Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ஆப்கானில் மனிதாபிமான நெருக்கடி: சர்வதேச சமூகத்திடம் ஒரு பில்லியன் டொலர்கள் நிதி கோரும் ஐ.நா.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானில் மனிதாபிமான நெருக்கடி: சர்வதேச சமூகத்திடம் ஒரு பில்லியன் டொலர்கள் நிதி கோரும் ஐ.நா.!

ஆப்கானில் மனிதாபிமான நெருக்கடி: சர்வதேச சமூகத்திடம் ஒரு பில்லியன் டொலர்கள் நிதி கோரும் ஐ.நா.!

ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியில் சிக்கியவர்களுக்கு உதவ, ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில், தலிபான் ஆளுகையில் உள்ள ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான உதவி வழங்க சர்வதேச சமூகத்தை ஐக்கிய நாடுகள் சபை முறைப்படி கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானியர்களுக்கு உணவு, மருத்துவம், சுகாதார வசதிகள், சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகள் போன்றவை அத்தியாவசியமாக தேவைப்படுகிறது என்று ஐ.நா தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாடு மிகவும் மோசமான சூழ்நிலையை எதிர்கொள்கிறது. நீடித்த மோதல், கடுமையான வறட்சி மற்றும் கொவிட்-19 பாதிப்பை அந்நாடு எதிர்கொண்டு வருகிறது.

அங்கு வாழும் மக்களில் கிட்டத்தட்ட பாதி பேருக்கு ஏற்கெனவே உதவி தேவைப்பட்டிருந்தது. ஆப்கானிஸ்தானில் சமீபத்திய முன்னேற்றங்கள் அங்கு ஏற்கெனவே நிலவி வந்த பாதிப்பை அதிகரித்துள்ளது.

ஒகஸ்ட் மாதத்தில் இஸ்லாமியவாத போராளிகள் ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டை மீட்பதற்கு முன்பே, உள்நாட்டு மோதல் காரணமாக இந்த ஆண்டு 5,50,000க்கும் அதிகமான மக்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். அதாவது, அந்நாட்டில் தற்போது 35 இலட்சம் பேர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2021/1239204

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாங்குளத்தில் கஞ்சாவுடன் கைதான காவல்துறை உத்தியோகத்தர் உள்ளிட்டவர்கள் எதிர்வரும் 6ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.   24 அன்று மாலை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு காரில் கஞ்சா கடத்திச் செல்வதாக மாங்குளம் காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஏ9 வீதியில் மாங்குளம் பகுதியில் வைத்து குறித்த காரை சோதனையிட்ட காவல்துறையினர் 6 கிலோ கஞ்சாவுடன் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளார்கள். இவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புத்தளத்தினை சேர்ந்த 34 அகவையுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் மற்றும் நொச்சிகம பகுதியினை சேர்ந்த 25 அகவையுடைய நபரும் யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியினை சேர்ந்த 32 அகவையுடை நபருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட மாங்குளம் காவல்துறையினர்  முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய வேளை இவர்களை எதிர்வரும் 6ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.   ibctamil.com
    • கறுப்பியின் ருத்ரதாண்டவம் இனித்தான் ஆரம்பம் எல்லோருடைய தலையும் வெட்டி ஆடப்படும்......!
    • ஆழ்ந்த  அனுதாபங்கள். சிறந்த இசைக்கலைஞனை இழந்து விட்டோம்.   
    • ஞானசார தேரருக்கு, எதிராக... நடவடிக்கை எடுக்குமாறு கோரி முறைப்பாடு பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் தலைமையகம் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், அல்ஹாபிழ், சட். நஸீர் அஹமட், எம்.எஸ். தௌபீக், அலிசப்ரி ரஹீம் மற்றும் சட்டத்தரணி முஸாரப் முதுநபின், இசாக் ரஹ்மான் ஆகியோரே இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர். அண்மையில் சிங்கள ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த ஞானசார தேரர், கடந்த ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடத்திய குழு மற்றும் அவர்களை அந்த நடவடிக்கையில் ஈடுபட தூண்டிய விடயம் சில குர்ஆனின் போதனைகளாக இருப்பதுடன் அவர்கள் வணங்கும் இறைவனான அல்லாஹ்தான் இதற்கு முழுக்காரணம் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1241265
    • அமெரிக்க நிறுவனதுடனான ஒப்பந்தம்: அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் இடையே கடுமையான மோதல் கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் குறித்து அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளுக்கிடையில் மோதல் எழுந்துள்ளது. அமைச்சர்களான விமல், கம்மன்பில, வாசுதேவ உள்ளிட்டவர்கள் இதற்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இதனை கடுமையாக எதிர்த்துள்ளது. அரசாங்கத்தின் முக்கிய பங்காளிகளான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஜாதிக நிதஹஸ் பெரமுன, பிவித்துரு ஹெல உறுமய, ஜனநாயக இடது முன்னணி, லங்கா சம சமாஜ கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி ஆகியன ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து உடனடியாக விவாதிக்கக் கோரி, அரசாங்க கூட்டணியில் உள்ள 10 கட்சிகளின் தலைவர்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மூன்று பக்கம் கொண்ட கடிதத்தை அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடிதத்தில் இந்த ஒப்பந்தத்தின் மூலம் எரிவாயு விநியோக ஏகபோகம் ஒரு நிறுவனத்திற்கு மாற்றுவது குறித்த கவலைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறும் கோரப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தரப்பினர் கடந்த வியாழக்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் அலரிமாளிகளில் மேற்கொண்ட கலந்துரையாடல் தோல்வியில் முடிந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1241291
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.