Jump to content

பார்வையாளர்கள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நிர்வாக உறுப்பினர்களுக்கு,

நான் சில மாதங்கள் யாழுக்கு வரவில்லை. அதற்கு உடல், உள காரணங்கள் இருக்கின்றன. ஒரு மாதத்துக்கு முன்னர் ஒருமுறை வந்தபோது என்னால் யாருக்கும் கருத்து எழுத முடியவில்லை. எரிச்சல் தாங்க முடியாது நிப்பாட்டிப் போட்டுப் போய்விட்டேன். இரு கள உறவுகள் என்னிடம் கேட்டபோது  நான் காரணத்தைக் கூறிவிட்டு வராமல் எங்கே போவது வருவேன்  என்றேன். நேற்று வந்து ஒரு பதிவுக்குக் கருத்து எழுதும்போது கவனிக்கவில்லை.  இன்று வந்து பதில் எழுதிவிட்டுப் பார்க்கும்போது எனது படத்துக்குக் கீழே பிங்க் நிறத்தில் பார்வையாளர் என்றும் மற்றவர்களுக்கு நீலத்தில் உறுப்பினர்கள் என்றும் இருந்தது. இது என்ன கோமாளித்தனம்????? நாம் சிலமாதம் வாராதுவிட்டால் எங்களை நீங்கள் கருத்துக்கள உறவிலிருந்து தூக்கிவிடுவீர்களா ?????? நாம் என்ன சின்னப் பிள்ளைகளா ??? நீ குழப்படி செய்தால் நான் சொக்ளற்  தரமாட்டேன் என்று சிறுவர்களுக்குக் கூறுவது போலல்லாவா இது இருக்கு. இதை நான் யாழ் இணையத்திடம் எதிர்பார்க்கவில்லை.  வரவர உங்கள் செயல்கள் பலரை இங்கு வரவிடாது செய்யுமேயன்றி வேறொன்றுமில்லை.

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முகப்புத்தகத்தில் ரம்மியா கிருஷ்ணன் மாதிரி உட்கார்ந்திருந்த நேரம் அவ்வப்போது இங்கால வந்து எட்டிப் பார்த்துட்டு போயிருந்தால் இந்த துன்பம் ஒன்றும் இல்லயே..🤭👋

பின் குறிப்பு 😄 சத்தியமா எனக்கு ஜெலர்ஸ் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா மோகன்! இப்ப உடனடியாய் சுமேரிக்கு நீல பெயின்ட் அடிக்கிறியள். இல்லையெண்டால் நான் ஒரு நீல சுண்ணாம்பு வாளி வாங்கி அனுப்புறன்? 😁
ஆரோடை என்ன சேட்டை எண்டு கேக்கிறன்? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து நிர்வாக உறுப்பினர்கள் இருந்தும் யாருமே 10 மணித்தியலங்களுக்கு முன்னர் போட்ட பதிவுக்குப் பதில் போடவில்லை. சரி நான் இனிமேல் பார்வையாளராக மட்டும் இருந்துகொள்கிறேன். நன்றி

Link to comment
Share on other sites

10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வணக்கம் நிர்வாக உறுப்பினர்களுக்கு,

நான் சில மாதங்கள் யாழுக்கு வரவில்லை. அதற்கு உடல், உள காரணங்கள் இருக்கின்றன. ஒரு மாதத்துக்கு முன்னர் ஒருமுறை வந்தபோது என்னால் யாருக்கும் கருத்து எழுத முடியவில்லை. எரிச்சல் தாங்க முடியாது நிப்பாட்டிப் போட்டுப் போய்விட்டேன். இரு கள உறவுகள் என்னிடம் கேட்டபோது  நான் காரணத்தைக் கூறிவிட்டு வராமல் எங்கே போவது வருவேன்  என்றேன். நேற்று வந்து ஒரு பதிவுக்குக் கருத்து எழுதும்போது கவனிக்கவில்லை.  இன்று வந்து பதில் எழுதிவிட்டுப் பார்க்கும்போது எனது படத்துக்குக் கீழே பிங்க் நிறத்தில் பார்வையாளர் என்றும் மற்றவர்களுக்கு நீலத்தில் உறுப்பினர்கள் என்றும் இருந்தது. இது என்ன கோமாளித்தனம்????? நாம் சிலமாதம் வாராதுவிட்டால் எங்களை நீங்கள் கருத்துக்கள உறவிலிருந்து தூக்கிவிடுவீர்களா ?????? நாம் என்ன சின்னப் பிள்ளைகளா ??? நீ குழப்படி செய்தால் நான் சொக்ளற்  தரமாட்டேன் என்று சிறுவர்களுக்குக் கூறுவது போலல்லாவா இது இருக்கு. இதை நான் யாழ் இணையத்திடம் எதிர்பார்க்கவில்லை.  வரவர உங்கள் செயல்கள் பலரை இங்கு வரவிடாது செய்யுமேயன்றி வேறொன்றுமில்லை.

