Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

நீட் தேர்வு தற்கொலை: விடிய விடிய படிப்பு; தேய்த்து வைத்த துணிகள்: மாணவர் தனுஷின் கடைசி தருணங்கள்


Recommended Posts

15 minutes ago, நிழலி said:

அதனால் தான் அந்த தெளிவை பெற்றோர்கள் கொடுக்க வேண்டு என்று எழுதியிருக்கின்றேன் பிரபா.

சாதியத்தால் தமிழகம் பாதிப்படைவதை விட குஜாராத், பீகார் போன்ற பல மானிலங்கள் பல மடங்கு பாதிக்கப்படுகின்றன. இங்கு வர்க்க பிரச்சனையும், படிப்பறிவின்மையும் மிக அதிகம். அதனால் தான் இந்த நீட் பிரச்சனையை மற்ற மானிலங்கள் எவ்வாறு எதிர் கொள்கின்றன என அறிய ஆவல். அத்துடன்  கேரள, ஆந்திர, கர்னாடக மானிலங்கள் ஆகிய தமிழகத்துக்கு அருகில் இருக்கும் மானிலங்கள் எவ்வாறு எதிர் கொள்கின்றன என்பதையும் அறிய முடிந்தால் நல்லது.

ஏராளன் குறிப்பிட்டுள்ளது போன்று, இதை ஒரு அரசியல் பிரச்சனையாக தமிழக கட்சிகள் (திராவிட, பார்ப்பனிய, தமிழ் தேசிய என்று பாரபட்சம் இன்றி) மாற்றிவிட்டுள்ளன.

நீங்கள் கூறியது போல இதை அரசியலாக்கிவிட்டார்கள்தான்.. இந்திய பிரதமர் குஜாராத்தில் முதல்வராக இருந்த போது நீட் தேர்வை எதிர்த்துள்ளார் என வாசித்த நினைவு.. இப்பொழுது நிலைமை வேறு.. 

ஆனால் நான் நினைப்பது இந்த தேர்வினால் அடையும் நன்மைகள் என்ன? நன்மை அடைபவர்கள் யார்? பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்த எத்தனை மாணவர்கள் தெரிவாகி உள்ளார்கள்? என்பதில்தான் இந்த நீட் தேவையா சரியா என்பது தங்கியுள்ளது.. 

மற்றைய மாநிலத்தவர்கள் இதனை வரவேற்கிறார்கள் என்றால் அங்கே யார் அதிகம் நன்மையடைகிறார்கள் என்பதில்தான் உண்மை தெரியவரும்..உண்மையிலேயே தாழ்த்தப்பட்டவர்கள், வறுமையால் பாதிக்கப்பட்டவர்கள் நன்மை பெறுகிறார்களா தெரியவில்லை.. ஏனெனில்  ஏற்கனவே வறிய நிலையில் உள்ளவர்களால் இந்த தேர்வை எழுவதற்கான பயிற்சியையோ, கட்டணத்தையோ அவர்களாலும் கட்ட முடியாது தானே! 

ஆக மொத்தம் இந்த நீட் தேர்வு இந்தியா மாணவரகளுக்கு அவசியமா? 

மேலும் சாதி, வர்க்கவேறுபாடு மற்றைய மாநிலங்களில் அதிகம் உள்ளது என்பது சரியாக இருந்தாலும், இந்த நீட் தேர்வால் எப்படி அது குறையும் என்றோ வர்க்க வேறுபாடு குறையும் என்றோ எதிர்வு கூற முடியும்.. 

சாதி, வர்க்க வேறுபாட்டை இல்லாதெழிக்க சக மனிதனை மனிதனாக பார்க்கும் அறிவு இருக்கவேண்டும்.. மதத்தாலும், சாதியத்தாலும் ஆட்சி செய்யும் அரசிடமிருந்து இதை எப்படி எதிர்பார்க்கலாம்? 

 

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நீட் தேர்வு இந்தியா முழுவதும் ஹிந்தி மொழியில் மட்டும் நடத்தப்படுவதாக அறிந்தேன். இது உண்மையா?

உண்மை என்றால் வட மாநில மக்கள் தமது தாய்மொழியில் பரீட்சை எழுதும் போது தென்னாட்டு  பரீட்சாத்திகள் அந்நிய மொழியில் பரீட்சை எழுதுவது பாரபட்சமான நடைமுறைதானே. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

நீட் தேர்வு இந்தியா முழுவதும் ஹிந்தி மொழியில் மட்டும் நடத்தப்படுவதாக அறிந்தேன். இது உண்மையா?

தெலுங்கு மானிலத்தை சேர்ந்த தெரிந்தவர் அங்கே தெலுங்கில் எழுத முடியும் என்று சொன்னவர். ஆனபடியால்  பெரிய மொழியான தமிழிலும்  கூடியதாக இருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் அவர்கள் இலங்கையர் மாதிரி இல்லை ஆங்கிலத்தில் தான் எழுத விரும்புவார்கள் 🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 14/9/2021 at 15:05, நிழலி said:

தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய மானிலங்கள் நீட் தேர்வினை எவ்வாறு எதிர்கொள்கின்றன?

[இதனால் அதிகம் பயனடையப்போவது தனியார் கோச்சிங் சென்டர்களும், பணவசதி படைத்தவர்களின் பிள்ளைகளுமே..

