இணையவன் Posted May 11, 2022 Share Posted May 11, 2022 7 minutes ago, suvy said: ஒரு நல்ல அனுபவம் பெறுவதற்கு 610 ஈரோ ரொம்ப அதிகமில்லை.......இனி சந்தையின் எதிர்காலத்தை ஆய்வு செய்ய முயற்சிக்கவும்.......அதற்கு 390 ஈரோ நஷ்டமானாலும் பரவாயில்லை...... பெஸ்ட் ஒவ் லக்......! 👍 நன்றி சுவி அண்ணா. குறைந்த முதலீடாக இருந்ததால் அதி கூடிய றிஸ்க் எடுத்தேன். பங்குச் சந்தை அதிஸ்டச் சீட்டு வாங்குவது போல் அல்ல என்பதை இதனுள் நுளைந்தவுடனேயே புரிந்து கொள்ளலாம். புதிதாகப் பங்குச் சந்தையில் இணைபவர்களில் 10 இல் 2 பேர் மட்டுமே நின்றுபிடிப்பதாகக் கூறினார்கள். அந்த 2 பேரில் நானும் இருக்கக் கூடாதா என்றுதான் நினைத்தேன். இருந்தாலும் பெற்றுக் கொண்ட அனுபவங்களுடன் ஆறுதலாக மீண்டும் புதிய முதலீட்டுடன் இறங்க உத்தேசித்துள்ளேன்.🙂 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் vasee Posted May 11, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted May 11, 2022 12 minutes ago, இணையவன் said: இந்தத் திரி தந்த ஊக்கத்தினால் 700 ஈரோக்களுடன் அனுபவத்துக்காக 3-4 மாதங்களுக்கு முன்னர் நானும் பங்குச் சந்தையில் இறங்கினேன். பங்கு நிறுவனங்களின் தவணை நிதி அறிக்கைகளை ஆராய்வதும் அறிக்கை வெளியாவதற்கு முன்கூட்டியே குறைவான விலையில் பங்குகளை வாங்குவதுமாக ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் நல்ல இலாபம் கிடைத்தது. பின்னர் NASDAQ, CAC40, DAX40 போன்றவற்றில் அதிக இலாபம் அடையலாம் போல் தெரிந்தது. சில வாரங்களிலேயே 1500 ஈரோக்களை எட்டிவிட்டேன். உக்ரெய்ன் போர் ஆரம்பித்தபோதுதான் வீழ்ச்சி ஆரம்பமானது. ஒரே நாளில் 300 ஈரோக்களை இழந்தேன். பின்னர் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. படிப்படியாகக் குறைந்து 300 ஈரோவுக்கு வந்தது. 4 நாட்களுக்கு முன்னர் எல்லவற்றையும் சுருட்டி தங்கத்தில் முதலிட்டேன். இன்று எல்லாம் இழந்து 90 ஈரோவில் நிற்கிறது. 🤣 நான் பெற்றுக் கொண்டது நல்ல அனுபவம். ஆனால் உங்களைப்போல் சந்தை எதிர்காலத்தை ஆய்வு செய்ய முடியவில்லை. Fundamental analysis விட Technical analysis மிக இலகுவானது, Entry, stop loss, exit போன்றவற்றை இடுவதற்கு இலகுவானது. stop loss இல்லாமல் வர்த்தகத்தில் ஈடுபடுவது ஆபத்தானதுதான், மற்றது position size முக்கியம். முதலீட்டு வர்த்தகத்திலீடுபடுவர்கள் இவற்றில் கவனம் செலுத்துவதில்லை பொதுவாக ஆனால் இவற்றை கவனத்தில் கொண்டால் நல்லது என நினைக்கிறேன். எனது live account நடவடிக்கை இணைப்பினை இணைத்துள்ளேன், அதனைப்பார்த்தாலே தெரியும் நானும் ஒரு ஆரம்ப நிலை முதலீட்டாளரே, எனது அனுபவத்தில் forex இனை விட பங்கு சந்தை இலகுவானது. எந்த ஒரு தவறான விம்பத்தினையும் பிரதிபலித்துவிட கூடாது என்பதற்காகவே எனது உண்மையான கணக்கினை இணைத்துள்ளேன். முதலீட்டாளர்கள் asset allocation கவனம் செலுத்தினாலே போதும் என குறிப்பிடுகிறார்கள். The Intelligent Asset Allocator: How to Build Your Portfolio to Maximize Returns and Minimize Risk How to Make Money in Stocks: A Winning System in Good Times or Bad By: William O'Neil இந்த இரண்டு புத்தகங்களில் மிகவும் முக்கியமான முதலீட்டு ஆலோசனைகள் உள்ள புத்தகங்கள். technical analysis இணையத்தில் பரவலாக உள்ளது. 1 Link to comment Share on other sites More sharing options...
இணையவன் Posted May 11, 2022 Share Posted May 11, 2022 26 minutes ago, vasee said: stop loss இல்லாமல் வர்த்தகத்தில் ஈடுபடுவது ஆபத்தானதுதான், மற்றது position size முக்கியம். முதலீட்டு வர்த்தகத்திலீடுபடுவர்கள் இவற்றில் கவனம் செலுத்துவதில்லை பொதுவாக ஆனால் இவற்றை கவனத்தில் கொண்டால் நல்லது என நினைக்கிறேன். எனது live account நடவடிக்கை இணைப்பினை இணைத்துள்ளேன், அதனைப்பார்த்தாலே தெரியும் நானும் ஒரு ஆரம்ப நிலை முதலீட்டாளரே, எனது அனுபவத்தில் forex இனை விட பங்கு சந்தை இலகுவானது. நன்றி வசீ. ஆரம்ப முதலீட்டாளர் என்பதால் எனது stop loss இனை 50% க்குக் கீழ் குறைக்க முடியாது. 