Jump to content

பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
On 11/11/2021 at 02:30, Kadancha said:

முதல் இடும் mindset இல் இது சரியான போக்கு அல்ல.

equity என்பது ஓர் மாயக் கண்ணாடி. அதுவும் இருக்கும் வீடு. உண்மையில் அது equity  அல்ல.

கையில் தேறியதாக இருக்கும் காசோ அல்லது பொருளோ தான், உண்மையான வெல்த், மிச்ச எல்லாமே மாயக் கண்ணாடி.

ஏனெனில், நீங்கள்  வசிப்பதற்கு வீடு தேவை,  இருக்கும் வீட்டை விற்று விட்டு,  விற்ற விலையிலும் குறைந்த விலையில் வசிப்பதத்திற்கு ஓர் வீடு வாங்கிய பின்பே,   தேறியது உண்மையான equity. 

எப்போதும், உங்களின் போக்குக்கு எதிராக மார்க்கெட் திரும்பினால் என்ன நடக்கலாம் என்பதில்  ரிஸ்க் அனாலிசிஸ் ஐ தொடங்குவது நல்லது.

ரியல் எஸ்டேட் இல் stop loss என்பது உடனடியாக செய்ய முடியாத காரியம். 
 
முக்கியமாக ரியல் எஸ்டேட் மார்க்கெட் திரும்பும் போது ரியல் எஸ்டேட் ஐ exit பண்ணுவது அல்லது liquidate பண்ணுவது மிகவும் கடினம்.  

அந்த நேரத்தில், வேறு property (வாடகை வீடு) இல் leverage உம் இருந்தால், இன்னும் பழுவாக இருக்கும்.  property  மார்க்கெட் திரும்பும் பொது, வாடகை குறைதல், அல்லது வாடகைச் சந்தை படுத்தல் போன்றனவும் நிகழும். 

வசியை மாற்றும் என்னை  தவிர, இங்கு பலருக்கு  equity பார்த்து கொண்டிருக்க மறைந்த அனுபவம் இருக்காது (வேறு விடயங்களில்  இழந்து இருக்கலாம்) என்று நான் நினைக்கிறேன். பெரிய தொகையை இழந்த அனுபவங்களும் இருக்காது என்று நினைக்கிறன்.

பெரிய தொகையை இழந்த அனுபவங்களும் இருக்காது என்று நினைக்கிறன்.

மற்றது, ஓர் வீட்டை வாங்கி வாடைக்கு விடுவது என்பதற்கன mortgage, உண்மையில் ஓர் business mortgage. அதில் margin குறைந்தால், மேலதிக பணத்தை இட்டு margin ஐ உரிய அளவுக்கு கொண்டு வரும் படி வங்கி / மோர்ட்ககேஜ் நிறுவனம் கேட்கலாம். அப்படி செய்யாவிட்டால், mortgage ஐ foreclose  பண்ணலாம். தாவது வதியும் வீட்டுக்கு உள்ள mortgage இல் இருக்கும் சட்ட பாதுகாப்பு, business மோர்ட்ககே க்கு இல்லை. அது நியமானது, ஏனெனில் பிசினஸ் ரிஸ்க் என்பது சடுதியான மாற்றத்துக்கு உள்ளாவது.
  
இது வெகு சிலருக்கே தெரியும். நான் நினைக்கிறன் அநேகமாக வீடு வாடைக்கு விடுவோர், mortgage எடுத்து வாங்கி இருந்தால், அவரகள் அறியாமலே  personal guarantee கொடுத்து இருப்பார்கள். அதன் அர்த்தம். வா டகை வீடு mortgage அடைக்க முடியமால்   போனால், வதியும்  வீட்டையும் எடுக்கலாம்.

பாதிரியார், title திரியில் நான் சொன்னது போல ஈடுபட. ஈடுபடும்  எல்லாவற்றிலும் இழப்பும், பிரச்னைக்கும் ஊடாகவே இவ்வளவு தூரம் வந்து இருக்கிறேன். ஆனாலும், விடவில்லை.

நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் பேராசைப்படாமல், அவரவர் serviceabilityற்கு ஏற்ப ஈடுபடுவதில் பிரச்சனை இல்லை என்பது எனது தனிப்பட்ட எண்ணம்.

மேலும் personal guarantee பற்றி ஒரு சந்தேகம் உள்ளது. Residential investment mortgageற்கு(வர்த்தக நோக்கமில்லாத) எப்படி வரும் என்பதில் சந்தேகம் உள்ளது, மறைமுகமாக என்றால் கூட(terms and conditions) உங்களது இருக்கும் வீட்டையும் சேர்த்து (collateral securities) இந்த investment property வாங்கினால்தானே இந்த பிரச்சனை!. நான் நினைப்பது தவறாகவும் இருக்கலாம்

எனக்கு பங்குகள் பற்றிய அறிவு இல்லை ஆனால் எனது தந்தை என்னிடம் அடிக்கடி கூறும் வீடு/காணி எப்பொழுதும் பெறுமதியானது என்பதுதான்..let’s see!

