Jump to content

எகிப்தியர்கள் பயன்படுத்திய ஆணுறை- History of condom


Recommended Posts

condom-factory.jpeg

 

 

 

பாலியல் நோய்களில் இருந்து பாதுகாப்புப்பெறுவதற்கும் கருத்தடைக்குமாகவே நாம் இப்போது ஆணுறைகளைப்பயன்படுத்திவருகின்றோம் ஆணுறை தற்போது இறப்பரினால் உருவாக்கப்படுகின்றது என்பது அனைவருக்கும் தெரிந்தவிடயம் இந்த ஆணுறையை மனிதன் எப்போது பயன்படுத்த ஆரம்பித்தான் என்று நீங்கள் சிந்தித்திருக்கின்றீர்களா ?ஆணுறையை பயன்படுத்த ஆரம்பித்தவரலாறு இன்று நேற்று தோன்றியதல்ல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதன் ஆணுறைகளை பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றான் அவன் பயன்படுத்த ஆரம்பித்த காலங்களில் எயிட்ஸ் போன்ற பாலியல் நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை கருத்தடையைமேற்கொள்வதுதான் ஆணுறைபயன்பாட்டின் முக்கிய நோக்கமாக இருந்தது

 

எகிப்தியர்கள் கிரேக்கர்கள் சுமேரிய நாகரீகத்தவர்கள் ஆணுறைகளைப்பயன்படுத்தியதற்கான பதிவுகள் ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள் பிரான்ஸில் கண்டுபிடிக்கப்பட்ட 15 000 வருடங்கள் பழமையான குகை ஓவியத்தில் ஆணுறையின் ஓவியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

egypth%2Bcondom.jpg

 

 

கிமு3000 ஆண்டளவில் நடைபெற்றதாக கூறப்படும் கிரேக்க வரலாற்று சம்பவங்களில் ஆணுறைபயன்பாடுபற்றிய கதை ஒன்று உள்ளது

கிமு 3000 ஆண்டில் கெனோஸிஸ் என்ற நாட்டை மைனோஸ் என்ற மன்னன் ஆண்டுகொண்டிருந்தான் இந்த மன்னருக்கு ஒரு சாபம் இருந்தது இவரது விந்தில் தேளின் விஷம் இருக்கும் என்பதுதான் அது இதன் காரணத்தால் மன்னன் யாருடன் உடலுறவுகொண்டாலும் உடனே அந்தப்பெண் இறந்துவிடுவார் மன்னனின் மகாராணியும் இதன் காரணத்தால் இறந்துவிட வாரிசு கிடைக்கவழியில்லையே என்று மன்னன் மிகுந்த துன்பத்தில் இருந்தான்

condom%2Bstory.jpg

 

அப்போது பைஸ்பே என்ற பெண் இதற்கான உத்தியொன்றை கண்டுபிடித்து மன்னருக்கு தெரிவித்தாள் ஆட்டின் சிறு நீர்ப்பையை உடலுறவின்போது பயன்படுத்திக்கொண்டால் பெண்கள் இறக்கமாட்டார்கள் என்பதுதான் அவள்கூறிய யோசனை மன்னன் அந்த யோசனையை அவளிடமே பயன்படுத்தி வரிசையாக 8 பிள்ளைகளுக்கு தந்தையானான் என்பதுவேறுகதை

வரலாற்றுக்கதைகளில் ஆணுறை பயன்பாடை உள்ளடக்கிய முதலாவது மிகப்பழமையான கதை இந்தக்கதைதான் ஆனால் ஆட்டின் சிறு நீர்ப்பையை பெண்ணின் குறிக்குள் உறையாகப்பயன்படுத்தப்பட்டதா அல்லது அரசன் அதை ஆணுறையாகப்பயன்படுத்தினானா என்பது இன்னும் விவாதப்பொருளாகவே உள்ளது இருந்தாலும் ஆணுறைப்பயன்பாடு பற்றிய வரலாறு  இங்கிருந்துதான் ஆரம்பிக்கின்றது

அடுத்ததாக ஆணுறைகளைப்பயன்படுத்தியவர்கள் எகிப்தியர்கள் இவர்கள் துணிகளை ஆணுறைகளாகப்பயன்படுத்திக்கொண்டார்கள் எதிர்பார்த்ததுபோல் இந்தமுறை அவளவுக்கு பலனளிக்கவில்லையாயினும் இவற்றைத்தான் அவர்கள் தொடர்ந்துபயன்படுத்தினார்கள் அதோடு சமூக அந்தஸ்துக்கு ஏற்றவகையில் தமது உடைகளில் வித்தியாசமான நிறங்களை அணிவது எகிப்தியர்களின் வழக்கமாக இருந்தது அதே நிறத்தை ஆணுறைக்கும் இவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்

download.jpg

 

