Jump to content

பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்


Recommended Posts

 • Replies 553
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

பொறுப்பு துறப்பு இந்த திரியில் பகிரப்படும் எந்த தகவலுமே நிதி ஆலோசனை (financial advice) அல்ல. இவை வெறும் கருத்துக்கள் மட்டுமே. உங்கள் முதலீட்டு முடிவுகளுக்கு நீங்களே 100% பொறுபானவர்கள். நோக்க

ஈழப்பிரியன்

நானும் கொஞ்ச காலமாக பங்குசந்தை வியாபாரத்தில் குதித்துள்ளேன். நேரமிருக்கும் போது விபரமாக எழுதுகிறேன். இதில் இறங்கினால் சிறிய வயது விளையாட்டொன்று நினைவுக்கு வரும். எல்லோருமே விளையபடியிருப்

சாமானியன்

வாழ்க்கையின் சகல அம்சங்களும் ஒரு பெருமெடுப்பு நோக்கில் சமநிலைப்படுத்தப்பட்டவையே . ஒரு குறுகிய வட்டத்தில் வெற்றி தோல்வி என்று அழைக்கப்படுவனனவெல்லாம் பின்னர் அப்பிடியே அடிபட்டுப்போய் விடுவதை கண்கூடாக பா

Posted Images

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, இணையவன் said:

1711 இல் வாங்கியுள்ளேன். Stop loss 1103. பார்க்கலாம்.

Stop loss 1103 இலக்கத்தினை தவறாக குறிப்பிட்டுவிட்டீர்கள் என கருதுகிறேன்.

கடந்த வார இறுதியில் தங்க விலை திரும்பல் (Reversal) அறிகுறி ஏற்பட்டுள்ளது (Signal).

download.jpg

தற்போது வர்த்தகத்தில் ஈடுபடுவது அதிக சாதகமானது, ஆனால் எந்த விலையில் வாங்குவது என்று பார்த்தால் 1700 Support உறுதி செய்யப்பட்டுள்ளமையால் அந்த விலையில் வாங்க தீர்மானித்துள்ளேன்.

பொதுவாக விலை மீள உறுதி செய்யும் போது (Re - Test) குறிப்பிட்ட விலையினை அடைவதில்லை, 1 அல்லது 2 புள்ளிகளுக்கு குறைவான விலையில் மீள உறுதி செய்துவிட்டு விலை உயர்ந்து விடும்.

GBPCAD market dynamics during a retest

கடந்த 3 அல்லது 4 வர்த்தகத்திலும் அவ்வாறே நிகழ்ந்தது, அதனாலேயே 1702 வாங்கத்திட்டமிட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Trading in the Zone - ATTITUDE SURVEY

1. To make money as a trader you have to know what the market is going to do next.
2. Sometimes I find myself thinking that there must be a way to trade without having to take a loss.
3. Making money as a trader is primarily a function of analysis.
4. Losses are an unavoidable component of trading.
5. My risk is always defined before I enter a trade.
6. In my mind there is always a cost associated with finding out what the market may do next.
7. I wouldn't even bother putting on the next trade if I wasn't sure that it was going to be a winner.
8. The more a trader learns about the markets and how they behave, the easier it will be for him to execute his trades.
9. My methodology tells me exactly under what market conditions to either enter or exit a trade.
10. Even when I have a clear signal to reverse my position, I find it extremely difficult to do.
11. I have sustained periods of consistent success usually followed by some fairly drastic draw-downs in my equity.
12. When I first started trading I would describe my trading methodology as haphazard, meaning some success in between a lot of pain.
13. I often find myself feeling that the markets are against me personally.
14. As much as I might try to "let go," I find it very difficult to put past emotional wounds behind me.
15. I have a money management philosophy that is founded in the principle of always taking some money out of the market when the market makes it available.
16. A trader's job is to identify patterns in the markets' behavior that represent an opportunity and then to determine the risk of finding out if these patterns will play themselves out as they have in the past.
17. Sometimes I just can't help feeling that I am a victim of the market.
18. When I trade I usually try to stay focused in one time frame.
19. Trading successfully requires a degree of mental flexibility far beyond the scope of most people. 
20. There are times when I can definitely feel the flow of the market; however, I often have difficulty acting on these feelings.
21. There are many times when I am in a profitable trade and I know the move is basically over, but I still won't take my profits.
22. No matter how much money I make in a trade, I am rarely ever satisfied and feel that I could have made more.
23. When I put on a trade, I feel I have a positive attitude. I anticipate all of the money I could make from the trade in a positive way.
24. The most important component in a trader's ability to accumulate money over time is having a belief in his own consistency.
25. If you were granted a wish to be able to instantaneously acquire one trading skill, what skill would you choose?
26. I often spend sleepless nights worrying about the market.
27. Do you ever feel compelled to make a trade because you are afraid that you might miss out?
28. Although it doesn't happen very often, I really like my trades to be perfect. When I make a perfect call it feels so good that it makes up for all of the times that I don't.
29. Do you ever find yourself planning trades you never execute, and executing trades you never  planned?
30. In a few sentences explain why most traders either don't make money or aren't able to keep what they make.