வர்க்க ஆதிக்கம் + சாதியம் = நீட்.]

இந்தியாவின் பிற மானிலங்களில்  நீட் தேர்வை மாணவர்கள் எப்படி எதிர் கொள்கிறார்கள் ஏன் வரவேற்கிறார்கள் இந்த கேள்விக்கான விடை இப்போ தான் கிடைத்தது.தமிழ்நாட்டை தவிர இந்திய இதர மானிலங்களில் உள்ளோர் வசதி படைத்தவர்கள். தமிழ்நாட்டில் தான் ஏழைகள்,ஏழைகளின் பிள்ளைகள் வர்க்கம் சாதி வெறியுள்ளது.
நான் முன்பு எதிர்மாறாக நம்பி இருந்தேன் தமிழ்நாடு தான் ஓரளவு வசதியானது  இந்திய மற்ற மானிலங்கள் மோசமானவை .

 

 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

இதில் உண்மையில்லாமல்  இல்லை

திடீர்  பாய்ச்சலும் ஒரு  காரணம்

எப்படித்தான்  இருந்தாலும் தலைமுறை தலைமுறையாகவும்

பூர்வீகமாகவும் வாழும்  இந்த மண்ணின் மைந்தர்களுடனான பரீட்சைகளில்

ஒரு சில வருடங்களுக்கு  முன்னர் வந்த  எம்மவர் எதிர்  நீச்சல்  போட்டு மேலே வருவதென்பது கடினம்  தான்.

அதேநேரம் அரசியலும்  பணமும்  அதனூடன ஒடுக்குமுறைகளையும் 

எமது  அடுத்த  தலைமுறை தாண்ட வேண்டித்தான் உள்ளது

சட்டத்தால்  பாதுகாக்கப்படுவதாலும்

உலக அளவில் ஒப்பிடும்போது இத் தாக்கங்கள் சிறிது குறைவாக  இருந்தாலும் கூட.

அதனால் தான்  எமது அடுத்த  தலைமுறை இது  போன்ற துறைகளை  தமது பிள்ளைகளுக்கு முன்  மொழிவது மிக  மிக அரிதாகிவிடும்???

மருத்துவம் மட்டும் இல்லை அண்ணை. Investment banking போன்ற துறைகளிலும் அதிக எதிர்பார்ப்புகளோடு போய், அதை ஈடு செய்ய உழைத்து முடியாமல் தற்கொலையில் முடியும் கதைகள் உலகம் எங்கும் உண்டு.

வாழ்க்கையில் மிக பெரும் கொடை என்ன என்றால் எமக்கு பிடித்த துறை எமக்கு இயலுமான துறையாகவும் அமைவது.

சிலருக்கு இது தானாக அமைந்து விடும். சிலர் trial and error மூலம் கண்டு பிடிக்க வேண்டும். 

இரண்டாம் வகையினர் தமக்கான துறையை கண்டு பிடிக்கும் வரை தோல்விகளை தாங்கும் பக்குவம் உள்ளவர்களாக அவர்களை பெற்றாரும், கல்வியும், அமைபுக்களும் வளர்தெடுக்க தவறுகிறன.

கல்வியை, தொழிலை status symbol ஆக கருதி பெருமை பேசும் பெற்றார் பிள்ளைகளையும் அதே மனநிலையில் வைத்திருக்கும் போது - அந்த status இழக்கபடுவதோடு வாழ்கையே முடிகிறது என்ற கருத்துருவாக்கம் ஏற்படுகிறது.

ஒரு சோதனையை/படிப்பை இறுக்கி படி, பாஸ் பண்ணு - பண்ணினால் உன் வாழ்க்கை சிறக்கும், இது உன் வாழ்வில் ஒரு முக்கிய தருணம் என்று உசுப்பேத்தி விடும் அதே நேரம்,

இந்த செய்திக்கு நேர் எதிராக,  இது வெறும் சோதனைதான் - வாழ்க்கை இவை எல்லாவற்றையும் விட எவ்வளவோ பெரியது எத்தனையோ வாய்ப்புக்கள் நிறைந்தது என்பதையும் ஒரு சேர சொல்ல வேண்டும்.

இப்படி செய்ய கூடிய பாதுகாவலர் அமையும் பிள்ளைகள் இப்படியாவது குறைவு என நான் நம்புகிறேன்.

ஆனால் நீட் தற்கொலைகள் இதில் இருந்தும் வேறுபடுகிறன. இந்த தற்கொலைகள் “என்னால் முடியவில்லை” என நிகழவில்லை. இந்த பிள்ளைகள் எல்லாம் மாநில பரீட்சையில் நல்ல புள்ளிகள் எடுத்தோர்.

”காசு இல்லை என்ற ஒரே காரணத்தால், திறமை இருந்தும் என்னால் மருத்துவம் படிக்க முடியவில்லையே” என்ற விரக்தியில் நடக்கிறன.

இந்த மரணங்களை நீட்டை நிறுத்துவதன் மூலம் இலகுவாக நிறுத்த முடியும். நிறுத்த வேண்டும்.

