Jump to content

“மணியண்ணை ரைட்“ - Dr. T. கோபிசங்கர்


Recommended Posts

“மணியண்ணை ரைட்“

திரும்பி பளிச் எண்டு சாயத்தோட சப்பின வெத்திலையை பூவரசு மரத்தடீல துப்பிப்போட்டு ,காலாலை மண்ணை தள்ளி மூடீட்டு , மூடி வெட்டின ரின் பால் பேணியால தண்ணியை அள்ளி வாயை கொப்பிளிச்சிட்டு, அந்த பழைய யானை மார்க் சோடாப் போத்தலில இருக்கிற பிளேன் ரீயை சூடோட விழுங்கிப்போட்டு, மீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளம் போல, பாதி உடைஞ்ச அரி கல்லுக்கு மேல ஆச்சி திருப்பி வந்து இருந்தா.

முன்னால கவிட்டு வைச்ச பக்கீஸ் பெட்டிக்கு மேல விரிச்சு வைச்ச வீரகேசரி , சில வேளை அதுக்கும் மேல பழைய பொலித்தீன் இருக்கும்.

வரேக்க மறக்காம புடுங்கிக் கொண்டு வந்த பூவரசம் கொப்பால இலையானை கலைச்சு கொண்டு தண்ணியை தெளிச்சிட்டு கும்பலா இருந்த ஒட்டியை பக்க வாட்டில அடுக்கி , வாங்கின கணக்கு , அள்ளுற கையில குத்து மதிப்பான நிறை , அன்றைய சந்தை விலை எல்லாம் மனதில வைச்சு கும்பல் கும்பலா மீனை பிரிச்சு வைச்சு கொண்டு அடுத்த வாடிக்கையாளருக்காக ஆச்சி பாத்துக்கொண்டிருந்தா.

“எணை ,பொயிலை காம்பு துண்டொண்டு தாவன்” எண்டு மீன் பெட்டியை தூக்கிக் கொண்டு வந்த பெடி கேக்க , வலது பக்கத்து இடுப்பில இருந்த வெள்ளி லக்ஸ்பிறே bag ஐ தூக்கி குடுத்திட்டு இடது பக்கத்து சீலைத்தலப்பை கொஞ்சம் இறுக்கி செருகினா ஆச்சி . அவனும் “பொயிலைக் காம்போட இரண்டு சீவலும் கொஞ்ச சுண்ணாம்பும் எடுத்தனான்”எண்டு திருப்பிக் குடுத்தான்.

எல்லா வீட்டையும் மீன் வாங்க எண்டு தனி ஒரு bag இருக்கும் . ஒரு பழைய வயர் bag , கிழிஞ்ச ஓட்டைகளில பழைய துணியால ஒட்டுகள் போட்டு இருக்கும் . அதோட அதுக்குள்ள கசங்கிப் போன இரண்டு சொப்பிங் bag (ஏதோ கழிச்சுவிட்ட சாமானை வாங்கப் போற மாதிரி).

மீன் வாங்கினாப்பிறகு “தம்பி bag வேணுமோ” எண்டு ஆச்சி கேக்க, சும்மா தாறாங்களாக்கும் எண்டு ஓம் எண்டால் bagல போட்டு தந்திட்டு , போகேக்க முன்னால bag காசு இரண்டு ரூபா குடுத்திட்டு போங்கோ எண்டுவா ஆச்சி. சந்தை வாசலில பழைய காலத்திலசீமெந்து bag பிறகு சொப்பிங் bagம் கறுத்த பெரிய கொஞ்சம் பாரம் தாங்க கூடிய Tulip எண்டு எழுதின bagம் விக்க இருக்கும்.

