Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

எகிப்தியர்கள் பயன்படுத்திய ஆணுறை- History of condom


Recommended Posts

condom-factory.jpeg

 

 

 

பாலியல் நோய்களில் இருந்து பாதுகாப்புப்பெறுவதற்கும் கருத்தடைக்குமாகவே நாம் இப்போது ஆணுறைகளைப்பயன்படுத்திவருகின்றோம் ஆணுறை தற்போது இறப்பரினால் உருவாக்கப்படுகின்றது என்பது அனைவருக்கும் தெரிந்தவிடயம் இந்த ஆணுறையை மனிதன் எப்போது பயன்படுத்த ஆரம்பித்தான் என்று நீங்கள் சிந்தித்திருக்கின்றீர்களா ?ஆணுறையை பயன்படுத்த ஆரம்பித்தவரலாறு இன்று நேற்று தோன்றியதல்ல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதன் ஆணுறைகளை பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றான் அவன் பயன்படுத்த ஆரம்பித்த காலங்களில் எயிட்ஸ் போன்ற பாலியல் நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை கருத்தடையைமேற்கொள்வதுதான் ஆணுறைபயன்பாட்டின் முக்கிய நோக்கமாக இருந்தது

 

எகிப்தியர்கள் கிரேக்கர்கள் சுமேரிய நாகரீகத்தவர்கள் ஆணுறைகளைப்பயன்படுத்தியதற்கான பதிவுகள் ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள் பிரான்ஸில் கண்டுபிடிக்கப்பட்ட 15 000 வருடங்கள் பழமையான குகை ஓவியத்தில் ஆணுறையின் ஓவியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

egypth%2Bcondom.jpg

 

 

கிமு3000 ஆண்டளவில் நடைபெற்றதாக கூறப்படும் கிரேக்க வரலாற்று சம்பவங்களில் ஆணுறைபயன்பாடுபற்றிய கதை ஒன்று உள்ளது

கிமு 3000 ஆண்டில் கெனோஸிஸ் என்ற நாட்டை மைனோஸ் என்ற மன்னன் ஆண்டுகொண்டிருந்தான் இந்த மன்னருக்கு ஒரு சாபம் இருந்தது இவரது விந்தில் தேளின் விஷம் இருக்கும் என்பதுதான் அது இதன் காரணத்தால் மன்னன் யாருடன் உடலுறவுகொண்டாலும் உடனே அந்தப்பெண் இறந்துவிடுவார் மன்னனின் மகாராணியும் இதன் காரணத்தால் இறந்துவிட வாரிசு கிடைக்கவழியில்லையே என்று மன்னன் மிகுந்த துன்பத்தில் இருந்தான்

condom%2Bstory.jpg

 

அப்போது பைஸ்பே என்ற பெண் இதற்கான உத்தியொன்றை கண்டுபிடித்து மன்னருக்கு தெரிவித்தாள் ஆட்டின் சிறு நீர்ப்பையை உடலுறவின்போது பயன்படுத்திக்கொண்டால் பெண்கள் இறக்கமாட்டார்கள் என்பதுதான் அவள்கூறிய யோசனை மன்னன் அந்த யோசனையை அவளிடமே பயன்படுத்தி வரிசையாக 8 பிள்ளைகளுக்கு தந்தையானான் என்பதுவேறுகதை

வரலாற்றுக்கதைகளில் ஆணுறை பயன்பாடை உள்ளடக்கிய முதலாவது மிகப்பழமையான கதை இந்தக்கதைதான் ஆனால் ஆட்டின் சிறு நீர்ப்பையை பெண்ணின் குறிக்குள் உறையாகப்பயன்படுத்தப்பட்டதா அல்லது அரசன் அதை ஆணுறையாகப்பயன்படுத்தினானா என்பது இன்னும் விவாதப்பொருளாகவே உள்ளது இருந்தாலும் ஆணுறைப்பயன்பாடு பற்றிய வரலாறு  இங்கிருந்துதான் ஆரம்பிக்கின்றது

