Jump to content

மீண்டும் உலக யுத்த வியூகம்


Recommended Posts

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • டோங்கா எரிமலை வெடிப்பு: சுனாமியின் கோரத்தைக் காட்டும் புகைப்படங்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர்   பட மூலாதாரம்,CONSULATE OF THE KINGDOM OF TONGA   படக்குறிப்பு, தலைநகர் நுக்வாலோஃபாவில் இருந்து எடுக்கப்பட்ட படம், சனிக்கிழமை சுனாமியைத் தொடர்ந்து ஏற்பட்ட சேதத்தைக் காட்டுகிறது கடலுக்கு அடியில் வெடித்த எரிமலையால் தூண்டப்பட்ட சுனாமி அலைகளால் ஏற்பட்ட சேதத்தை வெளிப்படுத்தும் புதிய படங்கள் டோங்கோவில் இருந்து வெளிவந்துள்ளன. அவை, பசிபிக் தீவுகள் எரிமலை சாம்பலால் மூடப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன. அதேநேரம், கடலோரப் பகுதிகளில் அலைகள் மரங்களை இடித்து கட்டிடங்களை கிழித்தெறிந்தன. சனிக்கிழமை சுனாமியால் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உட்படக் குறைந்தது 3 பேர் உயிரிழந்தனர். தகவல் தொடர்புகள் முடங்கின. பசிபிக் எரிமலைகளைப் புரிந்து கொள்ள செயற்கைக்கோள்கள் ஏன் அவசியம்? குமுறும் எரிமலை, 40 ஆயிரம் நிலநடுக்கங்கள்: ஐஸ்லாந்தில் தகிப்பு - படங்கள் சர்வதேச தொலைபேசி இணைப்புகள் மீட்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், கடலுக்கு அடியில் அமைக்கப்பட்ட கேபிள் துண்டிக்கப்பட்டுள்ளது. அதைச் சரிசெய்ய வாரங்கள் ஆகலாம். டோங்கோ பெரும்பாலும் வெளி உலகத்திடமிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அழிவின் அளவு குறித்து அதிகமாக அறியப்படவில்லை.   பட மூலாதாரம்,CONSULATE OF THE KINGDOM OF TONGA   படக்குறிப்பு, டோங்காடபு தீவு முழுக்க எரிமலை சாம்பல் படிந்துள்ளது ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள டோங்கோவின் தூதரகத்தால் வெளியிடப்பட்ட புதிய படங்கள், தலைநகர் நுக்வாலோஃபாவில் உள்ள கார்கள், சாலைகள் மற்றும் கட்டிடங்கள் முழுக்க சாம்பல் படர்ந்திருப்பதைக் காட்டுகின்றன. தூசியால் நிவாரண விமானங்கள் தரையிறங்குவதற்கும் மிகவும் தேவையான உணவு மற்று குடிநீரை வழங்குவதகும் தடையாக உள்ளது.   பட மூலாதாரம்,CHURCH OF JESUS CHRIST OF LATTER-DAY SAINTS   படக்குறிப்பு, எரிமலை மற்றும் சுனாமியைத் தொடர்ந்து தலைநகர் நுக்வாலோஃபாவில் வெள்ளம் தீவின் கடலோரப் பகுதிகளில், "முன்னெப்போதும் இல்லாத பேரழிவு" என்று டோங்கோவின் அரசாங்கத்தால் விவரிக்கப்பட்ட சுனாமி அலைகளின் பின்விளைவுகளையும் படங்கள் காட்டுகின்றன. டோங்கோவில் ஒரு மீட்டருக்கும் அதிகமான உயர அலைகள் தாக்கியதை அடுத்து, கட்டிடக் கழிவுகள் கரையோரத்தில் சிதறிக் கிடக்கின்றன.   பட மூலாதாரம்,CONSULATE OF THE KINGDOM OF TONGA   படக்குறிப்பு, மரங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன இதற்கிடையில், நியூசிலாந்து விமானப்படையால் எடுக்கப்பட்ட வான்வழிப் படங்கள், தீவுகளின் பல கிராமங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்பதைக் காட்டுகின்றன. மீட்புப் பணிகளை சாம்பல் தடுக்கிறது இந்தப் பகுதிக்கு அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கும் சேதமடைந்த கடலுக்கடியில் உள்ள கேபிளை சரிசெய்வதற்கும் குழுக்கள் 24 மணிநேரமும் உழைத்து வருகின்றன.     