Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

சிறிதரனின் ‘குறளி வித்தை’


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சிறிதரனின் ‘குறளி வித்தை’

புருஜோத்தமன் தங்கமயில்

இன்றைய தமிழர் அரசியலில், தமிழரசுக் கட்சிக்குள் இருப்பவர்கள், ‘குறளி வித்தை’ காட்டும் அளவுக்கு, வேறு யாரும் காட்டுவதில்லை. 

கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தொடங்கி, அந்தக் கட்சியின் பெரும்பாலான தலைவர்களும், நாளொரு வண்ணமும் பொழுதொரு நடிப்புமாக, வித்தை காட்டிக் கொண்டிருப்பார்கள். 

கடந்த சில நாள்களாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், நடிகர் திலகமாகவே மாறி நின்று அரங்காற்றிக் கொண்டிருந்தார். சிறிதரன், அரசியலுக்கு வந்த கடந்த ஒரு தசாப்த காலத்தில், தன்னையொரு நல்ல நடிகரென்று பலமுறை நிரூபித்திருக்கிறார். ஆனால், கடந்த வாரம் அவர் வெளிப்படுத்திய நடிப்பு, நடிகர் திலகத்தை மீஞ்சும் அளவுக்கானது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர்களை, அதன் கனதி, நோக்கம் அறிந்து அணுகும் தரப்புகள் தமிழ்த் தேசிய பரப்பில் மிகவும் குறைவு. ஒவ்வொரு கூட்டத் தொடரின் போதும், தாயகத்திலிருந்தும் புலம்பெயர் தேசங்களிலிருந்தும் ஜெனீவாவை நோக்கி பலரும் படையெடுப்பார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள், மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளையோ, ஆளுமை செலுத்தும் மனித உரிமை அமைப்புகளையோ சந்தித்ததில்லை; தமிழ் மக்களின் நீதிக் கோரிக்கைகளுக்கான ஏற்பாடுகளுக்காக முயன்றதும் இல்லை. 

மாறாக, பக்க அறைகளில் நடைபெறும் அமர்வுகளில் பார்வையாளர்களாக இருந்து விட்டு, அங்குள்ள உணவகங்களில் சாப்பிட்டுவிட்டு வருவார்கள்; சில வேளை தமிழ் ஊடகங்களுக்கு பேட்டிகளை வழங்குவார்கள். அந்தப் பேட்டிகள், ஏற்கெனவே கேள்வி - பதில் தயாரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது மாதிரியிருக்கும். அவர்களின் அதியுச்ச பங்களிப்பு, அந்தப் பேட்டியாகத்தான் இருக்கும். 

அந்தப் பேட்டியின் பகுதிகளை, தாயகத்திலுள்ள ஊடகங்களும் செய்தியாக வெளியிடும். அதன் மூலம், ஜெனீவாவில் தாங்கள்தான் பெரும் முயற்சிகளை, இலங்கை அரசுக்கு எதிராக மேற்கொண்டது மாதிரியாகக் காட்டிக் கொள்ள முயல்வார்கள். 

அத்தோடு, ஜெனீவா பயணத்துக்காக சுவிஸ் வழங்கிய விசா அனுமதியை வைத்துக் கொண்டு, அங்குள்ள உறவுகள், நண்பர்களைப் பார்த்துவிட்டு வருவதுதான், பலரின் பிரதான நோக்கம். இவ்வாறானவர்களின் பயணத்துக்காக, புலம்பெயர் தரப்புகள் மில்லியன் பெறுமதியில் பணத்தைச் செலவிட்டிருக்கின்றன.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொவிட்-19 பெருந்தொற்று நெருக்கடிகளால் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் இணைய வெளியில் நடத்தப்படுவதால், ‘நாங்களும் ஜெனீவாவுக்கு செல்கிறோம்’ என்று கடந்த காலத்தில் படம் காட்டியவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. 

மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரை முன்வைத்து, ஊடகங்களில் செய்தியாக முடியவில்லை. குறிப்பாக, மக்களின் மண்டையில் மசாலா அரைக்க முடியவில்லை. அதனால்தான், மனித உரிமைகள் பேரவைக்கு நாங்களும் கடிதங்களை அனுப்புகிறோம் என்கிற பெயரில், ‘குறளி வித்தை’ காட்டியிருக்கிறார்கள். 

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் சார்பில், பிரதிநிதிகளாகத் தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு, குறைந்த பட்சம் ஜெனீவா அமர்வுகளின் கால அட்டவணை, அதன் முக்கியத்துவமாவது தெரிந்திருக்க வேண்டும். இலங்கை விவகாரத்துக்கு எந்தெந்தக் கூட்டத் தொடரில் அதிக கரிசனை வெளிப்படுத்தப்படுகின்றது? இலங்கை மீதான தீர்மானங்களின் படிமுறை என்ன என்றாவது தெரிந்திருக்க வேண்டும். 

ஆனால், இங்குள்ள தமிழ்க் கட்சிகளுக்கும் அதிலுள்ள முக்கியஸ்தர்கள் பலருக்கும், அவ்வாறான எதுவுமே பெரும்பாலும் தெரிவதில்லை. குறிப்பாக, தெரிந்து கொள்ள முயல்வதில்லை. ஏனெனில், அவர்களின் நோக்கம், இங்குள்ள ஊடகங்களில் ஜெனீவா கூட்டத் தொடர்களை முன்வைத்து, தாங்கள் செய்தியாக வேண்டும் என்பது மட்டுந்தான்.

அவ்வாறானதொரு ‘குறளி வித்தை’யைத் தான், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளை முன்வைத்து, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் முன்னெடுத்தனர். தமிழ்த் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எனும் கடிதத் தலைப்பில், மனித உரிமைகள் ஆணையாளருக்கான கடிதமொன்றை தயாரித்திருக்கின்றனர். 

அந்தக் கடிதம் அனுப்பப்பட்டதாக, அந்தக் கடிதத்தில் கையெடுத்திட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கின்றது. ஆனால், அந்தக் கடிதம் தயாரிக்கப்பட்டது உண்மை. ஆனால் அனுப்பப்படவில்லை என்று சிறிதரன் மறுத்திருக்கின்றார். 

குறித்த கடிதத்தின் பிரதியொன்று, இணைய ஊடகமொன்றில் அண்மையில் வெளியானது. அதிலிருந்து கடிதம் தயாரிக்கப்பட்ட விதம், நோக்கம் என்பன சிரிப்புக்குள்ளாகியுள்ளன. சிறிதரனும் அவரது பரிவாரமும், இவ்வளவுக்கு ‘நக்கல்’ செய்யப்பட்டது இல்லை எனும் அளவுக்கு, நையப்புடைப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.

கடிதமொன்று என்ன நோக்கத்துக்காக எழுதப்படுகின்றது என்பதை வைத்து, அந்தக் கடிதம் எப்படி எழுத வேண்டும் என்ற வரையறை இருக்கின்றது. உறவுகளுக்கு எழுதப்படும் கடிதம் கொண்டிருக்கும் அம்சங்களை ஒத்த விதத்தில் உத்தியோகபூர்வமாக எழுதப்படும் கடிதங்கள் கொண்டிருக்க முடியாது. 

அதனால்தான், பாடசாலை மாணவப் பருவத்தில், கடிதம் எழுதுதல் என்பது ஒரு பிரதான பாடவிதானமாக அநேக நாடுகளில் பேணப்படுகின்றது. அதனை, நீண்ட காலமாக ஆசிரியராகவும் அதிபராகவும் இருந்த சிறிதரன் அறிந்திருக்கவில்லையா என்கிற கேள்வி, அவர் தயாரித்த கடிதத்தைப் பார்க்கும் போது எழுகின்றது.

 அத்தோடு, அந்தக் கடிதம் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட தயாரிக்கப்பட்டதாக காட்டப்பட்டாலும், அது இங்குள்ள ஊடகங்களில் கவனத்தைப் பெறுவதற்காக எழுதப்பட்டதை காண முடியும். ‘தமிழ்த் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் - இலங்கை’ எனும் அர்த்தத்தில் கடிதத்துக்கான தலைப்பையிட சிறிதரன் முயற்சித்திருக்கிறார். 

ஆனால், அவரது அவசரமோ அல்லது மொழிப் பிரச்சினையோ, ‘தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் - இலங்கை’ என்றவாறாக கடிதத்தலைப்பு அமைந்திருக்கின்றது. ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு, ‘பாராளுமன்ற உறுப்பினர்’ என்று எழுதுவதில் என்ன பிரச்சினையென்று தெரியவில்லை. அவர் ஏன், ‘பராளுமன்ற உறுப்பினர்கள்’ என்று எழுதினார் என்பது கேள்வி. 

அத்தோடு, அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்ட சாள்ஸ் நிர்மலநாதன், கலையரசன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும், ஏனைய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆறு பேரும்கூட கடிதத்தின் தலைப்பை கவனிக்காமலா கையெழுத்திட்டிருக்கிறார்கள்? 

கடிதத்தில் தலைப்பையே  சரியாக எழுத முடியாதவர்கள், எப்படி கடிதத்தின் உள்ளடக்கத்தில் என்ன இருக்கின்றது என்பதை வாசித்து அறிந்திருப்பார்கள்? இவர்களின் உண்மையாக நோக்கம் என்பது, எவ்வளவு அபத்தமானது. 

புலம்பெயர் தேசங்களில் ஐக்கிய நாடுகளுக்கு கடிதம் எழுதுகிறோம் என்று முன் தயாரிக்கப்பட்ட வரைவுகளுடன் பலரும் இருக்கிறார்கள். அவர்களுக்கு தங்களின் ஏவலாளர்களாக இங்கு சிலர் தேவைப்படுகிறார்கள். அப்படியானவர்களின் ஒருதரப்பாக சிறிதரன் தரப்பு செயற்பட முனைந்திருக்கின்றது.

