Jump to content

சடலமாக மீட்கப்பட்ட இலங்கையை பூர்விகமாகக் கொண்ட பெண்!

Recommended Posts

பிரித்தானியா கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையை பூர்விகமாகக் கொண்ட பெண்! நடந்தது என்ன? வெளியான முழு தகவல்

பிரித்தானியாவில் கடலோர காவல்படையால் கண்டுபிடிக்கப்ப இளம் பெண் மருத்துவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவின் இங்கிலாந்தில் இருக்கும் Margate கடற்கரையில் கடந்த 11-ஆம் திகதி பெண் ஒருவரின் சடலம் கடலோர காவல்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது உயிரிழந்த அந்த பெண் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதில் அவர் பெயர் Thirushika Sathialingam என்பதும் 26 வயது மதிக்கத்தக்க இவர் சம்பவ தினத்தன்று தன் பெண் தோழிகளுடன் குறித்த கடற்கரைக்கு சென்றுள்ளார். ஹோட்டலுக்கு தோழிகள் திரும்பிய நிலையில், அவர் காணவில்லை. 

அதன் பின் அவரை தேடிய போதே, அவர் இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உயிரிழந்த Thirushika Sathialingam இலங்கையில் பிறந்தவர். கடந்த 2011-ஆம் ஆண்டு பிரித்தானியாவின் Kent-க்கு வருவதற்கு முன்பு, தன்னுடைய குழந்தை பருவத்தின் பெரும் பகுதியை Ilford-ல் கழித்துள்ளார்.

Sandwich-ல் இருக்கும் Sir Roger Manwood’s பள்ளியில் படித்த இவர், அதன் பின் Latvia-வில் இருக்கும் Riga Stradins University-யில் மருத்துவம் பயின்றார். இதையடுத்து அவர் Queen Elizabeth The Queen Mother மருத்துமனையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இவருடைய தந்தை சத்தியலிங்கம் Queen Elizabeth The Queen Mother மருத்துவமனையில் நிபுரணாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில், அவர் தன்னுடைய மகள் மரணம் குறித்து மிகவும் வேதனையுடன் கூறியுள்ளார்.

அதில், ஒவ்வொரு பெற்றோரு தங்கள் குழந்தை சிறந்த குழந்தை என்று நினைக்கிறோம். அதே போன்று தான் என் மகள் உண்மையிலே இருந்தாள். எனக்கு அவள் நிறைய அறிவுரைகளை வழங்கினாள். புத்திசாலி, திறமையானவள், கொரோனா நேரத்தில், மக்களையே கவனித்து வந்தாள்.

குறிப்பாக கொரோனாவின் இரண்டாவது அலையின் போது, அவள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் சுவாச வார்டில் இருந்தாள். அங்கு அவர்களுடன் உட்கார்ந்து பேசுவாள், அவர்களுக்கு ஆறுதலாக கைகளை பிடித்துக் கொள்வாள்.

அவள் வேலையில் ஆர்வமாக இருந்தாள் என்று குறிப்பிட்டார். Thirushika Sathialingam மருத்துவ படிப்பில் இருந்த போது, Peter Speilbichler என்பவரை காதலித்துள்ளார். இவர்கள் ஒன்றாக ஆறு ஆண்டுகள் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

அவர் கூறுகையில், அவள் எப்போதும் கனிவாகவும், புன்னகையுடனுமே இருப்பாள். எவ்வளவு கோபமாக இருந்தாலும், நான் அவளிடம் இருந்து எந்த ஒரு கேட்ட வார்த்தை கூட கேட்டதில்லை. நாங்கள் இருவரும் அந்தளவிற்கு நேசித்தோம் என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

மேலும், Thirushika Sathialingam-ன் சகோதரர் Queen Elizabeth The Queen Mother மருத்துவமனையில் ஜுனியர் மருத்துவராக உள்ளார். அவர், தன் சகோதரியை, ஒரு அற்புதமான மருத்துவர், நாங்கள் இருவரும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருந்ததாக கூறியுள்ளார்.

Thirushika Sathialingam-வின் இறுதிச்சடங்கு நேற்று Margate Crematorium-வில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

21-614c741584206.webp

https://news.lankasri.com/

Link to comment
Share on other sites

ஒரு நல்ல மருத்துவரை உலகம் இழந்து விட்டது. கடலில் நீந்த சென்று உயிரிழப்பது எம் சமூகத்தில் அடிக்கடி நிகழும் ஒரு துயர சம்பவமாக தொடர்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளம் மருத்துவர். அநியாய மரணம். ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

கொரோனா நேரத்தில், மக்களையே கவனித்து வந்தாள்.

குறிப்பாக கொரோனாவின் இரண்டாவது அலையின் போது, அவள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் சுவாச வார்டில் இருந்தாள். அங்கு அவர்களுடன் உட்கார்ந்து பேசுவாள், அவர்களுக்கு ஆறுதலாக கைகளை பிடித்துக் கொள்வாள்.

அவள் எப்போதும் கனிவாகவும், புன்னகையுடனுமே இருப்பாள். எவ்வளவு கோபமாக இருந்தாலும், நான் அவளிடம் இருந்து எந்த ஒரு கேட்ட வார்த்தை கூட கேட்டதில்லை.

இவரது மறைவு குடும்பத்தார்களுக்கு மட்டுமான இழப்பு இல்லை 😟

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாட்டைச் சூழ… கடல் இருந்தாலும், ஒவ்வொரு பகுதியிலும்.. அந்தக் கடலின் தன்மை வேறுபட்டிருக்கும்.

அதனை நன்கு அறியாமல்… அதிக தூரத்துக்கு நீந்திச் செல்வது மிக ஆபத்தானது.

சில கடல்கள்… மிக அமைதியாக, ஆழம் குறைந்தது போலிருக்கும். ஆனால் திடீரென்று அடியில் மண்ணை சுழட்டி வறுகி எடுத்து, அந்த இடத்தை ஆழமாக்கி விடும். அப்போது நீச்சல் தெரியாமல், இடுப்பளவு நீரில் குளித்துக் கொண்டு இருப்பவர்களின் நிலைமை ஆபத்து ஆகி விடும்.

தயவு செய்து… கடலில் குளிக்க இறங்க முதல், உள்ளூர் வாசிகள் பலரிடம் அந்தக் கடலின் தன்மையைப் பற்றி கேட்டு அறிந்து விட்டு இறங்குங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

படித்து டாக்டர் பட்டம் பெற்ற ஒருவராலேயே இதை அறிந்து நடந்து கொள்ள முடியாதபோது சாதாரண மக்களின் நிலை??

ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

என்னதான் கவனமாக இருந்தாலும் எம்மை மீறி சிலவேளை விபத்துக்களில் சிக்கிவிடுகிறோம். இந்த இளம் வைத்தியரின் மரணம் துரதிஷர்வசமானது. அவரின் பிரிவால் துயருறும் அவரது உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். 🕯🪔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் பிரிவால் துயருறும்  உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

14 hours ago, தமிழ் சிறி said:

தயவு செய்து… கடலில் குளிக்க இறங்க முதல், உள்ளூர் வாசிகள் பலரிடம் அந்தக் கடலின் தன்மையைப் பற்றி கேட்டு அறிந்து விட்டு இறங்குங்கள்.

இங்கு ஒன்ராரியோவில் குளிக்க அனுமதிக்கப்பட்ட கடற்கரைகளில் (ஏரிக்கரைகள் என்றும் சொல்லலாம்), ஒரு நீள மஞ்சள் அல்லது ஒரேஞ் நிற கயிறு போல் ஒன்றை கரையில் இருந்து சில நூறு மீற்றர்கள் தூரத்தில் கட்டியிருப்பார்கள். அதை மீறிச் சென்றால் ஆபத்து என்பதை காட்டுவதற்காகவே அவ்வாறு கட்டியிருப்பார்கள். பொதுவாக சனம் எவ்வளவுதான் நீச்சல் தெரிந்தாலும் அதை மீறிச் செல்ல மாட்டார்கள். 

பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறு உள்ளதா?

இங்கு படகில் ஆழமாகச் சென்று அது கவிழ்ந்து இறப்பவர்கள் அதிகம். இவர்கள் பொதுவாக உயிர்காக்கும் அங்கிகளை அணிந்து இருக்க மாட்டார்கள். நீச்சல் தெரிந்தாலும் ஆழமான பகுதிகளில் இருக்கும் சில்லென்ற குளிரில் அதிக தூரம் நீந்தமுடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடையட்டும் ....எல்லாரும் சேர்ந்து பீச்சுக்கு போட்டு இவவை விட்டுட்டு மற்றவர்கள் திரும்ப வந்து இருக்கிறார்கள் ...நண்பர்களாம் 😲
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

இங்கு ஒன்ராரியோவில் குளிக்க அனுமதிக்கப்பட்ட கடற்கரைகளில் (ஏரிக்கரைகள் என்றும் சொல்லலாம்), ஒரு நீள மஞ்சள் அல்லது ஒரேஞ் நிற கயிறு போல் ஒன்றை கரையில் இருந்து சில நூறு மீற்றர்கள் தூரத்தில் கட்டியிருப்பார்கள். அதை மீறிச் சென்றால் ஆபத்து என்பதை காட்டுவதற்காகவே அவ்வாறு கட்டியிருப்பார்கள். பொதுவாக சனம் எவ்வளவுதான் நீச்சல் தெரிந்தாலும் அதை மீறிச் செல்ல மாட்டார்கள். 

பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறு உள்ளதா?

இங்கு படகில் ஆழமாகச் சென்று அது கவிழ்ந்து இறப்பவர்கள் அதிகம். இவர்கள் பொதுவாக உயிர்காக்கும் அங்கிகளை அணிந்து இருக்க மாட்டார்கள். நீச்சல் தெரிந்தாலும் ஆழமான பகுதிகளில் இருக்கும் சில்லென்ற குளிரில் அதிக தூரம் நீந்தமுடியாது. 

Vintage Retro Bild Der Hölzernen Rettungsschwimmer-Turm, Strand In  Kalifornien, USA. Lizenzfreie Fotos, Bilder Und Stock Fotografie. Image  31204229.

ஐரோப்பாவில் உள்ள  கடற்கரைகளில்... 
சிவப்பு, எச்சரிக்கை  கயிறு கட்டியிருப்பதை இதுவரை காணவில்லை.  

படத்தில் உள்ளதை போன்று... துருக்கி, துனிசியா போன்ற இடங்களில்,
உயரமான மேடையில் இருந்து பார்ப்பார்கள்.
ஆனால்... அந்த நடைமுறையும், குறிப்பிட்ட சில கடல்களில் மட்டுமே இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறு உள்ளதா?

Lifeguards இருக்கும் கடற்கரைகளில் உள்ளது. மிதப்பான்களை கயிறுடன் இணைத்து செவ்வக வடிவில் அடையாள படுத்தி இருப்பார்கள். அல்லது தனி மிதப்பான்களை/கொடிகளை வைத்தும் செய்வார்கள். 

ஆனால் சீசன் காலத்தில் அதுவும் குளிக்க ஏற்ற கடற்கரைகளில், அதிலும் ஒரு குறித்த பகுதியை மட்டும் இப்படி செய்வார்கள். 

ஆனால் ரிப் கரண்ட் எங்கும் இழுக்கலாம்.

20 minutes ago, தமிழ் சிறி said:

Vintage Retro Bild Der Hölzernen Rettungsschwimmer-Turm, Strand In  Kalifornien, USA. Lizenzfreie Fotos, Bilder Und Stock Fotografie. Image  31204229.

ஐரோப்பாவில் உள்ள  கடற்கரைகளில்... 
சிவப்பு, எச்சரிக்கை  கயிறு கட்டியிருப்பதை இதுவரை காணவில்லை.  

படத்தில் உள்ளதை போன்று... துருக்கி, துனிசியா போன்ற இடங்களில்,
உயரமான மேடையில் இருந்து பார்ப்பார்கள்.
ஆனால்... அந்த நடைமுறையும், குறிப்பிட்ட சில கடல்களில் மட்டுமே இருக்கும்.

இதுவும் உண்டு ஆனால் அடையாளபடுத்த பட்ட கடற்கரைகளில் மட்டும்.

இந்த பிள்ளை இறந்த மார்கேட் கடற்கரைக்கு நான் போயுள்ளேன். Turner என்ற பிரபல ஓவியர் வாழ்ந்த, ஓவியமாய் தீட்டிய இடம்.

மம்மல் நேரத்தில் ஒரு விசேட பொன்நிற ஒளி பரவும். ஓவியர்களுக்கு மிகவும் பிடித்த ஒளியாம்.

கடற்கரையின் நடுப்பகுதியில் lifeguards இருந்ததாக நியாபகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

Lifeguards இருக்கும் கடற்கரைகளில் உள்ளது. மிதப்பான்களை கயிறுடன் இணைத்து செவ்வக வடிவில் அடையாள படுத்தி இருப்பார்கள். அல்லது தனி மிதப்பான்களை/கொடிகளை வைத்தும் செய்வார்கள். 

ஆனால் சீசன் காலத்தில் அதுவும் குளிக்க ஏற்ற கடற்கரைகளில், அதிலும் ஒரு குறித்த பகுதியை மட்டும் இப்படி செய்வார்கள். 

ஆனால் ரிப் கரண்ட் எங்கும் இழுக்கலாம்.

இதுவும் உண்டு ஆனால் அடையாளபடுத்த பட்ட கடற்கரைகளில் மட்டும்.

இந்த பிள்ளை இறந்த மார்கேட் கடற்கரைக்கு நான் போயுள்ளேன். Turner என்ற பிரபல ஓவியர் வாழ்ந்த, ஓவியமாய் தீட்டிய இடம்.

மம்மல் நேரத்தில் ஒரு விசேட பொன்நிற ஒளி பரவும். ஓவியர்களுக்கு மிகவும் பிடித்த ஒளியாம்.

கடற்கரையின் நடுப்பகுதியில் lifeguards இருந்ததாக நியாபகம்.

அந்தக் கடல்.. பெரிய அலையுடன் கூடிய.. ஆழமான பகுதியா?
இங்கிலாந்தில் வளர்ந்த பிள்ளை என்ற படியால்...
எப்படியும் அவருக்கு, நீச்சல்  தெரிந்திருக்கும்.. என நினைக்கின்றேன்.

26 வயது... அப்பதான் கஸ்ரப் பட்டு, படித்து முடித்து..
ஒரு சில வருடங்கள் தான்... வேலை செய்திருப்பார்.
அதற்குள்... இப்படி நடந்து விட்டது.

இது, மனதை நெருட வைத்த மரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

இங்கு ஒன்ராரியோவில் குளிக்க அனுமதிக்கப்பட்ட கடற்கரைகளில் (ஏரிக்கரைகள் என்றும் சொல்லலாம்), ஒரு நீள மஞ்சள் அல்லது ஒரேஞ் நிற கயிறு போல் ஒன்றை கரையில் இருந்து சில நூறு மீற்றர்கள் தூரத்தில் கட்டியிருப்பார்கள். அதை மீறிச் சென்றால் ஆபத்து என்பதை காட்டுவதற்காகவே அவ்வாறு கட்டியிருப்பார்கள். பொதுவாக சனம் எவ்வளவுதான் நீச்சல் தெரிந்தாலும் அதை மீறிச் செல்ல மாட்டார்கள். 

பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறு உள்ளதா?

இங்கு படகில் ஆழமாகச் சென்று அது கவிழ்ந்து இறப்பவர்கள் அதிகம். இவர்கள் பொதுவாக உயிர்காக்கும் அங்கிகளை அணிந்து இருக்க மாட்டார்கள். நீச்சல் தெரிந்தாலும் ஆழமான பகுதிகளில் இருக்கும் சில்லென்ற குளிரில் அதிக தூரம் நீந்தமுடியாது. 

இங்கு இருக்கு மப்பில் போறவையளுக்கு முதலில் விளங்க வேணும் அல்லவா ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.