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது
 • Like 1
Link to comment
Share on other sites

 • Replies 553
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

பொறுப்பு துறப்பு இந்த திரியில் பகிரப்படும் எந்த தகவலுமே நிதி ஆலோசனை (financial advice) அல்ல. இவை வெறும் கருத்துக்கள் மட்டுமே. உங்கள் முதலீட்டு முடிவுகளுக்கு நீங்களே 100% பொறுபானவர்கள். நோக்க

ஈழப்பிரியன்

நானும் கொஞ்ச காலமாக பங்குசந்தை வியாபாரத்தில் குதித்துள்ளேன். நேரமிருக்கும் போது விபரமாக எழுதுகிறேன். இதில் இறங்கினால் சிறிய வயது விளையாட்டொன்று நினைவுக்கு வரும். எல்லோருமே விளையபடியிருப்

சாமானியன்

வாழ்க்கையின் சகல அம்சங்களும் ஒரு பெருமெடுப்பு நோக்கில் சமநிலைப்படுத்தப்பட்டவையே . ஒரு குறுகிய வட்டத்தில் வெற்றி தோல்வி என்று அழைக்கப்படுவனனவெல்லாம் பின்னர் அப்பிடியே அடிபட்டுப்போய் விடுவதை கண்கூடாக பா

Posted Images

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் பேராசைப்படாமல், அவரவர் serviceabilityற்கு ஏற்ப ஈடுபடுவதில் பிரச்சனை இல்லை என்பது எனது தனிப்பட்ட எண்ணம்.

மேலும் personal guarantee பற்றி ஒரு சந்தேகம் உள்ளது. Residential investment mortgageற்கு(வர்த்தக நோக்கமில்லாத) எப்படி வரும் என்பதில் சந்தேகம் உள்ளது, மறைமுகமாக என்றால் கூட(terms and conditions) உங்களது இருக்கும் வீட்டையும் சேர்த்து (collateral securities) இந்த investment property வாங்கினால்தானே இந்த பிரச்சனை!. நான் நினைப்பது தவறாகவும் இருக்கலாம்

எனக்கு பங்குகள் பற்றிய அறிவு இல்லை ஆனால் எனது தந்தை என்னிடம் அடிக்கடி கூறும் வீடு/காணி எப்பொழுதும் பெறுமதியானது என்பதுதான்..let’s see!

கடன்சா, உண்மையான பெறுமதியில் (Equity) முதலிடுவதை தவறு என கூறவில்லை என நினைக்கிறேன்.

உண்மையான பெறுமதியை எவ்வாறு அறிவது?

உதாரணமாக அவுஸ்ரேலிய வீட்டு விலைகள் இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னிலிருந்து 2014 வரை அதன் வளர்ச்சி விகிதம் சராசரியாக 10 ஆண்டில் வீட்டின் விலை இரட்டிப்பாகிறது என கூறுகிறார்கள்.

அதாவது ஆண்டு ஒன்றிற்கு 10% வளர்ச்சி மாதிரியுள்ளது ஆனால் அதன் வளர்ச்சி விகிதம் ஆண்டொன்றிற்கு 7 % கூட்டு வட்டியே இவ்வகையான 10 வருடத்தில் வீட்டின் விலை இரட்டிப்பாவதற்கு காரணம், இது வீட்டு தேய்மானம், பண வீக்கம் உள்ளடங்கலாக (7% முன்பு கணித்தாக நினைவிலுள்ளது).

உங்கள் கருத்து போல வீடு காணி முதலீடு நல்ல முதலீடுதான்.

ஆனால் தற்போது சிட்னியில் வீட்டின் விலை அதிகரிப்பு ஆண்டொன்றிற்கு 33% வீதம் என்றால் 7% விகிதத்திற்கும் 33% இற்குமிடையே உள்ள இடைவெளி சிந்திக்க வைக்கின்றது.

https://www.abc.net.au/news/2022-01-27/sydney-median-house-price-increases-but-growth-expected-to-slow/100785706

வீட்டு விலை அதிகரிப்பானது வருமான அதிகரிப்பை விட அதிகம். இது கடனை அதிகரிகத்து ஒரு தளம்பல் நிலையை உருவாக்கும்.

இந்த வருமான அதிகரிப்பு குறைவாக இருப்பது பெரும்பான்மையான அடிமட்ட வருமானம் பெறுபவர்களையே அதிகம் பாதிக்கும்.

உதாரணமாக அமெரிக்காவில் 2007 ஆம் ஆண்டில் வருமான வேறுபாட்டை பின்வருமாறு கூறுகிறார்கள்.

முதல் 10% மானவர்கள் நாட்டின் மொத்த வருமானத்தை தமதாக்கி கொள்கிறார்கள், அதாவது மிகுதி 90% மான மக்கள் மிகுதி 50% வருமானத்தை தமக்கிடையே ப்கிர்கிறார்கள்,

10% = 50%

1% = 24%

0.1% = 12%

0.01% = 6%

அது இவ்வாறு செல்லும்.

2007 ஆம் ஆண்டளவில் 15000 அமெரிக்கர்களின் வருமானம் 700 பில்லியன், இது கிட்டத்தட்ட இலங்கையின் ஒரு ஆண்டிற்குரிய மொத பொருளாதார வளர்ச்சியினை விட 9 மடங்கு அதிகமாகும்.

வருமான வித்தியாசமிருந்தால் அதனால் என்ன பாதிப்பு?

நாடு பொருளாதார வளர்ச்சி அடையும் போது அதனூடே அனைவரது வருமானமும் அதிகரிக்க வேண்டும் அவ்வாறில்லாமல் சில விரல் விட்டு எண்ணக்கூடிய நபர்கள் அந்த அதிகரித்த வளர்ச்சி தாம் எடுத்து கொண்டால் குறைந்த வருமானம் பெறுபவர்கள் கடன் விகிதம் அதிகரிக்கும்.

இந்த வீட்டு விலை வளர்ச்சிக்கும் வருமான அதிகரிப்பும் குறைந்த பட்சமாவது இடைவெளி குறைவாக இல்லாவிட்டால் நிலமை என்னவாகும்?

1929 அமெரிக்காவில் வருமான இடைவெளி 25% இருந்த போது பங்கு சந்தை சரிவு ஏற்பட்டது, பின்னர் அதே 1% வருமானம் 24% எட்டியபோது வீட்டு விலை சரிவு ஏற்பட்டது, இந்த இரு சந்தர்ப்பங்களிலும் உலக பொருளாதாரமும் பாதிப்பிற்குள்ளானது.

