Jump to content

யாழ். இந்துக் கல்லூரியின் க.பொ.த (சா/த) பரீட்சை முடிவுகள்: 56 பேருக்கு 9A


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். இந்துக் கல்லூரியின் க.பொ.த (சா/த) பரீட்சை முடிவுகள்: 56 பேருக்கு 9A

By Shana
jaffna-hindhu-college.jpg

 

நேற்று வெளியான 2020 க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்.இந்துக் கல்லூரியின் 56 மாணவர்கள் 9A சித்தியும் 21 மாணவர்கள் 8A (ஒரு பாட முடிவு வரவில்லை) சித்தியும் 29 மாணவர்கள் 8 A,B சித்தியும் 10 மாணவர்கள் 8A,C சித்தியும் 13 மாணவர்கள் 7A, 2B சித்தியும் பெற்றுள்ளனர்.

கல்லூரியின் அனைத்து மாணவர்களும் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளதுடன் பரீட்சைக்குத் தோற்றிய 267 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.
 

 

http://www.battinews.com/2021/09/56-9a.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
யாழ் முன்னணி பாடசாலைகளில் 9A எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை…
 
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி/Hartley College-21பேர்.
யாழ் இந்துக் கல்லூரி/Jaffna Hindu College-56பேர்.
வேம்படி மகளிர் கல்லூரி/Vembadi Girls' High School-58பேர்.
மகாஜனக் கல்லூரி/Mahajana College-2பேர்
 
வேம்படி முகநூலில் இருந்து.. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டிடம், குமாரசாமி மண்டபம்....

இனிய நிணைவுகள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:
யாழ் முன்னணி பாடசாலைகளில் 9A எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை…
 
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி/Hartley College-21பேர்.
யாழ் இந்துக் கல்லூரி/Jaffna Hindu College-56பேர்.
வேம்படி மகளிர் கல்லூரி/Vembadi Girls' High School-58பேர்.
மகாஜனக் கல்லூரி/Mahajana College-2பேர்
 
வேம்படி முகநூலில் இருந்து.. 

தம்பி கலியாணம் கட்டினாப் பிறகும்

வேம்படி முகநுhலுக்குள்ள தான் அலையிறீங்க போல.

நல்லது நல்லது.

உங்கள் கட்சி தொகையை போட்டு விட்டீர்கள்.

எங்கள் கட்சி தொகையை யாரும் போடலையே?

அதையும் ஒருக்கா போடுங்களேன் பாப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இந்த கட்டிடம், குமாரசாமி மண்டபம்....

இனிய நிணைவுகள்....

நாங்கள் படித்த காலத்தில் குமாரசாமி மண்டபம் சங்கீதம் வரைதல் ஆகிய இரு பாடங்கள் மட்டுமே நடந்தன.

மேல்மாடி ஏதாவது வெளியார் அல்லது ஓஎல் சோதனைகளுக்காக மட்டுமே திறக்கப்படும்.

கட்டடங்கள் முடிவடையாத நிலையிலேயே இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயர்தரத்தில் அதிகமான பெறுபேறுகள் கிடைப்பதில்லை வடகிழக்கில் இதை வைத்து உயர்தரம்  மட்டும் படிக்கலாம் அவ்வளவுதான்.

உயர்தர பரீட்சை முடிவுகளே தொழிலையும் மேற்படிப்பை உறுதி செய்கிறது

வாழ்த்துகள் அனைவருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

உயர்தரத்தில் அதிகமான பெறுபேறுகள் கிடைப்பதில்லை வடகிழக்கில் இதை வைத்து உயர்தரம்  மட்டும் படிக்கலாம் அவ்வளவுதான்.

உயர்தர பரீட்சை முடிவுகளே தொழிலையும் மேற்படிப்பை உறுதி செய்கிறது

வாழ்த்துகள் அனைவருக்கும்

பிரிடனில்.... சாதாரண தரம் வரை கட்டாயம் பள்ளிக்கு போவதை பெற்றோர் உறுதி செய்யவேண்டும்.

அதன் பிறகு பெடி, பெட்டயள் தமது காரை தாமே ஓடவேண்டியது தான் நிலை.... (இது வெள்ளைகள் கதை).

ஆனாலும், இலங்கை, இந்தியா போலல்லாமல், இங்கே ஜம்பது வயதிலும் வாரிச்சுருட்டிக் கொண்டு ஓடி கரை சேர முடியும்.