🙂 forex கடினமனதுதான். கண்ணில் எண்ணை விட்டு எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் vasee Posted May 11, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted May 11, 2022 11 hours ago, இணையவன் said: நன்றி வசீ. ஆரம்ப முதலீட்டாளர் என்பதால் எனது stop loss இனை 50% க்குக் கீழ் குறைக்க முடியாது. 🙂 forex கடினமனதுதான். கண்ணில் எண்ணை விட்டு எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். Stop loss இனை குறைக்க முடியாவிட்டாலும் Position size கவனம் செலுத்தலாம் என நினைக்கிறேன், Risk of Ruin என்பது உங்களது trading system உங்களது trading account இனில் உள்ள காசு முழுவதும் இழக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதா என தெரிவிக்கும் அத்துடன், குறிப்பிட்ட எண்ணிக்கையான trade பின்னர் உங்களது கணக்கின் எதிர்கால நிலுவையினை தெரிவிக்கும். இந்த திரியில் முன்னர் ஒரு தளத்தின் இணைப்பினை இணைத்திருந்தேன், அத்தளத்திற்கு சென்று MS EXCEL தரவிறக்கிக்கொள்ளலாம். எனது AUDNZD trade இல் 1 break even மற்றது stop loss. பல்லடியம் உக்கிரேன் இரஸ்சிய போர் ஆரம்பித்த போது விலை எகிறும் என Fundamental analysis இல் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் விலை தொடர்ச்சியாக இறங்கி வருகிறது, கடந்த 3 மாதகாலமாக விலை இறங்குகிறது, 1900 விலையில் வாங்குவதற்கு தீர்மானித்துள்ளேன் ( தற்போது 2000 இல் உள்ளது 1900 தொழில்னுட்ப ரீதியாக வலுவானநிலையில் உள்ளபடியால்). சில நேரங்களில் உலக பொருளாதார சூழ்நிலையான Macro economics (Fundamental analysis) இற்கும் சந்தை நடவடிக்கையும் நேரெதிராக இருக்கிறது, இதனால்தான் தொழில்னுட்ப ரீதியான (Technical)சந்தை அணுகுமுறை சாதகமாகவுள்ளது. சமீபகாலமாக Fundamental analysis இற்கு முக்கியத்துவம் கொடுத்து அதனூடே தொழில்னுட்ப ரீதியாக சந்தையினை அணுகுகிறேன், அத்னாலேயே AUNZD bullish market view இல் தொடர்ச்சியாக இழப்பு ஏற்பட்ட போதும் தொடர்ந்தும் வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறேன். Trend following என்ற அடிப்படையில் AUDNZD இனை அணுகுகிறேன், இது தவறான முடிவாக இருக்கலாம். இந்த வகை உத்தியினை ரிச்சர்ட் டென்னிஸ் பாவித்திருந்தார், இஅவர்து வர்த்தக நடவடிக்கையில் 95% இழப்பினையும் வெறும் 5% மட்டுமே இலாபத்தினையும் வழங்கும் என கூறுவார்கள், அவரது அந்த 5% இலாப நடவடிக்கை 95% இழப்பினை ஈடு செய்வதுடன் மேலதிகமாக அவருக்கு இலாபத்தினையும் ஈட்டி கொடுத்திருக்கிறது. 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் vasee Posted May 21, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted May 21, 2022 On 6/5/2022 at 21:55, இணையவன் said: நேற்று Nasdaq 5 வீதத்தை இழந்தது. இது கோவிட் வீழ்ச்சிக்குப் பின்னரான பாரிய சரிவாகும். தொழில்நுட்ப நிறுவனங்களால் ஏற்படுத்தப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட விலையேற்றம் முடிவுக்கு வருவதாகக் கூறுகிறார்கள். அமேசன் 7 வீதத்துக்கு மேல் சரிந்தது. தங்கம் வெள்ளி போன்றவை மிகக் குறைவான விலையில் உள்ளன. முதலீடு செய்ய விரும்புபவர்கள் இவற்றில் முதலிடுவது உறுதியானதாக இருக்கும். தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளின் பெறுமதி குறைவதால் Bit coin உம் சேர்ந்தே இறங்குகிறது. உலக பொருளாதாரம் தனது இறங்கு முகத்தினை ஆரம்பித்துள்ளதா (Bear Market)? அல்லது இது ஒரு தற்காலிக பின்னடைவா (Market Correct)? தற்காலிக பின்னடைவு என்றால் முதலீட்டிற்கு வாய்ப்பான நேரம் ஆனால் சந்தை சரிவு நிலையினை அடைந்தால் அது எவ்வளவு தூரம் செல்லும் என தெரியாது. DOW theory இன் படி சந்தை ஆகக்கூடுதலான விலையிலிருந்து 20% விலை வீழ்ச்சி அடைந்தால் சந்தை இறங்குமுகம் என குறிப்பிடுகிறது, அத்துடன் தற்காலிக பின்னடைவு எனில் அதிக பட்சம் 3 மாதங்கள் வரை நீழும் எனககூறுகிறது, ஏற்கனவே 3 மாதங்களுக்கு மேலாக