வணக்கம்

கருத்துக்கள நிபந்தனைகளில் இவ்வாறு உள்ளது.

Quote

கருத்துக்கள பார்வையாளர்கள்:
இக்குழுமத்தில் உள்ளவர்களுக்கு யாழ் கருத்துக்களத்தின் சகல பகுதிகளிலும் புதிய தலைப்புக்களைத் திறக்கவும், கருத்துக்களைப் பதியவும், திண்ணையில் உரையாடவும் அனுமதி உண்டு. எனினும் விருப்பப் புள்ளிகள் இடவும், மறைவாக (Anonymous) கருத்துக்களத்தினுள் உள்நுழையவும் முடியாது. கருத்துக்களத்தில் ஒரு குறிப்பிட்ட காலம் கருத்துக்கள் பதியாமல் இருப்பவர்கள் தானியங்கியால் இக்குழுமத்திற்கு நகர்த்தப்படுவார்கள்.

இவ் நிபந்தனை ஏற்றுக் கொண்டே உள்நுழைந்துள்ளீர்கள். மீளவும் நிபந்தனைகள் விதிமுறைகளை வாசிப்பதற்கு இணைப்பு கீழே உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கொடுத்திருக்கும் Rank பற்றிய விபரம் எதுவும் நீங்கள் போட்ட லிங்கில் இல்லையே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வணக்கம் நிர்வாக உறுப்பினர்களுக்கு,

நான் சில மாதங்கள் யாழுக்கு வரவில்லை. அதற்கு உடல், உள காரணங்கள் இருக்கின்றன. ஒரு மாதத்துக்கு முன்னர் ஒருமுறை வந்தபோது என்னால் யாருக்கும் கருத்து எழுத முடியவில்லை. எரிச்சல் தாங்க முடியாது நிப்பாட்டிப் போட்டுப் போய்விட்டேன். இரு கள உறவுகள் என்னிடம் கேட்டபோது  நான் காரணத்தைக் கூறிவிட்டு வராமல் எங்கே போவது வருவேன்  என்றேன். நேற்று வந்து ஒரு பதிவுக்குக் கருத்து எழுதும்போது கவனிக்கவில்லை.  இன்று வந்து பதில் எழுதிவிட்டுப் பார்க்கும்போது எனது படத்துக்குக் கீழே பிங்க் நிறத்தில் பார்வையாளர் என்றும் மற்றவர்களுக்கு நீலத்தில் உறுப்பினர்கள் என்றும் இருந்தது. இது என்ன கோமாளித்தனம்????? நாம் சிலமாதம் வாராதுவிட்டால் எங்களை நீங்கள் கருத்துக்கள உறவிலிருந்து தூக்கிவிடுவீர்களா ?????? நாம் என்ன சின்னப் பிள்ளைகளா ??? நீ குழப்படி செய்தால் நான் சொக்ளற்  தரமாட்டேன் என்று சிறுவர்களுக்குக் கூறுவது போலல்லாவா இது இருக்கு. இதை நான் யாழ் இணையத்திடம் எதிர்பார்க்கவில்லை.  வரவர உங்கள் செயல்கள் பலரை இங்கு வரவிடாது செய்யுமேயன்றி வேறொன்றுமில்லை.

