Jump to content

பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்

Recommended Posts

22 hours ago, vasee said:

பிட் கொயின் தொழில்னுட்ப ரீதியாக ஆரம்ப நல்ல அறிகுறிகள் காட்டுகிறது, 36000 விலையை தக்க வைத்தால் (தற்சமயம்) குறுங்கால அளவில் சாதகம் என நினைக்கிறேன் அத்துடன் 39000 மற்றும் 44000 விலைகளை கடந்தால் தொழில்னுட்ப  ரீதியாக பிட் கொயின் இறங்குமுகம் முடிவுக்கு வருவதாகக்கருதுகிறேன்

நீங்கள் குறிப்பிட்டது போன்று நீண்டகால அடிப்படையில் பிட் கொயின் நல்ல முதலீடு என்றே நினைக்கிறேன். இந்தச் சடுதியான ஏற்ற இறக்கங்களைத் தாண்டி சீரான நிலைக்கு வர வேண்டும். அப்படி வரும்போது தற்போதுள்ளது போன்று குறுகிய காலத்தில் முதலீடு செய்து விற்று பெரும்தொகையை இலாபமாக ஈட்டக்கூடிய நிலை இருக்குமா என்பது சந்தேகம். 

இந்த சீரற்ற நிலை காரணமாகத்தான் உள்ளூர் பணமாக மிட் கொயினை சல்வடோர் நாடு பயன்படுத்துவதை இரத்து செய்யுமாறு இன்று IMF கேட்டுள்ளது.

 • Like 2
Link to comment
Share on other sites

 • Replies 386
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

பொறுப்பு துறப்பு இந்த திரியில் பகிரப்படும் எந்த தகவலுமே நிதி ஆலோசனை (financial advice) அல்ல. இவை வெறும் கருத்துக்கள் மட்டுமே. உங்கள் முதலீட்டு முடிவுகளுக்கு நீங்களே 100% பொறுபானவர்கள். நோக்க

vasee

விலை என்பது அதன் உண்மையான மதிப்பிலேயே தங்கியுள்ளது. அசையும் சொத்துகளின் (Goods) விலை ஓரளவிற்கு நிறைபோட்டி சந்தை அடிப்படியில் தீர்மானிக்கப்படும் (efficient market hypothesis). உதாரணமாக கார் விலை

சாமானியன்

வாழ்க்கையின் சகல அம்சங்களும் ஒரு பெருமெடுப்பு நோக்கில் சமநிலைப்படுத்தப்பட்டவையே . ஒரு குறுகிய வட்டத்தில் வெற்றி தோல்வி என்று அழைக்கப்படுவனனவெல்லாம் பின்னர் அப்பிடியே அடிபட்டுப்போய் விடுவதை கண்கூடாக பா

Posted Images

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

நீங்கள் குறிப்பிட்டது போன்று நீண்டகால அடிப்படையில் பிட் கொயின் நல்ல முதலீடு என்றே நினைக்கிறேன். இந்தச் சடுதியான ஏற்ற இறக்கங்களைத் தாண்டி சீரான நிலைக்கு வர வேண்டும். அப்படி வரும்போது தற்போதுள்ளது போன்று குறுகிய காலத்தில் முதலீடு செய்து விற்று பெரும்தொகையை இலாபமாக ஈட்டக்கூடிய நிலை இருக்குமா என்பது சந்தேகம். 

இந்த சீரற்ற நிலை காரணமாகத்தான் உள்ளூர் பணமாக மிட் கொயினை சல்வடோர் நாடு பயன்படுத்துவதை இரத்து செய்யுமாறு இன்று IMF கேட்டுள்ளது.

தொழில்னுட்ப அடிப்படையில் வர்த்தகத்தில் ஈடுபடுவதால்,  கிரிப்டோ நீண்ட கால அளவில் நல்ல முதலீடா என்பது தெரியவில்லை, ஆனால் தற்போது ஆரம்ப நல்ல அறிகுறி காட்டுவதாக நம்புகிறேன்(கிரிப்டோ), ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை, சில வேளை அது Dead cat bounce ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

தொழில்னுட்ப ரீதியாக சாதகமாகக்காணப்பட்டால் வாங்குவேன் மறு வளமாக பாதகமாகக்காணப்பட்டால் விற்பதாக உத்தேசித்துள்ளேன். (குறுங்கால அடிப்படையில்)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 23/1/2022 at 23:33, இணையவன் said:

எனக்கு பங்குச் சந்தையில் Technical அனுபவம் கூட இல்லை. Apple நிறுவனத்தின் மீது நீண்டகாலமாக பாவனையாளன் என்ற ரீதியில் முகுந்த ஈடுபாடு இருந்தது. Apple தொடர்பான சஞ்சிகைகள் எல்லம் வாங்கிப் படிப்பேன். 94-95 ஆண்டுகளில் Computer graphic படித்துக் கொண்டிருந்தேன். Apple அக் காலத்தில் மிக நெருக்கடியில் இருந்தது. அப்போது மிகப் பெரிய பகுப்பாய்வு நிறுவனங்கள், 2000 ஆண்டளவில் முற்றாக மூடப்பட்டுவிடும் என்று எதிர்வுகூறியிருந்தன. தீவிர ஆதரவாளன் என்பதாலோ என்னவே எப்படியும் தலைநிமிர்வார்கள் என்று நம்பினேன். அப்போது பங்குச் சந்தையில் சில சதங்கள் மட்டுமே பெறுபதியானதாக இருந்தது. பங்குகள் வாங்க வேண்டும் என்று ஆர்வமிருந்தது. ஆனால் இப்போது போன்று இணைய வசதியோ பங்குச் சந்தை பற்றிய அடிப்படை அறிவோ இல்லாததோடு கையில் ஒரு சதம் காசும் இருக்கவில்லை. இன்று பல தடவைகள் split செய்யப்பட்டு 150 ஈரோவுக்கு மேல் உள்ளது. அன்று 150 ஈரோவுக்கு பங்கு வாங்கியிருந்தால் இன்று அதன் பெறுமதி ஒரு லட்சம் ஈரோவுக்கு அதிகமாக இருக்கும்.

அந்த வர்த்தகத்திலீடுபட்ட போது எனக்கு தொழில்னுட்ப (Technical) அறிவு இருக்கவில்லை, Fundamental அடிப்படையிலேயே முதலிட்டிருந்தேன்.

அந்த முதலீட்டு தோல்வியின் பின் அந்த இழப்பினை ஈடு செய்வதற்காக இணையத்தில் மும்முரமாக தேடி ஒரு முதலீட்டு இணையத்தினை கண்டு பிடித்து அதனை தொடர ஆரம்பித்தேன்

.அந்த இணையத்தில் ஒரு பங்கினை பற்றி அதிகமாக உரையாடப்பட்டது அந்த பங்கினை பிந்தொடர ஆரம்பித்தேன், ஒரு நாள் சந்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக ( காலை 8 மணிக்கு முன்னதாக இருக்கலாம்) அந்த பங்கு வர்த்தக நடவடிக்கையை இடைநிறுத்துவதாகவும் அது அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதற்கானது என அறிவித்தது.

அது ஒரு வெள்ளிக்கிழமை, வார இறுதி முழுவதும் அந்த இணையத்தளத்தில் அந்த பங்கு தொடர்பாக சாதகமான கருத்துகள் குவிந்தது.

திங்கள் கிழமை சந்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக ஒன்று அல்லது இரண்டு மணித்தியாலத்திற்கு முன்பாக அது தனது அறிவிப்பை வெளியிட்டது,

அது ஒரு  செம்பு அகழும் நிறுவனம் அது அவுஸ்திரேலிய நிறுவனமாக இருந்தபோதும், அந்த நிறுவனத்தின் சுரங்கங்கள் பிரேசிலில் அமைந்திருந்தது.

சில மாதிரிகளை சேகரித்திருந்தார்கள் அதனடிப்படையிலேயே அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன் துறைசார் அனுபவமில்லாதலால் அந்த இணையத்தளத்திற்கு சென்று அவர்கள் கூறிய கருத்துகளினடிப்படையில் அந்த பங்கினை வாங்கமுற்பட்டேன்.

ஏனெனில் அந்த இணையத்தில் அதிகமாகப்போற்றப்படும் ஒருவர் அந்த தகவல் அடிப்படையில் அந்த நிறுவனம் உற்பத்தி ஆரம்பிகும்போது அதன் விலை $1 மேல் செல்லும் என்பதை ஆதாரபூர்வமாக கூறியிருந்தார்.

இறுதியாக அந்த பங்கு 0.072 சத அளவில் விற்பனையாகியிருந்தது. சந்தை ஆரம்பித்தபோது ஆரம்ப விலை 0.09 சதத்திற்கு வாங்கினேன், விலை அன்றைய நாளிறுதியில் 0.07 இல் இருந்தது மீண்டும் நட்டம்.

அந்த இணையத்தில்  அதுவரை காலமும் அந்த பங்கின் (குறித்த நாள் காலையில் கூட) ஒளிமயமான எதிர்காலம் பற்றி விவாதித்தவர்கள், மாலையில் அதற்கு எதிராக விவாதித்தார்கள், இன்னுமொரு வித்தியாசம் அவர்களது நிலையில் காணப்பட்டது, அந்த தளத்தில் ஒரு பங்கு பற்றி விவாதிக்க வேண்டுமாயின் நீங்கள் அந்த பங்கினை வாங்கி வைத்திருக்கிறீர்களா இல்லையா என்பதையும் மற்றும் உங்கள் நிலைப்பாடு வாங்கல், விற்றல், நடுவுநிலமை என்பதையும் குறிப்பிடவேண்டும்.

காலைவரை பங்கு வைத்திருப்பதாகவும் அவர்களது நிலைப்பாடு வாங்குவதும் என்று குறிப்பிட்டிருந்தவர்கள் மாலையில் பங்குகள் வைத்திருக்கவில்லை என்றும் அவர்களது நிலைப்பாடு அந்த பங்குகளை விற்றல் என்பதுமாக இருந்தது.