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

சாதியத்தால் தமிழகம் பாதிப்படைவதை விட குஜாராத், பீகார் போன்ற பல மானிலங்கள் பல மடங்கு பாதிக்கப்படுகின்றன. இங்கு வர்க்க பிரச்சனையும்

உண்மை ஆனால் உங்கள் கேள்விக்கான பதிலையும் நீங்களே கொடுத்து விட்டீர்கள் 👇

8 hours ago, நிழலி said:

படிப்பறிவின்மையும் மிக அதிகம்

எனது அனுபவத்தில் தமிழ் நாட்டை போல் வறியவர்கள், தாழ்தப்பட்டோர் கல்வியில் முன்னேறிய இன்னொரு மாநிலத்தை நான் காணவில்லை. 

உங்களுக்கு தெரிந்த வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியன் புரொபெசனல்சை அவதானித்து பாருங்கள் - வேற்று மாநிலத்தவர் சாதியால், அதிகாரத்தால் அல்லது பணத்தால் ஏலெவே உயர்ந்த குடும்பங்களில் இருந்தே அநேகம் வருவர் - மலையாளிகள் கூட. ஆனால் தமிழ்நாட்டில் இருந்து வரும் பலர் - அந்த குடும்பத்தின் முதலாவது தலைமுறை பட்டதாரியாக இருப்பார்கள்.

ஏனைய மாநிலங்களை விட தமிழ்நாட்டில் social mobility அதிகம். ஆகவே நீட்டினால் பாதிக்கபடுபவர்களும் அதிகம்.  

18 minutes ago, விளங்க நினைப்பவன் said:

[இதனால் அதிகம் பயனடையப்போவது தனியார் கோச்சிங் சென்டர்களும், பணவசதி படைத்தவர்களின் பிள்ளைகளுமே..

வர்க்க ஆதிக்கம் + சாதியம் = நீட்.]

இந்தியாவின் பிற மானிலங்களில்  நீட் தேர்வை மாணவர்கள் எப்படி எதிர் கொள்கிறார்கள் ஏன் வரவேற்கிறார்கள் இந்த கேள்விக்கான விடை இப்போ தான் கிடைத்தது.தமிழ்நாட்டை தவிர இந்திய இதர மானிலங்களில் உள்ளோர் வசதி படைத்தவர்கள். தமிழ்நாட்டில் தான் ஏழைகள்,ஏழைகளின் பிள்ளைகள் வர்க்கம் சாதி வெறியுள்ளது.
நான் முன்பு எதிர்மாறாக நம்பி இருந்தேன் தமிழ்நாடு தான் ஓரளவு வசதியானது  இந்திய மற்ற மானிலங்கள் மோசமானவை .

 

 

தமிழ் நாட்டில்தான் நீட்டால் பாதிக்கப்படும் அளவுக்கு வறியவர்களும், தாழ்த்தபட்டோரும் முன்னேறியுள்ளார்கள்.

ஏனைய மாநிலங்களில் நீட் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்கள் நிலை படுமோசம்.

4 hours ago, tulpen said:

நீட் தேர்வு இந்தியா முழுவதும் ஹிந்தி மொழியில் மட்டும் நடத்தப்படுவதாக அறிந்தேன். இது உண்மையா?

உண்மை என்றால் வட மாநில மக்கள் தமது தாய்மொழியில் பரீட்சை எழுதும் போது தென்னாட்டு  பரீட்சாத்திகள் அந்நிய மொழியில் பரீட்சை எழுதுவது பாரபட்சமான நடைமுறைதானே. 

13 பிராந்திய மொழிகளில் எழுதலாம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, goshan_che said:

ஆனால் நீட் தற்கொலைகள் இதில் இருந்தும் வேறுபடுகிறன. இந்த தற்கொலைகள் “என்னால் முடியவில்லை” என நிகழவில்லை. இந்த பிள்ளைகள் எல்லாம் மாநில பரீட்சையில் நல்ல புள்ளிகள் எடுத்தோர்.

”காசு இல்லை என்ற ஒரே காரணத்தால், திறமை இருந்தும் என்னால் மருத்துவம் படிக்க முடியவில்லையே” என்ற விரக்தியில் நடக்கிறன.

இந்த மரணங்களை நீட்டை நிறுத்துவதன் மூலம் இலகுவாக நிறுத்த முடியும். நிறுத்த வேண்டும்.

நீட் தேர்வில் எந்த பாடமாக  இருந்தாலும் பிரச்சனையில்லை  
50  வீதம்  புள்ளிகள் மொத்தமாக எடுத்தாலே காணும். பல மாணவர்கள் தேவையில்லாமல் பதட்டமடைவது தான் பிரச்னை ,
ஏழைகளுக்கு மருத்துவம் படிக்கும் ஆசை இருக்கக் கூடாது என்று வந்த இந்த நீட்டை
அவர்களே முறியடிக்கலாம் .
மனதில் துணிவு வேண்டும் .

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

நீட் தேர்வில் எந்த பாடமாக  இருந்தாலும் பிரச்சனையில்லை  
50  வீதம்  புள்ளிகள் மொத்தமாக எடுத்தாலே காணும். பல மாணவர்கள் தேவையில்லாமல் பதட்டமடைவது தான் பிரச்னை ,
ஏழைகளுக்கு மருத்துவம் படிக்கும் ஆசை இருக்கக் கூடாது என்று வந்த இந்த நீட்டை
அவர்களே முறியடிக்கலாம் .
மனதில் துணிவு வேண்டும் .