சிறிதரன் தயாரித்த கடிதத்தின் உள்ளடக்கம் தொடர்பில், தமிழரசுக் கட்சியின் இன்னொரு பாராளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியன், தொலைக்காட்சி பேட்டியொன்றில் நையாண்டி செய்திருந்தார். அதாவது, அந்தக் கடிதத்தை பத்தாம் தரத்தில் பயிலும் மாணவன்  எழுதும் கடிதத்தோடு ஒப்பிட்டிருந்தார். எந்தவொரு தருணத்திலும் பொறுப்புள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும், இவ்வாறு சிறுபிள்ளைத்தனங்களைப் புரிய மாட்டார்கள் என்றும் சொன்னார்.                                                                                           

இவற்றையெல்லாம்விட சிறிதரன், குறித்த கடிதம் தொடர்பில் இரண்டு, மூன்று          நாள்களாக ஊடகங்களிடம் தொடர்ச்சியாகப் பொய்களையே கூறி வந்தார். தமிழரசுக் கட்சிக்குள் தலைமைக்கு தெரியாமல், ஒரு குழு, மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதம் எழுதியிருக்கின்றது என்ற விவரம் ஊடகங்களில் வெளியானதும், அப்படியொரு கடிதத்தில் கையெழுத்திடவில்லை என்று பாய்ந்தடித்துக் கொண்டு சிறிதரன் அறிவித்தார். அத்தோடு, கடிதத்தில் இருந்த  இலத்திரணியல் கையொப்பங்கள் திருடப்பட்டு இருக்கலாம் என்ற கருத்து பலராலும் பகிரப்பட்டது. 

பின்னர், தமிழரசுக் கட்சியின் தலைவரும் பேச்சாளரும் நடத்திய ஊடக சந்திப்பில், குறித்த கடிதத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் திருடப்பட்டு இடப்பட்டிருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்கள். அதன் பின்னர்தான், இனியும் பொய் புரட்டு நாடகம் ஆடினால் மோசமாக மாட்டிக் கொள்ள வேண்டி வரும் என்று தெரிந்து சிறிதரன், அந்தக் கடிதம் தன்னுடைய ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்ட விவரத்தை வெளிப்படுத்தினார்.  

அப்போது, சிங்கக் கொடியை ஏந்திய சம்பந்தன், பின்னர் தான் சிங்கக் கொடியை ஏந்தவில்லை, காளியின் கொடியையே ஏந்தியதாகபட பொய் சொன்ன போது தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல, தன்னுடைய பொய் பித்தலாட்டங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற தோரணையில் பேசிக் கொண்டிருந்தார்.

தமிழ் மக்களின் நீதிக் கோரிக்கை, அரசியல் உரிமைப் பிரச்சினைகளை மறந்துவிட்டு பதவி, பகட்டுக்காக பொய்களாலும் புரட்டுக்களாலும் அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் பெரும் வியாதிகளே. தமிழ்த் தேசிய பரப்பில் அரசியல் தலைவர்களைக் காட்டிலும் ‘அரசியல் வியாதி’களே கோலொச்சிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் மிகப்பெரும் சோகம்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சிறிதரனின்-குறளி-வித்தை/91-281056

 

 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By கிருபன்
   சுமந்திரன் குழுவின் அமெரிக்கப் பயணம் சொல்லும் செய்தி
   புருஜோத்தமன் தங்கமயில்
   தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான சட்ட நிபுணர்கள் குழுவொன்று நேற்று புதன்கிழமை அமெரிக்கா சென்றுள்ளது. 
   அமெரிக்காவின் அழைப்பின் பேரில் சென்றுள்ள இந்தக் குழுவில், ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரனும் முன்னாள் சட்ட விரிவுரையாளரான கலாநிதி நிர்மலா சந்திரஹாசனும் உள்ளடங்குகின்றனர்.
   இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை, சில வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் சந்தித்து, பேச்சுகளை நடத்தியிருந்தார். இதன்போது, அரசியலமைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக, கூட்டமைப்பின் சார்பில் நிபுணர்கள் குழுவொன்றை அனுப்புமாறு அமெரிக்கத் தூதுவர் கோரினார். இதன் அடிப்படையிலேயே, சுமந்திரன் தலைமையிலான குழு, அமெரிக்கா சென்றுள்ளது. 
   வழக்கமாக சம்பந்தன் தலைமையில், சுமந்திரன் உள்ளடங்கியவர்களே இவ்வாறான சந்திப்புகளுக்குச் செல்வது வழக்கம். ஆனால், உடலளவில் தளர்ந்துள்ள சம்பந்தன், தூரப் பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றார். அதனாலேயே, சுமந்திரன் தலைமையில், தனக்கு நெருக்கமான அதேவேளை துறைசார் நிபுணர்களைத் தெரிவு செய்து, அமெரிக்காவுக்கு அனுப்பியிருக்கிறார்.
   சுமந்திரன் தலைமையிலான இந்தக் குழு தொடர்பில், ஆரம்பத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய தரப்புகளுக்கு இடையில் எதிர்க்கருத்துகள் எழும் சூழல் நிலவியது. 
   ஆனால், கூட்டமைப்பினருடனான சந்திப்பின் போதே, நிபுணர் குழுவை அனுப்புமாறு, அமெரிக்கத் தூதுவர் கோரினார் என்கிற விடயம் சுட்டிக்காட்டப்பட்டதும், பங்காளிக் கட்சிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைதியாகிவிட்டார்கள். 
   அதுமாத்திரமின்றி, அரசியலமைப்பு தொடர்பில், துறைசார் நிபுணத்துவம் உள்ளவர்களையே அமெரிக்கா அழைத்தது என்கிற அடிப்படையில், பங்காளிக் கட்சிகள் அமைதி காக்க வேண்டிய வந்தது.
   அதேவேளை, அரசியலமைப்பு தொடர்பிலான உரையாடல்களுக்காகவே சுமந்திரன் குழு, அமெரிக்காவின் அழைப்பின் பேரில் மாத்திரமல்லாமல், இந்தியாவின் அனுசரணையுடனும்தான் அமெரிக்கா செல்கின்றது என்கிற விடயம், இராஜதந்திர மட்டங்களில் வெளிப்பட்டதும், கடந்த காலங்களில் சுமந்திரனுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய தரப்புகளும் இம்முறை அமைதிகாத்துவிட்டன. 
   இதனால், விடயம் ஓரளவுக்கு அமைதியோடு அணுகப்பட்டிருக்கின்றது. அதிலும், சி.வி.விக்னேஸ்வரன், “அந்தக்குழு, ஆக்கபூர்வமான உரையாடல்களை நடத்திவிட்டு வர வேண்டும்” என்றவாறு, ஆதரவான கருத்துகளை முன்வைத்து இருக்கிறார்.
   ராஜபக்‌ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் குழுவொன்று நியமிக்கப்பட்டது.  அந்தக்குழு, புதிய அரசியலமைப்புக்கான முதல் வரைபை, ஏற்கெனவே தயாரித்துவிட்டது. 
   இந்த நிலையில்தான், இலங்கையில் சீனா செலுத்திவரும் ஆதிக்கத்துக்கு எதிராக, அமெரிக்காவும் இந்தியாவும் புதிய அரசியலமைப்பு என்கிற விடயத்தை கையில் எடுத்திருக்கின்றன.
   ராஜபக்‌ஷர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தது முதல், இலங்கையின் எந்த ஆட்சியாளர்களும் செலுத்தாத நெருக்கத்தை, இவர்கள் சீனாவோடு பேணினார்கள். ஒரு கட்டத்தில், நாட்டின் நிதி வருவாயில் சீனாவின் கடன்களே பெரும்பகுதியாக மாறின. 
   அந்தக் கடன்களும் அதற்கான வட்டிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததே தவிர, உள்நாட்டு வருவாயை அதிகரித்து, கடன்களில் தங்கியிருக்கும் சூழலை மாற்றும் எந்த நடவடிக்கையையும் ராஜபக்‌ஷர்கள் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையால், சீனாவின் அசைவுக்கு ஆடும் பொம்மலாட்ட பொம்மைகளாக, ராஜபக்‌ஷர்கள் மாறினார்கள். அதுதான், நாட்டின் பெரும் சொத்துகளை எல்லாம் சீனாவுக்கு விற்க வைத்தது. 
   அத்தோடு, பிராந்திய நலன், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலான நடவடிக்கைகளை, சீனா மேற்கொள்வதாக இந்தியாவும் அமெரிக்காவும் ராஜபக்‌ஷர்களுக்குத் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வந்த போதிலும், அதைப் புறந்தள்ளி வந்தார்கள். 
   இதனால்தான், 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்காக, அமெரிக்காவும் இந்தியாவும் பங்காற்றின. அதற்காக, ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான அனைத்துத் தரப்புகளையும் 2012ஆம் ஆண்டு முதல், ஓரணியில் இணைக்கும் செயற்பாடுகளையும் முன்னெடுத்திருந்தது. 
   மங்கள சமரவீர தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் குழுவும் சுமந்திரன் தலைமையிலான கூட்டமைப்பின் குழுவும் புலம்பெயர் தமிழர் தரப்புகளும் சிங்கப்பூர், ஜேர்மனி போன்ற நாடுகளில் சந்தித்துப் பேசின. அதுதான், மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக, பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன வருவதற்குக் காரணமானது.
   தற்போதும் அவ்வாறானதொரு கட்டத்திலேயே அமெரிக்காவும் இந்தியாவும் வந்து நிற்கின்றன. அண்மையில், தமிழ் பேசும் கட்சிகளுக்கு இடையில், டெலோவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சந்திப்பும் அதன் ஒரு கட்டமே. 
   இந்தச் சந்திப்பின் பிரதான நோக்கம், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை, முழுமையாக அமல்படுத்துமாறு கோருவதாகும். இதன் பின்னணியில், இந்தியா இருந்தது என்பது, அனைவரும் அறிந்த இரகசியம் ஆகும். அந்தச் சந்திப்பை, தமிழரசுக் கட்சி தவிர்த்த நிலையில், அதில் எப்படியாவது பங்கெடுக்குமாறு வலியுறுத்தி, சம்பந்தனையும் சுமந்திரனையும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தித்திருந்தார். 
   அது மாத்திரமல்ல, யாழ்ப்பாணச் சந்திப்புக் குறித்து, மனோ கணேசனும் ரவூப் ஹக்கீமும், சம்பந்தனைச் சந்தித்து விளக்கமளித்திருந்தனர். வழக்கமாக கூட்டமைப்புக்கு உள்ளேயோ அல்லது, தமிழ்த் தேசிய தரப்புக்களுக்கு இடையிலேயோ இடம்பெறும் இழுபறிகளுக்குள், மனோ கணேசன் தலையீடுகளைச் செய்தாலும்,  ஹக்கீம் எந்தவித தலையீடுகளையும் செய்வதில்லை. 
   அது, இன ரீதியான பிணக்குகளை வளர்த்துவிடும் என்பது அவரது நிலைப்பாடு. அப்படியான நிலையில், டெலோவின் சந்திப்புக்கான அழைப்பை, தமிழரசுக் கட்சி புறக்கணித்தது என்ற விடயம் மேலெழுந்த நிலையிலும், அந்தச் சந்திப்பில் ஹக்கீம் கலந்து கொண்டதும், அது தொடர்பில் சம்பந்தனுக்கு விளக்கமளித்ததும், அரசியல் கட்சிகளுக்கு அப்பாலான இராஜதந்திர நகர்வுகள் இருப்பதை வெளிச்சமிட்டுக் காட்டின.
   ராஜபக்‌ஷர்கள், தென்இலங்கையில் பெரும் விமர்சனங்களை இன்று சந்தித்து நிற்கிறார்கள். ஆனாலும், ராஜபக்‌ஷர்களின் வீழ்ச்சிப் புள்ளியைப் பிடித்துக் கொண்டு, மேலேழுவதற்கான ஆளுமையை எதிர்க்கட்சிகள் கொண்டிருக்கவில்லை. 
   குறிப்பாக, சஜித் தலைமையிலான அணி மீதான நம்பிக்கை, தென் இலங்கையில் எழவில்லை. அதனால், ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்தி, தங்களுக்கு இணக்கமானவர்களை ஆட்சியில் அமர்த்துவது, இலகுவான காரியமல்ல என்கிற நிலையில்தான், ராஜபக்‌ஷர்களைத் தங்களோடு இணக்கமான நிலையைக் கொண்டுவருவதற்காக இந்தியாவும் அமெரிக்காவும் முயற்சிக்கின்றன.
   அதனால்தான், 13ஆவது திருத்தச் சட்ட விவகாரத்தையும் புதிய அரசியலமைப்பு விவகாரத்தையும் இந்தியாவும் அமெரிக்காவும் கையில் எடுத்திருக்கின்றன. சிறுபான்மைக் கட்சிகளை ஓரணியில் திரட்டி வைத்துக் கொண்டு, அதிகாரப்பகிர்வு என்கிற விடயத்தை மேல் கொண்டுவர முயல்கின்றன. 
   அதிகாரப்பகிர்வையோ அதன் போக்கில் வரும் சமஷ்டிக் கோரிக்கைகளையோ, தென் இலங்கை தனி நாட்டுக்கான விடயமாகவே கருதி வந்திருக்கின்றது. அதனால், அதிகாரப் பகிர்வு விடயத்தை ராஜபக்‌ஷர்கள் மீது அழுத்துவதன் மூலம், தங்களுடன் இணக்கமாக, ராஜபக்‌ஷர்கள் வருவார்கள் என்று அமெரிக்காவும் இந்தியாவும் எண்ணுகின்றன. அதற்கான கருவிகளாகவே, தமிழ்க் கட்சிகள் கையாளப்படுகின்றன.இதுதான் தவிர்க்க முடியாத உண்மை. 
   ஆனாலும், அமெரிக்காவும் இந்தியாவும் ராஜபக்‌ஷர்களைக் கையாள எத்தனிக்கின்ற இன்றைய நிலையில், அதற்குள் எவ்வளவு காரிய சித்திகளை, நாம் அடைந்து கொள்ளலாம் என்று, தமிழ்க் கட்சிகளும் தரப்புகளும் சிந்திப்பதுதான் முக்கியமானது.
    