அவர்களிடம்தான் அதிக விலைக்கு காலையில் பங்குகளை வாங்கியிருப்பேன் என கருதுகிறேன்.

அதன் பின் அந்த நடவடிக்கை எதனால் ஏற்பட்டது என இணைய்த்தில் ஆராய்ந்த போது அறிந்து கொண்ட விடயம் Exhaustion Gap

https://tradingsim.com/blog/exhaustion-gap/

அதுதான் தொழில்னுட்ப ஆய்வு எனது கவனத்திற்கு வந்தது அதன் பின்னரே அது தொடர்பாக மேலும் மேலும் இணையத்தில் வாசித்தறிந்து கொண்டேன்.

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த சம்பவங்களின் பின்னர் எனக்கு Fundamental analysis ஒரு முதலீட்டின் ஒளிமயமான எதிர்காலம் என கூறப்படும் போது எனக்கு ஒரு மோசமான Deja vu போலிருக்கும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வருட இறுதிக்குள் பிட் கொயின் 100,000 மேல் செல்லும் என எதிர்வுகூறுகிறார்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

EURJPY Monthly chart

ஒவ்வொரு மெழுகுதிரியும் 1 மாத கால அளவை கொண்டவையாக உள்ளது, இந்த வரைபடத்தில், இந்த நாணயத்தின் எதிர்கால பெறுமதி எலியட் அலை எனும் தொழில்னுட்பம் மூலம் ஆராயப்பட்டுள்ளது.

இந்த நாணய இணை தற்போது ஏறத்தாழ 128.500 கீழாக உள்ளது எதிர்பார்க்கப்படும் விலை 135.000, அவசர வெளியேற்றம் 126.500 கீழாக இடப்படுமாயின் 1:3 என்ற இலாபத்தை எதிர்பார்க்கும் ஒரு வர்த்தக முயற்சியாகும்.

எதிர்பார்க்கும் விலையினை அடைவதற்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாத காலமாகலாம்.

இது ஒரு வர்த்தக ஆலோசனை அல்ல.

இந்த எலியட் அலை பற்றிய சிறு குறிப்பு இணையத்தில் தேடிய போது, கிடைத்த காணொளியினை கீழ் இணைத்துள்ளேன்.

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

@vaseeEEENF 

88 Energy Ltd
OTCMKTS: EEENF
 
என்ன வசி அவுஸ் பெனி ஸ்ரொக் பிச்சுகிட்டு ஓடுது.

நானும் கொஞ்சம் வாங்கியுள்ளேன் பார்ப்போம்.

0.034 USD +0.0012 (3.66%)today
Feb 1, 10:18 AM EST • Disclaimer
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

https://www.reallifetrading.com/online-courses

இந்த இணையத்தில் இலவசமாக பங்கு வர்த்தகம் மற்றும் நாணய வர்த்தகம் பற்றிய இலவச கல்வி வழங்கப்படுகிறது, ஆரம்பத்தில் 8 இலவச கல்வி போல் காணப்படும் இணையத்தில் நீங்கள் பதிவு செய்த பின்னர் 21 இலவச கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது.

ஆரம்பக்கல்வியில் (Beginner course)முதல் இரண்டு பாகங்கள்(Module) வரை பார்த்துவிட்டேன், அடிப்படை அறிவை மேலொட்டமாக இலகுவாக எடுத்து சொல்கிறார்,

சில Affiliate இணையதளங்களை இதில் குறிப்பிடுகிறார், ஆனால் இந்த த்ளம் ஒரு உபயோகமான தளமாக இருக்கும், அத்துடன் பொழுது போக்காகவும் இருக்கும்,

சுவாரசியமாக சொல்வதற்காக சில மிகைப்படுத்தல் உள்ளதாகக்கருதுகிறேன்.

On 2/2/2022 at 02:35, ஈழப்பிரியன் said:

@vaseeEEENF 

88 Energy Ltd
OTCMKTS: EEENF
 
என்ன வசி அவுஸ் பெனி ஸ்ரொக் பிச்சுகிட்டு ஓடுது.

நானும் கொஞ்சம் வாங்கியுள்ளேன் பார்ப்போம்.

0.034 USD +0.0012 (3.66%)today
Feb 1, 10:18 AM EST • Disclaimer

இந்த பங்கு 0.055 அவுஸ்திரேலிய டொலரில் முக்கிய வலயமாக உள்ளது என நினைக்கிறேன்.

மேலே ஒரு இணையத்தளம் இணைத்துள்ளேன், அதிலுள்ள இலவசக்கல்வியை பற்றிய உங்கள் கருத்து என்ன?

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vasee said:

மேலே ஒரு இணையத்தளம் இணைத்துள்ளேன், அதிலுள்ள இலவசக்கல்வியை பற்றிய உங்கள் கருத்து என்ன?