இங்கே தான் நீட் பரீட்சையின் தவறான விடைக்கு மறைப்புள்ளி வழங்கும் முறையின் சூட்சுமம் புரியப் பட வேண்டும். இந்த மறைப்புள்ளி வழங்கும் முறை சில மருத்துவக் கல்லூரிப் பாடப் பரீட்சைகளிலும் உள்ள நடைமுறை! 

இது உண்மையில், பதற்றமில்லாமல், ஒரு வரையறுக்கப் பட்ட நேரத்தினுள் விவேகமாகச் சிந்திக்கும் ஆற்றலைப் பரீட்சிக்கும் ஒரு நடைமுறை தான். எனக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்ற perfectionist மனப் பான்மையிலிருந்து கொண்டு மறைப்புள்ளிப் பரீட்சைகளில் வெல்வது கடினம். நன்றாகத் தெரிந்தவற்றுக்கு விடையளித்து, தெரியாததை rule out மூலம் இரு விடைகள் அளித்து அல்லது முற்றாக விடையளிக்காமலே கடந்து செல்லும் போது மறைப்புள்ளிகள் "0" ஆக மாறும்! 

என்னைப் பொறுத்த வரையில் பாரிய கோச்சிங் இல்லாமலே மாணவர்கள் இதை வெல்ல வழியிருக்கிறது என்று நினைக்கிறேன்!  பரீட்சைக் கட்டணம் பற்றித் தெரியாது!

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வாத்தியார் said:

நீட் தேர்வில் எந்த பாடமாக  இருந்தாலும் பிரச்சனையில்லை  
50  வீதம்  புள்ளிகள் மொத்தமாக எடுத்தாலே காணும். பல மாணவர்கள் தேவையில்லாமல் பதட்டமடைவது தான் பிரச்னை ,

சரியாகச் சொன்னீர்கள்.
தமிழக அரசியல் கட்சிகள் நீட் தேர்வை அரசியலாக்கி பேசும் பேச்சுகளை கேட்டு கேட்டு தான் இவர்கள் பரிட்சையில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயம் தோன்றி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் பிற மாகாணங்களின் ஏழை மாணவர்கள் நீட் தேர்வை வெற்றிகரமாக கையாளுவது போன்று இவர்களும் செய்ய வேண்டும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நீட் தேர்வின் முதல் பிரச்சனையே CBSE பாடத்திட்டம்தான். இதுவும் தமிழ்நாட்டு பிளஸ் one, பிளஸ் two விற்கான பாடத்திட்டங்களும்  வித்தியாசமானவை. அதனால்தான் அரசுப்பள்ளிகளில் படிக்கும் சாதாரண ஏழைமாணவர்கள் இந்த தேர்வை எழுத அச்சப்படுகிறார்கள்.

Link to comment
Share on other sites

மாணவ, மாணவிகள் உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள்.. கெஞ்சி கேட்டுக் கொள்வதாக முதலமைச்சர் உருக்கம்.!

 

 

Link to comment
Share on other sites

On 15/9/2021 at 12:58, tulpen said:

நீட் தேர்வு இந்தியா முழுவதும் ஹிந்தி மொழியில் மட்டும் நடத்தப்படுவதாக அறிந்தேன். இது உண்மையா?

உண்மை என்றால் வட மாநில மக்கள் தமது தாய்மொழியில் பரீட்சை எழுதும் போது தென்னாட்டு  பரீட்சாத்திகள் அந்நிய மொழியில் பரீட்சை எழுதுவது பாரபட்சமான நடைமுறைதானே. 

நீட் (யுஜி) 2021 முதன்முறையாக 13 மொழிகளில் பஞ்சாபி மற்றும் மலையாளத்தைச் சேர்க்கிறது. இப்போது வழங்கப்படும் மொழிகள் இந்தி, பஞ்சாபி, அஸ்ஸாமி, பெங்காலி, ஒடியா, குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ், உருது மற்றும் ஆங்கிலம்.

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nunavilan said:

நீட் (யுஜி) 2021 முதன்முறையாக 13 மொழிகளில் பஞ்சாபி மற்றும் மலையாளத்தைச் சேர்க்கிறது. இப்போது வழங்கப்படும் மொழிகள் இந்தி, பஞ்சாபி, அஸ்ஸாமி, பெங்காலி, ஒடியா, குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ், உருது மற்றும் ஆங்கிலம்.

ஆகவே நீட் தேர்வில் பாரபட்சமில்லாமல் தமிழகத்தில் தமிழ் மாணவர்களும் தமிழில் எழுதலாம்.
மற்றய மாணவர்கள் மாதிரி சொந்த மொழியை பாவிக்க தமிழில் எழுத மனம் தான் வேண்டும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நீட் தற்கொலை: வேலூர் செளந்தர்யாவின் கலைந்து போன கனவு - இதுவரை 16 மாணவர்கள் பலி

 • நடராஜன் சுந்தர்
 • பிபிசி தமிழுக்காக
2 மணி நேரங்களுக்கு முன்னர்
நீட் மரணங்கள்

நான்கு பெண் பிள்ளைகளில் முதல் மூவரும் படிக்கவில்லை, கடைசி பிள்ளையின் மருத்துவ கனவை நிஜமாக்கும் முயற்சியில் பெற்றோர் இருவரும் தினக்கூலி வேலைக்கு சென்றுள்ளனர்.

