Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

உலகில் இருக்கும் மிக முக்கியமான புவியியல் இடங்களுக்கான தமிழ்ச் சொற்கள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்+

none.jpg

'படிமப்புரவு: அமசொன் | தமிழில்: நன்னிச் சோழன் | பரிமானம்- 1238 x 1604'

Geological words in tamil

இதனை நீங்கள் பதிவிறக்கம் செய்து உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்கலாம். இதை ஏன் சொல்கிறேன் என்றால் அமசொனில் இந்த நோக்கத்திற்காகவே இப்படம் வெளியிடப்பட்டிருந்தது (புவியியல் சொற்கள் விளக்கப்படமாக (geological words chart))

மேலே உள்ளவற்றில் நான் புதிதாக உருவாக்கிய சொற்கள்:

 1. அயம் - அருவி கொட்டும் இடத்தில் பொங்கிக் கொண்டிருக்கும் நீர்.
 2. நெடும்பொறை/ தனியோங்கல் - butte -
  1. நெடுத்த பொறை(hillock, hummock, knoll) - இவற்றின் உயரமானது அகலத்தை விடவும் கூடுதலாக இருக்கும். மேலும் பொறை என்றாலே எமக்குள் ஓர் பாறை என்னும் உள்ளுணர்வு தோன்றி விடும். ஆதலால் அதனோடு நெடும் என்னும் உயரத்தைக் குறிக்கும் சொல்லினையும் சேர்த்து நெடும் பொறை என்னும் சொல்லினை உருவாக்கியுள்ளேன்.
 3. தடத்தொண்டி - sound- தட+ தொண்டி = பெரிய கடற்கழி
  1. தட - large, broad, full, bent curved
  2. தொண்டி- கடற்கழி
 4. மிசைத்திட்டை - Mesa
  1. மிசை என்றால் தமிழில் உயர்ச்சி, மேலிடம், மேடு என்று பொருள்; திட்டை என்றால் மேடு, திண்ணை என்று பொருள். அதாவது மேடு போன்று உயரத்தில் அமைந்துள்ள சமதரையான(மேலிடம்) திண்ணை போன்ற நிலம். (மெசா உண்மையிலே ஒரு வகையான திண்ணைதான்)
 5. சாட்டுத்தேம் - prairie - சாட்டு + தேம்
  1. சாட்டு - புற்றரை (முழுவதும் புற்றரையே)
  2. தேம் - மணம், தேன், தேனீ, கள், இடம் , நாடு, ஈரம்
  3. மிகப்பெரிய நிலப்பரப்பான அவ்விடத்தில் உள்ள புற்றரையில் மலரும் பூக்களில் தேனீக்கள் தேன்பருகும்; மேலும் அவ்விடத்தில் ஏராளமான பூக்களுள்ளதால் நல்ல நறுமணம் வரும். புற்றரையாதலால் எப்பொழுதும் ஈரப்பதம் காணப்படும்(மொத்தப் பொருளையும் அடக்கி விட்டேன்!)
 6. கடகம்/ஆற்றுக்குடைவு - george/canyon மலை, மலைப்பக்கம், ஆறு, பள்ளத்தாக்கு
  1. மலைப்பாங்கான ஆறுகொண்ட இடத்தில் உள்ள பள்ளத்தாக்கு!
 7. கொதியஃகி = geyser - கொதி + அஃகி - கொதியான சூடான மேல் நோக்கி பொங்கும் நீரூற்று
  1. கொதி - கொதியான, சூடான
  2. அஃகி - நீரூற்று
 8. சிந்து - snow | நன்றி: இராமகி - குளிர்ச் சொற்கள்
 9. சிந்தெடார் - tundra - சிந்து+எடார்
  1. சிந்து - snow
  2. எடார் - பரந்தவெளி, சமவெளி
 10. ஆலிப்பாளம் - iceberg - ஆலி + பாளம்
  1. ஆலி - ice
  2. ஆலியாறு - ஆலி + ஆறு - glacier - ஆலி நிறைந்த ஆறு
 11. கழியிடுக்கு/ நுழைகழி - fjord- கழி + இடுக்கு (கழி ஓடும் இடுக்கு)
  1. இடுக்கு - மலையிடுக்கு என்பதன் சுருக்கம் | பொருள்:கடகம்(gorge)
  2. கழி - கடற்கழி என்பதன் சுருக்கம்
  3. பொருள்: கடகத்தில்/மலையிடுக்கில் ஓடும் நீண்ட தொண்டி [கடற்கழி(inlet)]
 12. தீவக்குறை - peninsula
 13. அறைபாறை / இகுப்பம் - Boulder

 

உசாத்துணை:

 • செ.சொ.பே.மு.