 

அடுத்து ஆணுறையைப்பயன்படுத்தியவர்கள் ரொமேனியர்கள் கலை கலாச்சாரம் கட்டிடத்துறை என அனைத்திலும் தமக்குரிய தனித்துவத்துடன் மிளிர்ந்தவர்கள் ரொமேனியர்கள் ஆனால் இவர்களுடைய காலத்திலேயே பாலியல் நோய்கள் பரவ ஆரம்பித்திருப்பதை உணர்ந்துகொண்டார்கள் ரொமேனிய மருத்துவர்கள் இதற்காகவே இவர்கள் ஆணுறைகளை உருவாக்கினார்கள் இவர்கள் துணிகளைமட்டும் பயன்படுத்தவில்லை இறந்தவிலங்குகளின் குடல்களையும் ஆணுறைகளாகப்பயன்படுத்திக்கொண்டார்கள் இறந்தவிலங்குகளின் குடல்களைப்பதப்படுத்தி ஆணுறைகளாக ரொமேனியர்காள் பயன்படுத்திக்கொண்டார்கள்

romanians.jpg

 

-History-%2BCondom.jpgஇவர்ளுக்கு அடுத்தபடியாக காண்டம்களைப்பயன்படுத்தியவர்கள் ஆபிரிக்க பழங்குடியினத்தவர்களான யூக்கா இனத்தவர்கள் இவர்கள் கிரேக்கர்கள் ரொமேனியர்களைப்போல் அல்லாமல் பெண்களுக்காக ஒரு உபகரணத்தை வடிவமைத்தார்கள் சுமார் 6 இஞ்ச் நீளமுடைய ஒரு மரத்தின் தடியைத்தான் பெண்கள் பயன்படுத்தினார்கள் கர்ப்பத்தடைக்காகத்தான் இது பயன்படுத்தப்பட்டது

 

 

 

video_object.png

 

 

 

ancient_africa.jpg

சீனாவைச்சேர்ந்த மக்கள் ஆணுறைகளை பட்டுத்துணியால் உருவாக்கினார்கள் ஆனால் அவற்றிற்கு சில உராய்வு நீக்கிகளையும் பயன்படுத்திக்கொண்டார்கள் அதோடு கபுடா கட்டா என்றழைக்கப்படும் ஆண்குறியின் நுனியை மூடும் உபகரணம் ஒன்றையும் சீனர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள் பார்ப்பதாற்கு சிறிய ஆமையோடுபோன்றிருந்தாலும் இது இறப்பரினால் உருவாக்கப்பட்டது

chinish%2Bcondom.jpg

இதன்பின்னர் லியார்னாடோ டாவின்சி தன் ஓவியங்களில் ஆணுறைதொடர்பான பல வரைபடங்களை வெளிப்படுத்தினார் இருந்தாலும் கிறீஸ்தவ மதக்கொள்கைகள் இது தொடர்பாக கடும் கண்டனங்களைவெளியிட்டன ஆணுறை பயன்படுத்தல் பாவம் என்று மதத்துக்கு எதிரானது எனவும் அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள்

கப்பிரியோ பலோப்பியோ என்ற பிரபல அனாடமிஸ்ட் இவர்தான் ஆணுறைகளை அடுத்தகட்டத்திற்கு கொண்டுசென்றவர்.இவர்தான் பலோப்பியன் ரியூப் தொடர்பான தெளிவான படங்களை விபரங்களைவெளியிட்டவர் இதனால்தான் பெண்ணின் உடலில் இருக்கும் அந்தப்பாகத்திற்கு பலோப்பியன் டியூப் என்றா பெயர் வைக்கப்பட்டது.ரிபன் போன்ற ஒரு றப்பட் பட்டியை ஆண்குறையை சுற்றிக்கட்டி எச்சிலை லுபிரிகேஸனாகப்பயன்படுத்தி இதை பயன்படுத்தமுடியும் என அறிவித்ததுடன் 1100 ஆண்களில் இதை பரிசோதனை ரீதியாக செய்துபார்க்கும்படி கேட்க பரிசோதனை வெற்றிபெற்றது இதன்பின்னர் விபரம் பிரபலமடைய 17 ஆம் நூற்றாண்டில் சடுதியாக இங்கிலாந்தின் சனத்தொகை வளர்ச்சிவீதம் குறைவடைந்துவிட்டது

 