ஆனால் யாருக்காக அவர்கள் கஷ்டப்பட்டார்களோ அந்த மகள் உயிரை மாய்த்துக்கொண்டார். வேலூரில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட சௌந்தர்யாவின் குடும்பம், அவர்கள் கண்ட கனவு குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் நீட் தேர்வு நடைபெறும்போதும், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும்போதும் தோல்வி பயம் மற்றும் குறைந்த மதிப்பெண்கள் காரணமாக மாணவர்கள் தற்கொலைகள் நிகழ்கின்றன. கடந்த ஞாயிறு (செப்டம்பர் 12) அன்று நீட் தேர்வு தொடங்குவதற்கு முன்பிருந்து, தேர்வு நடைபெற்ற அடுத்தடுத்த நாட்களில் மூன்று மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர். நீட் தேர்வுக்கு தமிழகத்தில் தீவிரமான எதிர்ப்பலை நிலவி வரும் சூழலில் மாணவர்களின் தொடர் தற்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த சனி மற்றும் ஞாயிறுக்கு இடைப்பட்ட இரவில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் மற்றும் திங்களன்று அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், வியாழனன்று வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செளந்தர்யா என்ற மாணவி தற்கொலை செய்து கொன்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு - ருக்மணி தம்பதியரின் நான்காவது மகள் செளந்தர்யா. 17 வயதாகும் இவர் வேலூர் தோட்டப்பாளையம் அரசினர் பெண்கள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ளார். சௌந்தர்யா பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 510 மதிப்பெண்கள் பெற்றவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 12) அன்று காட்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதியுள்ளார்.

தேர்வெழுதி மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையில் நீட் தேர்வில் மதிப்பெண்‌ குறைவாக பெற்று விடுவோமோ என்ற அச்சத்தில் இருந்துள்ளார். சௌந்தர்யாவின் தந்தை மற்றும் தாய் இருவருமே தினக்கூலி வேலை செய்து வருகின்றனர். அன்றைய தினம் தந்தை வேலைக்கு சென்ற பிறகு, தனது தாயாரை அவர் வேலை செய்யும் பகுதிக்கு விட்டுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார் சௌந்தர்யா. இதையடுத்து நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்று விடுவோம் என்ற அச்சத்தினால் மிகுந்த மன வேதனையில் இருந்த மாணவி சௌந்தர்யா அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

தந்தை தினக்கூலி, 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய தாய்

நீட் மரணங்கள்
 
படக்குறிப்பு,

செளந்தர்யாவின் தாய் ருக்மணி

இந்த சூழலில், குறைந்த மதிப்பெண் பெற்று விடுவோம் என்ற அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி சௌந்தர்யாவின் குடும்பத்தை பிபிசி தமிழ் சந்தித்தது.

"எங்கள் அப்பா உணவகத்தில் பாத்திரம் கழுவும் வேலை செய்கிறார். அம்மா 100 நாள் வேலை திட்டத்திற்கு செல்கிறார். இப்படி தினக்கூலி சம்பளத்திற்கு வேலைக்கு சென்று கடுமையான சூழலில்தான் தங்கையை பெற்றோர் படிக்க வைத்தனர்" என்று சௌந்தர்யாவின் இரண்டாவது அக்கா கோடீஸ்வரி பகிர்ந்து கொண்டார்.

"பெற்றோருக்கு நங்கள் மொத்தம் நான்கு பெண் பிள்ளைகள். மற்றவர்களைக் காட்டிலும் கடைசி தங்கையான சௌந்தர்யாவை செல்லமாக வளர்த்தனர். எங்கள் அக்கா பன்னிரண்டாம் வகுப்பு வரைதான் படித்தாள். நான் ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். எனக்கு அடுத்து மூன்றாவது சகோதரி பள்ளிக்கு செல்லவில்லை. பெற்றோர் இருவருமே தினக்கூலி தொழிலாளர்கள். எங்கள் மூவரையும் படிக்க வைக்க முடியாத காரணத்தினால் கடைசி பிள்ளையை எப்படிவது நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதற்காகதான் கடுமையான சூழ்நிலைக்கு இடையே படிக்க வைத்தனர்," என்றார் அவர்.

நீட் மரணங்கள்
 
படக்குறிப்பு,

செளந்தர்யாவின் இரண்டாவது அக்கா கோடீஸ்வரி

"நான் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவது மட்டுமில்லாமல், அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு இருப்பதால் படிப்பேன். உறுதியாக மருத்துவர் ஆவேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பாள் எனது மகள். நானும் எப்படியாவது கூலி வேலைக்கு சென்றாவது நீ விரும்பியபடி மருத்துவ படிப்பு படிக்க வைக்கிறேன் என்று கூறினேன்," என்றபடி கண்ணீர் மல்க சௌந்தர்யாவின் தயார் ருக்மணி கூறினார்.

