Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய பாராளுமன்றத் தேர்தல் திங்கட்கிழமை( நாளை ) நடைபெற இருக்கின்றது. 
தாராளவாத கட்சிக்கும் , பழமைவாத கட்சிக்கும்  இடையே கடுமையான போட்டி நிலவுகின்றது. ஆனாலும், ஜஸ்டின் ட்ரூடோவின் தாராளவாத  கட்சி அதிக ஆசனங்களை வெல்லும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது, சனநாயக(NDP)  கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க கூடிய சாத்திய கூறுகள் அதிகம் உள்ளது. இம்முறை பெரும் தொற்றுக்கு பின்னர் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல், சுற்றுச்சூழல், வீட்டு  வசதி என்பன முக்கிய தொனிப்பொருட்களாக இருக்கின்றது.

கனேடிய மாகாணங்களும், அவற்றின் ஆசன எண்ணிக்கையும்.

மொத்த ஆசன எண்ணிக்கை 338 ஆகும், பெரும்பான்மைக்கு 170 இடங்களின் வெல்லப்பட வேண்டும்.

மேற்கு பகுதி 
Alberta – 34 seats
British Columbia – 42 seats
Manitoba – 14 seats
Saskatchewan – 14 seats

மத்திய பகுதி 
Quebec – 78 seats
Ontario – 121 seats

கிழக்கு பகுதி 
New Brunswick – 10 seats
Newfoundland and Labrador – 7 seats
Prince Edward Island – 4 seats
Nova Scotia – 11 seats

பாரம்பரியமாக மேற்கில் பழமைவாத கட்சிக்கும், கிழக்கில் தாராளவாத கட்சிக்கும் அதிக ஆதரவு உண்டு. ஆனால் , வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பது மத்திய பகுதியாகும், அங்கே தான் அதிக ஆசனங்கள் உள்ளன.
இலங்கையில் பிறந்து வளர்ந்து, பல்கலை கழக கல்வியை முடித்து, 6 வருடங்கள் வேலை செய்தும், ஒரு தடைவை கூட தேர்தலில் வாக்கு அளிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், குறைந்த வருடங்கள் கனடாவில் வாழ்ந்தாலும், இங்கே வாக்கு அளிக்க வாய்ப்பு கிடைக்கப் பெறுள்ளது, எனது சனநாய கடமையை மீண்டும் செய்ய ஆவலாய் உள்ளேன்.
 

உசாத்துணை: 
https://newsinteractives.cbc.ca/elections/poll-tracker/canada/

 


 

Edited by zuma
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது செய்யுங்கள்  நாங்களும் 26.9.21 இல் புதிய பிரதமர் தெரிவு செய்யயுள்ளோம். நான் 1998 இருந்து வாக்குப்போடுகிறேன். இந்தியாவில் எனில் பல  ஆயிரங்களுக்கு விற்றுவிடலாம் 🤣

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/9/2021 at 07:31, zuma said:

ஜஸ்டின் ட்ரூடோவின் தாராளவாத  கட்சி அதிக ஆசனங்களை வெல்லும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது

இவர் தொடர்ந்து வென்றால் கனடா மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/9/2021 at 07:31, zuma said:

ட்ரூடோவின் தாராளவாத  கட்சி அதிக ஆசனங்களை வெல்லும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது,

ஜிகாதிகள் நம்பிக்கை பெறுவர்களோ

On 19/9/2021 at 10:12, Kandiah57 said:

நாங்களும் 26.9.21 இல் புதிய பிரதமர் தெரிவு செய்யயுள்ளோம்.

கந்தையா அண்ணா, வங்கிகளின் முதன்மை மனேஜர் போன்று காட்சி தருவார் திரு லஸ்செட் தானே உங்களது புதிய பிரதமாராக வருவார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஜிகாதிகள் நம்பிக்கை பெறுவர்களோ

கந்தையா அண்ணா, வங்கிகளின் முதன்மை மனேஜர் போன்று காட்சி தருவார் திரு லஸ்செட் தானே உங்களது புதிய பிரதமாராக வருவார்

இல்லை

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர் பார்த்தது போல், ட்ரூடோவின் தாராளவாத  கட்சி சிறுபான்மை அரசாங்கமாக வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக தமிழர்கள் அதிகமாக வாழும் டோரோண்டோ, மொன்றியல் .பகுதிகளில் அவருக்கு வாக்குகளை அள்ளி வழங்கியுள்ளார்கள்.

