Jump to content

யாழில்... தனக்கு தானே, தீ மூட்டிக்கொண்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மியன்மாரில் சீனாவிற்கு சொந்தமான ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து

தனக்கு தானே, தீ மூட்டிக்கொண்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு - யாழில் சம்பவம்

தவறான முடிவெடுத்து தனக்கு தானே குடும்பஸ்தர் ஒருவர் தீ மூட்டியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தை சேர்ந்த சோமசுந்தரம் ரவிச்சந்திரம் (வயது 48) என்ற 10 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த சனிக்கிழமை குறித்த நபர் போதையில் அவரது வீட்டுக்கு அருகிலுள்ள தனது சகோதரன் வீட்டுக்கு சென்று, சகோதரனுடன் முரண்பட்டு அவரை தாக்கியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து தனது வீட்டுக்கு வந்த அவர், உடலில் பெற்றோலை ஊற்றிக்கொண்டு அதனை பற்ற வைக்க அடுப்படிக்கு சென்றுள்ளார்.  இதன்போது அவரது மனைவி சமையல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளார்.

மேலும் அவர், பெற்றோலை உடலில் ஊற்றிக்கொண்டு பற்ற வைக்க அடுப்புக்கு அருகில் சென்றபோதே, அவரது உடலில் இருந்த பெற்றோலில் தீ பற்றிக்கொண்டது.

இதேவேளை அடுப்படியில் சமைத்துக்கொண்டு இருந்த அவரது மனைவி மீதும் தீ பற்றிக்கொண்டது.

இந்நிலையில் இவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அயலவர்கள் கூடி தீயினை அணைத்து இருவரையும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அதில் கணவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். மனைவி தீக்காயங்களுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

அதேவேளை உயிரிழந்த குடும்பஸ்தவரின் தாக்குதலுக்கு இலக்கான அவரது சகோதரனும் காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1240178

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிகப்படியான விலையேற்றம் குடும்பத்தை தொடர்ந்து கொண்டு நடத்த முடியாமை இயலாமை போன்றவை இப்படியான முடிவுகளை எடுக்க சொல்லும் .

உதவிகள் சென்றடைவது அவசியம் இப்படியான காலகட்டம்களில் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பிரச்சனைக்குள்ளயும் குடிக்கிறதுக்கு காசு எங்கிருந்து வருகிறது இவர்களுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10 பிள்ளைகளா இவருக்கு? கடைசி பிள்ளைக்கு எத்தனை வயது? குடிதான் எல்லாவற்றிற்கும் காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அதிகப்படியான விலையேற்றம் குடும்பத்தை தொடர்ந்து கொண்டு நடத்த முடியாமை இயலாமை போன்றவை இப்படியான முடிவுகளை எடுக்க சொல்லும் .

உதவிகள் சென்றடைவது அவசியம் இப்படியான காலகட்டம்களில் .

முந்த நாள் சாராய தவறணை திறந்த நேரம் கூட்டத்தை பார்த்த நீங்களா எப்படி பணம் புரள்கிறது என

3 minutes ago, colomban said:

10 பிள்ளைகளா இவருக்கு? கடைசி பிள்ளைக்கு எத்தனை வயது? குடிதான் எல்லாவற்றிற்கும் காரணம்.

ஏழைதான் கணக்கு பார்க்காமல் பிள்ளையாவது பெற்றுக்கொள்கிறார்கள் என்று சந்தோசப்படலாம்.

24 minutes ago, Eppothum Thamizhan said:

இவ்வளவு பிரச்சனைக்குள்ளயும் குடிக்கிறதுக்கு காசு எங்கிருந்து வருகிறது இவர்களுக்கு.

கடன் மற்றும் வீட்டில உள்ள பொருட்களை சண்டையிட்டு தூக்கிக்கொண்டு போய் விற்பது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஏழைதான் கணக்கு பார்க்காமல் பிள்ளையாவது பெற்றுக்கொள்கிறார்கள் என்று சந்தோசப்படலாம்.

ஏழைதான் கணக்கு பார்க்காமல் பிள்ளையாவது பெற்றுக்கொள்கிறார்கள் என சந்தோசப்படமுடியாது ஏனெனில் அந்தப்பிள்ளைகளின் வாழ்க்கைதான கஷ்டத்தில் உள்ளது

உதாரணத்திற்கு இந்த குடும்பத்தை எடுத்துக்கொண்டால் 10 பிள்ளைகளில் எத்தனை பிள்ளைகள் விருப்பத்துடன் பிறந்திருக்கும்? 

