Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

யாழில்... தனக்கு தானே, தீ மூட்டிக்கொண்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

ஐயா கோசான், எனது நண்பர் ஒருவர் 6 பிள்ளைகளுடன்  5 அறைகள் கொண்ட சொந்த வீட்டில்… 

எல்லோரும் சோசலில் உள்ளதாக எண்ண வேண்டாம்.

மேலும் இந்த செய்தியில் சம்பந்தப்பட்ட  நபர் 10 பிள்ளைகளையும் வெறியில் / மனைவியின் சம்மதமின்றி பெற்றிருப்பார் என்று எழுதும் அளவிற்கு இங்கு பலருக்கு அவரை தெரிந்துள்ளது.  😝

 

வணக்கம் மீரா,

எல்லாரும் சோசல் காசில் உள்ளார்கள் என நான் சொல்லவில்லை. உங்கள் நண்பர் 5 அறை வீடு வைத்திருக்கும் அளவு வசதி உடையவர் என்றால் அவர் ஆறு பிள்ளைகள் பெறுவது அவர் இஸ்டம்.

நான் சொன்னது வருமானம் தனக்கே போதாத போது 10 பிள்ளைகள் பெறுவோரை பற்றி.

யாரும் இவர்களின் படுக்கை அறையை எட்டி பார்க்கவில்லைத்தான், ஆனால் மனைவியை எண்ணை ஊற்றி கொழுத்துவது சரியென பட்ட மனிதருக்கு, மனைவியின் அனுமதி இல்லாமல் அவரை அணுகுவது அவ்வளவு பெரிய தார்மீக தடையாக இருந்திருக்கும் என்பதை உய்துணர்வது கடினம் அல்ல.

யாராவது இலங்கையில் குடும்ப நல வைத்தியரிடம் கதைத்து பாருங்கள். “உனக்கே சாப்பிட வழியில்லை, புருசனும் குடிகாரன், இப்ப 5 வது தேவையா”? என்ற கேள்விக்கு அநேகமான ஏழை தாய்மாரின் பதில் “அவரிக்கு இல்லை எண்டு சொல்ல முடியாது” என்பதே. 

தமிழ் இன பரம்பலை கூட்ட வேண்டும் என்பது நியாயமான எதிர்பார்ப்பே. ஆனால் அதை உங்களை போல், உங்கள் நண்பரை போல் பொருளாதார வலு உள்ளவர்கள் செய்ய வேண்டும். பிளேண்டிக்கு வழியில்லாதவர்கள், மனைவியை அடித்து காசு பறித்து கொண்டு சாராயம் குடிப்பவர்களிடம் இதை எதிர்பார்க்க கூடாது.

 

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

வணக்கம் மீரா,

எல்லாரும் சோசல் காசில் உள்ளார்கள் என நான் சொல்லவில்லை. உங்கள் நண்பர் 5 அறை வீடு வைத்திருக்கும் அளவு வசதி உடையவர் என்றால் அவர் ஆறு பிள்ளைகள் பெறுவது அவர் இஸ்டம்.

நான் சொன்னது வருமானம் தனக்கே போதாத போது 10 பிள்ளைகள் பெறுவோரை பற்றி.

யாரும் இவர்களின் படுக்கை அறையை எட்டி பார்க்கவில்லைத்தான், ஆனால் மனைவியை எண்ணை ஊற்றி கொழுத்துவது சரியென பட்ட மனிதருக்கு, மனைவியின் அனுமதி இல்லாமல் அவரை அணுகுவது அவ்வளவு பெரிய தார்மீக தடையாக இருந்திருக்கும் என்பதை உய்துணர்வது கடினம் அல்ல.

யாராவது இலங்கையில் குடும்ப நல வைத்தியரிடம் கதைத்து பாருங்கள். “உனக்கே சாப்பிட வழியில்லை, புருசனும் குடிகாரன், இப்ப 5 வது தேவையா”? என்ற கேள்விக்கு அநேகமான ஏழை தாய்மாரின் பதில் “அவரிக்கு இல்லை எண்டு சொல்ல முடியாது” என்பதே. 