இன்று உங்களுக்கு

நாளை ???☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதுகளை விட்டுட்டு நல்ல கதைகள் இரண்டு எழுதிப் போடுங்கோ.......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

உதுகளை விட்டுட்டு நல்ல கதைகள் இரண்டு எழுதிப் போடுங்கோ.......!  😁

அப்ப சமையல்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, சுவைப்பிரியன் said:

அப்ப சமையல்.😁

அது கொரோனாவோடு மூடியாச்சு எல்லாருக்கும் உள்ள நிலைமை தான்😄👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஐந்து நிர்வாக உறுப்பினர்கள் இருந்தும் யாருமே 10 மணித்தியலங்களுக்கு முன்னர் போட்ட பதிவுக்குப் பதில் போடவில்லை. சரி நான் இனிமேல் பார்வையாளராக மட்டும் இருந்துகொள்கிறேன். நன்றி

அன்ரி கண்டது சந்தோசம்.

உவயள் நிர்வாகம் என்ன சொன்னால் என்ன - நீங்கள் எப்பவவும் யாழில் மேற்பார்வையாளர் (சூப்பவைசர்) தானே🤣.

சும்மா எல்லா திரியிலும் பூந்து கருத்தை எடுத்து விடுங்கோ - வெகு விரைவில் இழந்த உரிமைகள் மீள வரும்.

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

இன்று உங்களுக்கு

நாளை ???☹️

விசுகு,

யாழில் இணைந்துள்ளவர்கள் தொடர்ந்து கருத்து எதுவுமே எழுதாமல் இருந்து கொண்டு வெறுமனே பச்சைப் புள்ளிகளை மட்டும் வழங்கிக் கொண்டு இருப்பதை தவிர்ப்பதற்காகவே இந்த பார்வையாளர் எனும் உறுப்பினர் பிரிவு கொண்டுவரப்பட்டது. முன்னைய காலங்களில் ஒரு சில உறுப்பினர்கள் குழுவாக இவ்வாறு செயல்பட்டதும் அவதானிக்கப்பட்டது. அத்துடன் கருத்துகள் எதுவும் எழுதாத உறுப்பினர்களும், கருத்துகளை தொடர்ந்து எழுதும் உறுப்பினர்களும் ஒரே உறுப்பினர் பிரிவில் இருப்பதும் கருத்துகளம் ஒன்றுக்கு சரியானதாகவும் அமையாது. இக் காரணங்களினால் தான் இப் பிரிவு உருவாக்கப்பட்டு தானியங்கி மூலம் இயக்கப்படுகின்றது.

பார்வையாளர் பிரிவுக்கு தானியங்கி மூலம் நகர்த்தப்படுகின்றவர்கள், மீண்டும் ஆரோக்கியமான கருத்துகளை வைக்கும் போது யாழ் இணைய பொறுப்பாளர்களில் ஒருவரால் மீண்டும் கருத்துக்கள உறவுகள் பிரிவுக்கு நகர்த்தப்படுவர்.

இந்த விடயம் பற்றி யாழில் பலமுறை மட்டுறுத்துநர்களால் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டு இருக்கு. ஆனால் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான நீங்களே எந்த பொறுப்புணர்வும் இன்றி இப்படியான பதில்களை வைத்து ஏனைய உறுப்பினர்களின் மனதிலும் வீண் சந்தேகங்களை எழுப்புவது நிச்சயம் ஆரோக்கியமானதாக அமையாது.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

அப்ப சமையல்.😁

சும்மா கதிரையில் குந்தியிருந்து கொண்டு நாலு பந்தி தட்டச்சுறதுக்கும் ..........ஒரு கையில் கரண்டி மறுகையில் காமரா அடுப்பில கறியும் வைத்துக் கொண்டு தாதிங்கணத்தோம் போடுவதற்கும் உள்ள சிரமம் உங்களுக்கு புரியவில்லையா.......!   🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா, உது மென்பொருள் வெளையாட்டு..... நாளைக்கு நிழலி லீவில போனாலும் இதுதான் கதை..... நாளைஞ்சு, திரிக்குளை பூந்து சத்த வெடியள் ரெண்டை எறிஞ்சு போட்டு வந்தியள் எண்டால், மென்பொருளுக்கு விளங்கீடும்.... நீஙகள் களத்தில நிககிறியள் எண்டு.....

கலரும் மாறும்..... சமையல் வீடியோவும் போடலாம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அன்ரி கண்டது சந்தோசம்.

உவயள் நிர்வாகம் என்ன சொன்னால் என்ன - நீங்கள் எப்பவவும் யாழில் மேற்பார்வையாளர் (சூப்பவைசர்) தானே🤣.

சும்மா எல்லா திரியிலும் பூந்து கருத்தை எடுத்து விடுங்கோ - வெகு விரைவில் இழந்த உரிமைகள் மீள வரும்.

