Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

"தோற்றிடேல், மீறி 

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் எவர் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை.. இவை தமிழினத்தின் வரலற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்….!

 

(இது நான் ஏற்கனவே வெளியிட்ட ஒன்றுதான். ஆனால் இன்று சில புதிய தகவல்கள் கிடைத்ததால் பழையதை அழித்துவிட்டு புதிய பதிப்பாக புதிய சில தகவல்களோடு இதை வெளியிடுகிறேன்.)

 

1982 முதல் 18.05.2009 நள்ளிரவு வரை களமாடி வீரச்சாவடைந்தோர்:- 25,500 - 26,500

 

சில பேர் சொல்லித் திரிவதுபோல 40,000 ஓ, இல்லை 50,000 ஓ கிடையாது... இன்னும் சொல்லப்போனால் சிங்களவனால் நான்காம் ஈழப்போர் முடிந்த பின்னர் 2011 ஆம் ஆண்டு அவன் இனப்படுகொலையினை மறைப்பதற்காக திரித்து வெளியிட்ட Sri-Lankan-Humanitarian-Operation-Factual-Analysis.pdf என்னும் கையேட்டில் கூட "27,000+" என்றுதான் உள்ளது.. (மேலும், ஆய்தம் மௌனித்து சிங்களத்திடம் சென்றவர்களில் படுகொலை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியவில்லை. அவர்களை வீரச்சாவடைந்தோரோடு சேர்த்தல் சரியா இல்லை தனியாக போராளிகள் என்று சேர்த்தல் சரியோ என்பது தெரியவில்லை.)

 

எனவே இவற்றை நாம் சரியாக கண்டறிய மெள்ள மெள்ளமாக கணக்குகள் போடுவோம். அதற்கு 1982 இல் இருந்து 2008 வரை வீரச்சாவடைந்த மொத்த போராளிகளினது எண்ணிக்கையினை அறிதல் வேண்டும்.

 

thinakkathir - 20-6-2001.png

'தினக்கதிர்: 20-6-2001'

 

 

main-qimg-e080a67544be3203d1ecf770bff61b86.jpg

'கிட்டிப்பு(credit): மாவீரர் பணிமனை'

(மணலாற்றுச் சமர் = மின்னல் முறியடிப்புச் சமர்)

  • இதய பூமி-1 நடவடிக்கை - 8 போராளிகள்
  • சத்ஜெய-1 எதிர்ச்சமர் - 254 போராளிகள்
  • ஓயாத அலைகள் மூன்று - 1336 போராளிகள்

                --> ஆனையிறவும் அதனோடான யாழ் மீட்பு முயற்சியில் மட்டும் - 973 போராளிகள்

  • 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாதம் நிகழ்ந்த யாழ். மீதான படையெடுப்பு - 372 போராளிகள்

 

 

 27.11.1982ம் ஆண்டு தெடக்கம் 20.11.2005ம் ஆண்டு வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விரிப்பு: https://tamilnation.org/tamileelam/maveerar/2005.htm (2005-38)

 

2006-1-886x1024.jpg

'கிட்டிப்பு(credit): மாவீரர் பணிமனை'

 

main-qimg-64f127a70ee8dbb7c753512c67435099.jpg

'கிட்டிப்பு(credit): மாவீரர் பணிமனை | ஈரோஸ் & மற்றும் தனிக்குழு மாவீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளது'

 

 27.11.1982ம் ஆண்டு தெடக்கம் 31.05.2008ம் ஆண்டு வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விரிப்பு:-

 

main-qimg-9ec39a2780af5d8058d5019bcb557263-mzj

'கிட்டிப்பு(credit): மாவீரர் பணிமனை'

 

 

20 நவம்பர் 2008 வரை வீரச்சாவடைந்த மொத்த மாவீரர் எண்ணிக்கை: 22,390 | 2007 - 2008 மாவீரர் ஆண்டில் மட்டும் 2,239 போராளிகள் தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்துள்ளனர். (மேற்கண்ட படிமம் ஒக்டோபர் வரை மட்டுமே. இது நவம்பரையும் உள்ளடக்கியது ஆகும்.)

Till 20th Nov, 2008.jpg

'கிட்டிப்பு(credit): https://www.tamilnet.com/art.html?catid=71&artid=27600'

 

மேற்கண்ட 25,500-26,500 எண்ணிக்கையினை நிறுவ இறுதி ஐந்து மாதங்களிலும் வீரச்சாவடைந்த மொத்த போராளிகளினது எண்ணிக்கையினைக் கண்டறிதல் வேண்டும். அதற்கு நாமொரு தோராயமான கணக்குப்போடுவோம்.

 

இற்றைக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள படைத்துறையின் அதிகாரநிறைவு வலைத்தளத்தில் (http://www.defence.lk/Article/view_article/862) இருந்து எடுத்தது. இது சிங்களத்தின் மனக்கணக்கு மட்டுமே... நாமொரு அண்ணளவான கணக்காக இதை எடுத்துக்கொள்ளலாம்.

2009

killed ltte from defence.lk.png

 

 

 மேற்கண்டது போன்று சிங்களத்தின் படைத்துறை மற்றும் வலுவெதிர்ப்பு அமைச்சு(Defence minstery) ஆகியவற்றினது வலைத்தளங்களில் இறுதி 5 மாதங்களிலும் வீரச்சாவடைந்த போராளிகளினது எண்ணிக்கை தொடர்பாக நாளாந்தம் ஒரு கணக்கு வெளியிடப்படும். அது மிகவும் நகைச்சுவையானதாக இருக்கும். அது பற்றி அந்தக் காலத்தில் வெளிவந்த ஒரு கட்டுரை:-

 

 

சரி இனி நாம் கணக்கெடுப்போம்.

சிங்களத்தினால் வெளியிடப்பட்ட வீரச்சாவடைந்த போராளிகளின் எண்ணிக்கையான (செப். 2007 - ஏப்ரல் 24 2009 வரை) 5,953 என்பது ஒரு அண்ணளவான கணக்கே... மெய்யானது அதைவிடக் குறைவாக இருக்கும். இருந்தாலும், பகை கொடுத்த எண்ணிக்கையினை கணக்கெடுத்தால்,

செப். 2007 - ஏப்ரல் 24 2009 வரையிலான சிங்களக் கணக்கு - புலிகளால் 2008 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வீசாவான மொத்த மாவீரர் எண்ணிக்கை

  • 5953-2,239 = 3,714

2008 வரையிலான மொத்த மாவீரர் எண்ணிக்கை + 3,714

  • 22,390+3,7149 = 26,104

சிங்களவரின் தகவல் அடிப்படையில் ஏப்ரல் 24, 2009 - மே 18, 2009 வரை மொத்தம் 358 போராளிகள் வீரச்சாவடைந்திருக்கின்றனர். ஆக,

  • 26,104+358 = 26,462

 

ஆக மொத்தத்தில் சிங்களவனின் கணக்கின் அடிப்படையில் 26,462 போராளிகள் வீரச்சாவடைந்திருக்கின்றனர் என்பதை நான் உச்ச மாவீரர் தொகையாக கணக்கிலெடுத்து வரையறுக்கிறேன்..

(சிங்களவர் எப்பொழுதும் தமிழர் தரப்பின் இழப்பு எண்ணிக்கையினை ஏற்றிச் சொல்வதை வாடிக்கையாகக் கொண்டவர்கள் என்பது இங்கு நினைவுபடுத்தத்தக்கது.)

FEBRUARY 06, 2020.... No more than this no. of LTTE were killed.....  Show this to Diaspora 'Tiger Money Eaters' and tell them to stop spreading of Lies which says that 50,000 Tigers were kileld in combat..png

 

 

இனி நாம் தாழ்ந்த மாவீரர் தொகையினை உறுதி செய்வோம்.  அதற்கு நாம் எமக்கு கிடைத்த ஒரு அசைக்க முடியா படிம ஆதாரத்தினை எடுத்துக் கொள்வோம்.

 

  • இறுதி 5 மாதங்களின் சில நாட்களுக்கு துயிலுமில்லமாக விளங்கிய பகுதி:

 

graves.jpg

 

இப்படிமத்தை நான் இங்கு இணைக்க சில காரணங்கள் உண்டு. இப்படத்தில் தெரிபவை மாவீரர் துயிலுமில்லமாக விளங்கிய ஓரிடத்தில் உள்ள கல்லறைகள் கட்டப்படாத மாவீரர் பீடங்கள் ஆகும்.  இப்படத்தை வைத்து 2009 இன் குறிப்பிட்ட சில நாட்களினுள் வீரச்சாவடைந்த போராளிகளின் எண்ணைக்கையினை நாம் அறிவதோடு ஏனைய நாட்களில் வீரச்சாவடைந்த போராளிகளின் எண்ணிக்கையின் ஒரு தோராயமான கணக்கினை கணக்கிட முடியும்.

இப்படிமத்தின் சுற்றாடலை வைத்துப் பார்க்கும்போது இது இரட்டைவாய்க்காலையும் வலைஞர்மடத்தையும் பிரிக்கும் கிரவல் வீதிக்கு அண்மையில் உள்ள வெளிப்பகுதி என என்னால் அறிய முடிகிறது. எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இங்கு மார்ச் இரண்டாம் கிழமையில் இருந்து ஏப்ரல் 20 வரை வித்துடல்கள் விதைக்கப்பட்டன. 

இக்கால கட்டத்தில்தான் ஆனந்தபுர முற்றுகைச் சமரமும் அரங்கேறியது என்பதை கவனிக்கவும். ஆனால் அதனுள் சிக்குண்ட போராளிகளின் வித்துடல்கள் ஆனந்தபுரத்திற்குளேயேதான் விதைக்கப்பட்டன; அவை பின்னாளில் சிங்களத்தால் கைப்பற்றப்பட்டன (என்னிடம் ஒரு 200 பேரினது கிடத்தப்பட்ட நிலையிலான வித்துடல்களினது படிமமும் நிகழ்படமும் உள்ளது. ஆனால் 31 ஆம் திகதி வீரச்சாவடைந்தோரினது பின்னுக்கு கொண்டுவரப்பட்டதா என்பது அறியில்லை.) எனவே அதை தவிர்த்த்து ஏனைய இடங்களில் வீரச்சாவடைந்த போராளிகளினது வித்துடல்களே இன்கு விதைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது என்னுடைய துணிபு. 

அடுத்து இப்படிமத்தில் தெரியும் விதைக்கப்பட்ட வித்துடல்களின் எண்ணிக்கை பற்றிப் பார்ப்போம்.  மாவீரர் பீடங்கள் யாவும் இங்கு கடும் கபில நிறத்தில் தெரிகின்றன. அவ்வாறு தெரிபவற்றை நான் எண்ணியபோது,

முன்னிருந்து பின்னாக...

  1. முதல் கணம்: 8 நிரை x 20 வரிசை = 160  (8வது நிரையில் மூன்று மாவீரர் பீடங்கள் இல்லை)
  2. இரண்டாம் கணம்: 23 நிரை x 12 வரிசை = 276
  3. மூன்றாம் கணம்: படிமம் தெளிவாக இல்லை. ஆனால் வரிசை 20 விடக் கூடவாகத்தான் உள்ளது. தெளிவானதுவரை எண்ணியபோது 23 வரிசைகள் வரை செல்கிறது, ஒரு நிரையில். எனவே அந்த முறிப்பு வரை 18 நிரை x 23 வரிசை = 414. அந்த முறிப்பிற்குப் பின்னரும் 7 நிரை உள்ளது. அதில் எவ்வளவு இருக்கிறது என்பது தெரியவில்லை, நிழலாக உள்ளதால். 

கவனி: படிமத்தின் இடது பக்கம் வெட்டப்பட்டுள்ளது. இதனால் மூன்றாம் கணத்தினை முழுமையாக கணக்கிட முடியவில்லை

மொத்தமாக 160+276+414 = 850 பின்னால் கணக்கிடப்படாமல் மொத்தம் 7 நிரை உள்ளதை அவதானிக்கவும். எனவே அதையும் சேர்த்தால் தோராயமாக ஒரு 850-900 வரையிலான மாவீரர் பீடங்கள் இதற்குள் உள்ளது.