நேரம் கிடைக்கும் போது பார்த்துவிட்டு சொல்கிறேன்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கூகிள் தற்போது2,800 டாலர் வரை மதிப்புள்ள தனது பங்குகளை இருபதாகப் பிரித்து ஒரு பங்கு ஏறத்தாழ 140 டாலருக்கு சந்தையில் விடப் போகிறார்கள் -  வாங்கிக் கொள்ளலாமே ....

 • Like 1
Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு இது தெரிந்து இருக்கலாம்.

 - US Fed அவசரமாக கூட வேண்டிய சட்டம் மற்றும் ஒழுங்கு முறைகளை பாவித்து, பெப்ரவரி 14 2022 கூடுகிறது. 

வங்கிகள் நிதி நெருக்கடி நிலையை சாமலுக்க கூடிய நிலையில் இருப்பதாக Fed இன் அங்கத்தவர்கள், உத்தியோக பற்றற்ற முறையில் கலந்துரையாடியது தெரிய வந்துள்ளது.  

 • Like 2
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kadancha said:

சிலருக்கு இது தெரிந்து இருக்கலாம்.

 - US Fed அவசரமாக கூட வேண்டிய சட்டம் மற்றும் ஒழுங்கு முறைகளை பாவித்து, பெப்ரவரி 14 2022 கூடுகிறது. 

வங்கிகள் நிதி நெருக்கடி நிலையை சாமலுக்க கூடிய நிலையில் இருப்பதாக Fed இன் அங்கத்தவர்கள், உத்தியோக பற்றற்ற முறையில் கலந்துரையாடியது தெரிய வந்துள்ளது.  

இரண்டாவதாக பதிவேற்றிய ஒளிப்பதிவில் நுகர்வோர் விலை சுட்டெண் அறிவிப்பின் பிட் கொயின், தங்கம், SPY சந்தை மாற்றம் சிறிய அம்புக்குறியால் காட்டப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க நுகர்வோர் விலை சுட்டெண் 0.4% ஆனால் நடைமுறை நுகர்வோர் விலை சுட்டெண் 0.6% ஆக வந்திருந்தது, எதிர்பார்க்கப்பட்ட நுகர்வோர் விலை சுட்டெண்ணை விட 0.2% அதிகம், இதன் பிரதிபலிப்பு வட்டி வீதம் அதிகரிப்பாக இருக்கும் என்பதால் பங்கு சந்தையில் சரிவும் தங்கம் பிட் கொயினில் விலை அதிகரிப்பும் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டபோதும், சந்தை எதிர்பார்ப்பிற்கு மாறாக பங்கு சந்தை, தங்கம், பிட் கொயின் என அனைத்தும் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த வாரம் ஐரொப்பிய ஒன்றியம் ஐரோப்பிய மத்திய வங்கி பணமுறிகளை வாங்குவதை மட்டுபடுத்துவதாகவும் பங்குனி மாதத்தில் முற்றாக பணமுறிகளை வாங்குவதை கைவிடுவதாக அறிவித்தது (PEPP) , முதலீட்டாளர்கள் பலரும் எதிர்பார்த்த வட்டி வீத அறிவிப்பு வெளிவரவில்லை, யுரோ நாணயம் சடுதியாக அதிகரித்தது முதலாவது ஒளிப்பதிவில் காட்டப்பட்டுள்ளது.

இது எதனால் ஏற்பட்டது என வரையறுக்க முடியவில்லை, ஆனால் முன்பு பதிவிட்ட எலியட் அலை தொழில்னுட்ப பதிவில் ஐரோப்பிய நாணயம் உயரலாம் என பதிவிட்டிருந்தேன், திங்கள் கிழமை 90 புள்ளிகளும், ஐரோப்பிய மத்திய வங்கி அறிவிப்பின் பின்னர் 130 புள்ளிகளுமாக கடந்த வாரம் மொத்தமாக 311 புள்ளிகள் அதிகரித்திருந்தது, 3 வார விலை மாற்றத்தினை 1 வாரத்திலேயே அடைந்தது.

அத்துடன் யுரோ நாணய சுட்டெண்ணும் அதிகரித்தது, இது முதலீட்டாளர்கள் எதிர்பார்த்த வட்டி வீத அதிகரிப்பில்லாமல் யுரோ நாணயம் விலை அதிகரித்திருந்தது, மறுவளமாக அமெரிக்க நாணயம் எந்தவித மாற்றத்தினையும் எதிர்பாரா அதிகரிப்பான நுகர்வோர் விலை சுட்டெண் ஏற்படுத்தவில்லை, ஏன் என்பது விளங்கவில்லை.

On 30/1/2022 at 11:53, vasee said:

EURJPY Monthly chart

ஒவ்வொரு மெழுகுதிரியும் 1 மாத கால அளவை கொண்டவையாக உள்ளது, இந்த வரைபடத்தில், இந்த நாணயத்தின் எதிர்கால பெறுமதி எலியட் அலை எனும் தொழில்னுட்பம் மூலம் ஆராயப்பட்டுள்ளது.