சாதாரண மக்களின் மீது அவர்கள் வாங்கும் பொருதள் முதல் அவர்கள் உழைப்பு வரை வரி விதிக்கும் அரசுகள், வரி மூலம் வருமான மீள்வினியோகம் என்று சொல்கிறது, அவ்வாறிருந்தால் ஏன் இவ்வாறான பெரிய அளவில் பணம் ஓரிடத்தில் குவிக்கப்பட்டு பொருளாதர சரிவை உருவாக்க வேண்டும்?

JP மோர்கனை King maker என்றே கூறுவார்கள்.

 • Like 2
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

1929 அமெரிக்காவில் வருமான இடைவெளி 25% இருந்த போது பங்கு சந்தை சரிவு ஏற்பட்டது, பின்னர 2007 இல் அதே 1% வருமானம் 24% எட்டியபோது வீட்டு விலை சரிவு ஏற்பட்டது, இந்த இரு சந்தர்ப்பங்களிலும் உலக பொருளாதாரமும் பாதிப்பிற்குள்ளானது.

On 7/3/2022 at 18:41, vasee said:

 

 

1929 அமெரிக்காவில் வருமான இடைவெளி 25% இருந்த போது பங்கு சந்தை சரிவு ஏற்பட்டது, பின்னர் அதே 1% வருமானம் 24% எட்டியபோது வீட்டு விலை சரிவு ஏற்பட்டது, இந்த இரு சந்தர்ப்பங்களிலும் உலக பொருளாதாரமும் பாதிப்பிற்குள்ளானது.

 

 

Link to comment
Share on other sites

 • 4 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

எனது சி எப் டி யில் ரூபிளின் வர்த்தகம் மாசி மாதம் 25 ஆம் திகதியுடன் நிறுத்தப்பட்டுவிட்டது.

அமெரிக்க டொலரை விற்று ரூபிளினை வாங்க உத்தேசித்துள்ளேன்.

இரஸ்சியா அதிகளவில் தங்கத்தை கொள்வனவு செய்கிறது அதற்கு கூறப்படும் காரணம், இரஸ்சிய ரூபிளின் பெறுமதியிழப்பு. ஆனால் இரஸ்சியா தனது பணத்தை தங்கத்துடன் peg செய்தால் அதன் பெறுமதி வீழ்ச்சி அடையாது, அது தான் இரஸ்சியாவின் திட்டமாக இருக்கும் என கருதுகிறேன்.

அத்துடன் தன்னுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் இரஸ்சிய பணமான ரூபிளில் செய்ய வேண்டும் என வலியுருத்துகிறது.

இவ்வாறு நிகழ்ந்தால் வெறும் முகப்பெறுமதியில் (fiat currency) உள்ள உலக reserve நாணயமான டொலரின் மூலம் ஏற்படும் உலக பொருளாதார நெருக்கடிக்குத்தீர்வு ஏற்படும் (அமெரிக பொருளாதார சரிவு உலகை பாதிக்கும் நிலை) ஏனெனில் அமெரிக நாணய அச்சீடு Bretton woods  தீர்மானப்படி (தங்க அகழ்வு வீதம் 1.5%) தற்போது செய்யப்படுவதில்லை. இது உலக பொருளாதாரத்திற்கு கால காலமாக உள்ள அச்சுறுத்தல். எனது கருத்து தவற்றக இருக்கலாம்.

இரஸ்சிய  ரூபிளை இப்பொது வாங்கினால் இலாபம் என கருதுகிறேன், உங்களது அபிப்பிராயம் என்ன?

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஐடியா.

அனால், rouble ஐ வாங்க முடியுமா?
 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா ஐ ஐரோப்பா, எரிவாயு வாங்கிவதில் தவிர்க்க முடியும் என்றால், rouble இந்த பெறுமதி குறையும்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

நல்ல ஐடியா.

அனால், rouble ஐ வாங்க முடியுமா?
 

சி எப் டி யில் வாங்க முடியவில்லை வேறு ஏதாவது மார்ககம் இருக்கலாம்.

1 hour ago, Kadancha said:

ரஷ்யா ஐ ஐரோப்பா, எரிவாயு வாங்கிவதில் தவிர்க்க முடியும் என்றால், rouble இந்த பெறுமதி குறையும்.

நாணயத்தினை மிதக்கவிடாமல், தங்கத்துடன் peg செய்யும் போது நாணயம் பெறுமதி இழக்காது என நினைக்கிறேன்.

ஆரம்பத்தில் (1973 முன்னர் எனநினைக்கிறேன்) அமெரிக்க நாணயம் தங்கத்துடன் peg செய்யப்பட்ட அதே நேரம் அமெரிக்க நாணயத்தினுடன் ஜேர்மன், இங்கிலாந்து, சுவீடன், பிரான்ஸ் நாணயங்களுடன் peg செய்யப்பட்டிருந்தது, ஆனால் 1.5% அளவில் மட்டும் நாணயத்தினை அச்சிட வேண்டிய அமெரிக்கா அதிகளவில் தனது நாணயத்தினை அச்சிட்டமையால் அதன் பெறுமதி குறைந்தது, இதனால் அமெர்க்க நாணயத்தினை விற்று தமது நாணயங்களை ஜேர்மனும் பிரான்ஸும் வாங்க முற்பட்டது, அதே நேரம் பொருளாதார ரீதியாக தனக்கு சாதகமில்லாத நிலையில் அமெரிக்காவும் தனது ஒப்பந்தத்தை முறித்து கொண்டது.

இரஸ்சியாவின் பிரச்சினை அதனது தங்க இருப்பினை கொண்டு தனது நாணயத்தினை peg செய்வதாக இருக்காது ஆனால் அதன் உள்நாட்டு வர்த்தக ஏற்றுமதியில் பாதிப்பினை சில வேளை உருவாக்கலாம்.