தமிழ் இன பரம்பலை கூட்ட வேண்டும் என்பது நியாயமான எதிர்பார்ப்பே. ஆனால் அதை உங்களை போல், உங்கள் நண்பரை போல் பொருளாதார வலு உள்ளவர்கள் செய்ய வேண்டும். பிளேண்டிக்கு வழியில்லாதவர்கள், மனைவியை அடித்து காசு பறித்து கொண்டு சாராயம் குடிப்பவர்களிடம் இதை எதிர்பார்க்க கூடாது.

 

வணக்கம் கோசான், 

நீங்கள் இந்த செய்தியை தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என எண்ணுகிறேன்.

அதனைத் தொடர்ந்து தனது வீட்டுக்கு வந்த அவர், உடலில் பெற்றோலை ஊற்றிக்கொண்டு அதனை பற்ற வைக்க அடுப்படிக்கு சென்றுள்ளார்.  இதன்போது அவரது மனைவி சமையல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளார்.

மேலும் அவர், பெற்றோலை உடலில் ஊற்றிக்கொண்டு பற்ற வைக்க அடுப்புக்கு அருகில் சென்றபோதே, அவரது உடலில் இருந்த பெற்றோலில் தீ பற்றிக்கொண்டது.

இதேவேளை அடுப்படியில் சமைத்துக்கொண்டு இருந்த அவரது மனைவி மீதும் தீ பற்றிக்கொண்டது.

 

மேலும் இன்றைய காலச் சக்கரத்தில் அகப்பட்டு அல்லல் படும் மனிதர் பிள்ளைப்பெறும் போதும் அதே மனநிலையில் இருந்திருப்பார் என்ற உங்களின் வாதம் சரியனதல்ல.

அத்துடன் இந்த நபர் 10 பிள்ளைகளை பெறும் போதும் குடிகாரனாக இருந்திருப்பார் என்ற உங்களினதும் சக கருத்தாளர்களின் நிலை பிழையானது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, MEERA said:

அத்துடன் இந்த நபர் 10 பிள்ளைகளை பெறும் போதும் குடிகாரனாக இருந்திருப்பார் என்ற உங்களினதும் சக கருத்தாளர்களின் நிலை பிழையானது.

பிரச்சனை அதுவல்ல மீரா, 10 பிள்ளை பெற்றபின்னும் குடிபோதையில் தன்னை எரிக்க முடிவு செய்யும் ஒருவர் அதற்கு முன்னர் சொக்கத்தங்கமா வீட்டை கவனித்திருப்பார் என்று எண்ண முடியுமா என்பதே!! தான் இறந்தால் அந்த 10 பிள்ளைகளின் கதியென்ன என்பதைக்கூட நினைக்கமுடியாதவாறு செய்துவிட்டது இந்த பாழாய்ப்போன குடிபோதை!!

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, MEERA said:

வணக்கம் கோசான், 

நீங்கள் இந்த செய்தியை தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என எண்ணுகிறேன்.

அதனைத் தொடர்ந்து தனது வீட்டுக்கு வந்த அவர், உடலில் பெற்றோலை ஊற்றிக்கொண்டு அதனை பற்ற வைக்க அடுப்படிக்கு சென்றுள்ளார்.  இதன்போது அவரது மனைவி சமையல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளார்.

மேலும் அவர், பெற்றோலை உடலில் ஊற்றிக்கொண்டு பற்ற வைக்க அடுப்புக்கு அருகில் சென்றபோதே, அவரது உடலில் இருந்த பெற்றோலில் தீ பற்றிக்கொண்டது.

இதேவேளை அடுப்படியில் சமைத்துக்கொண்டு இருந்த அவரது மனைவி மீதும் தீ பற்றிக்கொண்டது.

 

மேலும் இன்றைய காலச் சக்கரத்தில் அகப்பட்டு அல்லல் படும் மனிதர் பிள்ளைப்பெறும் போதும் அதே மனநிலையில் இருந்திருப்பார் என்ற உங்களின் வாதம் சரியனதல்ல.

அத்துடன் இந்த நபர் 10 பிள்ளைகளை பெறும் போதும் குடிகாரனாக இருந்திருப்பார் என்ற உங்களினதும் சக கருத்தாளர்களின் நிலை பிழையானது.

இல்லை வாசித்து விட்டுத்தான் எழுதுகிறேன்.