ஆக மார்ச் இரண்டாம் கிழமையில் இருந்து (தோராயமாக 8ம் திகதி எனக் கொள்கிறேன்) ஏப்ரல் 20 வரை, மொத்தம் 43 நாட்களில் வீரச்சாவடைந்த மொத்த போராளிகளின் எண்ணிக்கை 800-900 ஆகும். இந்த தோராயக் கணக்கினடிப்படையில், சனவரியில் இருந்து மே 5 வரை கணக்கிட்டால் 2,550 - 2,700 வரையிலான போராளிகள் மாவீரர்கள் ஆகியிருக்கின்றனர். மேற்கொண்டு (மே 10-18) சமர் உச்சியில் இருந்ததால் இந்த கணக்கு சரிப்பட்டு வராது. மேலும், எல்லா நாட்களிலும் மார்ச் 8 - ஏப்ரல் 20 வரை நடந்த சமர்கள் போன்ற சமர்கள் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லைத்தான்.

எனவே கடைசி ஐந்து மாதங்களிம் வீரச்சாவடைந்த மொத்த மாவீரர்கள் எண்ணிக்கையானது தோராயமாக 2,550 - 3,000 ஆக இருந்திருக்கலாம் என்பது என்னுடைய துணிபு. நான் கொடுத்த கணக்கோடு சற்று கூடக் குறையவும் வாய்ப்புண்டு என்பதையும் கவனிக்கவும்.

அடுத்து 2008 டிசம்பர் மாதத்திற்கான மாவீரர் தொகையினைக் கணக்கெடுத்தால், நடந்த சமர்களின் அடிப்படையிலும் 2008 ஆம் ஆண்டு வீரச்சாவடைந்த போராளிகளின் எண்ணிக்கையின்(2,239) அடிப்படையிலும் பார்த்தால் ஒரு மாதத்திற்கு தோராயமாக 200 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். எனவே டிசம்பர் மாதத்திற்கும் தோராயமாக மொத்தம் 200 போராளிகள் வீரச்சாவடைந்திருப்பர். 

எனவே மொத்தத்தில் தாழ்ந்த மாவீரர் எண்ணிக்கையாக,

  • 22,390 + 200 + 3,000 = 25,590

25,590 ஐ வரையறுக்கலாம்.

ஆக, மொத்த மாவீரர் எண்ணிக்கையாக தமிழர் தரப்பினது கணக்கினை தாழ்ந்த கணக்காகவும் சிங்களத்தின் கணக்கினை உச்சக் கணக்காகவும் வைத்தால்,

 25,500 - 26,500

என்பதை தமிழீழ விடுதலைப்புலிகளின் மொத்த வீரச்சாவடைந்தோர் எண்ணிக்கையாக நாம் வரையறுக்கலாம். இதனுள் சரணடைந்த பின்னர் சுட்டுக்கொல்லப்பட்ட போராளிகளினது எண்ணிக்கை அடங்கவில்லை என்பதை கவனத்தில் எடுக்கவும்.

 


 

"எங்கள் தோழர்களின் புதைகுழியில் 
மண்போட்டுச் செல்கின்றோம்

இவர்கள் சிந்திய குருதி - தமிழ்
ஈழம் மீட்பது உறுதி 😢"

- மாவீரர் நாள் பாடல்

 


 

உசாத்துணை:

ஆக்கம் & வெளியீடு
நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 4
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

 

 

 

 

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to மே-18, 2009 வரையிலான மொத்த மாவீரர் விரிப்பு - ஆவணம்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்து என்று எழுத எதுவுமில்லை நன்னி.

உங்கள் கணக்கு சரியாகவே படுகிறது. நானும் முன்பு 50,000 வரை இருக்கும் என்றே எண்ணி இருந்தேன். அப்படி இல்லை என்பது ஒரு சிறு ஆறுதல்🙏🏾.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
29 minutes ago, goshan_che said:

கருத்து என்று எழுத எதுவுமில்லை நன்னி.

உங்கள் கணக்கு சரியாகவே படுகிறது. நானும் முன்பு 50,000 வரை இருக்கும் என்றே எண்ணி இருந்தேன். அப்படி இல்லை என்பது ஒரு சிறு ஆறுதல்🙏🏾.

தங்கள் கருத்திற்கு நன்றி ஐயனே.

நான் இதை எழுதியதன் காரணங்களில் ஒன்று இந்த 50,000 என்ற கருத்தினை அகற்ற வேண்டும் என்பதுதான். ஏனெனில் அது மிகவும் பிழையான ஒன்றாகும்.

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

    • By நன்னிச் சோழன்
      "தோற்றிடேல், மீறி 
      தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"
      -நன்னிச் சோழன்
       
      எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை.. இவை தமிழினத்தின் வரலற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்….!  
      எல்லா(hello)...
      வணக்கம் நண்பர்களே!
      இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழத்தில் இருந்த மாவீரர் துயிலுமில்லங்களினுள் இருந்த கல்லறைகளின் மற்றும் நினைவுக்கற்களின் வடிவங்கள் பற்றியே. இந்த துயிலுமில்லங்கள் எங்கெல்லாம் அமைக்கப்பட்டிருந்தன என்று முதலில் பார்ப்போம்.

      'தமிழீழத்தில் மாவீரர் துயிலுமில்லங்கள் இருந்த இருப்பிடங்களை காட்டும் படம் | படிமப்புரவு: fb'

       
       
      மாவட்டந்தோறும் அமையப்பெற்றிருக்கும் மாவீரர் துயிலுமில்லங்களின் பெயர் விரிப்பு:-
      முல்லைத்தீவு நித்திகைக்குளம் காட்டுப்பகுதி - (முதன் முதலில் மாவீரர்களின் நினெவெழுச்சிகள் நடைபெற்று தலைவர் மாமா முதன்மைச் சுடரை ஏற்றி அக வணக்கம் செலுத்திய இடம்)
      அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு உடும்பன்குளம் மாவீரர் துயிலுமில்லம்.
      மட்டக்களப்பு மாவட்டம் தரவை மாவீரர் துயிலுமில்லம்.
      தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம்.
      கல்லடி மாவீரர் துயிலுமில்லம்.
      மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லம்.
      திருகோணமலை மாவட்டம் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.
      தியாகவனம் மாவீரர் துயிலுமில்லம்.
      வெளியகுளம் மாவீரர் துயிலுமில்லம்.
      பெரியகுளம் மாவீரர் துயிலுமில்லம்.
      உப்பாறு மாவீரர் துயிலுமில்லம்.
      மன்னார் மாவட்டம் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லம்.
      முள்ளிக்குளம் மாவீரர் துயிலுமில்லம்
      பெரிய பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம்.
      வவுனியா மாவட்டம் ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.
      கிளிநொச்சி மாவட்டம் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்.
      முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம்.
      யாழ்ப்பாண மாவட்டம் தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்லம்.
      வலிகாமம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம். (தமிழீழ தேசத்தில் முதன்முதலாக அமைக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லம்)
      வடமராட்சி கிழக்கு எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.
      வடமராட்சி உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம்.
      தென்மராட்சி கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம்.
      முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம்.
      அளம்பில் மாவீரர் துயிலுமில்லம்.
      விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்லம்.
      துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.
      வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.
      நெடுங்கேணி களிக்காடு மாவீரர் துயிலுமில்லம்
      மணலாறு ஜீவன்முகாம்/ உதயபீடம் மாவீரர் துயிலுமில்லம்.
      மணலாறு டடிமுகாம்/ புனிதபூமி மாவீரர் துயிலுமில்லம்.
       
       
      இந்த கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்ப வடிவத்தாலும் தோற்றத்தாலும் நிறத்தாலும் மாறுபட்டன. இவையெல்லாம் அந்தந்த கோட்ட மாவீரர் பணிமனைப் பொறுப்பாளரால் மேற்பார்வையிடப்பட்டன. அவரின் உத்தரவின் பேரில்தான் இவையாவும் வடிவமைக்கப் படுவதுண்டு. இதுவே வழக்கம். இப்படி ஒரு மாவீரர் துயிலுமில்லம் தோன்றுவதை புலிகள் 'முகையவிழ்த்தல்' என்று குறிப்பிடுவார்கள். நானும் அதையேதான் இவ்வாவணத்திலும் கையாண்டுள்ளேன்.
      இவ்வொவ்வொரு கல்லறைகளினதும் குறிப்புகள் தாங்கிய அந்த அதன்(விதப்பான பெயர் தெரியவில்லை.. காட்டடக் கலையில் அவ்வளவு அறிவில்லை) பின்பக்கத்தின் மேற்புறத்தில் எண்கள் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டிருக்கும் . இது அந்தத்த கல்லறைகளின் எண்ணாகும். இதை வைக்த்து கல்லறைகளை இலகுவாக அடையாளம் காண முடியும்.
      அடுத்து, கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்களின் வடிவங்களைப் பற்றி பார்க்கப்போவதோடு தென் தமிழீழ மவீரர் துயிலுமில்ல ஒலிமுகங்களையும்(முகப்பு) தோற்றங்களையும் உங்களிற்கு காட்டுகிறேன்.
      வாருங்கள் தகவலிற்குள் தாவுவோம்….
       
      1982 - 2008 ஒக்டோபர் 31 வரையிலான மாவீரர்கள் எண்ணிக்கை = 22,114 1982 - 2009 மே 18 நள்ளிரவு வரையிலான மாவீரர்கள் எண்ணிக்கை =  25,500 - 26,500 தன்னிலாபத்திற்காக மாவீரர்கள் எண்ணிக்கை 40000+ என்று கூவித்திரிவோரை நம்பவேண்டாம். சிங்களத்தின் இறுதிப் போர் பற்றிய அறிக்கையிலும் 27,000+ என்றுதான் உள்ளதை என்பதை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்(Humanitarian operation analysis)
       