அது போகட்டும் அது நடந்து முடிந்த விடயம் ஆனால் இவர்கள் பிள்ளைகளை பெற்றுவிட்டு ஒருவர் இறந்துவிட்டார் .. தாயின் நிலை என்னவாகும் என தெரியாது .. பிள்ளைகளின் கதி? இதில் சந்தோசப்பட எதுவும் இல்லை.. 

பிள்ளைகளை பெற்றால் மட்டும் போதுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

அதை நினைத்து செல்லவில்லை இனம் அழிகிறது சனத்தொகை குறைவாக இருக்கிறது என்று செல்பவர்கள் இரண்டு, மூன்றுக்கு மேல் குழந்தைகள் பெற்றுக்கொள்வதில்லை.

குடிகார அப்பனால் நிம்மதியாக வாழ முடியாமல் அவஸ்தைப்பட்டு இருக்கலாம் இனியும் பிள்ளைகள் நிம்மதியாக வாழலாம் இப்படி குடிகாரனாக வாழ்ந்தவரால் குடும்பத்தை சிறப்பாக பார்த்திருக்க முடியாத காரியம் அந்த வீட்டுக்கார அம்மாவே  குடும்ப தலைவராக வாழ்ந்து இருக்கலாம். 

இதைப்போலவே பல குடும்பங்கள் வாழ்கிறது முதல் பிள்ளை ஆண் என்றால் அவரே தந்தையை போல உழைத்து வாழ வைக்கிற நிகழ்வுகளும் நடக்கத்தான் செய்கிறது.

பிள்ளைகள் பெற்றால் மட்டும் போதாது ஆனால் ஏழையின் சந்தோசம் என்னவோ அந்த இரவே மற்ற நேரம் ஓடி ஓடி பணத்தை தேடி உழைப்பது. 

கடனால் தற்கொலை செய்தவர்கள் அதிகமுள்ளது ஆனால் பிள்ளைகள் பெற்றால் அவர்களை படிப்பித்து பெரிய உத்தியோகம் பெற வைத்த தாய்மார்களும் உண்டுதானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10 பிள்ளைகள் பெற்று தள்ளியதுடன் குடியும் வேறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

உதாரணத்திற்கு இந்த குடும்பத்தை எடுத்துக்கொண்டால் 10 பிள்ளைகளில் எத்தனை பிள்ளைகள் விருப்பத்துடன் பிறந்திருக்கும்? 

நான் இதே போல் ஒரு லூசுத்தனமான கருத்தை யாழ்களத்தில் இது வரைக்கும் வாசிக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விளங்க நினைப்பவன் said:

10 பிள்ளைகள் பெற்று தள்ளியதுடன் குடியும் வேறு.

இதே போல் தானே முஸ்லீம் சமுதாயமும் செய்கின்றது? இதே கேள்வியை ஏன் முஸ்லீம்களை பார்த்து கேட்க மாட்டீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

இதே போல் தானே முஸ்லீம் சமுதாயமும் செய்கின்றது? இதே கேள்வியை ஏன் முஸ்லீம்களை பார்த்து கேட்க மாட்டீர்கள்?

முஸ்லிம் மதம் சொன்னதிற்காக பூமிக்கே தீங்கு விளைவித்து பயமுறுத்தும் அவர்களது இந்த செயலை யாழ்களத்திலேயே கண்டித்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மிகவும் சரியாக கூறியிருக்கிறீர்கள் சிலர் எங்கள் இனம் அழிகிறது சனத்தொகை குறைகிறது என்பதோடு சரி.. அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்பது வேறுவிடயம். 

இன்னொன்று சுதந்திரம், சுகாதார சமூக பொருளாதார வசதிகள் உள்ள மேற்கத்தைய நாட்டிலேயே எங்களவர்கள் 3 அல்லது 4 பிள்ளைகளுக்கு மேல் பெறுவதில்லை..அரசும் உதவி தொகை(daycare allowances) கொடுத்துமே 4ற்கு மேல் போகாது.. இந்த நால்வரும் கூட  2 அல்லது 3 மேல் பெறமாட்டார்கள்.. இது யதார்த்தம், ஆனால் அதைப்பற்றி கதைக்கமாட்டார்கள்.. 

ஆனால் ஊரில் வறுமையில் வாடுவதுடன் விரும்பியோ விரும்பாமலோ பிள்ளை பெற்றும், குடிகார கணவனால் பலாத்காரப்படுத்தபட்டும்,கலைக்கவும் முடியாமல் பெற்று வளர்க்கவும் முடியாமல் கஷ்டப்படும் குடும்பங்களின் நிலையை பார்த்து அவர்கள் நடைமுறையில் சாத்தியமானவற்றை சிந்தித்து இருக்கலாம் எனக் கூறினால் மட்டும்தான் எங்கள் சனத்தொகை குறைகிறது.. இனம் அழிகிறது..