அடுத்ததாக ஆணுறைகளைப்பயன்படுத்தியவர்கள் எகிப்தியர்கள் இவர்கள் துணிகளை ஆணுறைகளாகப்பயன்படுத்திக்கொண்டார்கள் எதிர்பார்த்ததுபோல் இந்தமுறை அவளவுக்கு பலனளிக்கவில்லையாயினும் இவற்றைத்தான் அவர்கள் தொடர்ந்துபயன்படுத்தினார்கள் அதோடு சமூக அந்தஸ்துக்கு ஏற்றவகையில் தமது உடைகளில் வித்தியாசமான நிறங்களை அணிவது எகிப்தியர்களின் வழக்கமாக இருந்தது அதே நிறத்தை ஆணுறைக்கும் இவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்

download.jpg

 

 

அடுத்து ஆணுறையைப்பயன்படுத்தியவர்கள் ரொமேனியர்கள் கலை கலாச்சாரம் கட்டிடத்துறை என அனைத்திலும் தமக்குரிய தனித்துவத்துடன் மிளிர்ந்தவர்கள் ரொமேனியர்கள் ஆனால் இவர்களுடைய காலத்திலேயே பாலியல் நோய்கள் பரவ ஆரம்பித்திருப்பதை உணர்ந்துகொண்டார்கள் ரொமேனிய மருத்துவர்கள் இதற்காகவே இவர்கள் ஆணுறைகளை உருவாக்கினார்கள் இவர்கள் துணிகளைமட்டும் பயன்படுத்தவில்லை இறந்தவிலங்குகளின் குடல்களையும் ஆணுறைகளாகப்பயன்படுத்திக்கொண்டார்கள் இறந்தவிலங்குகளின் குடல்களைப்பதப்படுத்தி ஆணுறைகளாக ரொமேனியர்காள் பயன்படுத்திக்கொண்டார்கள்

romanians.jpg

 

-History-%2BCondom.jpgஇவர்ளுக்கு அடுத்தபடியாக காண்டம்களைப்பயன்படுத்தியவர்கள் ஆபிரிக்க பழங்குடியினத்தவர்களான யூக்கா இனத்தவர்கள் இவர்கள் கிரேக்கர்கள் ரொமேனியர்களைப்போல் அல்லாமல் பெண்களுக்காக ஒரு உபகரணத்தை வடிவமைத்தார்கள் சுமார் 6 இஞ்ச் நீளமுடைய ஒரு மரத்தின் தடியைத்தான் பெண்கள் பயன்படுத்தினார்கள் கர்ப்பத்தடைக்காகத்தான் இது பயன்படுத்தப்பட்டது

 

 

 

video_object.png

 

 

 

ancient_africa.jpg

சீனாவைச்சேர்ந்த மக்கள் ஆணுறைகளை பட்டுத்துணியால் உருவாக்கினார்கள் ஆனால் அவற்றிற்கு சில உராய்வு நீக்கிகளையும் பயன்படுத்திக்கொண்டார்கள் அதோடு கபுடா கட்டா என்றழைக்கப்படும் ஆண்குறியின் நுனியை மூடும் உபகரணம் ஒன்றையும் சீனர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள் பார்ப்பதாற்கு சிறிய ஆமையோடுபோன்றிருந்தாலும் இது இறப்பரினால் உருவாக்கப்பட்டது

chinish%2Bcondom.jpg

இதன்பின்னர் லியார்னாடோ டாவின்சி தன் ஓவியங்களில் ஆணுறைதொடர்பான பல வரைபடங்களை வெளிப்படுத்தினார் இருந்தாலும் கிறீஸ்தவ மதக்கொள்கைகள் இது தொடர்பாக கடும் கண்டனங்களைவெளியிட்டன ஆணுறை பயன்படுத்தல் பாவம் என்று மதத்துக்கு எதிரானது எனவும் அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள்