    
   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சுமந்திரன்-குழுவின்-அமெரிக்கப்-பயணம்-சொல்லும்-செய்தி/91-284954
  • By கிருபன்
   தமிழ்க் கட்சிகளின் யாழ். சந்திப்பு: தமிழர்களை 13க்குள் சுருக்கும் முயற்சியா?
   புருஜோத்தமன் தங்கமயில் 
   அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தும் சந்திப்பொன்று, தமிழ் பேசும் கட்சிகளுக்கு இடையில் செவ்வாய்க்கிழமை (02), யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. 
   தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் பங்குபற்றின. அத்தோடு, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியும், ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸும் பங்கெடுத்தன.
   நீண்ட காலமாக நடத்தப்படாமல் இருக்கும் மாகாண சபைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடத்தப்படும் சூழல் காணப்படுகின்றது. அவ்வாறான நிலையில், மாகாண சபைத் தேர்தலை முன்னிறுத்திய நகர்வுகளில், அரசியல் கட்சிகள் ஈடுபடத் தொடங்கிவிட்டன. 
   தேர்தல் அரசியலுக்குள், தமிழ்த் தேசிய அரசியல் சுருக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில், ஒவ்வொரு தேர்தலையும் முக்கிய கட்டமாகவே கட்சிகள் அணுகும். டெலோவின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற சந்திப்பும், மாகாண சபைத் தேர்தலை முன்னிறுத்தி, தன்னை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாகக் கொள்ள முடியும். 
   ஆனால், அதனையும் தாண்டிய முக்கிய நிகழ்ச்சி நிரலொன்று இருப்பதற்கான காட்சிகள் மெல்ல விரிந்து வருகின்றன.
   13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு தமிழ்க் கட்சிகள் உள்ளிட்ட பல தரப்புகளும் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்திருக்கின்றன. ஆனால், அதனை தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகளுக்கான இறுதித் தீர்வாக, தமிழ்த் தேசிய கட்சிகள் என்றைக்குமே கருதியதில்லை. 
   குறிப்பாக, முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னராக ஏற்பட்ட அரசியல் இராஜதந்திர மாற்றங்களின் பின்னரும் கூட, 13வது திருத்தச் சட்டத்தினை இறுதித் தீர்வாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்த் தேசிய கட்சிகள் எவையும் ஏற்றுக்கொள்ளவில்லை. 