மீன் வாங்க சந்தைக்குள்ள போகேக்க பளுவேட்டையார்களை ஞாபகப்படுத்தும் உருவங்களை தாண்டி ஆச்சி மாரிட்ட போறது கொஞ்சம் பேசி கீசி வாங்கலாம் எண்டு. ஆனால் என்ன ஆச்சி கூடச்சொல்லிறியள் , மீனை பாத்தா நாறலா இருக்கு எண்டு ஏதாவது தேவேல்லாமல் சொல்லீட்டமோ அவ்வளவு தான் . நல்ல தமிழ் மணம் , மீன் சந்தையையும் தாண்டி மணக்கும். அந்த அவமானத்துக்கு பயந்து சொல்லிற காசுக்கு மீனை வாங்கீடுவம் . எண்டாலும் போகேக்க இந்தா பிடி எண்டு இரண்டு extra மீனை bagகுள்ள போட்டு விட்டிட்டு நெஞ்சுக்குள்ள இருந்து கொட்டைப் பெட்டிய எடுத்து தாற மிச்சக்காசை வாங்கி பொக்கற்றுக்க வைக்காம அப்படியே கையில பொத்திக்கொண்டு திரும்பி வீட்டை வாறனாங்கள்.

பத்து மணி தாண்ட பக்கத்தில திரும்பி இதையும் கொஞ்சம் பார் எண்டிட்டு போய் , வீட்டை இருந்து இரவு இரண்டு மணிக்கு கடலுக்குப் போன அந்தாளுக்கு செஞ்சு குடுத்ததில மிச்சம் இருந்த உழுத்தங்களியை கட்டிக் கொண்டந்து தண்ணியோட விக்க விக்க உருட்டி விழுங்கீட்டு வந்து மீண்டும் அரட்டையும் வியாபாரமும் ஒண்டா தொடர்ந்தா ஆச்சி.

அப்ப ஆச்சிமார் மட்டுமே செய்யிற வியாபாரங்கள் சிலதுகள் இருந்தது. நல்லூரில இருந்து நாலு சந்தி வரை கடலைக் கடை எல்லாம் ஆச்சிமார் தான் . கடலைக்கடை ஆச்சிமார் எல்லாரும் காதிலும் பார்க்க பெரிசாக் கிழிஞ்ச ஓட்டை , அதில கிழிஞ்சு விழுறமாதிரி பித்தளை பாம்படத்தோடு , பவுண் மூக்குத்தி ,சுருங்கின நெத்தீல மூண்டு குறி , நல்ல வட்டமா பெரிய குங்குமம் எண்டு அம்சமாவகவே இருப்பினம் .

சந்தியில கடை வைச்சிருக்கிறவை வீட்டை இருந்தே கச்சான் வறுத்துக் கொண்டு வருவினம். நெஞ்சளவு உயர வாங்கில பனையோலை தட்டிப்பெட்டீல குவிச்சு வைச்ச கச்சானும் சோளனும் வைச்சிருப்பினம் . பள்ளிக்கூடம் முடிஞ்சு வாற மத்தியானம் வெய்யிலுக்க நிண்ட படியே கச்சான் விப்பினம்.

ஆனால் நல்லூர் திருவிழா மூட்டம் set up மாறும் ,கொஞ்சம் அகலமான வாங்கில இரண்டு பெட்டீல கச்சான் , ஒண்டில சோளம் , ஒரு போத்ததில்ல பட்டாணி இருக்கும் . ஒரு பக்கம் மண்ணைப் போட்டு கச்சானை வறுத்துக் கொண்டே வியாபாரமும் செய்வினம் . ஆக்கள் வந்தால் விறகை வெளீல இழுத்திட்டு , சுடு கச்சான் இரண்டை சாப்பிடக் குடுத்திட்டு , வியாபாரம் முடிஞ்சோன்ன விறகைத் திருப்பி தள்ளீட்டு திருப்பியும் வறுக்கத் தொடங்கீடுவினம்.

வறுத்த கச்சானை சுளகில பிடைச்சட்டு சாக்கில போட்டு கட்டீட்டு , உள்ள போன சனத்தின்டை கணக்கை கொண்டு புது மூட்டையை அவிப்பினம். கச்சான் விக்கிறதோட இலவச செருப்பு பாதுகாப்பு சேவை செய்வினம் , எப்படியும் செருப்பு எடுக்க வரேக்க கச்சான் வாங்குவினம் ஒரு நம்பிக்கையில. ஆனால் செருப்பு திருப்பி எடுக்கேக்க கச்சான் வாங்காட்டியும் ஒண்டும் கேக்கவும் மாட்டினம். குடும்பமாப் போய் தனித்தனிய கும்பிட்டிட்டு திரும்பி வாறாக்களுக்கு , “அம்மா அப்பவே போட்டா, வரேக்க நாளைக்கு மரக்கறியும் வாங்கிக்கொண்டு கெதியா வரச்சொன்னவ “ எண்டு information நிலையமாகவும் இருந்தவை. சரி இவ்வளவு சொல்லுதே எண்டு இரண்டு ரூவாய்க்கு கச்சான் கேட்டா , லாபம் தானே எண்டு பாக்காம அம்மாவும் வாங்கிக்கொண்டு போனவ எண்ட பதில் வரும் .