1640களில் மீன் மற்றும் விலங்குகளின் குடல்கள் ஆணுறையாகப்பயன்படுத்தப்பட்டது முதலாம் சார்லிமன்னன் உள் நாட்டு கலவரங்கள் யுத்தங்களின்போது தன் படைவீரர்களை இந்த ஆணுறைகளைப்பயன்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தான் ஆரம்பத்தில் இந்த மன்னன் துணிகளையே பயன்படுத்தினான் ஆனால் விலைமாதுக்களுடனான உறவில் மன்னர் சிபிலிஸ் நோயால் பீடிக்கப்பட்டார் மன்னனுக்கு சிறுவர்களுடன் உறவுகொள்வதும் பிடித்தமான விடயமாக இருக்க மன்னரது வைத்தியர்தான் மீன் விலங்குகளின் குடலை பயன்படுத்தும் முறையை மன்னருக்கு அறிமுகப்படுத்தினார் அந்த வைத்தியரின் பெயர் என்ன தெரியுமா? கொலோனல் காண்டம் இதன் பின்னர்தான் ஆணுறைக்கு காண்டம் என்ற பெயர் ஏற்பட்டது 1785 இல் இந்த வார்த்தை ஆங்கில அகராதியில் சேர்க்கப்பட்டது

old%2Bcondom%2Bfactory.jpg

18 ம் நூற்றாண்டில் காண்டம் உலகப்பிரபலமடைந்தது விபச்சாரம் நடைபெறும் இடங்களில் இது  அதிகப்படியாக விற்பனைசெய்யப்பட்டது ஆணுறைகளை வாங்கி அவற்றில் ஓட்டை ஏதாவது இருக்கின்றதா என பரிசோதனை செய்தபின்பே அவற்றை பயன்படுத்தமுடியும் அதோடு ஒருதடவை வாங்கினால் போதுமானது இவற்றை மீண்டும் மீண்டும் பயன்படுத்தமுடியும் இப்படித்தான் அப்போதைய ஆணுறைகள் உருவாக்கப்பட்டிருந்தன ஆனால் 19 ஆம் நூற்றாண்டில் ஆணுறைகள் இலட்சக்கணக்கில் உருவாக்க ஆரம்பித்தார்கள் துணிகளால் ஆன ஆணுறைகள் கைவிடப்பட்டன

 

 

ww2%2Bcondom.jpg
1860 இல் அமெரிக்காவை சேர்ந்த சார்லிஸ் குட்யியர் என்பவர்தான் இயற்கை இறப்படினால் ஆணுறைகளை உருவாக்கினார் முதலாம் உலகப்போரில் அமெரிக்க பிரிட்டிஸ் வீரர்களுக்கு ஆயுதங்களுடன் ஆணுறைகளும் அனுப்பிவைக்கப்பட்டன ஆனால் வீரர்களில் பெரும்பாலானவர்கள் இதை பயன்படுத்தாத காரணத்தால் அதிகளவான வீரர்கள் பாலியல் நோய்களுக்கு உள்ளானார்கள்

 

 
 
colonel%2Bcondom.jpg

1920 இல் லட்டக்ஸ் என்ற இறப்பர் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஆணுறைகள் அதிக தாங்கும் திறங்கொண்டதாக வடிவமைக்கப்பட்டன இதனால் ஆணுறைகாளின் விற்பனை அதிகரித்தது முதலாம் உலகப்போரில் ஆணுறைகள் பயன்படுத்தல் தொடர்பிலும் பாலியல் கல்வியிலும் கொண்டுவரப்ப்பட்ட சட்டங்கள் பாலியல் நோய்கள் அதிகரித்தமையால் மீண்டும் 2 ஆம் உலகப்போரில் தளர்த்தப்பட்டன அதோடு 1980 இல் எயிட்ஸ் நோயின் கண்டுபிடிப்பு விழிப்புணர்வுகளின் காரணமாக உலகம் முழுவதும் ஆணுறைகளின் விற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்தது

காண்டம் பயன்படுத்துவதால் பாலியல் நோய்க்கு உள்ளாகும் தன்மை 10 000 மடங்குகளால் குறைவடையும்

அதோடு கர்ப்பத்தடை மருந்துகளால் ஏற்படும் பாதிப்புக்களைவிட காண்டம் பயன்படுத்துதல் ஏற்படும் பக்கவிளைவுகள் மிகமிகக் குறைவு

பலர் பேசத்தயங்கும் விடயமாக இது இருந்தாலும் ஆரோக்கியமான குடும்பம் மற்றும் சமூகத்திற்கு இதன் பயன்பாடு அவசியமாகும்

 

https://www.manithanfacts.com/2021/09/history-of-condom.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.