படிமப்புரவு

தமிழாக்கம் & தொகுப்பு(editting) & வெளியீடு

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்
 • Like 1
Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்+

 

 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • யாழ்கள சின்ராசுகள்????? யார் அவர்கள்? அதாவது நீங்களும் உங்கள் அருவருடிகளும் மகா ராஜாக்கள் அப்படித்தானே? 1988 ஈழத்தில் பாடசாலை விட்டு நான் வரும் வழியில் நான்கு தமிழர்களின் கொல்லப்பட்ட உடலங்கள் வீதியில் சிதைந்து கிடந்தது. அப்போது ஒரு பெரியவர் சொன்னார் தம்பி இப்போதுதான் இறந்த ஒருவரின் உடலை ட்ரக்கில் கட்டி இழுத்துப்போகிறார்கள் என்று. ..அந்த இந்திய இராணுவத்தின் தளபதிதான் இவர்..  
  • றோ உளவுப்பிரிவு தனது நலனுக்காக எதையும் செய்யும். விடுதலைப்புலியாக மாறும் கரும்புலியாக மாறும். சிங்கள அரசியல்வாதிகளை தற்கொலை போராளி கொண்டு கொலை செய்யும். விடுதலைப்புலிகளுக்குள்ளும் வேறு இயக்கங்கள் பெயரில் படு கொலைகளை நடத்தும். இன்னும் பற்பல......
  • இது இன்னுமொரு ஈஸ்ரர் தாக்குதலாக இருக்கலாம் மும்பைத் துறைமுகத்தில் ஒரு கடற்படை நீர்மூழ்கி தாக்கி மூழ்கடிக்கப்பட்டது அப்போது விபத்து எனப் பூசி மொழுகிவிட்டார்கள் இல்லையேல் பங்குச்சந்தையில் தடாலடி மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். அதுபோல் இதையும் பூசி மெழுகிவிடுவார்கள். ஆனால் சுப்பிரமணியம் சுவாமி சீனாக்காரன் செய்தவேலை என அறிக்கை விட்டிருக்கிறார். துட்டகெமுனுவின் நிலை இந்தியாவுக்கு வந்துவிட்டது. ஆப்கானிஸ்தானில் சீனாவின் ஆதிக்கம் பாகிஸ்தான் சொல்லவே தேவை இல்லை காஸ்மீர் என்றும் புகையும் விடையம் இப்போ வங்காள விரிகுடாவின் இலங்கைத்தீவில் சீனாவின் ஆதிக்கம் அம்பாந்தோட்டயிலிருந்து அட்டை வளர்ப்புவரை அங்கெங்கிலாதபடி அவர்கள்பாடுதான். கெமுனுக்கு ஒருபக்கம் கடலாவது இருந்தது இவர்களுக்கு கடலுக்கு அப்பாலும் சீனாக்காரன் நிக்கிறான். சிலவேளை யாராவது அகதிமுகாமில் இருக்கும் இலங்கைத்தமிழன்மீது பாரத்தைப்போட்டு விடுதலைப்புலி எனக்கூறினாலும் கூறலாம். 
  • மாசிகருவாட்டுக் குழம்பும் சோறும் அருமையான காம்பினேஷன்.......!  👍
  • இது நடைபெறுவதைத் தடுப்பது எங்கணம்? ஒரே வழிதான். சிங்கள பெளத்த பேரினவாத அரசு தொடர்ந்தும் இயங்குவதை முடக்குவது. இன்றிருக்கும் அதன் அதிகார பலத்தினை உடைத்து, அது கம்பீரமாக நிற்கும் வெற்றிமமதையிலிருந்து கீழே வீழ்த்தி தமிழருடன் சமரசத்தில் ஈடுபடுவதன்மூலம், அவர்களின் கோரிக்கைக்கு உடன்படுவதே ஒரே வழியெனும் நிலையினை உருவாக்குவது.  நாட்டினை தொடர்ந்து கொண்டுநடாத்துவதற்குத் தேவையான வருவாய்களை பேரினவாதம் பெற்றுக்கொள்ளும் வழிகளைத் தடுப்பது. உல்லாசப் பயணத்துறை, கைத்தொழில்ப் பேட்டைகள் மூலம் கிடைக்கும் வருவாய்களை முற்றாக முடக்குவது. பொருளாதார ரீதியில் தோல்வியடைந்த நாடாக மாற்றுவது.  இதனைச் செய்ய தமிழர்கள் தமக்கு முன்னால் இருக்கும் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவது அவசியமானது. அந்த வழிகள் என்னவென்று கண்டுபிடிப்பது இப்போதைக்குத் தேவையானது.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.