அந்தந்த ஊரில இருக்கிற , விளையிற சாமாங்களோட வீடு வீடா போய் ஆச்சி குறூப் ஒண்டும் இருந்தது.

வெங்காயம் , புளி , நல்லெண்ணை, எள்ளு, எள்ளுப்பாகு, ராச வள்ளிக் கிழங்கு, கரணைக்கிழங்கு ஊர் முட்டை எண்டு கொண்டு திரிஞ்சு விக்கிறவை . காலமை பஸ் ஏறி முன்னுக்கு டிரைவர் சீட்டுக்கு எதிரா இருப்பினம் அங்க தான் கடகத்தை வைக்க இடம் இருக்கும், பின்னால சீட்டில் வைச்சால் கொண்டக்டர் புறுபுறுப்பார்.இப்படி திரியிற ஒரு ஆச்சீன்டை கடகத்துக்குள்ள தான் மணியண்ணை ரைட் கியரைப் போட்டவர்.

போற வீட்டில எங்கேயும் தேத்தண்ணி சில வேளை சாப்பாடும் கிடைக்கும் ஆன படியால் கண்டபடி காசை வீணாக்க மாட்டினம்.

இந்த வியாபாரம் பரம்பரை பரம்பரையாக தொடருறதும் இருக்கு. இந்த ஆச்சி மார் எல்லாம் எனக்கெண்டால் ஒரே மாதிரித்தான் இருந்ததாக ஞாபகம் . பச்சை, சிவப்பு, ஊதா எண்டு ஒரு மூண்டு கலரில தான் சீலை அதுவும், கைத்தறிச் சீலை தான் கட்டி இருப்பினம். நடக்க வசதியா சீலையை கொஞ்சம் குதிக்காலுக்கு மேல உயத்திக் கட்டியிருப்பினம் . கச்சை அணியாத கைநீட்டு வெள்ளை பிளவுஸ் ஆனாலும் கசக்கிக் கட்டின கந்தலோட தான் வருவினம்.

வெத்திலைப் பை , கொட்டைப் பெட்டி , சுருக்குப் பை எல்லாம் இருக்க வேண்டிய இடத்தில இருக்கும் . சீலை சுத்தின திருகணை , அகண்ட கடகம், கடகத்துக்குள்ள விக்கிற சாமாங்கள் , காறாத்ததல் , அரைறாத்தல் ஒரு றாத்தல் எண்டு மூண்டு படியோட ஒரு திராசு இது தான் கொண்டு திரியிற சாமாங்கள். தம்பி ஒரு கை பிடிச்சு விடு எண்ட கேக்கிற முகத்தில நிறைய அமைதி , கடைவாயில வெத்திலைச் சாறு , anaemia வில வெளிறின சொண்டு, வலது கை சுண்டு விரல் நுனீல சுண்ணாம்பு இது தான் அந்த உருவம் . திருகணை இல்லாட்டி சீலைத்தலைப்பை சுத்தி தலையில வைச்சிட்டு மேல கடகத்தை வைப்பினம.

Head Balance எடுக்ககிறதுக்கு வைச்ச கடகத்தை மேல ஒரு எத்து எத்திப்போட்டு தோளை குலுக்கி இறங்கிற கடகத்தின்டை Centre of gravity ஐ சரியா பாத்து உச்சீல இறக்கிக் கொண்டு நடக்கத் தொடங்கிவினம். ஒரு கை கடகத்தை பிடிக்க மற்றது சும்மா வெத்திலை வாய்க்கு சுண்ணாம்பு தீத்திக் கொண்டு இருக்கும். சத்தியமாச் சொல்லுறன் இடை பெருத்த எந்த ஆச்சியையம் அப்ப காண ஏலாது. வித்துக் கொண்டு போய் தலையின்டை சுமை குறைய அகண்ட கடகத்தை அந்த ஒடுங்கின இடுப்புக்கு மாத்தி கொண்டு வீட்டை போவினம் . .