விலைகள் சரிவடைந்து செல்லுகிறது. அத்துடன் நஸ்டாக் குறியீடு 20% மேலாக வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது, ஆனால் S&P 500, DIJ இன்னும் 20% அளவு கோலை எட்டவில்லை. கடந்த மாதம் 10 வருட பண முறியும் 2 வருட பண முறியும் வட்டி வீதன் 2.40, 2.42 எட்டியது Market recession முன்னோடி அறிகுறி எனக்கூறப்படுகிறது, இவ்வாறு கடந்த 9 Market recession ஐயும் சரியாக எதிர்வு கூறியுள்ளது. ஆனால் இது எவ்வளவு காலம் நீடிக்கும் அல்லது எவ்வளவு தூரம் விலை சரிவடயும் என்பதுதான் முக்கிய விடயமாகவுள்ளது( 2019 இல் விலை 27% சரிவடைந்தது ஒரு வருடத்திற்குள்ளாகவே விலை மீண்டும் உயர்ந்து விட்டது). இரஸ்சிய உக்கிரேனிய போர் உலக பொருளாதாரத்தினை வெகுவாகப்பாதிக்கின்றது, எமது நிறுவனத்தில் பங்குனி மாத ஆரம்பத்தில் (யுத்த ஆரம்ப காலத்தில்) கூடிய கூட்டத்தில் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள் வருகை யுத்தத்தினால் பாதிப்புறும் ஆனால் 3 மாத இருப்பு இருப்பதனால் சமாளித்துவிடலாம் என கூறப்பட்டது, ஆனால் தற்போது அனைத்து மூலப்பொருளும் இக்கட்டான அளவுநிலைக்கு ஏற்கனவே சென்றுவிட்டது. முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா, இந்த போரை முடிவுக்கு கொண்டுவராமல் மக்களையும் உலக பொருளாதாரத்தினை அழிக்கிறார்கள் (இரஸ்சியாவினை மட்டும் குறைகூறவில்லை மேற்கு நாட்டினையும் சேர்த்துதான் சொல்கிறேன்) 2 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் vasee Posted May 21, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted May 21, 2022 https://www.barchart.com/etfs-funds/quotes/GLD/put-call-ratios எதிர்வரும் ஆண்டு ஆரம்பம் வரை தங்கத்தின் market sentiment பாதகமாகவுள்ளது போல உள்ளது (உறுதியாக சொல்ல முடியாதுள்ளது). Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் vasee Posted May 22, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted May 22, 2022 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் vasee Posted May 22, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted May 22, 2022 தங்கம் விலை அதிகரிக்கலாம் அல்லது விலை சரியலாம் என கருதுகிறேன், வ்ரும் வாரத்திற்கான Trade analysis. எதிர்வரும் காலத்தில் எனது வர்த்தக நடவடிக்கைகளுக்கான Trade analysis இனை வார இறுதியில் யூருயூப்பில் தரவேற்ற முயற்சிக்கிறேன். இனி யாழின் மூலமாக உங்களது நெறிப்படுத்தலை பெறமுடியாதலால், எனது வர்த்தக நடவடிக்கையின் சாதக பாதகங்களை நீங்கள் குறித்த ஒளிப்பதிவின் கீழ் முடிந்தால் இணைக்கவும். வார இறுதிகளில் வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் தலா 12 மணித்தியாலங்கள் வேலை செய்வதால் சில வார இறுதியில் பதிவிட முடியாத நிலை ஏற்படலாம். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் vasee Posted May 22, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted May 22, 2022 தங்க விலை தொடர்பான மிகவும் சுவாரசியமான ஒளிப்பதிவு. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் vasee Posted May 23, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted May 23, 2022 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் vasee Posted June 1, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted June 1, 2022 On 12/5/2022 at 07:36, vasee said: Stop loss இனை குறைக்க முடியாவிட்டாலும் Position size கவனம் செலுத்தலாம் என நினைக்கிறேன், Risk of Ruin என்பது உங்களது trading system உங்களது trading account இனில் உள்ள காசு முழுவதும் இழக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதா என தெரிவிக்கும் அத்துடன், குறிப்பிட்ட எண்ணிக்கையான trade பின்னர் உங்களது கணக்கின் எதிர்கால நிலுவையினை தெரிவிக்கும். இந்த திரியில் முன்னர் ஒரு தளத்தின் இணைப்பினை இணைத்திருந்தேன், அத்தளத்திற்கு சென்று MS EXCEL