   மாகாண சபைத் தேர்தல்களை தொடர்ச்சியாக புறக்கணித்துவந்த கூட்டமைப்பு, 2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்த போதும், 13ஆவது திருத்தச் சட்டத்தினை தீர்வாக ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தல் பிரசாரங்களின் போதும் அதனை வெளிப்படையாகவே அறிவித்தும் இருந்தது.
    2013ஆம் ஆண்டு இடம்பெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றிபெற்று ஆட்சியமைத்தால், மாகாண சபை முறைமையை ஏற்றுக்கொண்டது போலாகிவிடும். எனவே கூட்டமைப்பு தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை, தமிழ் சிவில் சமூக அமையத்தினால் முன்வைக்கப்பட்டது. 
   தேர்தலைப் புறக்கணிக்கவில்லை என்றால், கூட்டமைப்பு நேரடியாக போட்டியிடாது சுயேட்சைக்குழு ஒன்றினூடாக போட்டியிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ‘கூட்டமைப்பு நேரடியாக போட்டியிடாது விட்டால், அது அரச ஆதரவுக் கட்சிகளுக்கு வாய்ப்பாக போய்விடும். அது, ராஜபக்‌ஷர்களுக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்கியதாக சர்வதேச ரீதியில் பதிவு செய்யப்பட்டுவிடும்’ என்று கூறிய இரா.சம்பந்தன், கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடும் முடிவினை அறிவித்தார். 
   அத்தோடு, முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னராக கூட்டமைப்பு முழுமையாக ஒருங்கிணைப்போடும் தயார்ப்படுத்தலோடும் எதிர்கொண்ட தேர்தலாக வடக்கு மாகாண சபைத் தேர்தல் அமைந்தது. அதன்மூலம், மக்கள் வழங்கும் ஆணையை கூட்டமைப்புக்கான ஏக நிலைக்கும் பயன்படுத்த அவர் நினைத்தார். 
   மாறாக, எந்தவொரு இடத்திலும், 13வது திருத்தச் சட்டத்தினை இறுதித் தீர்வாக முன்வைத்திருக்கவில்லை. இதுதான், கடந்த சில மாதங்களுக்கு முன்னரான காட்சிகளாக இருந்தன.
   ஆனால், கடந்த சில மாதங்களாக, 13ஆவது திருத்தச் சட்டத்தினை, அதாவது மாகாண சபை முறையை தமிழ் மக்கள் அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற நிகழ்ச்சி நிரலொன்று மேலெழுந்திருக்கின்றது. 
   13வது திருத்தச் சட்டத்தினை தன்னுடைய கௌரவப் பிரச்சினையாகவே, இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நாளில் இருந்து இந்தியா கருதி வருகின்றது. 
   மாகாண சபை முறையை, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட சில தரப்புகள் ஏற்கெனவே ஏற்றுக்கொண்டுவிட்டன. ஆனால், அது தன்னுடைய அதிகாரத்தினை அல்லது கௌரவத்தினை உறுதிப்படுத்துவதற்கு போதாது என்பது இந்தியாவின் எண்ணம். 
   அதனால்தான், முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னரான நாள்களில் 13ஆவது திருத்தச் சட்டத்தினை அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்ளுமாறு கூட்டமைப்பிடம் இந்தியா வலியுறுத்தியது. அதற்காகவே பல தடவைகள் கூட்டமைப்பை புதுடெல்லிக்கு அழைந்து மன்மோகன் சிங் சந்திப்பை நடத்தியும் இருந்தார். 
   ஆனால், ஆரம்பத்தில் இந்தியாவின் வலியுறுத்தலை அமைதியாக உள்வாங்கிய கூட்டமைப்பு, அதனை அடுத்த கட்டங்களில் தீர்வாக ஏற்றுக்கொள்வதற்கு தயாரில்லை என்றும் அறிவித்திருந்தது.
   அப்படியான நிலையில்தான், தற்போது 13ஆவது திருத்தச் சட்டத்தினை தமிழ் மக்கள் தீர்வாக ஏற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம் என்கிற அடிப்படையிலான ஆய்வுகளும் கட்டுரைகளும் எழுதப்படுகின்றன. 
   அவற்றுக்குப் பின்னால், இந்தியா இருப்பதான சந்தேகம் பலமாகவே எழுந்திருக்கின்றது. அதன் ஒரு கட்டமாகவே, டெலோவின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற சந்திப்பையும் கருத வேண்டியுள்ளதாக தமிழ்த் தேசிய தரப்புகள் சந்தேகம் வெளியிடுகின்றன. 
   கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான தமிழரசுக் கட்சி, இன்னோர் அங்கத்துவக் கட்சியின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்த்ததும், அதனை உணர்ந்துதான் என்பது பலரது எண்ணம்.
   தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும், இந்தியாவோடு இணக்கமாகவே இருக்க விரும்புகின்றார்கள். எந்தவொரு தருணத்திலும் இந்தியாவோடு தூசி அளவுக்குக் கூட முரண்பட்டுவிடக் கூடாது என்பது அவர்களின் நினைப்பு. 
   அண்மையில், முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை வரை இடம்பெற்ற இழுவை வலை மடிச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரும் போராட்டத்தில், தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொள்ளாமைக்கும் அதுதான் காரணம். 
   குறித்த போராட்டத்தில், யாராவது இந்தியாவுக்கு எதிராக கோசம் எழுப்பிவிட்டால், அது தங்களுக்கு தர்மசங்கடத்தினை ஏற்படுத்திவிடும் என்பது அவர்களின் நினைப்பு. 
   அப்படி, இந்தியாவை அனைத்து விதத்திலும் சந்தோசப்படுத்த நினைக்கும் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களினால்கூட, 13ஆவது திருத்தச் சட்டத்தினை தமிழ் மக்களுக்கான தீர்வாக அறிவிக்க முடியாது. அப்படி அறிவித்தால், அது அவர்களின் அரசியல் வாழ்வை இல்லாமல் செய்துவிடும் என்பது தெரியும்.
   அப்படியான சூழலில்தான், புதிய சில அமைப்புகளை ஏற்படுத்தி, அவற்றின் ஊடாகப் 13ஆவது திருத்தச் சட்டத்தினை, தமிழ் மக்களுக்கான தீர்வாக வலியுறுத்தும் கட்டமொன்றை இந்தியா முன்னெடுப்பதான சந்தேகம் எழுந்திருக்கின்றது. 
   அதனால்தான், டெலோவின் அழைப்பினை தமிழரசுக் கட்சி புறக்கணித்திருக்கின்றது. தனி நாட்டு கோரிக்கைகளில் இருந்து, தமிழ்த் தரப்புகள் மீண்டும் சமஷ்டிக் கோரிக்கைகளுக்குள் தங்களை நிரல்படுத்தியிருக்கின்றன. 
   மாகாண சபை முறைமை, சமஷ்டிக் கோரிக்கைகளுக்கான அதிகாரங்களை கொண்டிருக்கவில்லை என்பதால்தான், 13ஆவது திருத்தச் சட்டம் தமிழ் மக்களினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அப்படியான சூழலில் சமஷ்டிக் கோரிக்கைகளில் இருந்தும் கீழிறக்கி, 13வது திருத்தத்துக்குள் சுருக்கும் தேவைப்பாடோடு செயற்படும் தரப்புகள் குறித்து, தமிழ் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
   டெலோவின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற கூட்டத்தில், 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக வலியுறுத்தும் கோரிக்கையே பிரதானமாக அமைந்தது. அப்படியான நிலையில்தான், அந்தச் சந்திப்பின் நோக்கம் பலரினாலும் சந்தேகத்துக்கு உள்ளாக்கப்படுகின்றது. அதனை, தீர்க்க வேண்டியது டெலோவின் கடமை.
    
   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்க்-கட்சிகளின்-யாழ்-சந்திப்பு-தமிழர்களை-13க்குள்-சுருக்கும்-முயற்சியா/91-284636
  • By கிருபன்
   மாகாண சபைத் தேர்தலுக்காக காத்திருக்கும் தமிழ்க் கட்சிகள்
   புருஜோத்தமன் தங்கமயில்
    