மேலை ஒராள்  ரம்யா கிருஸ்ணன் மாதிரி எண்டு சொன்னவுடனை எனக்கு நீலாம்பரி ஞாபகம்தான் வந்தது.....😁

Neelambari Ramya Krishnan Ramyakrishnan GIF - Neelambari Ramya Krishnan Ramyakrishnan Ramya GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வணக்கம் நிர்வாக உறுப்பினர்களுக்கு,

நான் சில மாதங்கள் யாழுக்கு வரவில்லை. அதற்கு உடல், உள காரணங்கள் இருக்கின்றன. ஒரு மாதத்துக்கு முன்னர் ஒருமுறை வந்தபோது என்னால் யாருக்கும் கருத்து எழுத முடியவில்லை. எரிச்சல் தாங்க முடியாது நிப்பாட்டிப் போட்டுப் போய்விட்டேன். இரு கள உறவுகள் என்னிடம் கேட்டபோது  நான் காரணத்தைக் கூறிவிட்டு வராமல் எங்கே போவது வருவேன்  என்றேன். நேற்று வந்து ஒரு பதிவுக்குக் கருத்து எழுதும்போது கவனிக்கவில்லை.  இன்று வந்து பதில் எழுதிவிட்டுப் பார்க்கும்போது எனது படத்துக்குக் கீழே பிங்க் நிறத்தில் பார்வையாளர் என்றும் மற்றவர்களுக்கு நீலத்தில் உறுப்பினர்கள் என்றும் இருந்தது. இது என்ன கோமாளித்தனம்????? நாம் சிலமாதம் வாராதுவிட்டால் எங்களை நீங்கள் கருத்துக்கள உறவிலிருந்து தூக்கிவிடுவீர்களா ?????? நாம் என்ன சின்னப் பிள்ளைகளா ??? நீ குழப்படி செய்தால் நான் சொக்ளற்  தரமாட்டேன் என்று சிறுவர்களுக்குக் கூறுவது போலல்லாவா இது இருக்கு. இதை நான் யாழ் இணையத்திடம் எதிர்பார்க்கவில்லை.  வரவர உங்கள் செயல்கள் பலரை இங்கு வரவிடாது செய்யுமேயன்றி வேறொன்றுமில்லை.

வாங்கோ அக்கா, கனநாளாக காணவில்லை.
முந்தி நான் sign in பண்ண பஞ்சிப்பட்டு வாசிச்சுப் போட்டு போயிடுவன், இப்ப இந்த முறையில் இருப்பதால் 2/3 தரம் sign in பண்ணி வாறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  சிலகாலம் வரா விடடால்எல்லோருக்கும் இப்படித்தான் வரும் .

சில பல பதிவுகளை போடுங்க. நீங்க,பழைய ஆள் கருத்துக்கள உறுப்பினர் என வரும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

விசுகு,

யாழில் இணைந்துள்ளவர்கள் தொடர்ந்து கருத்து எதுவுமே எழுதாமல் இருந்து கொண்டு வெறுமனே பச்சைப் புள்ளிகளை மட்டும் வழங்கிக் கொண்டு இருப்பதை தவிர்ப்பதற்காகவே இந்த பார்வையாளர் எனும் உறுப்பினர் பிரிவு கொண்டுவரப்பட்டது. முன்னைய காலங்களில் ஒரு சில உறுப்பினர்கள் குழுவாக இவ்வாறு செயல்பட்டதும் அவதானிக்கப்பட்டது. அத்துடன் கருத்துகள் எதுவும் எழுதாத உறுப்பினர்களும், கருத்துகளை தொடர்ந்து எழுதும் உறுப்பினர்களும் ஒரே உறுப்பினர் பிரிவில் இருப்பதும் கருத்துகளம் ஒன்றுக்கு சரியானதாகவும் அமையாது. இக் காரணங்களினால் தான் இப் பிரிவு உருவாக்கப்பட்டு தானியங்கி மூலம் இயக்கப்படுகின்றது.

பார்வையாளர் பிரிவுக்கு தானியங்கி மூலம் நகர்த்தப்படுகின்றவர்கள், மீண்டும் ஆரோக்கியமான கருத்துகளை வைக்கும் போது யாழ் இணைய பொறுப்பாளர்களில் ஒருவரால் மீண்டும் கருத்துக்கள உறவுகள் பிரிவுக்கு நகர்த்தப்படுவர்.

