Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

அமெரிக்காவிலுள்ள ஐ.நா. தலைமையகத்துக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவிலுள்ள ஐ.நா. தலைமையகத்துக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள்

(நா.தனுஜா)

உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களுக்கு நீதிகோரி, நேற்று  நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் அமெரிக்கவாழ் இலங்கைப்பிரஜைகளால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

242708359_4311125169007874_8069163546702

ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச்சபைக்கூட்டம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் தலைநகர் நியூயோர்க்கில் கடந்த செவ்வாய்கிழமை ஆரம்பமான நிலையில், பொதுச்சபை அமர்வின் இரண்டாம் நாளான நேற்று  புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உலகத்தலைவர்கள் முன்நிலையில் உரையாற்றினார்.

242822943_593757328449928_66658312647184

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களின் சூத்திரதாரி யார் எனக் கண்டறியப்பட்டு தண்டனை வழங்கப்படவேண்டும் என்றும் நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்றும் வலியுறுத்தி ஜனாதிபதி உரையாற்றிய அதே தினத்தில் ஐ.நா தலைமை அலுவலகத்திற்கு முன்னால் ஒன்றுகூடிய அமெரிக்காவில் வாழும் இலங்கைப் பிரஜைகள், பல்வேறு கோஷங்களையும் எழுப்பியவண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

242733313_581037486354053_90420624438097

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்கள் தொடர்பான சதித்திட்டத்தை வகுத்தது யார்?, ஹு இஸ் மாஸ்ட்டர் மைன்ட்? (தாக்குதல்களின் சூத்திரதாரி யார்?), உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணை அறிக்கையைப் பகிரங்கப்படுத்துங்கள், சூத்திரதாரிகள் வெளியே இருக்கின்றார்கள்: இலங்கை ஆபத்தில் இருக்கின்றது, நீதியை நிலைநாட்டுங்கள்' என்பன உள்ளடங்கலாக நீதியை வலியுறுத்தும் வகையிலான பல்வேறு கோஷங்களையும் எழுப்பினார்கள்.

242755045_3041033429475291_7464904346108

அதுமாத்திரமன்றி 'சட்டமாதிபரால் கூறப்பட்ட சூழ்ச்சி என்ன?, நீதிக்காக இலங்கை காத்திருக்கின்றது, அப்பாவிகளைக்கொன்று நீங்கள் வெற்றியடைந்துவிட்டீர்களா?, உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிவேண்டும், உண்மையை வெளிப்படுத்த வேண்டியது உங்களுக்குரிய கடப்பாடாகும்' என்ற வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் அவர்கள் தாங்கியிருந்தனர்.

242847327_1036980893727363_2930112193625

உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்கள் இடம்பெற்று சுமார் இரண்டரை வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், இன்னமும் அதன் சூத்திரதாரிகள் தண்டிக்கப்படாமை சர்வதேச சமூகம் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அதிருப்தியைத் தோற்றுவித்திருக்கின்றது.

242822943_593757328449928_66658312647184

அண்மையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாத்தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் நீதியை நிலைநாட்டுமாறும்கோரி கடந்த 11 ஆம் திகதி இத்தாலிவாழ் இலங்கையர்கள் போலொக்னா நகரில் ஆர்ப்பட்டமொன்றை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

242869202_667034667589696_35558455868543
 

 

https://www.virakesari.lk/article/113884

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இலங்கைப்பிரஜைகளால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

கருதினால் தூண்டி விட்டிருப்பாரோ இவர்களை? பெரும்பாலும் வெளிநாட்டில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களில் இலங்கை பிரஜைகள் என்று சிங்களவரைதான் குறிப்பிடுகிறவர்கள். அது தமிழரின் ஆர்பாட்டங்களை குழப்புகிறவர்களாக இருக்கலாம், தமிழருக்கு எதிரான கோஷங்களை எழுப்புகிறவர்களாக கூட இருக்கலாம்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா தேசிய கொடிகளை கையில் பிடித்தபடி இனப் பிரச்சினை பற்றிய கோஷங்களுடன் எந்த பதாதைகளையும் ஏந்தாமல் ஆர்பாட்டம் செய்பவர்கள் வேறு யாராயிருக்கும். இதுபோன்ற நடவடிக்கைகள் தமிழர்கள் இனப்பிரச்சினை பற்றிய கோஷங்களுடன் அணிதிரளாமல் தடுப்பதற்கும் முக்கிய வேறு பிரச்சனைகளிலிருந்து  கவனத்தை திசை திருப்பவும் கோத்தா அரசின் எடுபிடிகாளால் நிகழ்த்தப்படும்  ஒரு திட்டமிட்ட ஏற்பாடு.