தன் மேல் பெற்றோலை ஊத்தியபடி அடுப்படியில் நிற்கும் மனைவியிடம் போகும் மனிதன் நிச்சயம் மனைவி மேல் நெருப்பு பிடித்தால் என்ன, வீடு எரிஞ்சால் என்ன, பிள்ளையள் கருகினால் என்ன என்ற நிலையில் இருப்பவராகவே இருக்க முடியும்.

செய்தியில் அவர் குடிவெறியில் நடந்து கொண்டதாகவே உள்ளது. அவர் நேற்றுத்தான் குடிக்க பழகினாரா இல்லையா என்பது இல்லை. தவிரவும் அவர் 10 பிள்ளைகள் பெறும் போது கோடீஸ்வரனாக இருந்து இப்போ ஏழை ஆகி விட்டார் என்றும் இல்லை.

தவிரவும் உண்மையில் இது இந்த குடும்பத்தை பற்றிய எனது கருத்து மட்டும் அல்ல. 

இந்த செய்தியின் பிண்ணனியில் - வசதி இல்லாமல் பல பிள்ளை பெறுபவர்களௌ பற்றிய என பொதுபடையான கருத்து மட்டுமே.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அங்கை நெருப்பு அணைந்து விட்டது இங்கு தொடங்குகிறது யாராவது அந்த பிள்ளைகளுக்கு பணம் அனுப்ப வழி தெரிந்து   இருந்தால் PM ல் போட்டுவிடுங்க கொஞ்சமாவது அனுப்பினால்தான் இரவு நித்திரை வரும் .

 • Like 1
Link to comment
Share on other sites

இங்கே பொதுவான சமூகப்பிரச்சனை அதுவும் எங்களது சமூகத்தை பெரிதளவு பாதிக்கும் குடிப்பழக்கம், வறுமை, பிள்ளைகளின் நலன் என்ற விடயத்தைப்பற்றி கருத்தில் கொள்ளாமல், வளமான நாடுகளில் உள்ளவர்களையும் வறுமையில் வாடுபவர்களையும் ஒப்பிட்டும் தவறான எடுத்துக்காட்டுகளையும் கொண்டு எழுதுகிறார்கள்.. 

இதுவே கணவனின் குடிபோதையும் அடிகளையும் தாங்காத மணைவி கணவனை அடித்திருந்தாலோ இல்லை உயிருக்கு ஆபத்தை விளைவித்திருந்தாலோ இல்லை கணவனின் குடி, வறுமை காரணமாக பிள்ளைகளை வளர்க்கமுடியாமல் பிள்ளைகளை விற்று இருந்தாலோ, தத்து கொடுத்திருந்தாலோ கருத்துக்கள் வித்தியாசமாக அமைந்திருக்கும். அவ்வளவுதான்.. 

நன்றி.

F26048-A3-BCB4-4170-B8-FE-10-A7-A3559-E1

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் வடிவேலுவின் ஸ்ரைலில் பிளான் பண்ணி செய்ய வேண்டும்…😂😂😂

இதற்கு மேல் முடியாது… 

நன்றி வணக்கம்….