    
   கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த மாகாண சபைகளுக்கான தேர்தல், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நடத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. 
   கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடியால், அரசியல்வாதிகள் முடங்கியிருந்த நிலையில், மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவிப்பு, அவர்களை உற்சாகமடைய வைத்திருக்கின்றது. 
   முதலமைச்சர் கனவோடும் அமைச்சர் கனவுகளோடும் பலரும் பல மாதங்களாகக் காத்திருக்கிறார்கள். அதிலும், பாராளுமன்றத் தேர்தலில் தோற்றவர்களின் பதவிக்கான காத்திருப்பு என்பது, சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
   அரசியல் தலைவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்குமான வித்தியாசம் என்பது பதவி, பகட்டுச் சார்ந்தது. மக்களுக்கான உண்மையான அரசியல் தலைவர்களுக்கு பதவியும் பட்டமும் முக்கியமல்ல. அவர்கள், தேர்தலில் வென்றாலும் தோற்றாலும், மக்களுக்காகத் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருப்பார்கள். 
   ஆனால், அரசியல்வாதிகளைப் பொறுத்தளவில், அவர்களால் பதவி, பகட்டு இன்றி வாழவே முடியாது. தேர்தல் வெற்றிகளுக்காக எல்லாவிதமான தந்திரங்களையும் அரங்கேற்றத் துணிவார்கள். 
   இப்படியானவர்களால் தமிழ் அரசியல் பரப்பும், கடந்த பத்து ஆண்டுகளில் நிரப்பப்பட்டுவிட்டது. பதவி, பகட்டை எதிர்பார்த்து, அரசியல் கட்சிகளையும் அரசியல்வாதிகளையும் நெருங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. 
   மக்களுக்கான அரசியல் என்பது, மக்களின் எண்ணங்களை, அவர்களின் ஆழ்மனதில் இருந்து பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். ஆனால், தமிழ் அரசியல் சூழலில், அவ்வாறான நிலை பெரும்பாலும் இல்லை. அநேகமானவர்களின் அரசியல் அரங்காற்றுகைகள், தேர்தல்களைக் குறிவைத்து நிகழ்த்தப்படுகின்றன.
   ஒத்திவைக்கப்பட்டு வந்த மாகாண சபைத் தேர்தல்களுக்காக, அதிகமான முக்கியத்துவத்துடன் காத்திருந்த தரப்பினர் என்றால், தமிழ்த் தேசிய கட்சிகளைச் சொல்ல முடியும். தென் இலங்கையின் பெரும்பான்மைக் கட்சிகள் கூட, மாகாண சபைத் தேர்தல் தொடர்பில், பெரிய கரிசனையை வெளிப்படுத்தியிருக்கவில்லை.
   ஆனால், மாகாண சபை முறையைத் தொடர்ச்சியாக நிராகரித்து வந்திருக்கின்ற தமிழ்த் தேசிய கட்சிகள், அந்த நிர்வாகக் கட்டமைப்புக்கான தேர்தலுக்காக, அதிக முக்கியத்துவத்துடன் காத்திருக்கின்றன. இது, அடிப்படையில் முரண்நகை. இந்த முரணுக்குள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும், எந்தவித பாகுபாடுமின்றி இருக்கின்றன.
   கடந்த காலங்களில், இந்தியாவையும் 13ஆவது திருத்தத்தையும் எதிர்த்துவந்த முன்னணியினர், அந்த நிலையிலிருந்து மாறிவிட்டனர். மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது என்பது, 13ஆவது திருத்தச் சட்டத்தையும் மாகாண சபை முறைமையையும் அங்கிகரிக்கும் செயல் என்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூறி வந்திருக்கின்றது. 2013ஆம் ஆண்டு, வடக்கு மாகாண சபைத் தேர்தலிலும் மேற்கண்ட விடயத்தைக் கூறியே, தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டது. 
   ஆனால், சில ஆண்டுகளிலேயே முன்னணியிடம் மனமாற்றம் ஏற்பட்டு விட்டது. மாகாண சபைத் தேர்தலுக்காக, முன்னணியின் முக்கியஸ்தர்கள் தயாராகத் தொடங்கிவிட்டார்கள். முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தொடங்கி, அந்தக் கட்சியின் உறுப்பினர்களிடத்திலேயே கூட, இந்தியாவுடனான அணுகுமுறை மாறிவிட்டது. அண்மையில், யாழ்ப்பாணம் வந்த  இந்திய வெளியுறவு செயலாளர், கூட்டமைப்பு தவிர்ந்த தமிழ்க் கட்சிகள், அரசியல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட குழுவினருக்கு இரவு விருந்தளித்தார். 
   அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த கஜேந்திரகுமாரின் உடல்மொழி, பல செய்திகளை அப்பட்டமாகச் சொல்லியது. கடந்த காலங்களில், ஊடக மையத்திலும் தேர்தல் மேடைகளிலும், இந்தியா தொடர்பில் அவர் முழங்கி வந்திருக்கின்ற கருத்துகள் எல்லாமும் பொய்யானவையோ என்று தோன்றுமளவுக்கு இருந்தன.
   ஏற்கெனவே, முன்னணியில் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தரப்புக்கும் கஜேந்திரகுமார் தரப்பினருக்குமான முரண்பாடுகள் பெரியளவில் சென்றுவிட்டன. கஜேந்திரகுமாரின் அழுத்தங்களைத் தாண்டி, மணிவண்ணன் தரப்பினர் யாழ்ப்பாணம் மாநகர சபையையும் நல்லூர் பிரதேச சபையையும் வெற்றி கொண்டுவிட்டார்கள். இதனால், முன்னணியின் உண்மையான உரித்தாளர்கள் யார் என்கிற கேள்வி இன்னமும் தொக்கி நிற்கின்றது. 
   அப்படியான நிலையில், முன்னணியின் அடையாளத்தைப் பேணுவதற்கு மாகாண சபைத் தேர்தலில், தன்னுடைய அணியினரை அகில இலங்கை காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்தில் போட்டியிட வைத்து, வெற்றிபெற வைக்க வேண்டும் என்கிற தன்முனைப்பு, கஜேந்திரகுமாருக்கு ஏற்பட்டுவிட்டது. 
   மாகாண சபைத் தேர்தலில் ஒரு சில உறுப்பினர்களையாவது வெற்றிவெற வைத்தால், முன்னணி உண்மையிலேயே தன்னுடனேயே இருப்பதாகக் காட்டிக் கொள்ளலாம் என்பது அவரது நிலைப்பாடு. இல்லையென்றால், முரண்பாடுகளுக்குப் பின்னராக, மணிவண்ணன் அணி பெற்றிருக்கின்ற முக்கியத்துவம் இன்னமும் அதிகரித்து, முன்னணியின் உரித்துச் சார்ந்த பிரச்சினைகள், எதிர்காலத்தில் இன்னும் பலமாக எழுவதற்கு வாய்ப்பிருக்கின்றது.
   கூட்டமைப்பைப் பொறுத்தளவில், பாராளுமன்றத் தேர்தலில் பதவி இழந்தவர்களும், ஏற்கெனவே மாகாண சபையில் உறுப்பினர்களாக இருந்தவர்களுமே, மாகாண சபைத் தேர்தலுக்காகக் காத்திருக்கின்றார்கள். 
   இவர்களின் அநேகருக்கு, மாகாண சபையின் நிர்வாகக் கட்டமைப்பின் அதிகார அளவுகள் குறித்துக்கூட, எந்தத் தெளிவும் இல்லை. பெரும்பாலானவர்கள், மாகாண சபைத் தேர்தலை, பதவிகளுக்கான ஒரு கருவியாக மாத்திரமே காண்கின்றார்கள். 
   வடக்கு மாகாண சபையின் முதலாவது ஆட்சியைப் பிடித்தவர்கள் என்கிற ரீதியில், ஒன்பது மாகாண சபைகளிலும், இறுதி இடத்தையே பெற்றுக் கொள்ளும் அளவுக்கு மிகமிகக் குழப்பகரமாக மாகாண சபையை நடத்தியவர்கள் கூட்டமைப்பினர். 
   கொழும்பிலிருந்து முதலமைச்சர் வேட்பாளராக அழைத்துவரப்பட்ட சி.வி. விக்னேஸ்வரன், தனக்கான பணி என்னவோ அதைச் செய்வதைத் தவிர்ந்து, மற்ற அனைத்து வேலைகளையும், முதலமைச்சர் என்கிற பதவி பிம்பத்தோடு செய்தார். தமிழ் மக்கள் பேரவையும் அவரின் புதிய கட்சியும் அப்படி உருவானவைதான். 
   விக்னேஸ்வரன்தான் தன்னுடைய தனிப்பட்ட அரசியலைச் செய்கின்றார் என்றால், அவரைத் தவிர்த்து கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களைச் சரியான புள்ளியில் ஒருங்கிணைத்து, மாகாண சபையை கூட்டமைப்பின் தலைமை நடத்தியதா என்றால், அதுவும் இல்லை. மாகாண சபைக்குள் குழப்பங்கள் ஏற்பட்ட அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் இரா.சம்பந்தன், சரியான முடிவுகளை எடுக்கவேண்டிய பல தருணங்களிலும், கடிதங்களை எழுதி விடயங்களைச் சமாளிக்கவே முயன்றார்.
   அப்படி மாகாண சபையை, முழுவதுமாகத் தோற்கடித்தவர்களின் தரப்பினரான கூட்டமைப்பினர், இன்றைக்கு மீண்டும் மாகாண சபைக் கனவுகளோடு இருக்கின்றார்கள். குறிப்பாக, பாராளுமன்றத் தேர்தலில் மோசமான தோல்வியைத் தழுவிய மாவை சேனாதிராஜாவும் அவரோடு தோற்றுப் போனவர்களும், தங்களது அரசியல் எதிர்காலத்தைத் தக்க வைப்பதற்காக, மாகாண சபைத் தேர்தலை குறிவைக்கின்றார்கள். 
   ஏற்கெனவே பாராளுமன்றத் தேர்தலில், இளைஞர்களுக்கான வாய்ப்புகளை மறுத்தவர்கள், தற்போது மாகாண சபைத் தேர்தலிலும் அதையே செய்ய எத்தனிக்கிறார்கள். ஆற்றலும் ஆளுமையும் உள்ள இளம்தலைமுறையை, செயற்பாட்டு அரசியலுக்கு அழைத்துவந்து, அவர்களிடம் பொறுப்புகளை வழங்க வேண்டும் என்கிற எந்தவித எண்ணமும், கூட்டமைப்பின் தலைவர்களிடம் இல்லை. சுயநலம் மட்டுமே வாழ்வாகப் போய்விட்ட நிலைக்கு, கூட்டமைப்பு எனும் கட்டமைப்பைக் கொண்டு வந்து சேர்ந்துவிட்டார்கள். அப்படிப்பட்டவர்களின் எதிர்பார்ப்பே, மாகாண சபைத் தேர்தல் என்றாகிவிட்டது.
   கிழக்கு மாகாண சபையைப் பொறுத்தளவில், அங்கு மீண்டும் முதலமைச்சராகிவிடலாம் என்கிற கனவோடு பிள்ளையான் இருக்கிறார். ராஜபக்‌ஷர்களின் அனுசரணை, அவருக்கு இருக்கவே செய்கின்றது. ஏற்கெனவே, எதிர்க்கட்சியில் இருந்தாலும், முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் முக்கியஸ்தர்களும் ராஜபக்‌ஷர்களின் விசுவாசிகளாக வலம் வரும் நிலையில், அவர்களின் ஆதரவையும் வைத்து, கிழக்கு மாகாண சபையில் பிள்ளையானை அமர்த்தும் வாய்புகளை, ராஜபக்‌ஷர்கள் புறந்தள்ள மாட்டார்கள். 
   அங்கு, தமிழ்த் தேசிய கட்சிகள் வேண்டுமென்றால், எதிர்க்கட்சி எனும் நிலையை அடையும் அளவுக்கான பலத்துடன் மாத்திரமே இருக்கின்றன. அப்படியான நிலையில், தமிழ்த் தேசிய கட்சிகள், ஆட்சியமைக்கக் கூடிய ஒரே மாகாண சபையாக, வடக்கு மாகாண சபை இருக்கின்றது. அதனை, மீண்டும் கைப்பற்றும் போது, குறைந்தபட்ச அர்ப்பணிப்போடாவது நடத்திச் செல்ல வேண்டும். இல்லையென்றால், எதற்கும் தமிழர்கள் தகுதியற்றவர்கள் என்கிற எண்ணம், அனைத்து இடங்களிலும் பரவிவிடும். அது, எதிர்காலத்தை இன்னும் மோசமாகச் சிதைத்துவிடும்.
   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மாகாண-சபைத்-தேர்தலுக்காக-காத்திருக்கும்-தமிழ்க்-கட்சிகள்/91-283046
    