படக்குறிப்பு, டோங்கோ எரிமலை வெடிப்புக்குப் பிறகு குடியிருப்புகள் தென்படவே இல்லை டோங்கோவின் பிரதான விமான நிலைய ஓடுபாதையில் இருந்து அடர்த்தியான சாம்பலை அகற்றுவதற்கான முயற்சிகள் புதன்கிழமை முடிவடைந்ததாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது மீட்புக் குழுக்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் சக்கர வண்டிகள் மற்றும் மண்வெட்டிகளைப் பயன்படுத்தி டார்மாக்கில் இருந்து தூசியை அகற்ற தீவிரமாகப் பணியாற்றினர். அவசர உதவி விமானங்கள் விரைவில் தரையிறங்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கையோடு உள்ளனர். எரிமலை வெடித்ததில் இருந்து மிகக் குறைவான தகவல் தொடர்புகள் நிறுவப்பட்டுள்ளன. முக்கியமாக தலைநகர் நுக்வலோஃபாவில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் வைத்திருக்கும் சில செயற்கைக்கோள் தொலைபேசிகள் மூலம் மட்டுமே செயல்படுத்தப்பட்டது. வெளிநாட்டிலுள்ள பல டோங்கன்கள் அவர்களுடைய உறவினர்களிடமிருந்து அன்பானவர்களிடமிருந்து செய்திகளைக் கேட்கக் காத்திருக்கிறார்கள்.   பட மூலாதாரம்,CONSULATE OF THE KINGDOM OF TONGA   படக்குறிப்பு, டோங்காவின் கரையோரப் படங்கள் சுனாமியைத் தொடர்ந்து கட்டமைப்புகள் மற்றும் மரங்களுக்கு சேதம் விளைவிப்பதைக் காட்டுகின்றன தொலைத்தொடர்பு நிறுவனமான டிஜிசெல் புதன்கிழமை, சர்வதேச அழைப்புகளை மீட்டெடுக்க முடிந்ததாகக் கூறியது. இருப்பினும் பிபிசியால் டோங்கோவுக்குத் தொடர்புகொள்ள முடியவில்லை. தீவுகளுக்கான ஒரே கேபிள் இரண்டு இடங்களில் சேதமடைந்துள்ளதால், இணையம் உட்பட முழு இணைப்பும் மீண்டும் கிடைப்பதற்கு நான்கு வாரங்கள் அல்லது அதற்கு மேலும்கூட ஆகலாம். புதன்கிழமை காலை, செஞ்சிலுவை சங்கம், எரிமலை வெடிப்புக்குப் பிறகு முதன்முறையாக டோங்கோவில் உள்ள தனது குழுவுடன் "மகிழ்ச்சியுடன்" தொடர்புகொள்ள முடிந்ததாகக் கூறியது.   பட மூலாதாரம்,TONGA GEOLOGICAL SERVICES   படக்குறிப்பு, டோங்கா எரிமலை வெடிப்பு "துரதிர்ஷ்டவசமாக டோங்கோவில் இருந்து இரவோடு இரவாக வீடுகள் அழிக்கப்பட்ட, அழிவுகரமான செய்தி வருகிறது," என்று அதன் பசிபிக் பிரதிநிதிகள் குழுவின் தலைவர், கேட்டி கிரீன்வுட் பிபிசியின் நியூஸ்டே நிகழ்ச்சியில் கூறினார். மேலும், செஞ்சிலுவை சங்கக் குழுக்கள் சுத்தமான தண்ணீரை விநியோகிக்கச் செயல்பட்டு வருவதாகவும் மக்கள் தங்கல் மழைநீர் தொட்டிகளை சாம்பலில் இருந்து பாதுகாக்கும் வகையில் மூடி வைக்கவேண்டும் என்று சமீபத்தில் பிரச்சாரம் செய்ததாகவும் பாட்டில் தண்ணீர் விநியோகத்திற்கு ஊக்கம் அளித்ததாகவும் கிரீன்வுட் கூறினார். 'செமுரு எரிமலை வெடிப்பு' - விண்ணை மறைக்கும் புகை, விமானங்களுக்கு எச்சரிக்கை பசிபிக் டோங்கா, தென் அமெரிக்காவை சுனாமி தாக்கியது - மீட்புப் பணிகள் துரிதம் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து முதலுதவி கப்பல்கள் வெள்ளிக்கிழமை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து பாதுகாப்பு அமைச்சர் பீனி ஹெனாரே பிபிசியிடம், கப்பல்கள் 250,000 லிட்டருக்கும் அதிகமான நன்னீர் மற்றும் உப்புநீக்கும் கருவிகளைக் கொண்டுவருவதாகக் கூறினார். "டோங்கன் அரசிடம் இருந்து தண்ணீர் தேவையே மிக முக்கியப் பிரச்னையாக இருப்பதாகத் தகவல் வந்துள்ளது," என்று அவர் கூறினார்.     