உங்களுக்கு வயசு போட்டுதே என்று, முதலாளி சொன்னால், சட்டப்படி குற்றம்.

 

Link to comment
Share on other sites

வவுனியாவில் வறுமையிலும் தினமும் 40 கிலோமீற்றர் பயணித்து பாடசாலை செல்லும் மாணவி படைத்த சாதனை!!
 
2020ம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தர பெறுபேறுகள் நேற்றையதினம் (23.09) வெளியாகிய நிலையில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மாணவி தனுசிகா சந்திரசேகரன் அனைத்து படங்களிலும் A சித்திகளை பெற்று (8A) பாடசாலைக்கும் வவுனியா மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
வவுனியாவில் மிகவும் பின்தங்கிய பிரதேசமான தட்டான்குளம் பிரதேசத்திலிருந்து தினமும் பேரூந்தில் 40 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் பயணம் செய்து இம் மாணவி இச் சாதனையை படைத்துள்ளார்.
2020ம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தர பெறுபேறுகள் நேற்றையதினம் (23.09) வெளியாகிய நிலையில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மாணவி தனுசிகா சந்திரசேகரன் அனைத்து படங்களிலும் A சித்திகளை பெற்று (8A) பாடசாலைக்கும் வவுனியா மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மிகவும் வ.றுமையான குடும்பத்தில் ஒரு மூத்த சகோதரன் மற்றும் இரு இளைய சகோதரிகளுடன் பிறந்த தனுசிகாவின் அம்மா வீட்டு வேலைகளை கவனித்து வரும் நிலையில், தந்தை கூலி வேலை செய்து கிடைக்கும் வருமானத்தில் மிகவும் சி.ரமக்களுக்கு மத்தியிலேயே தனது பிள்ளைகளை பாடசாலைக்கு கல்விகற்க அனுப்பி வருகின்றார்.
இருப்பினும் வறுமை மற்றும் பல்வேறு சி.ரமங்களை தாண்டி தனுசிகா இச் சாதனையை படைத்துள்ளார். சாதனைக்கு வறுமை ஒரு த.டையல்ல என்று நிரூபித்துள்ள இம் மாணவி அனைத்து மாணவர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்றால் மிகையல்ல.
May be an image of 1 person and standing
 
fb
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/9/2021 at 16:27, ஈழப்பிரியன் said:

தம்பி கலியாணம் கட்டினாப் பிறகும்

வேம்படி முகநுhலுக்குள்ள தான் அலையிறீங்க போல.

அப்போதும் சரி.. இப்பவும் சரி... இந்த பின்னால அலையுறது நமக்கு சரிப்பட்டு வராத விடயம்.

தகவல் திரட்ட அங்கால எட்டிப்பார்ப்பதுண்டு. அவ்வளவும் தான். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா .....எல்லோருக்கும் சித்தி கிடைச்சிருக்கு வாழ்த்துக்கள்.......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்வி விவசாயம் மீன்பிடிதான் தமிழர்பகுதியின் வேலைவாய்ப்பை பெறுகின்ற பிரதான மூலவளங்கள்.

எல்லோராலும் அனைத்து தொழிலும் செய்யமுடியாது,

ஏழை நடுத்தர வர்க்க  இளம்  சந்ததிக்கு இனி படிப்பைவிட்டால் எதிர்காலத்தில் தலைநிமிர வேறு வழியே இல்லை, அதனாலதான் வெறிதனமா படிச்சு தாறு மாறா ரிசல்ட் எகிறுதெண்டு நினைக்கிறன்.

தனிக்காட்டு ராஜா சொன்னமாதிரி A/L'லிலும் கலக்கினாதான் இலக்குகள் ஓரளவிற்கு முற்றுப்பெறும்.

வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/9/2021 at 21:05, nunavilan said:
வவுனியாவில் வறுமையிலும் தினமும் 40 கிலோமீற்றர் பயணித்து பாடசாலை செல்லும் மாணவி படைத்த சாதனை!!
 
