Jump to content

நாற்பதுக்கு மேல்: வாழ்வும் சாவும்…

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இதை நான் வெளிப்படையாக சொல்லி விடுகிறேன்: என் நண்பர்கள், பிரியத்துக்குரியவர்கள், திறமையாளர்கள், சாதனையாளர்கள் 40களில் தற்கொலை பண்ணிக் கொண்டாலோ திடீரென்று மரணமடைந்தாலோ நான் அதை ஒரு அதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன். நாற்பது என்பது ஒரு மோசமான கால எல்லை. அந்த எல்லைக்கோட்டில் காலை வைத்தால் பிடிக்கிற கேட்ச் எல்லாமே சிக்ஸர் தான், தோல்வியின் சவுக்கடி தான். இதை சொல்லும் அதே நேரம், நாற்பதுக்கு மேல் பெரும் வெற்றிகளைப் பெற்றவர்கள், சாதனைகளை செய்தவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் ஏற்கிறேன். அவர்கள் அரிதான மனிதர்கள், எழுபது வயதிலும் அரியணைக்கு அருகில் நின்று கொண்டு ஒரு சின்ன வாய்ப்பு அமைந்தால் அதில் நான் இருப்பேன் என நம்புகிறவர்கள். நான் சொல்வது பெரும்பாலானவர்களின் கதை. என்னையும் உங்களையும் போன்றவர்களுக்கு பெரும் நம்பிக்கைகள் இருபது, முப்பதுகளிலேயே செத்து விடுகின்றன. அதன் பிறகு சின்னச்சின்ன சந்தோஷங்களுக்காக ஒரு வாழ்க்கை, செத்து விடுவோமோ எனும் பயத்தில் துரத்தும் நாயைப் பார்த்தபடி ஓடுவது போலொரு வாழ்க்கை.

நுண்ணுணர்வு கொண்ட பல கலைஞர்கள் குடித்தும், கஞ்சா அடித்துமே சீக்கிரத்தில் சாவது இதனால் தான். 

இன்னொரு விசயம் இந்த இருத்தலின் ஒவ்வொரு நொடியும் மகத்தானது, இனிதானது என்பது. நான் அதை மறுக்கவில்லை. ஆனால் வாழ்க்கை அதையும் தாண்டியது என நினைக்கிறேன். பெரும் கனவுகள், நம்பிக்கைகள் இந்த வாழ்க்கைக்கு அவசியம். அதனால் தான் யாராவது இறந்தால் என் மனம் அவர்களை ஆசீர்வதிக்கிறது. என்னையும் கூட்டிப் போயிருக்கலாமே நீ எனத் தோன்றுகிறது.

அண்மையில் பிரியத்துக்குரிய கவிஞர் பிரான்சிஸ் கிருபா காலமான போதும் அப்படியே தோன்றியது. இப்போது ஒரு இளம் பத்திரிகையாளர் தற்கொலை பண்ணிக்கொண்டார் எனத் தெரிய வந்த போதும் அப்படியே தோன்றுகிறது. (இளைஞர்களும் இந்த செத்துப் போன வாழ்வில் நம்பிக்கையை இழந்து வருகிறார்கள்.)
அடுத்த சில ஆண்டுகளில் எனக்கு ஒரு மாரடைப்பு வந்து முதல் அழைப்பிலேயே போய் விட்டால் நிம்மதியாக உணர்வேன். இல்லாவிட்டால் இந்த மொழிக்கு பணியாற்றுவது என் கடமை என நம்பி, இன்னும் ஒரு இருபதாண்டுகள் எழுதும் சுகத்துக்காக மட்டும் இருப்பேன். அப்படி இருப்பது ஒரு துன்பியல் - நியாயமாக வாழும் சுகத்துக்காக, எதிர்காலத்தின் சாத்தியங்களுக்காக வாழ வேண்டும். எழுத்தென்பது வாழ்வின் ஒரு பகுதி தானே, அது வாழ்வு அல்லவே.

மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு போரிட்டு எதிரிகளை அழிக்கும் அந்த மகத்தான வாய்ப்பு அவர்களுடைய வயதான காலத்திலேயே வந்தது எனப் படித்திருக்கிறேன். யுதிஷ்டிரருக்கு அப்போது வயது 91, பாணடவர்களிலேயே இளைஞருக்கு வயது 88.  அரைமனத்துடன் போரிட்டு சாம்ராஜயத்தைப் பெற்று பின்னர் ஜனங்களே இல்லாத அனாதையான ஒரு தேசத்தை அரைமனத்துடன் ஆண்டார்கள்.

 நாற்பதுக்கு மேல் வாழ்கிறவர்களின் கதி அனேகமாக அது தான். எல்லாம் அரைமனதாக, அரை-மகிழ்ச்சியுடன், அரை-துக்கத்துடன், அரை-ஆர்வத்துடன் நடந்தாக வேண்டும். பாதி குடித்து ஆறிப் போன காபியைப் போல. ஈ விழுந்தாலாவது கொட்டி விடலாம் என யோசித்தால் எழவு ஈயும் விழாது.

By Abilash chandran 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓணாண்டியார், இதற்குப் பச்சை போட முடியாது! மன்னிக்கவும்! 😂

அபிலாஷ் எந்த வயதைப் பற்றிக் கதைக்கிறார்? கால வயதென்பது (chronological age) இப்போது கணக்கிலெடுக்கப் படத் தேவையற்ற ஒன்று!

ஆனால், எங்கள் ஆசிய மனப்பாங்கில் நாற்பதுக்குப் பிறகு இறங்கு முகம் என்ற நம்பிக்கை மூட நம்பிக்கை போல ஊறி விட்டது. இதை வெட்டியாட வழிகள் உண்டு. உங்களுக்கு அறிய ஆர்வமாக இருந்தால் மட்டும் சொல்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதை நான் வெளிப்படையாக சொல்லி விடுகிறேன்: என் நண்பர்கள், பிரியத்துக்குரியவர்கள், திறமையாளர்கள், சாதனையாளர்கள் 40களில் தற்கொலை பண்ணிக் கொண்டாலோ திடீரென்று மரணமடைந்தாலோ நான் அதை ஒரு அதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன். நாற்பது என்பது ஒரு மோசமான கால எல்லை. அந்த எல்லைக்கோட்டில் காலை வைத்தால் பிடிக்கிற கேட்ச் எல்லாமே சிக்ஸர் தான், தோல்வியின் சவுக்கடி தான். இதை சொல்லும் அதே நேரம், நாற்பதுக்கு மேல் பெரும் வெற்றிகளைப் பெற்றவர்கள், சாதனைகளை செய்தவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் ஏற்கிறேன். அவர்கள் அரிதான மனிதர்கள், எழுபது வயதிலும் அரியணைக்கு அருகில் நின்று கொண்டு ஒரு சின்ன வாய்ப்பு அமைந்தால் அதில் நான் இருப்பேன் என நம்புகிறவர்கள். நான் சொல்வது பெரும்பாலானவர்களின் கதை. என்னையும் உங்களையும் போன்றவர்களுக்கு பெரும் நம்பிக்கைகள் இருபது, முப்பதுகளிலேயே செத்து விடுகின்றன. அதன் பிறகு சின்னச்சின்ன சந்தோஷங்களுக்காக ஒரு வாழ்க்கை, செத்து விடுவோமோ எனும் பயத்தில் துரத்தும் நாயைப் பார்த்தபடி ஓடுவது போலொரு வாழ்க்கை.

நுண்ணுணர்வு கொண்ட பல கலைஞர்கள் குடித்தும், கஞ்சா அடித்துமே சீக்கிரத்தில் சாவது இதனால் தான். 

இன்னொரு விசயம் இந்த இருத்தலின் ஒவ்வொரு நொடியும் மகத்தானது, இனிதானது என்பது. நான் அதை மறுக்கவில்லை. ஆனால் வாழ்க்கை அதையும் தாண்டியது என நினைக்கிறேன். பெரும் கனவுகள், நம்பிக்கைகள் இந்த வாழ்க்கைக்கு அவசியம். அதனால் தான் யாராவது இறந்தால் என் மனம் அவர்களை ஆசீர்வதிக்கிறது. என்னையும் கூட்டிப் போயிருக்கலாமே நீ எனத் தோன்றுகிறது.