ஓரளவிற்கு பொதுவான/ஸ்திரமான நிலையிலிருந்து பார்த்திருந்தால் - ஒழுங்கான வருமானமும் இல்லை, குடிகார கணவனுடன் வாழும் ஒரு பெண் மனநிலையில் இருந்து பார்த்திருந்தால்- நான் கூறுவது விளங்கும். வருமானமும் இல்லை, குடிக்கு அடிமையான கணவன்.. பிள்ளைகளை பெற்றுவிட்டு வளர்ப்பது எப்படி என கட்டாயம் யோசித்திருப்பார்கள்.

ஆனால் குடிகார கணவனுக்கு இதெல்லாம் தலையில் ஏறியிருந்தால் இந்தளவு நிலையும் வந்திருக்காது.. இப்பொழுது தாயினதும் நீங்கள் கூறுவது போல மூத்த ஆண்பிள்ளையிலும் தான் பொறுப்பு வந்துவிழுந்துள்ளது.. 

அந்த மூத்த பிள்ளையின் வயதினைப்பொறுத்து அந்தப்பிள்ளை எதிர்நோக்கப்போகும் கஷ்டங்களின் சுமையும் வலியும்.. இதுவே மூத்தபிள்ளை பெண்ணாக பிறந்திருந்தால்? இவர்களைப்போல பல குடும்பங்கள் வாழ்கிறது, இல்லையென்பதை மறுக்கவில்லை.. அதற்காக அவர்களது வாழ்க்கையும் இப்படி வறுமையுடன் போகவேண்டும் என விரும்பவும் இல்லை.

தந்தை குடிகாரன் பிறகு கொஞ்ச நாட்களில் மகன்/மகள் சிறுவயதில் திருமணம், சிலசமயங்களில் சட்டரீதியான திருமணங்களும் இல்லை.  வாழ்வாதாரத்திற்கு தினக்கூலி என்ன வருகிறதோ அது, பின் உடம்பு அலுப்பு தீர குடி, பின் பிள்ளைகள். அவர்களின் வாழ்க்கை படிப்பு? வேலை?  திரும்பவும் அதே வாழ்க்கைவட்டம். பின் தங்கிய கிராமங்களில் நிகழும் கதைகள் .. சில வருடங்களுக்கு முன் ஏழாலையில் உள்ள மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள குடும்பங்கள் அவர்களின் வாழ்க்கை, பழக்கவழக்கங்கள்(சிறு வயது திருமணம், கசிப்பு கஞ்சா பாவனை, சுகாதார பழக்கவழக்கங்கள்) அதனால் ஏற்பட்ட பிரச்சனைகளைப்பற்றி செய்திகள் வந்ததை கேள்விப்பட்டிருப்பீர்களோ தெரியாது.. எனது நண்பர்கள் சிலர் field officers ஆக இந்த மாதிரியான இடங்களில் பணியாற்றி உள்ளார்கள்..

சில இடங்களில் விதிவிலக்குகள் இருந்தாலும் இந்த வறுமைக்கோட்டுக்கும் சாதியாலும் ஒடுக்கப்பட்டவர்களின் நிலையை பாருங்கள்.. எத்தனை வீதம் முன்னேறியுள்ளார்கள்? அவர்களின் வாழ்க்கைத்தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா? இல்லை. அதிலும் இந்த COVID பாதிப்பினால் வருமானமும் இன்றி படிப்பையும் கைவிட்ட பிள்ளைகள் எத்தனை! உதவி கோரி வந்திருக்கும் தகவல்களைப்பார்த்தால் தெரியும்.. அவர்களது வாழ்க்கைதரம் இன்னமும் பின்னோக்கி போயுள்ளது..
வருமானமில்லை, கடன் தொல்லை, குடும்ப சுமை அதனால் தற்கொலை. 
இந்த செய்தியில் உள்ள குடும்பமும் இதற்குள் அடங்கும்.. வருமானத்திற்கு ஏற்பவே பிள்ளைகளை பெறவேண்டும் என்பதில்லை ஆனால் சிந்தித்து நடந்திருக்கலாம்.. 

அதனால்தான் பிள்ளை மட்டும் பெற்றால் போதாது அவர்களை பாதுகாப்பாகவும் அவர்களுக்கான சாதராண அடிப்படை வசதிகளான (உணவு, உடை உறையுள் மற்றும் கல்வி) கொடுக்கவேண்டும் இல்லாவிடில் உணர்ச்சிக் கொந்தளிப்பிலும் சமூகத்தின் பாராட்டுக்காகவும் பிள்ளைகளை பெற்றுவிட்டு, அவர்களை விற்பதால் அல்லது கொல்வதால், அவரகளது உரிமைகளை மறுப்பதாலும் குற்றமே செய்கிறார்கள்.. 

