Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ஆபத்தின் கரங்களில் ஆதி இனம்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்


 

ஆபத்தின் கரங்களில் ஆதி இனம்

ஆபத்தின் கரங்களில் ஆதி இனம்

 — அகரன் — 

வழமைபோல மனைவியிடமிருந்து நச்சரிப்பு வந்துவிட்டிருந்தது. ‘’காடுபோல முடி வளர்ந்துவிட்டது. வெட்டுங்கள். பயமாக இருக்கிறது’’ என்று. முடி வெட்டுவதில் எனக்கு அக்கறை இருப்பதில்லை. குறைந்த விலையில் முடி வெட்டும் கடைகளில் காத்திருக்கும் நேரத்தில், ஜெயமோகனின் வெண்முரசின் சில பகுதிகளை படித்துவிடலாம் அல்லது பிரஞ்சு வார்த்தைகளை மகளிடம் கேட்டுபடிக்கலாம், வீட்டுக்குள் வளரும் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றலாம். ஆனால் மனைவி தன்னை பயமுறுத்தவே இப்படி இருப்பதாக உறுதியாக எண்ணுவாள். அவளின் கடுமையான கண்டனக்குரல், இறுதிப் போராட்டத்தின்பின் முடி திருத்து நிலையத்துக்கு சென்றேன்.  

அ.முத்துலிங்கம் எழுதிய ‘சுவரோடு பேசும் மனிதன்’ என்ற சிறுகதை முடி வெட்டப்போகும் ஒவ்வொரு தடவையும் என் நினைவுகளை நிறைத்துவிடும். அதில் ஆதி மொழிகளில் ஒன்றான ‘’அராமிக்‘’ மொழி பேசும் மனிதர் முடி திருத்து நிலையத்தில் சந்தித்ததையும் அவர் கதையையும் அழியும் மொழிகள் பற்றியும் கூறிஇருப்பார். 

அப்படி ஒர் சம்பவம் எனக்கு நிகழும் என்று நான் நினைத்ததில்லை. அந்த முடிதிருத்தும் நிலையம் தமிழர் ஒருவருக்கு சொந்தமானது. வழமையாக இரு தமிழர்கள் ஒயாது முடி திருத்துவார்கள். அன்று நான் சென்றபோது வட இந்தியச்சாயலில் ஒரு இளைஞர் முடிதிருத்தத் தயாராக இருந்தார்.  

எனக்கு இவரிடம் தான் என்றில்லை. எவரிடமும் தலையை கொடுத்துவிட்டு பேசாமல் இருந்துவிடுவேன். அந்த இளைஞர் பிரான்சுக்கு புதியவராக இருப்பது தெரிந்தது.  

வழமையாக என் தலையை பயன்படுத்தி உழைக்கும் தமிழர் சொன்னார். ‘’தம்பி உவன் ஆப்கானிஸ்தான் பெடியன்’’ எனக்கு மகிழ்ச்சி. என் தலையை இதுவரை ஒரு ஆப்கானியரிடம் கொடுக்கவில்லை. அதைவிட இன்று உலகச் செய்திகளுக்கு தீனி போட்டு கொழுக்க வைப்பது தலிபான்களும்- ஆப்கானிஸ்தானும்தான் என்பது உங்களுக்கு தெரிந்தது.  

அண்மையில் நேட்டோ படையும், தலைவர் அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானை விட்டு தம் படைகளை விலக்கிக்கொண்ட நிகழ்வில் ஒரு ஒளி வடிவம் உலகமெல்லாம் பார்க்கப்பட்டது. இராணுவ விமானத்தில் ஏறிவிட வேண்டும் என்று மக்கள் விமான ஓடுதளத்தில் ஓடிக்கொண்டிருக்கும் காட்சியும், பறக்க ஓடும் விமானத்தில் ஏதோ பேரூந்தில் தொற்றி ஏறிவிட வேண்டும்போல மக்கள் ஏறமுனையும் காட்சியும். இவை இந்த நூற்றாண்டின் வலி மிகுந்த காட்சிகள். தமது சொந்த தேசத்தைவிட்டு உயிர்போனாலும் வெளியேறிவிட வேண்டுமென்ற மனநிலை எத்தனை கொடிது? வீழ்ந்து இறந்த ஒருவர் ஆப்கான் உதைபந்தாட்ட இளம் வீரர் என்பது பின்னர் தெரிய வந்தது. தலிபான்களுக்கு பயந்த அந்த நாட்டின் நிலை கோரங்களின் உச்சம். உலகில் இப்படி ஒரு நிகழ்வு இதற்குமுன் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை.  

என்னிடம் நிறைந்திருந்த முடியை கோதிக்கொண்டு அமர்ந்து இருந்தேன். அந்த இளைஞர், மேல் தலையில் முடி வளராமல் நின்று போன பிரஞ்சு முதியவருக்கு வேகமாகவும், லாவகமாகவும் முடி திருத்திவிட்டு மெக்சிகோ மாட்டு வீரர் போல் கறுப்பு போர்வையை விரித்தவாறு என்னை அழைத்தார்.   

நான் செல்லும்போது அருகே முடி திருத்திக்கொண்டிருந்த தமிழர் ‘அண்ண கவனம், கழுத்தை வெட்டி போடுவான். நியூஸ் பார்க்கிறனிங்க தானே?’ என்றார். அவரின் ஆப்கானிஸ்தான் செய்திகள் கழுத்து வெட்டுவதோடு நின்றுவிட்டது என்று நினைத்துக்கொண்டேன்.   