தரவிறக்கிக்கொள்ளலாம். எனது AUDNZD trade இல் 1 break even மற்றது stop loss. பல்லடியம் உக்கிரேன் இரஸ்சிய போர் ஆரம்பித்த போது விலை எகிறும் என Fundamental analysis இல் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் விலை தொடர்ச்சியாக இறங்கி வருகிறது, கடந்த 3 மாதகாலமாக விலை இறங்குகிறது, 1900 விலையில் வாங்குவதற்கு தீர்மானித்துள்ளேன் ( தற்போது 2000 இல் உள்ளது 1900 தொழில்னுட்ப ரீதியாக வலுவானநிலையில் உள்ளபடியால்). சில நேரங்களில் உலக பொருளாதார சூழ்நிலையான Macro economics (Fundamental analysis) இற்கும் சந்தை நடவடிக்கையும் நேரெதிராக இருக்கிறது, இதனால்தான் தொழில்னுட்ப ரீதியான (Technical)சந்தை அணுகுமுறை சாதகமாகவுள்ளது. சமீபகாலமாக Fundamental analysis இற்கு முக்கியத்துவம் கொடுத்து அதனூடே தொழில்னுட்ப ரீதியாக சந்தையினை அணுகுகிறேன், அத்னாலேயே AUNZD bullish market view இல் தொடர்ச்சியாக இழப்பு ஏற்பட்ட போதும் தொடர்ந்தும் வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறேன். Trend following என்ற அடிப்படையில் AUDNZD இனை அணுகுகிறேன், இது தவறான முடிவாக இருக்கலாம். இந்த வகை உத்தியினை ரிச்சர்ட் டென்னிஸ் பாவித்திருந்தார், இஅவர்து வர்த்தக நடவடிக்கையில் 95% இழப்பினையும் வெறும் 5% மட்டுமே இலாபத்தினையும் வழங்கும் என கூறுவார்கள், அவரது அந்த 5% இலாப நடவடிக்கை 95% இழப்பினை ஈடு செய்வதுடன் மேலதிகமாக அவருக்கு இலாபத்தினையும் ஈட்டி கொடுத்திருக்கிறது. சந்தை நடவடிக்கை ஏறுமுகமாகவோ அல்லது இறங்கு முகமாகவோ அன்றி, பக்கவாட்டாக நிகழ்கிறது அதனால் மேற்கூறிய உத்தி அதிக பலனழிக்கவில்லை. அதனால் மே 24 இல் இருந்து Market making எனும் உத்தியினை கடைப்பிடித்துள்ளேன். https://www.myfxbook.com/members/GreedFTrader/live-acc/9531745 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் vasee Posted June 8, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted June 8, 2022 (edited) யுரோ நாணயம் தொடர்பாக யாழ்கள அங்கத்தவர்களின் கருத்துகளை எதிர்பார்க்கிறேன். தொழில்னுட்ப ரீதியாக (Technical analysis) (மாதவரைபடத்தில்) கடந்த 4 மாதத்திற்கு முன் யூரோ ஜென் 126 இலிருந்து உயர்ந்து செல்கிறது, அதன் எல்லை 174 ஆகவுள்ளது. இன்று வட்டி விகித அறிவிப்பு வெளியாகவுள்ளது, இந்த நிலையில் கடந்த பங்குனி மாதத்தித்திலிருந்த பணவீக்கம் 1.9% இலிருந்து 8% இற்கு அதிகரித்துள்ளது (இரஸ்சிய - உக்கிரேன் யுத்த உபயம்). முதலீட்டாளர்கள் மத்தியில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்படுவதால் யூரோ நாணய இணைகள் வாங்குவது பரவலாகக்காணப்படுகிறது. பணவீக்க விகிதம் 5.1% உள்ள அவுஸ்ரேலியா இந்த வாரம் எதிர்பார்ப்பான 0.25 புள்ளி அதிகரிப்புக்கு பதிலாக 0.50% அதிகரிப்பினை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறான நிலையில் யுரோ நாணயம் வட்டி விகிதம் உயர்த்தப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் இணைய செய்திகளில் 0.50% -0.75% புள்ளிகள் வரை அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே சந்தை, யுரோ நாணய இணைகள் விலை அதிகரிப்பின் மூலம் எதிர்பார்க்கப்படும் முடிவுகளை இனங்காட்டுகிறது. இதுவரை காலமும் Anchored inflation expectations என கிளிப்பிள்ளை மாதிரி ஒப்பித்திக்கொண்டிருந்த ஐரோப்பிய மத்திய வங்கி முதற் தடவையாக De-Anchored inflation expectations என பேச ஆரம்பித்துள்ளது. வட்டி விகிதம் உயர்த்துவதற்கு சாத்தியமுண்டா இல்லையா? Edited June 9, 2022 by vasee 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் vasee Posted June 9, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted June 9, 2022 11 hours ago, vasee said: யுரோ நாணயம் தொடர்பாக யாழ்கள அங்கத்தவர்களின் கருத்துகளை எதிர்பார்க்கிறேன். தொழில்னுட்ப ரீதியாக (Technical analysis) (மாதவரைபடத்தில்) கடந்த 4 மாதத்திற்கு முன் யூரோ ஜென் 126 இலிருந்து உயர்ந்து செல்கிறது, அதன் எல்லை 174 