Jump to content

பாரிஸ் லாச்சப்பலில் தமிழ்த் தேசியத்தை ஊட்டும் உணவகம்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸ் லாச்சப்பலில் தமிழ்த் தேசியத்தை ஊட்டும் உணவகம்!

AdminSeptember 25, 2021

பிரான்சு பாரிஸ் லாச்சப்பலில் தமிழ்த் தேசிய உணர்வையும் உணவோடு ஊட்டும் அதிசய உணவகம் ஒன்று ஆரம்பமாகியுள்ளது.

தமிழீழத் தேசியத் தலைவரின் அழகிய வர்ணப்படம் வருபவர்களை வரவேற்பதுடன், உள்ளே தமிழீழத் தேசியத் தலைவரின் இல்லம்,புதல்வன் பாலச்சந்தின், முதல் மாவீரர் சங்கர், தியாகி அன்னை பூபதி, தியாக தீபம் திலீபன்,முதல் பெண் மாவீரர் மாலதி, முதல் கரும்புலி மில்லர்,கடற் கரும்புலி அங்கையற்கண்ணி, தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் உள்ளிட்டவர்களின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், சினிமாப் பாடல்களை முற்றாகத் தவிர்த்து தமிழீழத் தாயகப் பாடல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

அத்தோடு மிகவும் சுத்தமான முறையில் குறித்த உணவகம் பேணப்படுகிறது.

இது தமிழ்த்தேசிய உணர்வாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது எனவும், இவ்வாறான ஓர் உணவகத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு என்று அதன் உரிமையாளர் உணர்வோடு எரிமலைக்குத் தெரிவித்தார்.
(எரிமலையின் செய்திப் பிரிவு)
spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

http://www.errimalai.com/?p=67487

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றும் சொல்வதற்கில்லை 🤔🙄🙄🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஒன்றும் சொல்வதற்கில்லை 🤔🙄🙄🙄

சுவர்களில் இருப்பவர்களின் தியாகங்களால் நாங்கள் இன்று சிறந்த உணவுகளை பாரிஸில் உண்ணுகின்றோம் என்று தோத்திரம் சொல்லிவிட்டு உண்ண ஆரம்பிக்கலாம்🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உணவகத்திற்கு  இன்னும்  செல்லவில்லை

ஆனால்  சில  ஆண்டுகளுக்கு முன்பு ல சப்பலில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்து  விட்டு

பக்கத்தில்  இருக்கும்  உணவகத்தில் ரீ குடிக்க  சென்றோம்

அறிமுகமில்லாத கடை

ஆனால்  உள்ளே  போய் அமர்ந்ததும் தலைவரின் பெரிய போட்டோ ஒன்று கம்பீரமாக  இருந்தது மனதைக்கவர்ந்தது

அண்மையில் பரிசுக்கு வெளியே ஒரு தமிழ்க்கடைக்கு  சென்றிருந்தேன்

அங்கேயும் தலைவர்  படம்  மட்டுமல்ல

காசு பரிவர்த்தனை  செய்வதால் காசுப்பெறுமதி  மதிப்பீடு

இலங்கை என்பதற்கு  பதிலாக தமிழீழம்  என்று பெரிய திரையில்  ஓடிக்கொண்டிருந்தது

இன்றையநிலையில்  ல  சப்பலில்  இதைச்செய்வதால் தொல்லைகளும்  அவமானமுமே மிஞ்சும்?

ஆனால்  சிறிது  சிறிதாக இவ்வாறான முன்னெடுப்புக்கள் எமது நிலைப்பாடுகளை வெளிக்கொணர

நாம் சிலவற்றை மறப்பதற்கில்லை என சொல்ல  பயன்படக்கூடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரின் படம் கல்லாவிற்கு மேல் இருப்பது ஓகே.

ஆனால் சிறுவன் பாலசந்திரன் கடைசியாக பிஸ்கேட் சாப்பிட்ட படத்தை பார்த்த படி எப்படி நிம்மதியாக சாப்பிட முடியும்?🙁

18 minutes ago, விசுகு said:

அதே போலத்தான் தியாகி திலீபன், அன்னைபூபதி படங்களும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

தலைவரின் படம் கல்லாவிற்கு மேல் இருப்பது ஓகே.

ஆனால் சிறுவன் பாலசந்திரன் கடைசியாக பிஸ்கேட் சாப்பிட்ட படத்தை பார்த்த படி எப்படி நிம்மதியாக சாப்பிட முடியும்?🙁

அதே போலத்தான் தியாகி திலீபன், அன்னைபூபதி படங்களும்.

பிரெஞ்சுக்காரர்களுக்கு????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, விசுகு said:

பிரெஞ்சுக்காரர்களுக்கு????

