Jump to content

யாழ். பல்கலை பட்டமளிப்புக்கு அனுமதி மறுப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலை பட்டமளிப்புக்கு அனுமதி மறுப்பு

September 17, 2021

spacer.png

எதிர்வரும் நாள்களில் கொவிட் 19 நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் பட்டமளிப்பு விழாவை நேரடியாக நடாத்துவது பற்றி அன்றைய நாளில்  சாதகமாகப் பரிசீலிக்கப்படலாம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியக் கலாநிதி அசேல குணவர்த்தன அறிவித்துள்ளார். 

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 07 ஆம் திகதி முதல் மூன்று நாள்களுக்கு நடாத்துவதற்கான அனுமதி கோரி யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரால் அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைக்கான பதில் கடிதத்திலேயே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியக் கலாநிதி அசேல குணவர்த்தன மேற்கண்டவாறு அறிவித்துள்ளார். 

இது தொடர்பில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியக் கலாநிதி அசேல குணவர்த்தன நேற்று மாலை யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், 

தற்போது நாட்டில் விதிக்கப்பட்டுள்ள கொவிட் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு அமைய அனைத்து விதமான ஒன்று கூடல்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதனால் தங்களின் கோரிக்கையின் படி நிகழ்வை நடாத்துவதற்கு அனுமதிக்க முடியாத நிலையில் இருக்கிறோம். எனினும் எதிர்வரும் நாள்களில் கொவிட் 19 நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் பட்டமளிப்பு விழாவை நேரடியாக நடாத்துவது பற்றி அன்றைய நாளில்  சாதகமாகப் பரிசீலிக்கப்படலாம் என்றும், நிகழ்நிலையில் பட்டமளிப்பு விழாவை நடாத்துவதற்கு ஆட்சேபனை ஏதுமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 

https://globaltamilnews.net/2021/166148

 

Link to comment
Share on other sites

என்னையா இந்த நாடு, மதுபான சாலைகள் திறக்க அனுமதி அளித்துள்ளார்கள், ஆனால் பட்டமளிப்புக்கு அனுமதி மறுத்துள்ளார்கள்.ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் முடிவு எடுப்பவர்கள் பயங்கர அறிவாளிகள்.  

வழமையான ஆடம்பர விழாவாக இல்லாமல், சாதாரணமாக நடத்த அனுமதி அளித்திருக்கலாம். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

யாழ்ப்பாணம் நிலமை மோசம். பொருத்தமான முடிவு. 

பட்டமளிப்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் என்னய்யா சம்பந்தம்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழகம் யாழ்ப்பாணத்தில்தானே உள்ளது? பட்டமளிப்பு விழாவை எங்கு நடத்தப்போகின்றீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டமளிப்பு என்று அது இதுக்கு என்று காசு பறிப்பது தான் நடக்கிறது. கடைசியில் வெறும் கடதாசிக் கோதை கையில் கொடுத்து அனுப்பி விடுவார்கள். உண்மையான சான்றிதழ் கூட பின்னர் தான் வழங்கப்படும். வேணும் என்றால் வீட்டு முகவரியை கொடுத்தால் சான்றிதழ் வரும்.

ஒரு வேலைக்கும் பட்டதாரிப் புகைப்படம் கேட்பதில்லை. ஏன் சான்றிதழ் கூட கேட்பதில்லை. தேவை ரான்ஸ்கிரிப்ட் எனப்படும் பெறுபேற்று சான்றிதழ் மட்டுமே. 

இந்தப் பட்டமளிப்பு வெட்டி நிகழ்வுகளை அடியோடு இல்லாமல் செய்வது நல்லம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nedukkalapoovan said:

பட்டமளிப்பு என்று அது இதுக்கு என்று காசு பறிப்பது தான் நடக்கிறது. கடைசியில் வெறும் கடதாசிக் கோதை கையில் கொடுத்து அனுப்பி விடுவார்கள். உண்மையான சான்றிதழ் கூட பின்னர் தான் வழங்கப்படும். வேணும் என்றால் வீட்டு முகவரியை கொடுத்தால் சான்றிதழ் வரும்.

ஒரு வேலைக்கும் பட்டதாரிப் புகைப்படம் கேட்பதில்லை. ஏன் சான்றிதழ் கூட கேட்பதில்லை. தேவை ரான்ஸ்கிரிப்ட் எனப்படும் பெறுபேற்று சான்றிதழ் மட்டுமே. 

இந்தப் பட்டமளிப்பு வெட்டி நிகழ்வுகளை அடியோடு இல்லாமல் செய்வது நல்லம். 

நல்ல விஷயம் இந்த COVID நேரத்தில் இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் தேவையில்லை.. 

ஆனால் முழுமையாக இல்லாமல் செய்வது என்பது கேள்விக்குறியே.. 

