முடிவாக,

இது வெறும் சோதனை பெயிலான மாணவர் தற்கொலை செய்யும் விடயம் அல்ல.

இதிலே அரசியல் இருக்கிறது. இட ஒதுக்கீட்டை மறைமுகமாக தோற்கடிக்கும் சதி இருக்கிறது. ஏழைகள் டாக்டருக்கு படிக்கமுடியாது தடுக்கும் வர்க நலன் இருக்கிறது. மாநிலங்களின் உரிமைகளை பறித்து, ஒற்றை இந்தியாவக்கும் சங்பரிவாரின் திட்டமும் இருக்கிறது.

ஆகவே இது எதிர்கப்பட வேண்டியது.

நீங்கள் பல  விடயங்களை தொட்டிருக்கிறீர்கள்??

ஆனால் உண்மையில் இந்தியாவில் அல்லது  தமிழகத்துக்கான பிரச்சினையா??

அப்படியாயின்  அண்மையில்  மருத்துவ மாணவி பிரான்சில்  ஏன் தற்கொலை  செய்து  கொண்டார்??

இன்னொரு மிக  மிகத்திறமையான மருத்துவ மாணவி மனநிலை  பாதிக்கப்பட்டவராக  ஏன் படிப்பை தொலைத்தார்???

இதற்கு  பின்னால்  உள்ளது  அரசியலும் பண  பலமும் ஒடுக்குமுறைகளும்.................????

இவை மாற்றம் காணாதவரை???

ஆனால்  கண்ணுக்கெட்டிய  தூரம்வரை????😪

Link to comment
Share on other sites

25 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நீங்கள் கூறுவது சரியாக இருந்தாலும் பெற்றோர்களுக்கும் இந்த தெளிவு அவசியம் என்பது எனது கருத்து.

 “மருத்துவராகிய பின் வரும் நன்மைகளில்தான் குடும்பத்தின் பொருளாதாரம் தொடக்கம் அந்தஸ்து வரை  உள்ளது” என பிள்ளைகளின் மேல் வெளிப்பார்வைக்கு தெரியாத அழுத்தங்களை பிரயோகிக்கும் பெற்றோர்களும் உள்ளனர் என்பதால் பெற்றோர் தொடங்கி பிள்ளைகள் வரை இந்த மருத்துவம் துறை இல்லாது விடில் இன்னொரு துறையில் முன்னேற முடியும் என்ற தெளிவு வேண்டும்.. 

அதே போல இந்த நீட் தேர்வைப்பற்றி அறிந்தவகையில் இதனால் அதிகம் பயனடையப்போவது தனியார் கோச்சிங் சென்டர்களும், பணவசதி படைத்தவர்களின் பிள்ளைகளுமே.. 

வர்க்க ஆதிக்கம் + சாதியம் = நீட்.. 

அதனால் தான் அந்த தெளிவை பெற்றோர்கள் கொடுக்க வேண்டு என்று எழுதியிருக்கின்றேன் பிரபா.

சாதியத்தால் தமிழகம் பாதிப்படைவதை விட குஜாராத், பீகார் போன்ற பல மானிலங்கள் பல மடங்கு பாதிக்கப்படுகின்றன. இங்கு வர்க்க பிரச்சனையும், படிப்பறிவின்மையும் மிக அதிகம். அதனால் தான் இந்த நீட் பிரச்சனையை மற்ற மானிலங்கள் எவ்வாறு எதிர் கொள்கின்றன என அறிய ஆவல். அத்துடன்  கேரள, ஆந்திர, கர்னாடக மானிலங்கள் ஆகிய தமிழகத்துக்கு அருகில் இருக்கும் மானிலங்கள் எவ்வாறு எதிர் கொள்கின்றன என்பதையும் அறிய முடிந்தால் நல்லது.

ஏராளன் குறிப்பிட்டுள்ளது போன்று, இதை ஒரு அரசியல் பிரச்சனையாக தமிழக கட்சிகள் (திராவிட, பார்ப்பனிய, தமிழ் தேசிய என்று பாரபட்சம் இன்றி) மாற்றிவிட்டுள்ளன.

14 minutes ago, விசுகு said:

நீங்கள் பல  விடயங்களை தொட்டிருக்கிறீர்கள்??

ஆனால் உண்மையில் இந்தியாவில் அல்லது  தமிழகத்துக்கான பிரச்சினையா??

அப்படியாயின்  அண்மையில்  மருத்துவ மாணவி பிரான்சில்  ஏன் தற்கொலை  செய்து  கொண்டார்??