அவர்களுக்கு அது என்னவென்று தெரியாமல் இருந்தால் ஏதோ படம் என கடந்து போவார்கள் - ஆனால் என்ன என்று கேட்டு கதையை சொன்னால் சஞ்சலப்படவே செய்வார்கள் என நினைக்கிறேன்.

குர்திஸ்/ பலஸ்தீனிய கொடுமைகள்/தியாகங்கள் படமாக தொங்கும் ஒரு கடைக்கு நீங்கள் ரெண்டாம் தரம் சாப்பிட போவீர்களா? நான் போக மாட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

அவர்களுக்கு அது என்னவென்று தெரியாமல் இருந்தால் ஏதோ படம் என கடந்து போவார்கள் - ஆனால் என்ன என்று கேட்டு கதையை சொன்னால் சஞ்சலப்படவே செய்வார்கள் என நினைக்கிறேன்.

குர்திஸ்/ பலஸ்தீனிய கொடுமைகள்/தியாகங்கள் படமாக தொங்கும் ஒரு கடைக்கு நீங்கள் ரெண்டாம் தரம் சாப்பிட போவீர்களா? நான் போக மாட்டேன்.

ம்ம்ம்

வியாபாரம் என்று  பார்த்தால்  நட்டத்தை  தவிர  வேறு ஒன்றும் வராது  இவருக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

ம்ம்ம்

வியாபாரம் என்று  பார்த்தால்  நட்டத்தை  தவிர  வேறு ஒன்றும் வராது  இவருக்கு?

நானும் அப்படித்தான் நினைக்கிறேன். பரப்புரைதான் குறிக்கோள் என்றால் வேறு வினைதிறனானவற்றை செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கொடியை மடிச்சு வை.. பிரபாகரன் படத்தை ஒளிச்சு வை.. புலிகளை மற.. சிங்களவனை மன்னி.. இதுதான் இப்ப எங்கள் சிலரின் தாரக மந்திரம்.

இந்தச் சூழலில்.. இப்படி ஒரு சங்கதி சங்கடமாகத்தான் இருக்கும்..

ஆனால்.. இந்த ஓவியங்களுக்குப் பின்னால் உள்ள வரலாற்றை தமிழில் எழுதுவதோடு இல்லாமல்.. பிரஞ்ச்.. ஆங்கிலத்தில் எழுதி வைப்பது.. தமிழர்களை விட.. தியாகங்களை அதிகம் மதிக்கத் தெரிந்த.. பிற நாட்டவர்களிடம்.. அது தகவலாகக் காவப்பட சாத்தியம் அதிகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முற்றிலும் தவறான விஷயம்,

சொந்த வியாபார நோக்கத்துக்காக, தேச விடுதலைக்காய் இறந்தவர்களை விளம்பரமாக உபயோகிப்பது ஒருவகை குற்றமும்கூட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

படம்

படம் தான்

ஆனால்  பாருங்கோ

இன்றைய  ல  சப்பலின் நிலவரப்படி

மகிந்த  அல்லது  கோத்தபாய படத்துக்கு  தான் கியூ அதிகம்....😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

முற்றிலும் தவறான விஷயம்,

சொந்த வியாபார நோக்கத்துக்காக, தேச விடுதலைக்காய் இறந்தவர்களை விளம்பரமாக உபயோகிப்பது ஒருவகை குற்றமும்கூட.

நானும் உங்கள் இருவரின் கோணத்திலும் யோசித்தேன். ஆனால் ஆர்வ மிகுதியாக இருக்கலாம் என நினைக்கிறேன்.

1 hour ago, நந்தன் said:

படம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரை, 

அவர் படம் காட்டட்டும் அல்லது வியாபர நோக்கமாக இருக்கட்டும், ஆனால் கிடைக்கும் இலாபத்தில் ஓர் 10% ஆவது தாயக மக்களுக்காக அனுப்பினால் போதும் 🙏.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

என்னைப் பொறுத்தவரை, 

அவர் படம் காட்டட்டும் அல்லது வியாபர நோக்கமாக இருக்கட்டும், ஆனால் கிடைக்கும் இலாபத்தில் ஓர் 10% ஆவது தாயக மக்களுக்காக அனுப்பினால் போதும் 🙏.

அப்ப பூர்வீகத்தை  ஒருக்கா  தேடிப்பார்ப்பம்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

சுவர்களில் இருப்பவர்களின் தியாகங்களால் நாங்கள் இன்று சிறந்த உணவுகளை பாரிஸில் உண்ணுகின்றோம் என்று தோத்திரம் சொல்லிவிட்டு உண்ண ஆரம்பிக்கலாம்🤭

ஒரு சிலருக்கு அப்படி இருக்கலாம் 

ஆனால் எனக்கு இவர்களையெல்லாம் இறக்க விட்டு விட்டோமே என்ற மனநிலையே அப்படியே ஊருல இடித்து ஒதுக்கப்பட்ட துயிலும் இல்லங்களை கடந்த நிலைதான்😴😴

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.