      மாவீரர் தொடர்பான புலிகள் கால சொல்லாடல்கள்:-
      முகையவிழ்த்தல் - துயிலுமில்லம் ஒன்றை வித்திட்டு புதிதாய் தோற்றுவித்தல் துயிலுமில்லம் - மாவீரர்களது வித்துடல் விதைக்கப்பட்டு செப்பனிட்டு பேணிக் காக்கப்பட்ட மயானம் இச்சொல்லானது 'துயிலும் இல்லம்' என்று பிரித்தும் எழுதப்படுவதுண்டு. ஆனால் துயிலுமில்ல முகப்பில் 'துயிலுமில்லம்' என்று சேர்த்தே எழுதப்பட்டிருக்கும்! ஒலிமுகம் - மாவீரர் துயிலுமில்ல முகப்பு போரிலக்கிய மேற்கோள்: '' ஒலிமுகந் தோறும் புலிமுகம் பார்த்து" (மாவீரர் நீங்களே ) நினைவொலி - நவம்பர் 27 அன்று சரியாக மாலை 6.05 மணிக்கு மாவீரர்களுக்காக எழுப்பப்படும் ஆலய மணியோசை மாவீரர் நினைவு மண்டபம் - மாவீரர்களின் வித்துடலிற்கான பொது மக்களின் மலர்வணக்கத்திற்கென்று சிறப்பாக கட்டப்பட்ட மண்டபம் வீரவணக்க கூட்டம் - அங்கு நடைபெறும் கூட்டத்தை குறித்த சொல். இன்று இச்சொல் தமிழ்நாட்டில் பரவலாக கையாளப்படுகிறது. அகவணக்கம் - வீரச்சாவடைந்த வீரனிற்கு தலை கவிழ்ந்து செலுத்தப்படும் வணக்கம். சுடர் வணக்கம் - மாவீரரிற்காக சுடரேற்றி செலுத்தப்படும் வணக்கம் மலர் வணக்கம் - மாவீரருக்கு மலர்தூவி செலுத்தப்படும் வணக்கம் வீரவணக்கம் - வீரச்சாவடைந்த வீரனிற்கான இறுதி அஞ்சலியில் செலுத்தப்படும் வணக்கத்தினைக் குறிக்கும் சொல் .. (This is not equivalent to salute🤬) வளைவுகள் - மாவீரர் படங்கள்/ களமுனை படங்கள் தாங்கிய அலங்கார வளைவுகள் புலிவீரன் - விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் மாவீரர் - சமரில் மரணித்த புலிவீரன் நினைவுக்கல் - முகவரி அறிந்த மாவீரனது வித்துடல் இல்லா அ கிடைக்கா இடத்து உரியவர் குறிப்புகளோடு நினைவாய் எழுப்பப்படும் கல். அதே சமயத்தில் வித்துடல் ஒரு துயிலுமில்லத்திலும், அவருக்கான நினைவுக்கல் இன்னுமோர் துயிலுமில்லத்திலும், வைப்பது புலிகளின் இன்னுமொரு வழமையாகும். தென்தமிழீழ மாவீரர் பலரின் வித்துடல்கள் விசுவமடு மாவீரர் துயிலுமில்லத்திலும், முள்ளியவளை துயிலுமில்லத்திலும், விதைக்கப்பட்டிருந்தன. | புலன கிட்டிப்பு: நேரு குணரத்தினம் கல்லறை - 6 அடி நீளத்தில் இருக்கும் முகவரி அறிந்த மாவீரனது வித்துடல் கொண்ட கல்லால் கட்டப்பட்டு அழகுற வடிவமைக்கப்பட்டு உரியவர் குறிப்புகள் தாங்கிய உடையவர் உறைவிடம். மாவீரர் பீடம் - நினைவுக்கற்கள் மற்றும் கல்லறைகளை ஒருங்கே குறிக்கும் சொல் ஈகைச்சுடர் - பொதுமக்களால் ஏற்றப்படுவது பொதுச்சுடர் - தளவாய்களாலும் தவிபு தலைவராலும் ஏற்றப்படுவது நினைவுச்சுடர் - இறந்தோரை நினைத்து ஏற்றப்படும் சுடர். (கடலிலே வீரச்சாவடைந்தோருக்கு கடலில் ஏற்றப்படும் சுடரினை நினைவுச் சுடர் என்று கடற்கரை ஓர மக்கள் அழைப்பதுண்டு.) விதைகுழி - துயிலுமில்லத்தில் வித்துடல் விதைக்கப்படும் 6 அடி நீள குழி வித்துடல் - மாவீரனது பூதவுடல்/ சடலம் வித்து - விதைக்கப்படும் அ விதைக்கப்பட்ட வித்துடல் விதைத்தல் - வித்துடலை விதைத்தல் தியாக சீலம் :- https://www.uyirpu.com/?p=7211  
      1)கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம்
      இருந்தவிடம்: இது கொடிகாமம்-பருத்தித்துறை வீதியில் அமைந்திருந்தது. முகையவிழ்த்தது: ஏப்ரல் 7, 1991 முதல் வித்து: வீரவேங்கை மைக்கேல்
       
      1995 ஆம் ஆண்டு சிங்களத்தால் அழிக்கப்படும் வரை இருந்த ஒலிமுகம்:-

       
      2)எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம்
      முகையவிழ்த்தது: 1990 இடிக்கப்பட்டது: 1995 புனரமைக்கப்பட்டது: 2002 முதல் வித்தும் விதைக்கப்பட்டதும்: லெப்.செல்வம் சூன் 16, 1991 2002 வரையிலான மொத்த கல்லறைகள் - 290 நினைவுக்கற்கள் - 490 தியாகசீலம் - 24

      'அதன் சுற்றுச்சுவர்'
       
      3)கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம்
      இங்குதான் முதன் முதலில் மாவீரர் ஒருவர் விதைக்கப்பட்டார்.
      முகையவிழ்த்தது: சூலை 14, 1991 முதல் வித்து: கப்டன் சோலை மொத்த பரப்பளவு: 12 ஏக்கர் 2002 வரையிலான மொத்த கல்லறைகள் - 654 நினைவுக்கற்கள் - 1199

       
      4)முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம்
      முகையவிழ்த்தது: சூலை 28, 1991 முதல் வித்து: 2ஆம் லெப். சிகானு (ஆ.க.வெ இல்) மொத்த பரப்பளவு: 15 ஏக்கர் இருந்தவிடம்: கிளிநொச்சியில் இருந்து 51 கி.மீ இலும் மன்னாரில் இருந்து 70கி.மீ தொலைவிலும் உள்ளது. 2002 வரையிலான மொத்த கல்லறைகள் - 603 நினைவுக்கற்கள் - 348

       
      5)கண்டலடி மாவீரர் துயிலுமில்லம்
      முதல் வித்து: லெப்.பரமசிவம் இருந்தவிடம்: மட்டு-திருமலை வீதியில் வாகரைக்கும் கதிரவெளிக்கும் இடையில் 2002 வரையிலான மொத்த மாவீரர் பீடங்கள்: 279

      'ஒலிமுகம்'
       
      6)ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்
      முகையவிழ்த்தது: சூலை 18, 1998 முதல் வித்து: வீர. புரட்சிகா மொத்த பரப்பளவு: 10 ஏக்கர் 2002 வரையிலான மொத்த கல்லறைகள் - 533 நினைவுக்கற்கள் - 126

      'ஆலங்குளத்தில் பொதுச்சுடர் ஏற்றுமிடம்'

      'ஆலங்குளம் ஒலிமுகம்'
       
      7)தரவை மாவீரர் துயிலுமில்லம்
      முகையவிழ்த்தது: பெப்ரவரி 25, 1991 முதல் வித்து: லெப்.விகடன் (கண்டலடி-கட்டுமுறிவு நோக்கிய சிங்களத்தின் முன்னேற்றத்திற்கு எதிரான எறிகணை வீச்சில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்தனர். அவர்களில் முன்னவர் இவரே.) 2002 வரையிலான மொத்த மாவீரர் பீடங்கள்: 2500+


      'தரவையில் பொதுச்சுடர் ஏற்றுமிடம் | 180 பாகைக் காட்சி'

      'பாதையும் தரவை ஒலிமுகமும் '
       
      8)மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லம்

       
      9)தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம்
      முதல் வித்து: (நிலை அறியில்லை) சுதா 2002 வரையிலான மொத்த மாவீரர் பீடங்கள்: 487 கல்லறைகள் கட்டும் முன்:-

      கல்லறைகள் கட்டிய பின்:-

       
      10)ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம்
      முகையவிழ்த்தது: சனவரி 19, 1991 முதல் வித்து: லெப். நிக்ஸன் & லெப். லவன் மொத்த பரப்பளவு: 5 ஏக்கர் 2002 வரையிலான மொத்த கல்லறைகள் - 391 நினைவுக்கற்கள் - 385
       
      ஒலிமுகவாயில்:

       
      11)வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம்
      முதல் வித்து: வீர. வாசுகி

      12)மன்னார் ஆட்காட்டிவெளி துயிலுமில்லம்

       
      13)மன்னாரில் இருந்த ஏனைய இரு துயிலுமில்லங்களில் ஒன்று
      எதுவெனத் தெரியவில்லை!

       
      14)கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்
      2004 வரையிலான மொத்த கல்லறைகள் - 1,213 நினைவுக்கற்கள் - 755
      'இங்கு இரு வித தோற்றங் கொண்ட நினைவுக்கற்கள் இருந்தன.'

      'இங்கு இரு மூ தோற்றங் கொண்ட கல்லறைகள் இருந்தன.'
      கனகபுரம் ஒலிமுகவாயில்:

       
      15)முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம்
      2004 ஆம் ஆண்டில் இது தான் இரண்டாவது மிகப்பெரிய துயிலுமில்லமாகும்.
      2004 வரையிலான மொத்த கல்லறைகள் - 1,670 நினைவுக்கற்கள் -905
      'இங்கு இரு வித தோற்றங் கொண்ட கல்லறைகள் இருந்தன.'
       
      16)அளம்பில் மாவீரர் துயிலுமில்லம்

      'இங்கு இரு வித தோற்றங் கொண்ட கல்லறைகள் இருந்தன.'
       
      17) உதயபீடம் மாவீரர் துயிலுமில்லம்
      இங்கு நினைவுக்கற்கள் இல்லை. கல்லறைகள் மட்டுமே!
       

       
      18) புனிதபூமி மாவீரர் துயிலுமில்லம்
      இங்கு நினைவுக்கற்கள் இல்லை. கல்லறைகள் மட்டுமே!
       

       
      பொதுச்சுடர் மேடை:

       
       
      19)விசுவமடு மாவீரர் துயிலுமில்லம்

       
      ஏனைய  8 துயிலுமில்லங்கள் பற்றி என்னிடம் தகவல் இல்லை. ஆனால் மேற்குறிப்பிட்டவற்றைவிட பல்வேறு வடிவ கல்லறைகளின் படங்கள் இருப்பில் உள்ளது.
       
      இறுதிப் போர்க்காலத்தில் முல்லைத்தீவு மாவட்டதில் துயிலுமில்லங்களாக விளங்கிய பகுதிகள்: -->தேவிபுரம் 'ஆ' பகுதி குடியேற்ற திட்டம் (சனவரி 20 பிற்பாடில் இருந்து பெப்ரவரி இறுதி வரை)
      -->இரணப்பாலை பெருந்தோட்டம் (சனவரி 20 பிற்பாடில் இருந்து பெப்ரவரி இறுதி வரை)
      -->வலைஞர் மடம் தெற்கு களித்தரைப் பகுதி (பெப்ரவரி இறுதியில் இருந்து மார்ச் முதலாவது கிழமை வரை)
      -->இரட்டைவாய்க்காலையும் வலைஞர் மடத்தையும் பிரிக்கும் கிரவல் வீதிக்கு அண்மையில் உள்ள வெளிப்பகுதி (மார்ச் இரண்டாம் கிழமையில் இருந்து ஏப்ரல் 20 வரை)
      -->வெள்ளா முள்ளிவாய்க்கால் கப்பல் வீதிக்கு அண்மையில் உள்ள இடம்.(ஏப்ரல் 21- மே 12 வரை)
      -->மே 13,14,15 அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றாற்போல விதைக்கப்பட்டது.
      -->மே 16,17,18 விதைக்கப்படவில்லை; விடுபட்டன.
       
      இவ்வாறு இறுதிநேரத்தில் விதைக்கப்பட்டவை கீழ்க்கண்டவாறு தோற்றமளித்தன:
      சனவரி 20 பிற்பாடில் இருந்து மே 12 வரை

       
       
      வன்னியில் இருந்த மாவீரர் துயிலுமில்லங்களின் ஒலிமுகவாயில்:- இந்த முகப்பினை ஒலிமுகவாயில் என அழைப்பர். அதன் பொருள் புலி வாழும் இடத்தின் முகவாயில் என்பதாகும்.

       
      வட்டக்கச்சியில்(கிளி.) இருந்த 'மாவீரர் நினைவு மண்டபம்': வீடுகளில் வைக்க இடமில்லாதபோது, மாவீரர்களின் வித்துடல்கள் பொதுமக்களின் வீரவணக்க நிகழ்விற்காக வைக்கப்படும் இடம்.

       
      வளைவு:- இவை மாவீரர் வாரத்தின் போது தெருக்களில் அமைக்கப்படும், கூடுதலாக இயக்க கட்டடங்களிற்கு முன்னிருக்கும் சாலைகளில் அமைக்கப்பட்டிருக்கும். 

       
      கல்லறைகள் கட்டப்படாத மாவீரர் பீடத்தின் தோற்றம்

       
      மாவீரர் துயிலுமில்லத்திற்கு எடுத்துச் செல்லப்படும் ஒரு வீரனின் வித்துடல் பேழையானது அங்குள்ள மேடையில்(இதற்கு ஒரு விதப்பான பெயர் உண்டு. மறந்துவிட்டேன்) வைக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்படும். இதுவொரு தமிழீழ பண்பாட்டுச் சடங்கு ஆகும்.
       