அந்த இளைஞர் ‘hello’ என்று கட்டம் கட்டிய அரும்பும் தாடியோடு என்னை வரவேற்றார். மெதுவாக பேச்சை ஆங்கிலத்தில் தொடுத்தேன். அவரது பெயர் ‘மசூத்’ என்றார். 

 «‘அஹமது ஷா மசூத்தை’ அறிந்திருக்கிறேன் என்றேன்.» அவர் முடி திருத்துவதை விட்டுவிட்டு அதிசய உயிரை பார்ப்பதுபோல என் முகத்தை எட்டிப் பார்த்தார்.  

«உங்கள் நாடு பரிதாபமாக இருக்கிறது» என்றேன். மசூத் சில நொடி மெளன மூச்செறிதலுக்குப் பிறகு «அது ஆபத்தின் கரங்களில் சென்றுவிட்டது» என்றார்.  

அப்போதே மசூத் தலிபான்களின் எதிர்ப்பாளர் என்று எனக்கு புரிந்து விட்டது.  

தனது தந்தை ‘அஹமது ஷா மசூத்’ என்ற வடக்கு கூட்டணித் தலைவராக இருந்தவரின் ஞாபகமாகவே தனக்கு மசூத் என்ற பெயரை வைத்தார் என்றார். இவர் தலிபான்களின் எதிரி. சோவியத் ஒன்றிய ஆக்கிரமிப்புக் காலத்தில் அவர் தூக்கிய ஆயுதம் ஒசாமா பின்லேடன் மனித வெடிகுண்டு மூலம் அவரை அழிக்கும் வரை ஓயாமல் இருந்தது.   

மசூத்தின் கதைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்துக் கொண்டேன். ஆப்கானிஸ்தானின் தெரியாத கதைகளை அவை தந்தன. 

மசூத் ‘மஹார் ஏ ஷரீஃப்’ என்ற நகரத்தை சொந்த இடமாக கொண்டவன். ஆப்கானிஸ்தானில் உள்ள 40 மொழிகளில் பெர்சிய மொழி பேசும் ‘ஹஸாரா’ இனத்தை சேர்ந்தவன். ஆப்கானில் சிறுபான்மை இனம் ஹஸாராக்கள்.    

1998 இல் மசூத்துக்கு 5 வயதாக இருந்தபோது, பாமியானில் இருந்த அவனது சித்தி அவனை அழைத்துச் சென்று விட்டார். அவர் ஆசிரியராக இருந்தார். தலிபான்கள், பெண்கள் ஆசிரியராக இருக்க முடியாது என்றபோது வேலையை இழந்தவர். அவருக்குப் பிள்ளைகள் இல்லை. அதனால் மசூத்தை தன்னோடு வைத்துக் கொண்டார்.  

1998 ஆகஸ்ட் 8ம் திகதி தலிபான்கள் மஹார் ஏ ஷரீஃப் நகரத்தில் இனப்படுகொலையை ஆரம்பித்தார்கள். அந்த நகரத்தை சுற்றிவளைத்த ‘முல்லா நியாஸ்’ என்ற தலிபான் தளபதி‘ அசையும் எல்லாவற்றையும் சுட்டுக் கொல்லுங்கள்’ என்று ஆணையிட்டான்.  

அந்த நகரம் ஹஸாரா இன மக்கள் அதிகம் வாழும் இடம். இரண்டு நாட்களில் 8000 ஹசரா இன மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அன்று ஆப்கானை முல்லா ஓமர் தலைமையில் தலிபான்களே ஆட்சி செய்தார்கள். ஹசரா மக்கள் யாரிடம் முறையிட முடியும்? 

முடிந்தவர்கள் ஓடி ஒழிந்தார்கள். முடியாதோர் செத்து வீழ்ந்தார்கள். 

அந்த இன சுத்திகரிப்பில் மசூத்தின் தாய், தந்தை, அக்கா, அண்ணா, பாட்டி என எல்லோரும் கொல்லப்பட்டனர். பாமியானில் சித்தியுடன் இருந்ததால் தப்பியவன் மசூத் மட்டுமே.  

பாமியானில் தலிபான்களின் தலையீடு குறைந்தே இருந்தது. ஆனால் வரலாற்றின் சொத்தாக இருந்த மலைக்குகை புத்தர் சிலைகளை 2001ல் தலிபான்கள் இடித்துத் தள்ளினார்கள். உலகமே அருவருத்து நின்றது. அதற்கு தலிபான்களின் ஆஸ்தான குரு முல்லா ஓமர் ‘கடவுளின் கட்டளைகளை நிறைவேற்றினோம். சிலைகளை உடைப்பது இஸ்லாமிய சட்டம்’ என்று மோசமான அறிக்கையை விட்டார்.  

பாமியான் மாகாணம் ஆப்கானுக்கு ஒரு மணி மகுடம். உலக சுற்றுலாவாசிகளையும் வரலாற்றாளர்களையும் சுண்டி இழுத்த நிலம். அதன் மகுடமான அந்த இரு சிலைகளும் இடிக்கப்பட்டவுடன் ஆப்கானின் ஆன்மா எரிக்கப்பட்டது.   