2020ம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தர பெறுபேறுகள் நேற்றையதினம் (23.09) வெளியாகிய நிலையில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மாணவி தனுசிகா சந்திரசேகரன் அனைத்து படங்களிலும் A சித்திகளை பெற்று (8A) பாடசாலைக்கும் வவுனியா மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
வவுனியாவில் மிகவும் பின்தங்கிய பிரதேசமான தட்டான்குளம் பிரதேசத்திலிருந்து தினமும் பேரூந்தில் 40 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் பயணம் செய்து இம் மாணவி இச் சாதனையை படைத்துள்ளார்.
2020ம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தர பெறுபேறுகள் நேற்றையதினம் (23.09) வெளியாகிய நிலையில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மாணவி தனுசிகா சந்திரசேகரன் அனைத்து படங்களிலும் A சித்திகளை பெற்று (8A) பாடசாலைக்கும் வவுனியா மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மிகவும் வ.றுமையான குடும்பத்தில் ஒரு மூத்த சகோதரன் மற்றும் இரு இளைய சகோதரிகளுடன் பிறந்த தனுசிகாவின் அம்மா வீட்டு வேலைகளை கவனித்து வரும் நிலையில், தந்தை கூலி வேலை செய்து கிடைக்கும் வருமானத்தில் மிகவும் சி.ரமக்களுக்கு மத்தியிலேயே தனது பிள்ளைகளை பாடசாலைக்கு கல்விகற்க அனுப்பி வருகின்றார்.
இருப்பினும் வறுமை மற்றும் பல்வேறு சி.ரமங்களை தாண்டி தனுசிகா இச் சாதனையை படைத்துள்ளார். சாதனைக்கு வறுமை ஒரு த.டையல்ல என்று நிரூபித்துள்ள இம் மாணவி அனைத்து மாணவர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்றால் மிகையல்ல.
May be an image of 1 person and standing
 
fb

 

வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மாணவி தனுசிகா சந்திரசேகரனுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னமும், ஏன் அந்த 3-4 பாடசாலைகள்?

குறிப்பாக, அந்த பாடசாலைகள் கற்பித்ததா, அல்லது மாணவர் தனியார் வகுப்புகளில் கற்று தேறியதை பாடசாலைகள் மூலம் accreditation செய்து உள்ளார்களா?   
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of map and text that says "AL Qualified Based on OL 2020 Results Jaffna 69.62% Kilinochchi 65.79% Legend Total 13,000 Mullaitivu 69.18% Vavuniya 69.51% Mannar 75.25 FirstTime Repeat Districts ALQualified% 65.79 66.66 69.18 Anuradapura Puttalam 72.16% Trincomalee 66.66% 71.70 71.71 Kurunegala 76.53% Polonnaruwa 71.7% 72.77 72.78 73.68 Batticaloa 71.71% Matale 71.34% Gampaha 72.77% 75.25 75.27 75.60 Kegalle 75.6% Kandy 76.84% Nuwara Eliya 72.78% Colombo 76.53 76.84 Ampara 76.13% Badulla 74.62% Ratnapura 73.74% Kalutara 73.6 3.68% 78.94 Monaragala 75.65% 81.93 78.94% Matara 81.17% This was produced based basemap& included praccals Hambantota 81.93% 1:1,500,000 0510 30 https://ctmcq.home.blo October 2021"

கடந்த ஜி சி ஈ சாதாரண தர முடிவுகளில் வடக்குக் கிழக்கு மாகாணங்கள் பொதுவாகப் பின்னடைந்துள்ளன.. சொறீலங்காவின் ஏனைய தெற்கு.. மேற்கு... மத்திய.. மாகாணங்களோடு ஒப்பிடும் போது.

இதற்கு வழமை போல் வெளிநாட்டுக் காசு.. சொகுசு தான் காரணம் என்ற குற்றச்சாட்டையும் காது புளிக்கக் கேட்க முடியுது..

வெளிநாட்டுக் காசு தான் காரணம் என்றால்..

வடக்குக் கிழக்கில்.. போதிய மாணவர்கள் இன்மையால் ஏன்.. பாடசாலைகளை மூட வேண்டி இருக்குது..??!

எத்தனை பாடசாலைகள் அடிப்படை வசதிகள் இன்றி உள்ளன..?!

எத்தனை பாடசாலைகள்.. குறிப்பாக பிந்தங்கிய பிரதேசப் பாடசாலைகள்.. போதிய ஆசிரியர்கள் இன்றி உள்ளன..?!

எத்தனை போரால் சேதமாக்கப்பட்ட பாடசாலைகள் மீள திருத்தி.. போதிய வசதிகளோடு கையளிக்கப்பட்டுள்ளன..?!

எத்தனை வடக்குக் கிழக்கு மாணவர்கள்.. உள்ளூரில் இன்னும் இடம்பெயர்ந்து அடிப்படை வசதிகள் இன்றி வாழ்கின்றனர்..??!

