Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

உள்ளாடைக்கும் தட்டுப்பாடா? நிலாந்தன்!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

உள்ளாடைக்கும் தட்டுப்பாடா? நிலாந்தன்!

September 19, 2021

spacer.png

 

நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்தாகி விட்டதா ? என்று இந்திய ஊடக நண்பர் ஒருவர் கேட்டார். நாட்டின் பொருளாதாரம் சரிந்துவிட்டது என்பது உண்மை. அமெரிக்க டொலரைக் காணமுடியவில்லை. ஆனால் நாங்கள் இன்னமும் பாணைச் சீனியில் தொட்டு சாப்பிடும் ஒரு நிலைக்கு வரவில்லை என்று அவரிடம் சொன்னேன். ஆனால் இன்னும் சில மாதங்களில் நிலைமை மேலும் மோசமடையலாம் என்று பொருளியல் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

இந்திய யூடியூப்பர்களும் சில இணைய ஊடகங்களும் இலங்கைத் தீவின் பொருளாதார நெருக்கடியை குறித்து அதிகமாக செய்திகளை வெளியிடுகின்றனர். இச்செய்திகள் உள்நோக்கத்தோடு மிகைப்படுத்தப்பட்டவை என்று இலங்கைத்தீவில் ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். ஆனால் கடந்தவாரம் அரசாங்கம் 623 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு சில நிபந்தனைகள் விதித்திருக்கிறது. அப்பொருட்ட்களுக்குள் உள்ளாடைகளும் அடங்கும். அதன்படி பொருட்களை இறக்குமதி செய்ய விரும்பும் வணிகர்கள் கொள்வனவு விலைக்கு நிகரான தொகையை வங்கியில் வைப்பிலிட வேண்டும் என்று அரசாங்கம் கூறுகிறது. ஏனெனில் அரசாங்கத்தின் இறக்குமதி சக்தி குறைந்து விட்டது என்றும், அதற்கு காரணம் வெளிநாட்டு செலவாணி ஒதுக்கீடு குறைந்தமைதான் என்றும் பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கியது இப்பொழுதுதான் என்பதல்ல. வைரஸ் தொற்றுக்கு முன்னரே நாட்டின் சுற்றுலாத்துறை மோசமாகமாக பாதிக்கப்பட்டிருந்தது. ஈஸ்டர் குண்டு வெடிப்பையடுத்து நாடு உல்லாசப் பயணிகளை கவரும் தன்மையை பெருமளவுக்கு இழந்துவிட்டது. வைரஸ் வந்து நிலைமையை மேலும் மோசமாக்கியிருக்கிறது. நாட்டுக்கு வெளிநாட்டு செலாவணியை ஈட்டித்தரும் துறைகளான ஆடை உற்பத்தித்துறை, சுற்றுலாத்துறை, புலம் பெயர்ந்து உழைக்கும் இலங்கையர்களின் உழைப்பு மற்றும் ஏனைய ஏற்றுமதித்துறைகள் போன்றவற்றில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் வெளிநாட்டு செலவாணி ஒதுக்கீடு குறைந்துவிட்டது. அதனால் அரசாங்கம் பல பொருட்களில் இறக்குமதியை நிறுத்தியது என்று பொருளியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

வசதி படைத்தவர்கள் ஓடும் வாகனங்கள் முதற்கொண்டு கீழ் மத்தியதர வர்க்கத்தினரின் மோட்டார்சைக்கிள்கள் உள்ளடங்கலாக வாகனத் இறக்குமதி நிறுத்தப்பட்டுவிட்டது. அதைப்போலவே மஞ்சள்,உரம் உட்பட பல்வேறு பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் 623 பொருட்களில் இறக்குமதிக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நிபந்தனைகள் மறைமுகமாக இறக்குமதியை கட்டுப்படுத்துகின்றன. குறிப்பாக அது சிறிய நடுத்தர ஏற்றுமதியாளர்களை அதிகம் பாதிக்கக்கூடியது. அதற்கு கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு முன்பு அரசாங்கம் அவசரகால சட்ட விதிகளின்படி அத்தியாவசிய உணவுப் பொருட்களை நிர்வகிப்பதற்கு ஒரு மேஜர் ஜெனரலை பொறுப்பாக நியமித்தது. அத்தியாவசியப் பொருட்களை அவசரகாலச் சட்டத்தின் கீழ் நிர்வகிக்க வேண்டிய ஒரு நிலைமை தோன்றியபோதே இலங்கை தீவு பொருளாதார ரீதியாக வங்குரோத்து நிலையை அடைந்து விட்டது என்று வெளிநாட்டு ஊடகங்கள் கருதும் ஒரு நிலைமை தோன்றியது.

இவ்வாறு அத்தியாவசிய உணவுப் பொருட்களை அவசரகால சட்ட விதிகளின்கீழ் கொண்டுவந்த பின்னர் போலீசார் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் உள்ள பெரிய மற்றும் சிறிய பண்டகசாலைகளின் மீது திடீரென்று பாய்ந்தனர் .இதன்போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி,மா,சீனி போன்ற பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. மேற்கண்ட நடவடிக்கைகளின்மூலம் அத்தியாவசிய பொருட்களை பதுக்குவோர் மீது அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று ஒரு உணர்வு நாடு முழுதும் உருவாக்கப்பட்டது.

எனினும் உள்ளூர் கடைகளிலும் பல்பொருள் அங்காடிகளிலும் சீனிக்கும் மாமாவுக்கும் பால்மாவுக்கும் இப்போதும் தட்டுப்பாடு உண்டு. பெரும்பாலான பல்பொருள் அங்காடிகளில் சீனி,பால்மா இருக்கும் இடங்கள் காலியாக இருக்கின்றன. பெரும்பாலான பல்பொருள் அங்காடிகளில் விலை பொறிக்கப்பட்ட சீனிப் பொதிகளை காண முடியவில்லை. மிகச்சில பல்பொருள் அங்காடிகளில் சீனி சொரியலாக விற்கப்படுகிறது. பால்மா பக்கட்டுக்ககளை குறிப்பிட்ட தொகைக்கு மேல் பொருட்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சில பல்பொருள் அங்காடிகள் ரகசியமாக கொடுக்கின்றன. அந்தப் பெட்டிகளை ஒரு பேப்பர் பைக்குள் வைத்து ரகசியமாக கொடுக்கும் அளவுக்குத்தான் நாட்டில் பால்மா கிடைக்கிறது. அதாவது அத்தியாவசிய பொருட்களுக்கு ஆணையாளராக ஒரு மேஜர் ஜெனரலை நியமித்த பின்னரும் பொருட்களின் விலை இறங்கவில்லை என்று பொருள்.

அண்மையில் இது தொடர்பில் ஊடகங்களுக்கு பதில் கூறிய அஜித் கப்ரால் வணிகர்கள் பொருட்களை பதுக்கிய படியால்தான் செயற்கையாக தட்டுப்பாடு ஏற்பட்டது என்றும் பொருட்களின் விலை அதிகரித்தது என்றும் விளக்கம் கூறுகிறார். இவர் ராஜாங்க அமைச்சராக இருந்து இப்பொழுது மதியவங்கியின் ஆளுநராக பதவியேற்றுள்ளார். ஆனால் வணிகர்கள் ஏன் பொருட்களை பதுக்குகிறார்கள்? ஏனென்றால் பொருட்களின் இறக்குமதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் எதிர்காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் என்ற ஊகத்தின் அடிப்படையில் அதிக லாபத்தை பெறும் நோக்கத்தோடுதான். இவ்வாறு பதுக்கப்பட்ட பொருட்களை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகளும் காவல்துறையும் திடீர் பாய்ச்சல்களின் மூலம் கைப்பற்றுகின்றனர். கைப்பற்றப்பட்ட பொருட்கள் அரசாங்கத்தால் சதோச மூலம் வினியோகிக்கப்படுதாக செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் கைப்பற்றப்பட்ட பொருட்களை அரசாங்கம் அதைப் பதுக்கிய வர்தகர்களிடமே சந்தை விலைப்படி கொள்வனவு செய்வதாகவும் அதை பதுக்கிய முதலாளிகள் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவதில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.

எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் அத்தியாவசிய பொருட்களும் உட்பட பல பொருட்களுக்கு நாட்டில் நெருக்கடி உண்டு. அரசாங்கம் அந்த நெருக்கடிகளை கட்டுப்படுத்துவதற்காக ராணுவத்தனமாக சில நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. ஆனால் அவை எதிர்பார்த்த விளைவுகளை இக்கட்டுரை எழுதப்படும் இந்நாள் வரையிலும் தரவில்லை. அதுமட்டுமல்ல அரசாங்கம் வேறு ஒரு உத்தியையும் கையாள்கின்றது. சில பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டதால் வரக்கூடிய விளைவுகளை எதிர்கொள்வதற்காக அல்லது பொதுசனங்களின் கோபத்தை திசைதிருப்புவதற்காக அரசாங்கம் உள்ளூர் உற்பத்தி,சுற்றுச்சூழலை பாதுகாப்பது,மண்வளத்தை பாதுகாப்பது போன்ற கவர்ச்சியான பசுமை கோஷங்களை முன்வைக்கின்றது. இப்பசுமைக் கோஷங்கள் உன்னதமான அரசியல் பொருளாதார இலட்சியங்கள்தான். ஆனால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபின் அதிலும் குறிப்பாக ஒரு பெருந்தொற்றுச்சூழலில் அவற்றை திடீரென்று அமல்படுத்த முடியாது. அவை போன்ற உன்னதமான இலட்சியங்களை அடைவதற்கு நீண்டகால திட்டங்கள் வேண்டும். நீண்டகால அணுகுமுறைகள் வேண்டும்.

மாறாக இறக்குமதியை திடீரென்று நிறுத்திவிட்டு, இடைக்கிடை சமூக முடக்கங்களை அறிவித்துக் கொண்டு,மக்களை உள்ளூர் உற்பத்திக்கு திரும்புமாறு கேட்பது பொருத்தமானதா? இது ஒரு பெரும்தொற்றுக் காலம். உலகம் முழுவதும் ஒரு அசாதாரணச் சூழல் நிலவுகிறது. இப்படிப்பட்ட ஓர் அசாதாரணச்சூழலில் இதுபோன்ற பரிசோதனைகளையும் நீண்டகால நோக்கிலான திட்டங்களையும் எப்படி முன்னெடுப்பது? உதாரணமாக மஞ்சளின் இறக்குமதியை அரசாங்கம் நிறுத்தியது. அதனால் பெருந்தொகை பணத்தை அரசாங்கம் சேமித்தது. உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பதாக கூறிக்கொண்டு மஞ்சளை உள்ளூரில் உற்பத்தி செய்யுமாறு விவசாயிகளை ஊக்குவித்தது. ஆனால் அதன்மூலம் நாட்டின் மஞ்சள் தேவையில் அரை வாசியைத்தான் ஈடுசெய்ய முடிந்தது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மஞ்சள் கஞ்சாவை போல மாறிவிட்டது. அது இந்தியாவில் இருந்து கடத்தி வரப்படுகிறது. கடத்திவரப்படும் கஞ்சாவைக் கைப்பற்றும் அரசாங்கம் அதை முன்பு எரித்தது. ஆனால் இப்பொழுது சதொசவில் சந்தை விலைக்கு விற்கிறது.

இப்போது அரசாங்கம் 623பொருட்களுக்கு இறக்குமதிக்கான நிபந்தனைகளை விதித்திருக்கிறது. இதனால் மேற்படி பொருட்களும் இனிமேல் கஞ்சாபோல கடத்தப்படலாம் என்று தெரிகிறது. சில நாட்களுக்கு முன் கிடைத்த ஒரு தகவலின்படி இந்தியாவில் இருந்து மஞ்சளுடன் சேர்த்து வீட்டுத் தேவைக்கான மின்னியல் சாதனங்களும் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. அதாவது அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள் நிதி முகாமைத்துவம் போன்றவை கள்ளச்சந்தையைத்தான் ஊக்குவிக்கின்றனவா? அதேபோல அரைச்சமூக முடக்கமும் நாட்டில் பதுக்கலையும் கொரோனா சந்தைகளையும்தான் உற்பத்தி செய்திருக்கிறது.

அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள் மற்றும் நிதி முகாமைத்துவம் மட்டும் அல்ல ராணுவ மயமாக்கல் கொள்கையும் பொருளாதாரத்தைப் பாதிக்கின்றது என்று சில பெரிய வணிகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். உதாரணமாக சுங்கப் பகுதிக்கும் துறைமுக அதிகார சபைக்கும் ஓய்வுபெற்ற படை அதிகாரிகளே பொறுப்பாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மிகக்குறிப்பாக துறைமுக அதிகாரசபைக்கு அவ்வாறு நியமிக்கப்பட்ட படைஅதிகாரி விவகாரங்களை முறையாக நிர்வகிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. உதாரணமாக இலங்கையின் கொழும்பு துறைமுகம் இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத்தை விடவும் பெரியது. எனவே தூத்துக்குடிக்கு வரும் பெரிய கப்பல்கள் இடைத்தங்கல் நிலையமாக கொழும்பைப் பயன்படுத்துகின்றன. ஆனால் புதிய நிர்வாகத்தின்கீழ் இவ்வாறு வரும் கப்பல்களின் தொகை வீழ்ச்சியடைந்து விட்டதாகவும் நிர்வாகத் தாமதங்கள் காரணமாக கப்பல் கொம்பனிகள் துபாய் நோக்கி செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. துறைமுகத்தில் கொள்கலன்கள் தேங்கிக் கிடக்கின்றன என்றும் அவற்றை காலிசெய்து புதிய ஏற்றுமதி பொருட்களை அவற்றின் நிரப்புவது தாமதமாகிறது என்றும் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகர்கள் தெரிவிக்கிறார்கள்.

இவ்வாறாக அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள்,நிதி முகாமைத்துவம்,ராணுவ மயமாக்கல் போன்றவற்றால் மொத்த பொருளாதாரமும் நெருக்கடிக்குள் சிக்கிவிட்டது என்று பொருளியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். நெருக்கடியை சமாளிப்பதற்கு அரசாங்கம் பசில் ராஜபக்சவை நிதி அமைச்சராக நியமித்தது. அவர் நிதியமைச்சராக வந்ததிலிருந்து கிழமைக்கு ஒரு புதிய முடிவு எடுக்கப்படுகிறது. ஆனால் இவை எவற்றாலும் சரிந்துவிழும் பொருளாதாரத்தை இன்றுவரையிலும் நிமிர்த்த முடியவில்லை. ஏன் ?

நாட்டின் பொருளாதாரம் சரிந்து விழுந்தமைக்கு தனிய பெருந் தொற்றுநோய் மட்டும் காரணமல்ல. அல்லது அதற்கு முன் நிகழ்ந்த ஈஸ்டர் குண்டு வெடிப்பு மட்டும் காரணமல்ல.காரணம் அதைவிட ஆழமானது. தென்னாசியாவின் திறந்த சந்தைப் பொருளாதாரத்துக்கு முதலில் திறக்கப்பட்ட நாடு இலங்கைத்தீவுதான். ஆனால் இலங்கைத் தீவுக்கு பின் அவ்வாறு திறக்கப்பட்ட பல நாடுகள் எங்கேயோ போய்விட்டன. இந்தோனேஷியா வியட்நாம் பங்களாதேஷ் போன்றவை இலங்கையை விடவும் முன்னேறிவிடடன. ஆனால் சிறிய இலங்கைத்தீவு எல்லாவிதமான வளங்களையும் கொண்டிருந்த போதிலும் முன்னேற முடியவில்லை. காரணம் மிகவும் எளிமையானது. பல்லினத்தன்மை மிக்க ஒரு தீவை கட்டியெழுப்ப இலங்கைத்தீவில் தொடர்ச்சியாக வந்த ஆட்சியாளர்கள் தவறி விட்டார்கள். அதாவது இனப்பிரச்சினைதான் இலங்கைத்தீவின் பொருளாதாரம் சரிந்துவிழக் காரணம்.

