-
Tell a friend
-
Topics
-
14
By ராசவன்னியன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
By nochchi · பதியப்பட்டது
https://www.facebook.com/watch/?v=502935011578478 -
By பிரபா சிதம்பரநாதன் · Posted
நீங்கள் கூறியபடி, விமானம் தரையிறங்கும் சமயத்திலும், சில சமயங்களிலும் குலுக்கல் இருந்ததாகத்தான் கூறினார்.. இந்த விமானநிலையம் ஊடாக சென்னைக்கு வர நானும் எனது சகோதரியும் 2020ல் போட்ட திட்டம், COVIDல் இல்லாது போய்விட்டது. இனி அப்படி ஒரு சந்தர்ப்பம் எப்பொழுது வருமோ தெரியாது. அதே போல வருமானம் வடக்கிற்கு வந்துவிட்டால் என்ற நோக்கத்தில் அதிகளவு வசதிகளை கொடுக்கவும் இல்லை.. இம்முறை யாழ்ப்பாணம் போன பொழுது, பலாலி விமான நிலையத்தை வெளியே நின்று பார்க்கத்தான் முடிந்தது! -
அரியதோர் பதிவு. வாழ்த்துகள் தமிழ் சிறீ.
-
By ஏராளன் · பதியப்பட்டது
'ஆதார் அட்டை நகலை பகிராதீர்கள்' - இந்திய அரசு எச்சரிக்கை 29 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MINT / GETTY IMAGES ஆதார் எண் தவறாகப் பயன்படுத்தப்படும் என்பதால் உங்கள் ஆதார் அட்டையின் நகலை யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்று இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை அந்த அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் முக்கியத் தகவல்கள் இதோ. 1. ஆதார் அட்டையின் நகலை வழங்குவதற்கு பதிலாக, ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்கள் மட்டுமே தெரியும் வகையில், எண்கள் மறைக்கப்பட்ட (masked) ஆதார் அட்டையைப் பயன்படுத்தவும். 2. https://myaadhaar.uidai.gov.in இணையதளத்தில் ஆதார் அட்டையைப் பதிவிறக்கம் செய்யும்போது, 'Do you want a masked Aadhaar?' என்ற தெரிவைப் பயன்படுத்தி 'மாஸ்க்டு' ஆதார் அட்டையைப் பெறமுடியும். இனி வாட்சப் மூலம் டிஜிலாக்கர் சேவையை பெறலாம். எப்படி? இணையத்தை முடக்குவதில் 'டிஜிட்டல்' இந்தியா முதலிடம்: 'அரசிடம் தரவுகள் இல்லை' 3. ஒரு குறிப்பிட்ட ஆதார எண் பயன்பாட்டில் உள்ளதா என்பதை இணையத்தில் https://myaadhaar.uidai.gov.in/verifyAadhaar எனும் முகவரியில் சரிபார்க்கலாம். இணையம் இல்லாமல் ஆஃப்லைனில் இ- ஆதார் அட்டை அல்லது ஆதார் அட்டை அல்லது பி.வி.சி ஆதார் அட்டையில் உள்ள க்யூ.ஆர். கோடு மூலம் ஆதார் எண்ணைச் சரிபார்க்க முடியும். பட மூலாதாரம்,HTTPS://MYAADHAAR.UIDAI.GOV.IN 4. இ-ஆதார் அட்டையைப் பதிவிறக்கம் செய்ய இன்டர்நெட் கஃபே போன்ற இடங்களில் உள்ள, பலரும் பயன்படுத்தும் கணினிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை அவற்றைப் பயன்படுத்த வேண்டிய சூழல் வந்தால், பதிவிறக்கம் செய்யப்பட்ட இ- ஆதார் அட்டையை அந்தக் கணினியில் இருந்து அழித்து விடவேண்டும். 5. ஆதார் அட்டையை வழங்கும் UIDAI ஆணையத்திடம் உரிமம் பெற்ற அமைப்புகள் மட்டுமே ஆதார் எண்ணை ஒரு தனிநபரின் அடையாளத்தைக் கண்டறிவதற்காகப் பயன்படுத்த வேண்டும். தங்கும் விடுதிகள், திரையரங்குகள் போன்ற அமைப்புகள் போன்றவற்றுக்கு யாருடைய ஆதார் அட்டையின் நகலையும் வாங்கி வைக்க அனுமதி கிடையாது. அவ்வாறு சேகரித்து வைப்பது ஆதார் சட்டம் 2016இன் கீழ் குற்றமாகும். 6. ஏதாவது தனியார் அமைப்பு உங்களது ஆதார் அட்டை நகலைக் கோரினால், அவர்களிடம் UIDAI வழங்கிய பயனர் உரிமம் உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளவும். https://www.bbc.com/tamil/india-61624767
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.