Jump to content

டிக்கிலோனா': சந்தானம் மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்வதாக சர்ச்சை - என்ன நடந்தது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டிக்கிலோனா': சந்தானம் மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்வதாக சர்ச்சை - என்ன நடந்தது?

  • ச. ஆனந்தப்பிரியா
  • பிபிசி தமிழுக்காக
21 நிமிடங்களுக்கு முன்னர்
சந்தானம்

பட மூலாதாரம்,@IAMSANTHANAM

 
படக்குறிப்பு,

நடிகர் சந்தானம்

நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க ஓடிடியில் நேரடியாக வெளியான திரைப்படம் 'டிக்கிலோனா'. இதில் மாற்றுத்திறனாளிகள் குறித்து, நகைச்சுவை என்ற பெயரில் சந்தானம் பேசியிருக்கும் சில வசனங்களும், பெண்கள் சுதந்திரம், உடை குறித்த சில கருத்துகளும் பொது வெளியில் சர்ச்சையை கிளப்பி இருக்கின்றன. அது என்ன சர்ச்சை? அது ஏன் விவாதமாகியிருக்கிறது?

தமிழ்நாட்டில் கொரோனா தீவிரத்தின் இரண்டாம் அலை தணியத் தொடங்கிய நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தியேட்டர்கள் திறக்கப்பட்டன.

'தலைவி', 'லாபம்' ஆகிய படங்கள் தியேட்டரில் வெளியாக 'துக்ளக் தர்பார்' திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியிலும் பின்னர் இரண்டு நாட்கள் கழித்து ஓடிடி தளத்திலும் வெளியானது.

இந்த படங்களோடு நடிகர் சந்தானம் நடித்த 'டிக்கிலோனா' திரைப்படம் நேரடியாக ஜீ5 தமிழ் (Zee5 Tamil) ஓடிடி தளத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

இந்த கதையில் இடம் பெற்றுள்ள சில வசனங்களும், காட்சிகளும்தான் தற்போது சர்ச்சைகளுக்கு வழி வகுத்திருக்கின்றன.

சந்தானம்

பட மூலாதாரம்,@IAMSANTHANAM

என்ன கதை?

ஹாக்கி விளையாட்டு வீரராக விரும்பும் சந்தானம், இந்த படத்தில் மணி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கிறார். அவர் நினைத்தபடி ஹாக்கி வீரராக ஆக முடியாமல் போக தான் விரும்பிய பெண்ணான ப்ரியாவை திருமணம் செய்து கொள்கிறார். இதன் பின்பு அவருக்கு மின் வாரியத்தில் வேலை கிடைக்கிறது. இதனால், மனைவியுடன் தொடர்ந்து சண்டை வர ஒரு கட்டத்தில் கால எந்திரத்தில் பயணிக்கும் வாய்ப்பு திடீரென கிடைக்கிறது. அதில் கடந்த காலத்திற்கும், எதிர் காலத்திற்கும் பயணிக்கிறார் சந்தானம்.

கடந்த காலத்துக்கு பயணம் செய்து தனது திருமணத்தில் நடந்த தவறை சரி செய்கிறார் சந்தானம். தான் காதலித்த ப்ரியாவுடனான திருமணத்தை நிறுத்தி விட்டு, தன்னை விரும்பிய மற்றொரு பெண்ணை திருமணம் செய்கிறார். பின்பு இந்த கதையில் என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவை கலந்து படமாக்கி இருக்கிறார்கள்.

வசன சர்ச்சை

இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், படத்தில் இடம் பெற்றுள்ள சில வசனங்களும், உருவ கேலி குறித்த காட்சியமைப்பு, ரசிகர்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக படத்தில் மாற்று திறனாளி ஒருவரை ஆட்சேபத்துக்குரிய வகையில் குறிப்பிட்டிருப்பது, பெண்களின் சுதந்திரம் அடுத்தவர்களை பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது, பணக்கார பெண்கள் எப்போதுமே 'பார்ட்டி' செய்வார்கள் என்பது போலவும், குடும்ப பெண்கள் எப்படி உடை உடுத்த வேண்டும் என வகுப்பெடுப்பது போல இடம்பெற்ற காட்சிகளும், படத்தில் பல பிற்போக்கு தனமான காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்று இருப்பதாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

நடிகர் சந்தானத்தின் படங்கள் என்றாலே அவற்றில் உருவ கேலி வசனங்களும் காட்சிகளும் 'நகைச்சுவை' என்ற பெயரில் இடம் பெறுவதாக ஏற்கெனவே ஒரு சர்ச்சை உள்ளது. தற்போது வெளியாகியுள்ள டிக்கிலோனா படத்திலும் அத்தகைய வசனங்கள் உள்ளதாக கூறப்படுவதால் அவை சர்ச்சை ஆகியிருக்கின்றன.