4FF69C3E-33A3-41F5-8EC2-41CA8AD99710.jpe

பாமியானில் கி.பி 507ல் மன்னர் காலத்தில் முதல் சிலை செதுக்கப்பட்டது. அது 121 அடி உயரமானது. பின்னர் கி.பி 554ல் 180 அடி உயரமான சிலை செதுக்கப்பட்டது. நிஜம் சிரிப்பது எதற்கென்றால்-இஸ்லாமிய மார்க்கத்தின் சுருதியான முஹமது நபி அவர்களின் பிறப்பு கி.பி 560ல் நடக்கிறது. அவரின் நாற்பதாவது வயதில் அவருக்கு இறை தரிசனம் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. அப்படி எனில் கி.பி 610ல் அவர் இறைத்தூதர். அவர் காலத்தின் முன்னரே பாமியான் சிலைகள் செதுக்கப்பட்டு விட்டன. 

நபிகள் நாயகத்தின் காலத்திலும் அவரைத் தொடர்ந்த கலிபாக்கள் காலத்திலும் உடைக்கப்படாத புத்தர் சிலைகள், ஆப்கானை மீட்க வந்த இறைவனின் திருக்குமாரர்களாக தம்மைச் சொல்லிக்கொள்ளும் தலிபான்களால் விமான எதிர்ப்பு பீரங்கிகளால் இடித்து தூளாக்கப்பட்டது.  

மசூத் தனது கதைகளை கூறும்போதே முகத்தில் வியர்வைத் துளிகள் தெரிந்தது. அவர் ‘சற்றுப்பொறுங்கள், தண்ணீர் குடித்து விட்டு வருகிறேன்’ என்றார். 

என் மூளை கேள்விகளை உற்பத்தி செய்து கொண்டிருந்தது. மசூத் மீண்டும் என் முடியை பெருமூச்சோடு திருத்த ஆயத்தமானார். 

‘பிரான்சில் உங்களுக்கு உறவினர் உண்டா?’ என்றேன். இல்லை. ஜெர்மனியில் சிலர் இருக்கிறார்கள். அதனால் தான் முதலில் ஜேர்மனிக்கு சென்றேன். அங்கு ஐந்து வருடத்தின் பின்பு எனக்கு அகதி கோரிக்கையை நிராகரித்து விட்டார்கள் . அதனால் தான் சென்ற ஆண்டு பிரான்சுக்கு வந்து மீண்டும் கோரிக்கையை அனுப்பிவிட்டு காத்திருக்கிறேன் என்றார். 

மசூத் உங்களை வளர்த்த சித்தி எங்கே இருக்கிறார்?  

«அவர் பாமியானில் தான் இருந்தார். இப்போது தலிபான்கள் மீண்டும் வந்து விட்டதால் ஹஸாரா இன மக்களை முற்றாக அழித்து விடுவார்கள். அதனால் நமது இன மக்கள் ஆப்கனை விட்டு வெளியேறுகிறார்கள். என் சித்தி ‘பஞ்சசீர்’ சென்று விட்டார். அதை தலிபான்களால் பிடிக்க முடியாது.» என்றார் உறுதியோடு! 

பஞ்சசீர் பள்ளத்தாக்கின் மக்களையும், மண்ணையும் பற்றி அ.முத்துலிங்கம் ஒரு ‘ஆயுள்’ எழுதியுள்ளது என் நினைவில் மிதந்து வந்தது.  

பஞ்சசீர் ஆப்கானிஸ்தானின் வட மேல் பகுதியில் இந்துகுஷ் மலைகள் சூழ்ந்திருக்க பள்ளத்தாக்கில் இருக்கும் மலைகளின் தொட்டில். அங்கு வாழும் மக்களும் தனித்துவமானவர்கள். உலகை தனது கரங்களில் ஏந்த ஆசைப்பட்டு ‘புசபெலஸ்’ குதிரையில் வேகமாகச் சென்ற அலெக்சாண்டர், மலை உச்சியில் நின்று பிரமித்து நின்ற நிலம் அது.  அவர் படை வீரர்கள் சிலர் அதன் அழகில் மயங்கி அங்கேயே தங்கிவிட்டதாக கதைகள் உலவுகின்றன. அந்தக் கதைகளுக்கு ஏற்றால்போல் அந்த மக்கள் யாருக்கும் அடிபணியாதவர்கள். இயற்கையை சிதைக்காமல் வாழ்பவர்கள். அந்த மக்கள் அந்நியர்கள் ஆழுவதை எந்தக் காலத்திலும் ஏற்றது கிடையாது.  

E0CB80B4-1512-41F1-9776-76C86E23DFE4.jpe

அன்று சோவியத் படையை எதிர்க்க ஆயுதமேந்திய ‘அஹமது ஷா மசூத் இந்த நிலத்தை சொந்தமாகக் கொண்டவர். பின்னர் ஆப்கானின் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தவர். தலிபான்களை வீரத்தோடு எதிர்த்த வடக்கு கூட்டணிப் படையின் தலைவராக இருந்தார். பின்னர் அவரிடம் பேட்டி எடுக்க செல்வதுபோல பத்திரிகையாளர் வேடத்தில் சென்ற தலிபான் கூட்டாளிகள் அவரை 2001ல் கொன்றனர். அவரை ஆப்கான் மக்கள் ‘பஞ்சசீர் சிங்கம்’ (பஞ்சசீர் என்றாலும் 5 சிங்கம்தானாம்)  என்று பெருமிதத்தோடு அழைப்பார்கள்.  

இன்று பஞ்சசீர் தலிபான்களிடம் அடிபணியாமல் தலிபான்களோடு போருக்குத் தயாரென நிமிர்ந்து நிற்கிறது. அதை அறிவித்து நிற்பது யாருமல்ல பஞ்சசீர் சிங்கத்தின் மகன்‘ அஹமது மசூத்’.   