       
      துயிலுமில்லம் ஒன்றின் முழுப் படம்:-
      [கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் (படம் எடுக்கப்படும்போது கட்டுமானம் நடைபெற்றுக் கொண்டிருந்தது)]
      முழுப் படம்:
       
      நுழைவுவாயில்:-
      சுடர் ஏற்றுமிடமும் சூழலும்:
       
      நுழைவு வாயிலில் இருந்து வரும் பாதை: வேறொரு துயிலுமில்லம்

       
      பொதுச்சுடர் நோக்கிய பாதை: வேறொரு துயிலுமில்லம்

       
      கிளி. கனகபுரத்தில் பொதுச்சுடர் ஏற்றுமிடம்:-

       
      இச்சிலையானது வட தமிழீழத்தில் இருந்த ஒவ்வொரு மாவீரர் துயிலுமில்லங்களிலும் இருக்கும்:-

       
      கடலிலே வீரச்சாவடைந்தோரிற்காக நினைவு வணக்கம் செய்து கடலினுள் வைத்து பொதுச்சுடர் ஏற்றி கடலினுள் விடப்படும் 'பொதுச்சுடர் மிதவை'.
      (2003 வரை (Till Oct. 31, 2002) வீரச்சாவடைந்த மொத்த கடற்புலி மாவீரர்கள் 1066)

       
      உசாத்துணை:
      புலிகளால் வெளியிடப்பட்ட ஒரு நிகழ்படம்(video) https://www.tamilwin.com/articles/01/199494http://eelamhouse.com/wp-content/uploads/2010/08/MaaveerarNaalKaiyedu.pdfhttps://www.vikatan.com/government-and-politics/politics/108549-tamil-eelam-martyrs-day-observance-and-the-history-behind-it
      https://www.tamilwin.com/articles/01/199494
      https://www.vikatan.com/government-and-politics/politics/108549-tamil-eelam-martyrs-day-observance-and-the-history-behind-it
      படிமப்புரவு
      vimeo seatigers 85% screen shot only  
      எழுத்து & வெளியீடு
      நன்னிச் சோழன்
    • By நன்னிச் சோழன்
      'நம் வரலாற்றை
      நாமே எழுதுவோம்'
      ------------------------
      எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள். இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!  
      என்னிடம் இருக்கின்ற தமிழீழத்தின் நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன்.. விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள்.
       
       
       
      "இதுவரை ஈழத் 
      தமிழர்கள் எவரும் 
      சிரித்தது கிடையாது!
      நாம் அழுதிடும் பொழுது
      பெருகிய கண்ணீர்
      அளவுகள் கிடையாது!
      இனிமேல் அழுதிட விழியில்லை - படும்
      இழிவுகள் சொல்லிட மொழியில்லை!
      தனியே பிரிந்திட விடவில்லை - அட
      தமிழருக் கானதைத் தரவில்லை!"
                                                                                 --> "விடுதலை எவரும் தருவதுமில்லை"  பாடலிலிருந்து...
       
       
       
      யாழ்:-

       

       
       
       
       
       
       இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
       
    • By நன்னிச் சோழன்
      'நம் வரலாற்றை
      நாமே எழுதுவோம்'
      ------------------------
      எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள். இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!  
      என்னிடம் இருக்கின்ற துயிலுமில்ல நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன்.. விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள்.
       
       
      "செத்தவர் என்றுமை செப்புவமோ - உமை
      சென்மத்தில் நினைந்திட தப்புவமோ🙏
      குத்துவிளக்கதும் நீரல்லாவோ - நாம்
      கும்பிடும் தெய்வங்கள்🔱 நீரல்லவோ"
      -->வித்தொன்று விழுந்தாலே பாடலிலிருந்து
       
       

       
       
      { ஒரு படிமத்தில் உள்ள கல்லறையினையோ அ நினைவுக்கல்லினையோ அஃது எந்த துயிலுமில்லத்திற்கானது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பதெனில், அதில் உள்ள மாவீரர் பெயரினை எடுத்து இங்கு - http://veeravengaikal.com/ - போட்டால் இதில் இம்மாவீரர் வித்துடல் எங்கு விதைக்கப்பட்டிருந்தது என்ற தகவல் கிடைக்கும். அதன் மூலம் அப்படிமத்தில் உள்ளது எந்த துயிலுமில்லத்திற்கான கல்லறை எ நினைவுக்கல் என்பதைக் கண்டுபிடிக்கலாம். ஒரே பெயரில் பல மாவீரர்கள் இருக்கலாம். எனவே கவனம் கூட வேண்டும். ஆனால் நேரமின்மையால் நன்னிச்சோழன் ஆகிய நான் அவ்வாறு செய்யவில்லை. தேவைப்படுவோர் தேடிக்கொள்ளவும். நேரம் கிடைக்கும்போது படிப்படியாக செய்து விடுகிறேன்.}
       
       
      துயிலுமில்லங்களைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னர், அவற்றைப் பற்றி நானொரு ஆவணம் எழுதியுள்ளேன், வாசித்துப்பாருங்கள்:-
       
       
       
       
      கனடாவில் உள்ள மூத்த அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்தினம் அவர்கள் 2005 மாவீரர் நாளுக்கு வெளியிட்ட கட்டுரை ஒன்றிலிருந்து,
       
      விடுதலைப்போரின் ஆரம்பகாலகட்டத்தில், களப்பலியான புலிவீரர்களின் உடல்கள் புதைத்தல், எரித்தல் என்ற இரு வகையாகவும் சிறப்பிக்கப்பட்டன.
      பெற்றாரின் மதநம்பிக்கை மற்றும் விருப்பத்திற்கு அமைவாகவும், போராளிகளின் வித்துடல்கள் எரிக்கப்பட்டும், புதைக்கப்பட்டும் வந்தன. பொது மயானங்களில் அப்போது போராளிகளின் வித்துடல்கள் தகனம் செய்யப்பட்டன. அல்லது நல்லடக்கம் செய்யப்பட்டன. போராட்ட காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வித்துடல்களை புதைக்கவேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டது. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் போரிட்ட காலத்தில், தேசியத் தலைவரும் அவருடைய புலிப்படையினரும் மணலாறுக் காடுகளில் நிலையெடுத்திருந்தனர். களப்பலியான வீரர்களை தகனம் செய்தால், இந்திய இராணுவத்தினர் புகை எழும் திசையையும், புலிகளின் மறைவிடங்களையும் கண்டறிந்து விடுவார்கள், என்ற காரணத்திற்காக ஆங்காங்கே காடுகள் தோறும் வித்துடல்கள் புதைக்கப்பட்டன.
      இப்போது மணலாற்றில் புதைக்கப்பட்ட புலிவீரர்களின் புனித எச்சங்கள், ஒரே இடத்தில் அதாவது மணலாறு துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக மீண்டும் விதைக்கப்பட்டன. இத்துயிலும் இல்லத்திற்கு ஒரு தனிப்பட்ட வீரவரலாறு உண்டு என்பது வெளிப்படை.
      போர் நடந்த இடங்களில் கைவிடப்பட்ட, அல்லது புதைக்கப்பட்ட வீரர்களின் எச்சங்களை, சாதகமான நிலை தோன்றிய பின்பு மீட்டெடுத்து, எடுத்துச்செல்லும் பாரம்பரியம் உலகில் உண்டு. துயிலுமில்லம் என்ற சொற்றொடரை தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக்கியுள்ளனர்.
      புலிவீரர்களின் வித்துடல்கள் ஆண், பெண் வித்தியாசமின்றி இங்கு விதைக்கப்படுகின்றன. மாவீரர் பற்றிய புலிகளின் எண்ணக்கருவை இச்சொற்றொடர் உணர்த்துகிறது.
      முதலாது துயிலும் இல்லம், கோப்பாயில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் கோப்பாய் துயிலுமில்ல மண்ணில், போராளிகளின் வித்துடல்கள் புதைக்கப்பட்டதோடு, எரிக்கப்பட்டும் வந்தன.
      1991இல் வித்துடல்கள் எரிக்கப்டமாட்டாது, புதைக்கப்படும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. இதுபற்றி 1991ஆம் ஆண்டின் ஐப்பசி – கார்த்திகை விடுதலைப்புலிகள் ஏடு, மாவீரர்களைத் தகனம் செய்வதற்கென்று அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில், இப்போது மாவீரர்கள் புதைக்கப்பட்டு, இங்கே கல்லறைகள் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
      இது என்றென்றும் தியாகத்தின் சின்னமாக, எமது மண்ணில் நிலைபெறும். என்று கூறுகிறது. இம்முடிவானது, போராளிகளுள் மிகப் பெரும்பாலானோரின் விருப்பத்திற்கிணங்கவே என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. வித்துடல்கள் புதைக்கப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டபின், முதன்முதலான கப்டன் சோலையின் வித்துடல் கோப்பாய் துயிலும் இல்லத்தில், 14 ஜுலை 1991 ஆம் நாள் விதைக்கப்பட்டுள்ளது.
      வித்துடல் கிடைக்காமல் போனால், நினைவுக்கற்கள் நாட்டும் வழமை, புலிகளாகிய எம்மிடம் உண்டு. அதே சமயத்தில் வித்துடல் ஒரு துயிலும் இல்லத்திலும், அவருக்கான நினைவுக்கல் இன்னுமோர் துயிலும் இல்லத்திலும், வைப்பது எமது இன்னுமொரு வழமையாகும்.
      தென்தமிழீழ மாவீரர் பலரின் வித்துடல்கள் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்திலும், முள்ளியவளை துயிலும் இல்லத்திலும், விதைக்கப்பட்டுள்ளன.
      அவர்களுடைய நினைவுக்கற்கள் தென் தமிழீழ துயிலும் இல்லங்களில் நிறுவப்பட்டுள்ளன. மாவீரர்களான லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது வித்துடல்கள் பாரிஸ் பொது மயானத்தில் விதைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான நினைவுக்கற்கள் விசுவமடு துயிலும் இல்லத்தில் நிறுவப்பட்டன.
      எமது துயிலும் இல்லங்களின் எண்ணிக்கை 25. மாவீரரின் கல்லறை மற்றும் நினைவுக்கல் ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கை 20000. (2005 மாவீரர் நாள் விபரம். இதன் பின்னர் ஏற்பட்ட இறுதிப் போர்க்காலத்தில் மேலும் துயிலும் இல்லங்கள் தற்காலிகமாக அமைந்ததும் எண்ணிக்கைகள் அதிகரித்ததையும் கவனத்தில் கொள்ளவும்)
      அடுத்து எமது நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.
      களப்பலியான மாவீரனின் வித்துடல் கிடைக்கப்பெற்றதும், அது ஓரிடத்திற்கு கொண்டு வரப்படுகிறது. பதனிடப்பட்ட அந்த உடலுக்கு சீருடை அணியப்படுகிறது. அதே நேரத்தில் அந்த மாவீரனுடைய விபரங்கள் உறுதிசெய்யப்பட்டு, அவனுக்கான பதவி நிலை வழங்கப்படுகின்றது. பின்பு வித்துடல் பேழையில் வைக்கப்படுகிறது. மாவீரர் பெயரும் பதவிநிலையும் பேழையில் பொறிக்கப்படுகின்றன. மாவட்ட அரசியல்துறையூடாக வித்துடல் அடங்கிய பேழை இராணுவ மரியாமையுடன், பெற்றார் அல்லது உறவினர் வீட்டுற்கு எடுத்துவரப்படுகிறது. வீட்டு வணக்கம் முடிந்தபின், வீரவணக்க நிகழ்விற்காக வித்துடல் ஒரு பொது மண்டபம் அல்லது மாவீரர் மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அதன்பின் வீரவணக்கக்கூட்டம் மண்டபத்தில் நடாத்தப்படுகிறது. முதற்கண் பொதுச்சுடர் ஏற்றப்படுகிறது. அடுத்ததாக ஈகைச்சுடர் பின்பு வித்துடலுக்கு மலர்மாலை அணிவிக்கப்படுகிறது. பெற்றார் மனைவி கணவன் பிள்ளைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. நினைவுக்கல் நாட்டும் நிகழ்விற்கும், இதுபோன்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. நினைவுக்கல் நிகழ்வில் மாவீரனின் படம் துயிலும் இல்லம் எடுத்துச் செல்லப்பட்டபின் உரித்தாளரிடம் கொடுக்கப்படுகிறது. வித்துடலுக்கு மலர்மாலை, மலர்வணக்கம் செலுத்தப்பட்டபின், அகவணக்கம் செலுத்தப்படுகிறது. நினைவுரைகள் அடுத்ததாக நிகழ்த்தப்படுகின்றன. இறுதியாக இராணுவ மரியாதையுடன் வித்துடல் துயிலும் இல்லம் எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு மலர்வணக்கம் செய்யப்படுகிறது. அதன்பின் விசேட பீடத்தில் வைக்கப்பட்ட பேழையும், வித்துடலும் மேடைக்கு கொண்டு செல்லப்பட்டு அதில் வைக்கப்படுகிறது. அப்போது உறுதிமொழி வாசிக்கப்படுகிறது. உறுதிமொழி வாசிக்கப்பட்ட பின், இராணுவ மரியாதை வேட்டு தீர்க்கப்படுகிறது. தாயகக்கனவுப் பாடல் ஒலித்தபின், அனைவரும் அகவணக்கம் செலுத்துகின்றனர். வித்துடல் புனித விதைகுழிக்கு இராணுவ மரியாதையுடன் எடுத்துச் செல்லப்ட்டு விதைக்கப்படுகிறது. அனைவரும் கைகளால் மண்ணெடுத்து, விதைகுழியில் போடுகின்றனர். நடுகல்லானால் மலர் வணக்கம் செய்கின்றனர்.  
      ஈழத்தமிழினத்தால், மாவீரர் நாளாக் கொண்டாடப்படும் நவம்பர் 27 தமிழீழ விடுதலைப்போரில் முதல் களச்சாவடைந்த, எமது இயக்க வேங்கை லெப். சங்கர் (சத்தியநாதன்) நினைவாக அமைகிறது. 1989 ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் நாட்தொட்டு, நாம் ஆண்டு தோறும் மாவீரர் நாளை கடைப்பிடித்து வருகின்றோம். முதலாவது மாவீரனின் வீரச்சாவு தான், அனைத்து மாவீரர்களின் நாளாக கொண்டாடப்படுவதால், அதற்கு மிகப்பெரிய முக்கியத்துவம் உண்டு. தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வு என்ற சிறப்பு மாவீரர் நாளுக்கு உண்டு. 1990ஆம் ஆண்டு தொடக்கம் 1994ஆம் ஆண்டு வரை, நவம்பர் 21 தொட்டு 27 வரையிலான ஒருவாரம் மாவீரர் வாரமாக சிறப்பிக்கப்பட்டது. 1995ஆம் ஆண்டிலிருந்து, நவம்பர் 25, 26, 27 ஆம் நாட்கள் மாவீரர் எழுச்சி நாட்களாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. 1994ஆம் ஆண்டு தொட்டு, மாவீரர் நாள் நள்ளிரவில் இருந்து, மாலை 6.05 மணிக்கு மாற்றப்பட்டது. முதல் மாவீரன் லெப். சங்கர் வீரச்சாவடைந்த நேரமும் அதுவாகும். இதற்கு முன் தலைவரின் மாவீரர் நாள் உரை அமையும். மாவீரர் உரை முடிந்ததும் 6.05 மணிக்கு தமிழீழம் எங்கணும் அனைத்துத் தேவாலய மணிகளும் ஒரு நிமிடம் மணியெழுப்பும். அதன் பின் அகவணக்கம் செலுத்தப்படும். மாவீரர் துயிலும் இல்லங்கள் யாவற்றிலும் ஒவ்வொரு கல்லறைக்கும் நடுகல்லுக்கும் முன்னால் பெற்றார் உரித்தாளர்கள் போன்றோரால் சுடர் ஏற்றப்படும். துயிலும் இல்லத்தின் நடுமேடையிலும் பிரதான ஈகைச்சுடர் ஏற்றப்படும். மாவீரர் நாளின் போது அந்த நாளுக்கென்று பாடப்பட்ட மாவீரர் பாடல் துயிலும் இல்லங்களில் ஒலிக்கப்படும் - மொழியாகி எங்கள் மூச்சாகி - முதலாவதாக இது 1991ஆம் ஆண்டு கோப்பாய் துயிலும் இல்லத்தில் ஒலித்தது. இதை எழுதியவர் கவிஞர் புதுவை இரத்தினதுரை.  
       