நேரம் இருக்கும் போது உங்களது பதிவுகளை இப்பகுதியில் இடுங்கள்,எப்போதும் பல விடயங்களை உங்கள் பதிவிலிருந்து அறியக்கூடியதாகவுள்ளது.

Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

கிரிப்டோ - ஷிபா inu, robin hood சென்ட்ரல் exchange இல் பட்டிலியப்பட்டுவிட்டது.

கிரிப்டோ -  xrp, sec வழக்கு கண்டத்தை கடந்து விட்டது.

நிறுவனமயப்பட்ட (institutionalised) பணப் பிரளயம், கிரிப்டோவை  நோக்கி வருகிறது.  

https://dailyhodl.com/2022/04/12/giant-wall-of-money-is-waiting-to-enter-bitcoin-and-crypto-markets-according-to-shark-tank-investor-kevin-o-leary/

ஒன்றும் நிதி அறிவுரை இல்லை. உங்கள் ஆய்வின் மூலம்  முடிவு, செயற்றப்படுகளை எடுக்கவும். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kadancha said:

கிரிப்டோ - ஷிபா inu, robin hood சென்ட்ரல் exchange இல் பட்டிலியப்பட்டுவிட்டது.

கிரிப்டோ -  xrp, sec வழக்கு கண்டத்தை கடந்து விட்டது.

நிறுவனமயப்பட்ட (institutionalised) பணப் பிரளயம், கிரிப்டோவை  நோக்கி வருகிறது.  

https://dailyhodl.com/2022/04/12/giant-wall-of-money-is-waiting-to-enter-bitcoin-and-crypto-markets-according-to-shark-tank-investor-kevin-o-leary/

ஒன்றும் நிதி அறிவுரை இல்லை. உங்கள் ஆய்வின் மூலம்  முடிவு, செயற்றப்படுகளை எடுக்கவும். 

தொடர்ந்து பதியுங்கள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வசி,

ரூபிள் - usd அல்லது eur trade எடுத்தீர்களா?

> 30% ஆல் ரூபிள் கூடிவிட்டது. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 21/4/2022 at 05:13, Kadancha said:

வசி,

ரூபிள் - usd அல்லது eur trade எடுத்தீர்களா?

> 30% ஆல் ரூபிள் கூடிவிட்டது. 

இல்லை, ரூபிள் மாசி 25 திகதியுடன் எனது CFD நிறுத்திவிட்டது, AUDJPY 85.700 Ascending triangle break வாங்கியது, கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக வாங்கி வைத்திருந்த நாணயத்தினை திங்கள் கிழமை மூடிவிட்டேன். (Market maker Manipulation 60 pips quick drop in public holiday)

தற்போது 93.600 மீண்டும் வாங்கியுள்ளேன், AUD bullish ( Commodity), வேலைப்பளு காரணமாக உடனே பதில் தரமுடியவில்லை.

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பிட் கொய்ன் - நாளாந்த விலை வரைபில் (chart), நலிவு தன்மையை காட்டுகிறது   200 MA ( 200 நாள் சராசரி அசையும் விலை) இப்பொது தடையாக (resistance) மாறி உள்ளது.

 தொழில் நுட்ப பங்குகள் பெருமளவில் உள்ள nasdaq கூட்டு சுட்டியும்  (nasdaq composite index), கிரிப்டோ உம் ஒப்பு (correlattion) உள்ளதாக இப்போது உள்ளது.

bit coin - மேற்பக்க நோக்கில் (uptrend or  upside)  200 MA மீண்டும் தொடலாம் (restest). கீழ் பக்க நோக்கில் (down side) 34k தொடக்க கூடிய  சாத்திய கூறுகள் தெரிகிறது.

ஒன்றும் நிதி அறிவுரை அல்ல. எல்லாம் உங்கள் ஆய்வின் வழியாக முடிவு, செயற்றப்பாட்டை செய்யவும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக் கடன் (mortgage) என்பது மற்றும் அந்த கருது, நடைமுறை என்பதின், இரத்தம் சிந்தாத புரட்சிக்கான முதல் அடித்தளம் UK இல் ஆரம்பிக்கிறது, அனால் உலகளாவிய போக்குடன். 

https://www.outoken.org/

இதன் AMA ஐ வந்தவுடன் இணைக்கிறேன்.

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kadancha said:

வீட்டுக் கடன் (mortgage) என்பது மற்றும் அந்த கருது, நடைமுறை என்பதின், இரத்தம் சிந்தாத புரட்சிக்கான முதல் அடித்தளம் UK இல் ஆரம்பிக்கிறது, அனால் உலகளாவிய போக்குடன். 

https://www.outoken.org/

இதன் AMA ஐ வந்தவுடன் இணைக்கிறேன்.

 

நிதி அறிவுரை அல்ல. சொந்த ஆய்வில் முடிகள், செயல்முறைகளை எடுக்கவும்.

 

Link to comment
Share on other sites

On 23/4/2022 at 16:24, Kadancha said:

பிட் கொய்ன் - நாளாந்த விலை வரைபில் (chart), நலிவு தன்மையை காட்டுகிறது   200 MA ( 200 நாள் சராசரி அசையும் விலை) இப்பொது தடையாக (resistance) மாறி உள்ளது.

 தொழில் நுட்ப பங்குகள் பெருமளவில் உள்ள nasdaq கூட்டு சுட்டியும்  (nasdaq composite index), கிரிப்டோ உம் ஒப்பு (correlattion) உள்ளதாக இப்போது உள்ளது.

bit coin - மேற்பக்க நோக்கில் (uptrend or  upside)  200 MA மீண்டும் தொடலாம் (restest). கீழ் பக்க நோக்கில் (down side) 34k தொடக்க கூடிய  சாத்திய கூறுகள் தெரிகிறது.