  • By கிருபன்
   புதுடெல்லியுடன் நெருக்கும் ராஜபக்‌ஷர்கள்: கூட்டமைப்பின் நிலை என்ன?
   புருஜோத்தமன் தங்கமயில்
   சீர்கெட்டிருந்த இந்தியாவுடனான உறவைப் புதுப்பிக்கும் முடிவுகளுக்கு, ராஜபக்‌ஷர்கள் வந்திருக்கிறார்கள். சீனாவை மட்டும் நம்பியிருந்த ராஜபக்‌ஷர்கள், இந்தியாவை வேண்டாத பங்காளியாகவே இதுவரை காலமும் கையாண்டு வந்திருக்கிறார்கள். 
   குறிப்பாக, முள்ளிவாய்க்காலில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர், ராஜபக்‌ஷர்கள் சீனாவையே முழுவதுமாக நம்பியிருக்கத் தலைப்பட்டார்கள். அது, இராஜதந்திர ரீதியில் இந்தியாவுடனான உறவைப் பலமாகச் சீர்குலைத்தது.
   ராஜபக்‌ஷர்களின் சீன விசுவாசம், பிராந்தியத்தின் பாதுகாப்பை  கேள்விக்குள்ளாக்குவதாகத் தெரிவித்து இந்தியா, தன்னுடைய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவு செயலர் உள்ளிட்டவர்களை பல தடவைகள் கொழும்புக்கு நேரடியாக அனுப்பி அறிவுறுத்தியும் வந்திருந்தது. 
   ஆனாலும், அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த தற்போதையை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்‌ஷ, இந்தியாவின் அழுத்தங்களையும் அறிவுறுத்தல்களையும் கணக்கில் எடுத்திருக்கவில்லை. 
   மாறாக, இந்தியாவை ஆத்திரப்படுத்தும் காரியங்களை சீனாவோடும், பாகிஸ்தானோடும் இணைந்து பல தருணங்களிலும் செய்திருந்தார். அதுமட்டுமல்லாமல், இந்தியாவை ராஜபக்‌ஷர்கள் எவ்வளவுக்கு வெறுத்தார்கள் என்றால், தன்னுடைய  ஜனாதிபதித் தேர்தல் தோல்விக்கு இந்தியா(வும்) முக்கிய காரணமென்று, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ வெளிப்படையாக குற்றஞ்சாட்டியிருந்தார். 
   அப்படிப்பட்ட நிலையில், இந்தியாவுடனான உறவைப் புதுப்பிக்கும் ராஜபக்‌ஷர்களின் முடிவு என்பது கவனிக்கத்தக்கது. அதுவும், இந்தியாவுடனான ராஜபக்‌ஷர்களின் இன்றைய உடல்மொழியே, தலைகீழாக மாறியிருக்கின்றது.
   இலங்கைக்கான மூன்று நாள் விஜயத்தினை மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷரிங்லா, செவ்வாய்க்கிழமை (05) ஜனாதிபதி கோட்டாவை சந்தித்தார். இதன்போது, வழக்கத்துக்கு மாறாக  ஜனாதிபதி நீண்ட விளக்கத்தை, இந்திய வெளியுறவு செயலாளரிடம் கொடுத்திருக்கின்றார். 
   அந்த விளக்கங்களில், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் எந்தவொரு நிலைப்பாடுகளுக்கும், இலங்கை ஒத்துழைப்பு வழங்காது, சீனாவுடனான தங்களின் உறவு, இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமையாது; மற்றும், திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பிலான பிரச்சினைக்கு, உடனடியாகத் தீர்வு காணப்படும் என்கிற விடயங்கள் முக்கியமானவை. 
   அத்தோடு, 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் வழக்கத்துக்கு மாறாக கோட்டா, இந்தியாவை மகிழ்ச்சிப்படுத்தும் கருத்துகளையே இம்முறை வெளியிட்டிருக்கின்றார். அதாவது, 13ஆவது திருத்தம் அவசியமில்லாத ஒன்று. அது நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலானது என்று, தென் இலங்கை முழுவதும் கடந்த காலங்களில் ராஜபக்‌ஷர்கள் முழங்கி வந்திருக்கிறார்கள். 
   அப்படிப்பட்ட நிலையில், 13ஆவது திருத்தம் பலமும் பலவீனங்களும் கொண்டிருக்கின்றன. அதன் பலங்களை இனங்கண்டு கையாள வேண்டும் என்று கோட்டா கூறியிருக்கின்றார். இந்த விடயங்கள், இந்தியாவைக் குளிர்விக்க போதுமாவை என்பது, ராஜபக்‌ஷர்களின் எண்ணம். இந்தியாவைப் பொறுத்தளவில் வடக்கு - கிழக்கில் சீனாவின் கரங்கள் நீளாது இருப்பது முக்கியமானது. அந்த உத்தரவாதத்தை ராஜபக்‌ஷர்கள் வழங்கினாலே, அவர்களை அரவணைக்கத் தயாராக இருக்கின்றது. ஏனெனில், இந்தியாவைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகளையும் சீனா கடன் பொறியினால் தன்னுடைய சேவகர்களாக மாற்றி வைத்திருக்கின்றது. பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் என்று இந்தியாவின் பெரும் எல்லைப்பகுதிகளைப் பகிரும் நாடுகளில் சீனாவின் முதலீடுகளும், கடன் உதவிகளும் என்றைக்கும் இல்லாதளவுக்கு அதிகரித்திருக்கின்றது. 
   குறிப்பாக, 2015இல் ஏற்பட்ட நில அதிர்வினால் நேபாளம் சிதைவடைந்தது. 9,000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தார்கள். அதன் பின்னராக மீள்கட்டுமானத்துக்காக இந்தியாவின் உதவியை நேபாளம் எதிர்பார்த்தது. ஆனால், அதனை இந்தியா தட்டிக்கழித்த போது, அந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு சீனா, நேபாளத்துக்குள் நுழைந்தது. 
   இன்றைய காத்மண்டுவின் பெரும் கட்டுமானங்கள் எல்லாமும் சீனாவின் உதவியுடன் நிகழ்ந்தவை. அப்படிப்பட்ட நிலையில், இந்தியாவைத் தாண்டிய நெருக்கத்தை, சீனாவோடு பேணுவதற்கு நேபாளம் தள்ளப்பட்டிருக்கின்றது.
   இப்படித்தான், மாலைதீவு, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளையும் சீனா ஆக்கிரமித்துக் கொண்டது. இலங்கையையும் அதே பாணியிலேயே சீனா அணுகியது. கடன் பொறியை உடைக்கும் சீனாவின் வல்லமை, இந்தியாவிடம் இல்லை என்பதுதான் பெரும் பிரச்சினை. 
   இந்தியப் பொருளாதாரம் என்பது, சில தனி மனிதர்களின் சாம்ராஜ்யத்தை முன்னேற்றும் அடிப்படைகளைக் கொண்டது. பிராந்திய இராஜதந்திர அணுகுமுறையிலும் கூட, அப்படிப்பட்ட நடவடிக்கைகளையே இந்திய ஆட்சியாளர்கள் முன்னிறுத்துவார்கள். 
   அண்மையில், கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையம் இந்தியாவின் அதானி குழுமத்திடம் வழங்கப்பட்டதும் அப்படித்தான். ஆனால், சீனா எந்தவொரு நாட்டில் முதலிட்டாலும், கடன் வழங்கினாலும் அதன் உரித்தினை சீன அரசே  கொண்டிருக்கும். சீன நிறுவனங்களும் வங்கிகளும் அரசின் முழுமையான கட்டுப்பாட்டிலேயே இருக்கும். அங்கு தனி நபர்களை இராஜதந்திர கட்டமைப்புக்குள் உள்வாங்கும் அல்லது வளர்த்துவிடும் நோக்கம் இருப்பதில்லை.
    அதனால், சீனாவின் முதலிடுகளும் அதன் பின்னரான பிரதிபலன்களும் அரசினுடையதாகவே இருக்கும். அப்படிப்பட்ட நிலையில், சீனாவுடனான ஒப்பந்தங்களை மீறுவதோ அல்லது முறித்துக் கொள்வதோ இன்னொரு நாட்டுக்கு பெரும் சிக்கலானது. 
   இலங்கையில் சீனா முதலீடுகளும் கடன்களும் வேறு வேறு நிறுவனங்கள், வங்கிகளின் பெயர்களில் வழங்கப்பட்டாலும், அவை அனைத்தும் சீன அரசின் நேரடி நிறுவனங்களே.
   இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளில் அனைத்து நாடுகளையும் சீனா கையாளத் தொடங்கிவிட்ட பின்னர், இலங்கையின் வடக்கு - கிழக்கை தன்னுடைய கரிசனையோடு பேண, இலங்கையின் ஆட்சியாளர்கள் முன்வருகிறார்கள் என்றால், இந்தியா அவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும். குறிப்பாக, அவர்களின் எந்த இழுப்புக்கும் இணங்கும். இதனால், பாதிக்கப்படப் போவது என்னவோ தமிழ் மக்களே.
   இந்தியாவோடு உறவினைப் பேணுவது சார்ந்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆர்வத்தோடு இருந்து வந்திருக்கின்றது. ஆனால், அந்த உறவு தென் இலங்கையில் தங்கள் மீதான நல்லெண்ணத்தை இல்லாமல் செய்துவிடாது இருக்க வேண்டும் என்று கருதி, இரா.சம்பந்தனும் எம்.ஏ.சுமந்திரனும் ஒரு வகையிலான சமநிலையைப் பேணவே விரும்பினார்கள். 
   கூட்டமைப்பின் ஏனைய முக்கியஸ்தர்கள் இந்தியாவுடனான வரையறையற்ற நெருக்கத்தை வெளிப்படுத்த விரும்பினாலும் சம்பந்தன், சுமந்திரனின் நிலைப்பாடுகளால் அது பெரியளவில் சாத்தியமாகியிருக்கவில்லை. உத்தரவாதங்கள், உறுதிப்பாடுகளற்ற எந்தவோர் இராஜதந்திர நகர்வும், தெளிவான செயற்பாடுகள் அல்ல என்கிற அடிப்படையில், சம்பந்தனின் அணுகுமுறை சரியானதுதான். 
   ஆனால், இந்தியாவுக்கு சீனாவினால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கு முன்னால், தமிழ் மக்களின் அரசியல் நலன்கள் சார்ந்து இந்தியா முடிவுகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கவே முடியாது. அதனால்தான், கூட்டமைப்பைத் தாண்டி ராஜபக்‌ஷர்களுடனான நெருக்கத்தை இந்தியா பேண முயலும். இதனால், ‘அணிலை மரத்தில் ஏறவிட்ட நாயின் நிலை’க்கு தமிழ் மக்களின் நிலை வந்திருக்கின்றது.
   தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகளை தங்களது நலன்களுக்கான கருவியாகவே இந்தியாவும் மேற்கு நாடுகளும் இவ்வளவு காலமும் கையாண்டு வந்திருக்கின்றன. அவ்வாறானதொரு தருணமே மீண்டும் ஏற்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களைக் காட்டி ராஜபக்‌ஷர்களை கையாள முயற்சித்த இந்தியா, இன்றைக்கு அவர்கள் இணக்கமான நிலை எடுத்ததும் தமிழ் மக்களை சில காலத்துக்கு தள்ளிவைக்கும் நிலையையே  வெளிப்படுத்தும். 
   இந்திய வெளியுறவுச் செயலாளர் அண்மைய வருகையின் போது, கூட்டமைப்பினை புதுடெல்லிக்கு அழைத்திருக்கின்றார். கூட்டமைப்பினை புதுடெல்லிக்கு ஏற்கெனவே அழைத்து ஒன்றரை வருடங்களாகிவிட்டது. ஆனால், புதுடெல்லில் இருந்து அதற்கான நேரம் ஒதுக்கப்படவே இல்லை. 
   கூட்டமைப்பினை ஒரு கட்டம் வரையில், கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரை வைத்தே கையாண்டு கொள்ளலாம் என்பது இந்தியாவின் நிலைப்பாடு. ராஜபக்‌ஷர்கள் இந்தியாவோடு முறுக்கிக் கொண்டிருந்த தருணத்திலேயே நிலைமை அப்படியிருந்தது. அப்படியான நிலையில், தற்போது இந்தியாவோடு நெருங்கிக் குழைய ராஜபக்‌ஷர்கள் தயாராக இருக்கும் போது, கூட்டமைப்பின் மீதான அணுகுமுறை என்பது இன்னும் கரிசனையற்ற ஒன்றாகவே இருக்கும்.
   கூட்டமைப்பைத் தாண்டிய தமிழ்த் தரப்புகளை, இந்தியா உதிரிகளாகவே கருதுகின்றது. அதனால், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் சார்ந்து இராஜதந்திர நகர்வுகள் என்றால் அது கூட்டமைப்பின் கைகளிலேயே இன்னமும் இருக்கின்றது. 
   அதனால், தக்க தருணத்தில் சரியான முடிவுகளை எடுக்காது விடுத்து, வேண்டப்படாத தரப்பாக கூட்டமைப்பு தன்னை மாற்றிக் கொள்ளக் கூடாது. அது, அவர்களை மாத்திரமல்ல, ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் பாதிக்கும்.
    