இந்த நாணய இணை தற்போது ஏறத்தாழ 128.500 கீழாக உள்ளது எதிர்பார்க்கப்படும் விலை 135.000, அவசர வெளியேற்றம் 126.500 கீழாக இடப்படுமாயின் 1:3 என்ற இலாபத்தை எதிர்பார்க்கும் ஒரு வர்த்தக முயற்சியாகும்.

எதிர்பார்க்கும் விலையினை அடைவதற்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாத காலமாகலாம்.

இது ஒரு வர்த்தக ஆலோசனை அல்ல.

இந்த எலியட் அலை பற்றிய சிறு குறிப்பு இணையத்தில் தேடிய போது, கிடைத்த காணொளியினை கீழ் இணைத்துள்ளேன்.

Edited by vasee
 • Like 2
Link to comment
Share on other sites

அமெரிக்க வருடாந்த நுகர்வோர் விலை சுட்டெண் 7.5 ஆக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று அமெரிக்க ஐரோப்ப்பிய பங்குச் சந்தையில் கணிசமான அளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.  

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

அமெரிக்க வருடாந்த நுகர்வோர் விலை சுட்டெண் 7.5 ஆக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று அமெரிக்க ஐரோப்ப்பிய பங்குச் சந்தையில் கணிசமான அளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.  

மேலே குறிப்பிட்ட தை மாதத்திற்கான  நுகர் விலை சுட்டெண் மாதாந்த அதிகரிப்பு, வருடாந்த அதிகரிப்பு நீங்கள் சொன்னது போல 7.5%.

https://www.bls.gov/cpi/

அமெரிக்க தேசிய பாதுகாப்பு அலோசகரான சலிவனின் கருத்து வெளியானதை அடுத்து பங்கு சந்தை மற்றும் சில நாணயங்கள் யுரோ உள்ளடங்கலாக மற்றும் பிட் கொயின் என்பவை சரிவை சந்தித்தது ஆனால் மறுவளமாக தங்கமும் அமெரிக்க நாண்யமும் விலை அதிகரித்தது.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சந்தை சில சமயம் செய்திகளுக்கு தொடர்பில்லாமல் செயற்படும், அதனை நியாப்படுத்தும் வகையில் சொல்வார்கள் " Good analysis bad trader "

https://www.goodreads.com/book/show/100779.Reminiscences_of_a_Stock_Operator

இந்த புத்தகத்தில் ஜெசி லிவர்மொரின் பங்கு சந்தை அனுபவங்கள் கூறப்படுகிறது.

அதில் ஜெசி லிவர்மோர் அடிசன் கமாக் என்பவர் எவ்வாறு, சந்தை நடவடிக்கையை மேற்கொண்டார் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும்.

அதில் ஜோசப் எனும் பங்கு சந்தை, பொருளாதார பற்றி எழுதும் பத்திரிகையாளர், அடிசன் கமாக்கிடம் ஒரு சந்தையின் முக்கியமான தகவலை கூறுவார், வில்லியம் ரொக்கர்பெலோ தனது எரிசக்க்தி பங்கினை ஒவ்வொரு 3/8 அதிகரிப்பிற்கும் 1500 பங்குகள் வீதம் விற்கிறார் என்பதாகும்.

பத்திரிகையாளரான ஜோசப்பிற்கு அடிசன் பங்கு சந்தை சரிவில் முதலிட்டிருப்பது தெரியும் அதனால் அந்த செய்தியினை கூறியவுடன் அடிசன் தனது பங்கு சந்தை சரிவு முதலீட்டினை அதிகரிப்பார் என எதிர்பாத்திருந்தார்  (சாதாரணமாக அனைவரும் அதனையே செய்வார்கள்), ஆனால் அடிசன் அந்த பங்குகளை அதே விலை மாற்றத்தில் அதேயளவில் வாங்கினார்.

பின்னர் அந்த பங்குகளை கொண்டே பங்கு சந்தை சரிவை ஆரம்பித்து வைத்தார் என குறிப்பிடுகிறார்.

இங்கு பெரிய வர்த்தகர்கள் சில்லறை வர்த்தகர்களிடமிருந்து இவ்வாறுதான் வேறுபடுகிறார்கள்.

இந்த பெரிய வர்த்தகர்கள்தான் சந்தையை கட்டுப்படுத்துகிறார்கள், ஆனாலும் சில சமயம் இந்த பெரிய வர்த்தகர்கள் கூட சில பங்குகளில் மாட்டி விடுவார்கள், அந்த பங்கிற்குரிய நிறுவனம் திவாலாகி கொண்டிருக்கும் அதிலிருந்து வெளியேறுவதற்காக தேர்ந்தெடுப்பது சில்லறை வர்த்தகர்களை.

செயற்கையாக தற்காலிகமாக பங்கின் விலையை வலிந்து உயர்த்தி கழிவு விலையில் பங்கு வாங்கும் சில்லறை வர்த்தகர்களின் தலையில் கட்டிவிடுவார்கள் இந்த பெரிய வர்த்தகர்கள்.
இதனை பங்கு சந்தையில் "Dead cat bounce" என்பார்கள்.

 • Like 2
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kadancha said:

சிலருக்கு இது தெரிந்து இருக்கலாம்.