நான் அவுஸ்ரேலிய வருமுன் வறுமையாலும் குடிகார கணவனாலும் துன்புறுத்தப்பட்ட பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், குடும்ப தலைவன் காணாமல் ஆக்கபட்ட பெண்கள் வரை, அவர்கள் உடல்உளவள தாக்கங்கள் அவர்களது பிரச்சனைகள் வரை கருத்துகளை கேட்டும் அவர்களுடன் பழகிய அனுபவங்கள் உள்ளது.. இன்னமும் அவர்களது வாழ்க்கையில் அதிகளவு மாற்றங்கள் இல்லை.. சமூகத்தின் எண்ணங்களிலும் மாற்றமில்லை.. 

உங்களுக்குதான் ஊர் நிலவரம் என்னைப்பற்றி அதிகம் தெரியும் ஆனாலும் எனக்கு தெரிந்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.. அந்தப்பிள்ளைகளை நினைத்து மட்டும் மனம் வருந்துகிறேன்.. பிள்ளைகளின் உலகம் வண்ணத்துப்பூச்சியை போன்றது.. அவ்வளவுதான்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

மிக நன்றாக சொல்லியுள்ளீர்கள்.சோமசுந்தரம் ரவிச்சந்திரம் போன்றவர்களாலோ அவர்களை போன்றோரை ஆதரித்து ஏற்றிவிடுபவர்களாலோ சமுதாயத்தில் மாற்றம் ஏற்படபோவது இல்லை. தலிபான்கள் சமுதாயம் தான் உருவாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ஐரோப்பாவில் 6 பிள்ளைகளுடன் வாழும் தமிழ் குடும்பங்களையும் பார்த்தாச்சு, 12 பிள்ளைகளுடன் வாழும் வெள்ளைக்காரர்கள் தொடக்கம் ஆபிரிக்கர்கள் வரையும் பார்த்தாச்சு…

மேலும் ஒரு குடும்பத்திற்கு நடந்த விடயங்களோ அல்லது உணர்வுகளோ மற்ற குடும்பங்களுக்கும் இருக்கும் என்பது பிழையான வாதம்.

பிள்ளை உள்ளவனும் குடிக்கிறான் பிள்ளை இல்லாதவனும் குடிக்கிறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த ஜேர்மனியில் பிறப்பு வீதம் நன்றாக குறைந்து விட்டது. குறைந்து விட்டது என்பதை விட குறைந்து கொண்டே போகின்றது. எனக்கு தெரிந்த ஜேர்மன் நண்பர்கள் சிலர் குழந்தையே வேண்டாம் என சொல்கிறார்கள். பலர் ஒன்று அல்லது இரண்டு அதற்கு மேல் வேண்டாம் என்கிறார்கள். காரணம் பிள்ளை வளர்ப்பு செலவீனம் அதிகம் என்கிறார்கள். ஊர்ப்பாசையில் சொல்வதானால் பிள்ளை பெத்து வளர்க்கிறது கட்டுப்படியாகாதாம். இவ்வளவிற்கும் பிள்ளை பெற்றவர்களுக்கு பல வழிகளில் ஊக்குவிப்பு பணம் கொடுத்தும் கட்டுப்படியாகவில்லையாம்.
இந்த  போக்குதான் அரசை கொஞ்சம் மிரள வைத்துள்ளது.பஞ்சமோ பட்னியோ ஒரு நாடு இயங்குவதற்கு மக்கள் தொகை அவசியம்.இதெல்லாம் ஒரு சுழற்சி முறை என நினைக்கின்றேன். ஜேர்மனி பார்த்தும் பாராமலும் வெளிநாட்டு மக்களை உள்வாங்குவதற்கும் இதுவும் ஒரு காரணம் என பேசிக்கொள்கின்றார்கள்.
 
இந்தியாவும் சீனாவும் உலகளவில் சனத்தொகை கூடிய நாடுகள். அதில் இந்தியா இரண்டாம் இடம். ஏக போகத்திற்கு வறுமையும் அதிகம். ஆனால் இந்தியாவின் வலிமை மக்கள் தொகையிலும் தங்கியே உள்ளது.

உலகில் ஒவ்வொரு மனிதனும் தன் வருவாய்க்கு ஏற்ப வாழ வேண்டும் என நினைத்தால் ஒரு குண்டூசி கூட வாங்க முடியாது.