ஆகவுள்ளது. இன்று வட்டி விகித அறிவிப்பு வெளியாகவுள்ளது, இந்த நிலையில் கடந்த பங்குனி மாதத்தித்திலிருந்த பணவீக்கம் 1.9% இலிருந்து 8% இற்கு அதிகரித்துள்ளது (இரஸ்சிய - உக்கிரேன் யுத்த உபயம்). முதலீட்டாளர்கள் மத்தியில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்படுவதால் யூரோ நாணய இணைகள் வாங்குவது பரவலாகக்காணப்படுகிறது. பணவீக்க விகிதம் 5.1% உள்ள அவுஸ்ரேலியா இந்த வாரம் எதிர்பார்ப்பான 0.25 புள்ளி அதிகரிப்புக்கு பதிலாக 0.50% அதிகரிப்பினை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறான நிலையில் யுரோ நாணயம் வட்டி விகிதம் உயர்த்தப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் இணைய செய்திகளில் 0.50% -0.75% புள்ளிகள் வரை அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே சந்தை, யுரோ நாணய இணைகள் விலை அதிகரிப்பின் மூலம் எதிர்பார்க்கப்படும் முடிவுகளை இனங்காட்டுகிறது. இதுவரை காலமும் Anchored inflation expectations என கிளிப்பிள்ளை மாதிரி ஒப்பித்திக்கொண்டிருந்த ஐரோப்பிய மத்திய வங்கி முதற் தடவையாக De-Anchored inflation expectations என பேச ஆரம்பித்துள்ளது. வட்டி விகிதம் உயர்த்துவதற்கு சாத்தியமுண்டா இல்லையா? இந்த கருத்து பதிந்த போது யூரோ வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம் என்றதன் அடிப்படையில் முதற்தடவையாக 10% கணக்கினை உபயோகித்து EURJPY Short செய்திருந்தேன், வாங்காமல் ஏன் விற்றேன் என்றால் கடந்த வாரம் முழுவதுமாக விலை அதிகரித்த வண்ணமே இருந்தமையால் Market makers விலை உயர்வதற்கு முன்னர் விலையினை கீழிறக்கி stop loss hunt செய்வார்கள் என்ற அடிப்படையில் பல முயற்சிகள் மேற்கொண்டு அனைத்தும் பலனளிக்கவில்லை, ஆனால் நேற்று இரவிலிருந்து பெரிய தொகையில் வைத்திருந்த trade இனை 5 மணித்தியாலத்திற்கு முன்னராக மூடிவிட்டேன் (தொடர்ச்சியாகக்கண்காணிக்க முடியாமையால்), ஆனால் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் விலை இறங்கியுள்ளது, ஒரு சிறிய தொகுதி வாங்கியுள்ளேன் விலையேறும் எனும் அடிப்படையில் சில நிமிடங்கள் உள்ளது அறிவிப்பு வெளியாவதற்கு. வட்டி விகித அறிவிப்பு சாதகமாக வந்தால் விலை உயரும் போது உயர்வில் மந்தநிலை காணப்பட்டால் தற்போதய trade விற்று விட்டு எதிர் trade செய்யவுள்ளேன். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் vasee Posted June 9, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted June 9, 2022 ஐரோப்பிய மத்திய வங்கி வட்டி விகிதத்தினை உயர்த்தவில்லை 0.0% வட்டி விகிதம் (எதிர்பார்க்காத முடிவு), வாங்கி வைத்திருந்த யூரோ ஜென்னை குறைந்த இலாபத்தில் விற்று விட்டு, புதிதாக யூரோ ஜென்னை விற்றுள்ளேன். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Kadancha Posted June 9, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted June 9, 2022 8 hours ago, vasee said: ஐரோப்பிய மத்திய வங்கி வட்டி விகிதத்தினை உயர்த்தவில்லை 0.0% வட்டி விகிதம் (எதிர்பார்க்காத முடிவு), வாங்கி வைத்திருந்த யூரோ ஜென்னை குறைந்த இலாபத்தில் விற்று விட்டு, புதிதாக யூரோ ஜென்னை விற்றுள்ளேன். gold குறைகிறது. அதனால் us data கூடும் போல தெரிகிறது . இவை சந்தை எதிர்பார்ப்பு. அனால், fed balance sheet ஐ இருக்க தொடங்கிவிட்டது. இந்த கிழமையில் இருந்து, 50 billion முதலில் quantitative tightening. நேரம் இல்லை, வேறு தனிப்பட்ட அலுவல் காரணமாக. terra luna பற்றியும் ஓர் பதிவு செய்ய வேண்டும் என்று எழுதியபோது அழிந்து விட்டது. மீண்டும் எழுத நேரம் இல்லை. ஆனால், டெர்ரா luna, 4 billion usd பெறுமானத்தை வைத்து இருந்து இருந்தால் இது நடந்து இருக்கா முடியாது என்ற ஓர் கருதும் இருக்கிறது. terra லுனாவில் நடந்தது , ஏறத்தாழ, george soros இன் pound speculation ஆல், 1992 பிரித்தானியா erm இல் வெளியேறியது போல . 