 - US Fed அவசரமாக கூட வேண்டிய சட்டம் மற்றும் ஒழுங்கு முறைகளை பாவித்து, பெப்ரவரி 14 2022 கூடுகிறது. 

வங்கிகள் நிதி நெருக்கடி நிலையை சாமலுக்க கூடிய நிலையில் இருப்பதாக Fed இன் அங்கத்தவர்கள், உத்தியோக பற்றற்ற முறையில் கலந்துரையாடியது தெரிய வந்துள்ளது.  

அவங்க வலன்ரைன் டே கொண்டாட போறாங்க.
நீங்க வேற.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஈழப்பிரியன் said:

அவங்க வலன்ரைன் டே கொண்டாட போறாங்க.
நீங்க வேற.

Image

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

Image

கடஞ்சா நான் சும்மா விளையாட்டுக்காக எழுதியது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

கடஞ்சா நான் சும்மா விளையாட்டுக்காக எழுதியது.

தெரிகிறது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 13/2/2022 at 01:31, vasee said:

சந்தை சில சமயம் செய்திகளுக்கு தொடர்பில்லாமல் செயற்படும், அதனை நியாப்படுத்தும் வகையில் சொல்வார்கள் " Good analysis bad trader "

https://www.goodreads.com/book/show/100779.Reminiscences_of_a_Stock_Operator

இந்த புத்தகத்தில் ஜெசி லிவர்மொரின் பங்கு சந்தை அனுபவங்கள் கூறப்படுகிறது.

அதில் ஜெசி லிவர்மோர் அடிசன் கமாக் என்பவர் எவ்வாறு, சந்தை நடவடிக்கையை மேற்கொண்டார் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும்.

அதில் ஜோசப் எனும் பங்கு சந்தை, பொருளாதார பற்றி எழுதும் பத்திரிகையாளர், அடிசன் கமாக்கிடம் ஒரு சந்தையின் முக்கியமான தகவலை கூறுவார், வில்லியம் ரொக்கர்பெலோ தனது எரிசக்க்தி பங்கினை ஒவ்வொரு 3/8 அதிகரிப்பிற்கும் 1500 பங்குகள் வீதம் விற்கிறார் என்பதாகும்.

பத்திரிகையாளரான ஜோசப்பிற்கு அடிசன் பங்கு சந்தை சரிவில் முதலிட்டிருப்பது தெரியும் அதனால் அந்த செய்தியினை கூறியவுடன் அடிசன் தனது பங்கு சந்தை சரிவு முதலீட்டினை அதிகரிப்பார் என எதிர்பாத்திருந்தார்  (சாதாரணமாக அனைவரும் அதனையே செய்வார்கள்), ஆனால் அடிசன் அந்த பங்குகளை அதே விலை மாற்றத்தில் அதேயளவில் வாங்கினார்.

பின்னர் அந்த பங்குகளை கொண்டே பங்கு சந்தை சரிவை ஆரம்பித்து வைத்தார் என குறிப்பிடுகிறார்.

இங்கு பெரிய வர்த்தகர்கள் சில்லறை வர்த்தகர்களிடமிருந்து இவ்வாறுதான் வேறுபடுகிறார்கள்.

இந்த பெரிய வர்த்தகர்கள்தான் சந்தையை கட்டுப்படுத்துகிறார்கள், ஆனாலும் சில சமயம் இந்த பெரிய வர்த்தகர்கள் கூட சில பங்குகளில் மாட்டி விடுவார்கள், அந்த பங்கிற்குரிய நிறுவனம் திவாலாகி கொண்டிருக்கும் அதிலிருந்து வெளியேறுவதற்காக தேர்ந்தெடுப்பது சில்லறை வர்த்தகர்களை.

செயற்கையாக தற்காலிகமாக பங்கின் விலையை வலிந்து உயர்த்தி கழிவு விலையில் பங்கு வாங்கும் சில்லறை வர்த்தகர்களின் தலையில் கட்டிவிடுவார்கள் இந்த பெரிய வர்த்தகர்கள்.
இதனை பங்கு சந்தையில் "Dead cat bounce" என்பார்கள்.

விலை என்பது அதன் உண்மையான மதிப்பிலேயே தங்கியுள்ளது. அசையும் சொத்துகளின் (Goods) விலை ஓரளவிற்கு நிறைபோட்டி சந்தை அடிப்படியில் தீர்மானிக்கப்படும் (efficient market hypothesis).

உதாரணமாக கார் விலை அதிகரித்தால் அதன் விறபனை குறையும்.

ஆனால் அசையா சொத்துக்களான முதலீடுகள் (Asset) நிறைபோட்டி சந்தை அடிப்படியில் தீர்மானிக்கப்படுவதில்லை.

உதாரணமாக வீடு, பங்கு போன்றவை விலை அதிகரிக்க அதற்கான கேள்வி அதிகரிக்கும் அதற்கு காரணம் முதலீட்டு செலவுகளின் எதிர்பார்ப்பே எதிர்காலத்தில் வாங்கிய விலையினை விட அதிக விலைக்கு விற்கலாம் என்பதாகும்.

