பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
அதானி குழுமத்துக்கு 'உயிர் கொடுக்கும்' அபுதாபி நிறுவனத்தின் பின்னணி என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் அபுதாபி அரச குடும்பத்துடன் தொடர்புடைய இண்டர்நேஷனல் ஹோல்டிங் நிறுவனம் அதானி குழுமத்தில் 3,260 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் அதானி குழுமத்தின் 20,000 கோடி ரூபாய் ஃபாலோ ஆன் பப்ளிக் ஆஃபரில்(FPO) முதலீடு செய்துள்ளது. திங்கட்கிழமை பங்குச்சந்தை முடிவில், இந்த FPO பங்குகளில் 3% மட்டுமே வாங்கப்பட்டிருந்தன. ஆனால் இதற்குப் பிறகு அபுதாபி அரச குடும்பத்துடன் தொடர்புடைய இன்டர்நேஷனல் ஹோல்டிங் நிறுவனம் அதானி குழுமத்தில் முதலீடு செய்யப் போவதாக அறிவித்தது. அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு: நேசக்கரம் நீட்டும் அபுதாபி31 ஜனவரி 2023 வீழும் அதானி குழும பங்கில் மேலும் முதலீடு: எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ.யில் உள்ள மக்கள் பணத்துக்கு ஆபத்தா?28 ஜனவரி 2023 அதானி Vs ஹிண்டன்பர்க்: நடப்பது என்ன? எளிய விளக்கம் - எல்ஐசி, எஸ்பிஐ-யில் மக்கள் பணத்திற்கு ஆபத்தா?30 ஜனவரி 2023 'அதானி குழுமத்தின் மீதான எங்கள் ஆர்வத்திற்கு காரணம் அதானி எண்டர்பிரைசஸின் பொருளாதார ஆரோக்கியத்தின் மீதுள்ள நம்பிக்கைதான். இந்த நிறுவனத்தில் நீண்ட கால வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்புகள் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்,” என்று இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சையத் பஸர் ஷுயேப் கூறினார். அதானி குழுமம் எல்லா தரப்பிலிருந்தும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் நேரத்தில் இந்த நிறுவனம் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. பட மூலாதாரம்,REUTERS/AMIT DAVE ஹிண்டன்பர்க் அறிக்கை நஷ்டம் விளைவித்ததா? அமெரிக்க தடயவியல் நிதி நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழுமத்தின் மீது நிதி முறைகேடுகள் தொடர்பான கடுமையான குற்றச்சாட்டுகளை கடந்த வாரம் முன்வைத்தது. அதன்பிறகு அதானி குழுமத்துடன் தொடர்புடைய நிறுவனங்களின் பங்குகளில் சரிவு ஏற்பட்டுள்ளது. மூன்று வணிக நாட்களில் அதாவது ஜனவரி 25, 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில், அதானி குழுமத்தின் சந்தை மூலதன மதிப்பு 29 சதவிகிதம் சரிவை பதிவு செய்துள்ளது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் 5.6 லட்சம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைத் தக்கவைக்க நிறுவனம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதானி குழுமம் ஞாயிற்றுக்கிழமை மாலை இது தொடர்பாக 413 பக்க விளக்க அறிக்கையை வெளியிட்டது. ஹிண்டன்பர்க் அறிக்கையை இந்தியாவுக்கு எதிரான தாக்குதல் என்று அது கூறியது. இருப்பினும் இதற்குப் பிறகும் அதானி குழுமங்களின் பங்குகள் திங்கள்கிழமை சரிந்து, அதன் சந்தை மூலதனத்தில் 1.4 லட்சம் கோடி ரூபாய் இழப்பு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அபுதாபியின் IHC நிறுவனத்தின் முதலீட்டு அறிவிப்புக்குப் பிறகு வேறு சில குடும்ப நிறுவனங்களும் அதானி குழுமத்தில் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளன. துபாய் மற்றும் இந்தியாவில் அமைந்துள்ள சில குடும்ப நிறுவனங்களும் அதானி குழுமத்தின் FPO இல் 9000 கோடி ரூபாய் முதலீடு செய்யக்கூடும் என்று இந்து பிசினஸ் லைன், செவ்வாயன்று தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES அதானி குழுமத்தில் ஐ.ஹெச்.