Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

இலங்கையை விட்டு வெளியேறும் நிலைப்பாட்டில் இளைஞர்கள் - அம்பலப்படுத்தும் அரசியல் முக்கியஸ்தர்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

பசி வந்தால் பத்தும் பறந்திடும்.

என்னமோ சாமியார் சிலர் எண்ணத்திலும் மாற்றந்தெரியுது இப்போ. முன்பெல்லாம் நாங்கள் சொல்லும்போது; வாருங்கள், பாருங்கள், தீர விசாரித்து கதையுங்கள்  என்று சவால் விடுபவர்கள், இப்போ ஓடலாமா என்று யோசிக்கிறார்கள்.  

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

நல்லாட்சி(மைத்திரி அன்ட் கோ) காலத்திலும் மக்கள் வெளிநாடுகளுக்கு ஓடித்தப்பும் மனநிலையில் இருந்தார்களா ராசன்?

இல்லை 

ஆனால் பெரும்பான்மையான சிங்கள மக்களுடைய மனநிலை வேறு தற்போது மாற்றம் தெரிகின்றது ஆனால் சிங்கள மக்களை நம்பவும் முடியாது 

31 minutes ago, satan said:

என்னமோ சாமியார் சிலர் எண்ணத்திலும் மாற்றந்தெரியுது இப்போ. முன்பெல்லாம் நாங்கள் சொல்லும்போது; வாருங்கள், பாருங்கள், தீர விசாரித்து கதையுங்கள்  என்று சவால் விடுபவர்கள், இப்போ ஓடலாமா என்று யோசிக்கிறார்கள்.  

நேரா என்பெயரை சொல்லலாம் எனக்கு முகத்துக்கு நேரா சொல்வதை பிடிக்கும் இது என்னவோ முதுகில குத்துறமாதிரி இருக்கு சார்டன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 ஏற்றுக்கொள்ளும் உங்கள் இந்தத் தைரியம் எனக்கு பிடிச்சிருக்குது. நம்பலாமா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் தனக்கான அரசியல் தலைமையில், எந்தச்சூழ்நிலையில் யார் இருக்கவேண்டும் என சரியாகவே சிந்தித்துச் செயல்பட்டு அதை நிறைவேற்றிக்கொள்ளும். 

மேற்குலக ஆதரவுடனான மேன்போக்குடனான அதேவேளை தமிழர்களது விடையத்தை இழுத்தடித்துக் காலதாமதப்படுத்தும் ரணில் குழு வேண்டுமா.

இல்லையேல் மறுபடியும் முதலிருந்து என ஆரம்பித்து பின்பு முழுமையான இனவாதம் பேசி தமிழருக்கு ஒன்றும் இல்லை எனக்கூறும் மகிந்த தரப்பு வேண்டுமா என்பதை அவர்கள் சரியாகவே முடிவெடுப்பர். 

கடந்த நல்லாட்சி அரசு தீர்வுத்திட்டத்தை வரைவு செய்வதிலேயே தனது காலத்தை இழுத்தடித்தது 
இதில் விசேசமாக சுமந்திரன் வகையறா "ஏக்க ராஜ்ய" எனும் சொல்லுக்கு ஏகப்பட்ட வரைவிலக்கணம் கொடுத்து தனது பங்குக்கு அந்தப் பாராளுமன்றப் பதிவிக்காலத்தை சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்ததாக நிறைவுசெய்துவிட்டார்.

பின்பு தீர்வுத்திட்டம் தீட்டப்பட்ட கடதாசிகள் அம்பாந்தோட்டைக் கடலில் கடாசி எறியப்பட்டுவிட்டது. 

சிங்களம் இனிமேல் ரணிலைக் கொண்டுவரும் அவர் இன்னிமொரு "ஸ்குயர் பேப்பர்" கட்டைக் கமக்கட்டுக்குள் தூக்கிக்கொண்டு தீர்வுத்திட்டம் தயாரிப்பார்.

அதே வேளை அனைத்துச் சிங்களப்பேரினவாதிகளது (ரணில் உட்பட்) நிலையான நிகழ்சி நிரலுக்கு ஏதுவாக, தமிழரது இனப்பரம்பலை இல்லாதொழிக்கும் கைங்கரியம் வடக்குக்கிழக்கில் தங்குதடையின்றித் தொடரும் இன்னுமொரு பத்துவருடம் போதும் எல்லாம் நடந்து முடிய.

அதன்பின்பு தமிழ் இனமா! அவர்களுக்கான பிரச்சனையா! அப்படி என்றால்" அப்படி எதுவும் இல்லையே!

அதுதானே சுமந்திரன் முதலில் சொல்லிப்போட்டாரே

கொழும்பில் சிங்கள மக்களுடன் ஒன்றாக எனது இளம் வயதைக் கழித்ததையிட்டுப் பெருமைப்படுகிறேன் என.

அதேபோல் வடக்குக்கிழக்கில் சிங்களமக்களுடன் நாம் வாழ்வதில் பெருமைப்படுகிறோம் எனச்சொல்லி அடங்குங்கள் என்பார்கள்.

"தங்கள் சித்தம் எங்கள் பாக்கியம்"

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 18/9/2021 at 07:02, பெருமாள் said:

நாட்டை விட்டு வெளியேறலாமா என்ற நிலைப்பாட்டில் இளைஞர்கள் உள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மைத்திரி ஆட்சியின்போது  சாட்சாத் இதே ரணில் விக்கிரமசிங்கதான் ஐரோப்பாவில் நின்றபடி புலம்பெயர் தமிழர்கள் நாடு திரும்ப வேண்டும் என்றொரு அறைகூவல் விடுத்தார்.