if we answer them honestly ,above questions probe our trading character  and teach what nobody ever can ............
 
மார்க் டக்லஸின் trading in the zone புத்தகத்தின் ஆரம்பத்தில் உள்ள கேள்விகள், இதற்கு பதிலழித்துவிட்டு புத்தகத்தினை வாசித்து முடித்துவிட்டு எமது பதில்களை மீளப்பார்க்கும்போது எமது சிந்தனைகள் 180 பாகையில் வேறுபட்டிருக்கும், அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

இந்த புத்தகத்தினை பலமுறை திரும்ப திரும்ப வாசித்துள்ளேன் ஒவ்வொரு தடவையும் புதிதாக ஒரு விடயத்தினை அறிவது போலிருக்கும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

முதலாவது வரைபடம் நாள் வரைபடம், இரண்டாவது வரைபடம் 1 மணித்தியால வரை படம், 

fractal market analysis 

Set of eight matryoshka nesting dolls

உதாரணமாக இரஸ்சியன் பொம்மையினை (தலையாட்டும் தஞ்சாவூர் பொம்மை மாதிரி) குறிப்பிடுவார்கள்.

குறுங்காலத்தில் நிகழ்வது போலவே நீண்ட கால அளவிலும் ஒரே மாதிரியான அமைப்பில் (Pattern) நிகழும்.

அதற்குக்காரணம் சந்தையில் பங்குபற்றும் மக்களின் மனநிலை ஒரே மாதிரியாக இருப்பதே காரணம் கூறப்படுகிறது, மற்றவர்களை சிந்திக்காமல் பிந்தொடர்வதே (Mass Psychology) இவ்வாறான அமைப்புகளை (Pattern) தோற்றூவிக்கிறது என கூறப்படுகிறது.

ஒரு முழுமையான சந்தை வட்டம் 8 அலைகளை கொண்டது.

Elliott Wave Theory

இதுதான் சந்தையின் செயற்பாடு, 8 அலைகள் கொண்ட முழுமையான வட்டம் (Full Cycle) மீண்டும் மீண்டும் திரும்ப திரும்ப நிகழ்வதாகக்கூறுகிறார்கள் இந்த செயற்பாட்டிற்குக்காரணம் மனிதர்களின் உளவியலே காரணம் என கூறப்படுகிறது.

கிழக்கு - மேற்கு, இனம், நிறம், மொழி, சாதி, மதம், வகுப்பு என மனிதர்களுள் எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் அடிப்படையில் மனிதர்கள் ஒரே மாதிரியாகவே சிந்திப்பார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

நாள் வரைபடத்தில் தங்க விலை இறங்குமுகமாக உள்ளது (Down trend)

தற்போது தங்கம் B Correction wave இல் உள்ளது (Daily chart),

C அலை (Hourly chart) 5 அலைகளை கொண்டது தற்போது 1 வது அலையில் உள்ளது 2 வது அலை விலை பின் வாங்கும் (Retrace).

அது Fib 0.382 - 0.786  வரை செல்லும் எனக்கூறுகிறார்கள் ஆனால் 1 வது அலையினை விட கீழிறங்காது என கூறப்படுகிறது (1688). தற்போது எனது தங்கம் வாங்கும் விலை 0.618 உள்ளது, எதிர்பார வெளியேற்ற விலை (Stop loss) 0.786 சற்று உயர்வாக உள்ளது (1697).

Stop loss 1688  சிறந்தது

Edited by vasee
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

1702 தங்க வர்த்தகம் எதிர்பாராவெளியேற்றம் மூலம் நட்டத்துடன் மூடப்பட்டது, அதன்பின் 1693 தங்கத்தினை வாங்கியிருந்தேன் எதிர்பாரா வெளியேற்ற விலை 1688 முன்னர் குறிப்பிட்ட விலையில், தற்போது இன்னுமொரு சிறிய தொகுதி வாங்கியுள்ளேன் 1701 விலையில் எதிர்பாரா வெளியேற்ற விலை 1688 .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நேற்று இறுதியாக 3வது தடவையாக தங்கத்தின் விலை குறைந்த போது 1704 இல் வாங்கியிருந்தேன், வாங்கிய விலியினை விட தங்க விலை உயர்ந்த போது அனைத்து தங்க வர்த்தகத்தின் எதிர்பாராஅ விலகல் விலையினை 1704 மேலாக இட்டிருந்தேன், வரைபடத்தில் காணப்படுகிறது.

1வது வாங்கல் விலை 1693
2வது வாங்கல் விலை 1700
3வது வாங்கல் விலை 1704

அனைத்து வர்த்தகங்களையும் 1719 இல் மூடிவிட்டேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தங்க வர்த்தகத்தினை மூடுவதற்கான காரணம் தற்போதய சந்தை நடவடிக்கை முன்னர் கூறிய திட்டமிடப்பட்ட சந்தை நடவடிக்கையிலிருந்து வேற்பட்டு செல்கிறது, திட்டமிடப்படாத வர்த்தகத்தினை தொடர விரும்பவில்லை அதனை விட ஏற்கனவே உள்ள 1:20 எனும் இலாபத்தினை இழக்க விரும்பவில்லை.

தற்போதய நிலையில் விலை தோடர்ந்து அதிகரிக்குமா? அல்லது குறையுமா? என்பது தெரியவில்லை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 

கச்சாய் எண்ணெய் விலை ஏன் அதிகரிக்கவுள்ளது எனதற்கான எலியட் அலை ஆய்வு, இதில் வரும் வாரத்திற்கான எனது குறுங்கால வர்த்தகம் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் எண்ணெய் விலை நீண்ட கால அடிப்படையில் அதிகரிக்கவுள்ளது ஏன் என்பதைக்குறிக்கும் காணொளி.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 12/9/2022 at 00:47, vasee said:

 

கச்சாய் எண்ணெய் விலை ஏன் அதிகரிக்கவுள்ளது எனதற்கான எலியட் அலை ஆய்வு, இதில் வரும் வாரத்திற்கான எனது குறுங்கால வர்த்தகம் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் எண்ணெய் விலை நீண்ட கால அடிப்படையில் அதிகரிக்கவுள்ளது ஏன் என்பதைக்குறிக்கும் காணொளி.

எண்ணெய் வர்த்தகம் நூலிழையில் தவறிவிட்டது, எதிர்பார்ப்பு விலையினை ஏற்கனவே அடைந்ததனால் வாங்குவதற்கான திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது விலை 84.528 குறுங்காலத்திற்கு இறங்க வாய்ப்புள்ளது அட்கு தொடர்பான மேலதிக விபரத்தினை பின்னர் பதிவு செய்கிறேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மேலே உள்ள வரைபடம் AUDJPY Ascending Triangle break out இந்த வடிவத்தினை சந்தை ஏற்படுத்துவதற்கான காரணம் விலையானது ஒரு விலை அளவில் தொடர்ந்து மேலே செல்ல முடியாமல் விலை வீழ்ச்சி அடையும் இடம் Resistance என அழைக்கப்படுகிறது.

விலை முதல் தடவை மேலாக செல்ல முயற்சித்து, அந்த முயற்சி தோல்வி அடைந்து விலை கீழிறங்கும் பின்னர் மறுமுறை முயற்சிக்கும், இவ்வாறு விலை முயற்சிக்கும் புள்ளிகளை இணைத்தால் ஒரு கிடையான கோட்டினை வரையலாம்.

கீழிறங்கும் விலை மேலும் கீழிறங்காமல் மேலேறும் விலை அளவினை Support என அழைக்கப்படுகிறது.

இந்த விலை வீழ்ச்சி அளவானது ஒவ்வொரு தடவையும் குறைந்து செல்லும், அந்த புள்ளிகளை இணைத்து கோடு வரைந்தால் சாய்வாக உயர்ந்து செல்லும்.

இந்த இரண்டு மஞ்சள் கோடுகளும் ஒரு அரை கூம்பகவடிவத்தினை உருவாக்கும் விலையானது இந்த கூம்பகத்திற்குள் அகலாமான பகுதியிலிருந்து ஒடுக்கமான பகுதிக்குள் நுழையும்போது விலையில் அதிகமான அளுத்தம் ஏற்படும் இந்த அளுத்தம் பொதுவாக  மேல்புறமாக வெடிப்பினை உருவாக்கும்.

விலை எதிர்பார்ப்பு விலை, கூம்பகத்தின் அகலமான அடிப்பகுதியின் உயரம் (பச்சை கிடைக்கோட்டினால் குறிப்பிடப்பட்டுள்ளது).

பொதுவாக இந்த வெடிப்பு நிகழும் போது அதிகளவான பங்குகள் வாங்கப்பட்டிருப்பது ஒரு சாதகமான அறிகுறி, ஆனால் நாணய வர்த்தகத்தில் அளவுகள் கைமாற்றம் தெரியாது என்பது ஒரு பாதகமான விடயம்.

இந்த வர்த்தகத்தினை விலையானது உடைப்புப்புள்ளியில் எவ்வாறு தொழில்படுகிறது என்பதற்கிணங்க வாங்க உள்ளேன்.

How to Use a Bullish Engulfing Candle to Trade Entries | Bybit Learn

 

மேலே உள்ள ஒளிப்பதிவில் உள்ள வரைபடம் நாளாந்த வரைபடம், மணித்தியால முதலாவது வரைபடத்தில்  குறிப்பிடப்பட்ட வடிவம் ஏற்பட்டால் வாங்க தீர்மானித்துள்ளேன்.

எதிர்பாரா வெளியேற்றம் கடல்நீலநிற புள்ளி கோட்டினால் காட்டப்பட்டுள்ளது

Edited by vasee
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலிய டொலரின் விலையில் தாக்கம் செலுத்தக்கூடிய இந்த மாதத்திற்கான  அவுஸ்ரேலிய வேலையின்மை விகித அறிவிப்பு இன்று சிட்னி நேரம் காலை 11:30 இல் வெளியாகவுள்ளது.

ஏற்கனவே அதிகரித்த பணவீக்கம் அதிகரித்திருந்த போதும் அசாதாரணமாக வேலையின்மை விகிதம் தொடர்ந்தும் வரலாற்று அளவில் குறைவாகவே காணப்பட்டது (3.4%, 3.5%).

பொதுவாக பணவீக்கம் அதிகரிக்கும் போது வேலையின்மையும் அதிகரிக்க வேண்டும் ஆனால் கடந்த இரண்டு மாதகாலமாக வேலையின்மை விகிதம் தொடர்ந்தும் குறைவாகவே உள்ளது, ஆனால் இந்த மாதம் வேலையின்மை விகிதம் 4% ஆக அதிகரிக்கலாம் எனும் கருத்து பரவலாக உள்ளது.

எதிர்பார்த்த வேலியின்மை விகித அதிகரிப்பு ஏற்படாவிட்டால் அவுஸ்ரேலிய நாணயத்தின் பெறுமதி அதிகரிக்கலாம்.

வேலையின்மை விகிதம் 4% விட அதிகமாக ஏற்பட்டால் அவுஸ்ரேலிய நாணயத்தின் பெறுமதி குறையலாம், இதனால் இந்த அறிவிப்பு ஒரு தாக்கதினை ஏற்படுத்தக்கூடிய அறிவிப்பாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, vasee said:

அவுஸ்ரேலிய டொலரின் விலையில் தாக்கம் செலுத்தக்கூடிய இந்த மாதத்திற்கான  அவுஸ்ரேலிய வேலையின்மை விகித அறிவிப்பு இன்று சிட்னி நேரம் காலை 11:30 இல் வெளியாகவுள்ளது.

ஏற்கனவே அதிகரித்த பணவீக்கம் அதிகரித்திருந்த போதும் அசாதாரணமாக வேலையின்மை விகிதம் தொடர்ந்தும் வரலாற்று அளவில் குறைவாகவே காணப்பட்டது (3.4%, 3.5%).

பொதுவாக பணவீக்கம் அதிகரிக்கும் போது வேலையின்மையும் அதிகரிக்க வேண்டும் ஆனால் கடந்த இரண்டு மாதகாலமாக வேலையின்மை விகிதம் தொடர்ந்தும் குறைவாகவே உள்ளது, ஆனால் இந்த மாதம் வேலையின்மை விகிதம் 4% ஆக அதிகரிக்கலாம் எனும் கருத்து பரவலாக உள்ளது.

எதிர்பார்த்த வேலியின்மை விகித அதிகரிப்பு ஏற்படாவிட்டால் அவுஸ்ரேலிய நாணயத்தின் பெறுமதி அதிகரிக்கலாம்.

வேலையின்மை விகிதம் 4% விட அதிகமாக ஏற்பட்டால் அவுஸ்ரேலிய நாணயத்தின் பெறுமதி குறையலாம், இதனால் இந்த அறிவிப்பு ஒரு தாக்கதினை ஏற்படுத்தக்கூடிய அறிவிப்பாக இருக்கலாம்.

இது இப்போ உலகளாவிய பிரச்சனையாக உள்ளது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

இது இப்போ உலகளாவிய பிரச்சனையாக உள்ளது.

இந்த மாதம் வேலையின்மை விகிதம் 3.5% ஆக வந்துள்ளது, கடந்த மாதம் 3.4%, அதற்கு முந்தய மாதம் 3.5% இருந்த நிலையில் இந்த மாதம் எதிர்பார்க்கப்பட்ட வேலையின்மை விகிதம் 3.4% விட 0.1% அதிகரித்துள்ளது.

நான் முன்பு கூறியது போல 4.0% ஆக அதிகரிக்கவில்லை, பொதுவாக பணவீக்க அதிகரிப்பிற்கேற்ப வேலையின்மை விகிதம் அதிகரிப்பது வழமை, காரனங்கள் தெரியவில்லை.

கடந்த 9 வருடங்கள் ஊதிய உயர்வு தடைப்பட்டிருந்த்தது, இந்த வருட நடுப்பகுதியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஊதிய உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால்தான் வேலையின்மை விகிதம் அதிகரிக்கவில்லை என கூற முடியாது, ஏனெனில் வருமான அதிகரிப்பு விகிதத்தினை விட பணவீக்க அதிகரிப்பு அதிகமாகவுள்ளது.

குடிவரவு, குடியகல்வு ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது வருமான அதிகரிப்புடன் தேறிய குடிவரவு எதிர்மறை இலக்கத்தில் இருக்கலாம்.

மாதாந்த வேலை மாற்றங்கள் (000)
மார்ச் 77.4
ஏப்ரல் 17.9
மே 4.0
ஜுன் 60.6
ஜுலை 88.4
ஒகஸ்ட் -40.9
செப்டெம்பர் 33.5

கடந்த மாதம் எதிர்பார்க்கப்பட்ட 25 பதிலாக எதிர்மறை -40.9 வேலையிழப்பு ஏற்பட்டது, இந்த மாதம் 33.5 ஆக கடந்த மாதத்தினை விட அதிகரித்துள்ளது அதாவது ஜுலை மாத வேலை அதிகரிப்பினை விட தற்போது வேலை அதிகரிப்பு ஏற்படவில்லை.

எதிர்வரும் மாதங்களில் இந்த வேலையின்மை விகிதம் அதிகரிப்பு ஏற்படலாம் என கருதுகிறேன்.

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vasee said:

இந்த மாதம் வேலையின்மை விகிதம் 3.5% ஆக வந்துள்ளது,

அமெரிக்காவிலும் 3.7 வீதமாக உள்ளது.

கொரோனா தொற்றுக்குப் பின் இன்னமும் பல வேலைகளுக்கு ஆட்கள் கேட்கிறார்கள்.ஆனாலும் வேலைக்கு போகிறார்கள் இல்லை.

அடிக்கடி திடீர்திடீரென விமானங்களை ரத்து செய்கிறார்கள்.கேட்டால் பைலட் இல்லை குரூ இல்லை என்று ஏதேதோ சொல்கிறார்கள்.

கொரோனா தொற்று காலங்களில் சும்மா இருக்கவிட்டு நிறைய பணம் கொடுத்தார்கள்.ஆனாலும் இப்போ நிற்பாட்டிவிட்டார்கள்.

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்காவிலும் 3.7 வீதமாக உள்ளது.

கொரோனா தொற்றுக்குப் பின் இன்னமும் பல வேலைகளுக்கு ஆட்கள் கேட்கிறார்கள்.ஆனாலும் வேலைக்கு போகிறார்கள் இல்லை.

அடிக்கடி திடீர்திடீரென விமானங்களை ரத்து செய்கிறார்கள்.கேட்டால் பைலட் இல்லை குரூ இல்லை என்று ஏதேதோ சொல்கிறார்கள்.

கொரோனா தொற்று காலங்களில் சும்மா இருக்கவிட்டு நிறைய பணம் கொடுத்தார்கள்.ஆனாலும் இப்போ நிற்பாட்டிவிட்டார்கள்.

சில நேரங்களில் கோட்பாடுகள் நடைமுறையில் நடப்பதில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்.

3 hours ago, இணையவன் said:

தங்கம் 1670 இல். 🙂 முதலிட்டுள்ளேன்.

தங்கத்தில் முன்பு கணித்தது போல B அலை எனில் இது ஒரு expanded flat.

ஆனால் B அலை 3 அலை வடிவம் கொண்டது, இது 5 அலை கொண்ட வடிவம் அதனால் இது Corrective wave இல்லை.

இது ஒரு 5th wave expansion (Impulsive wave expansion) ஆக இருக்க வாய்ப்புள்ளது, அவ்வாறாயின், தங்கத்தின் basic down trend தொடர வாய்ப்புள்ளது.

தங்கத்தின் போக்கினை சரியாக அடையாளப்படுத்த முடியவில்லை என்பதாலேயே தற்காலிகமாக தங்க முதலீட்டில் ஈடுபடுவதில்லை.

முன்பு திட்டமிட்ட AUDJPY வர்த்தகத்திலீடுபடுவதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்துள்ளேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

AUDJPY 95.500 இல் வாங்குவதுதான் உத்தேசமாக இருந்தது, தற்போது 96.260 சந்தை விலையில் ஒரு சிறிய அளவில் வாங்கியுள்ளேன்FOMO (Fear Of Missing Out), stop 95.840  இட்டுள்ளேன் 96.000 இல் ஒரு சிறிய support உள்ளது.

இந்த வர்த்தகம் சாதகமாக செல்லும் என கருதவில்லை, 95.500 பகுதியில் வாங்குவதை எதிர்பார்த்துள்ளேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வேலையின்மை விகிதம் குறைவாக இருப்பதற்கான காரணம் கீழே உள்ள செய்தி இணைப்பில் கூறப்பட்டுள்ளது போல வட்டி விகித அதிகரிப்பு, மக்களை வேலைகலை அதிகமாக நாட வேண்டிய தேவையினை உருவாக்கிவிட்டது.

https://www.smh.com.au/politics/federal/unemployment-rate-rises-for-first-time-in-10-months-20220915-p5bi6z.html

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

AUDJPY 95.500 இல் வாங்குவதுதான் உத்தேசமாக இருந்தது,

Is it Japanese Jen?

அமெரிக்க வீட்டுகடன் 2008 க்குப் பின் தற்போது 6 வீதமாக உயர்ந்துள்ளது.

இதனால் பலருக்கும் கடன் கொடுக்க மறுக்கிறார்கள்.

1998 இல் எமது வீடு வாங்கும் போது 6.87. இதையே பலரும் நல்ல வட்டிவீதமென்றார்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

Is it Japanese Jen?

அமெரிக்க வீட்டுகடன் 2008 க்குப் பின் தற்போது 6 வீதமாக உயர்ந்துள்ளது.

இதனால் பலருக்கும் கடன் கொடுக்க மறுக்கிறார்கள்.

1998 இல் எமது வீடு வாங்கும் போது 6.87. இதையே பலரும் நல்ல வட்டிவீதமென்றார்கள்.

Forex (Foreign exchange) இல் ஒரு நாட்டு நாணயத்தினை 3 எழுத்துக்க்களை கொண்டு குறிப்பார்கள், உதாரணமாக அவுஸ்ரேலிய டொலரினை AUD, ஜப்பான் நாட்டு நாணயத்தினை JPY. ஒரு நாணயத்தின் பெறுமதியினை இன்னொரு நாட்டு நாணயத்துடன் ஒப்பிட்டு கணிக்கப்படும் (Currency pair).

முன்னால் காணப்படும் 3 எழுத்து கொண்ட நாணயத்தினை அடிப்படை நாணயம் என அழைப்பார்கள் (Base currency).

உதாரணமாக நான் இப்போது AUDJPY இனை வாங்கினால், அவுஸ்ரேலிய நாணயத்தினை வாங்கி ஜப்பானிய நாணயத்தினை விற்பதாக அர்த்தம்.

ஏற்கனவே வாங்கியதாகக்குறிப்பிட்ட AUDJPY stop இனை அண்மித்த நிலையில் அந்த வர்த்தகத்தினை மூடி விட்டேன் 95.500 வாங்குவதற்கான வர்த்தகம் இடப்பட்டுள்ளது.

Stop 94.900, Take profit 104.000.

மத்திய வங்கியின் வட்டி விகிதம் (cash rate) என்பது வங்கிகளுக்கிடையேயான வட்டி விகிதமாகும்.

வங்கிகள் இந்த வட்டியில் காசினை கடனாகப்பெற்று பொதுமக்களுக்கு அதனை விட அதிகமான் வட்டிக்கு கடன் கொடுப்பார்கள்.

உதாரணமாக அவுஸ்ரேலிய cash rate 2.35%, ஆனால் வங்கியில் மக்களுக்கு 4% மேல் வட்டியுடன் வீட்டுக்கடன் கொடுக்கிறார்கள்.

பணவீக்கத்தினை கட்டுப்படுத்துவதற்காக வட்டி விகிதத்தினை அதிகரிக்கிறார்கள். பணவீக்கத்தில் 1.5 - 2.5 விகித பணவீக்கத்தினை ஆரோக்கியமான பணவீக்கம் எனக்கூறுகிறார்கள் தற்போது பல நாடுகளில் இரட்டை இலக்கத்தில் பணவீக்கம் உள்ளது.

பணசுருக்கமும் பொருளாதாரத்திற்கு பாதகமானது.

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

On 12/9/2022 at 19:38, vasee said:

எண்ணெய் வர்த்தகம் நூலிழையில் தவறிவிட்டது, எதிர்பார்ப்பு விலையினை ஏற்கனவே அடைந்ததனால் வாங்குவதற்கான திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது விலை 84.528 குறுங்காலத்திற்கு இறங்க வாய்ப்புள்ளது அட்கு தொடர்பான மேலதிக விபரத்தினை பின்னர் பதிவு செய்கிறேன்.

எண்ணை, எரிவாயு ஆகியவற்றின் வர்த்தகம் சுவாரசியமானது. கடந்த பல நாட்களாக அவதானித்து வருகிறேன். இன்னும் சில நாட்களுக்கு பொறுத்திருக்க வேண்டும். ஏனென்றால் இவை இரண்டும் தற்போது விலை வீழ்ச்சியில் உள்ளன. நேற்று ஒன்றுசேர்ந்த பல்வேறு காரணிகளால் எரிவாயுவின் விலை 6 வீதம் குறைந்தது. இது மிகப் பெரிய வீழ்ச்சி. அதோடு சேர்ந்து எண்ணையும் விலை குறைந்தது. இன்னும் விலை குறையும் என்கிறார்கள்.

Link to comment
Share on other sites

8 hours ago, vasee said:

ஏற்கனவே வாங்கியதாகக்குறிப்பிட்ட AUDJPY stop இனை அண்மித்த நிலையில் அந்த வர்த்தகத்தினை மூடி விட்டேன் 95.500 வாங்குவதற்கான வர்த்தகம் இடப்பட்டுள்ளது.

 

EURUSD இல் முதலிட்டிருந்தேன். ஈரோ டொலரை விட விலை குறைந்திருந்து ஏறத் தொடங்கியபோது வாங்கியது. நேற்று திடீர் வீழ்ச்சியில் Stop loss ஆகியது. அதன் முன் palladium போன்றவற்றில் ஏற்பட்ட நடடங்களினால் கையிருப்பு 70 டொலர்களாகியது. அதனை நேற்று தங்கத்தில் முதலிட்டேன். விலை இன்னும் குறைந்து கொண்டே செல்கிறது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

Is it Japanese Jen?

அமெரிக்க வீட்டுகடன் 2008 க்குப் பின் தற்போது 6 வீதமாக உயர்ந்துள்ளது.

இதனால் பலருக்கும் கடன் கொடுக்க மறுக்கிறார்கள்.

1998 இல் எமது வீடு வாங்கும் போது 6.87. இதையே பலரும் நல்ல வட்டிவீதமென்றார்கள்.

வரும் காலத்தில் வீட்டு விலை குறையும் என்கிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

Link to comment
Share on other sites


 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.