எல்லாவிதமான வளங்களையும் கொண்டிருந்த அழகிய சிறியதீவை பல்லினத்தன்மை மிக்க ஒரு நாடாகக் கட்டியெழுப்ப சிங்களத் தலைவர்களால் முடியவில்லை.அதன் விளைவாக பொருளாதாரம் சீரழியத் தொடங்கியது. யுத்தம் இலங்கைத்தீவின் முதலீட்டு கவர்ச்சியை இல்லாமல் செய்துவிட்டது. அப்படிப்பார்த்தால் 2009ஆம் ஆண்டுக்குப்பின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தியிருக்க வேண்டும். ஆனாலும் முடியவில்லை.ஏன்?

ஏனென்றால் யுத்த வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்ற அரசாங்கத்தால் முடியவில்லை.அது மட்டுமல்ல ராஜபக்சக்கள் யுத்த வெற்றியை குடும்ப வெற்றியாக மாற்றி அந்த அடித்தளத்தின் மீது ஒரு கட்சியையும் கட்டி எழுப்பி விட்டார்கள். இப்பொழுது அவர்கள் யுத்த வெற்றிக்கு தலைமை தாங்குகிறார்கள். யுத்த வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்றத் தவறியதால்தான் அதாவது இனப்பிரச்சினைக்கு தீர்வை கண்டுபிடிக்க தவறியதால்தான் கடந்த12 ஆண்டுகளாக அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியவில்லை. அரசியல் ஸ்திரத்தன்மை இல்லை என்றால் நாட்டின் முதலீட்டு கவர்ச்சி அதிகரிக்காது. இதுதான் அடிப்படைப் பிரச்சினை.

பசிலை மட்டுமல்ல வேறு யாரைக் கொண்டு வந்தாலும் பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கு ஒரே ஒரு முன்நிபந்தனைதான் உண்டு. யுத்த வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்றுவது. பல்லினத் தன்மை மிக்க ஓரழகிய சிறிய தீவை கட்டியெழுப்புவது. ஆனால் யுத்த வெற்றிவாதத்திற்கு தலைமை தாங்கிக் கொண்டு அந்த வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்ற முடியுமா?

 

https://globaltamilnews.net/2021/166212

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சப்பேர் வருவினம், இப்பத்தான் 12 வருடம் முடிஞ்சிருக்கு இன்னும் ஒரு 18 வருஷம் குடுத்துப்பாருங்கோ நாட்டை சிங்கப்பூர் ரேஞ்சுக்கு மாத்திக்காட்டுவீனம் எண்டு!! 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

கொஞ்சப்பேர் வருவினம், இப்பத்தான் 12 வருடம் முடிஞ்சிருக்கு இன்னும் ஒரு 18 வருஷம் குடுத்துப்பாருங்கோ நாட்டை சிங்கப்பூர் ரேஞ்சுக்கு மாத்திக்காட்டுவீனம் எண்டு!! 

இலங்கையின் ஆட்சிபீடத்தில் கடும்போக்கு மகிந்த கோஷ்டி பதவிக்கு வந்தால் தான் தமிழருக்கு நல்லது என்று இங்கு அதிகம் நம்பியவர்கள் அவ்வாறு கருத்திட்டவர்கள்  தீவிர தமிழ் தேசியம் பேசும் கற்பனாவாதிகள் தான்.  பிரச்சனை படிப்படியாகவேனும் தீர்ந்து அங்கு வாழும் எம் மக்கள் மகிழ்வாக வாழவேண்டும் என்று நினைக்கும் எவரும் ஶ்ரீலங்காவின் ஆட்சி பீடத்தில் கடும் போக்கு இனவாதிகள்  அமரவேண்டும் என்று என்றுமே கூறவில்லை. அவ்வாறு விரும்பவும் மாட்டார்கள். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, tulpen said:

இலங்கையின் ஆட்சிபீடத்தில் கடும்போக்கு மகிந்த கோஷ்டி பதவிக்கு வந்தால் தான் தமிழருக்கு நல்லது என்று இங்கு அதிகம் நம்பியவர்கள் அவ்வாறு கருத்திட்டவர்கள்  தீவிர தமிழ் தேசியம் பேசும் கற்பனாவாதிகள் தான்.  பிரச்சனை படிப்படியாகவேனும் தீர்ந்து அங்கு வாழும் எம் மக்கள் மகிழ்வாக வாழவேண்டும் என்று நினைக்கும் எவரும் ஶ்ரீலங்காவின் ஆட்சி பீடத்தில் கடும் போக்கு இனவாதிகள்  அமரவேண்டும் என்று என்றுமே கூறவில்லை. அவ்வாறு விரும்பவும் மாட்டார்கள். 

 மேலே எழுதியது கோத்தாவுக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் குடுத்து பாருங்கோ என்று உடுக்கடித்தவர்களுக்கானதே!! உங்களுக்கானதல்ல!

 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

 மேலே எழுதியது கோத்தாவுக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் குடுத்து பாருங்கோ என்று உடுக்கடித்தவர்களுக்கானதே!! உங்களுக்கானதல்ல!

உங்கள் கருத்தை… வாசித்து சிரிப்பு வந்து விட்டது. 🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 20/9/2021 at 09:53, Eppothum Thamizhan said:

 மேலே எழுதியது கோத்தாவுக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் குடுத்து பாருங்கோ என்று உடுக்கடித்தவர்களுக்கானதே!! உங்களுக்கானதல்ல!

தொப்பி அளவாக இருந்தால் போட்டுக் கொள்ளவதில் தவறு இல்லையே..?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 20/9/2021 at 10:53, Eppothum Thamizhan said:

 மேலே எழுதியது கோத்தாவுக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் குடுத்து பாருங்கோ என்று உடுக்கடித்தவர்களுக்கானதே!! உங்களுக்கானதல்ல!

On 20/9/2021 at 12:30, தமிழ் சிறி said:

உங்கள் கருத்தை… வாசித்து சிரிப்பு வந்து விட்டது. 🤣

சிறித்தம்பி உங்களுக்கு சிரிப்பு மட்டும் தான் வந்தது. நான் அடிவாங்கினவர் நிலையிலையும் நிண்டு யோசிச்சு பாத்தன். கொதி எண்ணைக்கை  தண்ணி ஊத்தின பீலிங் வந்து போச்சுது..😁

வாழ்த்துக்கள் எப்போதும் தமிழன்.👍

 

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 19/9/2021 at 23:55, Eppothum Thamizhan said:

கொஞ்சப்பேர் வருவினம், இப்பத்தான் 12 வருடம் முடிஞ்சிருக்கு இன்னும் ஒரு 18 வருஷம் குடுத்துப்பாருங்கோ நாட்டை சிங்கப்பூர் ரேஞ்சுக்கு மாத்திக்காட்டுவீனம் எண்டு!! 

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் எண்டு முப்பது வருஷம் பாட்டு பாடினவை பற்றி நாங்கள் இப்ப கதைக்கிறதில்லையோ? ஓ… ஆக்களை காணாததாலை கதைக்காமல் விட்டிட்டம் போல….

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கற்பகதரு said:

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் எண்டு முப்பது வருஷம் பாட்டு பாடினவை பற்றி நாங்கள் இப்ப கதைக்கிறதில்லையோ? ஓ… ஆக்களை காணாததாலை கதைக்காமல் விட்டிட்டம் போல….

ஐம்பது வருசத்துக்கு முதல் அடுத்த தைப்பொங்கல் தமிழீழத்திலை எண்டு சொன்னவையள் இப்பவும் உயிரோடை கொழும்பிலைதான் இருக்கினம்.

கற்பகத்தார்! இப்ப மறதி குணத்துக்கும் மருந்து விக்கிது.....வாங்கி அனுப்பட்டே? :cool:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

ஐம்பது வருசத்துக்கு முதல் அடுத்த தைப்பொங்கல் தமிழீழத்திலை எண்டு சொன்னவையள் இப்பவும் உயிரோடை கொழும்பிலைதான் இருக்கினம்.

கற்பகத்தார்! இப்ப மறதி குணத்துக்கும் மருந்து விக்கிது.....வாங்கி அனுப்பட்டே? :cool:

50 வருடத்துக்கு முதல் …. பொறுத்தோம்

5 hours ago, கற்பகதரு said:

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் எண்டு முப்பது வருஷம் பாட்டு பாடினவை பற்றி நாங்கள் இப்ப கதைக்கிறதில்லையோ? ஓ… ஆக்களை காணாததாலை கதைக்காமல் விட்டிட்டம் போல….

30 வருடத்துக்கு …. வருந்தினோம்

On 19/9/2021 at 23:55, Eppothum Thamizhan said:

கொஞ்சப்பேர் வருவினம், இப்பத்தான் 12 வருடம் முடிஞ்சிருக்கு இன்னும் ஒரு 18 வருஷம் குடுத்துப்பாருங்கோ நாட்டை சிங்கப்பூர் ரேஞ்சுக்கு மாத்திக்காட்டுவீனம் எண்டு!! 

20 வருடம் கூட பொறுக்க முடியவில்லையே ? அண்ணை, அங்க பொறுமைக்கு மருந்து விக்குதோ எண்டு கள்ளுக்கடைப் பக்கம் கேட்டு சொல்லுங்கோ, கன பேருக்கு தேவையா இருக்கு. 😃

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கற்பகதரு said:

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் எண்டு முப்பது வருஷம் பாட்டு பாடினவை பற்றி நாங்கள் இப்ப கதைக்கிறதில்லையோ? ஓ… ஆக்களை காணாததாலை கதைக்காமல் விட்டிட்டம் போல….

அவர்கள் அதற்காகவே  30 வருடம் போராடி அதற்காகவே தம் இன்னுயிரையும் கொடுத்தார்கள். உங்களைப்போல் ஆயுதங்களை கோண்டாவிலில் அவர்கள் காலடியில் போட்டு உயிர்பிச்சைக்கேட்டு மதவாச்சிவரை ஓடோடென்று ஓடி ரயில்பிடித்து வெளிநாடுவந்து பச்சோந்திவேலை பார்க்கவில்லை. அல்லது உங்கள் அடிவருடிகள் சம், சும் போல் இந்தா அடுத்த தீபாவளிக்குள் தீர்வு என்று அடித்துவிட்டுக்கொண்டிருக்கவில்லையே.

2 hours ago, கற்பகதரு said:

20 வருடம் கூட பொறுக்க முடியவில்லையே ? அண்ணை, அங்க பொறுமைக்கு மருந்து விக்குதோ எண்டு கள்ளுக்கடைப் பக்கம் கேட்டு சொல்லுங்கோ, கன பேருக்கு தேவையா இருக்கு. 😃

12உம் 18உம் 30 வருடங்கள் என்றுகூட தெரியாத உங்களுக்கெல்லாம் கனடா வந்து வாழ வழிவகுத்த அவர்களை நீங்கள் தினமும் போற்றி கும்பிடவேணும். உங்க இருக்கவிட்ட கனடாகாரணையும்தான். 

 • Thanks 1
Link to comment
Share on other sites

1 hour ago, Eppothum Thamizhan said:

அவர்கள் அதற்காகவே  30 வருடம் போராடி அதற்காகவே தம் இன்னுயிரையும் கொடுத்தார்கள். உங்களைப்போல் ஆயுதங்களை கோண்டாவிலில் அவர்கள் காலடியில் போட்டு உயிர்பிச்சைக்கேட்டு மதவாச்சிவரை ஓடோடென்று ஓடி ரயில்பிடித்து வெளிநாடுவந்து பச்சோந்திவேலை பார்க்கவில்லை. அல்லது உங்கள் அடிவருடிகள் சம், சும் போல் இந்தா அடுத்த தீபாவளிக்குள் தீர்வு என்று அடித்துவிட்டுக்கொண்டிருக்கவில்லையே.

12உம் 18உம் 30 வருடங்கள் என்றுகூட தெரியாத உங்களுக்கெல்லாம் கனடா வந்து வாழ வழிவகுத்த அவர்களை நீங்கள் தினமும் போற்றி கும்பிடவேணும். உங்க இருக்கவிட்ட கனடாகாரணையும்தான். 

நாங்க ஒருத்தரை மட்டும் தான் கும்பிடுவம். அதுக்கே நேரம் காணாமல் கிடக்கு. நீங்க வேற?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உள்ளாடைத்தலைப்பை ஊர்க்கதையாக்கிடானுகள்🤭

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

அவர்கள் அதற்காகவே  30 வருடம் போராடி அதற்காகவே தம் இன்னுயிரையும் கொடுத்தார்கள். உங்களைப்போல் ஆயுதங்களை கோண்டாவிலில் அவர்கள் காலடியில் போட்டு உயிர்பிச்சைக்கேட்டு மதவாச்சிவரை ஓடோடென்று ஓடி ரயில்பிடித்து வெளிநாடுவந்து பச்சோந்திவேலை பார்க்கவில்லை. அல்லது உங்கள் அடிவருடிகள் சம், சும் போல் இந்தா அடுத்த தீபாவளிக்குள் தீர்வு என்று அடித்துவிட்டுக்கொண்டிருக்கவில்லையே.

12உம் 18உம் 30 வருடங்கள் என்றுகூட தெரியாத உங்களுக்கெல்லாம் கனடா வந்து வாழ வழிவகுத்த அவர்களை நீங்கள் தினமும் போற்றி கும்பிடவேணும். உங்க இருக்கவிட்ட கனடாகாரணையும்தான். 

எந்த கனடாக்காரருக்கு இந்த அர்ச்சனை? தலைவர் கோண்டாவில்லில் ஆயுதங்களை போட்டுவிட்டு இந்தியரிடம் சரணடைய சம்மதித்தது உண்மைதான், தாயிடம் தான் கனடாவுக்கு வந்து சந்திக்கிறேன் என்று சொன்னதும் கடைசி நாட்களில் செய்திகளாக வந்த தெரிந்த சங்கதி. அதற்காக அந்த இல்லாத மனுசனை இந்த வாங்கு வாங்கலாமா? கனடாவில் உள்ள சகோதரி கவலைப்படுவா என்று கூட நினைக்கவில்லையே? போர் முடிந்து 12 வருடங்கள். அதற்கு முதல் நம்புங்கள் தமிழஈழம் பாட்டுப்பாடிய 18 வருடங்களா, இல்லையே? அது 30 வருடங்கள் பாடின பாட்டாச்சே?

1 hour ago, விசுகு said:

நாங்க ஒருத்தரை மட்டும் தான் கும்பிடுவம். அதுக்கே நேரம் காணாமல் கிடக்கு. நீங்க வேற?