இந்த விடயம் பற்றி யாழில் பலமுறை மட்டுறுத்துநர்களால் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டு இருக்கு. ஆனால் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான நீங்களே எந்த பொறுப்புணர்வும் இன்றி இப்படியான பதில்களை வைத்து ஏனைய உறுப்பினர்களின் மனதிலும் வீண் சந்தேகங்களை எழுப்புவது நிச்சயம் ஆரோக்கியமானதாக அமையாது.

நன்றி

வணக்கம் தம்பி  நிழலி

அவசரமாக எழுதியதால் நிலாமதி அக்கா எழுதியதைப்போல எழுதமுடியவில்லை

நானும் அதே கருத்தையே  வைத்தேன்

நீங்களும் அவசரமாக பொறுப்பில்லாமல்  என  எழுதியுள்ளீர்கள் என  நினைக்கின்றேன்

சில  பழைய உறப்பினர்கள் இங்கே  எழுத 

ஆதரவளிக்கமுடியாதிருப்பதாக குறை கூறியதை  வைத்தே  எனது கருத்தும்  இருந்தது

நாளை எம்மால்  எழுதமுடியாதநிலை

அல்லது  சில நாட்கள் முடக்கம்  வரும்போது யாழ் களம்  எம்மை மறைத்துவிடப்போகிறது  தானே???

உதாரணத்துக்கு நீங்கள்  இங்கே  குறிப்பிடும் மூத்த  உறுப்பினர்  என்பதும்  நான்  பதிவுகளை  போடும்வரை தானே??

தவறிருந்தால்  மன்னித்தருள்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, யாயினி said:

முகப்புத்தகத்தில் ரம்மியா கிருஷ்ணன் மாதிரி உட்கார்ந்திருந்த நேரம் அவ்வப்போது இங்கால வந்து எட்டிப் பார்த்துட்டு போயிருந்தால் இந்த துன்பம் ஒன்றும் இல்லயே..🤭👋

பின் குறிப்பு 😄 சத்தியமா எனக்கு ஜெலர்ஸ் இல்லை.

விடுப்பு பார்க்கிறதே வேலையாப்போச்சு யாயினிக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

விடுப்பு பார்க்கிறதே வேலையாப்போச்சு யாயினிக்கு 

இதில் விடுப்பு பார்க்க ஒண்ணுமே இல்லை. 👋

யாழுக்காகவாவது ஒரு சின்ன நியூஸ் பேப்பரா இருப்போம் என்ற முயற்சி தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஐந்து நிர்வாக உறுப்பினர்கள் இருந்தும் யாருமே 10 மணித்தியலங்களுக்கு முன்னர் போட்ட பதிவுக்குப் பதில் போடவில்லை. சரி நான் இனிமேல் பார்வையாளராக மட்டும் இருந்துகொள்கிறேன். நன்றி

இந்த நிர்வாகத்தை மிரட்டுற வேலை அதுவும் மோகனை:28_hugging: மிரட்டுகின்ற வேலை வேண்டாம்😎 ....அதை நான் மட்டும் தான் செய்வேன் ...யாழுக்கு சொந்தக்காரியான என்னையே தடுத்து வைத்திருந்தவை tw_worried:
மீண்டும் பழைய படி வந்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள் 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ரதி said:

யாழுக்கு சொந்தக்காரியான என்னையே

இது உங்கள் சொத்து🤣

large.51DC71D0-91EC-46A4-A7C2-2D5D0C8EA30D.jpeg.e6bdef0b4460cde030f206c6b76e159f.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கால இடைவேளைக்கு பிறகு களத்தில் உள் நுழைய முயன்ற பலர்  ஆசைக்கு ஒரு லைக், அதிரடியா ஒரு கருத்து போட முடியவில்லையே என்று ஏங்கியதையும் நிர்வாகத்தின்மீது கோபபட்டதையும் எல்லோரும் பாத்திருக்கிறோம்,

பேசாமல் முகப்பில் இப்படி  ஒரு ஏற்பாடு செய்தால் என்ன?🤔 

Untitledw.png

Link to comment
Share on other sites

8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் கொடுத்திருக்கும் Rank பற்றிய விபரம் எதுவும் நீங்கள் போட்ட லிங்கில் இல்லையே

Rank  ஆனது நிபந்தனைகள் பதிப்பு 4 வெளியிட்ட காலப்பகுதியில் இருக்கவில்லை. இது இவ்வருட நடுப்பகுதி அளவிலேயே இந்தக் களத்திற்குரிய Script உருவாக்கியவர்களால் இணைக்கப்பட்டது. அடுத்த விதிமுறைகள் பற்றிய விடயத்தில் இது பற்றிய விடயங்களைக் குறிப்பிடுகின்றோம்.