எங்கள் பக்கம் இருந்து எவரும் ஆர்ப்பாட்டம் செய்யவில்லைபோல் தெரிகிறது.

Edited by vanangaamudi
 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : புலஸ்தினி, ஜெமீல் தொடர்பான மர்மங்கள் கலையப்படாமை ஏன் ? - நியூயோர்க் ஆர்ப்பாட்டத்தில் கேள்வி

(எம்.எப்.எம்.பஸீர்)

 

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் குற்றவாளிகளாக நிறுத்தப்பட வேண்டியவர்கள் அரச சாட்சியாளர்களாக நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்த முயற்சிகள் இடம்பெறுவதாக அமெரிக்காவில் வசிக்கும் ஊடகவியலாளர் போத்தல ஜயந்த  தெரிவித்தார்.

அவ்வாறு குற்றவாளிகளாக நிறுத்தப்பட வேண்டியவர்களை நீதிமன்றங்கள் முன் சாட்சியாளர்களாக நிறுத்தும் பட்சத்தில், நீதிமன்றங்களால் எவ்வாறு நியாயம் வழங்க முடியும் என கேள்வி எழுப்பிய அவர்,  உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் இலங்கையின் விசாரணைகள் எந்தவகையிலும் திருப்தியடையும் வண்ணம் இல்லை என சுட்டிக்காட்டினார்.

உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களுக்கு நீதிகோரி, நேற்று (22) நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் அமெரிக்கவாழ் இலங்கைப்பிரஜைகளால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச்சபைக்கூட்டம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் தலைநகர் நியூயோர்க்கில் கடந்த செவ்வாய்கிழமை ஆரம்பமான நிலையில், பொதுச்சபை அமர்வின் இரண்டாம் நாளான நேற்று முன்தினம் புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உலகத்தலைவர்கள் முன்நிலையில் உரையாற்றினார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களின் சூத்திரதாரி யார் எனக் கண்டறியப்பட்டு தண்டனை வழங்கப்படவேண்டும் என்றும் நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்றும் வலியுறுத்தி ஜனாதிபதி உரையாற்றிய அதே தினத்தில் ஐ.நா தலைமை அலுவலகத்திற்கு முன்னால் ஒன்றுகூடிய அமெரிக்காவில் வாழும் இலங்கைப் பிரஜைகள், பல்வேறு கோஷங்களையும் எழுப்பியவண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே போத்தல ஜயந்த மேற்படி விடயங்களை வெளிப்படுத்தினார்.

கடந்த 2009 ஆண்டு ஜூன் மாதம் வெள்ளை வேனில் கடத்தப்பட்டு, கை கால்கள் முறிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட நிலையில் போத்தல ஜயந்த குற்றுயிராய் மீட்கப்பட்ட பின்னர், உயிர் பாதுகப்பு கருதி அவர் அமெரிக்கா சென்று தற்போதும் அங்கு  வசித்து வருகின்றார். குறித்த சம்பவம் தொடர்பில் 12 ஆண்டுகளாகியும் எவரும் கைது செய்யப்படாத நிலையில், உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களுக்கு நியாயம் கோரி நியூயோர்க்கில் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அவர் பங்கேற்று உரையாற்றினார்.

 இதன்போது அவர் தெரிவித்ததாவது,

' அரச  அதிகாரி ஒருவர்,   தனது கடமைகளுடன் தொடர்புடைய தகவல்கள் அனைத்தையும் தனது தொலைபேசி மற்றும் மடிக் கணினியிலிருந்து அழித்துள்ளார்.  அவ்வாறு அழிக்கப்பட்ட தகவல்கள், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுடன் தொடர்புடைய விசாரணைகளுடன் தொடர்புடையது. இவ்வாறு தகவல்களை அவர் அழித்ததாக ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவுக்கு அரச இரசாயன பகுப்பாய்வாளரே தெரிவித்துள்ளார்.

அவ்வாறு எனில் உளவுத் தகவல்கள் குறித்த, மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட முக்கியமான தகவல்களை அழித்த அந்த அரச அதிகாரியை நாம் சந்தேகிப்பது  தவறா? அவரது நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பக் கூடாதா?