       
       இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
       
       
  • Topics

  • Posts

    • அடப்பாவி இந்தலூசையா ஆளுனராக்கப்போறீங்கள்....? வேற ஆள் கிடைக்கலயாடா உங்களுக்கு  கூட்டத்தொடரில் கக்காக்கு இருந்திவிட்டு வருவதற்கு தான் இது லாயக்கு   
    • கிழக்கு மாகாண ஆளுநராக முபாரக் மௌலவியை நியமிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநராக ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீதை நியமிக்குமாறு கட்சியின் பிரதித் தலைவர் கா.மு. மழ்ஹர்தீன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.     கிழக்கு மாகாண ஆளுநராக மறுபடியும்  முஸ்லிம் அரசியல்வாதி யொருவர் நியமிக்கப்பட உள்ளதாக கிழக்கு வாழ் மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகின்ற நிலையில் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் அவர்களை கிழக்கு மாகாண ஆளுநராக நியமனம் செய்யுமாறு குறித்த கட்சியின் பிரதித்தலைவர் கா.மு. மழ்ஹர்தீன் அவர்களால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றின் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   அவர் குறித்த கடிதத்தில்  தெரிவித்துள்ளதாவது;  2005ஆம் ஆண்டு முதல் ராஜபக்ச அரசோடு தொடர்ந்தும் இணைந்திருக்கும் ஒரே முஸ்லிம் கட்சி முபாரக் அப்துல் மஜீத் அவர்களின் தலைமையிலான கட்சி என்றும் அனைத்து சவால்களின் பொழுதும் அரசுக்கு உறுதுணையாக அவர் செயற்பட்டவர் என்ற அடிப்படையிலும் கிழக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு மிகவும் தகுதி தகுதியானவர் என்பதால் அவரை அப்பதவிக்கு நியமிக்குமாறு கா.மு. மழ்ஹர்தீன் தெரிவித்துள்ளார்.   எனினும் கடந்த ஆட்சியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் கிழக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டு இனவாத கெடுபிடிகளால் பதவியை ராஜினாமா செய்த கலாநிதி எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் பெயரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பஷீர் சேகுதாவுத் அவர்களின் பெயரும் இப்பதவிக்கு ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டுள்ளதுதாக சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது https://www.madawalaenews.com/2021/10/mub.html
    • உதறல்-சப்னாஸ் ஹாசிம்   ஓவியம் : எஸ்.நளீம் நீண்ட நாட்களுக்குப் பிறகு அச்சமற்ற மனித நடமாட்டத்தை சந்தைக்கூச்சலை வாகன நெரிசலை, பாடசாலை சிறுவர்களை அவர்கள்  கண்டிருந்தனர். அநுராதபுரத்தில் ஆங்காங்கே இருந்த புத்தர் சிலைகளைச் சுற்றியிருந்த வெண் அலரிப்பூக்கள் பகலிலும் மணத்துக்கிடந்தன. சில இடங்களில் பாதை தடுப்புகள் போடப்பட்டு வாகனங்கள் கண்காணிக்கப்பட்டன. நீண்ட நாள் பசி, வயிறு ஒட்டி அடியிலிருந்து பிழம்பாய் எரிவது மூக்கு நாசிவரை சுட்டது. வேறு வழியின்றி ஒரு முஸ்லிம் ஹோட்டலை பார்த்து உள்ளே முதலாளியிடம் ஒரு சிலர் நிலைமையைப் புரியவைக்க அவர்களில் ஒருவனுக்கு அவசரமாய் அடைத்துக்கொண்டு வந்திருந்ததில் ஒதுங்கப் போனான். கழிவறையில் மஞ்சள் சுவர் பூச்சு போலக் கசந்து ஒழுகியதும் அந்த இடம் எரியத் துவங்கியது. ஒரு வாளி நிறையத் தண்ணீர் எடுத்துக் குறியைத்தணிய விட்டான். “முதல்ல போய் சாப்பிடுங்கோ புள்ளையாள்..” . முதலாளி பேசுவதிலே ஆள் காத்தான்குடியென்று தெரிந்திருந்தது. பேச்சிலேயே அக்கறையும் வாஞ்சையும் கலந்திருந்தது. “புள்ளையள் யாழ்ப்பாணத்தில இருந்து தப்பி வாறாக. கேக்கிறத்த குடுமகன்..” என வேலை பார்ப்பவர்களிடம் அவரது ஏவல் சத்தமாகவிருந்தது. பெரிய உள் கடையில் ஒரு பெரிய மேசையைச்சுற்றி பத்து கதிரைகளும் புத்தகப்பைகளும் குந்தியிருந்தன. இடைக்கிடை ஒருவன் மட்டும் ஒருவாளித்தண்ணீரோடு ஒதுங்கப் போனான். தாகம் தீரும் பத்து முழிகள் வெளுத்தன. யுத்தம் மீள மூண்டதில் புலிகள் கிழக்கிலிருந்த பொலிஸ் நிலையங்களை தாக்கி கைப்பற்றியிருந்தனர். அதனால் மட்டக்களப்பு கல்முனை வழியாக அக்கறைப்பற்றுக்கு செல்வதில் சிரமமும் அச்சமுமிருந்தது. கடை முதலாளியின் யோசனைப்படி பத்து பேரும் கண்டிக்கு செல்வதென முடிவாகியது. அன்றிரவு வேனில் கடிகார டிக் டிக் சத்தமும் ஆஸ்த்துமா இளைச்சலும் பல ரகமான குறட்டை வீசலும் நிறைந்திருந்தன. பலநாளாக கண்களில் தேங்கிய தூக்கமென்பதால் பைகளுக்கு மேலே கண்டபடி அசந்திருந்தனர்.அவர்கள் கடந்துவந்த கடுமையான நாட்களை, நினைத்தாலே தசைகளுக்குள் சுள்ளெனும் உதறலை அசைபோடாமலில்லை. 000000000000000000000000000 “இந்த கண்றாவி வீடிய விட்டுட்டு எப்படா சிகரெட்டுக்கு மாறுற..”. “இருக்கிற பிரச்சினைக்குள்ள ஒனக்கு சிகரெட் தேவப்படுது எலா…”. ரயில் தண்டாவாளக்கேடர்களை அறுத்துக் குறுக்காகவும் நீளப்பாட்டிலும் வைத்து மண்ணைத் தோண்டிய மடுவிலிருந்து மூட்டை மூட்டையாகக் கட்டி குறுக்காகச் சுவரைப் போல எழுப்பித் துப்பாக்கி முனை மட்டும் வெளியே நீட்டத் தக்க இடைவெளியோடு அந்தப் பங்கரை பதுங்குவதெற்கென இயக்கத்தினர் கட்டுவதை வேடிக்கை பார்த்தபடி நின்றவர்களுக்குக் கொண்டு வந்த பீடி தீர்ந்து போனது சலிப்படித்தது. அடிவானைத்தொட சூரியன் யாழ்கோட்டையின் சுவர்களுக்குள் வழக்கமான பங்கருக்குள் பதுங்கிக்கொள்ள ஆங்காங்கே மின் குமிழ்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கருந்தவளையின் கண்களைப்போலப் பளிச்சென்றன. “அடேய். புதினம் பாக்குறியள் என்ன..”. பங்கருக்குள்ளிருந்து குரலும் கண்களும் வெளியே நீண்டன. “இல்ல அண்ணா, நாங்க படிக்க வந்த, சும்மா சுத்திப்பாப்பம் எண்டு…” சொன்ன இழுவையான பதிலில் அமிழ்ந்து மூடியிருந்த குரலை அவர்களில் ஒருவன் எச்சிலை திரட்டி விழுங்கி சரிப்படுத்தியபடியிருந்தான். “எந்த ஊரடா நீங்கள்.?..”. “அக்கரைப்பற்று ண்ணா…” “முஸ்லிமே…? “ கேள்விகளைச் சுருக்கமாக முடித்துவிட்டு பீடிக்குறைகளை சாஷ்டாங்கமான முகமனைப்போலக் காலுக்கு கீழே நசுக்கியவுடன் தங்களது அறையை நோக்கி வேகமாக அவர்களிருவரும் நடக்கத்துவங்கியதில் யாழ்ப்பாணக் கோட்டையைச் சுற்றிலும் புலிகள் பல பங்கருகளை கட்டுகிற சப்தங்கள் தெளிவாகக்கேட்டன. முந்தைய இரவில் பூத்திருந்த வெண் அலரி வாசம் வழியெங்கும் கும்மென்று அடைத்திருந்தது. ஆங்காங்கே ஆயுதங்களோடு ஆட்கள் சுதந்திரமாகச் சுத்தி திரிவதை கோட்டை மேலிருந்த இராணுவத்தினரும் பார்த்தபடியிருந்தனர். தொன்னூறுகளில் இலங்கை ஜனாதிபதியாகவிருந்த ரணசிங்க பிரேமதாசா புலிகளோடு செய்திருந்த யுத்த நிறுத்தக் காலத்தில் புலிகள் பல அரண்-சுவர்களையும் பதுங்கு குழிகளையும் அமைக்கத்துவங்கியிருந்தனர். இது தெரிந்திருந்தும் இராணுவத்தரப்பு தங்கள் வீரர்களை அமைதியாக இருக்கும் படியே கட்டளையிட்டிருந்தது. பேச்சுவார்த்தை பிற்காலகட்டத்தில் இலங்கை பாதுகாப்புத்தரப்பு ஆயுதங்களைத் தவிர்க்கச்சொன்னதில் புலிகள் அதிருப்தியடைந்திருந்தனர். இந்தக்காலத்தில் தான் கிழக்கிலிருந்து நிறைய மாணவர்கள் யாழ்நகருக்கு கல்விகற்க வந்திருந்தனர். அறையை அடைந்ததும் வெளியே இருளைக்கவிழ்க்க போராடும் மஞ்சள் விளக்கை அணைத்துக் கொண்டனர். அவர்கள் தங்கியிருந்த அறைக்கு அடுத்தாற்போல் தான் உரிமையாளரும் குடியிருந்தார். சாப்பாடு தங்குமிடத்தோடு சேர்த்து மாதவாடகை உரிய நாளில் வங்கிக்கணக்கிற்கு வந்துவிடுமென்பதால் அவரும் தொந்தரவு தருவதில்லை. அவர் பிள்ளைகள் அறைக்குள் அடிக்கடி இவர்களோடு விளையாட வருவது அவருக்கு அவ்வளவு பிடிப்பாக இல்லை. வெளியே சண்டை மூளும் நாட்களில் குண்டுகளுக்குப் பயந்து பதுங்கும் குழிகள் வேறு வேறாக அமைக்கப்பட்டிருந்தன. வேறான வாயிலோடு கொல்லைப்புறத்தை பிரிக்கும் பெரிய