அண்மையில் பிரியத்துக்குரிய கவிஞர் பிரான்சிஸ் கிருபா காலமான போதும் அப்படியே தோன்றியது. இப்போது ஒரு இளம் பத்திரிகையாளர் தற்கொலை பண்ணிக்கொண்டார் எனத் தெரிய வந்த போதும் அப்படியே தோன்றுகிறது. (இளைஞர்களும் இந்த செத்துப் போன வாழ்வில் நம்பிக்கையை இழந்து வருகிறார்கள்.)
அடுத்த சில ஆண்டுகளில் எனக்கு ஒரு மாரடைப்பு வந்து முதல் அழைப்பிலேயே போய் விட்டால் நிம்மதியாக உணர்வேன். இல்லாவிட்டால் இந்த மொழிக்கு பணியாற்றுவது என் கடமை என நம்பி, இன்னும் ஒரு இருபதாண்டுகள் எழுதும் சுகத்துக்காக மட்டும் இருப்பேன். அப்படி இருப்பது ஒரு துன்பியல் - நியாயமாக வாழும் சுகத்துக்காக, எதிர்காலத்தின் சாத்தியங்களுக்காக வாழ வேண்டும். எழுத்தென்பது வாழ்வின் ஒரு பகுதி தானே, அது வாழ்வு அல்லவே.

மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு போரிட்டு எதிரிகளை அழிக்கும் அந்த மகத்தான வாய்ப்பு அவர்களுடைய வயதான காலத்திலேயே வந்தது எனப் படித்திருக்கிறேன். யுதிஷ்டிரருக்கு அப்போது வயது 91, பாணடவர்களிலேயே இளைஞருக்கு வயது 88.  அரைமனத்துடன் போரிட்டு சாம்ராஜயத்தைப் பெற்று பின்னர் ஜனங்களே இல்லாத அனாதையான ஒரு தேசத்தை அரைமனத்துடன் ஆண்டார்கள்.

 நாற்பதுக்கு மேல் வாழ்கிறவர்களின் கதி அனேகமாக அது தான். எல்லாம் அரைமனதாக, அரை-மகிழ்ச்சியுடன், அரை-துக்கத்துடன், அரை-ஆர்வத்துடன் நடந்தாக வேண்டும். பாதி குடித்து ஆறிப் போன காபியைப் போல. ஈ விழுந்தாலாவது கொட்டி விடலாம் என யோசித்தால் எழவு ஈயும் விழாது.

By Abilash chandran 

ஒரு போனை பறித்து எறிந்ததுக்கு இந்த டிராமா ரொம்ப ஓவர் மிஸ்டர் ஓணாண்டி 🤣.

அபிலாஸ் சந்திரனுடன் நான் முற்றிலும் முரண்படுகிறேன்.

அபிலாஸ் 40க்குள் கொஞ்சமாவது வெற்றிகளை ருசித்திருப்பார் போலும்.

நாமல்லாம் வாழ்வில் வெற்றியின் படிகட்டை மட்டுமே கண்டு வந்த ஆக்கள் 🤣. வாழ்க்கை பூராவுமே படிகட்டுத்தான்🤣.

அதனால்தானோ என்னமோ கனவுகள் காண்பதும், கலைவதும், திருப்பி கண்ணை மூடி கனவு காண்பதும் இலகுவாக இருக்கிறது🤣.

சீரியசாக - நான் நினைகிறேன் இது lack of purpose in life என்று.

இதுக்கு இரெண்டே வழிதான் உண்டு.

1. ஒரு பெரும் இலட்சியத்தை வரித்து கொள்ளல் - தலைவர் எப்பவாவது இப்படி சிந்தித்து இருப்பாரா? அவரை விடுங்கள் - அவர் சாரனையாளர். 40 வயது தாண்டிய ஒரு போராளி தன்னும் இப்படி சிந்தித்திருப்பாரா? இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு ஒரு purpose இருந்தது.

2. முதலாம் வகை முடியாவிட்டால் - வாழ்கையை சுகிப்பதே ஒரு purpose என வாழலாம். ஒரு கடற்கரையில் கவிழ்ந்து கிடப்பது, இசையை கேட்பது, தாய்லாந்து போவது மட்டும் அல்ல, ஒரு ஏழை பையனுக்கு ஒரு விலை உதிர்ந்த சாக்கிலேட் கேக்கை வாங்கி கொடுப்பதும் அதில் இன்பமடைவதும் கூட சந்தோசத்தை தரும். 