கப்பிரியோ பலோப்பியோ என்ற பிரபல அனாடமிஸ்ட் இவர்தான் ஆணுறைகளை அடுத்தகட்டத்திற்கு கொண்டுசென்றவர்.இவர்தான் பலோப்பியன் ரியூப் தொடர்பான தெளிவான படங்களை விபரங்களைவெளியிட்டவர் இதனால்தான் பெண்ணின் உடலில் இருக்கும் அந்தப்பாகத்திற்கு பலோப்பியன் டியூப் என்றா பெயர் வைக்கப்பட்டது.ரிபன் போன்ற ஒரு றப்பட் பட்டியை ஆண்குறையை சுற்றிக்கட்டி எச்சிலை லுபிரிகேஸனாகப்பயன்படுத்தி இதை பயன்படுத்தமுடியும் என அறிவித்ததுடன் 1100 ஆண்களில் இதை பரிசோதனை ரீதியாக செய்துபார்க்கும்படி கேட்க பரிசோதனை வெற்றிபெற்றது இதன்பின்னர் விபரம் பிரபலமடைய 17 ஆம் நூற்றாண்டில் சடுதியாக இங்கிலாந்தின் சனத்தொகை வளர்ச்சிவீதம் குறைவடைந்துவிட்டது

 

1640களில் மீன் மற்றும் விலங்குகளின் குடல்கள் ஆணுறையாகப்பயன்படுத்தப்பட்டது முதலாம் சார்லிமன்னன் உள் நாட்டு கலவரங்கள் யுத்தங்களின்போது தன் படைவீரர்களை இந்த ஆணுறைகளைப்பயன்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தான் ஆரம்பத்தில் இந்த மன்னன் துணிகளையே பயன்படுத்தினான் ஆனால் விலைமாதுக்களுடனான உறவில் மன்னர் சிபிலிஸ் நோயால் பீடிக்கப்பட்டார் மன்னனுக்கு சிறுவர்களுடன் உறவுகொள்வதும் பிடித்தமான விடயமாக இருக்க மன்னரது வைத்தியர்தான் மீன் விலங்குகளின் குடலை பயன்படுத்தும் முறையை மன்னருக்கு அறிமுகப்படுத்தினார் அந்த வைத்தியரின் பெயர் என்ன தெரியுமா? கொலோனல் காண்டம் இதன் பின்னர்தான் ஆணுறைக்கு காண்டம் என்ற பெயர் ஏற்பட்டது 1785 இல் இந்த வார்த்தை ஆங்கில அகராதியில் சேர்க்கப்பட்டது

old%2Bcondom%2Bfactory.jpg

18 ம் நூற்றாண்டில் காண்டம் உலகப்பிரபலமடைந்தது விபச்சாரம் நடைபெறும் இடங்களில் இது  அதிகப்படியாக விற்பனைசெய்யப்பட்டது ஆணுறைகளை வாங்கி அவற்றில் ஓட்டை ஏதாவது இருக்கின்றதா என பரிசோதனை செய்தபின்பே அவற்றை பயன்படுத்தமுடியும் அதோடு ஒருதடவை வாங்கினால் போதுமானது இவற்றை மீண்டும் மீண்டும் பயன்படுத்தமுடியும் இப்படித்தான் அப்போதைய ஆணுறைகள் உருவாக்கப்பட்டிருந்தன ஆனால் 19 ஆம் நூற்றாண்டில் ஆணுறைகள் இலட்சக்கணக்கில் உருவாக்க ஆரம்பித்தார்கள் துணிகளால் ஆன ஆணுறைகள் கைவிடப்பட்டன

 

 

ww2%2Bcondom.jpg
1860 இல் அமெரிக்காவை சேர்ந்த சார்லிஸ் குட்யியர் என்பவர்தான் இயற்கை இறப்படினால் ஆணுறைகளை உருவாக்கினார் முதலாம் உலகப்போரில் அமெரிக்க பிரிட்டிஸ் வீரர்களுக்கு ஆயுதங்களுடன் ஆணுறைகளும் அனுப்பிவைக்கப்பட்டன ஆனால் வீரர்களில் பெரும்பாலானவர்கள் இதை பயன்படுத்தாத காரணத்தால் அதிகளவான வீரர்கள் பாலியல் நோய்களுக்கு உள்ளானார்கள்