தாய் உடல் நிலை கருதியே மருத்துவம் படிக்க நினைத்தார்

"அம்மாவுக்கு ஆஸ்துமா பிரச்னை உள்ளது. இதன் காரணமாக தனியார் மருத்துவமனையில்தான் சிகிச்சை அளித்து வந்தோம். குடும்ப வறுமை சூழல் காரணமாக அவ்வப்போது பணம் கொடுத்து சிகிச்சை பெறுவது கஷ்டமாக இருந்தது. இதனால் நாம் மருத்துவ படித்தால் அம்மாவுக்கு நாமே மருத்துவம் பார்க்கலாமே என்ற நோக்கத்தில்தான் சௌந்தர்யா மருத்துவர் ஆகவேண்டும் என்ற கனவை வளர்த்தாள். ஆனால் அந்த கனவு நிறைவேறுவதற்கு முன்பே நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தன் உயிரை மாய்த்துக்கொண்டாள் எனது தங்கை," என்று வேதனையுடன் பேசினார் சௌந்தர்யாவின் மூத்த அக்கா கீதா.

நீட் மரணங்கள்
 
படக்குறிப்பு,

செளந்தர்யாவின் மூத்த அக்கா கீதா

நீட் தேர்வு நடைபெற்ற அன்று மாலை வினாத்தாள் கடினமாக இருந்தது என்று கூறிய சௌந்தர்யா. ஒருவேளை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நேரடியாக எழுதயிருந்தால் நீட் தேர்வு சுலபமாக இருந்திருக்குமென சகோதரிகளிடம் பகிர்ந்துள்ளார்.

"சௌந்தர்யா எந்த தேர்வு எழுதினாலும் தேர்வு முடிவடைந்த பிறகு, தான் எழுதிய விடைகள் சரியானதா என்று பார்ப்பது வழக்கம். அதேபோன்று கடந்த 14ஆம் தேதியன்று நீட் தேர்வில் எவ்வளவு மதிப்பெண் எடுப்போம் என்று வினா, விடைகளை ஆராய்ந்துள்ளார். அப்படி விடைகளை பார்த்தபோது நாம் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வியுற்று விடுவோமோ என்ற அச்சத்தில் இருந்தாள். நம்முடைய மருத்துவர் கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சம் மற்றும் தோல்வி பயத்தால் இவ்வாறு செய்து கொண்டாள்," என்கிறார் கீதா.

பள்ளியில் சிறந்த மாணவி

நீட் மரணங்கள்

இவர்களை தொடர்ந்து வேலூர் தோட்டப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சௌந்தர்யாவின் வகுப்பு ஆசிரியர்களை பிபிசி தமிழ் சந்தித்தது.

"சௌந்தர்யா படிப்பின் மீது கொண்ட ஆர்வம், ஈடுபாடு மிகப் பெரியது. எங்கள் பள்ளியில் இருந்து ஒரு மருத்துவர் உருவாகிறார் என்ற எதிர்பார்ப்பு எங்கள் அனைவருக்குமே இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்துவிட்டார். அவசரப்பட்டு இப்படியொரு முடிவு எடுத்துவிட்டார். குறிப்பாக மாணவர்கள் அனைவருமே நல்ல முறையில் தேர்வுக்கு தயாராகிறார்கள். ஆனால் நம்பிக்கையோடு ஒரு முறை தவறிவிட்டால், அடுத்தமுறை முயற்சி செய்யலாம். அரசு பள்ளி மாணவர்கள் என்பதால் அரசு இடஒதுக்கீட்டில் இடம் கிடைக்க நல்ல வாய்ப்புள்ளது," என்று சௌந்தர்யாவின் இயற்பியல் ஆசிரியர் குமரவேல் தெரிவித்தார்.

5ஆண்டுகளில் 16 மாணவர்கள் பலி

பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தீவிரமான எதிர்ப்பு நிலவுகிறது. மாணவர்கள் தற்கொலைகளும் அதிகமாக நடக்கின்றன. மேலும் தமிழ்நாட்டுக்கு நீட் வந்தபின் 2017ல் நடந்த அனிதா தற்கொலை உள்பட கடந்த 5 ஆண்டுகளில் குறைந்தது 16 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

உளவியலாளர் கூறுவது என்ன?

நீட் மரணங்கள்

மாணவர்கள் தற்கொலை குறித்து உளவியலாளர் வி.சுனில் குமாரிடம் பிபிசி தமிழ் பேசியது.

"இந்தியாவில் நாள் ஒன்றுக்கு சுமார் 28 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. தற்கொலையை நம்மால் 100 சதவீதம் தடுக்க முடியும். பொதுவாக தற்கொலைக்கு முயற்சிப்பவர்கள் ஒரு எச்சரிக்கை அறிகுறியை வெளிப்படுத்திக் கொண்டேதான் இருப்பார்கள். அப்படி அவர்கள் தற்கொலை எண்ணத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்றால் கவனமாக இருக்க வேண்டும். மற்றும் சிலர் தற்கொலையை பற்றி பேசினால் தற்கொலை செய்து கொள்வர்களோ என்றும் நினைப்பதுண்டு. இந்த அச்சம் காரணமாக அதைப்பற்றி உரிய நபரிடம் பேசாமலே இருப்பார்கள். ஆனால் மிகவும் தவறான அணுகுமுறை.