30 வருஷம் கும்பிட்டு முடியாமல் இன்னமும் கும்பிடுகிறீர்களா? 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கற்பகதரு said:

50 வருடத்துக்கு முதல் …. பொறுத்தோம்

பொறுத்தது மட்டுமல்லாமல்   பொங்கியெழு தமிழா எண்டு இளைஞர்களை உசுப்பேத்தி உசுப்பேத்தி தனிநாட்டு ஆசையை உருவாக்கி விட்டதுமில்லாமல் தாங்கள் தங்கள் குடும்பமென கொழும்பு பின்கதவு சுகபோக வாழ்க்கையை அனுபவித்தது யார்?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

உள்ளாடைத்தலைப்பை ஊர்க்கதையாக்கிடானுகள்🤭

செத்தவீட்டுக்கு போய் செத்தவனைப் பத்தியா கதைக்கிறானுவள்? 😎

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

பொறுத்தது மட்டுமல்லாமல்   பொங்கியெழு தமிழா எண்டு இளைஞர்களை உசுப்பேத்தி உசுப்பேத்தி தனிநாட்டு ஆசையை உருவாக்கி விட்டதுமில்லாமல் தாங்கள் தங்கள் குடும்பமென கொழும்பு பின்கதவு சுகபோக வாழ்க்கையை அனுபவித்தது யார்?

தனிநாட்டு ஆசை  என்பது வெறும் சுயநல அரசியல்வாதிகளின் உசுபேற்றலில் தூண்டப்பட்ட, வெறுமனே  உணர்ச்சி வசப்பட்ட இளைஞகளால் தொடங்கப்பட்டது என்ற உங்கள் கருத்தில் ஓரளவு  நியாயம் உண்டு.   அதனால் தான் இன்று அதனை ஒரு பத்திரிகை வெளியிட்ட உள்ளாடை செய்தியில் பேச வேண்டிய நிலை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

தனிநாட்டு ஆசை  என்பது வெறும் சுயநல அரசியல்வாதிகளின் உசுபேற்றலில் தூண்டப்பட்ட, வெறுமனே  உணர்ச்சி வசப்பட்ட இளைஞகளால் தொடங்கப்பட்டது என்ற உங்கள் கருத்தில் ஓரளவு  நியாயம் உண்டு.   அதனால் தான் இன்று அதனை ஒரு பத்திரிகை வெளியிட்ட உள்ளாடை செய்தியில் பேச வேண்டிய நிலை.

தனி திரி திறப்பமா சார்?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On ‎22‎-‎09‎-‎2021 at 10:25, கற்பகதரு said:

எந்த கனடாக்காரருக்கு இந்த அர்ச்சனை? தலைவர் கோண்டாவில்லில் ஆயுதங்களை போட்டுவிட்டு இந்தியரிடம் சரணடைய சம்மதித்தது உண்மைதான், தாயிடம் தான் கனடாவுக்கு வந்து சந்திக்கிறேன் என்று சொன்னதும் கடைசி நாட்களில் செய்திகளாக வந்த தெரிந்த சங்கதி. அதற்காக அந்த இல்லாத மனுசனை இந்த வாங்கு வாங்கலாமா? கனடாவில் உள்ள சகோதரி கவலைப்படுவா என்று கூட நினைக்கவில்லையே? போர் முடிந்து 12 வருடங்கள். அதற்கு முதல் நம்புங்கள் தமிழஈழம் பாட்டுப்பாடிய 18 வருடங்களா, இல்லையே? அது 30 வருடங்கள் பாடின பாட்டாச்சே?

30 வருஷம் கும்பிட்டு முடியாமல் இன்னமும் கும்பிடுகிறீர்களா? 

இது உண்மையா ?....உண்மையாயின் , அப்பவே சரணடைய இருந்தவரை உசுப்பேத்தி மு. வாய்க்கால் வரை கொண்டு வந்து அனாதையாய் இறக்க விட்டு இருக்கிறார்கள் ...அப்பவே சரணடைந்து இருந்தால் அவரோடு சேர்த்து எவ்வளவு உயிர்கள் தப்பி இருக்கும் 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரதி said:

இது உண்மையா ?....உண்மையாயின் , அப்பவே சரணடைய இருந்தவரை உசுப்பேத்தி மு. வாய்க்கால் வரை கொண்டு வந்து அனாதையாய் இறக்க விட்டு இருக்கிறார்கள் ...அப்பவே சரணடைந்து இருந்தால் அவரோடு சேர்த்து எவ்வளவு உயிர்கள் தப்பி இருக்கும் 

யூட்டின் புழுகலை நம்புகிறீர்களா…?

தலைவரின் தாயார் எப்போது கனடாவில் இருந்தார்?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 22/9/2021 at 10:25, கற்பகதரு said:

எந்த கனடாக்காரருக்கு இந்த அர்ச்சனை? தலைவர் கோண்டாவில்லில் ஆயுதங்களை போட்டுவிட்டு இந்தியரிடம் சரணடைய சம்மதித்தது உண்மைதான், தாயிடம் தான் கனடாவுக்கு வந்து சந்திக்கிறேன் என்று சொன்னதும் கடைசி நாட்களில் செய்திகளாக வந்த தெரிந்த சங்கதி

அள்ளி விடுங்க சார் காசா பணமா

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

1 hour ago, நந்தன் said:

அள்ளி விடுங்க சார் காசா பணமா

இது  தான் நம்ம கூட்டம்?

கண்ணால்  கண்ட வரலாற்றை சொன்னால்  நம்பாது

கதையை

செவி  வழி பரப்புரைகளை அப்படியே  நம்பி....???

அப்படியே  தங்கள் கற்பனைகளையும் குளைத்து  தடவி....😡

4 hours ago, MEERA said:

யூட்டின் புழுகலை நம்புகிறீர்களா…?

தலைவரின் தாயார் எப்போது கனடாவில் இருந்தார்?

தலைவரின் துணைவியார்  கனடாவில  தான்  இப்பவும்  இருக்கிறார்  என்ற  கதைக்கு  இதுவரை முடிவுரை  தெரியாது  தெரியாதா???

Edited by விசுகு
பிழை திருத்தம்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ரதி said:

இது உண்மையா ?....உண்மையாயின் , அப்பவே சரணடைய இருந்தவரை உசுப்பேத்தி மு. வாய்க்கால் வரை கொண்டு வந்து அனாதையாய் இறக்க விட்டு இருக்கிறார்கள் ...அப்பவே சரணடைந்து இருந்தால் அவரோடு சேர்த்து எவ்வளவு உயிர்கள் தப்பி இருக்கும் 

https://archive.org/details/suthumalaiSpeech1987
https://www.dinamani.com/latest-news/2010/mar/13/பிரபாகரனின்-தாயார்-கனடா-செல்லத்-திட்டம்-155467.html

 

https://www.dailymirror.lk/2321/prabhas-mother-off-to-canada
 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Daily mirror இணைப்பு 12/03/2010

தினமணி இணைப்பு 20/09/2012

அம்மையார் இறந்தது 20/02/2011

இருந்தும் இந்த இரு இணைப்பிலும் தலைவர் தனது தாயாரை கனடாவில் வந்து சந்திப்பாதாக கூறியதாக இல்லை.

மேலும் நடந்த உண்மையான விடயம் கற்பகத்தாருக்கு தெரிந்தும் தனது புழுகு வண்டிலை அவித்து விட்டிருக்கார்.

 

அது மட்டுமல்ல இந்திய அரசுடனான போரை ஆரம்பிக்கும் போது பல தளபதிகள் ( மாத்தையா உட்பட)  பயந்தார்கள். ஆனால் அவர்கள் எல்லோருக்கும் தலைவர் கூறியது “ உங்களுக்கு சண்டையிட பயம் என்டால் எனக்கு பின்னால நில்லுங்கோ”.

அன்று பயந்த எத்தனையோ பேர் பின்நாளில் போர்க்களத்தில் சாதனைபடைத்தது வரலாறு.

 • Like 1
Link to comment
Share on other sites

24 minutes ago, MEERA said:

Daily mirror இணைப்பு 12/03/2010

தினமணி இணைப்பு 20/09/2012

அம்மையார் இறந்தது 20/02/2011

இருந்தும் இந்த இரு இணைப்பிலும் தலைவர் தனது தாயாரை கனடாவில் வந்து சந்திப்பாதாக கூறியதாக இல்லை.

மேலும் நடந்த உண்மையான விடயம் கற்பகத்தாருக்கு தெரிந்தும் தனது புழுகு வண்டிலை அவித்து விட்டிருக்கார்.

 

அது மட்டுமல்ல இந்திய அரசுடனான போரை ஆரம்பிக்கும் போது பல தளபதிகள் ( மாத்தையா உட்பட)  பயந்தார்கள். ஆனால் அவர்கள் எல்லோருக்கும் தலைவர் கூறியது “ உங்களுக்கு சண்டையிட பயம் என்டால் எனக்கு பின்னால நில்லுங்கோ”.

அன்று பயந்த எத்தனையோ பேர் பின்நாளில் போர்க்களத்தில் சாதனைபடைத்தது வரலாறு.

நான் போராடுவதாக முடிவு எடுத்திட்டன். இந்த முடிவில் விருப்பம் இல்லாதவர்கள் வீட்டுக்கு போகலாம் என்ற தலைவரின் வார்த்தைகளை கேட்டு வீட்டுக்கு வந்தவர்களில் என் தங்கையும் ஒருவர். தற்போது லண்டனில் உள்ளார்.

 • Like 2
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By கிருபன்
   அரசியலாகிய ஒரு பாடகி! - நிலாந்தன்.

   ஒரு வைரஸ் காலத்தில் “வைரலாகிய” ஒரு குரல் யொகானியின் உடையது. அந்தப் பாடலை அவர் கரகரத்த குழந்தைக் குரலில் பாடத் தொடங்குகிறார். நோகாமல் அதிகப் பிரயத்தனமின்றி லேசாக தலையை அசைத்து பாடுகிறார். காணொளியின் முழு சட்டகத்துக்குள்ளும் அவருடைய முகம் குழந்தை பிள்ளைத்தனமாக சிரித்துக்கொண்டு நிறைகிறது.
   அது அப்படியொன்றும் உன்னதமான, நுட்பமான பாடல் அல்ல. அவர் பாடிய எனைய பாடல்களும் உன்னதமானவை என்று கூற முடியாது. எனினும் அது ஒரு எளிமையான பாடலாக இருந்தபடியால் எளிதில் வைரல் ஆகியது. சமூக வலைத்தளங்களின் காலத்தில் வைரலாகும் விடயங்கள் எல்லாமும் ஆழமானவைகளாக, உன்னதம் ஆனவைகளாக இருக்க வேண்டும் என்றில்லை. அதன் ஜனரஞ்சகப் பண்பு; அது வெளிவரும் காலம் ; அதைக் கொண்டாடும் பிரபலங்கள் போன்ற பல விடயங்கள் அது வைரலாகும் தன்மையை தீர்மானிக்கின்றன. அமரர் நெவில் ஜெயவீர மதிக்கப்படும் ஒரு சிவில் அதிகாரி. அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு பொருளியல் நோக்கு சஞ்சிகையில் பின்வருமாறு கூறியிருந்தார்” புத்திசாலித் தனத்திற்கும் ஜனரஞ்சகத்திற்கும் பொதுவாகப் பொருந்தி வருவதில்லை” என்று. நடிகர் தனுஷின் “வை திஸ் கொலவெறி” பாடலுக்கு அது தான் நடந்தது. யொகானிக்கும் அதுதான் நடந்தது.
   அவருடைய பாடலை பல தமிழர்கள் விரும்பி ரசித்தார்கள். கொண்டாடினார்கள். சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தார்கள். சுவிட்சர்லாந்தில் இருக்கும் ஒரு தமிழ் ஒளிப்படக் கலைஞர் முகநூலில் அவருடைய பாடலை அறிமுகப்படுத்திய போது நான் யொகானியைத் தேடி அவருடைய ஏனைய பாடல்களுக்குள் போனேன். அவை என்னைப் பிரமிக்க வைக்கவில்லை. அவருடைய குடும்ப விவரத்தை தேடினேன். அவருடைய தந்தை ஒரு ராணுவ அதிகாரி என்று தெரிந்தது. அவர் ஒரு கீழ்நிலை அதிகாரியாக இருந்திருக்க முடியாது என்ற ஊகம் எனக்கு தொடக்கத்திலேயே இருந்தது. யொகானி வெளிநாடுகளுக்கு போகக்கூடிய வளம் பொருந்திய ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது. அவருடைய தாயார் ஒரு விமான பணிப்பெண் என்று கூறப்பட்டது. அதனால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று யோசித்தேன். ஆனால் ருவிற்றரில் புலம்பெயர்ந்த தமிழர்களில் சிலர் அவருடைய சர்ச்சைக்குரிய பாடல் ஒன்றின் காணொளித் துண்டைப் பகிர்ந்த போது அவரைப் பற்றிய பின்னணி மெல்ல மெல்ல தெரியத் தொடங்கியது. இது தொடர்பில் ருவிற்றரில் நீண்ட வாதப்பிரதிவாதங்களும் நடந்தன. நடந்து கொண்டிருக்கின்றன. அவர் தமிழ் மக்களின் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிக்கிறார். தனது தந்தையின் தரப்பை வடக்கையும் கிழக்கையும் இணைத்த வீரர்கள்; கதாநாயகர்கள் என்று புகழ்கிறார்.
   சர்ச்சைக்குரிய அப் பாடலின் நறுக்கப்பட்ட காணொளித் துண்டு தமிழ் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவத் தொடங்கியது. தமிழ்த் தரப்பில் அவருக்கிருந்த ஆதரவு குறையத் தொடங்கியது. அவருடைய தகப்பனார் யார் என்பதை கண்டுபிடித்து போரில் அவருடைய பங்களிப்பு என்ன என்பதை கண்டுபிடித்து புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்பில் இருந்து வரும் ஊடகங்கள் வெளிப்படுத்தத் தொடங்கின. எனினும் யொகானி உலகப் பிரபல்யம் அடைந்துவிட்டார். இசையின் மகத்துவம் அதுதான். அது ஒரு உன்னதமான பாடல் இல்லை என்ற போதும் அதன் எளிமையும் ஜனரஞ்சகத் தனமும் சமூகவலைத்தளங்களின் காலமும் அவருடைய பாடலை வைரல் ஆக்கின. சரத் பொன்சேகா அவரை புகழும்போது அவருடைய தந்தையையும் சேர்ந்துக் கொண்டாடினார். விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மாவிலாற்றில் முதலாவது பாடத்தை கற்பித்தது அவருடைய தந்தை என்று கூறினார். உலகம் முழுவதும் வைரலாகிய ஒரு பாடகியை அவர் தன்னுடைய ராணுவச் சட்டகத்துக்குள், யுத்த வெற்றி வாதத்துக்குள் சுருக்கினார். அங்கேதான் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தின் குறுக்கம் தெரிந்தது.  உலகம் முழுவதும் தெரியவந்த ஒரு பாடகியை அவர்கள் எப்படி உரிமை கோரினார்கள் ? என்பது.
   அது ஒரு உன்னதமான பாடல் இல்லை என்ற போதிலும் இசைக்கு மொழி இல்லை, இனம் இல்லை, மதம் இல்லை,அது உலகளாவிய ஒரு மொழி என்பதனால் அந்த பாடலுக்கு அத்தனை பிரபலம் கிடைத்தது. எனினும் யொகானியின் அரசியல் நிலைப்பாடு அல்லது அவருடைய அரசியல் சாய்வு தமிழ் மக்கள் மத்தியில் அந்தப் பாடலுக்குள்ள கவர்ச்சியைக் குறைத்துவிட்டது. அவர் தனது தந்தையின் மகளாக ஓர் அரசியல் நிலைப்பாட்டை எடுப்பது அவருடைய தெரிவு. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிப்பதும் தன் தந்தையின் தரப்பை வீரர்களாக சித்தரிப்பதும் அவருடைய தெரிவு. ஆனால் அவருடைய பாடலை கொண்டாடுவதா இல்லையா என்பதும் தமிழ் மக்களின் தெரிவு. ஓரு கலைஞரின் அரசியல் நிலைப்பாடு என்பது இந்த இடத்தில் கவனிப்புக்குரியதாகிறது. அதிலவருடைய ஆறம் சார்ந்த நிலைப்பாடு எது என்ற கேள்வி எழுகிறது.
   தனது பாடல் இப்படி வைரலாக மாறும் என்று யொகானி நிச்சயமாக நம்பியிருக்க மாட்டார். அவருடைய எனைய பாடல்களை பார்க்கும் யாரும் அதை ஊகிக்கலாம். ஆனால் அந்தப் பாடல் உலகம் முழுவதும் பார்க்கப்படும் ஒரு நிலைமை வந்தபோதுதான் அவருடைய அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களும் மேலெழுந்தன. இறந்த காலத்துக்கு பொறுப்புக்கூறத் தயாரற்ற ஒரு படைத் தரப்பை வெற்றி வீரர்களாக கொண்டாடும் ஒரு பாடகியை போர்க்குற்றங்களுக்கு எதிராக போராடுவோரும், மனித குலத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிராகப் போராடுவோரும் இனப்படுகொலைக்கு எதிராக நீதி கேட்டுப் போராடும் மக்கள் கூட்டங்களும் கொண்டாடுவார்களா?
   படைப்பாளியும் புலமைமையாளருமான எனது நண்பர் ஒருவர் கேட்டார் ” யொகானியின் அரசியலைப் பற்றி எதுவும் தெரியாமல் அவரை ரசிப்பவர்கள் ஒருபுறமிருக்கட்டும். இந்தியா அவருக்கு ஏன் ஒரு கலாச்சார தூதுவர் அந்தஸ்தை கொடுத்தது? அப்படி கொடுக்கும்போது இந்தியாவுக்கு யொகானியின் தகப்பனுடைய பின்னணி பற்றித் தெரியாமல் இருந்திருக்குமா ?” என்று.
   ஆனால் யொகானி அவ்வாறு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கலாச்சார தூதுவராக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. வைரலாக மாறிய அவருடைய பாடலை புகழ்ந்து கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் செப்டம்பர் 18ஆம் திகதி தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் எழுதிய குறிப்பில் “மிகப் புதிய கலாச்சாரத் தூதுவர்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதாகவும் அது நாட்டின் உத்தியோகபூர்வ பிரகடனம் அல்லவென்றும் கூறப்பட்டுள்ளது. உதாரணமாக இந்தியா ஏ.ஆர்.ரகுமானை ஒரு கலாச்சார தூதுவராக உத்தியோகபூர்வமாக பிரகடனம் செய்திருக்கிறது. ஆனால் கொழும்பில் உள்ள இந்திய தூதரகமோ அல்லது கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சிலோ அவ்வாறு யோகானியை இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார தூதுவராக உத்தியோகபூர்வமாக பிரகடனம் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. தூதரகத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் காணப்பட்ட மிகப் புதிய கலாச்சார தூதுவர் என்ற வார்த்தையை வைத்து நெற்றிசன்கள் அதை இந்தியாவின் உத்தியோகபூர்வ பிரகடனமாக பிரசித்தப்படுத்தி விட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.
   எனினும், இந்த இடத்தில் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டும். அவர் எந்த அடிப்படையில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மிகப்புதிய கலாச்சார தூதுவர் ஆனார் ? வைரல் ஆகிய ஒரே காரணத்துக்காகவா?அவரை அவ்வாறு அழைப்பதன் மூலம் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் சிங்கள மக்களுக்கு உணர்த்த முயலும் “கனெக்ரிவிற்றி” என்ன? தமிழ் மக்களுக்கு உணர்த்த முயலும் “கனெக்ரிவிற்றி” என்ன?
    