 உலகிலேயே சனத்தொகை கூடிய நாட்டில் இரண்டு பிள்ளைகள் மட்டும் என சட்டம் வைத்திருந்த சீனா அந்த சட்டத்தை நீக்கியுள்ளது.... இதிலிருந்து என்ன தெரிகின்றது லேடீஸ் அன்ட் ஜென்ரில் மன்????????😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் 6 பிள்ளைகள் என்றால் சட்டபடி 4 பெட் ரூம் வீடாவது வேண்டும். 

யார் கொடுப்பார்? வேறு யார் சோசல்தான். 4 பெட் ரூம் வீடு அநேகமாக ஒரு தரமான இடத்தில்தான் கிடைக்கும், 6 பிள்ளைகளுக்கும் பெனிபிட். காலாட்டி கொண்டு இருக்கலாம் அல்லது கையில காசுக்கு வேலை செய்து வட்டிக்கு விடலாம்.

ஊரில் இதுவா நிலமை?

முஸ்லீம்கள் வறுமைபடும் போது அவர்களை தூக்கி விட பல அமைப்புகள் இருக்கிறன, நமக்கு?

மனைவியை, தன்னை குடிவெறியில் எரிக்கும் வெறிக்குட்டி 10 பிள்ளைகளை மனைவியின் முழு சம்மததுடன் பெற்றிருக்குமா என்பது நியாயமான கேள்விதான்.

Martial rape என்பதே இல்லை என்பது போல் கதைக்க கூடாது.

தமிழினத்தை வளர்க்க இங்கே எழுதும் எத்தனை பேர் - 10 பிள்ளைகள் பெற்றீர்கள்? 10 வேண்டாம் 5?

வெளிநாட்டில் இருந்தே பெறவில்லை. ஏன்? 

ஏனென்றால் ஊருக்குத்தா உபதேசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

ஊரில் வெறிக்குட்டிகள் மட்டும் தான் 10 பிள்ளைகள் பெற்றெடுக்கின்றார்களா? ஒருகாலத்தில் எமது ஊர்களில் ஒரு குடும்பத்தில் சாராசரி பிள்ளைப்பிறப்புகள் எட்டு அல்லது பத்து வரைக்கும் இருந்திருக்கும். அது சார்ந்தவர்கள் கோடீஸ்வரர்கள் இல்லை. சாதாரண வாழ்க்கை வாழ்ந்தவர்கள்.

உங்களால் தான் 10 பிள்ளை பெற முடியவில்லை. சுதேச்சையாக 10 பிள்ளை பெறுபவர்களையாவது ஏளனம் செய்யாமல் அவர்கள் பாட்டுக்கு விடுங்கள். மேலைத்தேய நாடுகளில் ஒரு பிள்ளைக்கு ஒரு அறை சட்டம். ஊரில் எல்லோருக்குமே ஒரு வீடு சந்தோசம். பல இடங்களில் சமையலறை கூட படுக்கை அறைதான். யாருமே அலட்டிக்கொள்ளவில்லை.

இப்போதெல்லாம் ஒரு புத்தகத்தை படித்து விட்டு மற்றவர்களுக்கு ஆயிரம் அறிவுரை கூறுகின்றார்கள்.

நிறுத்துக.. 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

🤣அண்ணன் பேச்சுக்கு மறு பேச்சு நான் பேசுவதில்லை என்பதால் இத்தோடு நிறுத்துகிறேன்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

🤣அண்ணன் பேச்சுக்கு மறு பேச்சு நான் பேசுவதில்லை என்பதால் இத்தோடு நிறுத்துகிறேன்🤣.

 கோஷான்! அந்த மனப்பான்மை ஒருநாளும் கூடாது. 

அம்மா அப்பாவோடை எல்லாம் நாங்கள் சண்டை பிடிக்கேல்லையோ? ஆகையால் நல்லதோ கெட்டதோ கருத்துக்கள் அவசியம்.

முடியாது என நினைத்தால் எதுவுமே முடியாதது தான். இதுதான் எனது வாதம்😎

விரும்பினால் தொடருங்கள். நல்ல விடயங்களை விவாதிக்க வேண்டும்.👍🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, goshan_che said:

லண்டனில் 6 பிள்ளைகள் என்றால் சட்டபடி 4 பெட் ரூம் வீடாவது வேண்டும். 

யார் கொடுப்பார்? வேறு யார் சோசல்தான். 4 பெட் ரூம் வீடு அநேகமாக ஒரு தரமான இடத்தில்தான் கிடைக்கும்

மகா குருவே
லண்டனில் 12 பிள்ளைகள் பெறுகிறார்களாமே அவர்களுக்கு எத்தனை  படுகை அறை வீடு கட்டி கொடுக்கிறார்கள்

44 minutes ago, goshan_che said:

தமிழினத்தை வளர்க்க இங்கே எழுதும் எத்தனை பேர் - 10 பிள்ளைகள் பெற்றீர்கள்? 10 வேண்டாம் 5?