இன்னொரு மிக  மிகத்திறமையான மருத்துவ மாணவி மனநிலை  பாதிக்கப்பட்டவராக  ஏன் படிப்பை தொலைத்தார்???

இதற்கு  பின்னால்  உள்ளது  அரசியலும் பண  பலமும் ஒடுக்குமுறைகளும்.................????

இவை மாற்றம் காணாதவரை???

ஆனால்  கண்ணுக்கெட்டிய  தூரம்வரை????😪

பிரான்சில்  மாணவர்களுக்கு எதிராக அரசியலும் பணபலமும் ஒடுக்குமுறைகளும்  செல்வாக்கு செலுத்துகின்றனவா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நிழலி said:

அதனால் தான் அந்த தெளிவை பெற்றோர்கள் கொடுக்க வேண்டு என்று எழுதியிருக்கின்றேன் பிரபா.

சாதியத்தால் தமிழகம் பாதிப்படைவதை விட குஜாராத், பீகார் போன்ற பல மானிலங்கள் பல மடங்கு பாதிக்கப்படுகின்றன. இங்கு வர்க்க பிரச்சனையும், படிப்பறிவின்மையும் மிக அதிகம். அதனால் தான் இந்த நீட் பிரச்சனையை மற்ற மானிலங்கள் எவ்வாறு எதிர் கொள்கின்றன என அறிய ஆவல். அத்துடன்  கேரள, ஆந்திர, கர்னாடக மானிலங்கள் ஆகிய தமிழகத்துக்கு அருகில் இருக்கும் மானிலங்கள் எவ்வாறு எதிர் கொள்கின்றன என்பதையும் அறிய முடிந்தால் நல்லது.

ஏராளன் குறிப்பிட்டுள்ளது போன்று, இதை ஒரு அரசியல் பிரச்சனையாக தமிழக கட்சிகள் (திராவிட, பார்ப்பனிய, தமிழ் தேசிய என்று பாரபட்சம் இன்றி) மாற்றிவிட்டுள்ளன.

பிரான்சில் தமிழ் மாணவர்களுக்கு எதிராக அரசியலும் பணபலமும் ஒடுக்குமுறைகளும்  செல்வாக்கு செலுத்துகின்றனவா? 

தமிழர்களுக்கு  எதிராக  என்று  சொல்லமுடியாது

பொதுவாக சாதாரண தர  மக்களுக்கு....

எளிதில்  மருத்துவ  துறைக்கு சென்றுவிட முடியாது

அதை  தாண்டி  சென்றாலும் இறுதி  ஆண்டுவரை  நிச்சயமற்ற  தன்மையே....??

இங்கே எனது  தலைமுறைகளிடமல்ல

அடுத்த அடுத்த  தலைமுறைகளிடமே சில  செய்திகள்  இருக்கின்றன

ஆனால் அவற்றை இங்கே  பதிய முடியாது

ஏனெனில் சட்டச்சிக்கல்  வரலாம்....

Link to comment
Share on other sites

5 minutes ago, விசுகு said:

தமிழர்களுக்கு  எதிராக  என்று  சொல்லமுடியாது

பொதுவாக சாதாரண தர  மக்களுக்கு....

எளிதில்  மருத்துவ  துறைக்கு சென்றுவிட முடியாது

அதை  தாண்டி  சென்றாலும் இறுதி  ஆண்டுவரை  நிச்சயமற்ற  தன்மையே....??

இங்கும் அப்படித்தான். மருத்துவதுறைக்கு செல்கின்றவர்களில் பலர் இடை நடுவில் தடுமாறி நிறுத்தி விடுகின்றனர். அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் கற்கை மிகக் கடினமாக இருப்பதுவும், நீண்ட காலம் எடுப்பதும் (Training எல்லாம் முடிய 5 வருடங்களுக்கு மேல் என அறிய முடிகின்றது) முக்கிய காரணங்கள். அத்துடன் கற்கையின் நெருக்கடி காரணமாக மன அழுத்தத்துக்கு உள்ளாகும் மாணவர்களும் உள்ளனர்.

இங்குள்ள எம் மக்கள் மத்தியில் தற்கொலை ஒரு ஆழமான நீடித்த நோயாக உள்ளது. அது அடுத்த தலைமுறையையையும் பீடிக்கின்றது. இதற்கு தன் வாழ்வை வாழாது மற்றவர்களை பார்த்து வாழ நினைப்பதுவும் ஒரு முக்கிய காரணம் என நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நிழலி said:

இதில் உண்மையில்லாமல்  இல்லை

திடீர்  பாய்ச்சலும் ஒரு  காரணம்

எப்படித்தான்  இருந்தாலும் தலைமுறை தலைமுறையாகவும்

பூர்வீகமாகவும் வாழும்  இந்த மண்ணின் மைந்தர்களுடனான பரீட்சைகளில்

ஒரு சில வருடங்களுக்கு  முன்னர் வந்த  எம்மவர் எதிர்  நீச்சல்  போட்டு மேலே வருவதென்பது கடினம்  தான்.