படக்குறிப்பு, சுனாமிக்குப் பிறகு ஏற்பட்ட சேதங்கள் ஆனால், டெலிவரிகள் கோவிட் பரவுவதற்கு வழிவகுக்கும் என்றும் டோங்க அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். அக்டோபரில் தான் அந்த நாடு அதன் முதல் கோவிட் நோய்த்தொற்றை பதிவு செய்தது. கடைகளில் உணவுப் பொருட்கள் குறைவாக இருப்பதாகவும் டெலிவரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளன. ஹூங்கா டோங்கா-ஹூங்க ஹாபாய் எரிமலை வெடிப்பு அமெரிக்கா வரை உணரப்பட்டது. பெருவில், எண்ணெய் கசிவைத் தொடர்ந்து தலைநகர் லிமாவுக்கு அருகிலுள்ள கடற்கரைகள் மூடப்பட்டபோது, அசாதாரணமாக உயர்ந்த அலைகளில் மூழ்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். https://www.bbc.com/tamil/global-60063982
    • ஸ்டெஃபன் பவல் கேமிங் செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர்   பட மூலாதாரம்,MICROSOFT   படக்குறிப்பு, வீடியோ கேம்கள் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், ஆக்டிவிசன் பிளிசார்ட் (Activision Blizzard) என்கிற கேமிங் தயாரிப்பு நிறுவனத்தை சுமார் 68.7 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய்) கொடுத்து வாங்க உள்ளதாகக் கூறியுள்ளது. இது மைக்ரோசாஃப்ட் நிறுவன வரலாற்றிலேயே மிகப் பெரிய கையகப்படுத்தும் நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தம் 2023ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு உலகின் பிரபல வீடியோ கேம்களான கால் ஆஃப் டியூட்டி, வார்கிராஃப்ட், ஓவர்வாட்ச் போன்ற கேம்களின் உரிமைகள் கிடைத்துவிடும். மொபைல், கணினி, கன்சோல்கள் என பல தளங்களில் தங்களின் கேமிங் வியாபாரத்தை பெருக்கிக் கொள்ள இந்த நடவடிக்கை உதவும் என மைக்ரோசாஃப்ட் கூறுகிறது. மேலும் மெடாவெர்ஸ் தளத்தில் நுழையவும் படிப்படியாக இது உதவும் என்றும் கூறியுள்ளது. சமீபத்தில் தான் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 'பெதெட்சா' என்கிற கேமிங் நிறுவனத்தை 7.5 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கியது நினைவுகூரத்தக்கது. "கொரோனா பேரிடர் இன்னும் முடிவை நெருங்கக்கூட இல்லை " - எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு வடகொரியாவின் தொடர் ஏவுகணைச் சோதனைகளுக்கு சீனா காரணமா? "நாங்கள் புதிய கேமிங் சகாப்தத்தில் அடியெடுத்து வைக்கும் விதத்தில், விளையாடுபவர்கள், கேமிங் வடிவமைப்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கவும், கேமிங்கை பாதுகாப்பானதாக மாற்றவும் உலகத் தரத்திலான உள்ளடக்கங்கள், கேமிங் சமூகம், கிளவுட் சேவைகளில் முதலீடு செய்கிறோம்." என மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரியான சத்யா நாதெல்லா கூறினார். ஆக்டிவிசன் பிளிசார்ட் நிறுவனத்துக்கு உலகம் முழுக்க கிட்டத்தட்ட 10,000 ஊழியர்கள் மற்றும் பல ஸ்டூடியோக்கள் உள்ளன. மிக மோசமான பணிக் கலாச்சாரம் இருப்பதாகவும், சமீபத்திய மாதங்களில் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் புகார்களையும் எதிர்கொண்டு வருகிறது அந்நிறுவனம். கால் ஆஃப் டியூட்டி முதல் கேண்டி கிரஷ் வரை உலகம் முழுக்க பல பிரபல கேம்களை ஆக்டிவிசன் பிளிசார்ட் நிறுவனம் உருவாக்கியுள்ளது. உலகம் முழுவதிலுமுள்ள 190 நாடுகளில், அந்நிறுவனத்துக்கு மாதம் 40 கோடி (400 மில்லியன்) ஆக்டிவ் பயனர்கள் உள்ளனர். தங்களின் கேம் பாஸ் சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்துக்கு, ஆக்டிவிசன் பிளிசார்ட் நிறுவனத்தின் கேம்களைக் கொண்டு