இவை சின்ன, சின்ன சந்தோசங்கள் இல்லை.

இவைதான் வாழ்கை.

கடைசியில் எமது படிப்பு, பட்டம், சொத்துகளை மட்டும் அல்ல, கனவுகளையும் நாம் கொண்டு போக போவதில்லை.

In the grand scheme of things, nothing matters.

ஆகவே சலிக்காமல் கனவுகாணுங்கள். அது பலிக்கிறதோ இல்லையோ.

நயந்தாரா இல்லை என்றால் திரிஷா, இல்லை என்றால் கீர்தி சுரேஸ்….🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

40.....50.....60......இவை எண்கள்  இந்த எண்களில் எதுவுமில்லை உங்கள் உடல் ஆரோக்கியம்..எண்ணங்கள் சிந்தனைகள் செயல்கள இளமையாக இருப்பின்  நீங்கள் என்றுமே இளைஞர் தான் 😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ஜேர்மனியில் 60 வயதுக்காரரை வயது போய்விட்டது என கூற மாட்டார்கள்.

60 வயதிலை பெஞ்சன் எடுக்கிறதெண்டால் பெரிய அல்லோலகல்லோலப்பட்டு உள்ள செக்கப் எல்லாம் செய்துதான் பென்சன் எடுக்கலாம். எனவே பொடியள் 40 வயசிலையும் மார்க்கண்டேயன் நினைப்பிலை திரியுங்கோ.
எங்கடை அமெரிக்கன் அன்ட் பிரெஞ்ச்/ டொச்ச பிரண்ட்ஸ் டோண்ட் வெறி பீ ஹப்பி..🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

எங்கடை அமெரிக்கன் அன்ட் பிரெஞ்ச்/ டொச்ச பிரண்ட்ஸ் டோண்ட் வெறி பீ ஹப்பி..🤣

அண்ணை பாத்தியளே எங்கள மறந்துட்டியள்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெந்ததும் வேகாததுமாய் வாய்க்குள்ள போட்டுகொண்டு, குருட்டுப்பூனை விட்டத்திலே பாய்ந்ததுபோல் பாய்ந்து ஓடி உழைக்க நண்டும் சிண்டுமாய் மூண்டு நாலு வந்திடும், அதையெல்லாம் செட்டில் பண்ணி மூச்சு விட நாற்பது வந்திடும்.......பின்புதான் குடும்பத்தை ரசித்து விராட்கோலி மாதிரி நிறுத்தி நிதானமாய் சதம் அடிக்கிற காலம் இந்த நாற்பதுக்கு பின்னான பொற்காலம்.......சும்மா புரியாமல் புலம்பக்கூடாது.....!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் முழுமையான கல்வியை… கற்று முடிக்க  25 வயது ஆகி விடும்.

பின் வேலையில் சேர்ந்து… நெளிவு, சுழிவுகளை அறிய 30 ஆகும்.

திருமணத்தின் பின்… இரண்டு குழந்தைகளுடன் 40 வயது ஆகி விடும்.

அதன் பின் தான்… மனிதன் வாழ்க்கையில் ஒவ்வொன்றையும் ரசித்து வாழும் தருணம். 🙂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

life begins at 40 என்று சொல்வார்கள்.

இதென்ன இப்படி ஒரு புலம்பல்.

ஒபாமா 50 வயதிற்கு முன்பே ஜனாதிபதியாகி விட்டார். பைடன் 70 கு பின்புதான்.
இப்படியெல்லாம் சிந்தித்தால் வாழ்வில் எதிர்நீச்சல் அடிக்க முடியாது
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் உறவுகளை நினைக்க பெருமையாக இருக்கு.. எனக்கும் தன்னம்பிக்கை வருது.. நீங்கள் எழுதியதை எல்லாம் வாசிச்சபின் பிறந்தாச்சு வாழ்ந்துதான் பாப்பமே..

மற்றது ஜஸ்ற்றின் எழுதுங்கோ உளவியல் டோக்டர பாப்பம் எண்டிருந்தன் எழுதுங்கோ வாசிச்சா இன்னும் செல்ப்கென்பிடன்ஸ் வரும்..