சுவரில் இருந்த ஜன்னல் மட்டுமே தொடர்பாடலுக்கென்றிருந்தது. யாழில் ஒரே கிணற்றுக்காக ஒரே கோயிலுக்காக ஒரே தேநீர்க்கடைக்காகப் போராடியது போல ஒரே பங்கருக்காகவெனப் பஞ்சமர் போராட்டங்கள் வீதிக்கு இறங்கியிருக்க முடியாது தான். அன்றிரவே மீண்டும் போர் துவங்கியது. சரமாரியாகக் குண்டுகள் அதிர தீட்டால் பிரிந்திருந்த பங்கருகளில் ஒரே மரணபீதி ஒரே வியர்வையென அடைத்திருந்தது. அவர்களிருவரும் எப்படியாவது ஊருக்குச் செல்வதென முடிவெடுத்து வழக்கமாகச் சாப்பிடப்போகும் முஸ்லிம் கடை முதலாளியிடம் பேசிப் பார்த்தனர். அந்தக் கடைமுதலாளிக்கு புலிகளிடத்தில் செல்வாக்கிருந்தது. புலிகளின் தளபதியொருவர் மூலமாக வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்து தந்திருந்ததில் அவர்களோடு சேர்த்து மொத்தம் பத்து மாணவர்கள் ஏறியிருந்தனர். உண்மையில் அவர்களில் நால்வர் இலங்கை பொலிஸ் பிரிவில் பணியாற்றிய முஸ்லிம்கள். கடைமுதலாளியினால் ஏற்கனவே திட்டமிட்டபடி அவர்கள் தங்கள் சீருடைகளை புதைத்து விட்டு இவர்களோடு மாணவர்களாகப் புத்தகங்களை பகிர்ந்து பிரித்து வாங்கியபடி பயணத்தில் சேர்ந்திருந்தனர். வேனில் நன்கு தெரிந்தவர்கள் போலத் தங்களைக்காட்டிக்கொள்வது அவ்வளவு கடினமாக இருக்கவில்லை. மாற்றுவீதிகளின் வழியே வேன் மத்திம வேகத்தில் செல்ல முன் விளக்குகளை மங்கலாய்க்கியிருந்தார் ட்ரைவர். பத்துக்கனவுகளெல்லாம் இல்லை; உயிர் வாழும் பிரயாசைகள் மட்டும் ஜன்னலிலிருந்து வெளியே தொங்கிக்கொண்டிருந்தன. இயக்கச்சியிலிருந்து ஆனையிறவுப்பாதைக்கு வேன் போகாமல் கோவில்வயல் வைரவர் கோவில்வரைக்கும் வந்து விட்டிருந்தார்கள். அங்கிருந்து கால்நடையாக ஆனையிறவுக்கு வர விடிந்திருந்தது. எதிரில் இருந்த இராணுவ முகாமில் சோதனைக்காக நின்றிருந்தனர். முன்னால் நீண்ட வரிசை. வரிசையிலிருந்து யாரோ ஒருவர் அடையாளம் காட்டுபவர்களை அடித்து இழுத்து சென்ற சிப்பாய்களின் பூட்ஸ் சத்தம் அச்சுறுத்தியது. தாகம் நீண்டு நாக்கிலிருந்து அடித்தொண்டை வரை வறண்டு வெடித்திருந்தது. அவர்களில் ஒருவன் சிங்களம் சரளமாகப் பேசத்தெரிந்தவன் என்பதால் புத்தகப்பைகளை காட்டி நிலைமையை விளக்கிப்பேச பைகளை ஒவ்வொன்றாகச் சோதனையிட்டனர். ஒவ்வொரு பையிலும் புத்தகங்களும் கழுவாத ஆடைகளும் சுருட்டிக்கிடந்தன. ஒவ்வொரு பையாகச் சோதனைக்கு நீட்டிவிட்டு வரிசையாகக் காத்திருந்தனர். திடீரென இருவரின் பின் முழங்காலில் உதை விழ முட்டி அடிபடக் கீழே சரிய துவக்குகள் லோட் ஆகின. ஒரு பைக்குள் இருந்து டிக் டிக் என்ற சத்தம் வந்ததும் சுதாகரித்த இராணுவ சிப்பாய்களுடன் இன்னும் சிலரும் வந்து சேர கவனமாக அந்த பையைத் திறந்து பார்த்தனர். அவர்களை விடவும் அந்தக் குழுவிலிருந்த மாணவர்களுக்கே திடுமென்றிருந்தது. தெரியாத பொலிஸில் இருந்த சிலரோடு சேர்ந்து தாங்களும் இரையாகிவிடுவோமென்ற அச்சம் மூள வியர்த்த கழுத்துகளும் பொத்தான் திறந்த நெஞ்சுப் பகுதிகளும் அதிகாலை வெயிலில் பளபளத்தன. உள்ளே இருந்த மேசைக்கடிகாரத்தை வெளியே எடுத்துத் துருவிச் சோதனை செய்தபின்னர் அவர்கள் பத்துப் பேரையும் செல்ல அனுமதித்தனர். 000000000000000000000000000 காடுகள் வழியாகக் கவனமாக ஒரு ஆள் முன்னே செல்லத் தனித்தனியாக ஒரு எறும்பு நிரையைப் போல மனிதர்களும் புத்தகவடுக்குகளும் மேசை கடிகார டிக் டிக் சத்தமும் விரைந்து கொண்டிருந்ததில் புதிதாக இழுத்து எறியும் மூச்சு சப்தமும் சேர்ந்திருந்தது. அதில் ஒருவனுக்கிருந்த ஆஸ்த்துமா இளைச்சல் மற்றவர்களுக்குப் புத்தகப்பைக்கு மேலே ஒரு சுமையை ஏற்றியது போலிருந்தது. மூன்று நாட்கள் மாறி மாறிப் பல புலிகளின் காவலரண்களுக்கு நடக்கவேண்டியிருந்தது. அதே சோதனைகளும் அதே கேள்விகளும் திரும்பத் திரும்ப வந்தன. “முஸ்லிமோ..” . “படிக்க வந்த நீங்களோ..”. “ஓமந்தை வரப் போகலாமப்பன்…”. புலிகளின் காவலரண்களில் தங்க கிடைத்த எல்லா நாட்களும் அவர்களுக்குச் சோதனையாயிருந்தன. செட்டிக்குளம் காவலரணில் அவர்களுக்குத் தங்குவதற்கென மரங்களடர்ந்த காட்டில் அருகருகேயான நான்கு மரங்களைச் சுற்றி வேயப்பட்ட புடவையினுள் அவர்கள் தங்கவைக்கப்பட்டனர். பல இடங்களில் தொடரும் சண்டைகளில் இடம்பெயர்ந்த குடும்பங்களும் தங்களுக்கு போதிய அளவு பெரிய சதுரப்புடவைச்சுவரினுள் தங்கியிருந்தனர். குழந்தைகளுக்காகப் புகைந்திருந்த அடுப்புக்கருகலும் துண்டிக்கப்பட்ட உடலங்கங்களிலிருந்து வரும் அழுகைச்செருமலும் பத்து புத்தக மூட்டைகளை கொளுத்துவதுபோலவிருந்தன. வயோதிபர்கள், பெண்கள், குழந்தைகள் ஊனமுற்றவர்களோடு வரிசையில் நின்று சாப்பாட்டு பொட்டலங்களை வாங்கக்கூச்சமாக இருந்தது. இப்படித்தான் ஊரிலும் ஆயுதக் குழுக்களைத் தாக்கும் வான் ஹெலிகாப்டர்களுக்குப் பயந்து சிதறிய படைகளின் ஆயுதங்களைப் பொறுக்கி கொல்லைப்புறங்களில் புதைத்தபோதும் யார் பணத்தை யார் புதைப்பதென்று கூச்சமாயிருந்திருக்கும். திரும்பவும் விடிய முன்னரைப் போல வேறொரு ஆள் ஆயுதத்தோடு முன்னே செல்ல அதே எறும்புவரிசை கால்கள் விறைத்தபடி முன்னேறின. புதிய ஆள் சாரத்தை தூக்கி கட்டியிருந்தான். அவன் கெண்டைச்சதையில் ஒரு துண்டு இருக்கவில்லை. அவன் கால்களை இழுத்து இழுத்து நடந்தாலும் இதுவரை முன்னே வழித்துணையாக வந்தவர்களில் அவனே வேகமாக நடந்தான். பனை வடலிகளும் வேப்பம் பற்றைகளும் கள்ளிச்செடிகளும் குளக்கரைகளும் கண்ணிவெடி புதைக்கப்பட்ட முட்புதர்கள் மண்டிய நீரேரிகளுமென அவர்கள் நிற்காமல் கடக்கவேண்டியிருந்தது. இரண்டு நாட்கள் நீண்ட பயணத்தில் கால்கள் நடுங்கி அந்த உதறல் தலை வரை எழும்பியிருந்தது. இன்னும் சில மைல்களில் இராணுவ முகாம் வந்துவிடுமென்பதால் அந்த ஆளிடம் அவர்கள் விடைபெறவேண்டியிருந்தது. “நாங்கள் தான் சண்டையெண்டு அழியிறம். நீங்களாவது படியுங்கோடா…”. திரும்பிப்பார்க்காத அந்த இழுவைக்கால்கள் துப்பாக்கியோடு சாரத்தை உயர்த்திய ஆளை மறைத்துவிடும் படி விரைவாக நடந்திருந்தன. அங்கிருந்து நடந்து வந்து வழக்கமான சோதனைச்சாவடிகள் பலவற்றை தாண்டி ஒரு மரக்கறி லாரியில் பத்து பேரும் மொத்தமாக ஏறியிருந்தனர். அதற்குப் பிறகு அநுராதபுரம் வரை அவர்களை ஏற்றியபடியால் அவர்களையும் லாரியையும் வழக்கத்திற்கு மேலதிகமாகச் சோதனை செய்தனர். லாரி ட்ரைவரை கடைசியாக அனுராதபுரத்தில் வழியனுப்பியபோது அதில் ஓரிருவர் அழுதேவிட்டனர். கருணை என்பது குப்பிவிளக்கின் சுடர் போலச் சினுங்காமல் எங்காவது ஒரு மூலையில் எரிந்து கொண்டிருப்பது தான். 000000000000000000000000000 கண்டி முஸ்லிம் ஹோட்டலில் நூற்றியெட்டாம் அறையில் அவர்கள் தங்கியிருந்தனர். பலநாள் கழித்து ஒரு உற்சாகம் தேறியிருந்தது. அது கண்டி பெரஹர காலம் என்பதால் ஊர்வலம் போகும் வீதிகள் மின்விளக்கு சோடனையில் கிறக்கமாயிருந்தன. அலங்காரப்பந்தல்களும் தென்னோலைத் தோரணங்களும் சந்திக்குச் சந்தி வைக்கப்பட்டு பார்வையாளர் நிற்கும் இடங்களில் கயிறுகள் பின்னப்பட்டிருந்தன. அரச பௌத்த உற்சவமென்பதால் தலதா மாளிகையையும் அதனைச் சுற்றிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. திறந்த ஜன்னலிருந்து அடிக்கும் குளிர் காற்றை முகரவெனத் தலைகள் எட்டிப் பார்த்தபடியிருந்தன. விடிந்தால் ஊருக்குப் போகமுடியும் என்கிற சுலபமான வாயிலைக் குளிர்ந்த நம்பிக்கையை அவர்கள் அடிக்கடி திறந்து பார்த்துக்கொண்டிருந்தனர். உதறி நடுங்கும் கால்களை ஆறப்போட்டுத் தொடைகளை நீவி நீண்டு படுத்திருந்தனர். கண்கள் மட்டும் வீடுவரை நீண்டிருந்தன. ஒரு வழி போலச் செம்மையாக ஒரு பளிங்கு போல அதைவிடச்செம்மையாக நாளையை அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். கதவு படாரென்று திறந்து இரண்டு துண்டுகளாகப் பறந்து விழச் சில கொமாண்டோக்கள் ஆயுதங்களோடு உள்ளே திடுதிப்பென்று பாய்ந்தனர். இருண்ட சீலைகளை தலையில் கட்டி கறுப்பு நிறத்தை முகத்தில் பூசியிருந்தனர். “வேச மவனுகளா…”. ஆடை கழட்டப்பட்டு எல்லோரும் நிர்வாணமாக்கப்பட்டனர். சுன்னத் செய்யப்பட்ட குறிகளைக் கண்டதும் அவர்களின் தீவிரம் தணிந்திருந்தது. ஆண்குறி மையவாதம் இங்கே மட்டும் உயிர்ப்பிச்சை அளித்திருந்தது. இப்படித்தான் எல்லாச் சோதனைச்சாவடி களிலும் அறுக்கப்பட்ட குறிகளுக்கு மரியாதை இருந்தது. நீண்ட நாட்கள் வெயிலில் கிடந்த கருமையும் அழுக்கும் பெரிய முடிச்சுகளைப் போலவிருந்த பைகளின் நடமாட்டமும் புலனாய்வுத்துறையின் காதுகளைச் சீவியிருக்க வேண்டும். பெரஹர உற்சவத்திற்கு குண்டடிக்கும் புலிகளோவென அவர்கள் சந்தேகப்பட்டிருக்க வேண்டும். நீண்ட சோதனையின் பின்னர் அவர்கள் ஆடை அணிய அனுமதிக்கப்பட்டனர். “படிக்க…?”