2 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் vasee Posted June 10, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted June 10, 2022 4 hours ago, Kadancha said: gold குறைகிறது. அதனால் us data கூடும் போல தெரிகிறது . இவை சந்தை எதிர்பார்ப்பு. அனால், fed balance sheet ஐ இருக்க தொடங்கிவிட்டது. இந்த கிழமையில் இருந்து, 50 billion முதலில் quantitative tightening. நேரம் இல்லை, வேறு தனிப்பட்ட அலுவல் காரணமாக. terra luna பற்றியும் ஓர் பதிவு செய்ய வேண்டும் என்று எழுதியபோது அழிந்து விட்டது. மீண்டும் எழுத நேரம் இல்லை. ஆனால், டெர்ரா luna, 4 billion usd பெறுமானத்தை வைத்து இருந்து இருந்தால் இது நடந்து இருக்கா முடியாது என்ற ஓர் கருதும் இருக்கிறது. terra லுனாவில் நடந்தது , ஏறத்தாழ, george soros இன் pound speculation ஆல், 1992 பிரித்தானியா erm இல் வெளியேறியது போல . EURJPY trade மூடிவிட்டேன், தொடர்ந்தும் விற்பதற்கு ஏற்ப விலை ஏற்றத்தினை எதிர்பார்த்துள்ளேன், ஆனால் ஜுலை மாதமளவில் 0.25, செப்டெம்பரில் 0.5 அதனை தொடர்ந்து வருட இறுதியில் 0.25 வட்டி வீதம் வரும் என எதிர்பார்க்கப்படுகிரது, அதற்கு முன்னர் விலை சடுதியாக இறங்கலாம் என எதிர்பார்க்கிறேன், தொடர்ந்து எழுதுங்கள். Link to comment Share on other sites More sharing options...
இணையவன் Posted June 10, 2022 Share Posted June 10, 2022 15 hours ago, Kadancha said: gold குறைகிறது. அதனால் us data கூடும் போல தெரிகிறது . இவை சந்தை எதிர்பார்ப்பு. அனால், fed balance sheet ஐ இருக்க தொடங்கிவிட்டது. இந்த கிழமையில் இருந்து, 50 billion முதலில் quantitative tightening. நேரம் இல்லை, வேறு தனிப்பட்ட அலுவல் காரணமாக. terra luna பற்றியும் ஓர் பதிவு செய்ய வேண்டும் என்று எழுதியபோது அழிந்து விட்டது. மீண்டும் எழுத நேரம் இல்லை. ஆனால், டெர்ரா luna, 4 billion usd பெறுமானத்தை வைத்து இருந்து இருந்தால் இது நடந்து இருக்கா முடியாது என்ற ஓர் கருதும் இருக்கிறது. terra லுனாவில் நடந்தது , ஏறத்தாழ, george soros இன் pound speculation ஆல், 1992 பிரித்தானியா erm இல் வெளியேறியது போல . கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் குறுகிய trade முறையில் தங்க முதலீட்டில் சற்று இலாபம் கிடைத்தது. தங்கத்தில் நீண்டகால முதலீட்டுக்கு இப்போது சரியான சந்தர்ப்பம் என்று நினைக்கிறேன். Link to comment Share on other sites More sharing options...
இணையவன் Posted June 10, 2022 Share Posted June 10, 2022 6 hours ago, இணையவன் said: கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் குறுகிய trade முறையில் தங்க முதலீட்டில் சற்று இலாபம் கிடைத்தது. தங்கத்தில் நீண்டகால முதலீட்டுக்கு இப்போது சரியான சந்தர்ப்பம் என்று நினைக்கிறேன். இன்று காலையில் தங்கம் மேலும் கீழே இறங்கியது. என்ன கரணமோ பின்னேரம் திடீரென உயர ஆரம்பித்தது. 15 - 20 நிமிட இடைவெளிகளில் 5 தடவை trade செய்து ஒன்றரை மணிநேரத்தில் எனது கையிருப்பை 160 இலி இருந்து 190 ஆக உயர்த்திக் கொண்டேன். 🙂 ProShares UltraPro பற்றி யாருக்காவது தெரியுமா ? இவற்றுக்கும் Forex ற்குமான சமன்பாடுகளை அறிந்து கொண்டால் சுவாரிசியமானதாகத் தெரிகிறது. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் vasee Posted June 12, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted June 12, 2022 On 11/6/2022 at 05:10, இணையவன் said: இன்று காலையில் தங்கம் மேலும் கீழே இறங்கியது. என்ன கரணமோ பின்னேரம் திடீரென உயர ஆரம்பித்தது. 15 - 20 நிமிட இடைவெளிகளில் 5 தடவை trade செய்து ஒன்றரை மணிநேரத்தில் எனது கையிருப்பை 160 இலி இருந்து 190 ஆக உயர்த்திக் கொண்டேன். 