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த என்னை விட அதிக வயது கூடிய ஒருவருக்கு சீரான இடைளெpயில் 8 பிள்ளைகள்.ஒரு பிள்ளை மட்டும் சிறு இடைவெளி கூட.அவர் சொன்ன காரனம் தான் அப்பிரன்டிஸ் சத்திர சிகிச்சை செய்து இருந்தவராம்.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • பிபின் ராவத்தும் அவருடைய மனைவியும் போய் சேர்ந்துவிட்டதாக பிந்திக்கிடைத்த தகவலொன்று தெரிவிக்கிறது. இதை வாசிக்கும் போது IPKF நினைவுக்கு வந்து போகிறது, கொஞ்சநாளாகவே கர்மாவின் ஆட்டம் தாங்க முடியவில்லை  
  • இந்திய இராணுவ முக்கிய அதிகாரிகள் பயணித்த கெலிக்கொப்டர் விபத்து : 7 பேர் உயிரிழப்பு ? இந்திய இராணுவ முக்கிய அதிகாரிகள் பயணித்த கெலிக்கொப்டர் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. குறித்த விபத்து இந்தியாவின் தமிழ்நாடு குன்னூர் நீலகிரி மாவட்டம் காட்டேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தி இராணுவ உயர் அதிகாரிகள் சென்றதாகக் கூறப்படும் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான கெலிக்கொப்டரே இவ்வாறு இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. வெலிங்டன் இராணுவ கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து இரு ஹெலிகொப்டர்கள் புறப்பட்டுச் சென்றன. இந்த கெலிகொப்டரில் ஒன்று குன்னூர் அருகே விபத்தில் சிக்கியது. விபத்தில் சிக்கிய இந்த ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் சென்றதாகக் கூறப்படுகிறது. அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை. உடனடியாக உயிரிழப்புகள் பற்றி எதுவும் உறுதிசெய்யப்படாத போதிலும் 5 பேர் உயிரிழந்திருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கெலிகொப்டர் விழுந்த இடத்தில் மீட்பு பணியில் இந்திய இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரியில் நிகழ்ந்த இராணுவ கெலிக்கொப்டர் விபத்தில் 5 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.  விபத்தில் சிக்கிய இராணுவ கெலிக்கொப்டரில் 14 பேர் வரை பயணம் செய்ததாகவும், அதில் பயணம் செய்த 4 இராணுவ உயரதிகாரிகளின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. இறுதி நிலைவரப்படி, முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவருடன் இராணுவ அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பயணித்த எம் ஐ-வகை இராணுவ கெலிக்கொப்டர் தமிழகத்தில் கோவை அருகே விபத்துக்குள்ளானதாகவும், விபத்து நடந்த இடத்தில், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.   https://www.virakesari.lk/article/118650
  • புதுடில்லி பயணத்தை சம்பந்தன் ஏன் பிற்போட்டார் என தெரியாது; கைவிரிக்கிறார் மாவை சேனாதிராசா புதுடில்லி பயணத்தை சம்பந்தன் ஏன் பிற்போட்டார் என்பது தெரியாது என்பதுடன் அது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்- December 8, 2021   “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தியப் பயணத்தை பிற்போடுமாறு தலைவர் இரா.சம்பந்தனே நேரடியாக இந்தியத் தூதரகத்திடம் கோரியுள்ளார். அவர் ஏன் அவ்வாறு கோரினார் என்பது எனக்கு தெரியாது. எனது மகனின் திருமணத்தை முன்னிட்டு கூட்டமைப்பின் இந்தியப் பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக வெளிவரும் செய்திகள் பொய்யானவை. நான் பங்கேற்காவிட்டாலும் இந்த சந்தர்ப்பத்தை தவறவிட வேண்டாம் என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களிடம் நானே கோரியிருந்தேன்.” இவ்வாறு தெரிவித்திருக்கிறார் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா. கூட்டமைப்பின் இந்தியப் பயணம் பிற்போடப்பட்டமைக்கு மாவை சேனாதிராசாவின் மகனது திருமணம்தான் காரணம் எனவும், மாவை சேனாதிராசாவே இந்தப் பயணத்தை பிற்போடுமாறு சம்பந்தனிடம் கூறினார் என்று வெளியாகிய செய்திகள் குறித்து விளக்கமளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இலக்கு மின்னிதழ் 159 டிசம்பர் 05, 2021 | Weekly Epaper கூட்டமைப்பின் இந்தியப் பயணம் முன்னரே திட்டமிட்ட ஒன்று. எனது மகனின் திருமணமும் முன்னரே திட்டமிடப்பட்டது. எனது மகனின் திருமணத்துக்காக இந்தியப் பயணத்தை ஒத்திப்போடுமாறு கோர நான் விரும்பியிருந்தால் அதனை தலைவர் சம்பந்தனிடம் முன்னரே