 

 

Edited by zuma
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தான் ஆடாவிட்டாலும் தசை ஆடுமென்பார்களே அது இது தான்! அப்ப 30 வருசமா களவெடுத்துப் பழகிட்டினம் இனி அந்தத் திருட்டுப் புத்தியை மாத்தேலாது என்று வக்காலத்து வாங்கிறாராகும் மனோ
    • கஜேந்திரகுமார் செய்யும் போராட்டங்களுக்கு நாம் ஆதரவளிக்கிறோம்.
    • வணக்கம் துல்பன் அண்ணா,  உண்மைதான் .. மறுக்கவில்லை.. ஆனால் அவருடைய மெனிக்கே மகே ஹித்தே பாடலை நாங்கள் விளம்பரபடுத்த முன்பு சிலவிடயங்களை யோசித்திருக்கவேண்டும் என்பது என் எண்ணம். ஏனெனில் எங்களுக்கு பிடித்த இசை, பாடல், படம், அல்லது ஒரு நாவலை பற்றி எழுதும் பொழுது அதை நாங்கள் மறைமுகமாக விளம்பரபடுத்துகிறோம் என நான் நம்புவதுண்டு..  அந்த வகையில் இதனை பலருக்கு “forward” செய்வதை தவிர்த்திருக்கலாம் என நினைப்பதுண்டு. அவ்வளவே.  சிலர் இருக்கிறார்கள் படத்தை படமாக பார்க்கவேண்டும்.. கலைஞர்கள் அரசியலிற்கு அப்பாற்பட்டவர்கள் என்பது சரியாக இருந்தாலும் என்னால் மெனிக்கே பாடலை ரசிக்கமுடியவில்லை.. என்னுடைய நட்புவட்டத்திலும் இதையே கூறுகிறேன்..  இரண்டாவது, தவறாக ஆறாம் நிலம் பற்றிய தகவலை எழுதிவிட்டேன்..  அந்தப்படத்தில் நடித்தவர் இயக்கவில்லை. மேலும் ”උතුරත් දකුණත් යා කල බල සෙන් නිරින්දා” இதுகூட வடக்கையும் தெற்கையும்(தகுணத்) இணைத்த என்று வந்திருக்கவேண்டும்.. மன்னிக்கவும்.. 
    • தந்தை செல்வா, பிரபாகரனை போன்றே எனது அரசியலும் -- எம்.ஏ.சுமந்திரன்     நான் இல்லை என்றல் பி2பி ஆரம்பித்து இருக்காது.
    • அவங்க எல்லாம் பெரிய டீமா?.. சொல்லி அடித்து வென்ற கத்துக்குட்டி டீம்.. உலக கோப்பை டி 20 செம தொடக்கம்! By Shyamsundar I Updated: Monday, October 18, 2021, 16:34 [IST] Google Oneindia Tamil News சென்னை:   உலகக் கோப்பை டி 20 தொடர் நேற்று தொடங்கியது. ஐபிஎல் தொடர் முடிந்த அடுத்த நாளே டி 20 உலகக் கோப்பை தொடங்கி உள்ளது. தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது. ஓமான் பப்புவா நியூ கினியா ஆகிய இரண்டு அணிகளுக்கு இடையில் முதல் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினியா 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின் களமிறங்கிய ஓமான் 13.4 ஓவரில் 131 ரன்கள் எடுத்து வென்றது.   இந்த போட்டிக்கு அடுத்து நடந்த வங்கதேச மேட்ச்தான் மிகவும் விறுவிறுப்பாக சென்றது.       இந்த தொடரின் இரண்டாவது ஆட்டமாக நேற்று வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான டி 20 ஆட்டம் நடைபெற்றது. வங்கதேசம் கடந்த 10 வருடங்களில் மிகப்பெரிய அளவில் முன்னேறி உள்ளதால் கண்டிப்பாக இந்த போட்டியில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.   பொதுவாக வங்கதேச அணியில் சில சர்வதேச தரத்திலான வீரர்கள் இருக்கிறார்கள். ஷாகிப், முஸ்தபிசர் போன்ற நல்ல வீரர்கள் உள்ளனர். ஐபிஎல் ஐபிஎல் ஐபிஎல் தொடரில் ஆடிய அனுபவமும் இவர்களுக்கு இருப்பதால் வங்கதேசம் நேற்று ஸ்காட்லாந்தை எளிதாக வீழ்த்தும் என்றே பலரும் நினைத்தனர்.   