ஒன்றும் நிதி அறிவுரை அல்ல. எல்லாம் உங்கள் ஆய்வின் வழியாக முடிவு, செயற்றப்பாட்டை செய்யவும்.

இந்த வருடம் Bit coin 20k வரை செல்லும் என்று கூறுகின்றனர். 

Ethereum இன் ஏற்ற இறக்கம் Bit coin இனை ஒத்ததாக இருந்தாலும் சில வேளைகளில் கணிசமான முன்னேற்றம் தெரிகிறது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 28/4/2022 at 05:40, இணையவன் said:

இந்த வருடம் Bit coin 20k வரை செல்லும் என்று கூறுகின்றனர். 

Ethereum இன் ஏற்ற இறக்கம் Bit coin இனை ஒத்ததாக இருந்தாலும் சில வேளைகளில் கணிசமான முன்னேற்றம் தெரிகிறது.

பிட் கொயின் தற்போது ஏறத்தாழ 38500 இல் விற்பனையாகிறது, நீங்கள் கூறுவது போல 20K செல்லுமா? என்றால் அதற்கு தொழில்னுட்ப ரீதியாக (Technical analysis) அதிக வாய்ப்புள்ளது.

குறிப்பாக 33000 விலையினை முதலில் அண்மிக்கும் அந்த விலை தொடர்ச்சியாக ஒரு பாதுகாப்பு அரணாக விலை கீழே செல்லாது தடுக்கப்படுகிறது (Support).

விலை தொடர்ச்சியாக இவ்வாறு ஒரேநிலையில் தரிக்காது, இந்த தடவை விலை கீழிறங்க வாய்புகள் அதிகம்.

கடந்த 4 மாதங்களாக விலை 48000 - 33000 இடையில் நகர்ந்து செல்கிறது, இந்தநிலை தொடராது. இவ்வாறு குறுகிய இடைவெளியில் விலை நகர்வதை Accumulation & Distribution என்பார்கள் Technical analysis (Wycoff) இல்.

குறைந்த விலையில் விலை அதிகரிப்பில்லாமல் மெதுவாக வாங்குவர் அப்போது விலை குறுகிய இடைவெளியில் விலை பக்கவாட்டாக நகரும். பின்னர் விலையினை உயர்த்துவர் விலை சடுதியாக உயரும், ஒரு கட்டத்தில் அந்த விலையில் விலைகுறையாது தமது ஒரு பகுதியினை விற்பார்கள் அது குறுகிய விலை இடைவெளியில் மீண்டும் பக்கவாட்டாக நகரும் பின்னர் விலை மீண்டும் சடுதியாக உயரும்.

விலை இறங்குமுகத்தில் இதற்கு எதிர்மறையாக நிகழும்.

Wyckoff-Distribution-Stage-1024x576.jpg

இது வெறும் தொழில்னுட்ப ரீதியான கருத்து மட்டும், அத்துடன் மேலே கூறியவாறு நிகழாமல் போவதற்கும் சாத்தியமுண்டு, அத்துடன் இது ஒரு வியாபார ஆலோசனை அல்ல எனது கருத்து தவறாக இருக்கலாம்.

பிட் கொயின் தொடர்பான Fundamental analysis தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது.

Technical analysis இல் price action எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த புத்தகத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம், இவரது பங்கு சந்தை வருமானம் தற்போதய அளவில் 20 மில்லியனுக்கும் அதிகம் என கூறுகிறார்கள், மிகவும் சுவாரசியமான புத்தகம். 

 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

https://techilive.in/avoid-evil-bitcoin-and-stay-sane-investing-wisdom-from-warren-buffett-and-charlie-munger/

வோரன் பவர்ட் மிக சிறந்த fundamental analysis முதலீட்டாளர், அவரது பிட் கொயின் தொடர்பான கருத்து.

எந்த முதலீட்டிலும் தற்போதய சந்தை விலையை விட சில காரணிகளினால் விலை அதிகரிக்கலாம் என நம்பப்படும்போது மேற்கொள்ளப்படுவதே முதலீடாகும்.

இதனை Intrinsic value என்பார்கள் அதே போல் சாதாரண காகிதத்திற்கு அரச அங்கீகாரம் கிடைக்கும் போது அதற்கு அதற்கு பெறுமதி உண்டாகிறது அதனை எல்லோரும் நம்புவதுடன் அதனை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அந்த நிலமை ஏற்படுகிறது.

பொதுவாக பங்குகளுக்கு ஆகக்குறைந்த பெறுமதியாவது இருக்கும் அது அதன் asset value (Book value)  என்ற வடிவில் காணப்படும். பிட் கொயினில் asset value உள்ளதா என்பது தெரியவில்லை.

 • Like 2
Link to comment
Share on other sites

நேற்று Nasdaq 5 வீதத்தை இழந்தது. இது கோவிட் வீழ்ச்சிக்குப் பின்னரான பாரிய சரிவாகும். தொழில்நுட்ப நிறுவனங்களால் ஏற்படுத்தப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட விலையேற்றம் முடிவுக்கு வருவதாகக் கூறுகிறார்கள். அமேசன் 7 வீதத்துக்கு மேல் சரிந்தது.

தங்கம் வெள்ளி போன்றவை மிகக் குறைவான விலையில் உள்ளன. முதலீடு செய்ய விரும்புபவர்கள் இவற்றில் முதலிடுவது உறுதியானதாக இருக்கும்.

தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளின் பெறுமதி குறைவதால் Bit coin உம் சேர்ந்தே இறங்குகிறது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மொழி பெயர்ப்புக்கு நேரம் இல்லை. அக்கறை உள்ளவர்கள், மொழிபெயர்த்து பதியவும்

 

https://www.marketwatch.com/story/based-on-19-bear-markets-in-the-last-140-years-heres-where-the-current-downturn-may-end-says-bank-of-america-11651847842

 

In One Chart

 

Based on 19 bear markets in the last 140 years, here’s where the current downturn may end, says Bank of America

Last Updated: May 7, 2022 at 8:15 a.m. ETFirst Published: May 6, 2022 at 10:37 a.m. ET
By 

Barbara Kollmeyer

Follow
 
44

Just $3 for every $100 invested has left the stock market, says the bank

im-334920?width=700&height=461

Bearable?

 PATRICK HERTZOG/AGENCE FRANCE-PRESSE/GETTY IMAGES
 • Email icon
 • Facebook icon
 • Twitter icon
 • Linkedin icon
 • Flipboard icon
 • Print icon
 • Resize icon

Referenced Symbols

 
 
 
Listen to article
Length3 minutes
 
 

At nearly the halfway mark in a volatile year of trading, the S&P 500 index is down, but not out to the point of an official bear market yet.

According to a widely followed definition, a bear market occurs when a market or security is down 20% or more from a recent high. The S&P 500 SPX, -0.57% is off 13.5% from a January high of 4,796, which for now, just means correction territory, often defined as a 10% drop from a recent high. The battered Nasdaq Composite COMP, -1.40%, meanwhile, is currently down 23% from a November 2021 high.

That S&P bear market debate is raging nonetheless, with some strategists and observers saying the S&P 500 is growling just like a bear market should. Wall Street banks like Morgan Stanley have been saying the market is getting close to that point.

Read: A secular bear market is here, says this money manager. These are the key steps for investors to take now.

But should the S&P 500 officially enter the bear’s lair, Bank of America strategists led by Michael Hartnett, have calculated just how long the pain could last. Looking at a history of 19 bear markets over the past 140 years, they found the average price decline was 37.3% and the average duration about 289 days.

While “past performance is no guide to future performance,” Hartnett and the team say the current bear market would end Oct. 19 of this year, with the S&P 500 at 3,000 and the Nasdaq Composite at 10,000. Check out their chart below:

 
im-539327?width=700&height=978
BOFA GLOBAL RESEARCH

The “good news,” is that many stocks have already reached this point. with 49% of Nasdaq constituents more than 50% below their 52-week highs, and 58% of the Nasdaq more than 37.3% down, with 77% of the index in a bear market. More good news? “Bear markets are quicker than bull markets,” say the strategists.

The bank’s latest weekly data released on Friday, showed another $3.4 billion coming out of stocks, $9.1 billion from bonds and $14 billion from cash. They note many of those moves were “risk off” headed into the recent Federal Reserve meeting.

While the Fed tightened policy as expected again this week, uncertainty over whether its stance is any less hawkish than previously believed, along with concerns that the central bank may not be able to tighten policy without triggering an economic downturn, left stocks dramatically weaker on Thursday, with more selling under way on Friday.

The strategists offer up one final factoid that may also give investors some comfort. Hartnett and the team noted that for every $100 invested in equities over the past year or so, only $3 has been redeemed.

As well, the $1.1 trillion that has flowed into equities since January 2021 had an average entry point of 4,274 on the S&P 500, meaning those investors are “underwater but only somewhat,” said Hartnett and the team.

 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 6/5/2022 at 21:55, இணையவன் said:

நேற்று Nasdaq 5 வீதத்தை இழந்தது. இது கோவிட் வீழ்ச்சிக்குப் பின்னரான பாரிய சரிவாகும். தொழில்நுட்ப நிறுவனங்களால் ஏற்படுத்தப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட விலையேற்றம் முடிவுக்கு வருவதாகக் கூறுகிறார்கள். அமேசன் 7 வீதத்துக்கு மேல் சரிந்தது.

தங்கம் வெள்ளி போன்றவை மிகக் குறைவான விலையில் உள்ளன. முதலீடு செய்ய விரும்புபவர்கள் இவற்றில் முதலிடுவது உறுதியானதாக இருக்கும்.

தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளின் பெறுமதி குறைவதால் Bit coin உம் சேர்ந்தே இறங்குகிறது.

இந்த திரியில் முன்பு கோசான் குறிப்பிட்டடது போல கோவிட்டிற்கு பின்னரான காலகட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட பணவீக்கம் அதனால் ஏற்படக்கூடிய வட்டி வீத அதிகரிப்புகள் பங்கு சந்தை தற்காலிக சரிவிற்கு காரணமாகவிருக்கலாம் ( அல்லது வேறுகாரணம் இருக்கலாம்).

அந்த வகையில் பார்த்தால் நீங்கள் கூறியது போல தங்கம், வெள்ளி முதலீடு நல்லதொரு தெரிவுதான்.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அவுஸ்ரேலிய வட்டி வீத அறிவிப்பு வெளிவர இருந்தது, அதற்கு முன்னதாக AUDNZD வாங்கினேன் வட்டி வீத அறிவிப்பு எதிர்பார்ப்பு 0.15% ஆனால் 0.25% அதிகரிப்பு ஏற்பட்டமையால் விலை சடுதியாக அதிகரித்தது.