அதேநேரம் அரசியலும்  பணமும்  அதனூடன ஒடுக்குமுறைகளையும் 

எமது  அடுத்த  தலைமுறை தாண்ட வேண்டித்தான் உள்ளது

சட்டத்தால்  பாதுகாக்கப்படுவதாலும்

உலக அளவில் ஒப்பிடும்போது இத் தாக்கங்கள் சிறிது குறைவாக  இருந்தாலும் கூட.

அதனால் தான்  எமது அடுத்த  தலைமுறை இது  போன்ற துறைகளை  தமது பிள்ளைகளுக்கு முன்  மொழிவது மிக  மிக அரிதாகிவிடும்???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தனியாக இருப்பவர்களிடம் போய் கேட்டுப்பாருங்கள் நீ ஏன் தனியாக இருக்கின்றாய் என  அதற்கு அவர்கள் சொல்லும் பதில் தனியாக இருப்பது பிடிக்கும் என்பார்கள்.  ஆனால் உண்மை அதுவல்ல.... அவர்கள் மற்றவர்களால் பலமுறை காயப்படுத்தப்பட்டிருப்பார்கள்.  அதனாலேயே அவர்கள் தனிமையை நாடுகின்றார்கள்.  
    • America கெளதிகளிடம் அடிவாங்கி மொக்கவீனப்படுவது பற்றி செய்திகள் வாசிப்பதில்லையோ???
    • இப்போது இவை எல்லாம் கிடைக்கும் பெற்றுக் கொள்ளுங்கள்  சிறையும். இருந்தீர்கள்    ஜேர்மனியில் சிறையில் இருப்பது நல்லது  சுகமான அனுபவம் வாழ்க்கை என்று கேள்வி பட்டேன் உண்மைய??? 🤣
    • விடியற்காலை 3 மணி. மழை வேறு பெய்து கொண்டிருந்தது. ஒரு வீட்டில் கணவன் மனைவி தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது . கணவன் மட்டும் எழுந்து போனான் . கதவை திறந்தால் அங்கே ஒரு குடிகாரர் நின்று கொண்டிருந்தார். “சார் ஒரு உதவி.. கொஞ்ச அங்க வந்து தள்ளி விட முடியுமா?” என்று அந்த குடிகாரர் கேட்டார். கணவனோ “முடியவே முடியாது, ஏம்பா விடியகாலை 3 மணிக்கு தொந்தரவு செய்யறே”ன்னு சொல்லிட்டு கதவை சாத்திட்டு படுக்கப் போய் விட்டான் . “யாரது?” என்று மனைவி கேட்டாள் . “எவனோ ஒரு குடிகாரன், வந்து காரோ எதையோ தள்ளி விட முடியுமான்னு கேட்கிறான்” “நீங்க உதவி செஞ்சீங்களா?” “இல்லை, காலைல 3 மணி, மழை வேற பெய்யுது எவன் போவான்?” “3 மாசம் முன்னாடி நம்ம கார் ரிப்பேராகி நடு ரோட்ல நின்னப்ப இரண்டு பேர் நமக்கு உதவி செஞ்சாங்களே? இப்ப நீங்க அது மாதிரி உதவி செய்யலன்னா எப்படி? கடவுள் குடிகாரர்களையும் நேசிப்பார்” என்றாள் மனைவி. கணவன் எந்திரிச்சான், ட்ரஸ் பண்ணிக்கிட்டு மழையில் நனைஞ்சுகிட்டே வெளியே போனான். இருட்டுல, மழையில் சரியா தெரியாதாதால சத்தமா கேட்டான். “ஹலோ, நீங்க இன்னும் இருக்கீங்களா?” “ஆமா சார்” “ஏதோ தள்ளி விடனும்னு சொன்னீங்களே, இப்ப செய்யலாமா?” “ஆமா சார் வந்து கொஞ்சம் தள்ளிவிட்டீங்கன்னா நல்லா இருக்கும்” “எங்கே இருக்கீங்க? “இங்கதான் ஊஞ்சல் மேல உட்கார்ந்திருக்கேன் வாங்க வந்து தள்ளிவிடுங்க....” அட நன்னாரிப் பயலே.... Ha ha ha
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.