   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/புதுடெல்லியுடன்-நெருக்கும்-ராஜபக்-ஷர்கள்-கூட்டமைப்பின்-நிலை-என்ன/91-282481
  • By கிருபன்
   தமிழ்க் கட்சிகளும் ஒற்றுமைக்கான அழைப்பும்
   புருஜோத்தமன் தங்கமயில்
   தமிழ்த் தேசிய கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியொன்றை முன்னெடுத்துள்ளதாக திருமலை ஆயர், தென் கயிலை ஆதீனம் ஆகியோரின் தலைமையிலான குழுவொன்று, கடந்த வாரம் அறிவித்தது. 
   பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, அரசியல் கட்சிசாரா பிரபல சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்றை நியமிக்க உள்ளதாகவும் அந்தக்குழு குறிப்பிட்டிருந்தது. ஆனால், அந்த அறிவிப்பு, ஊடகங்களில் ஒருநாள் செய்தியாக மட்டுமே இடம்பெற்றிருந்தது. அதற்கு மேல் அந்த அறிவிப்புக்கான முக்கியத்துவத்தை, அரசியல் கட்சிகளோ ஊடகங்களோகூட வழங்கியிருக்கவில்லை.
   தமிழ்த் தேசிய கட்சிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் ஒற்றுமையையும், அதன் ஊடாக ஒருங்கிணைவையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன், உளப்பூர்வமாக யார் ஈடுபட்டாலும் அது வரவேற்கக் கூடியது. 
   ஆனால், தமிழ் அரசியல் பரப்பில் ‘ஒற்றுமை’, ‘ஓரணி’, ‘ஒருங்கிணைவு’ என்கிற சொற்களுக்கான அர்த்தம், அரசியல்வாதிகளாலும் சில சிவில் அமைப்புகளாலும் அரசியல் ஆய்வாளர்களாலும் மலினப்படுத்தப்பட்டுவிட்டன. 
   தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தளவில் கட்சிகள், தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு இடையிலான ஒருங்கிணைவும் அதனூடான தொடர் ஊடாட்டமும் அவசியமான ஒன்று. 
   தமிழ்த் தேசிய அரசியலில் தனியாவர்த்தனம் என்பது, கட்சிகளுக்கு மாத்திரமல்ல, தமிழ் மக்களுக்கும் நன்மை பயக்காது. வேண்டுமென்றால், ஒருசில நபர்களுக்கு  தனிப்பட்ட இலாபங்களை வழங்கலாம்.
   அப்படியான நிலையில், தமிழ்த் தேசிய கட்சிகள், தலைவர்களுக்கு இடையிலான ஒற்றுமைக்கான அழைப்பு என்பது, கவனிக்கப்பட வேண்டியது. ஆனால், அவ்வாறான நிலையொன்று திட்டமிட்ட ரீதியாக, இன்று இல்லாமல் செய்யப்பட்டு இருக்கின்றது என்பதுதான் பெரும் வேதனையானது. 
   தமிழ்த் தேசிய அரசியலில் தனியாவர்த்தனம் செய்து கொண்டிருந்த கட்சிகள், பெரும்பான்மையினக் கட்சிகளிடம் தோற்றுப்போக ஆரம்பித்த தருணங்களில் எல்லாம், ஒற்றுமையாக ஓரணியில் இணைந்திருக்கின்றன. அதன்மூலம், தமிழ்த் தேசிய அரசியலை உறுதிப்படுத்தி இருக்கின்றன. 
   தமிழர் விடுதலைக் கூட்டணியாக தமிழரசுக் கட்சியும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸும் அப்படித்தான் ஆரம்பத்தில் இணைந்தன. 
   அதுபோல, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கமும் தமிழ்த் தேசியத்தைப் பேசும் கட்சிகளை பாராளுமன்றத்துக்குள் பலப்படுத்தும் நோக்கிலேயே நிகழ்ந்தது. தமிழ்த் தேசிய அரசியலில் நிகழ்ந்தப்பட்ட இருபெரும் ஒருங்கிணைவுகள் என்றால், தமிழர் விடுதலைக் கூட்டணியினதும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினதும் உருவாக்கம்தான்.
   தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் ஓர் அங்கமாக மாறிய தமிழர் விடுதலைக் கூட்டணி, வீ. ஆனந்தசங்கரியின் நிலைப்பாடுகளின் நிமித்தம் அதிலிருந்து வெளியேற, கூட்டணிக்குப் பதிலாக தமிழரசுக் கட்சியை தூசு தட்டிக் கொண்டுவந்து கூட்டமைப்புக்குள் இணைத்தார்கள். 
   இன்றைக்கு தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய பரப்பில் முதன்மைக் கட்சியாகத் தாக்கம் செலுத்துவதற்கும், அதன் கட்சிக் கட்டமைப்பை அடிமட்டத்திலிருந்து பேணுவதற்கும் கூட்டமைப்பின் உருவாக்கம் பாரிய பங்களிப்பைச் செய்தது.
   அதுபோல, கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சியின் ஆதிக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மாறிய போது, கூட்டமைப்புக்குள் இருந்து பல தரப்புகளும் காலத்துக்கு காலம் பிரிந்து சென்றன. இன்றைக்கு, கூட்டமைப்புக்கு வெளியிலுள்ள தமிழ்த் தேசிய கட்சிகள், அந்தக் கட்சிகளின் மூலம் பாராளுமன்றம் சென்றவர்கள் எல்லோரும் கூட்டமைப்பில் இருந்தவர்கள்தான்.
   கூட்டமைப்புக்குள் இருந்து, தமிழரசுக் கட்சித் தலைவர்களின் நிலைப்பாடுகளில் அதிருப்தியுற்று வெளியேறிய தரப்புகளை எல்லாம் ஒருங்கிணைத்து, பலமான மாற்று அணியொன்றை அமைக்கும் முயற்சிகள், 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னரான நாள்களிலேயே ஆரம்பித்துவிட்டன.
   தமிழ் சிவில் சமூக அமையமும் அதன் இணக்க சக்திகளும் கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணியை அமைப்பதில் குறிப்பிட்டளவு வெற்றியை, தமிழ் மக்கள் பேரவை ஆரம்பித்ததன் மூலம் எட்டின. 
   ஆனால், பேரவையோ, மாற்று அணியை அமைப்பதற்குப் பதிலாக, சி.வி.விக்னேஸ்வரனுக்கான அரசியல் எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதில் அக்கறை காட்டியதால், பேரவையில் புதிய நம்பிக்கையோடு ஆரம்பத்தில் இணைந்த கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஒரு கட்டத்தில் விலகி விட்டது. 
   பின்னரான நாள்களில், விக்னேஸ்வரன் தலைமையில் சுரேஷ் பிரேமசந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எப் இன்னும் சில உதிரிக் கட்சிகளும் இணைந்து, ஒரு கூட்டணியை அமைத்தன. அந்த அணி, யாழ்ப்பாணத்தில் ஒரு பாராளுமன்ற ஆசனத்தை வெற்றி கொண்டது.
   தமிழ்த் தேசிய அரசியலுக்குள் புது இரத்தம் பாய்ச்சி, நம்பிக்கையை விதைக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டு வந்த பேரவை, ‘எழுக தமிழ்’ என்கிற எழுச்சிப் பேரணிகளை வடக்கு - கிழக்கில் பெருமெடுப்போடு நடத்தியும் காட்டியது.
   ‘எழுக தமிழ்’ பேரணிகளில் கட்சி ஆதரவு, எதிர்ப்பு நிலைப்பாடுகளைத் தாண்டி, தமிழ் மக்கள் பங்கெடுத்தார்கள். ஆனால், பேரவையும் அதன் முக்கியஸ்தர்களும் ஒரு சில தனிநபர்களின் அரசியல் எதிர்காலத்துக்காக இயங்கி, தமிழ் மக்களின் நம்பிக்கையைச் சிதைத்தன. 
   தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவாக்கத்துக்குப் பிறகு, தமிழ் மக்கள் பேரவையிலேயே தமிழ்த் தேசிய கட்சிகள் பலவும் ஓரணியில் இணைந்தன. ஆனால், அவ்வாறான அரிய வாய்ப்பை, சில மாதங்களுக்குள்ளேயே பேரவை வீணடித்தது. 
   இன்றைக்கு யாழ்ப்பாணத்திலிருந்து மூன்று தமிழ்த் தேசிய கட்சிகள், பாராளுமன்ற அங்கத்துவத்தைப் பெற்றிருக்கின்றன. ஆனால், பெரும்பான்மையினக் கட்சியான சுதந்திரக் கட்சி, சில தசாப்தங்களுக்குப் பின்னர் ஆசனமொன்றை வெல்வதற்கும் அது குறிப்பிட்டளவு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. 
   கூட்டமைப்புக்கு மாற்றான அணியொன்றை, பேரவையில் உருவாக்கும் நோக்கமாவது, உருப்படியாக முன்னெடுக்கப்பட்டிந்தால், தமிழ்த் தேசிய வாக்குகள் கூட்டமைப்பு, மாற்று அணி என்கிற இரண்டு அணிகளுக்கு இடையில் மாத்திரமே பகிரப்பட்டிருக்கும்; தமிழ்த் தேசிய வாக்குகளின் திரட்சி, குறிப்பிட்டளவு காக்கப்பட்டிக்கும். 
   ஆனால், அவ்வாறான நிலை ஏற்படவில்லை. கூட்டமைப்பு, முன்னணி, விக்னேஸ்வரன் அணி என்று, மூன்று அணிகளாகப் பிரிந்து நின்றபோது, பெரும்பான்மையினக் கட்சிகளுக்கும், அதன் இணைக் கட்சிகளுக்கும், அது சாதகமாக அமைந்துவிட்டது.  
   பேரவையினது உருவாக்கம், எதைச் சாதித்தது என்றால், இவ்வாறான நிலையை ஏற்படுத்தியதைச் சொல்லலாம்.
   அதுதவிர்ந்து, ஒற்றுமை, ஓரணி போன்ற கோரிக்கைகளை மலினப்படுத்தியதைச் சொல்ல முடியும். 
   மக்களுக்கான நோக்கம் என்பது, தனிநபர்கள் சார்ந்து உருவாக்கப்பட முடியாது. விக்னேஸ்வரனைத் தனி ஆளுமையாக முன்னிறுத்திக் கொண்டு பேரவை செயற்பட்டதும், அதனால் ஏற்பட்ட விளைவுகளும்தான் இதுவாகும். 
   தமிழ் சிவில் சமூக அமையத்தின் அங்கத்தவர்கள், அதன் ஆலோசகர்கள் உள்ளிட்ட தரப்பினர்தான்,  பேரவையின் உருவாக்கத்தில் இருந்தார்கள். கிட்டத்தட்ட தமிழ் சிவில் சமூக அமையத்தின் பெயர் மாற்றப்பட்ட அமைப்பாகவே பேரவை செயற்பட்டு மறைந்தது. மக்கள் திரட்சிக்கான நம்பிக்கைகள் எல்லாவற்றையும் சிதைத்துவிட்டு ஒதுங்கிவிட்டார்கள்.
   கடந்த பொதுத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரும், தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சிகளை மாவை சேனாதிராஜா உள்ளிட்ட தமிழரசுக் கட்சியின் (பாராளுமன்ற பதவிகளை இழந்த) தலைவர்களும் பிறிதொரு தருணத்தில் டெலோவும் முன்னெடுத்தன. 
   மாவை அணி  முன்னெடுத்த ஒற்றுமைக்கான அழைப்பை நிராகரித்த டெலோ, சில நாள்களின் பின்னர், தானே அப்படியான அழைப்பொன்றை விடுத்தது. 
   இந்த இரண்டு அழைப்புகளுக்குள்ளும் தனிப்பட்டவர்களின் பதவி ஆசை, தங்களை முன்னிறுத்தும் நோக்கங்கள் ஆகியவையே முனைப்புப் பெற்று இருந்தன. அதனால், அவ்வாறான முயற்சிகள் ஆரம்பத்திலேயே பிசுபிசுத்துப் போய்விட்டன. 
   இவ்வாறான நிலையில்தான், திருமலை ஆயர் மற்றும் தென் கயிலை ஆதீனம் ஆகியோர் தலைமையிலான குழுவின், ஒற்றுமைக்கான அழைப்பும் மதிக்கப்படாமல் போயிருக்கின்றது.
   தமிழ்த் தேசிய அரசியல், தேர்தல் அரசியலுக்குள் சுருங்கிய பின்னர், பதவி, பகட்டு போன்றவற்றுக்காக அலையும் கும்பல், தமிழ்த் தேசிய அரசியலை ஆக்கிரமித்துவிட்டது. 
   அதனால்தான், அர்த்தமுள்ள ஒற்றுமையும் ஒருங்கிணைவும் கானல் நீராகிவிட்டன. அந்த நிலையை மாற்றுவது அவ்வளவு இலகுவான ஒன்றல்ல.
    