சி. முதலீடு புதிதல்ல அபுதாபியின் அரச குடும்பத்துடன் தொடர்புடைய இந்த நிறுவனம் அதானி குழுமத்தில் முதலீடு செய்வது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு இந்தக்குழு, அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி குழுமத்தின் பிற நிறுவனங்களில் இரண்டு பில்லியன் டாலர்களை முதலீடு செய்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரின் சகோதரர் ஷேக் தஹ்னூன் பின் சயீத் அல் நஹ்யான் இந்த நிறுவனத்தின் தலைவர். இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளில் அபுதாபியின் பங்குச் சந்தையின் வெற்றிப் படிக்கட்டுகளில் வேகமாக ஏறியுள்ளது. இந்த நிறுவனம் அபுதாபியின் பங்குச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு வந்துள்ளது. இந்த நிறுவனம் இந்த ஆண்டு வெளிநாடுகளில் தனது முதலீட்டை 70 சதவிகிதம் அதிகரிக்க முயற்சிக்கிறது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் அறிக்கை கூறுகிறது. வெளிநாட்டு முதலீடுகளை செய்யும் போது இந்த நிறுவனம், தூய்மையான எரிசக்தி மற்றும் உணவு பதப்படுத்துதல் துறையில் சிறப்பு கவனம் செலுத்த விரும்புகிறது. ஆனால் அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்ததில் இருந்தே இந்த நிறுவனம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES 40 பணியாளர்களைக் கொண்ட நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த நிறுவனத்தில் நாற்பது பேர் மட்டுமே பணிபுரிந்தனர் என்று இந்த நிறுவனம் தொடர்பான ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை இண்டர்நேஷனல் ஹோல்டிங் நிறுவனத்தின் பெயரை பலரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இந்த நிறுவனம் மீன் வளர்ப்பில் இருந்து உணவு மற்றும் ரியல் எஸ்டேட் வணிகம் வரை செயல்பட்டு வந்தது என்று பைனான்சியல் டைம்ஸில் வெளியான அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் இப்போது அபுதாபியில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த குழுமத்தின் சந்தை மூலதனம் 240 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது. சந்தை மூலதனத்தைப் பொருத்தவரை இந்த நிறுவனம், சர்வதேச நிறுவனங்களான சீமென்ஸ் மற்றும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனங்களை விட முன்னணியில் உள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் இப்போதுவரை இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 42,000 சதவிகிதம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. மத்திய கிழக்கில் இந்த நிறுவனம் இப்போது செளதி அரேபியாவின் தேசிய எண்ணெய் நிறுவனமான அரம்கோவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. பட மூலாதாரம்,IHC படக்குறிப்பு, இண்டர்நேஷனல் ஹோல்டிங் கம்பெனி வானளாவிய வெற்றியின் ரகசியம் என்ன? இன்டர்நேஷனல் ஹோல்டிங் கம்பெனியின் மகத்தான வெற்றிக்கான காரணம் புரியாத புதிர் தான். உலகின் பிற நாடுகளில் இந்த நிறுவனத்தின் பொருளாதார வெற்றியைப் பற்றி குறைவான தகவல்களே கிடைக்கின்றன. அதே நேரம் அபுதாபியின் பொருளாதார உலகத்துடன் தொடர்புடைய நபர்களிடமும் இந்த நிறுவனத்தின் முன்னேற்றம் குறித்து அதிக தகவல்கள் இல்லை. இந்த நிறுவனம் எப்படி இவ்வளவு வேகமாக வளர்ந்தது என்பது யாருக்கும் தெரியாது என்று வளைகுடா நாடுகளில் பணிபுரியும் ஒரு சர்வதேச வங்கியாளர், பைனான்சியல் டைம்ஸ் உடனான உரையாடலில் கூறியுள்ளார். 2019 ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சையத் பாஸர் ஷுயேப், இந்த நிறுவனத்தின் முன்னேற்றத்தை ’சிறப்பானது’ என்று விவரிக்கிறார். "நாங்கள் எந்த விதமான டிவிடெண்டும் தருவதில்லை. 