Jump to content

யாழில் சிறப்பு வழிபாட்டில் கலகொட அத்தே ஞானசார தேரர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன மத வேறுபாடு இன்றி அனைவரும் கொரோனா தொற்றில்  இருந்து விடுபட வேண்டியே  யாழ்ப்பாணத்தில் சிறப்பு பூசை வழிபாட்டினை மேற்கொண்டதாக கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

1.jpg

பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் நாட்டில் நாடு கொரோனா  தொற்றில் இருந்து விடுபட வேண்டி இடம் பெற்ற விசேட பூசை வழிபாடுகளின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் மேலும் தெரிவிக்கையில், 

இன்றைய தினம் யாழ்  மாவட்டத்தில் ஒரு விசேட பூசை வழிபாட்டில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கின்றோம் யாழ்ப்பாணத்தில் உள்ள  சிறப்பான விஷ்ணு ஆலயத்தினை தெரிவுசெய்து நயினாதீவு விகாராதிபதி மற்றும்  யாழ்ப்பாண நாகவிகாரை  விகாராதிபதியுடன் இணைந்து வந்திருக்கின்றேன்.

 நாங்கள் ஒரு எதிர்பார்ப்போடு இங்கு வந்திருக்கின்றோம் தற்போதைய நிலைமை  அனைவருக்கும் தெரிந்த விடயம் இலங்கையில் மட்டுமல்ல  உலகம் முழுவதும்  கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தின்  காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

சிலர் நோயினால் பாதிக்கப்பட்டு கஷ்டப்படுகிறார்கள் அது சிங்களவராக இருக்கட்டும் தமிழராய் இருக்கட்டும், எந்த இனத்தவராயினும் அனைத்து இனத்தை சேர்ந்தவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

 சிலர் ஒரு நேர உணவுக்கு கூட வழியில்லாமல் உள்ளார்கள் அதேபோல் சிலருக்கு வேலை இல்லாத பிரச்சனை காணப்படுகின்றது அத்தோடு இந்த நோய் தொற்றுக்கு உள்ளானோர் சிகிச்சை பெறுவதற்கு  அவதிப்படுகிறார்கள்  எந்த இனத்தவராக இருந்தாலும் பிரச்சனையில்லை அனைத்து இன மக்களும் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் 

 கடவுள் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக குறிப்பாக  பௌத்த மதத்தில் நாம் பின்பற்றும் ஒரு விதிமுறையை போல இந்து மதத்தில் உள்ள ஆகம விதி முறையை இணைத்து இந்த தொற்றில்  இருந்து நாடு விடுபட கடவுளிடம் வேண்டி ஒரு விசேட பிரார்த்தனை மேற்கொண்டுள்ளோம்

தற்பொழுது பௌத்த  இந்து  இஸ்லாம்  என்ற பேதத்தை மறந்து  அனைவரும் இணைந்து இந்த கொரோனா நோயிலிருந்து  விடுபடுவதற்காக ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.

இலங்கையில் நான்கு பிரதான விஷ்ணு ஆலயங்கள் காணப்படுகின்றன அதில் ஒன்று தான் இங்கு யாழ்ப்பாணம் பொன்னாலை வரதராஜ பெருமாள்  விஷ்ணு ஆலயத்தில் இந்த விசேட பூஜை வழிபாட்டை மேற்கொண்டுள்ளோம்  கடவுளிடம் மன்றாடி  இந்த விஷேட பூசை வழிபாடு மேற்கொண்டுள்ளோம்.

ஏனைய இடங்களிலும் இந்த பூசை வழிபாடுகள் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அத்தோடு என்னுடன் இணைந்து ஏனையவிகாராதிபதிகளும் இந்த நிகழ்வில் இணைந்திருந்தார்கள்.

இந்த கொரோனா  நோயின் தாக்கமானது  கல்வி சுகாதாரம் பொருளாதாரம் ஆகிய அனைத்து விடயங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது இது இலங்கையில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதிலிருந்து விடுபடுவதற்கு நாம் ஒரு முயற்சியாகவே அதாவது உலகத்தில் உள்ள மக்கள் இந்த நோயிலிருந்து விடுபட வேண்டும் மக்கள் துன்பத்தில் இருந்து விடுபட வேண்டியே இந்த விஷேட பூசை வழிபாட்டினை ஏற்பாடு செய்துள்ளோம்.