. “யாழ்ப்பாணத்திற்கு..?”. சிப்பாய்கள் ஆச்சரியப்பட்டனர். பயத்தில் சிலருக்கு மூத்திரம் கொதித்தபடி வந்திருந்தது. இப்போது மூடிய ஜன்னல், உடைந்த கதவோடு டிக் டிக் சத்தம், ஆஸ்த்துமா இளைச்சலோடும் மூத்திர நெடியோடும் அவர்கள் படுத்திருந்தனர். அந்தக் குளிரிலும் வியர்த்த பிசுபிசுப்பு தரையில் அங்கங்களை ஒட்டிக் கிடக்கச்செய்தது. மறுநாள் ஐந்து மணிக்கு அக்கறைப்பற்று பஸ்ஸை பிடிப்பது வரை அவர்களின் உதறல் நிற்கவே இல்லை. சப்னாஸ் ஹாசிம்-இலங்கை   https://naduweb.com/?p=17718
    • ஐ.எம்.எவ் கடன்: மூன்றாமுலகக் கடன் பற்றிய கதைகள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ     இலங்கையின் பொருளாதார நெருக்கடியை, இன்னும் கடனை வாங்குவதன் மூலம் தீர்த்து விடலாம் என்று பலரும் நம்புகிறார்கள்.  இலங்கையின் பொருளாதார நெருக்கடி, இரண்டு விடயங்களை அடிப்படையாகக் கொண்டது. முதலாவது, பொருளாதாரக் கொள்கை; இரண்டாவது, அதன்வழியமைந்த பொருளாதாரக் கட்டமைப்பு.  இவை இரண்டிலும், அடிப்படையான மாற்றங்களைச் செய்யாத வரை, இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வில்லை. கடன் வாங்குவது, தற்காலிகமான ஆறுதலைத் தரும். ஆனால், வாங்கிய கடனையும் அதற்கான வட்டியையும் சேர்த்தே மீளச்செலுத்த வேண்டும் என்பதே யதார்த்தம்.  இன்று தனிமனிதர்கள் வாழ்வில், நிதிநிறுவனங்கள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதை ஆழமாக யோசித்தால், செயற்பாட்டில் சர்வதேச நிதி நிறுவனங்கள் கொஞ்சமும் சளைத்தவையல்ல என்பது புலனாகும். ஐ.எம்.எவ், ஒரு கந்துவட்டிக்காரனுக்கு எவ்வகையிலும் சளைத்ததல்ல.  இன்று உலகெங்கும், மூன்றாமுலக நாடுகள் கடனில் அகப்பட்டுள்ளன. இயற்கை வளங்களும் மனித வளமும் கொண்ட இந்நாடுகள், ஏன் கடனாளியாகின என்ற கேள்வி, பெரும்பாலும் கேட்கப்படுவதில்லை.  மாறாக, கடன் என்பது சமூக அசைவியக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. கடன் வாங்குவதை ஊக்குவிப்பதே, இன்றைய பொருளாதார முறையின் முக்கியமான அம்சமாக உள்ளது. இது கடன் வாங்காத ஒருவரை விட, கடன் வாங்கித் தட்டுத்தடுமாறி மீளச்செலுத்துகின்ற ஒருவரை, நம்பிக்கையானவராகப் பார்க்கிறது.  ஒருவரைத் தொடர்ச்சியாகக் கடனுக்குள் வைத்திருப்பதை, நிதிநிறுவனங்களும் அரசும் உறுதி செய்கின்றன. இதனால் கடனுக்கான வட்டி என்பது, மிகப்பெரிய இலாபமாகிறது. எனவே, இந்த விஷச் சுழலில் மக்களைச் சிக்கவைப்பதில், இந்தப் பொருளாதார முறை வெற்றிகண்டுள்ளது. இதன் நீட்சியே, சர்வதேச நிதி நிறுவனங்கள் ஆகும். கடந்தாண்டு தொடக்கத்தில், கொரோனா தொற்றுக்கு முன்வரை, மூன்றாமுலக நாடுகளின் வெளியகக் கடனின் மொத்தத்தொகை அண்ணளவாக 11 ரில்லியன் அமெரிக்க டொலராகும். பெருந்தொற்றும் விலைவாசி ஏற்றமும் காலநிலை மாற்றமும், இந்தத் தொகையைக் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பலமடங்கு அதிகரித்துள்ளன. ஆனால், இதற்கு முன்னர், இவ்வளவு கடனுக்கு இந்நாடுகள் எவ்வாறு ஆளாகின என்ற கதையைப் பார்க்க வேண்டியுள்ளது.  நாடுகளின் வளர்ச்சி மாதிரிகளும் அவை மேற்கொண்ட பொருளாதாரச் சமூகத் தேர்வுகளுமே, மூன்றாமுலக நாடுகளின் கடன்களுக்கான பிரதான காரணமாகும். மூன்றாமுலக நாடொன்றின் தேசிய கடன், எவ்வாறு மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து, அந்நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு செல்கிறது என்பது புதிர்போல் தோன்றினாலும், அதுதான் கடந்த பல தசாப்தங்களாக மூன்றாமுலக நாடுகளின் கதையாக உள்ளது.  இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் தோற்றம்பெற்ற தாராளவாதமும் உலகமயமாக்கலும், அரசின் வகிபாகத்தைக் குறைப்பதை நோக்காகக் கொண்டிருந்தன. சோசலிச அரசுகளில் ஆழமாக ஊன்றியிருந்த ‘சமூக நல அரசுகள்’ என்ற கருத்தாக்கத்துக்கு மாறாக, திறந்த சந்தையையும் அரசுகளின் கட்டுப்பாடற்ற நிலையையும் முன்னிறுத்தின. இதன் ஒரு பகுதியாக, ‘வளர்ச்சி’ என்பது பரிந்துரைக்கப்பட்டது. அதேபோல, உலகமயமாக்கல் நுகர்வைப் பிரதானமாக்கியது.   கொலனியாதிக்கத்துக்குப் பிந்தைய அரசுகள், இக்கொள்கைகளை நடைமுறைப்படுத்தத் தொடங்கின. இதன் விளைவால், ‘வளர்ச்சி’ பற்றிய தவறான புதிதலுக்கு ஆளாகின. வளர்ச்சி என்பது எதற்கானது, யாருக்கானது ஆகிய கேள்விகள் கேட்கப்படவேயில்லை.  காலப்போக்கில் இது, ‘நவீனமயமாதல்’ என்ற புதிய பெயரைச் சூடிக் கொண்டது. மூன்றாமுலக நாடுகள், இந்தக் கவர்ச்சிகரமான சொல்லாடலில் வீழ்ந்தன. தங்கள் பொருளாதாரத்தின் அடிப்படைகளை, மாற்றிக் கொள்ளத் துணிந்தன. விவசாயத்தை மையமாகக் கொண்ட நாடுகள், தொழில்மயமாகின; தொழில்மயமான நாடுகள், சேவைமயமாகின. இவ்வாறு, தங்களின் பொருளாதார பலங்களில் இருந்து விடுபட்டு, புதியவகை பொருளாதார அடிப்படைகளை நோக்கி அவை நகர்ந்தன. இதனால், அவர்களின் பொருளாதார பலம் கேள்விக்குள்ளானது. எனவே, ‘நவீனமயமாகுவதற்காக’ சர்வதேச நிதி நிறுவனங்களின் கடன் பொறிக்குள் அகப்பட்டுக் கொண்டன.   இதன் தொடர்ச்சியாக, வட்டியுடன் கடனை மீளச் செலுத்துவது என்ற நிதி நிறுவனத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள், இந்த நாடுகள் ஆட்பட்டன. அரச நிறுவனங்களை ‘மீள்கட்டமைப்பு’ செய்வதும் ‘சீர்திருத்தங்களை’ மேற்கொள்வதும் இதன் பகுதியாகின. இவற்றின் மோசமான பலன்களை அனுபவிப்பது, இந்நாடுகளில் உள்ள ஏழை மக்களாவர்.  வளர்ச்சிக்காக வாங்கப்படும் கடனில் பெரும்பகுதி, ஆட்சியாளர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளை நிரப்பும். எனவே, திட்டமிட்ட திட்டத்துக்குரிய பணம் அரசிடம் இருப்பதில்லை. பின்னர், அக்கடனைத் திருப்பிச் செலுத்த புதிய கடனை நாடுகள் வாங்கும்; அவையும் ஆட்சியாளர்களின் தனிப்பட்ட கஜனாக்களை நிரப்பும். அதன் பின்னர் வாங்கிய கடனுக்கான வட்டியைச் செலுத்துவதற்கு, புதிய கடன்கள் வாங்கப்படும். இது ஒரு முடிவற்ற தொடராக விரியும். 1980களில் பிலிப்பைன்ஸ், நிக்கரகுவா, ஆர்ஜென்டீனா போன்ற ஏராளமான நாடுகளின் கதை இதுதான்.  1970களின் இறுதிப்பகுதியில், சிலியில் செப்புச் சுரங்கங்களின் வருமானம் உப்பிப்பெருத்த பொருளாதாரமாக உருமாறியது. சிலியின் நாணயத்தின் (பெசோ) பெறுமதி, திட்டமிட்டு வலுவானதாகக் காட்டப்பட்டது. அமெரிக்க டொலருக்கு எதிரான பெசோவின் பெறுமதி உயர்வாக, இதனால் இறக்குமதி செய்வது மலிவானது போன்றதொரு தோற்றம் உருவாகியது.  இதனால் சிலியின் மத்தியதர வர்க்கம், அளவற்ற நுகர்வில் இறங்கியது. பொருளாதாரம் சில ஆண்டுகளில் இறக்குமதியில் நம்பியிருக்குமாறு மாறியது. இதனால், உள்ளூர் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டனர். மெதுமெதுவாக, இறக்குமதிக்குக் கடன் வாங்கும் நிலைக்கு, சிலி தள்ளப்பட்டது.  