2020, 2021-ம் ஆண்டுகளில் கிடைத்த லாபம், திரும்ப முதலீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு ஒரு மாபெரும் நிறுவனத்தை உருவாக்க முயற்சித்து வருகிறோம்... உலக அளவில் பெரிய நிறுவனமாக மாற முயற்சிக்கிறோம்,"என்று அவர் கூறினார். இருப்பினும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரான அபுதாபியில் வணிகத்திற்கும் அதிகாரத்திற்கும் இடையே’மங்கலாகும் கோடு’ என்று சிலர் இந்த நிறுவனத்தை பார்க்கின்றனர். நிறுவனத்தின் சந்தை மூலதனத்தில் இந்த மாபெரும் வளர்ச்சியைப் பற்றிய கவலைகள் இருக்கும் காரணத்தால் துபாய் அதிகாரிகள் தங்கள் பங்குச் சந்தையை ADX உடன் இணைக்கும் வாய்ப்பில் இருந்து பின்வாங்கத்தொடங்கியுள்ளனர் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். https://www.bbc.com/tamil/articles/c3g3xdlpg52o
-
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இந்துத்துவாவுக்கு எதிரான போராட்டமும் வலுவடடைவதுபோல் தெரிகிறது. ஈழத் தமிழரில் சில பழமைவாதிகள் இந்துத்துவாவை ஒட்டிய மனநிலையில் உள்ளனர். 🙂
-
மார்ச் 09 இல் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்த வர்த்தமானி வெளியாகியது! By DIGITAL DESK 5 01 FEB, 2023 | 12:46 PM (இராஜதுரை ஹஷான்) உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பை எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி வியாழக்கிழமை நடத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் செவ்வாய்க்கிழமை (31) இரவு வெளியாகியுள்ளது. 24 தேர்தல் நிர்வாக மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அலுவலர்களின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானிகள் வெளியாகியுள்ளன.உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் (262 ஆம் அத்தியாயம்) 38(1) இ உபபிரிவின் பிரகாரம் எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி காலை 07 மணிமுதல் மாலை 04 மணி வரை வாக்கெடுப்பு இடம்பெறும். அங்கிகரிக்கப்பட்ட 58 அரசியல் கட்சிகள் மற்றும் 329 சுயேட்சைக் குழுக்கள் ஊடாக 80,720 வேட்பாளர்கள் 339 உள்ளூராட்சிமன்றளில் போட்டியிடவுள்ளனர். காலி மாவட்டம் எல்பிடிய பிரதேச சபை மற்றும் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைகளை தவிர்த்து நாடளாவிய ரீதியில் உள்ள 339 உள்ளூர் அதிகார சபைகளுக்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. எல்பிடிய பிரதேச சபை 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெற்றது.இருப்பினும் காலி மாவட்டம் எல்பிடிய அதிகார சபைக்கான தேர்தல் அப்போது இடம்பெறவில்லை.2019.10.10 ஆம் திகதி எல்பிடிய பிரதேச சபைத் தேர்தல் இடம்பெற்றது. 2022.03.20 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உள்ளூராட்சிமன்றங்களின் பதவி காலம் ஒருவருடத்திற்கு நீடிக்கப்பட்டதை தொடர்ந்து இதற்கமைய ஏனைய உள்ளூராட்சிமன்றங்களை காட்டிலும் எல்பிடிய பிரதேச சபையின் பதவிகாலம் மேலதிகமாக நீடிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய காலி மாவட்டம் எல்பிடிய பிரதேச சபையை தவிர்த்து ஏனைய உள்ளூராட்சிமன்றங்களுக்கான வாக்கெடுப்பை கோருவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு 2022.12.29 தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களை நியமித்து நடவடிக்கைகளை முன்னெடுத்தது. கல்முனை மாநகர சபை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கல்முனை மாநகர சபையின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவு கடந்த மாதம் 19 ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணை நிறைவடையும் வரை நீடிக்கப்பட்டது.கல்முனை விவகாரம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/147160