அவுஸ்ரேலிய மத்திய வங்கி தொடர்ச்சியாக வட்டி வீத அதிகரிப்பை ஏற்படுத்த தயக்கம் காட்டி வந்தது, ஆனால் பரவலாக வட்டி வீத அதிகரிப்பை அரசு மேற்கொள்ளவேண்டிய நிர்பந்தத்தில் இருந்தது ( கோவிட் காலத்தில் கொண்டுவரப்பட்ட quantitative easing விளைவுகள்)

மறுநாள் இன்னுமொரு தொகுதியும் அதற்கு மறுநாள் இன்னுமொரு தொகுதியும் வாங்கியிருந்தேன், அதேநேரம் எனது stop loss இனை உயர்த்தியிருந்தேன், விலை இறங்கினால் 0.20% இலாபத்துடன் வெளியேறுவது போல், ஒரு நிலையில் 5% மேலதிகமான இலாபத்தில் இருந்த கணக்கு வார இறுதியில் பார்த்தபோது 1% இற்கு சற்று அதிகமாகக்காணப்பட்டது, இன்று காலை 0.34% இலாபத்துடன் அனைத்தையும் மூடி விட்டு தற்போது தங்கம் வாங்கியுள்ளேன்.

https://www.myfxbook.com/members/GreedFTrader/live-acc/9531745

இது எனது புதிய கணக்கு, ஒரு நாளின் பின்னரே இது update செய்யப்படுகின்றது.

இரண்டு நாடுகளுக்கிடையான Fundamental analysis ஒப்பீடு.

Australia   New Zealand
  Last Previous         Last Previous    
Currency 0.7 0.71   May-22   Currency 0.64 0.64   May-22
Stock Market 7206 7365 points May-22   Stock Market 11609 11748 points May-22
GDP Growth Rate 3.4 -1.9 percent Dec-21   GDP Growth Rate 3 -3.7 percent Dec-21
GDP Annual Growth Rate 4.2 3.9 percent Dec-21   GDP Annual Growth Rate 3.1 -0.2 percent Dec-21
Unemployment Rate 4 4 percent Mar-22   Unemployment Rate 3.2 3.2 percent Mar-22
Inflation Rate 5.1 3.5 percent Mar-22   Inflation Rate 6.9 5.9 percent Mar-22
Inflation Rate Mom 2.1 1.3 percent Mar-22   Inflation Rate Mom 1.8 1.4 percent Mar-22
Interest Rate 0.35 0.1 percent May-22   Interest Rate 1.5 1 percent Apr-22
Balance of Trade 9314 7437 AUD Million Mar-22   Balance of Trade -392 -691 NZD Million Mar-22
Current Account 12677 21981 AUD Million Dec-21   Current Account -7260 -8300 NZD Million Dec-21
Current Account to GDP 2.3 4.1 percent of GDP Dec-21   Current Account to GDP -2.7 -3.6 percent of GDP Dec-20
Government Debt to GDP 24.8 19.2 percent of GDP Dec-20   Government Debt to GDP 30.1 26.3 percent of GDP Dec-21
Government Budget -7.8 -4.3 percent of GDP Dec-21   Government Budget -1.3 -7.3 percent of GDP Dec-21
Business Confidence 16 13 points Mar-22   Business Confidence -42 -41.9 percent Apr-22
Manufacturing PMI 58.5 55.7 points Apr-22   Manufacturing PMI 53.8 53.6 points Mar-22
Services PMI 57.8 56.2 points Apr-22   Consumer Confidence 92.1 99.1 points Mar-22
Consumer Confidence 95.7 96.62 points Apr-22   Retail Sales MoM 8.6 -8.1 percent Dec-21
Retail Sales MoM 1.6 1.8 percent Mar-22   Building Permits 4580 4330   Mar-22
Building Permits -18.5 42 percent Mar-22   Corporate Tax Rate 28 28 percent Dec-21
Corporate Tax Rate 30 30 percent Dec-21   Personal Income Tax Rate 39 33 percent Dec-21
Personal Income Tax Rate 45 45 percent Dec-21                             

 

       
 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

திங்கள்கிழமை வாங்கியிருந்த தங்கம் (Fundamental analysis) stop loss இனை எட்டியமையால்  இழப்புடன் மூடப்பட்டுவிட்டது, அந்த இழப்பின் பின்னரே தஙகத்தினை ஆய்வு செய்த போது அறிந்து கொண்ட விடயங்களை இங்கு பகிர்கிறேன்.

https://www.myfxbook.com/members/GreedFTrader/live-acc/9531745

தங்கத்தின் Technical analysis இன் படி பார்த்தால் தங்கம் 1300 வரை இறங்கும் என ஆரம்ப அறிகுறி காட்டுகிறது, தங்கம் தொடர்பான பொருண்மிய நிலை சாதகமாகக்காணப்பட்டபோதும் (Fundamental analysis), விலை இறங்குவதற்கான வாய்ப்புள்ளதாக ஆரம்ப அறிகுறி காட்டுகிறது (Technical divergence - leading indicators).

1300 இல் வாங்குவது முதலீட்டினடிப்படையில் சாதகமானது என நினைக்கிறேன்.

பிட் கொயின் விலை வீழ்ச்சி அடையவாய்ப்புள்ளது என இத்திரியில் ஆரம்பத்தில் பதிந்த போது ஏற்பட்ட அதே தயக்கம் இப்போது தங்கம் தொடர்பிலும் ஏற்பட்டுள்ளது (குழப்ப நிலை).

பிட் கொயின் விலை சரியலாம் என பதிந்த போது மனதளவில் அதனை நம்பவில்லை, அதே போல் தங்கம் விலை சரியலாம் என இப்போது குறிப்பிடும் போதும் மனதளவில் அதனை நம்பவில்லை.

மாதாந்த வரைபடத்தில் விலை சரிவுக்கான காரணம்(Bearish market view) குறிப்பிடப்பட்டுள்ளது விலை 1852 மற்றும் 1900 முக்கிய வலயங்களாக உள்ளது, 

குறுகிய காலகட்டத்தில் தங்கத்தினை வாங்குவதா அல்லது விற்பதா என்பதனை மணித்தியால வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1865 விலை கடந்தால் வாங்குவதற்கும் (Target 1900 மிகப்பெரிய resistance level, இந்த விலையில் விற்பதற்கு ஏதுவான நிலை காணப்பட்டால் விற்கவும் தீர்மானித்துள்ளேன்), விலை 1852 கடக்க இயலாது விலை 1846 விட கீழிறங்கினால் விற்கவும் தீர்மானித்துள்ளேன்.