கூறியிருப்பேன். கடைசி நேரத்தில் அதனை ஒத்திப்போடுமாறு கோரும் தேவை எனக்கு இல்லை. எனது மகனின் திருமணத்துக்காக தமிழர் நலன் சார்ந்த விடயத்தை தள்ளிப்போடுமாறு கோரும் அளவுக்கு நான் சுயநலன் கொண்டவன் அல்லன். இந்தியப் பயணம் அறிவிக்கப்பட்டவுடன் அதில் என்னால் பங்கேற்கமுடியாது என்பதால் அங்கு நடக்கும் சந்திப்புக்களில் என்னென்ன விடயங்களை எடுத்துரைக்க வேண்டும் என்பது குறித்து பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் நான் பேசுவதற்கும் ஆயத்தம் செய்திருந்தேன். எனது மகனின் திருமணம் என்ற ஒன்றுக்காக தமிழ் மக்களின் நலன் சார்ந்த இந்த சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்றும் நான் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கு கூறியிருந்தேன். இந்தியத் தலைவர்களுடனான சந்திப்பு 7ஆம், 8ஆம் திகதிகளில்தான் நடைபெறவிருந்தது. எனது மகனின் திருமணம் 9ஆம் திகதியே நடைபெறுகின்றது. இந்த சந்திப்பில் நான் கட்டாயம் பங்கேற்கவேண்டும் என்று நினைத்திருந்தால் 7ஆம், 8ஆம் திகதிகளில் சந்திப்புகளில் பங்கேற்றுவிட்டு கூப்பிடு தூரத்தில் உள்ள இந்தியாவில் இருந்து உடனடியாக நாடு திரும்பி மகனின் திருமணத்திலும் பங்கேற்றிருப்பேன். ஆயினும் இந்த சந்திப்பில் நான் கட்டாயமாக பங்கேற்கவேண்டும் என்று நினைக்கவில்லை. அதனால்தான் அவர்களை சந்திப்பில் பங்கேற்கச் செல்லுமாறு கூறியிருந்தேன். இந்தியப் பயணத்தை ஒத்திப்போடுமாறு இரா. சம்பந்தனே இந்தியத் தூதரகத்துடன் தொடர்புகொண்டு கோரினார். அவர் ஏன் அப்படி கோரினார் என்பது எனக்கு தெரியாது. நான் தான் இந்தப் பயணத்தை பிற்போடுமாறு கோரினேன் என வெளியாகும் தகவல்கள் பொய்யானவை” என்றார்.   https://www.ilakku.org/not-known-why-sampanthan-postponed-trip-new-delhi/
  • எதிர்க்கட்சி பிரதான விவாதத்தை கூட்டமைப்புக்கு தாருங்கள் - தமிழ் தேசிய கூட்டமைப்பு (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) வரவு - செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போது அமைச்சுகளுக்காக நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தை ஆரம்பிப்பதற்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே ஆகியோர் சபாநாயகரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.  அதேபோல்  வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றுவதற்கு தமக்கு வாய்ப்பளிக்குமாறு கோரி ஆளும் கட்சியின் எம்.பிக்கள் 33 பேரும் சபாநாயகரிடம் கடிதமொன்றை சமர்ப்பித்துள்ளனர். வரவு செலவு திட்ட விவாதத்தை நடத்துவதற்கு பிரதான எதிர்க்கட்சி இணக்கம் தெரிவிக்காது சபை அமர்வுகளை புறக்கணித்து வருகின்ற நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை கண்டித்துள்ளது.  தமக்கு சபையில் உரையாற்றவும் மக்களின் பிரச்சினைகளை முன்வைக்கவும் முடியாதுள்ளள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.  இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்து அவர்கள் தமது கையெழுத்துடன் கூடிய கடிததங்களை கையளித்துள்ளனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சம்பிரதாய பூர்வமாக வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாத்தின் போது தொகைக் குறைப்பை செய்து விவாதத்தை ஆரம்பித்து வைப்பது வழமையாகும்.  ஆனால் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினர் பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணித்து வருகின்ற  காரணமாக அந்த விவாதம் நடத்தப்படாது இருப்பதாகவும் இதனால் தொகைக் குறைப்பை செய்து விவாதத்தை ஆரம்பிக்கும் வாய்ப்பை தமக்கு வழங்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனும், மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியான டயனா கமகேவும் சபாநாயகரிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இதேவேளை வரவு செலவுத் திட்டம் மீதான எதிர்வரும் விவாதங்களில் ஆளும் கட்சிக்கான நேரத்தில் தமக்கும் நேரத்தை ஒதுக்கி அதில் உரையாற்ற சந்தர்ப்பம் வழங்குமாறு ஆளும் கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் 33 பேர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.    https://www.virakesari.lk/article/118651  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.