EFFB9471-4B2D-48B8-84AF-FA4C841BA896.jpe

ஹசாரா இனம் ஆப்கானின் மூத்த குடிகளில் ஒன்று. ஆனால் தலிபான்கள் அவர்களை வேரில்லாமல் அழிக்க நினைக்கிறார்கள். ஹசாரா என்பது செங்கிஸ்கானின் ஆயிரம் பேர் கொண்ட படைப்பிரிவின் பெயர் என்றும் பொருள் உண்டு. ஹசாரா மக்களுக்கும், செங்கிஸ்கானுக்கும் தொடர்பிருப்பதாக வரலாறு கிசுகிசுக்கிறது. செங்கிஸ்கான் யார் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.   

முடி திருத்தி முடித்தும் நாம் பேசிக்கொண்டே இருந்தோம். அந்த முடிதிருத்த நிலைய முதலாளி என்று ஊகிக்கக்கூடியவர் அருகே வந்து என்னிடம், ‘என்ன தம்பி ஆப்கானிஸ்தான் காரனை சொந்தமாக்கிப் போட்டியல் போல? நிறைய கதைக்கிறியள். நிறைய பேர் முடி வெட்டக் காத்திருக்கினம்’ என்றார்.  

நான் மௌனம் மூடிய சிரிப்போடு 10€ எடுத்து அவரிடம் கொடுத்தேன். மனைவி பொருட்கள் வேண்டி வரத் தந்த 20€ இருந்தது நினைவுக்கு வந்தது. வாசல்வரை வந்து கைலாகு தந்து ‘நண்பா நீண்ட நாட்களின் பின்னர் என் கதையை உங்களிடம் பேசி உள்ளேன்’ என்றார் மசூத்.  

‘உங்கள் சேவைக்கும், பகிர்தலுக்கும் நன்றி. உங்கள் வலிகளை நானும் சேர்ந்து ஏற்கிறேன்’ என்று கூறி அவர் கரங்களில் 20€ ஐ வைத்தேன். 

மசூத் திடுக்கிட்டவாறு அதை மறுத்துவிட்டு, ‘இல்லை நண்பா நம்மை இது இணைக்கக்கூடாது, இதனைவிட நெருக்கமான உறவு இருக்கிறது. ‘நாம் அகதிகள்’ என்றார். 

நான் காரில் ஏறும்போது திரும்பி பார்த்தேன். மசூத் என்னை பார்த்தவாறே சலூன் வாசலில் நின்று கை காட்டினான்.      

அவனின் கண்களில் கதைகளும், கனவுகளும், ஏக்கங்களும் கொட்டிக் கிடந்தன. 

நேரம் இருக்கும்போது இனி அவன் அவற்றை எனக்குச் சொல்லலாம், நினைவிருக்கும் வரை நானும் அதனைக் காவிச்செல்வேன்.  

 