இந்த தாக்குதல்களில் அனைத்து விடயங்களையும் அறிந்தவர் என நம்பப்படும்  ஒருவரே கட்டுவாபிட்டிய குண்டுதாரியின் மனைவி புலஸ்தினி ராஜேந்ரன். அவர் உயுருடன் இருப்பதாகவும், இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் உள்ளன. அப்படியானால் அவரை மீள இலங்கையிடம் ஒப்படைக்க எந்த கோரிக்கைகளையும் இலங்கை இதுவரை இந்தியாவிடம் விடுக்கவில்லை. அப்படியானால் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை குறித்து நாம் கேள்வி எழுப்பக் கூடாதா/ அவ்வாரு கேள்வி எழுப்புவது தவறா?

அதே போல் இந்த தொடர் குண்டுத் தாக்குதல்களில், ஜெமீல் என்பவர் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் குண்டை வெடிக்கச் செய்யாது, அங்கிருந்து தெஹிவளைக்கு சென்று ட்ரொபிகல் இன் எனும் தங்கு விடுதியில் குண்டை வெடிக்கச் செய்துள்ளார். தாஜ் சமுத்ராவிலிருந்து வெளியேரும் போது, ஜெமீலின் வீட்டுக்கு இராணுவ புலனாய்வாளர்கள் சென்று அவர் குறித்து தேடலாயினர். அப்படியானால் ஜெமீலுக்கும் இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கும் இருந்த தொடர்பு அல்லது உறவு என்ன? அது குறித்து கேள்வி எழுப்ப எம்மால் முடியாதா? அவ்வாறு கேள்வி எழுப்பக் கூடாதா?

இவ்வாறு கேள்வி எழுப்புபவர்கள், சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்டு விசாரிக்கபப்டுகின்றனர்.

அதுவல்ல நாம் கோருவது. இவ்வாறான மர்மங்களை கலைக்கும் விதமான விசாரணைகள் தேவை.

இலங்கையில் தற்போது இந்த விவகாரத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் தொடர்பில் எந்த வகையிலும் திருப்தியடைய முடியாது.

தனது தொலைபேசியிலிருந்த தகவல்களை அழித்த நிலந்த ஜயவர்தனவை அரச சாட்சியாக  மன்றில் ஆஜர் செய்ய முயற்சிகள் இடம்பெறுகின்றன.  அதே போன்று அரச உளவுச் சேவையின் பிரதானியாக அவர் இருந்த போது தாக்குதல் குறித்த தகவல்களை  பொலிஸ் திணைக்களத்தின் மேலும் சிலருடனும் பகிர்ந்துள்ளார். அவ்வாறு தகவல்களைப் பெற்று நடவடிக்கை எடுக்காமல் இருந்தமை தொடர்பில் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட  3 சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் இரு பொலிஸ் அத்தியட்சர்களுக்கு எதிராக குற்றவியல்  விசாரணைகளை முன்னெடுக்க பரிந்துரைகளை ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன் வைத்துள்ளது. எனினும் தற்போது அவர்களையும் அரச சாட்சியாளர்களாகவே மன்றில் ஆஜர் செய்ய முயற்சிகள் இடம்பெறுவதாக அறிய முடிகின்றது.

அப்படியானால் குற்றவாளிகள் அரச சாட்சியாளர்களாக நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டால் நீதிமன்றங்களால் என்ன செய்ய முடியும். நாம் நீதிமன்றங்களில் நியாயத்தை கோருகின்றோம். எனினும்  குற்றவாளிகள் நீதிமன்றங்கள் முன் ஆஜர் செய்யப்படாமல் சாட்சியாளர்களாக மாற்றப்பட்டால் நீதிமன்றங்கள் என்ன  செய்ய முடியும்? ' என ஊடகவியலாளர் போத்தல ஜயந்த கேள்வி எழுப்பினார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : புலஸ்தினி, ஜெமீல் தொடர்பான மர்மங்கள் கலையப்படாமை ஏன் ? - நியூயோர்க் ஆர்ப்பாட்டத்தில் கேள்வி | Virakesari.lk

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

கருதினால் தூண்டி விட்டிருப்பாரோ இவர்களை? 

 

7 hours ago, vanangaamudi said:

கோத்தா அரசின் எடுபிடிகாளால் நிகழ்த்தப்படும்  ஒரு திட்டமிட்ட ஏற்பாடு.

