Jump to content

அமெரிக்கவுக்குள் வந்து பாலத்துக்கு அடியில் தஞ்சமடைந்த 10 ஆயிரம் குடியேறிகள் - என்ன ஆகும்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கவுக்குள் வந்து பாலத்துக்கு அடியில் தஞ்சமடைந்த 10 ஆயிரம் குடியேறிகள் - என்ன ஆகும்?

25 நிமிடங்களுக்கு முன்னர்
அமெரிக்க குடியேறிகள்

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

அமெரிக்க சுங்க அலுவலகத்தில் அகதியாக தஞ்சம் கோரி விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்படும்வரை இவர்கள் போக இடமின்றி எல்லை முகாம்களில் காத்திருக்கிறார்கள்.

அமெரிக்கா-மெக்சிகோ எல்லை பாலம் அருகே முகாமிட்டுள்ள ஆயிரக்கணக்கான குடியேறிகளை ஹேட்டிக்கே திருப்பி அனுப்பும் நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எல்லையில் முகாமிட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் ஹேட்டியைச் சேர்ந்த குடியேறிகள். இவர்களை திருப்பும் அனுப்பும் நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளது. இந்த பணி எட்டு நாட்கள்வரை ஆகலாம் என்று அதிகாரிகள் அசோசியேட்டட் பிரெஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள டெல் ரியோவையும் மெக்ஸிகோவின் சியூடாட் அகூன்யாவையும் இணைக்கும் பாலத்தின் கீழ் சுமார் 10 ஆயிரம் குடியேறிகள் திரண்டுள்ளனர். மேலும் பலர் அங்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், டெல் ரியோ மேயர் ப்ரூனோ லோசானோ, அவசரநிலையை அறிவித்துள்ளார்.

இத்தகைய சூழ்நிலை முன்னெப்போதும் நடந்திராத மற்றும் கனவிலும் நினைத்துப் பார்க்காத ஒன்று என விவரித்த மேயர், எல்லையில் கண்காணிப்பு ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ள அதே சமயம், முகாமிட்டுள்ள குடியேறிகள் மிக மோசமான நிலையில் வசித்து வருவதாக தெரிவித்தார்.

எல்லை நோக்கி குவிந்து வரும் குடியேறிகளை சமாளிக்கும் வகையில், டெல் ரியோவின் எல்லை கடவுப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

டெல் ரியோவில் உள்ள தற்காலிக முகாமில் சில அடிப்படை சேவைகள் உள்ளன. குடியேறிகள், 37 டிகிரி செல்ஷியஸ் (99F) வெப்பநிலையில் பொருட்களை வாங்குவதற்காக ஆற்றைக் கடந்து மெக்சிகோவுக்கு சென்று வருகிறார்கள்.

ராட்சத கயிற்றின் உதவியுடன் மிகப்பெரிய கூடாரங்களை போட்டுள்ள குடியேறிகள், ஆற்றங்கரையிலேயே குளித்தும் துணிகளை துவைத்தும் வசித்து வருவதாக ஏபி செய்தி முகமை தகவல்கள் கூறுகின்றன. அந்த முகாமில் சமீபத்திய நாட்களில் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அகதியாக தஞ்சம் கோரி வந்தவர்களில் 41 வயதான ராம்செஸ் கோலன் என்ற ஆப்பிரிக்க-கியூபாவைச் சேர்ந்தவரும் ஒருவர். பெருவில் வேலை பார்த்து வந்த அவர் இந்த பயணத்துக்காக பணத்தை சேமித்து வந்துள்ளார். இந்த முகாம் குழப்பம் நிறைந்து காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

வாஷிங்டன் போஸ்ட் நாளிதழிடம் பேசிய அவர்,, "ஆயிரக்கணக்கானோருக்கு மத்தியில் சிறிய டிக்கெட்டை வைத்துக் கொண்டு அழைப்பு வரும் என காத்திருக்கிறோம்,"என்று தெரிவித்தார்.

அமெரிக்காவுக்குள் நுழையும் நோக்கத்துடன் வரும் குடியேறிகளின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் காலத்தில் அவர்களுக்கு இதுபோன்ற சிறிய டிக்கெட் வழங்கப்படும்.

டெல் ரியோ மாவட்டத்தை தமது தொகுதியில் கொண்டவரான குடியரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டோனி கோன்சலஸ், இத்தகைய மோசமான சூழ்நிலையை இதற்கு முன்பு தாம் கண்டிருக்கவில்லை என்று ஃபாக்ஸ் செய்தித் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்தார்.

"மக்களின் எண்ணிக்கை, அங்கு நிலவும் குழப்பமான நிலை போன்றவற்றை பார்த்தால், உண்மையில் தேச எல்லை என்பதே கிடையாதா என்று நினைக்கத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு மெக்சிகோவில் இருந்து அமெரிக்க எல்லைக்குள் குடியேறிகள் எளிதாக வந்து போகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது," என்று கோன்சலஸ் கூறினார்.