உள்ளூர் உற்பத்தியாளர்கள் தொழிலற்றவர்களாகினர். ஏற்றுமதி அதிகரிக்காத நிலையில், இறக்குமதி பலமடங்கு அதிகரித்தது. இதனால் தொடர்ந்தும் கடன்வாங்க வேண்டிய நிலைக்கு சிலி ஆளாகியது. அப்போது, சர்வதேச நாணய நிதியம் உதவிக்கு வந்தது.  இதன் இன்னொரு வடிவம், நிக்கரகுவாவில் அரங்கேறியது. 1970களில் ஆட்சியில் இருந்த ‘சமோசா’ குடும்பத்தினர் சுருட்டிய பணம் அளவில்லாதது. 1972ஆம் ஆண்டு, நிக்கரகுவாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குக் கொடுக்கப்பட்ட அனைத்து உதவித்தொகைகளையும் இக்குடும்பம் சுருட்டிக்கொண்டது.  1979ஆம் ஆண்டு, ‘சண்டனிஸ்டா’ புரட்சியாளர்கள், இவர்களைத் துரத்தும்வரை இக்குடும்பம் ஆட்சியில் இருந்தது. இவர்கள் துரத்தப்படும் போது, அரசாங்கக் கையிருப்பு  300 மில்லியன் அமெரிக்க டொலர் மட்டுமே! ஆனால், மொத்தக் கடன் 4,000 மில்லியன் அமெரிக்க டொலராகும். 1980களில் பிலிப்பைன்சில், மார்க்கோசின் ஊழல்களும் சுரண்டல்களும் உலகறிந்த விடயங்கள். 1986இல் பிலிப்பைன்சின் மொத்தக் கடன் 26,000 மில்லியன் டொலர். இதில் 15 சதவீதமானவை, மார்க்கோசின் மனைவி இமெல்லாடவின் ஆடம்பரச் செலவுக்கானவை.  இன்னொருபுறம், பிலிப்பைன்ஸ் அணுசக்தித் திட்டமொன்றைத் தொடங்கியது. இதற்காக வாங்கப்பட்ட கடனுக்கு கொடுக்கப்பட்ட ஒருநாள் வட்டி 3,50,000 அமெரிக்க டொலர் ஆகும். இவ்வட்டி 1989ஆம் ஆண்டு 5,00,000 ஆக உயர்ந்தது. வாங்கிய கடன் மார்க்கோசினால் சுருட்டப்பட்டது.  இதேபோலவே, இன்னும் பல மூன்றாமுலக நாடுகளில் வாங்கப்படும் கடன், ஆட்சியாளர்களால் சுருட்டப்படுகிறது. 1979 முதல் 1983 வரையான நான்கு ஆண்டு காலத்தில் மெக்சிக்கோவிலிருந்து வெளியேறிய மொத்தப் பணம் 9,000 பில்லியன் அமெரிக்க டொலராகும். ஆனால், மெக்சிக்கோ கடனில் தத்தளித்தது. கடனை அடைக்க மேலும் கடன் வாங்கிய வண்ணம் இருந்தது.  ஆர்ஜென்டீனாவில் இராணுவ சர்வாதிகார ஆட்சி நடைபெற்ற வேளை, பெரும்பாலான கடன் இராணுவச் செலவீனங்களுக்காகவே பயன்படுத்தப்பட்டது. பெருவின் கதையும் இதுதான். எனவே, மூன்றாமுலக நாடுகள் எவ்வாறு கடனாளியாகின்றன என்பதற்கான ஒரு குறுக்குவெட்டுச் சித்திரமே, மேற்சொன்ன உதாரணங்கள் ஆகும். இதன் பின்னணியில், கடன் வழங்குனர்களாக உள்நுழையும் சர்வதேச நிதி நிறுவனங்கள் குறிப்பாக, சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளுடன் கடன்களை வழங்குகின்றது. அந்நிபந்தனைகளாக, அரச சேவைகளைத் தனியார்மயமாக்கல், சமூகநலன்களைக் குறைத்தல், தனியார்துறைக்கு வரி குறைப்பு, வரிச்சலுகைகளை அறிமுகப்படுத்தல் போன்றவற்றை வேண்டுகிறது.  மூன்றாம் உலக நாடுகளின் அரசுகள், பெருவாரியான தருணங்களில் சமூகப் பாதுகாப்பினது காவலனும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவோனும் என்ற தனது வகிபாகத்தில் தவறி விட்டன. இதற்கு மூன்றாமுலகக் கடன் மிகவும் முக்கியமான காரணியாகும்.  மேற்சொன்ன கதைகள், பல வகைகளில் இலங்கையைப் பிரதிபலிக்கின்றன. இவ்வாறான கடன்கள் மூலம், ஏற்கெனவே மக்கள் அனுபவித்து வந்த சமூகப் பாதுகாப்புகளை, சர்வதேச நாணய நிதியத்தின் கடன்கள் மூலம், இலங்கையர்கள் இழந்து விட்டார்கள்.  இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்திக் கடன்வாங்கிய ஒவ்வொரு தடவையும் அதற்குப் பாரிய விலையை இலங்கை கொடுத்துள்ளது. எம்மிடம் எஞ்சியிருப்பது, இலவசக் கல்வியும் இலவச மருத்துவமும் தான். அதையும் நாம் தனியாரிடம் கையளிக்கும் நாள் தூரத்தில் இல்லை. அதைச் சாத்தியமாக்கவே ஐ.எம்.எவ் கடனை இலங்கை பெறவேண்டும் என்று வற்புறுத்துவோர் நினைக்கிறார்கள். மறைமுகமாக,  இலங்கையின் ஏழைக் குடிமகனை, சுடுகாட்டுக்குச் கூட்டிச் செல்லும் வழியையே காட்ட முனைகிறார்கள்.       https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஐ-எம்-எவ்-கடன்-மூன்றாமுலகக்-கடன்-பற்றிய-கதைகள்/91-283722
    • பங்களாதேஷுக்கு பாடம் கற்பித்த இலங்கை பங்களாதேஷ் அணிக்கு நல்ல பாடம் கற்பித்த இலங்கை துடுப்பாட வீரர்கள் இலக்கை துரத்தும்போது, 7 பந்துகள் மீதமிருந்த நிலையில் 172 என்ற இலக்கை விரட்டினர்.  பங்களாதேஷுக்கு எதிரான டி-20 உலகக் கிண்ண போட்டியில் இதுவரை தோல்வியை சந்திக்காத இலங்கை அணி, நேற்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று 100 சதவீதத்தை தக்க வைத்துள்ளது. நேற்யை தினம் தனது 5 ஆவது டி-20 போட்டியில் விளையாடிய அசலங்க, தனது முதல் அரை சதம் அடித்து பங்களாதேஷுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறினார்.  இந்த இன்னிங்ஸிற்காக அசலங்க ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். குசல் பெரேரா ஆட்டமிழந்ததால் முதல் ஓவரில் பேட்டிங் செய்ய வந்த 24 வயதான இடது கை ஆட்டக்காரரான அசலங்க, இரண்டாவது ஓவரில் ஹசனின் நான்காவது பந்தில் பவுண்டரி அடித்து இன்னிங்ஸைத் தொடங்கினார்.  அதன் பின்னர் அவரின் தொடர்ச்சியான அதிரடிகளின் விளைவாக பவர் - ப்ளேயில் 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 54 ஓட்டங்களை எடுத்தது இலங்கை. 8.1 ஆவது ஓவரில் பதும் நிஷாங்க 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்தடுத்து வந்த அவிஷ்க பெர்னாண்டோ டக்கவுட்டுடனும், வனிந்து ஹசரங்க 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். இதனால் 79 ஓட்டங்களுக்கு இலங்கையின் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டது. அதன் பின்னர் பானுக ராஜபக்ஷ களமிறங்கினார். அசலங்காவின் வேகமான இன்னிங்ஸால் அதிரடியை ஆரம்பிக்காத பானுக முதல் 9 பந்துகளில் 6 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தார். தொடர்ந்து பானுகாவின் முதல் சிக்ஸர் அஃபிஃப் ஹொசைனின் சுழற்பந்து பந்தில் பெறப்பட்டது, அதையடுத்து இலங்கையின் அதிரடி ஆட்டம் சார்ஜாவில் நிலை கொண்டது. இலங்கைக்கு கடைசி 8 ஓவர்களில் 82 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், அசலங்கா மற்றும் பானுகா மஹ்முதுல்லா வீசிய 14 ஆவது ஓவரில் 16 ஓட்டங்களையும், சஃபுதீன் வீசிய 16 ஆவது ஓவரில் 22 ஓட்டங்களையும் பெற்று நெருக்கடியிலிருந்து விடுபட்டனர். பானுகாவின் பெயருக்கு முன்னதாக 53 ரன்கள் இன்னிங்ஸில், அவர் 31 பந்துகளை எதிர்கொண்டார், மூன்று சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடித்தார்.  வெற்றியின் தருவாயில் தனது 30 ஆவது பிறந்த தினத்தை அரை சதத்தை குவித்த பானுக மொத்தமாக 31 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் ஆட்டமிழந்தார். இறுதியாக அணித் தலைவர் தசூன் சானக்க களமிறங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க 18.5 ஆவது பந்துப் பரிமாற்றத்தில் மேலும் ஒரு பவுண்டரியுடன் வெற்றியை பறை சாற்றினார் அசலங்க. இறுதிவரை ஆட்டமிழக்காதிருந்த அவர் 49 பந்துகளில் 80 ஓட்டங்களை குவித்தார்.   போட்டியின் சிறம்பம்சங்கள் துஷ்மந்த சமீர ஒரு மணி நேரத்திற்கு 150 கி.மீ வேகத்தில் பந்துப் பறிமாற்றம் மேற்கொண்டமை ஒரு சிறப்பான விடயமாகும். இன்னிங்ஸின் தொடக்கத்தில் லிட்டன் தாஸை எதிர்த்த லஹிரு குமாரவின் திறமை மைதானத்தில் சற்று சூடுபிடித்தது. ஆனால் வீரர்களின் தலையீட்டினால் அது சரி செய்யப்பட்டது, லஹிருவின் பந்து வீச்சில் தாஸ் விக்கெட்டை இழந்தார்.  நான்கு முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களுடன் இலங்கை இன்னிங்ஸ் நுழைந்ததால் மகேஷ் தீக்ஷனாவுக்கு இந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டது.  தீக்ஷனாவுக்கு பதிலாக பினுரா பெர்னாண்டோ உள்ளீர்க்கப்பட்டார்.      https://www.virakesari.lk/article/115945
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.