   https://athavannews.com/2021/1245227
    
  • By கிருபன்
   13ஆவது திருத்தமும் புதிய யாப்பும்! - நிலாந்தன்.
   October 17, 2021

   ஒரு புதிய யாப்பை இந்த ஆண்டின் இறுதிக்குள் கொண்டு வரப்போவதாக ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருக்கிறார். இலங்கை ராணுவத்தின் 72வது ஆண்டு நிறைவையொட்டி அனுராதபுரத்தில் உள்ள ஒரு படை முகாமில் நடந்த ஒரு வைபவத்தில் அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். இது அரசாங்கம் அதன் யாப்புருவாக்க முயற்சியில் மெய்யாகவே ஈடுபடுகிறதா என்ற கேள்வியை மேலும் வலிமைப்பப்படுத்தியிருக்கிறது.
   யாப்புருவாக்கத்திற்கான நிபுணர் குழுவை சேர்ந்த ஒருவர் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் ஒரு புதிய யாப்புக்கான சட்ட வரைபை அரசாங்கம் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. அதை நம்பித்தான் சம்பந்தர் அண்மைக்காலங்களில் ஒரு புதிய யாப்பு உருவாக்கப்படும் என்று என்ற தொனிப்பட கருத்துத் தெரிவித்து வருகிறாரோ தெரியவில்லை. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐரோப்பிய யூனியனின் பிரதிநிதிகளோடு பேசியபொழுது சம்பந்தர் ஒரு புதிய யாப்பு உருவாக இருப்பது குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
   அதன்பின் இந்திய வெளியுறவுச் செயலர் இலங்கைக்கு வர இருந்த பின்னணியில் சம்பந்தர் பங்காளிக் கட்சிகளை நோக்கி ஓர் அறிக்கை விட்டிருந்தார். அந்த அறிக்கையில் கூட்டமைப்பின் ஐக்கியத்தை பாதுகாக்க வேண்டும் என்று அழைப்பு விட்டிருந்ததோடு ஒரு புதிய யாப்பு உருவாகவிருக்கும் சூழலில் கூட்டமைப்பின் ஐக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற தொனிப்படவும் கருத்து தெரிவித்திருந்தார்.
   இவ்வாறு ஒரு புதிய யாப்பைக் குறித்த கருத்துக்களை அவர் இந்திய வெளியுறவுச் செயலரைச் சந்திக்கும்போது கூறுவதைத் தவிர்ப்பது நல்லது என்று பங்காளிக் கட்சிகள் கருதியதாக தெரிகிறது. மாறாக சந்திப்பின்போது 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று வெளியுறவுச் செயலரிடம் கேட்கவேண்டும் என்று ஒரு பங்காளி கட்சி சம்பந்தருக்கு வலியுறுத்தியதாக தெரிகிறது. சந்திப்பின்போது மேற்படி பங்காளிக் கட்சியின் தலைவர் அதனை தொடக்கத்திலேயே வெளியுறவுச் செயலரை நோக்கி ஒரு வேண்டுகோளாக முன்வைத்ததாகவும் அறிய முடிகிறது. இந்திய வெளியுறவுச் செயலரின் நிலைப்பாடும் அதுவாக இருந்த காரணத்தால் உரையாடலில் அந்த விடயம் பேசப்பட்டிருக்கிறது. எனினும் உரையாடலின் போக்கில் சம்பந்தர் ஒரு புதிய யாப்பை குறித்தும் கருத்து கூறியதாக அறியமுடிகிறது.
   பல மாதங்களுக்கு முன்பு கூட்டமைப்பினர் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தபோதும் இது குறித்து அவர் வலியுறுத்தியதாக தெரிகிறது. ஒரு புதிய யாப்பை உருவாக்கும் பொழுது 13வது திருத்தம் என்ற பேச்சு எழப்போவதில்லை. அப்புதிய யாப்பிற்குள் 13ஆவது திருத்தத்தின் முழு அளவு உள்ளடக்கமும் இணைக்கப்படுமாயிருந்தால் பிரச்சினை இல்லை.
   மாறாக 13ஆவது திருத்தத்தை விடக் குறைவான அதிகாரங்களே அதில் இருந்தால் அதைக் குறித்து இந்தியா அழுத்தம் எதையும் பிரயோகிப்பது கடினமாக இருக்கும். ஏனென்றால் ஒரு புதிய யாப்பை உருவாக்குவது என்பது இலங்கைதீவில் உள்நாட்டு விவகாரம். அதேசமயம் 13வது திருத்தம் என்பது இந்திய இலங்கை உடன்படிக்கையின் விளைவு. அதனால் இந்திய இலங்கை உடன்படிக்கையின் பிரகாரம் இந்தியா அதில் தலையிடமுடியும் என்ற தொனிப்பட ஜெய்சங்கர் கூட்டமைப்பிடம் கருத்துத் தெரிவித்ததாக தெரிகிறது. எனினும் கடந்த 12ஆண்டுகளாக 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இந்தியா இலங்கையை வற்புறுத்தவில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்டிட வேண்டும்.
   ஜெய்சங்கரைச் சந்தித்த பின்னரும் சம்பந்தர் ஒரு புதிய யாப்பைக் குறித்து பேசுமளவுக்கு 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று அழுத்தமாகப் பேசுவதாகக்த் தெரியவில்லை.. இந்தியாவின் அழுத்தத்தோடு ஒரு தீர்வைப் பெற முயற்சித்தால் அது சிங்கள மக்களை பகை நிலைக்குத் தள்ளும் என்று அவர் கருதுவதாகத் தெரிகிறது. சிங்கள மக்களை பயமுறுத்தாமல் ஒரு தீர்வை பெறுவதாக இருந்தால் இந்தியஅழுத்தம் என்ற விவகாரம் ஒரு புதிய யாப்புருவாக்க முயற்சியில் ஒரு விவகாரமாக இருக்கக்கூடாது என்று சம்பந்தர் கருதுகிறாரோ தெரியவில்லை.
   கடந்த வாரம் ஜனாதிபதி அனுராதபுரத்தில் வைத்து ஆற்றிய உரை சம்பந்தரின் நம்பிக்கையை பதப்படுத்தக்கூடும். கடந்த ஜெனிவா கூட்டத்தொடரின்போது அரசாங்கம் கொழும்பிலுள்ள தூதரகங்களுக்கும் ஐநாவுக்கும் அனுப்பிய அறிக்கையில் நிலைமாறுகால நீதி செய்முறைகளை ரணில் விக்கிரமசிங்க விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து தான் முன்னெடுப்பதாக ஒரு தோற்றத்தை காட்டியிருந்தது. அத்தோற்றத்தை மேலும் பலப்படுத்த வேண்டுமாக இருந்தால் ஒரு புதிய யாப்பைக் குறித்தும் பேச வேண்டியுள்ளது. ஆனால் இங்குள்ள பிரச்சினை என்னவென்றால் ஒரு புதிய யாப்பை எந்த அடிப்படையில் உருவாக்குவது? என்பதுதான்.
   அண்மையில் இந்து பத்திரிகைக்கு பேட்டியளித்த மிலிந்த மொரகொட கூறுவதுபோல அது இந்தியாவின் உதவியோடு கூடிய ஒரு உள்நாட்டுத் தயாரிப்பாக இருக்க முடியுமா? இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகள் பிராந்திய மயப்பட்டுவிட்டன; அனைத்துலக மயப்பட்டுவிட்டன. திம்புவில் தொடங்கி ஓஸ்லோ வரையிலும் அதன்பின் ஜெனிவா வரையிலும் அது போய்விட்டது. எனவே அதற்கு உள்நாட்டு தீர்வு கிடையாது.இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒன்றைக் காண்பது என்றால் ஒரு மூன்றாவது தரப்பின் மத்தியஸ்தம் அல்லது அனுசரணையோடு கூடிய ஒரு சமாதான உடன்படிக்கை அல்லது அரசியல் உடன்படிக்கை சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு இடையே எழுதப்பட வேண்டும்.
   ரணில் விக்ரமசிங்கவின் யாப்புருவாக்கக் குழுவிற்கு தமிழ் மக்கள் பேரவை முன்வைத்த முன்மொழிவில் இது கூறப்பட்டுள்ளது. அவ்வாறு மூன்றாவது தரப்பின் மத்தியஸ்ததத்தோடு ஒரு சமாதான உடன்படிக்கை எழுதப்பட்ட பின்னரே அந்த உடன்படிக்கையில் உடன்பாடு காணப்பட்ட விடயங்களை ஒரு சட்டக்கட்டமைப்புக்குள் கொண்டுவரும் நோக்கத்தோடு ஒரு யாப்பை வரைய வேண்டும். மாறாக இனப்பிரச்சினைக்கான தீர்வை முழுக்க முழுக்கஒரு யாப்புருவாக்க முயற்சியாகக் குறுக்கக்கூடாது.
   ரணில் விக்ரமசிங்கவின் யாப்புருவாக்க முயற்சிகளில் இந்த இரண்டு அம்சங்களில் ஒன்றாகிய மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் என்ற அம்சம் ஏதோ ஒரு வடிவத்தில் இருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் 30/1 தீர்மானமானது நிலைமாறுகால நீதிக்குரியது. நிலைமாறுகால நீதிச் செய்முறைகளின் கீழ் ஒரு தீர்வைக் காணும் நோக்கத்தோடு நாடாளுமன்றம் சாசனப் பேரவையாக மாற்றப்பட்டது. யாப்புருவாக்கத்திற்காக வழிநடத்தற் குழுவும் உபகுழுக்களும் உருவாக்கப்பட்டு ஒரு யாப்புக்கான இடைக்கால வரைபுவரை அது முன்னேறியது.
   ரணில் விக்கிரமசிங்கவின் தீர்வுக்கான முயற்சிகளை இக்கட்டுரை ஏற்றுக் கொள்ளவில்லை. எனினும் அவர் ஒரு விடயத்தை ஒப்பீட்டளவில் செய்ய்ய முற்பட்டார். அது என்னவெனில் யாப்புருவாக்க முயற்சி என்பது பொறுப்பு கூறலின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும், நல்லிணக்கப் பொறிமுறையின் பிரிக்கப்படவியலாத ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதே அது. அதேசமயம் ரணில் விக்கிரமசிங்க கூட்டமைப்போடு சேர்ந்து வேறு ஒரு தந்திரத்தையும் செய்தார். என்னவெனில், நீதி விசாரணைகளில் இருந்து தீர்வுக்கான முயற்சிகளைப் பிரித்தார். இனப்பிரச்சினைக்கான தீர்வையும் நீதி விசாரணையையும் வேறு வேறு ஆக்கினார்.
   இப்பொழுது கோட்டாபய அதன் அடுத்த கட்டத்துக்கு போக முயற்சிக்கிறாரா?அவர் யாப்புருவாக்க முயற்சிகளை பொறுப்புக்கூறலில் இருந்து பிரிக்க முயற்சிக்கிறார்.
   ஒரு புதிய யாப்பு ஏன் தேவைப்படுகிறது? பழைய யாப்பு பிரச்சினைகளை தீர்க்க தவறிவிட்டது என்பதனால்தானே? பழைய யாப்பு ஏன் பிரச்சினைகளை தீர்க்க தவறியது ? எனேன்றால் பழைய யாப்பு நாட்டின் பல்லினத் தன்மையை பாதுகாக்கத் தவறி விட்டது என்பதால்தான். அப்படி என்றால் ஒரு புதிய யாப்பு இலங்கை தீவின் பல்லினத் தன்மையை பாதுகாக்கும் நோக்கிலானதாக உருவாக்கப்பட வேண்டும். ஆனால் தன்னை தனிச்சிங்கள மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் வெற்றி பெற்றதாக காட்டிக் கொள்ளும் ஓர் அரசாங்கம் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியுமா? தனிச்சிங்கள மூன்றிலிரண்டு பெரும்பான்மை என்ற வெற்றிக் கோஷம் பல்லினத் தன்மைக்கு எதிரானது. நல்லிணக்கத்துக்கு எதிரானது. நிலைமாறுகால நீதிக்கு எதிரானது. ஒரு புதிய யாப்பை உருவாக்குவது என்பது நல்லிணக்கப் பொறிமுறையின் பிரிக்கப்படமுடியாத ஒரு பகுதியாக அமைய வேண்டும். ஆனால் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியாத ஒரு அரசாங்கம் எப்படி அப்படிப்பட்ட ஒரு யாப்பை உருவாக்க முடியும்? இதுதான் பிரதான கேள்வி.
   மிகக்குறிப்பாக, ஐநாவில் வெளியக பொறிமுறையை இந்த அரசாங்கம் நிராகரிக்கிறது.உள்ளகப் பொறிமுறையைத்தான் வலியுறுத்துகிறது. இந்தியாவுக்கான புதிய தூதுவர் மிலிந்த மொரகொட இனப்பிரச்சினைக்கு தீர்வாக உள்ளூர் தயாரிப்பான ஒரு தீர்வைதான் மனதில் வைத்திருப்பதாக தெரிகிறது. அப்படி என்றால் ராஜபக்சக்கள் உள்ளகப் பொறிமுறை, உள்நாட்டு விசாரணை, உள்நாட்டுத் தயாரிப்பான ஒரு தீர்வு என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள் என்பது தெரிகிறது. எனவே தொகுத்துப் பார்த்தால் நமக்கு கிடைக்கும் சித்திரம் தெளிவானது.
   இந்த அரசாங்கம் பொறுப்புக்கூறல், இனப்பிரச்சினைக்கான தீர்வு போன்ற எல்லாவற்றையும் அனைத்துலகமய நீக்கம் செய்வதற்கு அல்லது பிராந்தியமய நீக்கம் செய்வதற்கு முயற்சிக்கின்றதா? அவ்வாறு நல்லிணக்கத்தை,பொறுப்புக்கூறலை,இனப்பிரச்சினைக்கான தீர்வை வெளியாரின் தலையீடுகள் அற்ற உள்நாட்டு வடிவிலானதாக மாற்றுவது என்பது இறுதியிலும் இறுதியாக தமிழ் மக்களை தனிமைப்படுத்தும் ஒரு உத்திதான். அவ்வாறு பொறுப்புக்கூறலை உள்நாட்டுக்குள் குறுக்கும் ஒரு உத்திக்கு கூட்டமைப்பும் உடந்தையாக இருக்கக் கூடாது என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கருதுவதாக தெரிகிறது.
   மேலும்,அண்மையில் ஐநாவுக்கு ஒன்றாகக் கடிதம் எழுதிய ஐந்து கட்சிகளும் அவ்வாறே சிந்திப்பதாக தெரிகிறது. 13ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்பதனை சமாதானப் பேச்சுக்களுக்கான ஒரு முன்நிபந்தனையாக முன்வைக்க வேண்டும் என்று அவை கேட்கின்றன. பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு இடையே நம்பிக்கைகளை கட்டியெழுப்புவதற்கான ஒரு நிபந்தனையாக 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று மேற்படி கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அப்படி ஒரு முன்நிபந்தனையை முன்வைத்தால் அது இந்தியாவையும் இது விடயத்தில் பொறுப்புக்கூற வைக்கும் என்று பங்காளிக் கட்சிகள் கருதுகின்றன.
   13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்த்தரப்பு கோரிக்கை வைக்க வேண்டும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாக தெரிகிறது. இதுவிடயத்தில் தமிழ்த் தரப்பு அதற்காக உழைத்தால்தான் இந்தியாவும் சேர்ந்து செயல்படலாம் என்ற தொனிப்பட இந்திய வெளியுறவுச் செயலர் கூட்டமைப்புடனான சந்திப்பின்போது தெரிவித்ததாகவும் ஒரு தகவல் உண்டு. சம்பந்தர் அதற்கு உடன்பாடு தெரிவித்ததாகவும் தெரிகிறது. ஆனால் அதே சமயம் ஒரு புதிய யாப்பைக் குறித்த கற்பனைகளும் அவரிடம் இருப்பதாகத் தெரிகிறது.
   https://globaltamilnews.net/2021/167357
  • By கிருபன்
   ஜனாதிபதியின் அழைப்பும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகமும் -நிலாந்தன்.
   October 3, 2021