வெளிநாட்டில் இருந்தே பெறவில்லை. ஏன்? 

ஏனென்றால் ஊருக்குத்தா உபதேசம்.

 உளுத்து போன உபதேசம்.எக்கேடும் கெடட்டும் என்பது தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, goshan_che said:

முஸ்லீம்கள் வறுமைபடும் போது அவர்களை தூக்கி விட பல அமைப்புகள் இருக்கிறன, நமக்கு?

ஈழத்தில் போர்மேகம் சூழ்வதற்கு முன் எந்தவொரு அமைப்பும் ஈழத்தமிழர்களை தூக்கி விடவில்லை. அந்த அவசியமும் வரவில்லை....வர விடவுமில்லை.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

 கோஷான்! அந்த மனப்பான்மை ஒருநாளும் கூடாது. 

அம்மா அப்பாவோடை எல்லாம் நாங்கள் சண்டை பிடிக்கேல்லையோ? ஆகையால் நல்லதோ கெட்டதோ கருத்துக்கள் அவசியம்.

முடியாது என நினைத்தால் எதுவுமே முடியாதது தான். இதுதான் எனது வாதம்😎

விரும்பினால் தொடருங்கள். நல்ல விடயங்களை விவாதிக்க வேண்டும்.👍🏽

இல்லை அண்ணை. இது தனிநபர் உரிமை சம்பந்தபட்டதால் அதிகம் கதைப்பதும் சரியில்லை என பட்டது. அதுதான் அப்படி எழுதினேன்.

எனது நிலைப்பாடு இதுதான்.

வெளிநாடுகளில் ஏன் பிள்ளைகள் வளரும் போது அவர்களுக்கு தனி அறைகள் குறித்து சட்டம் உள்ளது? காரணமாய்தானே?

ஒரு காலத்தில் கற்குகைக்குள் இருந்தோம் என்பதனால் இப்போ அது சரி என்பதில்லைதானே?

என்னை பொறுத்தவரை ஒரு உயிரை இந்த உலகிற்கு கொண்டு வருகிறோம் என்றால் அதை அந்த காலத்தின், அந்த நாட்டின் குறைந்த பட்ச வசதிகளோடாவது வாழ வைக்க முடியும் என்றால் மட்டுமே அதை நாம் செய்ய வேண்டும்.

இன்றைய பாதுகாப்பு பொறிமுறைகள் நிறைந்த உலகில், இரவில் இது ஒன்றுதான் ஏழைக்கு பொழுதுபோக்கு என்று எப்படி ஏற்று கொள்ள முடியும்?

நானும் ஒரு தலைமுறைக்கு முன் 10 சகோதரர் வழி குடும்பத்தில் இருந்துதான் வருகிறேன். எனக்கும் சகோதர்கள் கூடத்தான். ஆனால் அந்த வசதி அவர்களுக்கு அப்போ இருந்தது.

ஆனால் அன்றாடம்காய்சிகளாக இருப்பவர்கள் பத்து பிள்ளைகள் பெறுவதிலும் பார்க்க வலுவுக்கு ஏற்ற வகையில் பெறலாம் என்பது என் அபிப்பிராயம்.

இப்படியான குடும்பத்தில் பிறந்து மேலே வந்தவர்கள் இருக்கலாம். ஆனால் கீழே போனவர்களும் இந்த குடும்பங்களில் அதிகமாகவே இருப்பார்கள்.

பின்னாளில் மேலே வந்தவர்கள் கூட மிகவும் ஒரு ஏக்கமான, பசியே வழமையான சிறு பராயத்தையே வாழ்ந்துள்ளதை அவர்கள் சொல்ல கேட்டுள்ளேன்.

ஆனால் சீனா போல் இதை கட்டுபடுத்த வேண்டும் என்பதும் என் நிலைப்பாடு இல்லை (சீனாவே தளர்த்தியது வேறு).

இது தனிமனித உரிமைதான் - ஆனால் தனக்கே அடுத்த வேளை உணவு இல்லாத சமயம் இன்னும் 10 பசியுள்ள வயிறுகளை உருவாக்குவது என்னை பொறுத்தமட்டில் உச்ச பட்ச சுயநலம். 