எங்கள் பக்கம் இருந்து எவரும் ஆர்ப்பாட்டம் செய்யவில்லைபோல் தெரிகிறது.

உங்கள் பக்கம்?? 😃 நீங்களே இல்லாமல் எப்படி உங்கள் பக்கம் அங்கே நிற்கும்? உங்களுக்கு பக்கமே இல்லை. 🙃

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, vanangaamudi said:

ஸ்ரீலங்கா தேசிய கொடிகளை கையில் பிடித்தபடி இனப் பிரச்சினை பற்றிய கோஷங்களுடன் எந்த பதாதைகளையும் ஏந்தாமல் ஆர்பாட்டம் செய்பவர்கள் வேறு யாராயிருக்கும். இதுபோன்ற நடவடிக்கைகள் தமிழர்கள் இனப்பிரச்சினை பற்றிய கோஷங்களுடன் அணிதிரளாமல் தடுப்பதற்கும் முக்கிய வேறு பிரச்சனைகளிலிருந்து  கவனத்தை திசை திருப்பவும் கோத்தா அரசின் எடுபிடிகாளால் நிகழ்த்தப்படும்  ஒரு திட்டமிட்ட ஏற்பாடு.

எங்கள் பக்கம் இருந்து எவரும் ஆர்ப்பாட்டம் செய்யவில்லைபோல் தெரிகிறது.


பதாதைகளை எல்லாம் உயிர்த்த ஞாயிறு கொலைகளை அரசாங்கத்தோடு இணைவு படுத்தியே எழுதியிருக்கிறார்கள்  

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

 

உங்கள் பக்கம்?? 😃 நீங்களே இல்லாமல் எப்படி உங்கள் பக்கம் அங்கே நிற்கும்? உங்களுக்கு பக்கமே இல்லை. 🙃

எங்கை உங்கடை பக்கத்தை ஒருக்கால் காட்டுங்கோ பாப்பம்? 😎

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, குமாரசாமி said:

எங்கை உங்கடை பக்கத்தை ஒருக்கால் காட்டுங்கோ பாப்பம்? 😎

அதுதான் தெளிவாச் சொல்லிப்போட்டாரே அண்ணை, "மதவாச்சியில ஏறின சிங்களவன் " எண்டு?

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கற்பகதரு said:

 

உங்கள் பக்கம்?? 😃 நீங்களே இல்லாமல் எப்படி உங்கள் பக்கம் அங்கே நிற்கும்? உங்களுக்கு பக்கமே இல்லை. 🙃

 

3 hours ago, குமாரசாமி said:

எங்கை உங்கடை பக்கத்தை ஒருக்கால் காட்டுங்கோ பாப்பம்? 😎

 

2 hours ago, ரஞ்சித் said:

அதுதான் தெளிவாச் சொல்லிப்போட்டாரே அண்ணை, "மதவாச்சியில ஏறின சிங்களவன் " எண்டு?

நன்றி - சிலருக்கு எப்பிடி சொன்னாலும் விளங்காது, என்ன சிங்களத்திலேயா எழுதியிருக்கிறேன், சுத்தமான தமிழில் தானே எழுதியிருக்கிறேன்?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, vanangaamudi said:

இதுபோன்ற நடவடிக்கைகள் தமிழர்கள் இனப்பிரச்சினை பற்றிய கோஷங்களுடன் அணிதிரளாமல் தடுப்பதற்கும் முக்கிய வேறு பிரச்சனைகளிலிருந்து  கவனத்தை திசை திருப்பவும் கோத்தா அரசின் எடுபிடிகாளால் நிகழ்த்தப்படும்  ஒரு திட்டமிட்ட ஏற்பாடு.

உண்மை. போர்க்குற்றவாளி! இனஅழிப்பாளன்! எனும்கோஷங்களை தடுப்பதற்கு இதை உபயோகித்திருக்கலாம் தான். இல்லை அது முஸ்லீம்கள் செய்தது என்று இதிலிருந்து  தப்பித்துக்கொள்ளலாம்,  உலக நாடுகளும் நம்புந்தானே. முஸ்லீம்களை  கொம்பு சீவி தமிழரை அழித்து சலித்து இப்போ சச்சியரை கொம்பு சீவுகினம், அவரும் மகுடிக்கு ஆடும் நாகமாகி குதிக்கிறார்.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.