Link to comment
Share on other sites

நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த என் வாழ்க்கையினை நான் ஆழ்ந்து அனுபவிக்க தொடங்கியதே 40 இன் பின் தான். அத்துடன் ஒரு விடயத்தை திட்டமிட்டு, ஒழுங்கு செய்து வெற்றிய அடைய தொடங்கியதும் இந்த வயதில் தான்.
பெரும்பாலான ஆண்களுக்கு 40 வயதின் பின் தான் நிதானமும், ஒரு வகையான பணிவும் வருகின்றது. குடும்பத்தை, மனைவியை, தன்னைச் சுற்றியுள்ளவர்களின் நலன்களை பொறுமையாக அணுகும் பக்குவமும் கிடைக்கின்றது.தொழிலிலும் முன்னேற்றம் 40 வயதின் பின் தான் உறுதியான வழியில் நடை போடத் தொடங்குகின்றது. வெற்றிபெற்ற பல ஆண்கள் 40 இல் தான் வாழ்வின் முக்கியமான முடிவுகளை எடுக்கத் தொடங்கியும் இருப்பர். 

40 இல் சலிப்புறுகின்றவர்கள் செய்ய வேண்டியது, தான் நடந்து வந்த வாழ்வை மீண்டும் திரும்பி பார்த்து விட்ட பிழைகளை செப்பனிடத் தொடங்குவது தான். அத்துடன் தாம் எப்பவும் மற்றவர்களுக்காக மட்டுமே வாழ்கின்றோம் என்ற நினைப்பில் வாழாமல். தனக்காக வாழத் தொடங்குவதும், தாம் இல்லாவிட்டாலும் இந்த உலகம் சுற்றும் என்பதை உணர்வதும் ஆகும். இந்த உணர்வு தன்னைப் பற்றிய நம்பிக்கையையும், முக்கியமான தருணங்களில் பயத்தை கைவிட்டு துணிவாக முடிவு எடுக்கவும் உதவும்.

40 பின்னான வாழ்வு ஆறிப்போன ஈ விழுந்த வாழ்வு அல்ல. சுடச் சுட வடையுடன் கிடைக்கும் ரின் பால் தேனீர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாற்பதிலேயே வாழ்வை அனுபவிக்க மறுப்பவன் சாதலே சரி. போய்யா உலகத்துக்கு நீ தேவையற்றவன்😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

யாழ் உறவுகளை நினைக்க பெருமையாக இருக்கு.. எனக்கும் தன்னம்பிக்கை வருது.. நீங்கள் எழுதியதை எல்லாம் வாசிச்சபின் பிறந்தாச்சு வாழ்ந்துதான் பாப்பமே..

மற்றது ஜஸ்ற்றின் எழுதுங்கோ உளவியல் டோக்டர பாப்பம் எண்டிருந்தன் எழுதுங்கோ வாசிச்சா இன்னும் செல்ப்கென்பிடன்ஸ் வரும்..

அபிலாஷ் சந்திரன் ஒரு மாற்றுத்திறனாளி என்று நினைக்கிறேன். மனைவி பிள்ளையை பிரிந்து வெண்கல்லூரில்(பெங்களூர்) கல்லூரியில் கற்பிக்கிறார். எழுத்தாளரும் கூட.
2009 இல் எதிர்காலம் குறித்த மிகுந்த அச்சத்தில் இருந்தேன். நெடுக்கரிடம் மனப்பயத்தை கூறி இருந்தேன், கலைஞன் அண்ணாவும் தெம்பூட்டியவர். அப்பா, அம்மாவை நம்பிய வாழ்க்கை. அவர்கள் இல்லா காலங்கள் எவ்வாறு எதிர்கொள்வது என்ற மனப்பயம். ஆனால் இப்போது அவர்கள் இல்லா காலத்தில் எங்களை நாங்களே பார்த்துக் கொள்ள(உதவியாளர்கள் மூலம்) முடியும் எனும் நம்பிக்கையை காலம் தந்திருக்கிறது.

19 hours ago, goshan_che said:

இதுக்கு இரெண்டே வழிதான் உண்டு.

1. ஒரு பெரும் இலட்சியத்தை வரித்து கொள்ளல் - தலைவர் எப்பவாவது இப்படி சிந்தித்து இருப்பாரா? அவரை விடுங்கள் - அவர் சாரனையாளர். 40 வயது தாண்டிய ஒரு போராளி தன்னும் இப்படி சிந்தித்திருப்பாரா? இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு ஒரு purpose இருந்தது.