30 minutes ago, விளங்க நினைப்பவன் said:

மகா குருவே
லண்டனில் 12 பிள்ளைகள் பெறுகிறார்களாமே அவர்களுக்கு எத்தனை  படுகை அறை வீடு கட்டி கொடுக்கிறார்கள்

https://www.nspcc.org.uk/keeping-children-safe/in-the-home/sharing-a-bedroom/

https://england.shelter.org.uk/housing_advice/repairs/check_if_your_home_is_overcrowded_by_law

ஆறு ஆண், ஆறு பெண் என்றால் குறைந்தது 7 பெட் ரூம் வீடு இருக்கவேண்டும் அல்லது கவுன்சில் கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். 

என்னிடம் 12 பிள்ளைகள் இல்லை என்பதால் உறுதியாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

என்னை பொறுத்தவரை ஒரு உயிரை இந்த உலகிற்கு கொண்டு வருகிறோம் என்றால் அதை அந்த காலத்தின், அந்த நாட்டின் குறைந்த பட்ச வசதிகளோடாவது வாழ வைக்க முடியும் என்றால் மட்டுமே அதை நாம் செய்ய வேண்டும்.

இன்றைய பாதுகாப்பு பொறிமுறைகள் நிறைந்த உலகில், இரவில் இது ஒன்றுதான் ஏழைக்கு பொழுதுபோக்கு என்று எப்படி ஏற்று கொள்ள முடியும்?

நானும் ஒரு தலைமுறைக்கு முன் 10 சகோதரர் வழி குடும்பத்தில் இருந்துதான் வருகிறேன். எனக்கும் சகோதர்கள் கூடத்தான். ஆனால் அந்த வசதி அவர்களுக்கு அப்போ இருந்தது.

ஆனால் அன்றாடம்காய்சிகளாக இருப்பவர்கள் பத்து பிள்ளைகள் பெறுவதிலும் பார்க்க வலுவுக்கு ஏற்ற வகையில் பெறலாம் என்பது என் அபிப்பிராயம்.

இப்படியான குடும்பத்தில் பிறந்து மேலே வந்தவர்கள் இருக்கலாம். ஆனால் கீழே போனவர்களும் இந்த குடும்பங்களில் அதிகமாகவே இருப்பார்கள்.

பின்னாளில் மேலே வந்தவர்கள் கூட மிகவும் ஒரு ஏக்கமான, பசியே வழமையான சிறு பராயத்தையே வாழ்ந்துள்ளதை அவர்கள் சொல்ல கேட்டுள்ளேன்.

.

அருமையான கருத்து கோஷான் என் வாழ்க்கையாயை அப்படியே பிரதிபலிகின்ற‌ரது

Just now, colomban said:

அருமையான கருத்து கோஷான் என் வாழ்க்கையாயை அப்படியே பிரதிபலிகின்ற‌ரது

இளமையில் வறுமை என்பது கொடிது கொடிது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

லண்டனில் 6 பிள்ளைகள் என்றால் சட்டபடி 4 பெட் ரூம் வீடாவது வேண்டும். 

யார் கொடுப்பார்? வேறு யார் சோசல்தான். 4 பெட் ரூம் வீடு அநேகமாக ஒரு தரமான இடத்தில்தான் கிடைக்கும், 6 பிள்ளைகளுக்கும் பெனிபிட். காலாட்டி கொண்டு இருக்கலாம் அல்லது கையில காசுக்கு வேலை செய்து வட்டிக்கு விடலாம்.

ஊரில் இதுவா நிலமை?

முஸ்லீம்கள் வறுமைபடும் போது அவர்களை தூக்கி விட பல அமைப்புகள் இருக்கிறன, நமக்கு?

மனைவியை, தன்னை குடிவெறியில் எரிக்கும் வெறிக்குட்டி 10 பிள்ளைகளை மனைவியின் முழு சம்மததுடன் பெற்றிருக்குமா என்பது நியாயமான கேள்விதான்.

Martial rape என்பதே இல்லை என்பது போல் கதைக்க கூடாது.

தமிழினத்தை வளர்க்க இங்கே எழுதும் எத்தனை பேர் - 10 பிள்ளைகள் பெற்றீர்கள்? 10 வேண்டாம் 5?

வெளிநாட்டில் இருந்தே பெறவில்லை. ஏன்? 

ஏனென்றால் ஊருக்குத்தா உபதேசம்.

ஐயா கோசான், எனது நண்பர் ஒருவர் 6 பிள்ளைகளுடன்  5 அறைகள் கொண்ட சொந்த வீட்டில்… 

எல்லோரும் சோசலில் உள்ளதாக எண்ண வேண்டாம்.