சிங்களவர்கள் செய்வதெல்லாம் வெறும் கோமாளி அரசியல் என்பது மறுபடியும் நிரூபணமாகிறது.

On 18/9/2021 at 13:04, தனிக்காட்டு ராஜா said:

சிலர் அகதி கோரிக்கை (ஐரோப்பிய நாடு) சிலர் வேலைக்காக, ஐரோப்பிய, மத்திய கிழக்கு நாடுகளுக்கு அண்ண யாரை கேட்டாலும் இனி இங்கு இருந்து என்ன செய்வது என வெறுப்பாகவே பேசுகின்றனர்.

போரில்லாத ஒரு சூழ்நிலையில் அகதி கோரிக்கை எல்லாம் இனிமேல் எடுபடாது, போர் காலங்களிலேயே வகை தொகையின்றி இலங்கை தமிழர்கள் திருப்பி அனுப்பபட்டனர், அதிர்ஷ்டவசமாக அகதி அந்தஸ்து பெற்றவர்கள் தப்பி பிழைத்தனர்.

அப்பவே அப்படியென்றால் இப்போ சொல்லவும் வேண்டுமா? 

ஓரிரு வருடங்களிற்குள் திருப்பி அனுப்பி விட்டான் என்றால் ஏஜென்சிகளின் பேச்சை நம்பி இருக்கும் காசு பணத்தையும் இழக்கவே அது வழி பண்ணும்.

மத்திய கிழக்குக்கு போகிறவர்கள்  நிரந்தரமாக தங்கிவிட முடியுமா என்ன?

அங்கு கட்டி போன காசை உழைத்து ஒரு LED , UHD ரிவி , பெரிய சங்கிலியுடன் நாடு திரும்பவே அவர்கள் சம்பாத்தியம் இடம் கொடுக்கும்.

சிங்களவர்களுடன் தமிழினம் சமரச அரசியலும் சண்டிதன அரசியலும் பண்ணி பார்த்து இரண்டிலுமே தோத்து போச்சு,

இந்த இரண்டு தோல்விகளுக்கும் பின்னால் சிங்களவர்களுக்கு தமிழர்களில் ஒருபகுதி வழங்கிய  50%ஆதரவுக்கு பெரும் பங்குண்டு

On 20/9/2021 at 03:28, colomban said:

என்னுடைய பல சிங்கள நண்பர்கள் ஒருகாலத்தில் கடும் இனவாதிகளக இருந்தவர்கள் இப்பொழுது எப்படா நாட்டை விட்டு ஒடலாம் என்று இருக்கின்ரார்கள்.

 

கொழும்பான் சொன்னது 100% உண்மை.

வெறுமனே புலி பயங்கரவாதம் என்று சொல்லி சொல்லியே எமது தலைமைகளால்  நாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்று சிங்களவர்களே உணர்ந்துவிட்டார்கள்.

நான் நேரடியாக அறிந்த சிங்களவர்களே வெளிப்படையாக பேசுகிறார்கள். பிரபாகரன் ஒரு நேர்மையான ஒழுக்கமானவர் என்று வேறு பேச தொடங்கிவிட்டார்கள்.

இப்போ எல்லாம் புலிகள் அழிந்தது தமிழர்களைவிட சிங்கள அரசியலுக்குத்தான்  பாரிய இழப்பு. எதை வைத்து அவர்கள் இனத்தை சூடேற்றி ஏமாத்தி பாராளுமன்றம் செல்வது என்று ஏங்கி தவிக்கிறார்கள்.

இனவாதத்தால் எதுவும் ஆகபோவதில்லை என்று நாலு காசு சம்பாதிக்கிறதுக்காக நாட்டைவிட்டு ஓடபோகும் சிங்கள இளைஞர்கள் உணரும் காலம் வந்துவிட்டது, ஆனாலும் அவர்கள் ஒருகாலம் நாடு திரும்பும்போது, அதே தமிழருக்கெதிரான சிங்கள இனவாதம் அப்படியே இலங்கையில் இருக்கும்.

ஏனென்றால் இனவாதம் என்பது உங்களின் சுவாசம், அது என்னதான் இலங்கை என்பது அழகிய குளிர்ச்சியான எம் தாய்நாடு என்று நீங்கள் சொல்லிக்கொண்டாலும், உங்கள் தலைமைகளின் அரசியல் அதை எப்போதும் சுடுகாடாகவே வெப்பமாக வைத்திருக்கும்.

 

Edited by valavan
 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

 ஏற்றுக்கொள்ளும் உங்கள் இந்தத் தைரியம் எனக்கு பிடிச்சிருக்குது. நம்பலாமா?

நீங்க நம்பினாலும் நம்பபாட்டியும் எனது கருத்தும்  நேர்மையானது இதனால என்னை பலருக்கு பிடிக்காது சாரே😊 இதை சிரித்துக்கொண்டே சொல்வேன்

 

Edited by தனிக்காட்டு ராஜா
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆமாமா....  நீங்கள் அப்போ அதை சொன்னாலும், இப்போ இதை சொன்னாலும், எப்போ எதை சொன்னாலும் சிரித்துக்கொண்டே சொன்னீர்கள், சொல்கிறீர்கள், சொல்வீர்கள். சொல்லும் விடயங்கள் முன்னுக்கு பின் முரணாய் இருந்தாலும் சிரிக்கிறீர்கள். நீங்கள் ஒரு ஞானி சார்! 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.