மாற்றுத்திறனாளிகள் சங்கம் கண்டனம்

நம்புராஜன்

பட மூலாதாரம்,NAMBURAJAN

'டிக்கிலோனா' படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளுக்கும், மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்வது போன்று இடம் பெற்றிருக்கும் வசனங்களுக்கும் கண்டனம் தெரிவித்து, டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் தீபக் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நகைச்சுவை என்பது மன இறுக்கத்தை குறைக்க வேண்டுமே தவிர மனதை நோகடிக்க கூடாது எனவும், இயற்கையின் வினையால் ஏற்பட்ட உடல் பாதிப்பை நகைச்சுவை என்ற பெயரில் காட்சிப்படுத்துவது சமூகத்தின் பண்பு இல்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பார்க்கும் வருங்கால சந்ததிகள் நம்மை பிற்போக்காளர்கள் என கருதுவார்கள். பகுத்தறிவை உலகுக்கு எடுத்து சொல்லும் நாம், மாற்று திறனாளிகளை இப்படி நகைச்சுவைக்காக மனம் நோகும்படி சித்திரிப்பது மானமும் அறிவும் மாற்று திறனாளிகளாகிய எங்களுக்கு கிடையாதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு அடி எடுத்து வைக்கவே பல வகையில் சிரமப்படும் இந்த தோழர்கள், இத்தனையும் எதிர்கொண்டு வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடுகிறார்கள். இவர்கள்தான் உண்மையான போராளிகள். இவர்களை இழிவுப்படுத்துவது எந்த வகையிலும் நியாமானது இல்லை.

நகைச்சுவை மக்களை சிரிக்க வைக்கவும், சிந்திக்க வைக்கவும் வேண்டும். ஆனால், அவ்வப்போது இப்படி மனதை கலங்கடிக்கும் காட்சிகளும் படத்தில் இடம்பெறுவது வருத்தமளிக்க செய்கிறது என அந்த அறிக்கையில் தனது வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார், டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக்.

"வருத்தம் தெரிவிக்க வேண்டும்"

மாற்றுத்திறனாளிகளது மனம் நோகும்படி நகைச்சுவை என்ற பெயரில் இடம்பெற்றிருக்கும் இந்த காட்சிகள் குறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான மாநில பொதுச்செயலாளர், எஸ். நம்புராஜன் மாற்றுத்திறனாளிகளை படத்தில் உள்ளது போன்ற வார்த்தைகளால் குறிப்பிடுவது உண்மையில் எரிச்சலூட்டும் விதமாக இருக்கிறது என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மேலோட்டமாக இது நகைச்சுவை என சொல்லப்பட்டாலும் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளை நிச்சயம் இது பாதிக்கும் எனவும் கூறும் அவர், எந்த ஒரு தனிநபரையும் சமூகத்தின் கண்ணியத்தையும் கேலி செய்து கேள்வி கேட்பது போன்றவற்றை நகைச்சுவையாக ரசிக்க முடியாது என்கிறார் நம்புராஜன்.

சந்தானம் நடிகராக இதை செய்திருந்தாலும் படத்தின் இயக்குநர், வசனம் எழுதியவர், படத்தில் உடன் இருந்தவர்கள் என அனைவருக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது என்பவர் இப்போது இளம் வயதில் நன்றாக இருந்தாலும் வயதான பிறகு பலருக்கும் உடல் நலன் சார்ந்து பல பிரச்னைகளை சந்திக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்பதையும் குறிப்பிடுகிறார். மேலும், கைத்தடி என்பது மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமல்ல ஏதேனும் விபத்தில் பாதிக்கப்பட்டாலும், வயதானவர்களுக்கும் தேவைப்படும். அதனால் இது போன்ற விஷயங்களை மிகவும் கவனமாக கையாள வேண்டும் என்கிறார் அவர்.

சம்பந்தப்பட்டவர்களுக்கு அதுதான் ஊன்று கோல், அவர்களுடைய காலாக செயல்படுகிறது. எனவே, எதிர்காலத்தில் இது போன்ற விஷயங்களை திரைப்படங்களில் தவிர்ப்பது மட்டுமல்லாமல் 'டிக்கிலோனா' படக்குழு பொது வெளியில் தங்களது வருத்தத்தையும் பதிவு வேண்டும் என்கிறார் நம்புராஜன்.

படக்குழு தரப்பு விளக்கம் என்ன?

'டிக்கிலோனா' படத்தில் இடம்பெற்றுள்ள இந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்தும், டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து விளக்கம் பெற டிக்கிலோனா படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகியை பிபிசி தமிழ் தொடர்பு கொள்ள முயன்றது. "இது தொடர்பான நெருக்கடியான பிரச்னைகள் சந்தித்து கொண்டிருக்கிறோம்., எது பற்றியும் தற்போது பேச விரும்பவில்லை," என்பதோடு முடித்து கொண்டார் கார்த்திக் யோகி.

https://www.bbc.com/tamil/arts-and-culture-58548775

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.