மேலும் இந்த செய்தியில் சம்பந்தப்பட்ட  நபர் 10 பிள்ளைகளையும் வெறியில் / மனைவியின் சம்மதமின்றி பெற்றிருப்பார் என்று எழுதும் அளவிற்கு இங்கு பலருக்கு அவரை தெரிந்துள்ளது.  😝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குடும்பத்தினுள் ஓர் செய்தியை அடிப்படையாக வைத்து உள் நுழைவது தவறு. அந்த அழகிய குடும்பம் இன்று நிலவும் சூழலால் கூட பாதிக்கப்பட்டருக்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கடைக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன்.
    • கையோடை இந்த திரியில் சீமான் பி ஜே பியின்  B team ஆ என கேட் க வேண்டும் போலுள்ளது.
    • ஊழ‌ல் மோச‌டி  கைத்து வ‌ழ‌க்குக்கு ப‌ய‌ந்து தான் வீஜேப்பி கூட‌ ப‌ல‌ர் கூட்ட‌னி வைச்சு இருக்கின‌ம்.............அது மெகா கூட்ட‌னி கிடையாது மான‌ம் கெட்ட‌ கூட்ட‌னிக‌ள் ரீடிவி தின‌க‌ர‌ன் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் வீஜேப்பிய‌ ப‌ற்றி பேசின‌தை யாரும் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்..............மான‌ஸ்த‌ன் ச‌ர‌த்துகுமார் வீஜேப்பி கூட்ட‌னி வைக்கிற‌ க‌ட்சியுட‌ன் ச‌ம‌த்துவ‌ க‌ட்சி ஒரு போதும் கூட்ட‌னி வைக்காது என்று சொல்லி விட்டு கூட்ட‌னிக்கு போன‌ கோழை   சீமானிட‌ம் இருக்கும் துணிவும் கொண்ட‌ கொள்கையும் த‌மிழ் நாட்டில் வேறு  எந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் இருக்கு🙏🙏🙏...............இதுவ‌ரை அண்ண‌ன் சீமானை த‌மிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பெரிய‌ க‌ட்சிக‌ளும் கூட்ட‌னிக்கு கூப்பிட்ட‌தை ஞாப‌க‌ ப‌டுத்த‌னும் சில‌ருக்கு புல‌வ‌ர் அண்ணா................வாழ்வோ சாவோ எப்ப‌வும் த‌னித்து தான் போட்டி............அவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் ஆக‌லாம் ஆகாம‌ போக‌லாம் ஆனால் ஒரு த‌மிழ‌ன் க‌ட்சி ஆர‌ம்பிச்சு ஒருத‌ர் கூட‌வும் கூட்ட‌னி வைக்காம‌ அர‌சிய‌ல் செய்தார் என்று வ‌ர‌லாறு சொல்லும்🥰................அந்த‌ க‌ட்சியில் இருக்கும் திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானுக்கு பிற‌க்கு அதே வ‌ழியில் அதே நேர்மையோடு க‌ட்சியை வ‌ழி ந‌ட‌த்துவுன‌ம் அத‌ற்க்கு இன்னும் நீண்ட‌ வ‌ருட‌ம்  இருக்கு...................................   200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை விட‌ யாழில் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் குர‌ங்கு சேட்டை செய்ய‌ சில‌ர் இருக்கின‌ம் ஹா ஹா அவைய‌ பார்க்க‌ என‌க்கு பரிதாக‌மாய் இருக்கு😁😜....................
    • பக்கா தமிழன் அண்ணே நீங்க. அண்ணர் தான் ஒரு ஜொள்ளுப் பாட்டியாம். நம்பச் சொல்லுறார்.  தென்னை மர உச்சியை கண்டவருக்கு.. நீண்டு செல்லும் அதிவேக சாலை தெரியவில்லை. யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு.  அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது.  பீட்சா பிரியரோ..?! கே எவ் சி கண்ணில படல்ல.  கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை.  ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல.  அண்ணரும் சாட்சி.  மது ஆறாக ஓடுவது இங்கு மட்டுமல்ல. ரகளை இல்லை என்பது தான் முக்கியம்.  உண்மை தான். ஆனால் சாப்பாடும் நல்லம் லண்டனை விட.  இதை விட மோசம் தென்னிலங்கை. யாழ் சில இடங்களில் விலை குறைவு. உண்மை தான். சீன அங்காடிகளின் வரவும் அதிகரிச்சிருக்கு. விலையும் குறைவு.. டிசைனும் நல்லது. சொறீலங்காவில் தற்போது.. காசிருந்தால்.. விரும்பிய வாழ்கையை வாழலாம். லண்டனில் காசிருந்தாலும் விரும்பிய வாழ்கையை வாழ்வது கடினம்.  இறுதியா.. வாங்கோண்ணா.. வாங்கோ. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.