-
கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது சுற்றுச்சூழலை எந்த அளவுக்குப் பாதிக்கும்? கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதிக்கு மெரீனா கடற்கரையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது எந்த அளவுக்கு சுற்றுச்சூழலை பாதிக்கும்? முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நினைவைப் போற்றும் விதமாக சென்னை மெரீனா கடற்கரையில் அவரது நினைவிடத்திற்கு அருகில் கடலுக்குள் 134 அடி உயரத்தில் பேனா வடிவில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருக்கிறது. 81 கோடி செலவில் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடலுக்குள் அமைக்கப்படும் இந்த பேனா நினைவுச் சின்னத்தை சென்றடைய கடற்கரையில் 290 மீட்டர் நீளத்திற்கும் கடலுக்குள் 360 மீட்டர் நீளத்திற்கும் பாலம் அமைக்கப்படவுள்ளது. ஒட்டுமொத்தமாக 8,551.13 சதுர மீட்டர் இடம் பயன்படுத்தப்படவிருக்கிறது. அரசு தயாரித்துள்ள திட்ட அறிக்கையின்படி, இந்த நினைவுச் சின்னம் அமையவுள்ள பகுதி கடலோர ஒழுங்காற்று மண்டலம் (CRZ IA), CRZ II, CRZ IV-A ஆகிய பகுதிகளுக்குள் வருகிறது. இந்த பேனா வடிவ நினைவுச் சின்னம் அமையும் இடம் கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2011ன் படி பகுதி IV(A)ன் கீழ் வருகிறது. IV (A) என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்கு புதிதாக எந்தக் கட்டுமானத்தையும் கட்ட முடியாது. ஆனால், 2015ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்த விதிமுறையில் ஒரு திருத்தம் செய்யப்பட்டது. மும்பை கடற்கரையை ஒட்டி சத்ரபதி சிவாஜி சிலையை அமைப்பதற்காக செய்யப்பட்ட அந்தத் திருத்தத்தின்படி, CRZ IV(A) என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் விதிவிலக்கான நேரங்களில் நினைவிடங்கள்/நினைவுச் சின்னங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது. அந்தத் திருத்தத்தின் அடிப்படையில்தான், தற்போது பேனா நினைவுச் சின்னம் கடலுக்குள் அமைக்கப்படுகிறது. சுற்றுச்சூழல்கள் ஆர்வலர்கள் எதிர்ப்பு ஆனால், இந்தத் திட்டத்தை சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் சில மீன்பிடி சங்கங்களும் எதிர்க்கின்றன. இந்தத் திட்டம் தொடர்பாக ஊரூர்குப்பம் மீன் பிடிப்போர் கூட்டுறவு சங்கம் மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில் இத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்றும் அதற்கான காரணங்களையும் முன்வைத்துள்ளது. "கடலிலும், கடற்கரையிலும் திட்டங்களை கொண்டுவரும் போது அந்தந்த மாவட்டங்களில் மீனவர்களுக்கு பாதிப்பு உள்ளதா, இல்லையா என்பதனை அறிந்து கொள்ள கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை 2011 பத்தி 6(c)ல் மாவட்ட கடற்கரை மண்டல மேலாண்மை குழுமத்தில் (DCZMA) மூன்று மீனவ பிரதிநிதிகள் இருக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. ஆனால் 21 வருடங்கள் ஆகியும் DCZMAல் மீனவ பிரதிநிதிகள் ஒருவர் கூட கிடையாது. மீனவ பிரதிநிதிகள் இல்லாமலேயே கடலிலும், கடற்கரையிலும் அரசால் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மீனவர்களின் மீன்பிடி தகவல்களை அரசு முறையாக கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்தில் பதிவு செய்யாமல் கடல் நடுவே கலைஞர் பேனா நினைவுச்சின்ன திட்டத்தை அமைத்தால் கரைத்தொழிலை நம்பியுள்ள மீனவர்கள் மற்றும் நடுக்கடலை நம்பியுள்ள மீனவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். ஆகையால் இந்த திட்டத்தை கைவிட வேண்டுமெனவும், மீனவர்களின் மீன்பிடி இடங்களை சட்டத்தில் கூறியுள்ள படி TNSCZMP ல் பதிவு செய்ய வேண்டும்" என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. "பேனா சிலை வைத்தால், நான் வந்து உடைப்பேன்" - வைரலாகும் சீமானின் கருத்து31 ஜனவரி 2023 பிரதமர் நரேந்திர மோதி குறிப்பிட்ட உத்திரமேரூர் கல்வெட்டின் முக்கியத்துவம் என்ன?31 ஜனவரி 2023 ஆந்திராவில் அதிசய கிராமம்: டி.