மத்திய அமெரிக்க குடியேறிகள்

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

வெப்பத்திலிருந்து தப்பிக்க பாலத்தின் கீழ் முகாமிட்டுள்ள குடியேறிகள்

குடியேறியாக வந்தவர்களில் பெரும்பாலானோர் ஹேட்டியை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் கியூபா, பெரு, வெனிசுவேலா, நிகரகுவா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.

வடக்கு நோக்கி முன்னேறும் ஹேட்டியர்களின் பெரிய அலையே நகருவது போல தோற்றமளிக்கிறது. இந்த கூட்டத்தில் பெரும்பாலானவர்கள் 2010ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பிறகு பிரேசில் மற்றும் தென்னமெரிக்க நாடுகளுக்கு வந்தவர்களாக இருக்கலாம் என்று வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி கூறுகிறது.

இந்த பெருந்திரள் குடியேறிகளின் எல்லை முற்றுகையை இப்போது அமெரிக்கா அரசாங்கம் எதிர்கொண்டிருக்கிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் கடந்த ஜூலை மாதம் தடுத்து வைக்கப்பட்ட புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 21 ஆண்டுகளில் முதல் முறையாக 2 லட்சத்தை தாண்டியதாக அறிவிக்கப்பட்டது.

கடந்த மாதம், அதிகாரிகள், மெக்சிகோ எல்லையில் 1,95,000க்கும் அதிகமான குடியேறிகளை கைது செய்ததாக அரசு கடந்த புதன்கிழமை வெளியிட்ட தரவில் கூறியது. இந்த கோடைகால எண்ணிக்கை 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைதான 51,000 பேரை விட பல மடங்கு அதிகமாகும்.

Map
Presentational white space

புலம்பெயர்ந்தோர் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் செயல்பாட்டாளர் ஜென் பட் பிபிசியிடம் பேசும்போது, ஆவணப்படுத்தப்படாத குடியேறிகளை வேகமாக வெளியேற்றும் அமெரிக்க அதிபர் பைடன் நிர்வாகத்தின் திட்டமே இது என்று தெரிவித்தார்.

"அகதிகள் அல்லது தஞ்சம் அடைந்தவராக கோரும் மக்களின் எண்ணிக்கை அதிக எண்ணிக்கையில் இருக்கும்போது, அதற்கான அமைப்பை மூடிவிட்டால், உடனே அந்த மக்களுக்கு சட்டவிரோதமாக எல்லையை க கடப்பதைத் தவிர வேறு தேர்வு இருக்காது," என்கிறார் ஜென் பட்.. இவர் ஒரு முன்னாள் எல்லை கண்காணிப்பு ஏஜென்ட் மற்றும் உளவு ஆய்வாளர் ஆக அறியப்படுகிறார்.

அமெரிக்க குடியேறிகள்

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

மெக்சிகோ ஆற்றைக் கடந்து அமெரிக்க எல்லைக்கு வரும் குடியேறிகள்

"தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமானால், நீங்கள் ஒரு வலுவான மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான புகலிட முறையைக் கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில், மக்கள் சட்டவிரோதமாக கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நுழைவார்கள். பிறகு அவர்கள் மீது நாடு கடத்தல் அமலாகும். அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு அந்த குடியேறிக்கு கிடைக்கும்."

அமெரிக்க குடியுரிமைய முறையில் சீர்திருத்தம் செய்வதாகக் கூறி அதிபரான ஜோ பைடன் ஆட்சிக்கு வந்ததும் முந்தைய அதிபர் டொனால்ட் டிரம்ப் எழுப்பிய சுவர் மூலம் குடியேறி பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்ட அவர்களின் குழந்தைகளை மீண்டும் சேர்க்கும் நடவடிக்கையை முன்னெடுக்க ஒரு சிறப்பு பணிக்குழுவை உருவாக்கினார். சட்டபூர்வ குடியுரிமை திட்டத்தை மீளாய்வு செய்யவும் பைடன் நடவடிக்கை எடுத்தார்.

அமெரிக்க குடியுரிமை தடுப்பு மையங்களில் ஆதரவற்ற நிலையில் வைக்கப்பட்டிருந்த சிறார்கள் உள்பட நூற்றுக்கணக்கான குடியேறிகள் அமெரிக்காவின் தென் பகுதிக்கு வந்தபோது, அவர்கள் அங்கிருந்தபடி தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அதிபர் பைடன் நடவடிக்கை எடுத்திருந்தார். அதுபோலவே இப்போதும் அவர் ஏதாவது செய்வாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் ஆயிரக்கணக்கான குடியேறிகள் ஹேட்டிக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியிருக்கிறது.

https://www.bbc.com/tamil/global-58616645

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.  
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.