 

 
 
colonel%2Bcondom.jpg

1920 இல் லட்டக்ஸ் என்ற இறப்பர் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஆணுறைகள் அதிக தாங்கும் திறங்கொண்டதாக வடிவமைக்கப்பட்டன இதனால் ஆணுறைகாளின் விற்பனை அதிகரித்தது முதலாம் உலகப்போரில் ஆணுறைகள் பயன்படுத்தல் தொடர்பிலும் பாலியல் கல்வியிலும் கொண்டுவரப்ப்பட்ட சட்டங்கள் பாலியல் நோய்கள் அதிகரித்தமையால் மீண்டும் 2 ஆம் உலகப்போரில் தளர்த்தப்பட்டன அதோடு 1980 இல் எயிட்ஸ் நோயின் கண்டுபிடிப்பு விழிப்புணர்வுகளின் காரணமாக உலகம் முழுவதும் ஆணுறைகளின் விற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்தது

காண்டம் பயன்படுத்துவதால் பாலியல் நோய்க்கு உள்ளாகும் தன்மை 10 000 மடங்குகளால் குறைவடையும்

அதோடு கர்ப்பத்தடை மருந்துகளால் ஏற்படும் பாதிப்புக்களைவிட காண்டம் பயன்படுத்துதல் ஏற்படும் பக்கவிளைவுகள் மிகமிகக் குறைவு

பலர் பேசத்தயங்கும் விடயமாக இது இருந்தாலும் ஆரோக்கியமான குடும்பம் மற்றும் சமூகத்திற்கு இதன் பயன்பாடு அவசியமாகும்

 

https://www.manithanfacts.com/2021/09/history-of-condom.html

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By selfywalking
   பொதுவாகவே விமானவிபத்துக்கள் நடைபெற்றால் அதில் பயணம் செய்யும் அனைவருமே இறந்துவிடுவார்கள் மிக மிக அரிதாகத்தான் அதில் பயணம் செய்யும் சிலர் உயிர் தப்புவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது அப்படி உயிர்தப்பினாலும் கை கால்களை இழந்தோ அல்லது நிரந்தர பாதிப்புக்களுடனேதான் நாம் உயிர்வாழமுடியும் ஆனால் நாம் இப்போது ஒரு நம்பமுடியாத சம்பவம் ஒன்றைத்தான் பார்க்கப்போகின்றோம்  
    
     1971 டிசம்பரில் ஜூலியான கோபிக் என்ற 17 வயதுச்சிறுமி தனது ஹை ஸ்கூல் பட்டமளிப்பு விழா முடிந்ததும் தன் தாயுடன் சேர்ந்து புல்காப்பா என்ற இடத்தில் இருந்து லீமா என்ற இடத்திற்கு விமானத்தின் மூலம் புறப்படுகின்றார்கள் பட்டமளிப்பு விழா முடிந்த ஒரு மணி நேரத்தில் லஸ்னா 508 என்ற தனியார் விமானத்தின் மூலம் இவர்கள் புறப்படுகின்றார்கள் லீமா என்ற இடத்தில் இருக்கும் தன் தந்தையுடன் பட்டமளிப்புவிழாவைக்கொண்டாடுவதற்காகவே அவர்கள் விரைவாக தமது பிரயாணத்தை ஆரம்பித்திருந்தார்கள்    
   இரண்டு நகரங்களுக்குமிடையில் ஒரு மணி நேர பிரயாண இடைவெளிதான் இருந்தது அவர்கள் விமானத்தில் பறந்துகொண்டிருக்கும்போது வானிலை திடீர் என மோசமடைகின்றது எங்கும் கும்மிருட்டு மழையுடன் மின்னலடிக்க ஆரம்பிக்கின்றது ஆரம்பத்தில் பயணிகள் பயத்தில் அலறினாலும் கேப்டன் அவர்களை சமாதானப்படுத்துகின்றார் ஆனால் திடீர் என ஒரு பெரிய மின்னல் விமானத்தின் இறக்கையை தாக்கிவிட விமானம் இருளில் மூழ்கிவிடுகின்றது எல்லாம் முடிந்துவிட்டது என ஜூலியானாவின் அம்மா கூறிவிட விமானத்தின் எஞ்சினும் செயலிழந்துவிடுகின்றது கட்டுப்பாட்டை இழந்தவிமானம் கீழே விழ ஆரம்பிக்கின்றது உள்ளேயிருந்த பிரயாணிகள் அலற ஆரம்பிக்கின்றார்கள் சடுதியாக விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்துவிட ஜூலியானவின் தாயார்  ஜூலியானாவின் கண்முன்னாலேயே வெளியே தூக்கிவீசப்படுகின்றார்
    