4 hours ago, விசுகு said:

வணக்கம் தம்பி  நிழலி

அவசரமாக எழுதியதால் நிலாமதி அக்கா எழுதியதைப்போல எழுதமுடியவில்லை

நானும் அதே கருத்தையே  வைத்தேன்

நீங்களும் அவசரமாக பொறுப்பில்லாமல்  என  எழுதியுள்ளீர்கள் என  நினைக்கின்றேன்

சில  பழைய உறப்பினர்கள் இங்கே  எழுத 

ஆதரவளிக்கமுடியாதிருப்பதாக குறை கூறியதை  வைத்தே  எனது கருத்தும்  இருந்தது

நாளை எம்மால்  எழுதமுடியாதநிலை

அல்லது  சில நாட்கள் முடக்கம்  வரும்போது யாழ் களம்  எம்மை மறைத்துவிடப்போகிறது  தானே???

உதாரணத்துக்கு நீங்கள்  இங்கே  குறிப்பிடும் மூத்த  உறுப்பினர்  என்பதும்  நான்  பதிவுகளை  போடும்வரை தானே??

தவறிருந்தால்  மன்னித்தருள்க

விசுகு, நிழலி தெளிவாகத் தான் குறிப்பிட்டுள்ளார். நிபந்தனைகள் விதிமுறைகள் என்பற்றை ஏற்றுக் கொள்கின்றேன் என அங்கீகரித்து ஏற்றுக் கொண்ட பின்னர் குற்றஞ்சாட்டுவது வருத்தத்திற்குறரியது.

1 hour ago, valavan said:

ஒரு கால இடைவேளைக்கு பிறகு களத்தில் உள் நுழைய முயன்ற பலர்  ஆசைக்கு ஒரு லைக், அதிரடியா ஒரு கருத்து போட முடியவில்லையே என்று ஏங்கியதையும் நிர்வாகத்தின்மீது கோபபட்டதையும் எல்லோரும் பாத்திருக்கிறோம்,

பேசாமல் முகப்பில் இப்படி  ஒரு ஏற்பாடு செய்தால் என்ன?🤔 

Untitledw.png

வணவன் இது சாத்தியமற்ற ஒன்று. அப்படிப் பார்க்கப் போனால் முழு நிபந்தனையினையும் முதல் பக்கத்தில் போட வேண்டியல்லவா வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமது யாழ் கள நதி 24   வருடங்களுக்கு மேலாக  தளம்பாமல் ஓடிக் கொண்டிருக்கிறது . நிர்வாகி எல்லோரையும் சரி சமனாக பார்க்கிறார் விளக்கங்களை சொல்கிறார்  அல்லது மட்டுறுத்தினர் உதவி செய்கிறார்கள்   யாரும் சற்று நீண்ட காலம் வராது இருக்கும்  போது ஏதும் மாறுதல் வந்திருக்கலாம். ஒரு நட்ப்பு ரீதியாக தனி மடல் அல்லது குறை நிறை பகுதியில் கேட்கலாம்  தானே ..எனக்கு ஏன் (உள்நுழைவுகள் )    இவை முடியாமல் இருக்கிறது என , ஒரு சிலருக்குமட்டுமல்ல எல்லாருக்கும் , சில காலம் தாழ்த்தி வரும் போது தடங்கல் வரும் .
நான் புகழ்ச்சிக்காக சொல்லவில்லை  அதை நிர்வகிப்பவருக்கு  தான் அதன் சுமைகளும் ,எவருக்கு எங்கு தடை  வேண்டும் என  நுட்பமாக ( கண்ணுக்குள் விரலைவிட்டு ) கண்காணிக்கும் வலி , சுமை புரியும்.  

வாழ்க தமிழ் வளர்க நம் யாழ்களம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.