அதோட seasonal ஆச்சி மாரும் இருக்கினம் , மாசீல பனங்கிழங்கு , வைகாசீல பாலைப்பழம் , ஆவணீல மாம்பழம் , புரட்டாதீல பனங்காய் பணியாரம் , ஐப்பசீல நாவல் பழம் , கார்த்திகையில விளாம்பழம் எண்டு part time வேலை செய்யிற ஆச்சிகள் இவை. வீட்டில ஏதாவது வேலைக்கும் முதலே சொல்லி வைச்சா இரண்டு ஆச்சி மார் வருவினம் . மாசம் மாசம் மாவிடிச்சு நெல்லுக்குத்த , விசேசங்களுக்கு பலகாரம் சுட , சமைக்க எண்டு பல குறூப்பா இருப்பினம் . வெத்திலை கூறு, இரண்டு நேரம் பிளேன்ரீ , மத்தியானம் மரக்கறி சாப்பாடு முடிஞ்சு போகேக்க காசோட சுட்ட பலகாரம் இல்லாட்டி மிஞ்சின சோறும் கறியும் கட்டிக்குடுக்க வேண்டாம் எண்டு சொல்லாமல் வாங்கிக் கொண்டு போவினம் .

நாங்கள் ஆச்சி எண்டு கூப்பிட்டாலும் இவை அவ்வளவு oldies இல்லை . ஐம்பதை எட்டிற வயசு . பத்து பதினைஞ்சு வயசு வித்தியாசத்தில கட்டினவர் அநேமா குடிச்சே போய் சேந்திருப்பார் . கரைசேக்க இரண்டு குமர் , சொன்னா கேக்காத கழிசறை இரண்டு , கட்டினதைப் பெத்த உண்மையான கிழவி ஒண்டு , எண்டு எல்லாத்தையும் இவை தான் பா(மே)க்கிறவை.வீட்டு இறுக்கம் இவையில கொஞ்சம் வெளீலேயும் தெரியும்.

எல்லாப் பள்ளிக்கூட வாசலிலும் கடகம் ஒண்டோட ஒரு ஆச்சி மார் இருந்தவை. பரியோவானில பள்ளிக்கூட நேரம் எவருக்கும் போய் வர அனுமதி இல்லாத strict ஆன principal மார் காலத்திலும் , ஐஸ்கிறீம் சிவகுருக்கும் கச்சான் ஆச்சிக்கும் விசேட பாஸ் இருந்தது. தண்ணி டாங்குக்கு கீழை interval time ஆச்சி சேவிஸ் நடக்கும் . கச்சான் , சோளம் , மாங்காய் , பினாட்டு, பட்டுப்புளி எண்டு கட்டி கொண்டந்து வைச்சு விப்பா . ஆச்சிட்டை கூட்டமாப் போய் தள்ளி விழுத்தீட்டு களவெடுக்கிறதும் நடக்கிறது , அவவும் கோவம் வந்தா கடகத்தை மூடி வைச்சிட்டு சனம் குறைய திருப்பியும் விக்கத் தொடங்குவா , ஒரு நாளும் complain பண்ண மாட்டா.

எல்லாரிட்டை favorite ஆகவும் அதேபோல் அப்பப்ப அம்மாட்டை பேச்சு வாங்கவும் பல வீட்டில ஒரு ஆச்சி இருந்தவ. இவைக்கு வேலையே வெளி ஆச்சிமார் வந்தா அவயை மேக்கிறது தான். வீட்டை இருந்த ஆச்சி மாருக்கும் வீட்டுக்கு வாற ஆச்சி மாருக்கும் நடக்கிற கதையை வைச்சு 4 வருச episodes சீரியலே எடுக்கலாம் . வேலை முடிச்ச ஆச்சி சில்லாலை பஸ்ஸில ஏற, மணியண்ணை ரைட் எண்ட பயணம் மீண்டும் தொடர்ந்தது. எல்லாருக்கும் வீட்டு ஆச்சியோ வெளி ஆச்சியோ , ஆச்சி ஒரு special தான் . ஆச்சி எண்டது உருவப் பெயர் அல்ல உருவகப் பெயர், உணர்வுகளின்..

Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்

 • Like 4
 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கச்சான் விக்கிற கதிரைமலை ஆச்சி தான் உடன ஞாபகத்திற்கு வந்தவ, அவ கோவில்லயும் விப்பா. கோவில் இல்லா காலங்களில் வீடு வீடா கச்சானும் விப்பா.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மனோகரா தியேட்டருக்கு முன்னால் புல்லுக்கட்டு விக்கிற ஆச்சியை மறந்ததை மனவருத்தத்துடன் நினைவு கூறுகின்றேன்......நான் இருநாட்களுக்கு ஒருமுறை ஒரு கட்டு புல்லு ஆட்டுக்கு வாங்குவது வழக்கம்......(ஒரு கட்டு 10 சதம்).......!  👌

நன்றி நிழலி .....! 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

 • Topics

 • Posts

  • நூற்றில் ஒரு வார்த்தை டக்ளசு அவர்களே....! சும்மா இராது தமிழினத்தை இலங்கைத் தீவிலிருந்து அழித்துத் துடைத்துவிடத் துடிக்கும் சிங்களப் பிரமுகர்களின் கால்களை விடாது நக்கிக்கொண்டே இருந்தால்... சுதந்திரம் வந்து சேருதோ இல்லையோ, எலும்புகள் முழுமையாக வராவிட்டாலும், துண்டுகளாகவேனும் வந்து சேரும்.😁
  • மருந்து எதிர்ப்புத் திறன் காரணமாக லட்சக்கணக்கில் ஏற்படும் உயிரிழப்புகள் - அதிர்ச்சி அறிக்கை ஃபிலிபா ராக்ஸ்பி சுகாதார செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர்   பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, மாத்திரை மருந்துகள் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எதிர்கொள்ளும் திறன் கொண்ட பாக்டீரியா (நுண்ணுயிரி எதிர்ப்பு) தொற்று காரணமாக, கடந்த 2019ஆம் ஆண்டு உலகம் முழுக்க 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என ஓர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலேரியா அல்லது எய்ட்ஸ் ஆகிய நோய்களினால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட ஆன்டிபயாடிக் மருந்துக்கு எதிராக நோய்களுக்கு எதிர்ப்பாற்றல் கிடைப்பதால் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகம். உலகில் ஏழை நாடுகள் இந்த பிரச்சனையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என்றாலும், அனைவரின் உடல் நலத்திற்கும் இது அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக அவ்வறிக்கை கூறுகிறது. புதிய மருந்துகளை கண்டுபிடிப்பதற்கு முதலீடு செய்வது, தற்போது இருக்கும் மருந்துகளை கவனமாக பயன்படுத்துவது ஆகிய நடவடிக்கைகள் இந்த பிரச்சினைக்கு தீர்வாகப் பரிந்துரைக்கப்படுகின்றன. சாதாரண நோய்த் தொற்றுகளுக்கு கூட அதிகப்படியாக ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்துவது சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. எனவே தீவிர நோய் தொற்றின்போது ஆன்டிபயாட்டிக் மருந்துகளின் செயல் திறன் குறைகிறது. கொரோனா தடுப்பூசிகளின் தடுப்பாட்டம் பலிக்காமல் போகிறதா? - 3 காரணங்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள், பூஸ்டர் டோஸ்: கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை இதற்கு முன்பு சிகிச்சை அளித்து குணப்படுத்தக்கூடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கூட தற்போது சிகிச்சை பலனின்றி இறந்து கொண்டிருக்கிறார்கள். காரணம் அந்த பாக்டீரியா மருந்துகளை எதிர்கொள்ளும் திறனை பெற்றுவிட்டது. ஆன்டி மைக்ரோபயல் ரெசிஸ்டன்ஸ் (ஏ எம் ஆர்) என்றழைக்கப்படும் இந்தப் பிரச்சனை மறைந்திருக்கும் பெருந்தொற்று என பிரிட்டன் சுகாதார அதிகாரிகள் சமீபத்தில் எச்சரித்துள்ளனர். கவனமாக ஆன்டிபயாட்டிக் மருந்துகளை பரிந்துரைக்கவில்லை எனில், இது கொரோனா பெருந்தொற்றுக்கு இடையில் வெளிப்படலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இறப்பு எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடியது   பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, ஆன்டி மைக்ரோபயல் ரெச்ஸ்டென்ஸ் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, 204 நாடுகளில் ஏ எம் ஆர் பிரச்சனையால் ஏற்படும் உயிரிழப்புகளை மதிப்பிடுவதற்காக ஒரு ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வு லேன்செட் மருத்துவ சஞ்சிகையில் வெளியாகியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தவர்களில், சுமார் 50 லட்சம் பேரின் உயிரிழப்புக்கு ஏ எம் ஆர் காரணமாக இருக்கலாம் என்று கணக்கிட்டுள்ளனர். இதில் 12 லட்சம் பேரின் உயிரிழப்புக்கு எம்ஆர் நேரடி காரணமாக இருந்துள்ளது என்றும் கணக்கிட்டுள்ளனர். அந்த ஆண்டில் எய்ட்ஸ் நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,60,000. மலேரியா நோயால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6,40,000 என்பது குறிப்பிடத்தக்கது. ஏ எம் ஆர் பிரச்சனை காரணமாக உயிரிழந்தவர்களில் பலரும் நிமோனியா மற்றும் ரத்தநாள தொற்று போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டனர். இது, அழுகிய புண்ணால் ரத்தத்தில் நச்சுத்தன்மையை உண்டாக்கும் செப்சிஸ்க்கு வழிவகுக்கும். நோயாளிகளின் மருத்துவ பதிவுகள் ஆராய்ச்சிகள் மற்றும் கிடைக்கும் தரவுகள் அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது, ஏ எம் ஆர் பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படும் அபாயத்தில் குழந்தைகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பில் ஐந்தில் ஒரு உயிரிழப்பு ஏ எம் ஆர் பிரச்சினையோடு தொடர்புடையதாக இருக்கிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏ எம் ஆர் பிரச்சனையால் உயிர் இழப்புகள் ஏற்படுவது சஹாராவுக்குக் கீழே உள்ள ஆப்பிரிக்க நாடுகளில், தெற்காசிய பகுதிகளில் ஒரு லட்சம் பேருக்கு 24 உயிரிழப்புகள் என்று அதிகமாக இருக்கிறது. பணக்கார நாடுகளில் ஒரு லட்சம் பேரில் 13 உயிரிழப்புகள் என குறைவாக இருக்கிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, மருத்துவ சோதனை புதிய தரவுகள், உலக அளவில் இந்தப் பிரச்சனை எவ்வளவு வலியது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. மேலும், இப்பிரச்சனைக்கு எதிரான போட்டியில் நாம் முன்னிலை வகிக்க வேண்டுமானால், அவசர நடவடிக்கைகள் தேவை எனவும் இது வலியுறுத்துகிறது என கூறியுள்ளார் இன்ஸ்டிட்டியூட் ஃபார் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் எவலுவேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் கிறிஸ் முர்ரே. பல்வேறு நாடுகளில், இந்தப் பிரச்னையை சிறப்பாக கண்காணிப்பது அவசியம் என மற்ற நிபுணர்கள் கூறுகிறார்கள். மற்ற நோய்களுக்கு செலவழிக்கும் அளவுக்கு ஏ எம் ஆர் பிரச்சனைக்கும் உலக அளவில் செலவழிக்க வேண்டும் என வாஷிங்டன் டிசியில் உள்ள சென்டர் ஃபார் டிசீஸ் டைனமிக்ஸ், எகனாமிக்ஸ் அண்ட் பாலிசி அமைப்பைச் சேர்ந்த டாக்டர் ரமணன் லக்ஷ்மி நாராயணன் கூறினார். "ஏ எம் ஆர் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு முதலில் நிதி ஒதுக்கப்பட வேண்டும், தற்போது புழக்கத்தில் இருக்கும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் சரியாக பரிந்துரைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும், புதிய ஆன்டிபயாடிக் மருந்துகள் சந்தைக்குக் கொண்டு வரப்படவேண்டும்" என்று கூறினார். விலை மலிவான, சிறப்பாக செயல்படக் கூடிய ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பெற பெரும்பாலான உலக நாடுகள் கடும் சவாலை எதிர்கொண்டு வருகின்றன, அதை அரசியல் மற்றும் சுகாதாரத் தலைவர்கள் தீவிர பிரச்சனையாக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் லக்ஷ்மி நாராயணன் கூறினார். https://www.bbc.com/tamil/science-60078694