   இது டயாஸ்பொறக்களின் காலம். அதாவது புலம்பெயர்ந்த சமூகங்களின் காலம். அல்லது நாடு கடந்து ஒரு தேசமாக அல்லது தேசத்துக்கு வெளியே ஓர் உளவியல் தேசமாக வாழும் மக்களின் காலம். புலப்பெயர்ச்சி என்பது பொதுவாக இரண்டு காரணங்களால் ஏற்படுகிறது. முதலாவது போர். இரண்டாவது பொருளாதார காரணங்கள். ஈழத்தமிழர்களின் புலப் பெயற்சி பிரதானமாக இரண்டு அலைகளை கொண்டது. முதலாவது 1983க்கு முந்தியது. பெருமளவிற்கு கல்வி மற்றும் பொருளாதார காரணங்களுக்கானது. இரண்டாவது 83 ஜூலைக்கு பின்னரானது. அது முழுக்க முழுக்க போரின் விளைவு. எனினும் அதற்குள் போரை ஒரு சாட்டாக வைத்துக்கொண்டு பொருளாதார காரணங்களுக்காக புலம் பெயர்ந்தவர்களும் உண்டு.
   உலகில் இன்று மிகக் கவர்ச்சியான டயாஸ்பொறக்களில் ஒன்றாக தமிழ் டயாஸ்பொற பார்க்கப்படுகிறது. மனிதகுலத்தின் மீது அதிக தாக்கத்தை செலுத்தியது யூத டயாஸ்பொறதான். வரலாற்றில் மிகநீண்ட காலத்துக்குரியதும் யூத டயாஸ்பொறதான். டயாஸ்பொற என்ற வார்த்தை யூதர்களுக்குத்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான ஒரு புலப் பெயர்ச்சி அது. அதன் விளைவாக யூதர்கள் அதிகமதிகம் ஐரோப்பிய மயப்பட்டார்கள். யூத டயஸ்போறா என்பது கிறிஸ்துவுக்கு முன்னரே தொடங்கியது இரண்டாம் உலக மகா யுத்தம் வரையிலும் நீடித்திருந்தது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அதாவது இரண்டு மில்லீனியங்களுக்கும் மேலாக யூதர்கள் புலம்பெயர்ந்தார்கள். ஆசியாவில் தோன்றிய யூதர்கள் கடந்த இரண்டாயிரம் ஆண்டு காலப்பகுதிக்குள் அதிகம் ஐரோப்பிய மயப்பட்டார்கள். இவ்வாறு யூதர்கள் ஐரோப்பிய மயபட்டதன் விளைவுகள்தான் அணுக்குண்டு; மார்க்சிசம்; சிக்மன் பிராய்டின் உளவியல் கோட்பாடு முதற்கொண்டு உலகின் ஒரு தொகுதி அறிவியல் சாதனைகள் ஆகும். இந்த அர்த்தத்தில்தான் கடந்த நூற்றாண்டை யூதர்களின் நூற்றாண்டு என்று வரலாற்றாசிரியர்கள் வர்ணிப்பதுண்டு.
   ஒரு டயாஸ்பொற தனது தாய் நிலத்தில் ஒரு தேசத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதனை யூதர்கள் கடந்த நூற்றாண்டில் நிரூபித்தார்கள். யூத டயாஸ்பொறவிலிருந்து தொடங்கி மனிதகுல வரலாற்றில் டயஸ்போறாக்களின் காலம் என்பது துலக்கமான விதங்களில் மேலெழுந்துவிட்டது. ஆசிய ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளை பொறுத்த வரையிலும் பல நாடுகளில் டயஸ்போரா சமுகங்கள் தத்தமது தாயகங்களில் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் செல்வாக்கு செலுத்தும் ஒரு போக்கு வளர்ச்சியுற்று வருவதை காணலாம். ஈழத்தமிழர்களின் மத்தியிலும் தாயகத்தில் அரசியல்,சமூக,கலை பண்பாட்டுச் செயற்பாடுகளின்மீது டயாஸ்பொறவின் தாக்கம் நிர்ணயகரமானதாகக் காணப்படுகிறது.
   குறிப்பாக 2009க்கு பின் தமிழ் அரசியலின் மையம் தமிழ் டயாஸ்பொறவா? என்று மயங்கும் அளவுக்கு நிலைமைகள் வளர்ந்துவிட்டன. போரில் தோற்கடிக்கப்பட்ட பின் தாயகத்தில் வாழும் தமிழர்களுக்கு உளவியல் ரீதியாகவும் நிதி ரீதியாகவும் தெம்பூட்டியது தமிழ் டயாஸ்பொறதான். 2009க்கு பின் தோல்வியை ஒப்புக் கொள்ளாத தமிழ் கூட்டு உளவியலின் கூர்முனையாக தமிழ் டயாஸ்பொற தன்னைத் தொடர்ச்சியாக முன்னிறுத்தி வருகிறது. மிகச் சில தசாப்தங்களுக்குள் நிகழ்ந்த ஒரு வளர்ச்சி இது.
   இந்த வளர்ச்சியை விளங்கிக் கொள்வதற்கு இங்கே ஒரு உதாரணத்தைக் கூறலாம். 83 ஜூலைக்கு முன்பு பிரித்தானிய விமான நிலையம் ஒன்றில் நடந்த சம்பவம் அது. பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்படுவதற்காக ஒரு தொகுதி ஈழத்தமிழர்கள் விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்கள். தாங்கள் நாடு கடத்தப்படுவதைத்த தடுப்பதற்காக அவர்கள் திடீரெண்டு விமானநிலையத்தில் தங்களுடைய ஆடைகளை அகற்றி அரை நிர்வாணமாக நின்று தமது எதிர்ப்பை காட்டினார்கள். அதன் விளைவாக அவர்களை நாடு கடத்தும் முயற்சி நிறுத்தப்பட்டது. ஆனால் அப்படி ஒரு காட்சியை இனி எந்த ஒரு அமெரிக்க அல்லது ஐரோப்பிய விமான நிலையத்திலும் கற்பனை செய்ய முடியாது. ஏனென்றால் அன்று பிரித்தானியாவின் விமான நிலையத்தில் நிர்வாணமாக நின்றவர்களுக்கு தங்களை மற்றவர்கள் பார்ப்பார்கள் என்ற கூச்சம் இருக்கவில்லை. அதாவது அங்கே அவர்களுக்கு ஒரு சமூக இருப்போ கலாச்சார இருப்போ இருக்கவில்லை. ஒரு சமூக அல்லது கலாச்சார இருப்பு அல்லது அந்தஸ்து இருந்தால்தான் வெட்கம் வரும். மற்றவர்கள் தங்களை பார்ப்பார்கள் மற்றவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற வெட்கம் ஏற்படும். ஆனால் அன்றைக்கு நிர்வாணமாக நின்ற தமிழர்கள் உதிரிகளாக நின்றார்கள். ஒரு சமூகமாக நிற்கவில்லை.
   ஆனால் இன்றைக்கு ஈழத் தமிழர்களின் நிலை அப்படியல்ல. அப்படி எந்த ஒரு விமான நிலையத்திலும் நிர்வாணமாக நிற்க முடியாது. ஏனென்றால் ஒரு புலம் பெயர் தமிழர் அவ்வாறு நின்றால் அதை அவருடைய அடுத்த தலைமுறை அனுமதிக்காது. அல்லது அந்தப் பிள்ளையின் பிள்ளை அனுமதிக்காது. அந்தப்பிள்ளைகளுக்கு அங்கே ஒரு சமூக அடையாளமும் அந்தஸ்தும் உண்டு. அவர்கள் அந்த சமூகத்துக்குரியவர்கள். உன்னுடைய பெற்றோர் அல்லது உறவினர்கள் இப்படி நிர்வாணமாக நிற்கிறார்கள் என்று நாளைக்கு அவர்களுடைய பள்ளிக்கூடத்திலோ அல்லது வேலைத்தளங்களிலோ அந்தப் பிள்ளைகளின் நண்பர்கள் சொல்லிக் காட்டுவார்கள். மேலும், பெரும்பாலான விமான நிலையங்களில் ஈழத்தமிழர்கள் ஏதோ ஒரு வேலை பார்க்கிறார்கள். தவிர அந்த விமான நிலையங்களில் வந்து போகும் பயணிகளில் யாரோ ஒரு அல்லது பல முதல் தலைமுறை அல்லது இரண்டாம் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவர் இருப்பார்.
   அதாவது ஈழத்தமிழர்கள் இப்பொழுது நாட்டுக்கு வெளியே ஒரு சமூகமாக,தேசமாக பரந்து வாழ்கிறார்கள். புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தேர்தலில் நிற்கிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களாக வருகிறார்கள். உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாக வருகிறார்கள். உள்ளூர் பிரமுகர்களாக வந்துவிட்டார்கள். உலகப் பிரபலங்கள் ஆகவும் வந்துவிட்டார்கள். இதற்கு ஆகப் பிந்திய ஓர் உதாரணத்தை இங்கு காட்டலாம். தமிழ்நாட்டின் திரைத்துறை தலைநகரமாகிய கோடம்பாக்கத்தில் அண்மையில் நடந்த ஒரு சம்பவம். நகைச்சுவை நடிகர் வடிவேலு இயக்குனர் ஒருவரோடு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். அந்தப் பிணக்கை தீர்த்து வைத்தது ஒரு புலம்பெயர் பெரு வணிகர்தான் தமிழ் திரை உலகின் மீது புலம்பெயர் சமூகத்தின் செல்வாக்கை இது காட்டுகிறதா?
   1990 க்குப் பின் தமிழ் டயஸ்போறாவானது ஈழ விடுதலைப் போரின் காசு காய்க்கும் மரமாக மாறியது. குறிப்பாக தமிழ்நாட்டுக்கும் ஆயுதப் போராட்டத்துக்கு இடையே சட்டப் பூட்டு ஏற்பட்டபொழுது ஆயுதப்போராட்டம் ஐரோப்பாவை நோக்கி நிச்சயமற்ற கடல் வழிகளின் ஊடாகத் திறக்கப்பட்டது. அதிலிருந்து அதிகரித்த அளவில் ஈழப்போராட்டம் மேற்குமயப்பட்டது. ஈழப்போராட்டத்தின் காசுகாய்க்கும் மரமாக தமிழ் டயாஸ்பொற காணப்பட்டது. இன்றும் தாயகத்திலுள்ள கட்சிகள் செயற்பாட்டாளர்களின் மீது ஏதோ ஒரு விதத்தில் தமிழ்டயாஸ்பொற தாக்கம் செலுத்துகிறது.
   குறிப்பாக 2009க்குப்பின் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து நீதிக்கான போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவது தமிழ் டயாஸ்பொறதான். 2009க்கு பின் தாயகத்தில் காணப்பட்ட அச்சச்சூழல் காரணமாக தமிழ் டயாஸ்பொறவிடமே போராட்டத்தின் அஞ்சலோட்டக் கோல் ஒப்படைக்கப்பட்டதாக ஒரு தோற்றம் நிலவியது. குறிப்பாக ஜெனிவா மைய அரசியலில் மிகவும் வினைத்திறனோடு செயற்படுவது டயாஸ்பொறதான்.