வி., செல்போன், மின்சாரமே வேண்டாம் என தவிர்க்கும் மக்கள்31 ஜனவரி 2023 அதேபோல, அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசியத் தலைவரான ஆண்டன் கோம்சும் இது தொடர்பாக துண்டறிக்கை மூலம் பிரச்சாரம் செய்துவருகிறார். "சமீபத்தில் தேதிய கடல் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 20 ஆண்டுகளில் தமிழக கடற்கரையில் 422 கி.மீ. அளவுக்கு கடல் அரிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இந்தியாவில் கடல் அரிப்பு அதிகமுள்ள நான்காவது மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. 1990 முதல் 2018வரை 1802 ஹெக்டேர் நிலம் கடலரிப்புக்கு உள்ளாகியுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடலரிப்பைத் தடுக்கும் கட்டுமானங்கள் நூற்றுக்கணக்கில் செய்தும் பலனில்லை. ஆகவே நினைவுச் சின்னத்தின் நிலைப்புத் தன்மை, கடலரிப்பு, CRZ அறிவிப்பாணை, மீனவர்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றை மனதில் கொண்டு இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும்" என்கிறார் ஆண்டன் கோம்ஸ். பூவுலகின் நண்பர்கள் அமைப்பும் இந்தத் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது. "இந்தத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதை காணமுடிகிறது. திட்ட அமைவிடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்கு மீன்பிடி நடவடிக்கைகள் நடைபெறவில்லை என சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தென் சென்னையைச் சேர்ந்த 14 கிராமங்கள், வட சென்னையைச் சேர்ந்த 20 கிராமங்கள் என 34 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இப்பகுதியில் மீன் பிடித்து வருகின்றனர். இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் அப்பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் பல ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பங்குனி ஆமைகள் (Olive Ridley Turtle) திட்ட அமைவிடத்தில் தென்படுவதாக சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் 175வது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அழிந்து வரும் உயிரினமாக IUCN அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த பங்குனி ஆமைகளின் வாழிடமாகவும் முட்டையிடும் இடமாகவும் மெரினா கடற்கரை உள்ளதால். இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டால் பங்குனி ஆமைகளின் எண்ணிக்கை வெகுவாக குறையும் அபாயம் உள்ளது. திட்ட அமைவிடத்தில் இருந்து 130மீ தூரத்தில் கூவம் ஆறு கடலில் சேரும் முகத்துவாரப் பகுதி அமைந்துள்ளது. பொதுவாக இந்த முகத்துவாரப் பகுதியில தான் மீன்கள் அதிகம் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்பதனால், கடலின் உயிர் பன்மையம் செழிப்பாக வைத்திருக்க உதவும் இப்பகுதியின் ஆரோக்கியம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. கூவம் ஆறு கடலில் சேரும் முகத்துவாரத்தின் அருகில் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டால் அப்குதியின் உயிர் பன்மையம் கடுமையாக பாதிக்கப்படும். இத்திட்டத்திற்காக