அரசியல் இன மத வேறுபாடு இன்றி அனைத்து மக்களும் நோயிலிருந்து விடுபட வேண்டியே இன்றைய தினம் இந்த வழிபாட்டினை மேற்கொண்டுள்ளோம்  குறித்த வழிபாட்டின் மூலம் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்தார். 

யாழில் சிறப்பு வழிபாட்டில் கலகொட அத்தே ஞானசார தேரர் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பிழம்பு said:

சிலர் நோயினால் பாதிக்கப்பட்டு கஷ்டப்படுகிறார்கள் அது சிங்களவராக இருக்கட்டும் தமிழராய் இருக்கட்டும், எந்த இனத்தவராயினும் அனைத்து இனத்தை சேர்ந்தவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இயற்கை பேதம் பார்ப்பதில்லை, அப்போ நீங்கள் சமதர்மம் பேசுவீர்கள். அது கடந்ததும் உங்கள் ஆட்டம் தொடரும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் விழும்போது எல்லாம் விஸ்ணுவும் சிவனும் மாதாவும்  அவர்களின் கண்ணுக்கு தெரிவார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

சிங்களம் விழும்போது எல்லாம் விஸ்ணுவும் சிவனும் மாதாவும்  அவர்களின் கண்ணுக்கு தெரிவார்கள் .

புத்தர் மட்டும் தெரிவதில்லை அதனாற்தான் வடக்கிற்கு வந்திருக்கிறார். தமிழருக்கு சவால் விட்டவர் இப்போ வேண்டுகோள் விடுகிறார். காலம் எவ்வளவு விந்தையானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, satan said:

 தமிழருக்கு சவால் விட்டவர் இப்போ வேண்டுகோள் விடுகிறார். காலம் எவ்வளவு விந்தையானது.

போர் வெற்றியை கொண்டாடிய வீடியோ நாடா இருந்தால் யாராவது  இணைத்து விட்டால் நல்லது 🤣 2009 மட்டும் புலியாகவும் அதன்பின் சிங்கள அரசின் கால் ................ இருந்த ஆட்களிடம் கட்டாயம் இருக்கும் என்று நினைக்கிறன் .

முக்கியம் கோத்தபாய திறமையாக ஆட்சி புரிகிறார் என்று சவால் விடும் விண்ணர்களை தேடுகிறேன் .

திறமையாக கோரனோவை கட்டுப்படுத்துகிறார் என்று இதே யாழில் சொல்லியவர்களை தேடுகிறேன் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

சிங்களம் விழும்போது எல்லாம் விஸ்ணுவும் சிவனும் மாதாவும்  அவர்களின் கண்ணுக்கு தெரிவார்கள் .

ஒரு வேளை சைவ கடவுள்கள் அவர்களை காப்பாற்றுறார்களோ🤭🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு வேளை சைவ கடவுள்கள் அவர்களை காப்பாற்றுறார்களோ🤭🤭

மாதா சைவ கடவுளா  எப்ப மாறினாங்க பாஸ் ?

தங்கடை  இனத்துக்கு பாரிய பாதிப்பு என்றால் தொப்பி பிரட்டிகளை  விட மோசமானவர்கள் சிங்கள இனவாதிகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

மாதா சைவ கடவுளா  எப்ப மாறினாங்க பாஸ் ?

நீங்க எழுதி இருப்பதில் சைவ கடவுள்கள் முதலில் இருப்பதால் சைவ கடவுள் என எழுதிவிட்டேன்

நான் எல்லா மத ஸ்தலங்களுக்கும் செல்பவன் அதனால எனக்குள் சாமி பாகுபாடு கிடையாது எங்கள் பிரதான வீதியில் இருக்கும் மாதா சிலைக்கு பூ வைத்து உண்டியலில் காசும் இடுவோம் அவர்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என ஆனால் அவர்களும் ஒன்றும் செல்வதில்லை ஆனால் இடையில் மாறிய கஜானா கோஷ்டிதான் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.