இதனால் தான் இப்படியான முதலீடுகள் உண்மையான விலைகளை விட அதிகளவான விலையினை ஏற்படுத்துகிறது (Bubbles)

வரலாற்றில் பல வகையான நீர் குமிழிகள் (Bubbles) உருவாகியிருக்கின்றன என கூறுகிறார்கள்.

ருலிப், தங்கம், பங்கு, ரியல் எஸ்டேட் போன்றவையை உதாரணமாக சொல்கிறார்கள்.

https://www.investopedia.com/terms/d/dutch_tulip_bulb_market_bubble.asp

இந்த நீர் குமிழிகள் ஒவ்வொன்றிற்கும் பின்னர் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகக்கூறுகிறார்கள்.

ஏற்கனவே மிகைப்படுத்தப்பட்ட விலையினை உடைய கடனில் உள்ள வீட்டின் பெறுமதியினை துணையாக வைத்து அதன் போலியான பெறுமதியை முதலீடாக்கி அதே சந்தையில் இன்னொரு வீட்டை மிகைப்படுத்தப்பட்ட விலையில் மீண்டும் கடனில் வாங்கினால் என்னவாகும்.

ருலிப்பினை வங்கிகள் கூட ஒரு சொத்தாக அங்கீகரித்திருந்தது என்பதை இப்போது பார்ப்பவர்களுக்கு நகைசுவையாக இருக்கலாம் ஆனால் அந்த காலத்தில் ஒருவரும் அதனை அவ்வாறு பார்க்கவில்லை.

முதலீடுகளில் மற்றவர்களை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றும் போது இவ்வாறான துயரம் நிகழுகிறது.

 • Like 3
 • Thanks 1
Link to comment
Share on other sites

11 hours ago, vasee said:

ருலிப்பினை வங்கிகள் கூட ஒரு சொத்தாக அங்கீகரித்திருந்தது என்பதை இப்போது பார்ப்பவர்களுக்கு நகைசுவையாக இருக்கலாம் ஆனால் அந்த காலத்தில் ஒருவரும் அதனை அவ்வாறு பார்க்கவில்லை.

நீங்கள் குறிப்பிட்ட ருலிப் முதலீட்டினை இன்றுள்ள கிறிப்டோ முதலீட்டுக்கு ஒப்பிட்டதைச் சில கட்டுரைகளில் பார்த்துள்ளேன். 🙂

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, இணையவன் said:

நீங்கள் குறிப்பிட்ட ருலிப் முதலீட்டினை இன்றுள்ள கிறிப்டோ முதலீட்டுக்கு ஒப்பிட்டதைச் சில கட்டுரைகளில் பார்த்துள்ளேன். 🙂

இந்த மாதிரியான நீர்குமிழிகளை அரசுகள் கூட உருவாக்குகின்றதோ? ( உண்மை இல்லை ஒரு சந்தேகம் மட்டுமே)

உதாரணமாக அவுஸ்திரேலியாவில் முதலீட்டு அடிப்படையில் வீடு வாங்கும் போது அந்த கடனின் வட்டியை உங்களது வரியிலிருந்து தள்ளுபடி செய்யலாம்.

இதனால் நன்மை பெறுவது செல்வந்தர்கள், அதனை பார்த்து மற்றவர்களும் வீடுகளை வாங்க வீட்டு விலை அதிகரிக்கும் செல்வந்தர்கள் அதிகரித்த விலையில் மற்றவர்களுக்கு விற்றுவிடுவார்கள், அதன் பின் நீர்குமிழி உடைந்து விலை சாதாரண மட்டத்திற்கு வந்த பின் சிலேட்டை அழித்து விட்டு மீண்டும் ஆரம்பிப்பார்கள், இதனால் பாதிப்படைவது பாட்டாளிகளே.

வீடுகள் மட்டுமல்ல பங்குகள் போன்ற அனைத்து முதலீடுகளில் பெரும்பாலும் நன்மை அடைவது செல்வந்தர்கள் (இதில் நிறைய விதி விலக்குகளும் உண்டு).

வளங்களை சமமாகப்பிரிப்பதே வரியின் அடிப்படை, என்று கொண்டுவரப்பட்ட வரி, அதிகமாக செல்வந்தர்களுக்கே சாதகமாகவுள்ளது (பாட்டாளிகளின் வரி விகிதம் வருமானத்தினடிப்படையில் பல மடங்கு செல்வந்தர்களை விட அதிகமாகவுள்ளது).

வருமானங்களை சமமாக பிரிக்கப்படும் நிலை உருவானால் ஒட்டு மொத்த சமூகமும் சிறந்த வாழ்க்கை தரத்தை எட்ட முடியும், அமெரிக்காவில் 1950 - 1970 காலப்பகுதியில் ஒப்பீட்டளவில் வருமான இடை வெளி குறைவாக இருந்ததாக கூறுகிறார்கள் ( மிக சிறிய அளவில்) இந்த காலத்தை பொற்காலம் என கூறுகிறார்கள் (இதன் உண்மைதன்மை தெரியாது).