வர பணியாற்றிக் கொண்டிருப்பதகவும் மைக்ரோசாஃப்ட் கூறியுள்ளது. இந்த ஒப்பந்தம் ஒட்டுமொத்த கேமிங் துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி அதிகரித்துள்ள காலகட்டத்தில், உள்ளடக்கங்களே முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. மைக்ரோசாஃப்டின் சமீபத்திய தலைமுறையைச் சேர்ந்த கன்சோல்களை விடவும், பிளே ஸ்டேஷன் 5-ன் விற்பனை அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சோனியின் எந்திரங்கள் மிகவும் கவர்ச்சிகரமான பிரத்யேக கேம்க்ளைக் கொண்டிருக்கின்றன. அந்த கேம்களை பல்வேறு சாதனங்களில் விளையாட முடியாது என சிலர் வாதிடுகின்றனர். கேம்களை விளையாடும் நபர்களை தங்கள் தளங்களுக்கு ஈர்க்கும் போரில், இந்த பிரத்யேக கேம்கள் மற்றும் அந்த கேமிங் அனுபவம் மிகவும் அவசியமாகிறது. தற்போது மைக்ரோசாப்ட் மற்றும் சோனி கன்சோல்களில் விளையாடக்கூடியதாக இருக்கும் ஆக்டிவிசன் பிளிசார்ட் கேம்கள் எக்ஸ்பாக்ஸில் மட்டும் பிரத்தியேகமாக விளையாடக் கூடியதாக மாறுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.   பட மூலாதாரம்,BETHESDA   படக்குறிப்பு, வீடியோ கேம் காட்சி நெட்ஃபிளிக்ஸ் பாணியில் கேம்களை விளையாட சந்தா வசூலிக்கும் முறை, எதிர்கால வியாபார உத்தியாகலாம் என எக்ஸ் பாக்ஸ் கருதுகிறது. இருப்பினும், இது போன்ற பிரத்யேக கேம்கள் தொடர்பான சேவைகளை கூடுதலாக தங்கள் சேவையில் வழங்குவது ஒரு கூடுதல் சிறப்பாக இருக்கும் என எக்ஸ் பாக்ஸ் கருதுகிறது. தங்களின் கேம் பாஸ் சேவைக்கான கையகப்படுத்தல் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து, மைக்ரோசாஃப்ட் தரப்பு உற்சாகமாக உள்ளது. தங்களால் முடிந்த வரை எத்தனை ஆக்டிவிசன் பிளிசார்ட்டின் கேம்களை, எக்ஸ் பாக்ஸ் கேம் பாஸ் மற்றும் பிசி கேம் பாஸில் கொடுக்க முடியுமோ, அத்தனை கேம்களைக் கொடுபோம் என கூறினார் ஸ்பென்சர். 2021ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் கேம்ஸ் ஸ்டுடியோவான பெதெட்சாவை வாங்கியபோது, ஃபால் அவுட் மற்றும் ஸ்கைரிம் போன்ற பிரான்சைஸிகள் மற்ற தளங்களுக்கு தொடர்ந்து கேம்களை உருவாக்குவார்கள் என்று கருதப்பட்டது. ஆனால், தற்போது வெளிவரவிருக்கும் 'ஸ்டார்ஃபீல்ட்' மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிரத்தியேகமாக வெளியீடாக இருக்கப் போகிறது. ஒப்பந்தம் நிறைவடையும் வரை, ஆக்டிவிஷன் பிளிசார்ட் மற்றும் மைக்ரோசாஃப்ட் கேமிங் ஆகியவை தனித்தனியாக தொடர்ந்து செயல்படும் என்று ஃபில் ஸ்பென்சர் ஒரு நீண்ட வலைப்பதிவில் குறிப்பிட்டிருந்தார். பாபி கோடிக் என்பவர் ஆக்டிவிஷனின் தலைமைச் செயல் அதிகாரியாக தொடர்வார். மைக்ரோசாட் மற்றும் ஆக்டிவிசன் பிளிசார்ட் நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் நிறைவடைந்த பின், ஆக்டிவிசன், வியாபார ரீதியில் மைக்ரோசாஃப்டின் கீழ் செயல்படும். https://www.bbc.com/tamil/global-60058739
    • அருண், பாடசாலை முடிந்து அம்மாவின் முந்தனையை பிடித்துகொண்டு நீங்கள் சிறுவனாக இருந்தபோது கொட்டாஞேனை ‍மட்டக்குளி பஸ்ஸில் பயணித்த காலம் நினைவில் வந்து போகின்றது.    சிங்களவன் கூட இவ்வளவு துவேசமாக இருக்க மாட்டான். 
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.