சம்மந்தப்பட்ட நபர் மீது தற்கொலை எண்ணத்தில் இருக்கிறார்கள் என்ற சந்தேகம் எழுந்தால் உடனடியாக அவர்களிடம் அதைப் பற்றி பேசவேண்டும். அவர்கள் மறுகணம் பேசும்போது அதை செவிகொடுத்து கேட்க வேண்டும். அந்த நேரத்தில் அவர்களிடம் புத்திமதி கூறுவது, நீதிக்கதைகள் திணிப்பது போன்றவற்றால் தற்கொலையை தடுக்க முடியாது. அவர்கள் முழுவதுமாக கூறிய பிறகு பெற்றோர் சரியான முறையில் அணுகலாம். ஒருவேளை பெற்றோரால் கையாள முடியாத சூழலில் மனநல ஆலோசகரை அணுகவேண்டும்," என்று உளவியலாளர் வி.சுனில் குமார் கூறுகிறார்.

மாணவர்களுக்கு மனநல ஆலோசனை

நீட் தேர்வு எதிரொலியாக மாணவர்கள் தொடர் தற்கொலை காரணமாக நீட் தேர்வில் மனநலம் சார்த்த ஆலோசனை பெறுவதற்கு 104 என்ற இலவச தொலைபேசி எண்ணை தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.

அப்போது பேசிய அவர், "இந்த எண்ணை தொடர்பு கொண்டால் மனநல மருத்துவர்களும், மருத்துவ ஆலோசகர்களும் எப்போதும் தயார் நிலையில் இருப்பார்கள். உடல் பலம், மன பலம் கொண்டவர்களாக மாணவர்களை வளர்க்க வேண்டும். பெற்றோர்களும் அவர்களது பிள்ளைகளுக்கு அளவுக்கு அதிகமான அழுத்தம் கொடுக்க வேண்டாம்," என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

மன அழுத்தம், தற்கொலை எண்ணம் உடையோர் உளவியல் ஆலோசனைக்கு 24 மணி நேர அரசு உதவி எண் 104-ஐ தொடர்பு கொள்ளவும்.

https://www.bbc.com/tamil/india-58610106

Link to comment
Share on other sites

 • 1 month later...
 • கருத்துக்கள உறவுகள்

நீட் தேர்வு தமிழ்நாட்டில் உள்ள ஏழை மாணவர்களுக்கு எதிராக கொண்டுவரபட்டதாக ஒரு கருத்து உண்டு
தமிழ்நாட்டில் மிகவும் ஒடுக்கபட்டு ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் பழங்குடி இனத்தவர்களே.ஜெய்பீம் என்ற தமிழ்படம் பற்றிய யாழ்கள விமர்சனங்களிலும் காணலாம்.


தமிழ்நாட்டில் அப்படியான பழங்குடி இனத்தை சேர்ந்த அப்பா இல்லாத பாதிக்கபட்ட தாயுடன் வசித்து வரும் ஒரு  ஏழை மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற்று MBBS படிக்க போகின்றார் 👍
https://timesofindia.indiatimes.com/city/coimbatore/first-tribal-girl-to-pass-class-xii-clears-neet/articleshow/87494389.cms

