Jump to content

202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்: முதல்வர் ஸ்டாலின்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்: முதல்வர் ஸ்டாலின்

 

spacer.png

4 மாதங்களில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில், 505 வாக்குறுதிகளை அளித்தது. ஆனால், திமுக பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்தது. நீட் தேர்வு விலக்கு, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. திமுக மக்களை ஏமாற்றுகிறது என எதிர்க்கட்சிக் தலைவர் எடப்பாடி பழனிசாமி புகார் கூறி வருகிறார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் இன்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில், “மக்களாகிய நீங்கள் அளித்த ஒவ்வொரு வாக்கும் இன்றைக்கு நான் கோட்டையில் உட்காருவதற்கு அடித்தளமாக அமைந்தது. இவர்களுக்கு வாக்களித்தால், கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவார்கள். மக்களுக்கு ஏராளமான நன்மைகளைச் செய்வார்கள் என்று நம்பி நீங்கள் வாக்களித்திருக்கிறீர்கள்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னர், திமுகவின் சார்பில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டோம். நான் அதை வெளியிட்டபோது, தலைவர் கருணாநிதி பாணியில் 'சொன்னதைச் செய்வோம் - செய்வதைத்தான் சொல்வோம்' என்று சொன்னேன்.

505 வாக்குறுதிகளைத் தந்தோம். அவற்றில் பெரும்பாலானவற்றை 4 மாதங்களில் நிறைவேற்றி விட்டோம்.

கொரோனா நிவாரண நிதி ரூ.4000, ஆவின் பால் லிட்டருக்கு விலை ரூ.3 குறைப்பு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவினத்தை முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் அரசே ஏற்பு ஆகிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, வேளாண்மைக்கென்று தனியான ஒரு நிதிநிலை அறிக்கை, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட நகைக் கடன் தள்ளுபடி, மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்திச் சட்டப்பேரவையில் தீர்மானம், நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவதற்கான சட்ட முன்வடிவைப் பேரவையில் தாக்கல் செய்தல் மற்றும் தீர்மானம் நிறைவேற்றுதல், குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த அனைத்து நபர்களுக்கும் பதினைந்து நாட்களுக்குள் 'ஸ்மார்ட் கார்டு', அரசுப் பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 40% ஆக உயர்வு உள்ளிட்ட 20 வாக்குறுதிகளைப் பட்டியலிட்டார்.

மேலும், சட்டப்பேரவை விவாதங்களை முழுமையாகக் கவனித்தவர்களுக்கு நான் சொல்வது முழு உண்மை என்பது தெரியும் என்று கூறிய அவர், ஆளுநர் அறிக்கையில் 51 வாக்குறுதிகளும், எனது பதிலில் இரண்டு வாக்குறுதிகளும், நிதிநிலை அறிக்கையில் 43 வாக்குறுதிகளும், வேளாண் நிதி நிலை அறிக்கையில் 23 வாக்குறுதிகளும், அமைச்சர்கள் வெளியிட்ட அறிவிப்புகளில் 64 வாக்குறுதிகளும், இதர அறிவிப்புகளில் 16 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.

அதோடு, தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல நல்ல செயல்களும் செய்யப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு அனைத்து தொழிற்கல்வி இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளிலும், 7.5 விழுக்காடு இடங்கள் முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்தல். இப்படி இடம்பெற்றவர்களுக்குக் கட்டணம் முழுமையாகச் செலுத்த வேண்டியது இல்லை. அனைத்துச் சாதி அர்ச்சகர்கள் - பெண் ஓதுவார் நியமனம். அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகைப் பொருட்களின் தொகுப்பு., திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகை. தமிழகத்தில் உள்ள முகாம் வாழ் இலங்கைத் தமிழர் நலனைப் பேணிட வீடு மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, 317 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1987-ம் ஆண்டு இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் பலியான சமூக நீதிப் போராளிகளின் நினைவாக விழுப்புரம் மாவட்டத்தில் ரூ. 4 கோடி செலவில் மணிமண்டபம் அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிக்கப்படாத திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

505 வாக்குறுதிகளில் நான்கு மாதங்களுக்குள் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டிய அரசு, இந்தியத் துணைக் கண்டத்திலேயே திமுக அரசாகத்தான் இருக்கும். இதனை ஏதோ ஆரம்ப வேகம் என்று நினைக்க வேண்டாம்; எப்போதும் இப்படித்தான் இருப்போம். எல்லா நாளும் இப்படித்தான் செயல்படுவோம்.

இப்போது அறிவித்ததுபோல மூன்று மாதத்திற்கு ஒருமுறை நானே உங்களிடம் இதைச் சொல்வேன். நிறைவேற்றிய வாக்குறுதிகளை நானே உங்களுக்குப் பட்டியல் போட்டுக் காண்பிப்பேன். வாக்களித்த மக்களை ஐந்து ஆண்டுகள் கழித்துத்தானே பார்க்கப் போகிறோம் என்று அலட்சியமாக இருப்பவன் இல்லை நான். என்னை இயக்கிக் கொண்டு இருப்பது மக்களாகிய நீங்களும் எனது மனசாட்சியும்தான். நீங்கள் உத்தரவிடுங்கள் உங்களுக்காகவே உழைக்கக் காத்திருக்கிறேன்!" என்று தெரிவித்துள்ளார்.

 

https://minnambalam.com/politics/2021/09/25/17/202-Promises-fullfilled-Chief-minister-Stalin

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.