   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்க்-கட்சிகளும்-ஒற்றுமைக்கான-அழைப்பும்/91-282227
 • Topics

 • Posts

  • இப்ப இருக்கிற ஊடகங்களுக்கு வேறை வேலையள் எக்கச்சக்கம். மேலிடத்திலை சொல்லுறதை மட்டும் கிளிப்பிள்ளை மாதிரி சொல்லுவினமாம்.போனமாம் சாப்பிட்டமாம் வந்தமாம் இருக்கணும் எல்லோ?
  • யாழ்கள சின்ராசுகள்????? யார் அவர்கள்? அதாவது நீங்களும் உங்கள் அருவருடிகளும் மகா ராஜாக்கள் அப்படித்தானே? 1988 ஈழத்தில் பாடசாலை விட்டு நான் வரும் வழியில் நான்கு தமிழர்களின் கொல்லப்பட்ட உடலங்கள் வீதியில் சிதைந்து கிடந்தது. அப்போது ஒரு பெரியவர் சொன்னார் தம்பி இப்போதுதான் இறந்த ஒருவரின் உடலை ட்ரக்கில் கட்டி இழுத்துப்போகிறார்கள் என்று. ..அந்த இந்திய இராணுவத்தின் தளபதிதான் இவர்..  
  • றோ உளவுப்பிரிவு தனது நலனுக்காக எதையும் செய்யும். விடுதலைப்புலியாக மாறும் கரும்புலியாக மாறும். சிங்கள அரசியல்வாதிகளை தற்கொலை போராளி கொண்டு கொலை செய்யும். விடுதலைப்புலிகளுக்குள்ளும் வேறு இயக்கங்கள் பெயரில் படு கொலைகளை நடத்தும். இன்னும் பற்பல......
  • இது இன்னுமொரு ஈஸ்ரர் தாக்குதலாக இருக்கலாம் மும்பைத் துறைமுகத்தில் ஒரு கடற்படை நீர்மூழ்கி தாக்கி மூழ்கடிக்கப்பட்டது அப்போது விபத்து எனப் பூசி மொழுகிவிட்டார்கள் இல்லையேல் பங்குச்சந்தையில் தடாலடி மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். அதுபோல் இதையும் பூசி மெழுகிவிடுவார்கள். ஆனால் சுப்பிரமணியம் சுவாமி சீனாக்காரன் செய்தவேலை என அறிக்கை விட்டிருக்கிறார். துட்டகெமுனுவின் நிலை இந்தியாவுக்கு வந்துவிட்டது. ஆப்கானிஸ்தானில் சீனாவின் ஆதிக்கம் பாகிஸ்தான் சொல்லவே தேவை இல்லை காஸ்மீர் என்றும் புகையும் விடையம் இப்போ வங்காள விரிகுடாவின் இலங்கைத்தீவில் சீனாவின் ஆதிக்கம் அம்பாந்தோட்டயிலிருந்து அட்டை வளர்ப்புவரை அங்கெங்கிலாதபடி அவர்கள்பாடுதான். கெமுனுக்கு ஒருபக்கம் கடலாவது இருந்தது இவர்களுக்கு கடலுக்கு அப்பாலும் சீனாக்காரன் நிக்கிறான். சிலவேளை யாராவது அகதிமுகாமில் இருக்கும் இலங்கைத்தமிழன்மீது பாரத்தைப்போட்டு விடுதலைப்புலி எனக்கூறினாலும் கூறலாம். 
  • மாசிகருவாட்டுக் குழம்பும் சோறும் அருமையான காம்பினேஷன்.......!  👍
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.