      
   கண்ணிமைக்கும் நேரத்தில் அவரும் தூக்கிவீசப்படுகின்றார் ஆனால் அவர் சீட் பெல்ட்டினால் சீட்டில் இணைக்கப்பட்டிருந்தார் 3 நபர்கள் அடுத்தடுத்து அமரக்கூடிய அந்த சீட் அவருடன் சேர்த்து வெளியில் வீசப்பட்டிருந்தது விபத்து நடந்தபகுதிக்கு கீழேதான் மிக அடர்த்தியான அமேசான் காடு அமைந்திருந்தது வெளியே தூக்கிவீசப்பட்ட ஜூலியானா கீழே விழ ஆரம்பித்தார் ஆனால் ஹெலிஹாப்டரின் இறக்கை சுற்றுவதைப்போல் அவரது சீட் மிக வேகமாக சுற்ற ஆரம்பித்தது ஜீலியானாவிற்கு உலகமே மிகவேகமாக சுற்ற ஆரம்பித்திருந்தது அந்தவேகத்தில் சீட் சுழன்றுகொண்டு கீழே விழ ஆரம்பிக்க்க ஜூலியானா மயங்கிவிடுகின்றார்
   காட்டுக்குள் விழுந்த ஜூலியானா சுமார் 20 மணித்தியாலங்கள்வரை மயக்கன்  நிலையிலேயே இருந்திருக்கிறார் விழித்ததும் சீட்பெல்டில் இருந்து தன்னைவிடுவித்துக்கொள்கின்றார் அப்போதுதான்  நடந்த கொடூர சம்பவம் கனவல்ல என்பதும் நடுக்காட்டிற்குள் தான் தனி ஆளாக தப்பியிருப்பதையும் அவர் உணர்ந்துகொள்கின்றார் அதிஷ்டவசமாக அவரது கடிகாரம் தொடர்ந்தும் இயங்கிக்கொண்டிருந்தது அப்போது நேரம் அதிகாலை 9 மணி மழைபெய்துகொண்டிருந்தது
    