ஆனால் நேற்று ஸ்காட்லாந்து கோச் ஷேன் பர்கர் மட்டும் வங்கதேச அணியை நாங்கள் எளிதாக வென்றுவிடுவோம் என்று கூறி இருந்தார். அவர் அளித்த பேட்டியில், வங்கதேசம் எங்களை பொறுத்தவரை பெரிய அணி கிடையாது. பெரிய அணி பெரிய அணி வங்கதேசத்தை நாங்கள் பெரிய அணியாக நினைக்கவில்லை. ஓமான், பப்புவா நியூ கினியா அணியை எப்படி பார்க்கிறோமோ அப்படித்தான் நாங்கள் வங்கதேசத்தை பார்க்கிறோம். எங்கள் குழுவில் இருக்கும் எல்லா அணிகளும் எங்களுக்கு ஒரே அளவிலான திறமை கொண்ட அணிகள்தான். எல்லோரிடமும் நாங்கள் முழு திட்டமிடலுடன்தான் ஆடுவோம் என்று கூறி இருந்தார்.   அதாவது வங்கதேசம் எங்களை பொறுத்தவரை பெரிய அணி கிடையாது. ஓமான், பப்புவா நியூ கினியா போலத்தான் வங்கதேசமும் எங்களுக்கு என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.    இவரின் பேட்டியை வங்கதேச ரசிகர்கள் விமர்சனம் செய்து இருந்தனர். பொதுவாகவே வங்கதேச ரசிகர்கள் கொஞ்சம் ஆக்ரோஷமான ரசிகர்கள். மற்ற அணிகளை மோசமாக விமர்சனம் செய்யும் பழக்கம் அந்த அணி ரசிகர்களுக்கும், அந்த அணியின் சில கிரிக்கெட் வீரர்களுக்கும் உண்டு. இதனால் ஸ்காட்லாந்து அணியையும்.. நீ கிரவுண்டுக்கு வா... பார்ப்போம் என்பது போல வங்கதேச ரசிகர்கள் வம்பிழுத்து இருந்தனர்.    அதேபோல் நேற்று ஆட்டத்திலும் முதலில் பேட்டிங் இறங்கிய ஸ்காட்லாந்து அணி வெறும் 11.4 ஓவரில் 53 ரன்கள் மட்டுமே எடுத்து 6 இழந்து திணறி வந்தது. இதனால் அவ்வளவுதான் ஸ்காட்லாந்து கதை முடிந்தது..   விரைவில் வங்கதேசத்தின் நாகினி டான்சை களத்தில் பார்க்கலாம் என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால் அதன்பின் களத்தில் நடந்ததுதான் ட்விஸ்ட். ஸ்காட்லாந்து அணிக்கு களமிறங்கிய க்ரிஸ் கிரேவஸ் கடைசி நேரத்தில் பினிஷர் போல ஆடி வெறும் 28 பந்தில் 45 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்ஸ், 4 பவுண்டரி அடக்கம். மார்க் வாட் மார்க் வாட் இன்னொரு பக்கம் மார்க் வாட் 17 பந்தில் 22 ரன்கள் எடுத்தார். இதனால் சரிவில் இருந்த ஸ்காட்லாந்து அணி 140 ரன்கள் எடுத்தது. இதன் பின் களமிறங்கிய வங்கதேசத்தின் டாப் ஸ்காட்லாந்தின் வீல்ஸ் போட்ட சரமாரி யார்க்கர், பவுன்சர் பவுலிங்கில் அடுத்தடுத்து சுருண்டது. 140 ரன்களை கூட எடுக்க முடியாமல் வங்கதேசம் படாதபாடு பட்டுவிட்டது.   ஸ்காட்லாந்து அணியில் வெறும் 24 ரன்கள் மட்டுமே கொடுத்த வீல்ஸ் 3 விக்கெட் எடுத்தார். லிட்டான் தாஸ், சவுமியா சர்க்கார் இருவருமே தலா 5 ரன்களுக்கு வங்கதேச அணியில் அவுட் ஆனார்கள். முஷ்பிகர் ரஹீம் முஷ்பிகர் ரஹீம் முஷ்பிகர் ரஹீம் மட்டும் 38 ரன்கள் எடுத்தார். வேறு யாரும் அந்த அணியில் சரியாக ஆடவில்லை. இதனால் 20 ஓவரில் வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்து வங்கதேசம் அணி ஸ்காட்லாந்து அணியிடம் தோல்வி அடைந்தது.   அவங்க எல்லாம் பெரிய டீமா என்று ஸ்காட்லாந்து கோச் சொன்னது போலவே அதிரடியாக ஆடி வங்கதேசத்தை ஸ்காட்லாந்து வீழ்த்தி உள்ளது. முதல் நாள் ஆட்டத்திலேயே இவ்வளவு பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளதால் இந்த சீசன் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read more at: https://tamil.oneindia.com/news/chennai/how-scotland-wins-the-match-against-bangladesh-in-t20-world-cup-2021/articlecontent-pf606622-436190.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Homeclicks-News
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.