  • காலம் எல்லாவற்றையும் அடிச்சுக்கொண்டு போய் விடும்......பாவம் அந்த அம்மா ....அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.........ஆழ்ந்த இரங்கல்கள்.......! 
  • மனித எச்சம் மீட்பு: மூவர் கைது செ.கீதாஞ்சன் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாவல் காட்டு கிராமத்தில் பாழடைந்த கிணற்றிலிருந்து  30.12.2020 அன்று மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் உயிரிழந்த நபர் தொடர்பிலான விசாரணைகளை முள்ளியளை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி எம்.அன்வர்தீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டனர்.   இதனையடுத்து, கொலை குற்றவாளிகளாக இனம் காணப்பட்ட சந்தேக நபர்கள் மூவர் நீண்டகாலத்தின் பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  இவர்கள் நேற்று (20) கைதுசெய்யப்பட்டுள்ளனர் என முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். உயிரிழந்த நபரின் மனைவி, உயிரிழந்தவரின் நண்பர்கள் இருவர் உள்ளிட்ட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொன்னகர் பகுதியினை சேர்ந்த இருவரும் கேப்பாபிலவினை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.     https://www.tamilmirror.lk/வன்னி/மனித-எச்சம்-மீட்பு-மூவர்-கைது/72-289661
  • குத்துச்சண்டை வீராங்கனைக்கு அமோக வரவேற்பு குத்துச்சண்டை  போட்டியில்  தங்கப்பதக்கம் வென்ற  கணேஸ் இந்துகாதேவிக்கு  வவுனியாவிலும்  மாங்குளத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. 18-01-2022 அன்று பாகிஸ்தான் லாகூரில்  இடம்பெற்ற பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையில் நடைபெற்ற 2 ஆவது சவேட் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று   25 வயதுக்கு உட்பட்ட 50/55 கிலோகிராம் எடைப்பிரிவின் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் தந்துள்ளார் கணேஸ் இந்துகாதேவிக்கு  பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து  வருகின்றனர் தந்தையை இழந்த நிலையில்  தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்து  குத்துச்சண்டையில் சாதித்து  கணேஷ் இந்துகாதேவியுடன் குறித்த போட்டியில் இலங்கை அணி 7 தங்கம் மற்றும் 5 வெள்ளிப்பதக்கங்களை வெற்றிக்கொண்டு சம்பியனாக மகுடம் சூடியது. இவ்வாறான நிலையில் குறித்த இலங்கை அணி  நேற்று(20) மாலை இலங்கையை வந்தடைந்திருந்தது இந்நிலையில்  முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் தந்துள்ள கணேஸ் இந்துகாதேவி இன்று (21) காலை மாங்குளம் கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் உள்ள தனது வீடு திரும்பும் வழியில் அவருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது   இந்நிலையில்  குறித்த யுவதிக்கு பாகிஸ்தான் போட்டியில் கலந்துகொள்ள 10 இலட்சடத்து 5,000 ரூபாய் நிதியினை ஏற்பாடு செய்து வழங்கிய  தமிழ் விருட்ஷம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமாரின் ஏற்பாட்டில்  இன்றுக் காலை  வவுனியாவில் வரவேற்பளிக்கப்பட்டு வவுனியா கந்தசாமி கோயிலில் வழிபாட்டிலும் கலந்துகொண்டுள்ளார் இதனை தொடந்து மாங்குளம் நகருக்கு  வருகை தந்த   யுவதிக்கு மாங்குளம் மின்னொளி விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில்  பாரிய வரவேற்பு பதாகை ஒன்று வைக்கப்பட்டு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.     https://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/குத்துச்சண்டை-வீராங்கனைக்கு-அமோக-வரவேற்பு/44-289668  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.