   இவ்வாறான ஒரு முக்கியத்துவத்தைக் கருதித்தான் கடந்த வாரம் இலங்கைத் தீவின் ஜனாதிபதி அமெரிக்காவில் வைத்து தமிழ்ச் டயாஸ்பொறவை நோக்கி அழைப்பு விடும் ஒரு நிலைமை தோன்றியிருக்கிறது. அன்மையில் ஐநா கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அங்கே பொதுச்செயலர் செயலரை சந்தித்தபின் வெளியிட்ட கருத்துக்கள் அதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன. ஜனாதிபதி அமெரிக்காவில் நின்ற நாட்களுக்கு சற்று முன்பின்னாக நோர்வேயில் ஒரு தமிழ்ப்பெண்ணான ஹம்சாயினி நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருப்பதையம்,கனடாவில் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஹரி ஆனந்தசங்கரி மீண்டும் தெரிவு செய்யப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்ட வேண்டும்.
   தமிழ் டயாஸ்பொற ஒரு தவிர்க்க முடியாத சக்தியாகவும் அழுத்தப் பிரயோக சக்தியாகவும் காசுகாய்க்கும் மரமாகவும் தாயகத்தில் கட்சி அரசியல் மற்றும் செயல்வாத நடவடிக்கைகளில் நிர்ணயகரமான செல்வாக்கைச் செலுத்தும் ஒரு சூழலில் உலகப் பேரரசு ஒன்றின் தலைநகரிலிருந்து ஜனாதிபதி அந்த அழைப்பை விடுத்திருக்கிறார். டயாஸ்பொறவை கையாண்டால் நிலைமையை குறிப்பிடத்தக்க அளவுக்கு சமாளிக்கலாம் என்று ஒரு முடிவுக்கு அரசாங்கம் வந்துவிட்டதாகத் தெரிகிறது.
   ஆனால் இந்த அரசாங்கம்தான் சில மாதங்களுக்கு முன்பு டயாஸ்பொற அமைப்புக்களையும் நபர்களையும் தடைசெய்தது. அவ்வாறு தடை செய்யப்பட்ட நபர்களும் அமைப்புகளும் ஏற்கனவே முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் தடை நீக்கப்பட்டவர்களே. அவர்களை தடையை நீக்கிய ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் மேற்கத்தைய நாடுகளுடன் இணைந்து தமிழ் டயாஸ்பொறவை வசப்படுத்த முயற்சித்தது. அதன்மூலம் தமிழ் டயாஸ்பொறவில் பிரிவினைகளையும் ஏற்படுத்தியது. ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களால் பிரித்தாளும் தந்திரம் மிக்க ஒருவராக பார்க்கப்படுகிறார். அவர் தமிழ் டயாஸ்பொறவை குறிப்பிடத்தக்க அளவுக்குப் பிரித்தாண்டார். அதன்மூலம் ஜெனிவாக் கூட்டத்தொடர்களில் புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகம் இரண்டுபட்டு நின்றது. இது ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஐநாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் தமிழ் மக்களை கையாள்வதற்கான வழிகளை ஒப்பீட்டளவில் இலகுவாக்கி கொடுத்தது.
   ஆனால் ராஜபக்சக்கள் மறுபடியும் ஆட்சிக்கு வந்தபின் அந்த அமைப்புகளையும் தனி நபர்களையும் மறுபடியும் தடை செய்தார்கள். எனினும் அவ்வாறு தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பின் தலைவரான கத்தோலிக்க மதகுரு இப்பொழுதும் யாழ்ப்பாணத்தின் தெருக்களில் லேடிஸ் சைக்கிளில் வழமைபோல நடமாடித் திரிகிறார். கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த புதிதில் தன்னை மூன்றில் இரண்டு தனிச் சிங்கள வாக்குகளால் வெற்றி பெற்ற ஓர் அரசாங்கமகவே கட்டிக்கொண்டது. ஆனால் ராஜபக்சக்களின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின் தொடக்கத்திலிருந்தே வைரஸ் அரங்கினுள் பிரவேசித்தது. இதனால் ஏற்கனவே சரிந்து போயிருந்த பொருளாதாரம் மேலும் திணறியது. தவிர மேற்கு நாடுகள் மற்றும் ஐநா வின் அழுத்தமும் அதிகரித்தது. இவற்றின் விளைவாக ராஜபக்சக்கள் மேற்கையும் ஐநாவையும் நோக்கிய தமது அணுகுமுறைகளை தளர்த்த தொடங்கினார்கள். பசில் ராஜபக்சவை முன்னிறுத்தி ராஜிய மாற்றங்களை அவர்கள் முன்னெடுத்தார்கள். பசில் ராஜபக்ச, புதிய வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ் ,இந்தியாவுக்கான தூதர் மிலிந்த மொரகொட போன்றோரை முன்னிறுத்தி அரசாங்கம் மேற்கையும் இந்தியாவையும் ஐநாவையும் சுதாகரிக்கும் வேலைகளை தொடங்கியது. அந்த வேலைகளின் ஒரு பகுதியாகவே ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அதே உபாயத்தை அதாவது தமிழ் டயாஸ்பொறவை அரவணைத்துப்பிரிக்கும் உத்தியை அரசாங்கம் கையிலெடுத்திருக்கிறதா?
   அமெரிக்காவில் ஜனாதிபதி ஆற்றிய உரை அதைத்தான் நமக்கு உணர்த்துகிறது. அவர் உள்ளகப் பொறிமுறைக்கு புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்திடம் ஆதரவை கேட்கிறார். அதோடு தமிழ் டயஸ்போறாவை நாட்டில் வந்து முதலீடு செய்யுமாறு கேட்கிறார். இது ஒரு உத்தி மாற்றம். அரசாங்கம் தமிழ் டயாஸ்பொறவின் இன்றியமையாத் தன்மையை விளங்கியிருப்பதை இது உணர்த்துகிறது.
   இது விடயத்தில் டயாஸ்பொறவும் உட்பட முழுத்தமிழ் சமூகமும் மாறிவரும் புதிய சூழலை தொகுத்தும் பகுத்தும் கற்றுக்கொள்ளவேண்டும். எந்த அமெரிக்கா சவேந்திர சில்வாவை நாட்டுக்குள் வரக்கூடாது என்று பயணத் தடை விதித்ததோ அதே அமெரிக்காவில் கோட்டாபய ராஜபக்ஷ ஐநா பொதுச்செயலரை சந்திக்கிறார். ஐநாவில் உரை நிகழ்த்துகிறார். ஏறக்குறைய இதே காலப்பகுதியில்தான் சற்று முன்னதாக அவருடைய தமையனார் மஹிந்த ராஜபக்ச இத்தாலிக்கு போயிருந்தார். அங்கேயும் அவர் ஓர் அனைத்துலக மாநாட்டில் உரை நிகழ்த்தினார். தமிழர்கள் இங்கே ஒரு முக்கியமான விடயத்தை கவனிக்க வேண்டும். இந்த இரண்டு சகோதரர்களும் அரசியல் தீர்மானம் எடுத்து வழிநடத்திய ஒரு யுத்ததத்தில் உத்தரவுக்கு கீழ்படியும் கருவியாக செயல்பட்ட ஒரு தளபதியை அமெரிக்கா நாட்டுக்குள் வரக் கூடாது என்று தடை செய்திருக்கிறது. அவரைப் போல மேலும் சில தளபதிகளை மேலும் சில மேற்கு நாடுகளும் குறிப்பாக ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் தடை செய்திருப்பதாக அறியமுடிகிறது.
   ஜனாதிபதியின் மூளை என்று கருதப்படும் வியத்மக சிந்தனைக் குழாத்தின் இணையதளத்தில் கலாநிதி பாலித கோகன்ன-இப்பொழுது சீனாவுக்கான தூதுவராக இருப்பவர் -ஆற்றிய உரை ஒன்று உண்டு. அதிலவர் அவ்வாறு தமது தளபதிகள் வெளிநாடுகளில் படிக்கும் தமது பிள்ளைகளை சந்திக்க முடியாதிருப்பதைக் குறித்து கருத்துக் கூறியுள்ளார். இவ்வாறு தளபதிகளை நாட்டுக்குள் வரவிடாது தடுக்கும் மேற்கத்தைய அரசுகள் அந்த தளபதிகளுக்கு உத்தரவிட்ட அரசியல் தலைவர்களை நாட்டுக்குள் அனுமதிப்பதை எப்படிப் பார்ப்பது? ஏய்தவர்களை தண்டிக்காமல் அம்புகளை தண்டிக்கும் இந்த அரசியலில் இருந்து தமிழ் மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அமெரிக்காவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதியை அந்நாட்டின் அரசுப் பிரதானிகள் சந்திக்கவில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். மேற்கு நாடுகள் இலங்கை தொடர்பாக எவ்வாறான அணுகுமுறையைக் கொண்டிருக்கின்றன என்பதை இது உணர்த்துகிறது. ஓர் அரசுடைய தரப்பாக சிங்கள மக்களுக்குள்ள வசதி வாய்ப்புகளையும் இது காட்டுகிறது. இந்த அரசியலை சரியாக விளங்கிக் கொண்டால்தான் ஜனாதிபதியின் அழைப்பை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து தமிழ் டயாஸ்பொற ஒரு பொருத்தமான முடிவை எடுக்கலாம்.
   ஜனாதிபதியின் அழைப்புக்கு தமிழ் டயாஸ்பொறவிலுள்ள எட்டு அமைப்புகள் பதில் வினையாற்றியுள்ளன. இது விடயத்தில் தமிழ் டயாஸ்பொற ஒரே கட்டமைப்பாக இல்லை. தமிழ் டயாஸ்பொற எனப்படுவது ஒன்றுபட்ட ஒரு கட்டமைப்பல்ல. அதில் பல அடுக்குகள் உண்டு. பல்வேறு கருத்து நிலைகள் உண்டு. இந்த பல்வகைமையை ரணில் விக்கிரமசிங்க தனக்கு வசதியாகக் கையாண்டார். இப்போதுள்ள அரசாங்கமும் அவ்வாறு கையாளத்தக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு. தாயகத்து கட்சிகள் செயற்பாட்டாளர்களுக்குள்ள அதே நோய் டயாஸ்பொறவிலும் உண்டு. இது விடயத்தில் டயாஸ்பொற தன் பலமுணர்ந்து,தேவையுணர்ந்து தீர்க்கதரிசனத்துடன் ஒன்றுபட்டு முடிவெடுக்குமா?
    