https://arangamnews.com/?p=6240

 • Like 2
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • கடற்படையினரின்... அராஜகமானது, அரசாங்கத்தின் உண்மையான மனநிலையை வெளிக்காட்டியுள்ளது- சார்ள்ஸ் மன்னார்- வங்காலைபாடு  கிராமத்தில் இருந்து கடற்றொழிலுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு சென்று வந்த கிராமத்தவர் ஒருவரை, மதுபோதையில் இருந்த கடற்படையினர் வழிமறித்து எவ்விதக் காரணமும் இல்லாமல் கடுமையாக  தாக்கியுள்ளனர். அதனை நேரில் பார்த்த கிராம சேவகர் ஒருவர், அவரை ஏன் தாக்குகின்றீர்கள் என கடற்படையினரை கேட்கசென்றபோது, 10க்கும் மேற்பட்ட கடற்படையினர் சேர்ந்து அக்கிராம சேவகரையும் தாக்கியுள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்க சென்றபோது, முறைப்பாட்டை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இந்நிலையில் உடனடியாக அவர்களின் உடல்நலம் கருதி பேசாலை வைத்தியசாலையில் ஏனையோர் அனுமதித்தப்போது, மேலதிக சிகிச்சைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை சம்பவ இடத்திற்கு  நேரில் சென்று நிலைமைகளை அவதானித்த நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளதாவது, “கடற்படையினரின் இந்த அராஜகமானது தற்போது இருக்கும் அரசாங்கத்தின் உண்மையான மனநிலையை வெளிக்காட்டியுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவமானது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆகவே அதற்கு எனது  கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2021/1241171
  • ஹனா சிங்கர் மற்றும் சாரா ஹல்டனுடன்... கூட்டமைப்பு தனித்தனியே சந்திப்பு! ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி ஹனா சிங்கர் மற்றும் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் ஆகியோருடன் தனித்தனியான கலந்துரையாடலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்தியுள்ளது. இதன்போது வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு மற்றும் மார்ச் மாதத்தில் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் உள்ளீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து பேசப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கடந்த திங்கட்கிழமை இடமபெற்ற ஹனா சிங்கருடனான சந்திப்பின்போது குறித்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டிருந்தார். அத்துடன், நில அபகரிப்பு தொடர்பான ஆவணங்கள் மற்றும் தரவுகள் அடங்கிய விடயங்களை அவருடன் பகிர்ந்து கொள்வது பற்றி கவனம் செலுத்தப்பட்டது என்றும் அவர் கூறினார். இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை பிரித்தனிய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் இதன்போது இணை அனுசரனை வழங்கும் நாடுகளுக்கு தலைமை வகிக்கும் பிரித்தானியாவின் பங்களிப்பு குறித்து பேசப்பட்டது என்றும் சுமந்திரன் தெரிவித்தார். மேலும் புலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பை வரவேற்பதாக தெரிவித்த சுமந்திரன், இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் விடயங்கள் குறித்து இதுவரையில் தமிழ்த்தரப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தாதமை குறித்து சுட்டிக்காட்டியதாகவும் கூறினார். (நன்றி கேசரி ) https://athavannews.com/2021/1241266
  • புலம்பெயர்ந்த தமிழர்களை நோக்கி, ஜனாதிபதியின் அழைப்பு – நிலாந்தன்! ஏறக்குறைய ஒரே காலப்பகுதியில் இரண்டு ராஜபக்ச சகோதரர்களும் மேற்கு நாடுகளுக்கு விஜயம் செய்திருக்கிறார்கள்.ஜனாதிபதி கோட்டபாய அமெரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களை நோக்கி உள்ளக விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அழைப்பு விடுத்திருக்கிறார். உள்நாட்டு பொறிமுறைக்கு ஒத்துழைக்குமாறு உள்நாட்டில் உள்ள மக்கள் பிரதிநிதிகளை நோக்கிக் கேட்காத நாட்டின் தலைவர் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை நோக்கி ஏன் கேட்கிறார் ? சில மாதங்களுக்கு முன் அவருடைய அரசாங்கம் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் சிலவற்றையும் தனி நபர்களையும் தடை செய்து ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தது. ஒரு பெரும் தொற்றுநோய்க் காலத்தில் மேற்குநாடுகளில் வாழும் தமிழர்களின் அமைப்புகள் சில வடக்கு-கிழக்குக்கு உதவ விரும்பியபொழுது அதனை அரசாங்கம் நிராகரித்தது.அந்த உதவிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஊடாக தருவதற்கு அவை முயற்சித்தன.அந்த நாடாளுமன்ற உறுப்பினரும் அந்த உதவிகளை வடக்கு கிழக்குக்கு என்று வாங்காமல் முழு நாட்டுக்குமாக வாங்கினால் நல்லது என்று அந்த அமைப்புகளுக்கு ஆலோசனை கூறியிருக்கிறார்.அவர்களும் சம்மதித்திருக்கிறார்கள்.