தற்போது தங்கம் தொடர்பாக எனது பார்வை Bearish market view, குறிப்பாக 1900 இல.

எனது கருத்து தவறாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம், இங்கு இணைத்துள்ள எனது கணக்கு இணைப்பினை அழுத்தி பார்க்கவும், எனது win ratio 25% ஆகவுள்ளது, அதாவது 4 இல் 1 தான் சரி மற்ற மூன்றும் தவறு.

தற்போது AUDNZD வாங்கியுள்ளேன், 1.10456 விலை கடந்தால் இன்னுமொரு தொகுதி வாங்கவுள்ளேன் (Pyramiding). 

இது ஒரு வர்த்தக ஆலோசனை அல்ல.

 • Thanks 1
Link to comment
Share on other sites

விளக்கத்துக்கு நன்றி வசி.

நிச்சயமாக ஒரு சில நாளில் 1900 இனைத் தாண்டிவிடும் என்றே உறுதியாக நம்பினேன்.

இருந்தாலும் 1300 வரை இறங்கும் என்பதையும் நம்பக் கடினமாக உள்ளது.

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 

2 minutes ago, இணையவன் said:

விளக்கத்துக்கு நன்றி வசி.

நிச்சயமாக ஒரு சில நாளில் 1900 இனைத் தாண்டிவிடும் என்றே உறுதியாக நம்பினேன்.

இருந்தாலும் 1300 வரை இறங்கும் என்பதையும் நம்பக் கடினமாக உள்ளது.

 

எனது கருத்து தவறாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

Link to comment
Share on other sites

15 minutes ago, vasee said:

 

எனது கருத்து தவறாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

இந்தத் திரி தந்த ஊக்கத்தினால் 700 ஈரோக்களுடன் அனுபவத்துக்காக 3-4 மாதங்களுக்கு முன்னர் நானும் பங்குச் சந்தையில் இறங்கினேன். பங்கு நிறுவனங்களின் தவணை நிதி அறிக்கைகளை ஆராய்வதும் அறிக்கை வெளியாவதற்கு முன்கூட்டியே குறைவான விலையில் பங்குகளை வாங்குவதுமாக ஆரம்பித்தேன். 

ஆரம்பத்தில் நல்ல இலாபம் கிடைத்தது. பின்னர் NASDAQ, CAC40, DAX40 போன்றவற்றில் அதிக இலாபம் அடையலாம் போல் தெரிந்தது. சில வாரங்களிலேயே 1500 ஈரோக்களை எட்டிவிட்டேன். 

உக்ரெய்ன் போர் ஆரம்பித்தபோதுதான் வீழ்ச்சி ஆரம்பமானது. ஒரே நாளில் 300 ஈரோக்களை இழந்தேன். பின்னர் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. படிப்படியாகக் குறைந்து 300 ஈரோவுக்கு வந்தது. 4 நாட்களுக்கு முன்னர் எல்லவற்றையும் சுருட்டி தங்கத்தில் முதலிட்டேன். இன்று எல்லாம் இழந்து 90 ஈரோவில் நிற்கிறது. 🤣

நான் பெற்றுக் கொண்டது நல்ல அனுபவம். ஆனால் உங்களைப்போல் சந்தை எதிர்காலத்தை ஆய்வு செய்ய முடியவில்லை.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, இணையவன் said:

இந்தத் திரி தந்த ஊக்கத்தினால் 700 ஈரோக்களுடன் அனுபவத்துக்காக 3-4 மாதங்களுக்கு முன்னர் நானும் பங்குச் சந்தையில் இறங்கினேன். பங்கு நிறுவனங்களின் தவணை நிதி அறிக்கைகளை ஆராய்வதும் அறிக்கை வெளியாவதற்கு முன்கூட்டியே குறைவான விலையில் பங்குகளை வாங்குவதுமாக ஆரம்பித்தேன். 

ஆரம்பத்தில் நல்ல இலாபம் கிடைத்தது. பின்னர் NASDAQ, CAC40, DAX40 போன்றவற்றில் அதிக இலாபம் அடையலாம் போல் தெரிந்தது. சில வாரங்களிலேயே 1500 ஈரோக்களை எட்டிவிட்டேன். 

உக்ரெய்ன் போர் ஆரம்பித்தபோதுதான் வீழ்ச்சி ஆரம்பமானது. ஒரே நாளில் 300 ஈரோக்களை இழந்தேன். பின்னர் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. படிப்படியாகக் குறைந்து 300 ஈரோவுக்கு வந்தது. 4 நாட்களுக்கு முன்னர் எல்லவற்றையும் சுருட்டி தங்கத்தில் முதலிட்டேன். இன்று எல்லாம் இழந்து 90 ஈரோவில் நிற்கிறது. 🤣

நான் பெற்றுக் கொண்டது நல்ல அனுபவம். ஆனால் உங்களைப்போல் சந்தை எதிர்காலத்தை ஆய்வு செய்ய முடியவில்லை.

ஒரு நல்ல அனுபவம் பெறுவதற்கு 610 ஈரோ ரொம்ப அதிகமில்லை.......இனி சந்தையின் எதிர்காலத்தை ஆய்வு செய்ய முயற்சிக்கவும்.......அதற்கு 390 ஈரோ நஷ்டமானாலும் பரவாயில்லை...... பெஸ்ட் ஒவ் லக்......!  👍

 • Like 1
Link to comment
Share on other sites


 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.