2. முதலாம் வகை முடியாவிட்டால் - வாழ்கையை சுகிப்பதே ஒரு purpose என வாழலாம். ஒரு கடற்கரையில் கவிழ்ந்து கிடப்பது, இசையை கேட்பது, தாய்லாந்து போவது மட்டும் அல்ல, ஒரு ஏழை பையனுக்கு ஒரு விலை உதிர்ந்த சாக்கிலேட் கேக்கை வாங்கி கொடுப்பதும் அதில் இன்பமடைவதும் கூட சந்தோசத்தை தரும். 

மிக்க நன்றி உங்கள் கருத்திற்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா நமக்கு இன்னும் தூரம் இருக்கு நாற்பதுக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

யாழ் உறவுகளை நினைக்க பெருமையாக இருக்கு.. எனக்கும் தன்னம்பிக்கை வருது.. நீங்கள் எழுதியதை எல்லாம் வாசிச்சபின் பிறந்தாச்சு வாழ்ந்துதான் பாப்பமே..

மற்றது ஜஸ்ற்றின் எழுதுங்கோ உளவியல் டோக்டர பாப்பம் எண்டிருந்தன் எழுதுங்கோ வாசிச்சா இன்னும் செல்ப்கென்பிடன்ஸ் வரும்..

சரி, ஒரு உண்மைச் சம்பவம் கேளுங்கள்: 

நாசி வதை முகாம்களில் அடைத்து வைக்கப் பட்டிருந்த மக்களுக்கு பல தெரிவுகள் இருக்கவில்லை. எப்படியோ மரணம் தானே என்ற நிலையில் அதைத் தாங்களாகவே தேடிக்கொள்ள பலர் முயன்றனர். வதை முகாமின் மின்சார வேலியை நோக்கி நடந்து ஏற முயலும் மக்களை ஒன்று உயர் அழுத்த மின்சாரம் கொல்லும் அல்லது மின்சாரத்தை முந்திக் கொண்டு நாசிகளின் தோட்டாக்கள் கொல்லும்! இவ்வாறு தன்னுயிர் மாய்த்துக் கொள்ளும் மக்களை ஒரு மனநல மருத்துவர் - அவரும் வதைமுகாம் கைதியான யூதர் தான் - அவதானித்துக் கொண்டிருந்தார். அவரது குறிப்புகளின் படி, தன்னுயிர் மாய்த்துக் கொண்டோரில் குழந்தைகளோடிருந்த தாய்மார் இருக்கவில்லையாம். இது ஏன் என்று யோசித்த போது வாழும் ஊக்கத்தைக் குழந்தைகள் கொடுத்ததால் அவர்கள் அந்த நரகத்திலும் உயிரோடிருக்க பிரயத்தனம் செய்து கொண்டிருந்தனர் என்ற முடிவுக்கு அவர் வந்தார்!

அந்த மனநல மருத்துவரின் பெயர் விக்ரர் பிராங்கெல் (Viktor Frankl)! வதைமுகாமிலிருந்து மீண்டு வந்து இந்த வாழும் ஊக்கம் பற்றி மேலும் அவர் ஆய்வு செய்து உருவாக்கிய சிகிச்சை முறைக்குப் பெயர் லோகோ தெரபி (logo therapy)! அடிப்படையில் லோகோ தெரபி என்பது  வாழ்க்கைக்கு ஒரு இலக்கைத் தேடிக் கொள்வது தான்! 

ஆழமாக வாசிக்க விரும்பினால் அவரது முக்கியமான நூல்: 

41VKDyqd6RL._SX348_BO1,204,203,200_.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

அண்ணை பாத்தியளே எங்கள மறந்துட்டியள்🤣.

உங்களையெல்லாம் எப்பிடி மறக்கேலும்...?? 😁

நான் சொல்ல வந்தது கண்டசாலா கண்ணாம்பாள் காலத்து ஆக்களுக்கு எல்லோ...... 😎

நீங்களெல்லாம் ஆர்யா காலத்து ஆக்கள். எப்பிடி கூட்டு சேர்க்கேலும்? 🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.