ஆனால் அந்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துவிட்டது. அதற்கு இரண்டு காரணங்கள் கூறப்பட்டன. ஒன்று அந்த உதவியை பெற்றால் அது புலம்பெயர்ந்த தமிழ் தரப்பை அங்கீகரிப்பது ஆகிவிடும், எனவே அதை செய்ய அரசாங்கம் விரும்பவில்லை என்று கூறப்பட்டது.இரண்டாவது காரணம் தமிழ்த் தரப்புக்கள் கறுப்பு பணத்தை வெள்ளைப் பணமாக்க முயற்சிக்கின்றன என்று ஒரு சந்தேகம். இவ்வாறு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளை தடை செய்து அவற்றிடமிருந்து ஒரு பெரும் தொற்றுநோய் காலத்தில் கிடைக்கவிருந்த மனிதாபிமான உதவிகளையும் நிராகரித்த ஓர் அரசாங்கம் இப்பொழுது அதே புலம்பெயர்ந்த சமூகத்தை நோக்கி என் வேண்டுகோளை விடுகிறது? நீதிக்கான கோரிக்கையைப் பொறுத்தவரை உள்நாட்டுத் தரப்புகளை விடவும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள்தான் அதிகம் வினைத்திறனோடு தொடர்ச்சியாக செயல்படுகிறார்கள் என்று கருதியதால் அரசாங்கம் அவ்வாறு வேண்டுகோளை விடுத்திருக்கலாம்.ஆனால் அரசாங்கம் கேட்பதுபோல உள்நாட்டுப் பொறிமுறையை தமிழ்மக்கள் நம்பக் கூடிய அளவிற்கு இந்த அரசாங்கத்தின் கடந்த சுமார் 20 மாத கால ஆட்சி அமையவில்லை. கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலம் அல்லது ராஜபக்சக்களின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின் கடந்த சுமார்20 மாதங்களைத் தொகுத்துப் பார்த்தால் நமக்குக் கிடைக்கும் சித்திரம் உள்நாட்டு நீதிப் பொறிமுறை குறித்தோ அல்லது நல்லிணக்கத்தை குறித்தோ அல்லது சமாதான சகவாழ்வு குறித்தோ அல்லது இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்தோ அல்லது குறைந்த பட்சம் நிலைமாறுகால நீதி குறித்தோ நம்பிக்கை கொள்ளத்தக்க ஒரு சித்திரம் அல்ல. நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்த ஓர் அரசாங்கம் இது. ஒரு பெரும் தொற்றுநோய் காலத்தில் சிறிய தேசிய இனங்களின் உரிமைகளை அதிகம் புறக்கணித்த ஓர் அரசாங்கம் இது. தனக்குக் கிடைத்த மூன்றிலிரண்டு பெரும்பான்மையை தனிச் சிங்கள பௌத்த மூன்றிலிரண்டு பெரும்பான்மையாக வியாக்கியானம் செய்த ஓர் அரசாங்கம் இது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்து மையத்தில் மேலும் அதிகாரங்களைக் குவித்துக் கொண்ட ஓர் அரசாங்கம் இது கடந்த சுமார் 20 மாதங்களாக நாட்டை முன்னெப்பொழுதையும் விட அதிகரித்த அளவில் ராணுவ மயப்படுத்திய ஓர் அரசாங்கமும் இது. தனிச்சிங்கள மூன்றில் இரண்டு பெரும்பான்மை எனப்படுவது ஏனைய இனங்களின் இருப்பையும் தனித்துவத்தையும் பல்லின சூழலையும் பல்சமய சூழலையும் நிராகரிக்கும் ஒரு கோட்பாடாகும். இவ்வாறு தன்னை தனிச்சிங்கள மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற ஓர் அரசாங்கமாக காட்டிக்கொள்ளும் இந்த அரசாங்கம் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் போன்றவைகள் தொடர்பில் விசுவாசமாக செயற்படும் என்று தமிழர்கள் எப்படி நம்புவது? இந்த 20 மாதங்களில் பின்னணியில் வைத்துப் பார்த்தால் ஜெனீவாவிலும் வொஷிங்டனிலும் அரசுப் பிரதானிகள் தெரிவித்த கருத்துக்களை தமிழ் மக்கள் நம்புவது கடினம்.குறிப்பாக வொஷிங்டனில் ஐநா பொதுச்செயலரை சந்தித்தபோது ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்த கருத்துக்களும் ஐநாவில் அவர் ஆற்றிய உரையும் உள்நாட்டுப் பொறிமுறையை வலியுறுத்துபவைகளாகக் காணப்படுகின்றன.ஆனால் உள்நாட்டு நீதிபரிபாலன கட்டமைப்பின் தோல்வி அல்லது போதாமை காரணமாகத்தான் அனைத்துலக சமூகம் ஐநாவில் கடந்த 2015 செப்டம்பர் மாதம் நிலைமாறுகால நீதிக்கான 30/1தீர்மானத்தை நிறைவேற்றியது.நிலைமாறுகால நீதி எனப்படுவது உள்நாட்டு நீதியின் தோல்வியை அல்லது போதாமையில் விளைவாகத்தான் அனைத்துலக சமூகத்தால் பரிந்துரைக்கப்பட்டது. அத்தீர்மானத்தை கொண்டுவந்த ரணில் விக்கிரமசிங்க தன்னால் முடிந்தளவுக்கு உள்நாட்டு நீதிப்பொறிமுறைக்கு வெள்ளையடிக்க முயற்சித்தார்.அதற்கு கூட்டமைப்பும் மறைமுகமாக ஆதரவை நக்கியது. எனினும் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிலைமாறுகால நீதியின் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரிபால சிறிசேன அக்குழந்தையை அனாதையாக்கினார்.அதன்பின் குற்றுயிராய் கிடந்த அந்தச் சிசுவை தொடர்ந்தும் சாகவிடாமல் ஆனால் அதற்குப் பாலும் கொடாமல் இந்த அரசாங்கம் பராமரித்து வருகிறது.அவ்வாறு ஜெனிவாவில் கணக்கு காட்டுவதற்காக பொய்யாகச் செய்யப்படும் வீட்டுவேலைகளை தொகுத்து கடந்த 31ஆம் திகதி அரசாங்கம் நாட்டிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கும் ஐநாவுக்கும் ஒரு அறிக்கையை அனுப்பியது. இவ்வாறு நிலைமாறுகால நீதியை ஐநாவுக்காகச் செய்யப்படும் வீட்டு வேலையாக காண்பிப்பது என்பது ஏற்கனவே ரணிலின் காலத்திலேயே தொடக்கப்பட்ட ஒரு உத்தி. அதனைத்தான் இந்த அரசாங்கமும் பின்பற்றுகிறது. ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால் ரணில் நிலைமாறுகால நீதியின் பெற்றோரில் ஒருவராகக் காணப்பட்டார்.