🙂 அமெரிக்க பணவீக்க அறிவிப்பு வெளியாகியிருந்தது, கடந்த மாத பணவீக்க அளவிலிருந்து 0.1% பணவீக்கம் அதிகரித்துள்ளது (1.88% ?) அதனால் தங்கத்தின் விலை 2.01% அதிகரித்துள்ளது. இது பணவீக்கத்தின் அதிகரிப்பினை விட சிறிய அதிகரிப்பு காணப்படுகிறது. நான் முன்பு கூறியது போல தங்கம் முக்கிய விலை புள்ளியிலிருந்து கீழிறங்கவில்லை, இது தங்கத்தின் பலத்தினை காட்டுகிறதாக உணர்கிறேன் (எனது கருத்து தவறாக இருக்கலாம்). இது வரை காலமும் தங்கத்தினை விற்பதில் மட்டும் ஆர்வம் காட்டியிருந்தேன் (Short), ஏனெனில் அதன் Trend அப்படி (ஏற்கனவே எனது கணக்கின் லிங் இணைத்துள்ளேன்). ஆனால் கடைசி தங்க Trade இல் தங்கத்தினை வாங்கியிருந்தேன் ( பணவீக்க அறிவிப்பிற்கு முன்னதாக). தங்கம் விலை இறங்கலாம் எனும் எனது அபிபிராயத்திலிருந்து விலை ஏறலாம எனும் அபிப்பிராயத்திற்கு வந்துள்ளேன். இன்று கிழக்காசிய சந்தையின் நிலவரத்தினை (Low liquidity) பயன்படுத்தி தங்கத்தின் விலையினை சடுதியாக சரிக்க முற்பட்டால் (Stop hunt), தங்கத்தினை அதிகளவில் வாங்கலாம் என கருதுகிறேன் (தவறான அணுகுமுறையாக இருக்கலாம்). On 11/6/2022 at 05:10, இணையவன் said: ProShares UltraPro பற்றி யாருக்காவது தெரியுமா ? இவற்றுக்கும் Forex ற்குமான சமன்பாடுகளை அறிந்து கொண்டால் சுவாரிசியமானதாகத் தெரிகிறது. தகவலுக்கு நன்றி, Link to comment Share on other sites More sharing options...
இணையவன் Posted June 13, 2022 Share Posted June 13, 2022 இன்று மிக மோசமான நிலை. பொதுவாக எதுவுமே சாதகமாக இல்லை . நேற்று அடைந்த இலாபத்தைவிட அதிகம் இழந்துள்ளேன். Bitcoin 12 வீதம் சரிந்து 23000 டொலர்களை அண்மிக்கின்றது. ஆனலும் ProShares UltraPro வில் அரைவாசியானவை (UVXY +14%, SQQQ +10%, SPXU +8%) உயர்ந்துள்ளன. Link to comment Share on other sites More sharing options...
இணையவன் Posted June 13, 2022 Share Posted June 13, 2022 இன்று 3 வீதம் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தங்கத்தில் முதலிட இது சரியான தருணமாக இருக்கலாம். நாளை காலை பார்த்துவிட்டு மீதமுள்ள கைய்யிருப்பை ஒன்றாக்கி முதலிடலாம் என்று எண்ணியுள்ளேன். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் vasee Posted June 13, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted June 13, 2022 5 hours ago, இணையவன் said: இன்று மிக மோசமான நிலை. பொதுவாக எதுவுமே சாதகமாக இல்லை . நேற்று அடைந்த இலாபத்தைவிட அதிகம் இழந்துள்ளேன். Bitcoin 12 வீதம் சரிந்து 23000 டொலர்களை அண்மிக்கின்றது. ஆனலும் ProShares UltraPro வில் அரைவாசியானவை (UVXY +14%, SQQQ +10%, SPXU +8%) உயர்ந்துள்ளன. பொருளாதார அடிப்படை கட்டமைப்பு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் (Macro economic) 1. பணவீக்கம் 2. பொருளாதார மந்த நிலை 3. சந்தையில் திரவ நிலை குறைதல் (Liquidity) Global liquidity index 85% இலிருந்து 40% சரிந்துள்ளது, இது முதலீடு, வங்கித்துறை மற்றும் சாதாரண மக்களின் செலவீடுகளில் (House hold expense) தாக்கம் செலுத்தும். அனைத்து முதலீட்டு சந்தைகளிலும் திரவத்தன்மை குரைவினால் முதலீடுகள் வற்றி போயுள்ள நிலமையே பங்கு சந்தை, கிரிப்டோ என்பவற்றின் சரிவிற்கு காரணம் என கூறப்படுகிறது. சாதாரண மக்கள் கடனட்டை, வீட்டுக்கடன் என பெருமளவிலான கடனதிகரிப்பு மேலதிக சுமையினை பொருளாதாரத்தில் ஏற்படுத்துகிறது. அவர்கள் ஊதிய உயர்வு அதிகரிப்பு இன்மை அத்துடன், பணவீக்கம் அதனால் ஏற்படப்போகும் வட்டி விகித உயர்வு பொருளாதார சரிவிற்கு வழிசமைக்கும். அத்துடன் வங்கிகளும் பொருளாதார நெருக்கடியில் சிக்கும் பட்சத்தில் 50% வரை சந்தை சரிவு ஏற்படலாம் என கூறப்படுகிறது. இதில் அரசியல் வேண்டாம் என்பதால அதற்கான காரணங்களை கூறவில்லை. வரும் புதனன்று வட்டி விகித அதிகரிப்பு 0.50% ஏற்படலாம் என எதிவு கூறப்பட்ட அதே வேளை 0.75% இனை முதலீட்டாளர்கள் எதிபார்க்கிறார்கள், அவ்வாறு நிகழ்ந்தால் நடைமுறையில் தங்கம் விலை கடுமையாக பாதிக்கும். ஆனால் கடந்த காலங்களில் அப்படியே நேரடியாக தங்க விலை சரிவினை ஏற்படுத்த வில்லை. அத்துடன் தங்க விலை வீழ்ச்சி அடையும் எனும்பட்சத்தில் எதிர் வரும் புதன் கிழமைக்கு முன்பாக தங்க விலையில் அதிகரிப்பு காணப்படலாம் (Distribution). 