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • யாழில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் – சம்பிக்க!       யாழ்ப்பாணத்தின் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு இன்று (சனிக்கிழமை) விஜயம் செய்துள்ள முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது, மேலும் தெரிவித்த அவர், “நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் கொழும்பு, காலி போன்ற நகரங்களினை போல யாழ்ப்பாண நகரத்தினையும் அபிவிருத்தி செய்யும் முகமாக பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் பல மில்லியன் ரூபாய் செலவில் பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக தூர இடங்களுக்கான பேருந்து தரிப்பு நிலையம், யாழ்ப்பாண மாநகர சபைக்கான புதிய கட்டடத் தொகுதி உட்பட மேலும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் தற்போது அவ்வாறான திட்டங்களை தொடர்வதற்கான நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் இந்த அரசினால் நிறுத்தப்பட்டுள்ளன. ஏன் அவ்வாறு செய்கின்றார்களென தெரியவில்லை. அரசியல் பழிவாங்கலுக்காகவே இவ்வாறு செய்கின்றார்கள் என நினைக்கின்றேன். ராஜபக்ஷக்கள் தமது பெயர் குறிப்பிடப்படும் அபிவிருத்தி திட்டங்களை மாத்திரமே செயற்படுத்துவார்கள் மக்கள் நலன் சார்ந்து செய்யப்பட மாட்டார்கள் என்பதே உண்மை. நான் யாழ்ப்பாணத்திலிருந்து இந்த அரசாங்கத்திற்கு ஒரு கோரிக்கையை முன் வைக்கின்றேன். தடைப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கி மக்கள் சார்ந்த திட்டங்களை முன்னெடுங்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.   https://athavannews.com/2021/1254306
  • ஐ.நாவில் ஈழத்து பெண்ணுக்கு கிடைத்த மிகப்பெரும் கெளரவம் யுனிசெஃப் இன் 75வது ஆண்டு பொன்விழா சர்வதேச மாநாட்டில் இளம் தலைமுறையின் முன்னுதாரண தலைமைத்துவ விருந்தினர் பேச்சாளராக ஈழத்து பெண் செல்வி. G.சாதனா (G. Sadhana) தமிழ் டயஸ்போறா அலையன்ஸ் Tamil Diaspora Alliance சார்பாக உரையாற்றுகிறார். Tamil Diaspora Alliance என்ற அமைப்பை புலம் பெயர் சமூகங்களின் இளைய தலைமைத்துவ அமைப்பாக இந்த சர்வதேச மாநாட்டுக்கு அழைப்பு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) விடுத்திருக்கிறது. மேலும், இந்த சர்வதேச மாநாட்டில் பிரதிநிதியாக அமைப்பின் செயல் திட்டக்குழு பிரதி இயக்குனர் G.சாதனா (G. Sadhana) கலந்துகொள்கிறார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் உட்பட ஐ. நா சபையின் பல அங்கத்துவ அமைப்பின் இயக்குனர்களும் உரையாற்றவுள்ளனர். இதேவேளை, புலம்பெயர் தமிழர் அமைப்பு ஒன்று சிறந்த தலைமைத்துவத்திற்காக சர்வதேச மாநாட்டிற்காக கலந்து கொள்ள அழைக்கப்படுவது இதுவே முதல்முறை என்று தெரியவந்துள்ளது. மேலும், வெவ்வேறு அமர்வுகளாக நடக்கும் இந்த மாநாட்டில் வரும் 7ஆம் திகதி G.சாதனா உரையாற்றுகிறார் என்று யுனிசெஃப் இன் இணையப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.     https://www.thaarakam.com/news/191b5e2c-0096-4d83-a0fd-4a2953565e24
  • இலங்கையில் அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தி அமெரிக்க பிரதிநிதிகள் அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு கடிதம் இலங்கையில் அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தி அமெரிக்க பிரதிநிதிகள் கிரிகோரி டபிள்யூ. மீக்ஸ் மற்றும் மைக்கல் மெக்கால் ஆகியோர் அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.இலங்கை மக்களின் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்லும் அதே வேளையில், இந்த முயற்சியை ஆதரிக்கவும் அதற்கான வசதியை ஏற்படுத்தி கொடுக்கவும் அமெரிக்கா தயாராக உள்ளது என்பதை திணைக்களம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். இறுதியில், எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் தமிழ் , முஸ்லிம் மக்கள் உட்பட இலங்கை பிரஜைகள் அனைவரினதும் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இருக்க வேண்டிய அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து ஏறக்குறைய 30 ஆண்டுகாலம் நிறைவடைந்துள்ள நிலையில் பிரிக்கப்படாத இலங்கையில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு உட்பட அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களுக்கான அவசியம் குறித்தும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆகவே அத்தகைய தீர்வுகளைக் காண தமிழ் மற்றும் முஸ்லிம்கள் உட்பட எதிர்க்கட்சிகளுடன் அரசாங்கத்தின் ஈடுபாட்டை வலியறுத்துமாறும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தை அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.கணிசமான மற்றும் நீடித்த அரசியல் தீர்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இலங்கையில் அதன் முயற்சிகளில் மீண்டும் கவனம் செலுத்துமாறு அவர்கள் அண்டனி பிளிங்கனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.(15)     http://www.samakalam.com/இலங்கையில்-அரசியல்-தீர்வ/
  • தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழுவொன்று அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பொன்றை ஏற்படுத்தித் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த சிலகாலமாகக் கோரிக்கை விடுத்து வந்தது.இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழுவொன்று அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த குழுவில் இரா சம்பந்தனுடன் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் எம். ஏ.சுமந்திரன் ஆகியோரும் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கடந்த தினம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனடிப்படையில் எதிர்வரும் ஓரிரு தினங்களில் இரா.சம்பந்தன் தலைமையிலான தூதுக் குழுவொன்று இந்தியாவுக்குச் செல்லவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.(15)   http://www.samakalam.com/தமிழ்த்-தேசியக்-கூட்டமை-41/  
  • கடலில் நீராடிக் கொண்டிருந்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு December 4, 2021 திருகோணமலை – ஈச்சிலம்பற்று காவல்துறைப் பிரிவிலு ள்ள வாழைத்தோட்டம் கடலில் நீராடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனா். நேற்று (03) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிாிழந்த இரு சிறுவா்களினதும் உடல்கள் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு நேற்றிரவு திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பாடசாலை விட்டுச் சென்ற நான்கு சிறுவர்கள் வாழைத்தோட்டம் கடலில் நீராடிய போது குறித்த இரண்டு சிறுவர்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளனர். உயிர் தப்பிய ஏனைய சிறுவர்கள் இருவரும் பிரதேச மக்களிடம் சம்பவம் குறித்து தெரிவித்ததையடுத்து கடலில் தேடுதல் மேற்கொண்ட போது இரு சிறுவர்களதும் உயிரிழந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தரம் 09 இல் கல்வி கற்கும் யோகேந்திர ராசா லக்சன் வயது (14), தரம் 06 இல் கல்வி கற்கும் டினேஸ்காந்த் நிம்ரோசன் வயது (12) ஆகிய மாணவர்களே உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனர்.   https://globaltamilnews.net/2021/169823  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.