இந்த அரசாங்கம் அவ்வாறு கூறவில்லை.அதில் ஒரு வெளிப்படைத்தன்மை உண்டு.இந்த அரசாங்கம் நிலைமாறுகால நீதியை ஐநா பரிந்துரைக்கும் வடிவத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக ராஜபக்ச பாணியிலான ஒரு வடிவத்தில் அதை நாட்டில் நடைமுறைப்படுத்தத் தயார் என்று கடந்த கூட்டத்தொடரில் வெளிப்படுத்தியிருக்கிறது. அதேசமயம் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட சான்றுகளை திரட்டுவதற்கான பொறிமுறை தொடர்பில் இந்த அரசாங்கம் ஐநாவோடு முரண்படுகிறது. இப்பொழுது அரசாங்கத்துக்குள்ள தாண்டக் கடினமான தடையும் அதுதான். அப்பொறிமுறை இந்த ஆண்டு முடிவதற்கிடையில் இயங்க தொடங்கும் என்று ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நடந்துமுடிந்த கூட்டத் தொடரில் தனது வாய்மூல அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.அப்பொறிமுறைக்கு தேவையான நிதியில் பெரும் பகுதியை பிரித்தானியாவும் ஆஸ்திரேலியாவும் ஏற்கனவே வழங்கிவிட்டன. அப்பொறிமுறையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று அரசாங்கம் தெளிவாகக் கூறிவிட்டது. ஆனால் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமோ இல்லையோ அந்த பொறிமுறை இயங்கப்போகிறது. அரசாங்கம் அப்பொறிமுறையை நாட்டுக்குள் இயங்க அனுமதிக்குமோ இல்லையோ அது நாட்டுக்கு வெளியிலாவது இயங்கப்போகிறது. எதிர்காலத்தில் படைத்தரப்புக்கு எதிராக குற்றம்சுமத்த தேவையான ஆதாரங்களை திரட்டக்கூடிய ஒரு பொறிமுறையாக அரசாங்கம் அதைப் பார்க்கிறது.எனவே அப்பொறிமுறையை எப்படி உள்நாட்டு மயப்படுத்தி பலவீனப்படுத்தலாம் என்று சிந்திக்கிறது. அதனால்தான் ஜனாதிபதி புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தை நோக்கி அப்படி ஒரு கோரிக்கையை முன்வைத்தார். போர்க்குற்றம் தொடர்பான சான்றுகளை திரட்டு பொறிமுறையை தமிழ் மக்கள் மத்தியில் உள்ள எல்லா தரப்பும் ஒருமித்து ஏற்றுக்கொள்ளவில்லை. அது தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் உண்டு. ஆனால் அரசாங்கம் அப்பொறிமுறையை ஓர் அச்சுறுத்தலாகவே பார்க்கிறது. ஏனெனில் படைத்தரப்பை விசாரிக்க தேவையான சான்றுகளை திரட்டும் பொறிமுறையானது இறுதியிலும் இறுதியாக எதிர்காலத்தில் தமக்கும் எதிரானது என்று இந்த அரசாங்கத்தின் பிரதானிகளை காணப்படும் இரண்டு சகோதரர்களும் கருத இடமுண்டு.குற்றம் சுமத்தப்படும் படையினருக்கு உரிய கட்டளைகளை வழங்கும் அரசியல் தீர்மானங்களை எடுத்தது இந்த இரண்டு சகோதரர்களும்தான்.எனவே அந்தப் பொறிமுறையை எப்படி பலவீனப்படுத்தலாம் என்று அரசாங்கம் சிந்திக்கிறது. அதைப் பலவீனப்படுத்துவது என்றால் ஒப்பீட்டளவில் சாத்தியமான இரண்டு வழிகள் உண்டு. முதலாவது மேற்கு நாடுகளையும் ஐநாவையும் அனுசரித்துப் போய் தனக்குச் சாதகமாக கையாள்வது. இரண்டாவது குற்றச்சாட்டுக்களை தொடர்ச்சியாக முன்நகர்த்திக் கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தை சமாளிப்பது. கையாள்வது. ஐநாவை கையாள்வது என்பது ஐநாவில் அங்கம் வகிக்கும் அரசுகளை கையாள்வதுதான். குறிப்பாக போர்க் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து முன்னிறுத்தும் மேற்கு நாடுகளை சமாளிப்பதுதான். அந்த வேலையை ஏற்கனவே பசில் ராஜபக்ச தொடங்கிவிட்டார். அதில் அவரும் ஜி எல் பீரிசும் ஒப்பீட்டளவில் முன்னேறத் தொடங்கியிருப்பதைத்தான் கடைசியாக நடந்த கூட்டத்தொடரில் மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை காட்டுகிறதா ? மேற்கு நாடுகளை வெற்றிகரமாக கையாண்டால் ஐநாவில் இருந்து அரசாங்கத்திற்கு வரக்கூடிய அழுத்தம் ஓரளவுக்கு குறையும். சீனாவிடம் மட்டும் கடனுதவி பெறுவதற்கு பதிலாக மேற்கு நாடுகளின் நிதி முகவர் அமைப்புகளான உலக வங்கி பன்னாட்டு நாணய நிதியம் போன்றவற்றிடமும் உதவிகளைப் பெறுமாறு ரணில் விக்கிரமசிங்க ஆலோசனைக் கூறியது என்பது covid-19ககுப் பின்னரான துருவமயப்படும் உலகச் சூழலில் இச்சிறிய தீவு சிக்குப்படுவதை தடுக்கும் நோக்கிலானதே.அரசாங்கமும் அது விடயத்தில் பசில் ராஜபக்ச, பீரிஸ், மிலிந்த மொரகொட. போன்றவர்களை முன்னிறுத்தி காய்களை நகர்த்தி வருகிறது இக்காய்நகர்த்தல்களில் ஆகப் பிந்தியதுதான் ஜனாதிபதி புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தை நோக்கி விடுத்த கோரிக்கைகள் ஆகும். இக்கோரிக்கைகளை புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது ? முதலில் ஒன்றை குறிப்பிட வேண்டும் புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகம் என்பது தட்டையான ஒற்றைப் பரிமாணத்தைக் கொண்ட ஒன்றிணைந்த ஒரு கட்டமைப்பு அல்ல.அது பல அடுக்குகளைக் கொண்ட பல்வேறு பிரிவுகளைக் கொண்ட பல்வேறு கருத்துநிலைகளைக் கொண்ட அதிகம் சிதறிக் காணப்படும் ஒரு சமூகம். உலகின் மிகவும் கவர்ச்சி மிக்க ஒரு புலம்பெயர்ந்த சமூகமாக அது காணப்படுகிறது. அதேசமயம் மிகமோசமாக சிதறுண்டிருக்கும் ஒரு சமூகமாகவும் அது காணப்படுகிறது. அதை வெற்றிகரமாகப் பிரித்தாள முடியும் என்பதனை ரணில் விக்கிரமசிங்க நிரூபித்திருந்தார்.