   https://globaltamilnews.net/2021/166745
    
    
  • By கிருபன்
   ஊசிக் கதைகள் -நிலாந்தன்!
   September 26, 2021
    
   கட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு, பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல் விசேட வைத்திய நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். நேற்று முன்தினம் அதாவது கடந்த 24ஆம் திகதியிலிருந்து பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் தொடக்கப்படுவதையொட்டி மேற்கண்டவாறு கூறியுள்ளார்கள். கொரோனா வைரஸ் தோன்றிய காலமிருந்தே அதுதொடர்பான கட்டுக்கதைகளும் தோன்றத் தொடங்கின.
   கிளிநொச்சியில் நடந்த ஒரு கதை வருமாறு. ஐரோப்பாவில் வசிக்கும் ஒருவர் கிளிநொச்சியிலுள்ள உறவினருக்கு ஒரு காணொளியை அனுப்பியிருக்கிறார். காணொளியில் தான் தடுப்பூசி பெற்றுக் கொண்டபின் தனக்கு காந்த சக்தி ஏற்பட்டதை நிரூபிக்கும் விதத்தில் ஊசி போட்ட இடத்தில் ஒரு சவர அலகை வைத்து அது ஒட்டிக் கொண்டிருப்பதை படம் பிடித்து அனுப்பியிருக்கிறார். அதைப்பார்த்த கிளிநொச்சியிலுள்ள அவருடைய உறவினர் காணொளியை தனக்கு தெரிந்த ஒருவருக்கு காட்டியிருக்கிறார். அதைப்பார்த்த மற்றவர் தான் ஊசி ஏற்றிக் கொண்ட பின் தனது கையில் ஒரு சிறிய கத்தியை வைத்து பார்த்தாராம். அது ஒட்டிக் கொண்டு விட்டதாம். அதைப் படம் எடுத்து தனக்கு ஐரோப்பாவிலிருந்து வந்த காணொளியை காட்டியவருக்கு அனுப்பியிருக்கிறார்.
   ஊசி போட்டால் உடலில் காந்த சக்தி ஏற்படும் என்பது அல்லது உடல் ஒரு உயிருள்ள காந்தமாக மாறிவிடும் என்ற கருத்து முதலில் வட இந்தியாவில்தான் தோன்றியது. அங்கே ஊசி போட்டபின் ஒருவருடைய உடலில் அசாதாரணமாக காந்தசக்தி பெருகி அருகில் உள்ள உலோகங்கள் ஒட்டிக் கொள்வதை காட்டும் ஒரு காணொளி முதலில் வெளியாகியது. அது இப்போதும் நம்பப்படும் கதையாக உள்ளது.
   இரண்டாவது கதையில் எனது நண்பர் ஒருவர் சொன்னார் தடுப்பூசி எடுத்த பின் தன்னுடைய மாமனாரின் குருதிக் குளுக்கோசின் அளவு ஒப்பீட்டளவில் குறைந்துவிட்டதாக. இன்ஷ்யூரன்ஸ் முகாமையாளர் ஒருவர் என்னிடம் கேட்டார் சினோபாம் போட்டால் ஆஸ்துமா கட்டுப்படும் என்று கூறுகிறார்களே உண்மையா ? என்று.
   மூன்றாவது கதை நாட்டின் தலைநகரத்தில் நடந்தது. கொழும்பு மாவட்டத்தில் பைஸர் தடுப்பூசி இல்லாத போது ஏனைய தடுப்பூசியை பெற மனதில்லாமல் 20 தொடக்கம் 30 வயது வரையானவர்கள் பலரும் மீளத் திரும்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மாநகரசபையின் பிரதான மருத்துவர் ருவன் விஜயமுனி இதனை தெரிவித்துள்ளார். இவ்வாறு தடுப்பூசி பெறாமல் திரும்புவோரின் எண்ணிக்கை 30 வீதமாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பு ஊசி ஏற்றும் திட்டத்தை அரசாங்கம் அறிவித்தது. அதில் ஒரு அரசியல் பொருளாதார நோக்கம் உண்டு. உழைப்புச் சக்தி அதிகமுடைய அதேசமயம் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம் உள்ளவர்களை தடுப்பூசி போட்டு மேலும் பாதுகாப்பதன்மூலம் நாட்டின் உழைப்பாளிகளைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் நோக்கம்.
   ஆனால் நாட்டில் தற்போது 20-30வயதுக்கு இடைப்பட்ட இளையோரி டையே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் ஆர்வம் குறைவடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். தடுப்பூசி ஏற்றிக்கொண்டால் பாலியல் சக்தி குறையும்; சந்ததி விருத்தி பாதிப்புறும் என சமூக ஊடங்களில் வெளியான தகவல்களால் இளைஞர், யுவதிகள் மத்தியில் தடுப்பூசி பெறும் ஆர்வம் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். ஆனால் இது உலகில் எந்த ஒரு ஆராய்ச்சியின் மூலமும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே இளைஞர்,யுவதிகள் அச்சமின்றி தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
   இளைஞர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு தயங்குவது நாட்டை ஆபத்துக்குள்ளாக்குகின்றது என அரசமருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சமூகத்தில் வைரஸ் தொற்று அதிகரிக்கும் ஆபத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசி நிலையங்களிற்கு வரும் இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இளைஞர்கள் மோசமான பாதிப்புகளை எதிர்கொள்ளாத நிலை காணப்படலாம். ஆனால் அவர்கள் சமூகத்தில் வைரஸ் சுமைகளை அதிகரிப்பார்கள் என தெரிவித்துள்ள அவர் சமூகத்தில் வைரஸ் சுமைகள் காணப்பட்டால் அதனால் புதிய திரிபுகள் உருவாகலாம் என தெரிவித்துள்ளார். அவ்வாறான சூழ்நிலையில் திரிப்படைந்த வைரஸ் சமூகத்திற்குள்ளிருந்து உருவாகக்கூடும். தடுப்பூசிகளால் அதனை கட்டுப்படுத்தமுடியாத நிலை காணப்படலாம், இதன்காரணமாகவே வைரஸ் சுமைகளை குறைப்பதற்கு தடுப்பூசியை செலுத்தவேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை செய்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
   நாலாவது கதையில் சம்பந்தப்பட்டவர் உள்ளூர் மருத்துவம், இயற்கை உணவு போன்றவற்றில் நாட்டம் உடைய ஒருவர். அவர்தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. ஏனென்றால் அது ஒரு சீனச்சதி என்று சொன்னார். அப்படியென்றால் உலகில் அதிகம் பேர்,அதாவது இதுவரை 200 கோடிக்கு மேற்பட்டவர்கள் சீனத்தடுப்பூசியை பெற்றிருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டினேன். அவர் சொன்னார் இருக்கலாம் ஆனால் சீனா உலகின் ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்றாற்போல பொருட்களை உற்பத்தி செய்கிறது. அது குழந்தை பிள்ளைகளுக்காக உற்பத்தி செய்யும் விளையாட்டு பொருட்கள் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு தரத்தில் காணப்படுகின்றன. மேற்கு நாடுகளுக்காக உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களில் உயர்தரம் பேணப்படும். ஆனால் ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்கு அனுப்பப்படும் உற்பத்திகளில் அதிகம் ரசாயனம் இருக்கும். அது குழந்தைகளுக்கு தீங்கானதாகவும் இருக்கும். எனவே சீனா எதைச் செய்தாலும் அதில் ஒரு வணிக நோக்கம் இருக்கும். எங்களுக்கு தரப்பட்டு ஊசி அப்படி ஒன்றாக இருக்கலாம் என்று சொன்னார்.
   அரசு ஊழியரான தன்னுடைய மனைவி உத்தியோக நடைமுறைகளின் படி ஊசி போட வேண்டியிருந்தது என்றும் அவ்வாறு ஊசி போட்டுக் கொண்ட பின் அவருடைய உடலில் தசைகளில் மென்மைத் தன்மையும் எலும்புகளில் பலவீனமும் தோன்றியிருப்பதாக அவர் சொன்னார். இதை ஒரு ஊகமாக வைத்துக் கொண்டிருக்காமல் ஏன் உரிய மருத்துவர்களிடம் சென்று பரிசோதிக்ககூடாது என்று கேட்டேன். கொரோனா வைரஸ் மருத்துவர்களை மட்டுமல்ல மனித குலத்தின் அறிவியல் சாதனைகள் பலவற்றையும் நிர்வாணமாக்கி விட்டது என்றும் அவர் சொன்னார். இது நாலாவது கதை.
   மேற்கண்டவை யாவும் பெரும்பாலும் சீனத்துத் தடுப்பூசி பற்றிய கதைகள். சீனாவை குறித்தும் அதன் உற்பத்திகளை குறித்தும் அப்படிப் பல சந்தேகங்கள் உலகில் உண்டு. இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு முன்னரான ஒரு காலப்பகுதியில் யூதர்களை குறித்தும் உலகில் ஒரு பகுதியினர் அவ்வாறு சந்தேகித்தார்கள். குறிப்பாக ஐரோப்பாவில் இயற்கை அனர்த்தங்கள் பஞ்சம் என்று ஏதாவது வந்தால் அது யூதர்களின் பில்லி சூனிய வேலையாகத்தான் இருக்கும் என்று நம்பிய ஒரு காலம் உண்டு. இவர்கள் பில்லி சூனியக்காரர்கள் மந்திர தந்திரங்களில் தேர்ந்தவர்கள் என்ற ஒரு நம்பிக்கை நிலவியது. யூத இனப்படுகொலையை ஊக்குவித்த காரணிகளில் அதுவும் ஒன்று. யூதர்களைப் போலவே சீனர்களைப் பற்றியும் குறிப்பாக வைரசுகுப்பின் பல்வேறு விதமான மர்மக் கதைகள் உண்டு. இக்கதைகளில் பல சூழ்ச்சிக் கோட்பாடுகளில் இருந்து உற்பத்தியாகின்றன. சீனர்கள் எதை செய்தாலும் உள்நோக்கத்தோடுதான் செய்வார்கள் என்று நம்பும் ஒரு நிலைமையை கொரானா வைரஸ் கொண்டு வந்துவிட்டது.
   ஆனால் உலகில் அதிக தொகையினர் அதாவது 200 கோடிக்கும் அதிகமானவர்கள் சீன ஊசியைத்தான் போட்டிருக்கிறார்கள். இலங்கைதீவில் நானும் உட்பட லட்சக்கணக்கானவர்கள் சீனத்து ஊசியைதான் பெற்றுக்கொண்டோம். சீனாவின் ஊசிக்கு பின்னால் சூதான நோக்கங்கள் ஏதாவது இருக்குமா இல்லையா என்பதை சோதிக்கும் பரிசோதனைக் கூடமாக மாற்றப்பட்ட கோடிக்கணக்கான உடல்களில் என்னுடையதும் ஒன்று.
   இவ்வாறு சீனத் தடுப்பூசிகளை குறித்து ஐரோப்பாவிலும் அச்சம் இருப்பதனால்தான் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் தமது நாட்டுக்குள் வருபவர்கள் சீன தடுப்பூசிகளை போட்டிருந்தால் குறிப்பிட்ட காலம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கிய பின்னரே நாட்டுக்குள் பிரவேசிக்கலாம் என்று அறிவித்திருக்கின்றன. அவ்வாறு குறிப்பிட்டகாலம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் பொழுது அதற்கு வேண்டிய செலவையும் குறிப்பிட்ட பயணிதான் பொறுப்பேற்க வேண்டும். அவ்வாறு நட்சத்திர விடுதிகளில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளானால் அதற்குரிய செலவு சில சமயம் விமான டிக்கெட்டைவிட அதிகமாக இருக்கும் என்ற அச்சம் உண்டு. இதனால் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்கள் குறிப்பாக அமெரிக்க இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் சீனத் தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதற்கு தயங்குகிறார்கள். அதனால்தான் வடக்கு-கிழக்கில் மன்னார் மாவட்டத்தில் பைசர் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டபோது யாழ்ப்பாணத்தில் இருந்தும் புத்தளம் சிலாபம் போன்ற பகுதிகளில் இருந்தும் அதிகமானவர்கள் பொய்யான ஆவணங்களைக் காட்டி மன்னாருக்கு சென்று பைசர் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டார்கள். இவ்வாறான முறைகேடுகளை முன்வைத்து அரசாங்கம் பைசர் தடுப்பூசியை நிர்வகிக்கும் பொறுப்பை முழுக்க முழுக்க படைத்தரப்பிடம் ஒப்படைத்தது.
   ஆனால் மேற்கத்திய தயாரிப்புகளான பைசர் அல்லது மொடோனா தடுப்பூசிகள் மீதான மோகம் என்பது ஒருவித வெள்ளைக்கார மோகமாகவும் அல்லது சீன தயாரிப்புகள் மீதான சந்தேகமாகவும் காணப்படுகிறது. இலங்கைக்கு அதிகளவு தடுப்பூசிகளை வழங்கிய நாடு சீனா. ஆனால் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அரசாங்கம் பைசர் தடுப்பூசிகளை வழங்கியது தொடர்பில் நாட்டில் சர்ச்சைகள் ஏற்பட்டன. அம்பாந்தோட்டையில் ஒரு துறைமுகம் இருப்பதனால் அங்கு பைஸர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக அரசாங்கம் கூறியது. அப்பொழுது ஒரு முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டார் கொழும்பில் இருப்பது துறைமுகம் இல்லையா என்று. ராஜபக்சக்கள் தமது சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டைக்கு ஏன் பைசர் ஊசிகளை கொடுத்தார்கள்? அவர்களுடைய இதயத்தில் வீற்றிருக்கும் சீனா தயாரித்த சீன தடுப்பூசிகளை ஏன் கொடுக்கவில்லை? அதைவிட முக்கியமான கேள்வி நாட்டை ஆளும் குடும்பம் எந்த ஊசியை ஏற்றிக் கொண்டது? யாருக்காவது தெரியுமா?
   அதேசமயம்,குறைந்த விலையில் கொள்வனவுச் செய்யக்கூடிய சீனத் தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசிக்கு ஏன் அதிக விலை கொடுக்கப்படுகிறது ? என அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. இலங்கையிலும் உலகெங்கிலும் மிகவும் விரும்பப்படும் பைஷர்,மொடர்னா தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு பதிலாக சீனத்தடுப்பூசிகளை அதிக விலைக்கு கொள்வனவு செய்வது ஆச்சரியமாக இருக்கிறது என மேற்படி சங்கம் தெரிவித்துள்ளது. பொது நிதி பயன்படுத்தப்படுவதால், இதுதொடர்பில் அதிகாரிகள் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என அச்சங்கத்தின் தலைவரான ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். உலகின் ஏனைய இடங்களில் சினோபார்ம் தடுப்பூசியானது ஒரு டோஸுக்கு 10 முதல் 14 டொலருக்கு கொள்வனவு செய்யப்படுகிறது. அதே நேரத்தில் இலங்கை தடுப்பூசியை 15 டொலருக்கு கொள்வனவு செய்கிறது எனவும் அவர் தெரிவித்தார். இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 22 மில்லியன் தடுப்பூசிகளில் 17 மில்லியன் தடுப்பூசிகள் சீனாவிலிருந்து வந்தவையாகும்.அதாவது நாட்டில் தடுப்பூசிக்குள் கொமிஷன் இருக்கிறது என்று பொருள்.
   மக்களுக்கான வக்சின் கூட்டமைப்பு என்ற உலகளாவிய அமைப்பு கடந்த மே மாதம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் covid-19 வைரஸானது ஒன்பது புதிய கோடீஸ்வரர்களை உருவாக்கியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது. இந்த ஒன்பது கோடீஸ்வரர்களும் நிகர லாபமாக 19.3 பில்லியன் டொலர்களை பெறுகிறார்கள் என்றும் குறைந்தளவு வருமானம் பெறும் நாடுகளிலுள்ள முழு மக்களுக்கும் 1.3 தடவைகள் வக்சினேற்ற இந்தக் காசு போதும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்திருந்தது.
   மேற்படி அமைப்புக்குள் அங்கம் வகிக்கும் ஒக்ஸ்பாமின் சுகாதார கொள்கை நிர்வாக முகாமையாளரான அனா மரியோட் “இந்த கொடூரமான நோயைக் கட்டுப்படுத்துவதற்கான எமது கூட்டுக் தோல்வியை நாங்கள் சாட்சியம் செய்கிறோம். தங்கள் மிகவிரைவாக புதிய கோடீஸ்வரர்களை உருவாக்கி இருக்கிறோம் ஆனால் கோடிக்கணக்கான மக்களுக்கு ஊசி போடுவதில் முழு அளவுக்கு தோல்வி அடைந்திருக்கிறோம்” என்று கடந்த மே மாதம் குறிப்பிட்டிருந்தார்.
   “தடுப்பூசித் தானம் தொடர்பாக உண்மையிலேயே நான் மிகுந்த விரக்தியில் உள்ளேன். உலகின் பல நாடுகள் முதல் டோஸ், இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்ள வழியில்லாமல் தவிக்கும் சூழலில் சில நாடுகள் மூன்றாவது டோஸை ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன. மூன்றாவது டோஸ் போடும் தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு தானமாகக் கொடுக்கலாம். இதுவரை உலகளவில் உற்பத்தியாகியுள்ள 4.8 பில்லியனுக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசியில் 75வீத தடுப்பூசிகள் 10 நாடுகளே பயன்படுத்தியுள்ளன. தடுப்பூசி அநீதியால் கொரோனா வைரஸ் மேலும் திரிப்படைந்து அச்சுறுத்தும். இந்த உலகில் உள்ள அனைவரும் பாதுகாப்பான நபராக மாறும்வரை எந்த ஒரு தனிநபரும் நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்று கூறமுடியாது”என்று உலக சுகாதார மையத் தலைவர் டெட்ரோஸ் அதானொம் கடந்த ஓகஸ்ட் மாதம் தெரிவித்துள்ளார்.
   இன்டர்நெற்றுக்குக்கு அடுத்தபடியாக மனிதகுலம் முழுவதையும் -எல்லாக் கண்டங்களையும் எல்லா மதங்களையும் எல்லா இனங்களையும் பண்பாடுகளையும்- மாஸ்க்கின் மூலம் ஒருங்கிணைத்தது covid-19தான். அதேசமயம் அந்த வைரசுக்கு எதிரான தடுப்பூசி உலகில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வைரஸ் உள்ளளவும் மாஸ்க் இருக்கும்;தடுப்பூசியும் இருக்கும்.தடுப்பூசி உள்ளளவும் தடுப்பூசி அரசியலும் ,தடுப்பூசி ஏற்றத்தாழ்வும் ;தடுப்பூசி வணிகமும்; தடுப்பூசி முதலாளிகளும்; தடுப்பூசிக் கள்ளர்களும் ; தடுப்பூசிக் கதைகளும் இருக்கவே செய்யும்.
   https://globaltamilnews.net/2021/166457
  • By கிருபன்
   ஜெனிவாவை நோக்கி ஒன்றுதிரள முடியாத தமிழர்கள் – நிலாந்தன்.
   September 12, 2021
    