இந்த முதலீடுகளில் பங்கு பெற்றும் காலங்கள்தான் அதன் வெற்றியை தீர்மானிக்கின்றது.

முதலீடுகளில் ஆரம்பத்தில் முதலிடுபவர்கள் அதிக வெற்றியாளராகவும் உச்ச பகுதியில் முதலிடுபவர்கள் தோல்வியாளராகவும் (குறைந்த பட்சம் சில ஆண்டுகளாவது) காணப்படுகிறார்கள்.

https://www.investopedia.com/terms/b/bell-curve.asp#:~:text=A bell curve is a,a symmetrical bell-shaped curve.&text=The width of the bell curve is described by its standard deviation.

இது ஒரு வட்டம் போல நிகழும் (கால சுழற்சி).

https://en.wikipedia.org/wiki/Diffusion_of_innovations

இந்த Bell curve மற்றும் "S" curve அடிப்படையிலேயே பழக்க வழக்க பொருளாதார நிகழ்வதாகக்கூறுகிறார்கள்.

the three skills of top trading

இந்த புத்தகத்தை இணையத்தில் இலவசமாக வாசிக்கலாம் ( இணையதளத்தை இணைப்பது சரியல்ல என்பதால் இணைக்கவில்லை).

பங்கு சந்தையில் சொல்வார்கள் " Don't fight with the trend", "Cut your loss and run your profit" ஆனால் நடைமுறையில் நாம் அதற்கு எதிர்மறையாகவே செயல்படுவோம்.

விலை வீழ்ச்சி அடைகிற பங்குகளை வாங்குவோம் (Catching falling knife), ஏற்கனவே நட்டத்திலுள்ள பங்கினை விலை மேலும் குறைந்த பின்னும் திரும்பவும் வாங்குவோம் (Doubling down).

அதே நேரம் சிறிதளவது இலாபம் வந்தவுடன் பங்குகளை விற்றுவிடுவோம், ஆனால் சில பங்குகள் நட்டம் அதிகரித்து கொண்டு போய்க்கொண்டிருக்கும் ஆனால் எங்களால் விற்க முடியாது.

இவை அனைத்தும் எனக்கு ஏற்பட்டது, இவற்றிற்கு காரணம் சரியான முதலீட்டு திட்டமின்மையே.

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 13/2/2022 at 14:53, vasee said:

ஏற்கனவே மிகைப்படுத்தப்பட்ட விலையினை உடைய கடனில் உள்ள வீட்டின் பெறுமதியினை துணையாக வைத்து அதன் போலியான பெறுமதியை முதலீடாக்கி அதே சந்தையில் இன்னொரு வீட்டை மிகைப்படுத்தப்பட்ட விலையில் மீண்டும் கடனில் வாங்கினால் என்னவாகும்.

இது தான் 2008 இல் ஒபாமா வந்த காலத்தில் நடந்து கடன் வாங்கியவர்கள் பணத்துடன் மாயமாகிவிட வீடுகள் அனாதரவாக கிடந்தன.

இதையே சகலரும் செய்ய வங்கிகள் திவாலாயது.

ஒபாமா வந்த புதிதில் ஏற்கனவே புஸ் விட்டுவிட்டு போன பெரும்தொகை கடன்.
வங்கிகள் திவால்.

வங்கிகளுக்கு ஒபாமா வட்டியே இல்லாமல் பெரும்தொகையை கடனாக கொடுத்து நிமிர வைத்தார்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ஈழப்பிரியன் said:

இது தான் 2008 இல் ஒபாமா வந்த காலத்தில் நடந்து கடன் வாங்கியவர்கள் பணத்துடன் மாயமாகிவிட வீடுகள் அனாதரவாக கிடந்தன.

இதையே சகலரும் செய்ய வங்கிகள் திவாலாயது.

ஒபாமா வந்த புதிதில் ஏற்கனவே புஸ் விட்டுவிட்டு போன பெரும்தொகை கடன்.
வங்கிகள் திவால்.

வங்கிகளுக்கு ஒபாமா வட்டியே இல்லாமல் பெரும்தொகையை கடனாக கொடுத்து நிமிர வைத்தார்.

இன்றைய தின சிட்னி மோர்னிங் கேரல்ட் பத்திரிகையில் வந்துள்ள் கட்டுரை,

https://www.smh.com.au/property/news/investor-with-8000-homes-calls-for-negative-gearing-to-be-axed-20220208-p59us2.html

 • Thanks 2
Link to comment
Share on other sites

 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

https://www2.asx.com.au/investors/investment-tools-and-resources/sharemarket-game

அவுஸ்ரேலிய பங்கு சந்தையான Australia stock exchange (ASX) 

இனால் நடாத்தப்படும் பங்கு வர்த்தக விளையாட்டு, விரும்பியவர்கள் சித்திரை 28 முதலாக பதிவு செய்யலாம். இதில் 50000 அளவிற்கு விளையாட்டு காசு வழங்கப்படும் (உண்மை காசல்ல).

Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.