அவர் ஒரு தொகுதி புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களையும் தனிநபர்களையும் தடைநீக்கி அரவணைத்தார்.அதில் குறிப்பிடத்தக்க அளவிற்கு வெற்றியுமீட்டினார். முன்னைய ஐநா தீர்மானங்கள் தொடர்பில் புலம்பெயர்ந்த தமிழ்த்தரப்புக்கள் இரண்டுபட்டுநின்றன. ஒரு பகுதி நிலைமாறுகால நீதியை வலியுறுத்தியது. இன்னொரு பகுதி பரிகார நீதியை வலியுறுத்தியது. இவ்வாறு புலம்பெயர்ந்த தமிழ் பரப்பை பிரித்து ஆள்வதில் ரணில் குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேறியும் இருந்தார்.அவரைப்போல புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தை கையாள கோட்டாபாயவால் முடியாது.ஏனெனில் இவரிடம் நல்லிணக்க முகமூடி கிடையாது. எனினும் அப்படி ஒரு முகமூடியை அரசாங்கம் அணிய முயற்சிக்கிறதா என்ற சந்தேகத்தை அதன் அண்மைக்கால செயற்பாடுகள் அதிகப்படுத்துகின்றன. ஐநாவுக்கு கணக்கு காட்டும் கண்துடைப்பான வீட்டு வேலைகள் நல்லிணக்கத்தை உருவாக்காது. அல்லது புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகத்தை பிரித்தாள்வதும் நல்லிணக்கத்தை உருவாக்காது. நிலைமாறுகால நீதியை உள்நாட்டு வடிவத்தில் நடைமுறைப்படுத்தப்போவதாக அரசாங்கம் கட்டியெழுப்பும் பொய்த்தோற்றத்தை அதன் ராஜாங்க அமைச்சர்களில் ஒருவரான லோகான் ரத்வத்த அம்பலப்படுத்தி இருக்கிறார்.அனுராதபுரம் சிறைச்சாலையில் அவர் நடந்துகொண்டவிதம் அரசாங்கத்தின் நல்லிணக்க முகமூடியை கிழிக்கக் கூடியது. அது போலவே நல்லூரில் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்னே நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனை பொலிசார் கையாண்ட விதமும் அரசாங்கத்தின் உள்நாட்டு வடிவிலான நிலைமாறுகால நீதி ஒரு பொய் என்பதை நிரூபித்திருக்கிறதா? https://athavannews.com/2021/1241208
  • புலம்பெயர் அமைப்புகள் மீதான... தடையினை, ஜனாதிபதி நீக்க வேண்டும்- துரைரெட்ணம் கோரிக்கை புலம்பெயர் அமைப்புகளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு முன்னர் அவர்கள் மீதான தடையினை முதலில் ஜனாதிபதி நீக்கவேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.பத்மநாபா மன்ற தலைவருமான இரா.துரைரெட்ணம் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் இரா.துரைரெட்ணம் மேலும் கூறியுள்ளதாவது, “இனவாதங்கள் பேசி தாங்கள் நினைத்ததை செய்துவிடலாம் என்ற இறுமாப்போடு இருந்த நிலையில், ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்றமை பெரிய விடயமாகும். இராஜதந்திர ரீதியாக உள்வாங்கப்பட்டு உள்நுழைவதென்பது பல விடயங்களை சாதகமாக கொண்டுவருவதற்கான சந்தர்ப்பங்களாகும். இதேவேளை புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு தமிழர் விவகாரம் தொடர்பாக அழைப்பு விடுத்தது, இலங்கையில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக அதனை உள்விவகாரம் என்று சொல்வது எந்தளவிற்கு சரியானது என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றது. யுத்தத்தில் தமிழர்களால் இனப்படுகொலை நடந்திருக்கின்றது என்று கூறுகின்ற நிலைமையில் இறந்தவர்களுக்கு மரணப் பத்திரம் வழங்க முடியும் என்று ஜனாதிபதி கூறிய விடயங்கள் தமிழ் மக்கள் மத்தியில் கேள்விக்குறியாக மாறியுள்ளது. ஆனால் பிரச்சினையை தீர்க்கக்கூடிய நிர்வாகக் கட்டமைப்பிற்குள் போனதென்ற விடயத்தில் சில சாதகமான விடயங்கள் இருக்கின்றன. ஆனாலும் அதில் ஆபத்தான விடயங்களும் உள்ளன.ஜனாதிபதி புலம்பெயர் அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்ததற்கு அப்பால் ஜனாதிபதி இலங்கை அரசாங்கம் ஊடாக பல நாடுகளில் செயற்பட்டுவந்த சில அமைப்புகளுக்கு தடைவித்திக்கப்பட்டிருந்தது. புலம்பெயர்ந்த சில அமைப்புகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த விவகாரம் எந்தளவுக்கு நியாயமானது. அந்த புலம்பெயர் அமைப்புகளை தமிழர் விவகாரம் தொடர்பில் பேசுவதற்கு அழைப்பு விடுவது என்பது ஒன்றுக்கொன்று முரண்பட்ட விடயமாகவுள்ளது. ஆகவே, ஜனாதிபதி முதலில் புலம்பெயர்ந்த அமைப்புகள் மீது விதித்துள்ள தடைகளை நீக்குவதன் ஊடாக அந்த அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் உள்ளன. மேலும், விடுக்கப்பட்ட அழைப்புகளுக்கு செயல்வடிங்களை அரசாங்கம் கொடுக்கவேண்டும். இதேவேளை உள்ளகப்பொறிமுறையென்று கூறும் விடயங்களில் தமிழர்களுக்கு பல கேள்விகள் உள்ளது. தமிழர்களைப் பொறுத்தரையில் இறுதி இனப்படுகொலை நடைபெற்ற காலப்பகுதியில் இன்றுள்ள ஜனாதிபதியே பல அதிகாரங்களை கொண்டிருந்தார். இவ்வாறான ஒருவர், தொடர்ச்சியாக உள்ளகப்பொறிமுறைதான் அமுலுக்கு வரவேண்டும் என்று சொல்வதை தமிழ் மக்கள் நிராகரிக்கின்றார்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2021/1241213
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.