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் vasee Posted June 13, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted June 13, 2022 (edited) 39 minutes ago, இணையவன் said: இன்று 3 வீதம் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தங்கத்தில் முதலிட இது சரியான தருணமாக இருக்கலாம். நாளை காலை பார்த்துவிட்டு மீதமுள்ள கைய்யிருப்பை ஒன்றாக்கி முதலிடலாம் என்று எண்ணியுள்ளேன். தங்கம் 1800 வலயத்தினை விட்டு கீழிறங்கு பட்சத்தில் முன்பு கூறியது போல 1300 இல் தங்கத்தினை வாங்குவதற்கான வாய்ப்புகள் (Technical analysis) அதிகமாகவுள்ளது. பொதுவாக fundamental analysis அடிப்படையில் செய்யப்படும் முதலீடுகள் அவ்வளவாக எனக்கு சரிவருவதில்லை, நானும் தங்கத்தில் (American session) 1832 முக்கிய வலயத்தில் தங்கத்தினை முன்பு கூறியது போல பெருமளவில் வாங்கியிருந்தேன் (Big position size - bad trade). இப்போது கிழக்காசிய சந்தை விற்பனைகளுக்காக காத்திருக்கிறேன் (Liquidity), சிறிய நட்டத்துடன் வெளியேற ( இது வரை காலமும் சிறுக சிறுக Technical analysis மூலம் சேர்த்த இலாபம் அனைத்தையும் தங்க Fundamental முதலீட்டில் இழந்து விட்டேன், அத்துடன் எனது சொந்த பணத்திலும் இழப்பு ஏற்கனவே ஏற்பட்டு விட்டது) ஆனால் தங்கம் 1800 நிலையினை தக்க வைத்தால் 1920 வரை உயரலாம். மேலே கூறப்பட்டவை அனைத்தும் சொந்த அபிப்பிராயம் (தவறாக இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்) Edited June 13, 2022 by vasee 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Kadancha Posted June 14, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted June 14, 2022 12 hours ago, இணையவன் said: ஆனலும் ProShares UltraPro வில் அரைவாசியானவை (UVXY +14%, SQQQ +10%, SPXU +8%) உயர்ந்துள்ளன. இவை நேர்மாறு etf - inverse exchange traded fund. ETF என்பது பல பங்குகள், வேறு நிதி கருவிகள் (debt, credit போன்றனவும், அடிப்படை commodities போறனவும், மற்றும் அதற்கு வேறுபட்ட அல்லது இடைப்பட்ட நிதி அமைப்பை அடிப்படையாக கொண்டு) உருவாக்கப்படுவது. Inverse ETF என்பது, அதன் பெயருக்கு ஏற்ப, ETF இல் அடிப்படையாக இருக்குக்கும் நிதி கருவிகள் இறங்கும் போது ஏறும், நிதி கருவிகள் ஏறும் போது இறங்கும். அதாவது, trade இல் உள்ள shorting ஐ போல , பெரிய ரிஸ்க் எடுக்காமல், சாதாரண முதலீட்டாளர்கள் முதல் இடுவதற்கு. Inverse ETF இருக்கும் பங்குகல்,சுட்டிகள் என்பதன் ஏற்ற, தாழ்வை கொண்டு, Inverse ETF இந்த நிகர ஏற்றம், இறக்கம் இருக்கும். 1 Link to comment Share on other sites More sharing options...
இணையவன் Posted June 14, 2022 Share Posted June 14, 2022 கடஞ்சா, வசி உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. கீழுள்ள படங்கள் நேற்றும் கடந்த வெள்ளியும் எடுத்தவை. முதலாவதில் சிவப்பு, நீல அடையாளங்களால் சோடிகளாகக் காட்டியிருப்பவை NASDAQ மற்றும் SPX500 ஆகியவற்றுக்கு நேரானதும் எதிரானதுமானவை. NASDAQ எவ்வளவு இறங்குகிறதோ அதற்கு எதிராக SQQQ பல மடங்கு ஏறுவதைக் கவனிக்கலாம். இதில் பிரச்சனை என்னவென்றால் இவை திறக்கும் நேரம் ETF பங்குச் சந்தையின் நேரமாகும். SQQQ இனை உதாரணத்துக்கு எடுத்தால், NASDAQ இரவு முழுவதும் திறந்திருப்பதால் அதன் ஏற்ற இறக்கத்தைப் பொறுத்து SQQQ இன் பெறுமதி தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருந்தாலும் update செய்யப்படுவதில்லை. ETF சந்தை திறக்கப்பட்ட சில வினாடிகளில் update செய்யப்படும். இதன்போது SQQQ இன் பெறுமதி திடீரென 5 - 10 வீதங்களுக்கு உயர்ந்துவிடும். இந்த இடத்தில்தான் பெருமளவு இலாபம் பார்க்கலாம். NASDAQ இன் தற்போதைய பெறுமதி தெரிந்திருந்தாலும் update செய்யப்படும் சில விநாடிகளுக்குள் SQQQ இனை வாங்க முடியாது. முன்னைய நாள் நிலவரத்தை வைத்துக் கணிப்பீடு செய்து முதல்நாளே பங்குச் சந்தை பூட்டப்படுமுன் இப் பங்குகளை வாங்குவதுதான் ஒரே வழி. Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts