Jump to content

சார்க் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு இரத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சார்க் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு இரத்து

நியூயோர்க்கில் நடைபெறவிருந்த சார்க் (தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு) வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு இரத்து செய்யப்பட்டுள்ளது.

தெற்காசிய நாடுகளான இந்தியா, நேபாளம், பூடான், பங்களாதேஷம், பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள சார்க் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் 25 ஆம் திகதி  தேதி நியூயார்க் நகரில் நடைபெற இருந்தது. 

India's Cooperation With SAARC During COVID-19 | Diplomatist

இந்த மாநாட்டிற்கு, நேபாளம் தலைமை ஏற்க இருந்த நிலையில், தலிபான் பிரதிநிதிகளையும், இந்த மாநாட்டில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியதாக தகவல் வெளியானது.

தலிபான்களால் ஆளப்படும் போரால் பாதிக்கப்பட்ட நாடான ஆப்கானிஸ்தானின் பங்கேற்பு குறித்து உறுப்பு நாடுகளின் ஒருமித்த ஒப்புதல் இல்லாததால் சார்க் மாநாடு இரத்து செய்யப்பட்டுள்ளது என்று அமைப்பின் பல இராஜதந்திர வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

குறிப்பாக இது தொடர்பில் ஒரு அறிக்கையை வெளியிட்ட நேபாள வெளியுறவு அமைச்சகம், அனைத்து உறுப்பு நாடுகளின் ஒப்புதல் இல்லாததால் சந்திப்பு இரத்து செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டியது.

 

https://www.virakesari.lk/article/113794

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.