கடலில் ஆழ்துளைகள் போடப்பட்டு பிரமாண்ட தூண்கள் அமைக்கப்படவுள்ளன. இது மீட்டெடுக்க முடியாத நிரந்தர சூழலியல் பாதிப்புகளுக்கு வழிவகை செய்து விடும். ஏற்கெனவே துறைமுகம் கட்டியதன் விளைவாக ஆண்டிற்கு 20 மீட்டர் அளவிற்கான கடல் அரிப்பை வட சென்னை சந்தித்து வருகிறது. இந்நிலையில் மெரினாவில் கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டால் மெரினா கடற்கரை உட்பட அருகாமையில் உள்ள பல மீனவ கிராமங்கள் கடல் அரிப்பினால் பாதிக்கப்படும்" என அந்த அமைப்பு கூறியிருக்கிறது. இந்தத் திட்டத்திற்கான ஆய்வே முறைப்படி செய்யப்படவில்லை என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன். "திட்ட ஆய்வை 2021 மே - ஜூலை மாதங்களில் செய்ததாகச் சொல்கிறார்கள். இந்த அரசே 2021 மே மாதம்தான் பதவியேற்றது. உடனே இந்த ஆய்வை நடத்தினார்களா?" என்று கேள்வி எழுப்புகிறார் அவர். "ஏற்கெனவே சென்னைத் துறைமுகத்தால், அதற்கு வடக்க உள்ள காசிமேட்டிற்கு அப்பால் துவங்கி திருவள்ளூர் மாவட்டம் நெட்டுக்குப்பம் வரை பல கிராமங்கள் கடலுக்குள் சென்றுவிட்டன. கிட்டத்தட்ட ஒன்றரை - இரண்டு கி.மீ.க்கு கடல் உள்ளே வந்துவிட்டது. பல பட்டா நிலங்கள் தற்போது கடலுக்குள் இருக்கின்றன. ஆனால், இந்தத் திட்டத்தில் பாலம் போலத்தான் அமைப்பதால் நீரோட்டம் பாதிக்கப்படாது என நம்புகிறோம். அந்தப் பகுதியில் மீன் பிடிக்க அனுமதிப்போம் என்கிறார்கள். ஆனால், அதைச் சட்டப்படி எங்களுக்குச் உறுதி செய்து தர வேண்டும். கடலும் கூவம் ஆறும் கலக்கும் இடத்தில் இந்தக் கட்டுமானம் நடக்கவிருக்கிறது. அது இறால் மீன்கள் அதிகமுள்ள பகுதி. ஆகவே கட்டுமான பணிகள் நடக்கும் நேரத்தில் மீனவர்களுக்கான வாழ்வாதாரத்தை அரசு உறுதிசெய்ய வேண்டும்" என பிபிசியிடம் தெரிவித்தார் அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கத்தைச் சேர்ந்த மகேஷ். பொதுவாக, இதுபோன்ற திட்டங்களுக்கான கருத்துக் கேட்புக் கூட்டங்களில் மூன்றில் இரண்டு பங்கினர் அந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தால் அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது. மேலும் பதிவுசெய்யப்படும் ஒவ்வொரு எதிர்ப்பிற்குமான பதிலை, திட்டத்தை செயல்படுத்துவோர் தர வேண்டும். செவ்வாய்க்கிழமையன்று நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் சீமான் மட்டுமல்லாமல் குறிப்பிடத்தக்க அளவில் எதிர்ப்புக் கருத்துகள், ஆட்சேபணைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு அரசு மிக முனைப்பாக இருக்கிறது. https://www.bbc.com/tamil/articles/cxwxly7y70vo
-
By goshan_che · Posted
@satan@குமாரசாமி இப்போ நீங்கள் இலங்கையில் இருந்தால் யாருக்கு வாக்கு போடுவீர்கள்? உள்ளதில் ஓரளவு தமிழ் தேசிய கொள்கைகை முன் எடுப்போர் என நீங்கள் நினைக்கும், கஜேஸ், விக்கி அல்லது dTNA? சரிதானே? மக்களின் நிலையும் இப்படித்தான். தமிழ் தேசியத்தை சுமக்க ஒரு குதிரையும் இல்லை என்ற போது, அதை கழுதைகளை வைத்தாவது சுமக்ககலாமா என பார்கிறார்கள். தொடர்ந்து தமிழரசுக்கு போடுவோர் கூட ஏனைய கழுதைகளை விட அந்த கழுதைகள் பராவாயில்லை என நினைத்தே போடுவார்கள். நாளைக்கே ஒரு குதிரை வருமாயின் எல்லா கழுதைகளையும் துரத்திவிட்டு குதிரைக்கு போடுவார்கள். ஆனால் நோக்கு ஒன்றுதான் தமிழ் தேசியம் என்ற பொதியை சுமத்தல். குதிரை, கழுதைகளின் பெயர், நிறம், யாரோடு சினை பிடித்ததன என்பதெல்லாம் கருது பொருட்கள் அல்ல. இதுவரை இதுதான் எம் மக்களின் அரசியல் போக்கு. இனி மாறலாம். திரைபடம், சாதி, சமயம் என பலதில் இந்தியாவை கொப்பி அடிக்கும் மக்கள் - இனி அரசியலிலும் அதே பாணியை எடுக்கலாம்.
-
Recommended Posts