      
   உடல்முழுவதும் வலி அவரால் நடக்கவேமுடியவில்லை அதோடு மழையில் நன்றாக நனைந்துமிருந்தார் இதனால் வேறுவழியில்லாமல் ஒரு சீட்டின் கீழே சுருண்டு படுத்துக்கொண்டார் ஜூலியானா சிறிது நேரத்தில் என் உடலில்  எந்த உணர்ச்சியையும் உணரமுடியவில்லை என்று கூறுகிறார் ஜூலியானா அதன்பின்னர் மீண்டும் மயங்கிவிடுகிறார்  நாள் முழுவதும் மயக்கத்திலேயே சீட்டின் அடியில் கழிந்துவிடுகின்றது
   எழுந்து நடக்கவே ஒரு நாள் ஆகின்றது எழுந்து நடக்கும்போதுதான் தனது தோள்மூட்டு உடைந்திருப்பட்தையும் தொடையில் பெரிய வெட்டுக்காயம் இருப்பதையும் தெரிந்துகொள்கின்றார் ஜூலியானா ஆனால் அதிஷ்டவசமாக இரத்தம் அதிகம் வெளியேறவில்லை அதோடு உடைந்த தோள்மூட்டு எலும்பு தோலைக்கிழிக்கவில்லை  
   ஆனால் கையில் ஏற்பட்ட காயத்தில் புழுப்பிடித்துவிடுகின்றது இதனால் கையை சத்திரசிகிச்சைமூலம் அகற்றவேண்டியேற்பட்டுவிடுமோ என ஜூலியான பயப்படுகிறார் ஆனாலும் அவரால் எதுவுமே செய்யமுடியவில்லை
   வைத்தியர்கள் பின்னர்தான் அவரது முதுகெலும்பிலும் உடைவுகள் இருந்திருப்பதாக கூறுகின்றார்கள் ஆபத்துவேளைகளில் உடலில் சுரக்கும் அட்ரினலின் ஹோமோன்காரணமாகத்தான் இவற்றின் வலியை உணராமல் தொடர்ந்தும் ஜூலியானா இயங்கியிருக்கின்றார்
   நீண்டமுயற்சிக்குப்பின் வலியிலும் அவர் தொடர்ந்து நடக்க ஆரம்பிக்கின்றார்  முதலைகள் பாம்புகள் விஷப்பூச்சிகள் நிறைந்திருக்கும் காடுதான் அமேசன் அதில் இருந்து தன்னந்தனியாகதப்பிவருதல் என்பது மிக்ச்சவாலான விடயம்தான்
   அங்குதான் அவருக்கு அவரது தந்தைகற்றுக்கொடுத்தவிடயங்கள் நினைவுக்கு வருகின்றது அவரது தந்தை ஒரு சூலொஜிஸ்ட் தாவரங்கள் காடுகள் உயிரங்கள் பற்றிய புலமைகொண்டவர் அவர் அதோடு ஜூலியானாவின் சிறியவயதில் அவர்கள் வசித்த வீடும் இதே மாதிரியான காட்டுப்பகுதிக்குள்தான் அமைந்திருந்தது இவற்றினால் காட்டின் அசாதாரண சூழ்னிலைகளில் எப்படி உயிர்தப்புவது என்பதைப்பற்றிய பல விடயங்களை ஜூலியான சிறியவயதிலேயே அறிந்திருந்தார் இதுதான் அவர் உயிர்தப்புவதற்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது
   உடனடியாக வேறுயாராவது உயிருடன் இருக்கிறார்களா எனத்தேட ஆரம்பித்தார் ஆனால் அவருக்கு கிடைத்தவையெல்லாம் பிணங்கள் மட்டுமே தன் தாயையும் தேட ஆரம்பிக்கின்றார் ஆனால் அவர்தொடர்பாக எந்த தடயமும் ஜூலியானாவிற்கு கிடைக்கவில்லை இதானால் உயிர்வாழ்வதற்கு தேவையான உணவு உடைகள் மருந்துகள் கிடைக்கின்றதா என உடைந்தவிமானத்திற்குள்ளே தேட ஆரம்பிக்கின்றார் ஜூலியானா
   இப்படியே 4 நாட்கள் கழிந்துவிட வெளியே செல்லும்வழியைத்தேடி நடக்க ஆரம்பிக்கின்றார் ஜூலியானா திடீர் என பெரிய கழுகு ஒன்று கீழே வந்து அமர்ந்துவிடுகின்றது அப்போத்தான் அங்கே மேலும் சில பிணங்கள் இருப்பதை பார்க்கிறார் ஜூலியானா தன் தாயாக இருக்குமோ என்ற பயத்தில் ஓடிச்சென்று பார்த்தால் அது அவரது தாயாரல்ல இவ்வாறு திக்குத்தெரியாமல் நடந்து செல்லும் நாட்களில் மீட்பு விமானத்தின் சத்தத்தையும் ஜூலியானா கேட்கத்தவறவில்லை ஆனால் தான் கீழே இருப்பதை காட்டுவதற்கு அவரிடம் எதுவுமே இருக்கவில்லை அதோடு 20 30 அடி உயரத்திற்கு அடர்த்தியான மரங்கள் இருப்பதால் கீழே இருக்கும் ஜூலியானாவை விமானத்தில் இருப்பவர்களால் பார்க்கவும்முடியாது நாட்கள் செல்கின்றன உயிரோடு தப்பவேண்டுமென்றால் காட்டைவிட்டுத்தப்பி சென்றாகவேண்டும்
    
          
   வேறு வழியே இல்லை உதவுவதற்கும் யாருமில்லை காட்டில் நீருக்கு தட்டுப்பாடு இருக்கவில்லை பெய்யும் மழை நீரை சேகரித்து அவரால் குடிக்கமுடிந்தது ஆனால் உணவை தேடுவது அவளவு இலகுவானதாக இருக்கவில்லை காட்டில் இருக்கும் கிழங்குகள் பழங்களை உண்னமுடியாது அவை விசமுள்ளவையாக இருந்தால் உடனடியாக மரணம்தான் ஆனால் அதிஷ்டவசமாக விமானத்தில் ஒரு சாக்லேட் பையொன்றை கண்டுபிடித்திருந்தார் அதற்குள்ளும் சில துண்டுகளே இருந்தன எனவே நாள் ஒன்றுக்கு இரண்டு துண்டுகளை தன் உணவுத்தேவைக்கு பயன்படுத்தவேண்டியேற்பட்டது ஆனாலும் அவை முடிந்ததும் பசியால் மிகவும் துடித்துப்போனார் ஜூலியானா
   இதனால் வேறுவழியில்லாமல் கண்ணில் தென்படும் தவளைகளை பிடித்து உண்பது என்றமுடிவுக்கு வருகிறார் ஆனால் அவர்மிகவும் பலவீனமாக இருந்தமையால் அவரால் தவளைகளைப்பிடிக்கமுடியவில்லை பின்னர்தான் அவை விஷமுள்ள தவளைகள் என்றவிடயம் தெரியவருகின்றது
   அப்போதுதான் ஒரு நீரோடையை கண்டுபிடிக்கின்றார் ஜூலியானவின் தந்தை காட்டில் தொலைந்துபோனால் நீரோடையைக்கண்டுபிடித்து  அது ஓடும்திசையில் அதோடுசென்றால் காட்டில் இருந்து தப்பிப்பதற்கான வழிகிடைக்கும் என அவரது சிறியவயதில் கூறியது அவருக்கு நினைவுக்கு வந்தது
   நீரோடைகள் பல இணைந்தே ஆறாக ஓடுகின்றன எனவே இலகுவாக காட்டில் இருந்து வெளியே சென்றுவிடமுடியும் எனவே இந்த ஐடியாவை ஜூலியானா பின்பற்ற ஆரம்பித்தார்
   ஆரம்பத்தில் சில நாட்கள் காத்திருந்து உயிர்தப்பியவர்கள் யாராவது இருந்தால் அவர்களுடன் இணைந்து உயிர்தப்புவது என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார் ஆனால் அது ஆபத்து என உணர்ந்துகொண்டதால் ஜூலியானா முடிவெடுத்திருந்தார் ஆனால் வெளியே சென்றுகொண்டிருக்கும்போது தனது சூக்களில் ஒன்றை ஜூலியானா தொலைத்திருந்தார் இதனால் தாரையில் இருக்கும் பாம்புகள் தொடர்பான பயம் அவருக்கு அதிகரித்தது அதோடு அவரது கண்ணாடியும் தொலைந்துவிட்டது இதனால் பார்வையிலும் தெளிவு இருக்கவில்லை அதோடு அவரது கடிகாரமும் நின்றுவிட்டது இதனால் காலில் இருக்கும் ஒரு சூவின் உதவியுடன் பாஅம்பு இருக்கின்றதா என தரையை தடவிதடவிதடவி சோதனைசெய்துகொண்டே நடந்தார் ஜூலியானா
   நீரோடை ஆறாகமாறியது ஆனால் ஆற்றின் குறுக்காக பெரிய மரம் ஒன்றுமுறிந்துவீழ்ந்திருந்தது இதனால் பாதை தடைப்பட்டது ஆரம்பத்தில் நம்பிக்கையிழந்தாலும் மீண்டும் முயற்சிசெய்து மரத்தைக்கடந்து முன்னேற ஆரம்பித்தார் ஜூலியானா சிறிது தூரம் சென்றதும் அவரது கண்முன்னால் ஒரு படகு தெரிந்தது ஆரம்பத்தில் இது கற்பனை என எண்ணினாலும் அருகில் சென்று தொட்டுப்பார்த்ததும் அது உண்மை என ஜூலியானாவிற்கு புரிந்துவிட்டது
    