எத்தனை மாணவர்கள் போரில் பெற்றோரை அல்லது காவலர்களை இழந்து.. தனிமைப்பட்டு அல்லது போதிய ஆதரவின்றி வாழ்கின்றனர்..?! இவர்களுக்கு என்ன அடிப்படைவசதிகள் அரசினால் செய்யப்பட்டுள்ளன.. மீண்டும் பாடசாலைக்கு போவதற்கு..??!

என் கண்ணால் கண்டேன்.. யாழ் நகரில் ஒரு பிரல்பல்ய பாடசாலை மாணவன்.. பாடசாலை முடிந்த கையோடு.. அதே சீருடையில் நின்று ஊதிபத்தி விற்கிறான். அவனிடம் விசாரித்த போது தனது தங்கைக்கு புத்தகப் பை இல்லை.. அதனை வாங்கிக் கொடுக்கவே உழைக்கிறேன் என்றான். அவனுக்கு தேவையான பணத்தைக் கொடுத்து உதவினேன்.. அவன் சொன்னதை உண்மை என்றே நம்புகிறேன்.. ஏனெனில்.. அவன் கண்ணீர் அதனை செப்பியது.

இப்படி எத்தனை பிள்ளைகள்.. மேலும்.. போரில் கணவரை அல்லது மனைவியை இழந்து பிள்ளைகளை சரியாகக் கவனிக்க முடியாத பெற்றோர்..??! அவர்களின் வருவாய்க்கு.. பிள்ளைகளைப் படிப்பிக்க.. என்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன...??!

எல்லாத்துக்கும் வெளிநாட்டுக்காரரும்.. வெளிநாட்டுக்காசும்.. வெளிநாட்டுப் பகட்டும்.. அல்ல பதில்..!

அவை காரணமில்லை என்று சொல்லவில்லை.. ஆனால்.. அதையும் தாண்டிய உள்ளூரில்.. சீரமைக்கப்பட வேண்டிய காரணிகள் பல உள்ளன. அவற்றிலும் கவனம் செலுத்தப்படுதல் அவசியம் ஆகும்.

போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தான் அதிகம் கல்வி வீழ்ச்சியை காண்பிக்கிறது குறிப்பாக 2009 மே க்குப் பின்.. ஏன்..??!

இதன் பின்னணியில்.. இராணுவ பிரசன்னம்.. அது சார்ந்து.. கஞ்சா.. பாலியல்.. பொழுதுப்போக்கு அம்சங்கள் என்று பிள்ளைகளின் கவனத்தை சிதறடிக்கும் நடவடிக்கைகளும்.. தாக்கம் செய்கின்றன. 

இவை எல்லாம் சேர்த்துப் பார்க்கப்பட்டு சீரமைக்கப்பாட்டால் இன்றி.. தமிழர் பிரதேச கல்வித்தரம் திடீர் என்று உயர்வு காண்பது சாத்தியமில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பரீட்சையில் யாழ் தான் கடைசி இடமாமே:shocked: [நம்ப முடிகிறதா ? மட்டு அதற்கு முன் உள்ளது ...இணைய மூலம் கற்பதில் குறைபாடுகள் இருக்கலாம் ...ஆசியர்களும் சூமில் சும்மா நேரத்தை கடத்தி இருப்பர்[அவர்களை கண்காணிக்க ஒருத்தரும் இல்லை.] அல்லது எப்படி படிப்பிப்பது  என்று தெரியாமல் இருக்கும்...பெற்றோர்களும் கவனமில்லை .பிள்ளைகள் இணையத்தில் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதேயில்லை ....எல்லா மாணவர்களுக்கும் இணைய வசதி இல்லை ....எல்லாவற்றையும் விட வெளிநாட்டு காசு போன்றவை வீழ்ச்சிக்கு காரணம்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nedukkalapoovan said:

அவை காரணமில்லை என்று சொல்லவில்லை.. ஆனால்.. அதையும் தாண்டிய உள்ளூரில்.. சீரமைக்கப்பட வேண்டிய காரணிகள் பல உள்ளன. அவற்றிலும் கவனம் செலுத்தப்படுதல் அவசியம் ஆகும்.

நீங்கள் யாழ் இணையத்தில் இந்த இணைப்பை இணைத்திருந்தீர்கள்.. நன்றாக ஆராய்ந்து பல விடயங்களை கூறியிருக்கிறார்கள்.. 

இதனை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் என்ன? 

பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவ சங்கங்கள் தொடங்கி சில பொறுப்புகளை உணர்ந்து செயல்களை செய்வதற்கு எது தடைபோடுகிறது? 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.