அதேபோல உள்நாடு, வெளிநாடு என்ற பாரபட்சம் இல்லாமல் சகல பல்கலைகழகங்களிலும் இந்த பட்டமளிப்பு வெட்டி நிகழ்வுகளை அடியோடு இல்லாமல் செய்வது நல்லது என்றுதானே கூறுகிறீர்கள், இல்லையா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அதேபோல உள்நாடு, வெளிநாடு என்ற பாரபட்சம் இல்லாமல் சகல பல்கலைகழகங்களிலும் இந்த பட்டமளிப்பு வெட்டி நிகழ்வுகளை அடியோடு இல்லாமல் செய்வது நல்லது என்றுதானே கூறுகிறீர்கள், இல்லையா? 

எங்குமே அவசியமில்லை என்பது தான் நிலைப்பாடு. எதுக்குமே பிரயோசனப்படாத ஒரு நிகழ்வை எதுக்கு நடத்திக்கிட்டு இருக்கனும்..! அதுகூட பல மாணவர்களுக்கு செலவுச் சுமை.

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில்.. பல பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு நிகழ்வே நடக்கவில்லை. ஆனால் படித்து முடித்தவர்கள்.. வேலை எடுத்து வாழ்க்கையில் அடுத்த படிநிலைக்கும் போய்விட்டார்கள். இது இங்கிலாந்தையும் சேர்த்துத்தான்.

எல்லாமே பேப்பர் லெஸ் என்று சொல்லிக் கொள்ளும் உலகம்.. இந்தப் பேப்பரை மட்டும் பாதுகாப்பது ஏன்..??! படிப்புக்கான அடையாளமாக புள்ளிகளும் பெறப்படும் அறிவும் அனுபவும் தானே அடுத்த நிலைக்கு முன்னேற அவசியம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nedukkalapoovan said:

 

உண்மைதான் கடந்த 2 வருடங்களில் பட்டமளிப்பு போன்றவை நடக்கவில்லை.. ஆனால் மாணவர்களை கேட்டுப்பாருங்கள் அவரகளது பதில் வித்தியாசம்.. ஏனெனில் அவர்கள் இழந்தது வாழ்க்கையின் ஒரு நிலையில் வரும் நினைவுகளை.. சில அனுபவங்கள் எத்தனை பணம் இருந்தாலும் ஈடு செய்ய முடியாதவை.. எல்லாவற்றையும் செலவு/பணம் என்பதுடன் ஒப்பிடுவது சரியல்ல என்பது எனது எண்ணம்..

அவர்கள் என்னதான் படித்து முடித்து வேலையில் அமர்ந்தாலும் இந்த மாதிரியான நிகழ்வுகளை இழந்தது அவர்களுக்கு கவலை தரும் விடயம்..

Paperless, உண்மைதான்.. ஆனால் பட்டமளிப்பு என்பது தனியே paper மட்டும் சார்ந்ததில்லை .. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

மாணவர்களை கேட்டுப்பாருங்கள் அவரகளது பதில் வித்தியாசம்.. ஏனெனில் அவர்கள் இழந்தது வாழ்க்கையின் ஒரு நிலையில் வரும் நினைவுகளை.. சில அனுபவங்கள் எத்தனை பணம் இருந்தாலும் ஈடு செய்ய முடியாதவை.. எல்லாவற்றையும் செலவு/பணம் என்பதுடன் ஒப்பிடுவது சரியல்ல என்பது எனது எண்ணம்..

ஒரு வேளை இலங்கை தமிழர் பின்னணியில் இருந்து வந்த மாணவர்களாக அவர்கள் இருக்கக் கூடும். ஏனெனில்.. எம்மவர்களுக்கு படிப்பு அறிவு அனுபவம்.. அதன் பிரயோகத்துக்கு அப்பால்.. பட்டம் பெறுவது பட்டமளிப்பு ஒரு சமூக வெட்டிக் கெத்தாகக் காட்டப்பட்டு விட்டது.

இதே என்னோடு வேலை செய்யும் பலர்.. பல வகை பட்டப்படிப்புகளை இந்த இரண்டு ஆண்டுகளில் நிறைவு செய்துள்ளனர். எவருமே பட்டமளிப்பு நடக்கவில்லை என்று கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. பலர் செலவு மிச்சம் என்று நிம்மதிப்பட்டதுதான் அதிகம். இது என் சார்ந்த சூழல் அனுபவம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் பட்டமளிப்பு என்பது கிட்டதட்ட திருமணம் போல. 

முதல் தரம் செய்யும் போது வெகு விமரிசையாக செய்ய ஆசைபடுவோர் கூட, 2ம், 3ம் தரம் செய்யும் போது, ரிஜெஸ்டிர் ஆபிசில் இரெண்டு சாட்சி கையெழுத்தோடு முடிப்பார்கள். அப்படித்தான் இதுவும் என நினைக்கிறேன். The novelty wears off.

இது எனது சொந்த அனுபவமும் கூட (திருமணம் இல்லை, பட்டமளிப்பு🤣).

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.