Jump to content

உலகில் இருக்கும் மிக முக்கியமான புவியியல் இடங்களுக்கான தமிழ்ச் சொற்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

none.jpg

'படிமப்புரவு: அமசொன் | தமிழில்: நன்னிச் சோழன் | பரிமானம்- 1238 x 1604'

Geological words in tamil

இதனை நீங்கள் பதிவிறக்கம் செய்து உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்கலாம். இதை ஏன் சொல்கிறேன் என்றால் அமசொனில் இந்த நோக்கத்திற்காகவே இப்படம் வெளியிடப்பட்டிருந்தது (புவியியல் சொற்கள் விளக்கப்படமாக (geological words chart))

மேலே உள்ளவற்றில் நான் புதிதாக உருவாக்கிய சொற்கள்:

  1. அயம் - அருவி கொட்டும் இடத்தில் பொங்கிக் கொண்டிருக்கும் நீர்.
  2. நெடும்பொறை/ தனியோங்கல் - butte -
    1. நெடுத்த பொறை(hillock, hummock, knoll) - இவற்றின் உயரமானது அகலத்தை விடவும் கூடுதலாக இருக்கும். மேலும் பொறை என்றாலே எமக்குள் ஓர் பாறை என்னும் உள்ளுணர்வு தோன்றி விடும். ஆதலால் அதனோடு நெடும் என்னும் உயரத்தைக் குறிக்கும் சொல்லினையும் சேர்த்து நெடும் பொறை என்னும் சொல்லினை உருவாக்கியுள்ளேன்.
  3. தடத்தொண்டி - sound- தட+ தொண்டி = பெரிய கடற்கழி
    1. தட - large, broad, full, bent curved
    2. தொண்டி- கடற்கழி
  4. மிசைத்திட்டை - Mesa
    1. மிசை என்றால் தமிழில் உயர்ச்சி, மேலிடம், மேடு என்று பொருள்; திட்டை என்றால் மேடு, திண்ணை என்று பொருள். அதாவது மேடு போன்று உயரத்தில் அமைந்துள்ள சமதரையான(மேலிடம்) திண்ணை போன்ற நிலம். (மெசா உண்மையிலே ஒரு வகையான திண்ணைதான்)
  5. சாட்டுத்தேம் - prairie - சாட்டு + தேம்
    1. சாட்டு - புற்றரை (முழுவதும் புற்றரையே)
    2. தேம் - மணம், தேன், தேனீ, கள், இடம் , நாடு, ஈரம்
    3. மிகப்பெரிய நிலப்பரப்பான அவ்விடத்தில் உள்ள புற்றரையில் மலரும் பூக்களில் தேனீக்கள் தேன்பருகும்; மேலும் அவ்விடத்தில் ஏராளமான பூக்களுள்ளதால் நல்ல நறுமணம் வரும். புற்றரையாதலால் எப்பொழுதும் ஈரப்பதம் காணப்படும்(மொத்தப் பொருளையும் அடக்கி விட்டேன்!)
  6. கடகம்/ஆற்றுக்குடைவு - george/canyon மலை, மலைப்பக்கம், ஆறு, பள்ளத்தாக்கு
    1. மலைப்பாங்கான ஆறுகொண்ட இடத்தில் உள்ள பள்ளத்தாக்கு!
  7. கொதியஃகி = geyser - கொதி + அஃகி - கொதியான சூடான மேல் நோக்கி பொங்கும் நீரூற்று
    1. கொதி - கொதியான, சூடான
    2. அஃகி - நீரூற்று
  8. சிந்து - snow | நன்றி: இராமகி - குளிர்ச் சொற்கள்
  9. சிந்தெடார் - tundra - சிந்து+எடார்
    1. சிந்து - snow
    2. எடார் - பரந்தவெளி, சமவெளி
  10. ஆலிப்பாளம் - iceberg - ஆலி + பாளம்
    1. ஆலி - ice
    2. ஆலியாறு - ஆலி + ஆறு - glacier - ஆலி நிறைந்த ஆறு
  11. கழியிடுக்கு/ நுழைகழி - fjord- கழி + இடுக்கு (கழி ஓடும் இடுக்கு)
    1. இடுக்கு - மலையிடுக்கு என்பதன் சுருக்கம் | பொருள்:கடகம்(gorge)
    2. கழி - கடற்கழி என்பதன் சுருக்கம்
    3. பொருள்: கடகத்தில்/மலையிடுக்கில் ஓடும் நீண்ட தொண்டி [கடற்கழி(inlet)]
  12. தீவக்குறை - peninsula
  13. அறைபாறை / இகுப்பம் - Boulder

 

உசாத்துணை:

  • செ.சொ.பே.மு.

படிமப்புரவு

தமிழாக்கம் & தொகுப்பு(editting) & வெளியீடு

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்
  • Like 3
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

 

 

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்+

(இது 2 ஆண்டுகளுக்கு முன்னர் நான் கோராவில் படைத்தது)

 

main-qimg-f6f21933043157f0b540f76b1a151965.jpg

'படிமப்புரவு: துவிட்டர் | தமிழில்: நன்னிச் சோழன்'

  1. அடவி - jungle
  2. அருவி - waterfalls
  3. ஆறு - river
  4. ஆலிப்பாளம் - iceberg
  5. ஆலியாறு - glacier
  6. உவர்க்கம் - beach
  7. எரிமலை - volcano
  8. ஏரி - lake
  9. ஓங்கல் - cliff
  10. கச்சாயம் - cape
  11. கடகம் - gorge/ canyon
  12. கடல் -sea
  13. கயவாய் - estuary
  14. கழிமுகம் - delta
  15. கழியிடுக்கு- fjord
  16. காடு - forest
  17. கால் - canal
  18. குகை - cave
  19. தீவக்குறை- peninsula
  20. குன்று - hill
  21. குளம் - pond
  22. கொதியஃகி- geyser
  23. கொல்லி - valley
  24. சதக்கல் - marsh
  25. சதவல் - swamp
  26. சமவெளி - plain
  27. சாட்டுத்தேம் - prairie
  28. சிந்து - snow
  29. சிந்தெடார் - tundra
  30. சுவல் - hillock
  31. எக்கல்- dune
  32. தீவு - island
  33. தீவுப்பற்று- archipelago
  34. தொடுவாய்
  35. களப்பு- lagoon
  36. பூசந்தி- isthmus
  37. நீரிணை - straight
  38. பரிசில்குடா - cove
  39. பாலைச்சோலை- oasis
  40. பேராழி - ocean
  41. பொழை - stream
  42. மலை - mountain
  43. மிசைத்திட்டை - mesa
  44. வற்புலம் - plateau
  45. வளைகுடா - gulf

 

 


  • பரி - பாதுகாக்கை, சூழ்தல்
  • சில் - சிறியது

cove - பரிசில்குடா - சூழ்ந்து பாதுகாக்கப்பட்ட சிறிய குடா


  • prairie - சாட்டுத்தேம் - சாட்டு + தேம்
  • சாட்டு - புற்றரை (முழுவதும் புற்றரையே)
  • தேம் - மணம், தேன், தேனீ, கள், இடம் , நாடு, ஈரம்

மிகப்பெரிய நிலப்பரப்பான அவ்விடத்தில் உள்ள புற்றரையில் மலரும் பூக்களில் தேனீக்கள் தேன்பருகும்; மேலும் அவ்விடத்தில் ஏராளமான பூக்களுள்ளதால் நல்ல நறுமணம் வரும். புற்றரையாதலால் எப்பொழுதும் ஈரப்பதம் காணப்படும்

(மொத்தப் பொருளையும் அடக்கி விட்டேன்!)


  • கடகம்: மலை, மலைப்பக்கம், ஆறு, பள்ளத்தாக்கு

மலைப்பாங்கான ஆறுகொண்ட இடத்தில் உள்ள பள்ளத்தாக்கு!


  • மிசை - உயரம், மேலிடம், மேடு
  • திட்டை - திண்ணை, மேடு

உயரமான திண்ணை வடிவம் கொண்ட மேடு போன்ற இடத்தில் உள்ள மேலிடம் (சமதரையான இடம்).


கொதியஃகி = கொதி + அஃகி - கொதியான சூடான மேல் நோக்கி பொங்கும் நீரூற்று

  • கொதி - கொதியான, சூடான
  • அஃகி - நீரூற்று

  • பொழை - stream - ஆற்றைவிடைச் சிறியது
  • ஓடை - brook - அதைவிடச் சிறியது


சிந்தெடார் - சிந்து+எடார்

  • சிந்து - snow
  • எடார் - பரந்தவெளி, சமவெளி

ஆலிப்பாளம் - ஆலி + பாளம்

  • ஆலி - ice

  • அடவி - jungle (நன்றி: கவிஞர் மகுடேசுவரன்)

தொடுவாய் - எ.கா: கொக்குத்தொடுவாய் (முல்லைத்தீவு), (இதேபோல் மற்றொரு இடம் மன்னாரிலும் உண்டு, அதன் பெயர் மறந்துவிட்டது)

  • இந்த தொடுவாய் என்றால் நீரிணை அல்ல. இந்த தொடுவாய் என்பது என்னவென்ரால் தொண்டி போன்ற இடங்களில் அந்த வாய் போன்ற இரு நிலங்கள் முத்தம் கொடுக்க வர அதன் நடுப்பகுதியால் நீர் கிழித்து உள்நுழையும் பகுதியே தொடுவாய் எனப்படும்.

  • ஆலியாறு - ஆலி + ஆறு - glacier - ஆலி நிறைந்த ஆறு

கழியிடுக்கு- கழி + இடுக்கு (கழி ஓடும் இடுக்கு)

  • இடுக்கு - மலையிடுக்கு என்பதன் சுருக்கம் | பொருள்:கடகம்(gorge)
  • கழி - கடற்கழி என்பதன் சுருக்கம்

பொருள்: கடகத்தில்/மலையிடுக்கில் ஓடும் நீண்ட தொண்டி [கடற்கழி(inlet)]


  • சள் → சது → சதுப்பு;
  • சள் → சத + கால்- சதக்கால் → சதக்கல்

  • களப்பு - (lagoon) கடலிலிருந்து சிலவகையான தடுப்புகளால் பிரிக்கப்பட்டுள்ள கடலைவிட ஆழம் குறைந்த உவர் நீர்ப் பரப்பு களப்பு ஆகும்.
  • காயல்/ உப்பங்கழி - (Backwater) ஒரு காயல்/உப்பங்கழி (தற்போதைய சேரநாட்டில் இன்றும் இதன் பெயர் காயலே) என்பது ஒரு ஆற்றின் ஒரு பகுதியாகும், அதில் கொஞ்சங்கூட நீரோட்டம் இருக்காது. இது அதனுடன் அமைந்து அதனோடு பிறகு சேரும் ஒரு முதனாற்றின் கிளையையோ அல்லது ஓதம் அல்லது அணை போன்ற தடங்கல்களால் ஆதரிக்கப்படுகிற ஒரு முதனாற்றில் உள்ள நீர்நிலையையோ குறிக்கும்.
  • கடற்கழி/ தொண்டி (inlet)- ஒரு கடற்கழி என்பது ஒரு கரையோரத்தின் உள்தள்ளல் ஆகும், இது பொதுவாக ஒரு சிறிய குடா அல்லது கை போன்ற நீளமான மற்றும் ஒடுங்கலானது ஆகும். இது பெரும்பாலும் தொண்டி, குடா அல்லது சதக்கல் போன்ற உப்பு நீர் கொண்ட நீர் நிலைக்கு இயவுகிறது.
  • கடற்கால் (firth) - கடல் நீர் சிறிது தூரம் வாய்க்கால்போல் நிலப்பகுதிக்குள் வந்து நிற்கும் இடம்.

  • கால் - channel (கால் என்னும் சொல் தமிழில் அமைந்துள்ள பொதுசொல்லாகும்.. இதனால் உருவான சொற்கள்:
    • வாய்க்கால் - தேக்கத்தில் இருக்கும் நீர் வெளியேறும் வழி வாய்க்கால் ஆகும். (வாய்-அகண்ட —> கால் -புறத்துறுப்பு)
    • கால்வாய் - தேக்கத்திற்கு நீர் கொண்டு வரும் வழி கால்வாய் ஆகும் . (கால் -புறத்துறுப்பு —> வாய்-அகண்ட)

கூடுதல் செய்திகள்:

மேலும் தமிழில் சொற்கள் அறிய

  1. Snow, dew தொடர்பான தமிழ்க் கலைச்சொற்கள்
  2. கடல் என்னும் சொல்லுக்கான ஏனைய தமிழ்ச் சொற்கள்
  3. பழந்தமிழகத்தில் தமிழர்களால் கட்டப்படிருந்த நீர்நிலைகள்
  4. காடு என்னும் சொல்லைக் குறித்த ஏனைய தமிழ்ச் சொற்கள்
  5. மலை என்ற சொல்லுக்கு சரியான ஒத்தசொற்கள்
  6. சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் மலையியல் தொடர்பான கலைச் சொற்கள்

உசாத்துணை:

  • செ.சொ.பே.மு.
  • இட விளக்கவியற் படங்கள் - நூல் - ஈழத்தீவு

ஆக்கம் & வெளியீடு

நன்னிச்சோழன்

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.