   கடந்த 31ஆம் திகதி இலங்கை வெளிவிவகார அமைச்சு கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கும் ஐநாவுக்கும் ஓர் அறிக்கையை அனுப்பியது. ஆங்கிலத்தில் 14 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையின் தலைப்பு “மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைகள்” என்பதாகும். வரும் 14ஆம் தேதி தொடங்கவிருக்கும் ஐநா கூட்டத்தொடரையொட்டித் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையில் அரசாங்கம் பின்வரும் விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கிறது.
   முதலாவதாக அனைத்துலக விசாரணை மற்றும் அனைத்துலக தகவல் சேகரிப்பு பொறிமுறைகள் தொடர்பாக பின்வருமாறு கூறப்பட்டுள்ளது..“உள்ளகப் பொறிமுறைகள் சோர்வின்றி முன்னெடுக்கப்பட்டுவரும் ஒரு சூழலுக்குள் நாட்டுக்கு வெளியிலான வெளியக தகவல் சேகரிப்பு பொறிமுறைகளை அரசாங்கம் நிராகரிக்கிறது” பெருந்தொற்றுநோய்க்கு எதிராக அரசாங்கம் போராடிக் கொண்டிருக்கும் ஒரு பின்னணியில் அதற்காக பெருமளவு நிதி தேவைப்படும் ஒரு பின்னணியில் அனைத்துலக பொறிமுறைக்காக பெருமளவிலான ஒரு நிதி ஒதுக்கப்பட்டதை நியாயப்படுத்த முடியாது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக வெளியக தகவல் சேகரிப்பு பொறிமுறை என்பது “அரசியலாக்கப்பட்ட” ஒரு நடவடிக்கை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது சாராம்சத்தில் ஜெனிவாத் தீர்மானம் எனப்படுவது அரசியலாக்கப்பட்ட ஒன்று. அதாவது அரசியல் நோக்கங்களைக் கொண்டது என்றும் அது கூறுகிறது.
   பொறுப்புக்கூறல் என்பது சாராம்சத்தில் அரசியல்தான். இலங்கை மீதான அழுத்தம் என்பதும் அரசியல்தான். அது சீனாவுக்கு எதிரான அரசியல் என்பதில் சந்தேகமில்லை. அந்த அரசியலில் இனப்பிரச்சினை ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதும் உண்மைதான். இவ்வாறு வெளியகப் பொறிமுறைகளை அரசியலாக்கப்பட்ட ஒன்று என்று கூறி நிராகரிக்கும் அரசாங்கம் அதேசமயம் உள்ளகப் பொறிமுறைகளில் கடந்த 20மாதங்களில் தான் சாதித்தவைகள் என்றுகூறி மிகநீண்ட பட்டியல் ஒன்றை அங்கே முன்வைத்திருக்கிறது. இந்தப்பட்டியலில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் புள்ளிவிவரங்களை தொகுத்துப்பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. முன்னைய ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின் காலத்தில் நிலைமாறுகால நீதிச் செய்முறைகளுக்காக அதாவது பொறுப்புக்கூறலுக்காக உருவாக்கப்பட்ட கட்டமைப்புக்களின் இதுவரைகாலச் செயற்பாடுகள் என்று கூறப்படும் விடயங்கள் அங்கே தொகுக்கப்பட்டிருக்கின்றன.
   இதன்படி ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் உருவாக்கப்பட்ட காணாமல் போனோருக்கான அலுவலகம், இழப்பீட்டு நீதிக்கான அலுவலகம், ஓநூர்(ONUR) என்று அழைக்கப்படும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் போன்றவற்றின் செயல்பாடுகள் குறித்து விரிவான புள்ளிவிவரங்கள் அங்கே தொகுக்கப்பட்டிருக்கின்றன. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபொழுது மேற்படி கட்டமைப்புகளை சினேக பாவத்தோடு அணுகவில்லை. மாறாக அக்கட்டமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட வழங்கள் குறைக்கப்பட்டன. அக்கட்டமைப்புகள் நிதிஅமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டன. மேலும் அக்கட்டமைப்புக்களுக்கு ஐநா வழங்கிவந்த தொழில்சார் உதவிகள் கடந்த டிசம்பர் மாதத்தோடு நிறுத்தப்பட்டன. அதற்குரிய உடன்படிக்கை பின்னர் புதுப்பிக்கப்படவில்லை. இவை தவிர முக்கியமாக கடந்த 20 மாதங்களாக அரசாங்கம் முன்னெடுத்துவரும் ராணுவ மயமாக்கும் நடைமுறையின் கீழ் இந்த அலுவலகங்களுக்குள்ளும் ஓய்வுபெற்ற படைப்பிரதானிகள் நியமிக்கப்பட்டார்கள். அவ்வாறு நியமிக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய முன்னாள் பொலிஸ் மா அதிபர் சில வாரங்களுக்கு முன் சுகவீனம் காரணமாக இறந்து போய்விட்டார் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இவ்வாறு கடந்த 20 மாதங்களாக மேற்படி கட்டமைப்புகளை அரசாங்கம் மிகக்குறைந்த வளங்களோடு மந்தநிலையில் இயங்க அனுமதித்தது. கடந்த மாதம் கிளிநொச்சியில் காணாமல் போனோருக்கான அலுவலகம் ஒன்று ரகசியமாக திறக்கப்பட்டதையும் இங்கு சுட்டிக்காட்டலாம். இப்பொழுது மேற்கண்ட அலுவலகங்களின் செயற்பாடுகள் என்று கூறி அரசாங்கம் ஒரு பெரிய பட்டியலை முன்வைக்கின்றது. அதிலும் குறிப்பாக கடந்த பட்ஜெட்டின்போது இழப்பீட்டு நீதிக்கான அலுவலகத்துக்கு அதிகரித்த தொகை நிதி ஒதுக்கப்பட்டதை மேற்படி அறிக்கை மிகக்குறிப்பாக சுட்டிக்காட்டுகிறது.
   எனவே தொகுத்துப் பார்த்தால் ஒன்று தெரிகிறது. ரணில் விக்கிரமசிங்க உருவாக்கிய கட்டமைப்புகளை இந்த அரசாங்கம் உள்நோக்கத்தோடு பேணியிருக்கிறது. அதுமட்டுமல்ல கடந்த பட்ஜெட்டின்போது இழப்பீட்டு நீதிக்கான அலுவலகத்துக்கு அதிகரித்த நிதியை ஒதுக்கியமை என்பது ஜெனிவாவை நோக்கி செய்யப்பட்ட வீட்டுவேலைதான். இதை எனது கட்டுரைகளில் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறேன். எனவே ஐநாவுக்காக கண்துடைப்பாக ஒரு தொகுதி வீட்டு வேலைகளை செய்துவிட்டு அரசாங்கம் அவற்றை எல்லாம் அறிக்கையாகத் தொகுத்திருக்கிறது.
   இந்த அறிக்கை தொடர்பில் தமிழ் கட்சிகளும் குடிமக்கள் சமூகங்களும் குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களின் சங்கங்களும் எதிர்வினையாற்ற வேண்டியுள்ளது. இந்த அறிக்கையில் கூறப்படும் புள்ளிவிவரங்கள், தகவல்கள் தொடர்பில் ஐநாவுக்கும் உலகசமூகத்துக்கும் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு தமிழ்த் தரப்புகளுக்கு உண்டு. இதுதொடர்பில் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றில் பொறுப்பான பதவி வகிக்கும் எனது நண்பரொருவர் சுட்டிக்காட்டியது போல மேற்படி அறிக்கையில் உள்ள தகவல்களின் உண்மைத் தன்மை நாட்டிலுள்ள எல்லா தூதரகங்களுக்கும் நன்கு தெரியும். இது ஒரு சம்பிரதாய பூர்வமான அறிக்கைதான். ஆனால் அரசாங்கம் ஜெனிவாவை ஏதோ ஒருவிதத்தில் சுதாகரிக்க முற்படுகிறது என்பதனை அது நமக்கு உணர்த்துகிறது.
   மேற்கண்ட சுதாகரிப்புக்களின் மையமாக பசில் ராஜபக்ச காணப்படுகிறார். அவர் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பின் இலங்கைத் தீவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான வெளியுறவுச் சூழல் ஒப்பீட்டளவில் மாற்றம் அடைந்திருக்கிறது. பஸில் நிதியமைச்சராக வந்ததால் நாட்டின் நிதிநிலைமை தேறியதோ இல்லையோ இலங்கைத் தீவுக்கும் மேற்கு நாடுகள் மற்றும் இந்தியாவுக்கும் இடையிலான வெளிவிவகாரச் சூழலை அவர் மாற்றத்தொடங்கியிருக்கிறார். புதிய வெளிவிவகார அமைச்சராக மேற்கிற்கு பிடித்தமான ஜி எல் பீரிஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். மிலிந்த மொரகொட ஒரு மூலோபாய திட்டத்தோடு இந்தியாவுக்கு போகிறார். அயோத்தியில் கட்டப்படும் சர்ச்சைக்குரிய ராமர் கோயிலுக்கு சீதா எலியவில் இருந்து ஒரு கல்லைக் கொண்டு போகிறார். அமெரிக்கா தலைமையிலான குவாட் நாடுகளுக்கு திருகோணமலையில் ஒரு தொகுதி காணி வழங்கப்படும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அரசாங்கம் மேற்கத்திய நிதி முகவர் அமைப்புகளான உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம் போன்றவற்றிடம் கடன்வாங்கத் தொடங்கியிருக்கிறது.
   உலக வங்கியும் பன்னாட்டு நாணய நிதியமும் நிபந்தனைகளோடுதான் கடனை வழங்கும். சீனாவை போல நிபந்தனையின்றி கடன் கொடுப்பதில்லை. அந்த நிபந்தனைகளில் மனித உரிமைகள் விவகாரம், இனப்பிரச்சினைக்கான தீர்வு,பொறுப்புக்கூறல் மற்றும் மானியங்களைக் குறைதல், வரிகளை அதிகரித்தல் போன்ற பல விடயங்களும் அடங்கி இருக்கக்கூடும். அதாவது பொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஏதோ ஒரு விதத்தில் மேற்கு நாடுகளுடன் சுதாரிக்க முற்படுவதை இது காட்டுகிறது. கடந்த ஜூலை மாதம் இருபத்தியோராம் திகதி ஜனாதிபதி தனது ட்விட்டர் செய்தியில் என்ன எழுதினார் என்பது பின் வரக்கூடிய நகர்வுகளை ஊகிக்க போதுமாக இருந்தது. அதாவது அரசாங்கம் மேற்கு நோக்கியும் இந்தியாவை நோக்கியும் சுதாகரிக்கத் தொடங்கிவிட்டது. அவ்வாறு சுதாரிக்க வேண்டிய ஒரு நிலைமையை covid-19 ஏற்படுத்தியிருக்கிறது.
   இங்கு குறிப்பாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் நிலைமாறுகால நீதிக்குரிய கட்டமைப்புக்களை தொடர்ந்து இயங்க விட்டமையும் கடந்த பட்ஜெட்டில் அந்தக் கட்டமைப்புகளில் ஒன்றுக்கு அதிகரித்த நிதி ஒதுக்கப்பட்டமையும்;ஒருதொகுதி அரசியல் கைதிகளை விடுதலை செய்தமையும்;பயங்கரவாதத் தடைச்சசடடத்தை திருத்தப் போவதாகக் கூறுவதும் ஐநாவில் எடுத்துக்காட்டுவதற்காக செய்யப்பட்ட வீட்டுவேலைகள்தான். அதாவது அரசாங்கம் ஒருபுறம் பொறுப்புக்கூறலுக்கான ஐநா தீர்மானத்துக்கு ரணில் விக்கிரமசிங்க வழங்கிய அனுசரணையில் இருந்து பின்வாங்கிவிட்டது. அதேநேரம் இன்னொருபுறம் ராஜபக்ச பாணியிலான ஒரு பொறுப்புக்கூறலுக்கு தயார் என்ற சமிக்கைகளை காட்டுகிறது. அதற்காக கடந்த 20 மாதங்களாக வீட்டு வேலைகளை செய்து வருகிறது.
   அவர்கள் ஓர் அரசுடையதரப்பு. எல்லாவற்றுக்கும் அவர்களிடம் கட்டமைப்புக்கள் உண்டு. வெளியுறவுக் கொள்கையில் சுதாகரிப்புக்களைச் செய்வது என்று முடிவெடுத்தபின் பசிலை கொண்டுவந்து ஒரு முக மாற்றத்தை காட்டிவிட்டு எல்லாவற்றையும் செய்கிறார்கள். அவ்வளவுதான். ஆனால் அரசற்றதரப்பு ஆகிய தமிழ் மக்கள் அதுவும் சிறிய மக்கள் கூட்டமாகிய தமிழ் மக்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? தமிழ்த்தரப்பு ஒருங்கிணைத்து வீட்டுவேலைகள் எதையும் செய்வதாகத் தெரியவில்லை. அதற்கு வேண்டிய கட்டமைப்புகளும் இல்லை. ஜெனிவாவை ஏற்றுக்கொண்ட கட்சிகளிடமும் அதற்குரிய கட்டமைப்புகள் இல்லை. வழிவரைபடங்கள் இல்லை. ஜெனிவாவுக்கு வெளியே போகவேண்டும் அனைத்துலக நீதிமன்றங்களுக்கு போகவேண்டும் என்று கேட்கும் கட்சிகளிடமும் அதற்கு வேண்டிய கட்டமைப்புகள் இல்லை.
   அரசாங்கத்திடம் எல்லாவற்றுக்கும் கட்டமைப்புக்கள் உண்டு. ஐநா ஓர் உலகளாவிய கட்டமைப்பு. அனைத்துலக நீதிமன்றங்களும் கட்டமைப்புகள்தாம். கட்டமைப்புக்களை எதிர்கொள்வதற்கு கட்டமைப்பு ரீதியாகத்தான் செய்யப்படலாம். அது அதற்குரிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். எந்தத் தமிழ்க் கட்சியிடம் அப்படிப்பட்ட கட்டமைப்புகள் உண்டு? கடந்த 20 மாதங்களில் அவ்வாறு உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளை கட்சிகள் முன் வைக்கட்டும் பார்க்கலாம்.
   இப்படிப்பட்டதொரு பரிதாபகரமான வெற்றிடத்தில்தான் கடந்தகிழமை தமிழ்க்கட்சிகள் ஜெனிவாவுக்கு கடிதங்களை அனுப்பின. வழமைபோல ஒரே கூட்டுக்குள் இருந்து கொண்டு இரு வேறுகடிதங்களை அனுப்பின. மொத்தம் 3 க்கும் குறையாத கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. ஒரு இத்துணூண்டு மக்கள்கூட்டம், ஏற்கனவே இனப்படுகொலையால் சிறுத்துப்போன ஒரு மக்கள் கூட்டம், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி மக்கள் புலம்பெயர்ந்து சென்றதால் நீர்த்துப்போன ஒரு மக்கள்கூட்டம், கட்சிகளாகவும் அமைப்புக்களாகவும் சிதறிக் காணப்படுகிறது. கடந்த 20 மாதங்களாக செய்த வீட்டுவேலைகளும் குறைவு. அதிலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு வீட்டுவேலையைக்கூட ஒற்றுமையாக செய்ய முடியவில்லை.
   ஆனால் அரசாங்கம் செய்திருக்கிறது. அது ஒரு சம்பிரதாயபூர்வமான வீட்டு வேலைதான். அந்த வீட்டுவேலை இறுதி விளைவை தீர்மானிக்காது. இறுதி விளைவைத் தீர்மானிக்கப் போவது குவாட் நாடுகளுக்கு திருகோணமலையில் காணிகளை கொடுப்பதா இல்லையா என்ற தீர்மானம்தான். மேற்கத்தைய நிதி முகவரமைப்புக்களின் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்வதா இல்லையா என்று முடிவெடுப்பதுதான். ஏனென்றால் அரசாங்கம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது போல தூய பொறுப்புக்கூறல், தூய நீதி என்று எதுவும் கிடையாது. எல்லாமே அரசியலாக்கப்பட்ட நீதிதான்.
    
   https://globaltamilnews.net/2021/165839
    
 • Topics

 • Posts

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.