   சந்தோஷத்தில் ஜூலியானாவிற்கு தலைகால்புரியவில்லை உடனடியாக போர்ட்டில் ஏறினார் போட் நீரோட்டத்தில் தானாக செல்ல ஆரம்பித்தது ஜூலியானாவால் துடுப்பை இயக்கமுடியவில்லை காரணம் அவரது கையில் இருந்த புழுப்பிடித்த காயம் அதோடு புழுக்கள் இன்னும் சற்று ஆழத்துக்கு சென்றிருந்த்ன.அப்போதுதான் போர்ட்டில்  இருந்த எண்ணைக்கான் அவரது கண்களுக்கு தெரியவருகின்றது சிறியவயதில் நாயின் காலில் இருந்த புழுப்பிடித்த காயத்திற்கு ஜூலியானவின் தந்தை எண்ணை ஊற்ரியது நினைவுக்குவர அதையே ஜூலியானாவும் செய்தார் மிகுந்த எரிச்சல் வலி ஏற்பட்டாலும் அது வேலைசெய்தது 30 புழுக்களை அவரால் வெளியே பிடுங்கி எடுக்கமுடிந்தது ஆனால் படகு மீண்டும் காட்டிற்குள்தான் சென்றுகொண்டிருந்தது
   மீண்டும் மயங்கிய ஜூலியானா கண்விழிக்கும்போது தரையௌயும் அதில் கட்டப்பட்டிருந்த சிறியகுடிசையையும் காண்கின்றார் அவரால் படகில் இருந்து கீழிறங்க முடியவில்லை நீண்டமுயற்சிக்குப்பின் ஜூலியானா தரையிறங்கி குடிசையை நோக்கி ஓடுகின்றார் அங்கே 2 பழங்குடி இனத்தவர்கள் இவரைக்கண்டவுடன் மிரண்டுவிடுகின்றார்கள் இரத்தச்சிவப்பில் கண்கள் உடல்முழுவதும் இரத்தத்துடன் தங்கமுடியைக்கொண்ட பெண் இதே உருவத்தில் அவர்கள் வழிபடும் பேய் தெய்வமொன்று ஆற்றில் வாழ்வதாக அவர்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள் ஒருவேளை அதுதானோ என அவர்கள் ஆரம்பத்தில் பயந்துவிட்டார்கள் 
    
      
   விபரீதன்  நடப்பதற்கு முன்னர் ஜூலியானா தனக்குத்தெரிந்த ஸ்பானிஸ் மொழியில் நடந்தவிபத்திய அவர்களுக்கு கூறி உதவி கேட்க புரிந்துகொண்ட அவர்கள் அருகில் இருந்த நகரத்திற்கு  ஜூலியானாவை அழைத்துச்சென்று அங்கிருக்கும் மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஜூலியானா விபத்து நடந்த 11 வது நாளில்தான் இது  நடைபெற்றது
   அந்த விமான விபத்தில் உயிர்தப்பிய ஒரே ஒரு நபர் இவர்தான் என்ற விடயம் பின்னர்தான் ஜூலியானாவிற்கு தெரியவருகின்றது திரைப்பட இயக்குனர் வேர்னர் ஹேர்சொக் இந்தவிமானத்தில் செல்வதற்கு டிக்கட்டை பதிவுசெய்து இறுதினேரத்தில் கான்சல் செய்திருந்தார் அவர் இந்த விடயத்தை அறிந்ததும் இந்த சம்பவத்தை வைத்து wings of hope என்ற திரைப்படதை இயக்கி வெளியிட்டிருக்கிறார் அவர்
   https://www.manithanfacts.com/2021/08/girl fell from plane pla.html
    
 • Topics

 • Posts

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.