-
Tell a friend
-
Topics
-
1
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
இணைப்புக்கு நன்றி.
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
பண்டைய தென்ஈழத்தில், (இலங்கை) இருந்த மகா நாககுல இராச்சியத்தில் சிவவழிபாடு! பண்டைய தென்னிலங்கையில் இருந்த மகா நாககுல இராச்சியத் தின் சுவடுகளைத் தேடிச் சென்றேன். 2300 வருடங்களுக்கு முன்பு மகாநாகன் எனும் நாகமன்னன் அமைத்த இரு இராச்சியங்களில் ஒன்றே மகாநாககுல எனும் இராச்சியமாகும். பராக்கிரமபாகுவின், தமிழ்த் தளபதியான... ரக்கா கங்குகநாதன் என்பவன் 1000 ஆண்டுகளுக்கு முன்பு சுகலா எனும் அரசியிடம் இருந்து இந்த இராச்சியத்தைக் கைப்பற்றி சிலகாலம் ஆட்சி செய்து வந்தான் எனும் குறிப்பும் உள்ளது. எனவே பிற்காலத்தில் இது ரக்கா நுவர (ரக்கா நகரம் ) எனப் பெயர் பெற்றது. அதுவே பின்பு ரம்பா நுவர எனத் திரிபடைந்தது. அம்பாந்தோட்டை நகரின் வடக்கில்... 12 கி.மீ தூரத்தில் இந்த இராச்சியத்தின் இடிபாடுகள் காணப்படுகின்றன. வன நதி எனும் வளவ கங்கை. கொஸ்வத்து ஆறு ஆகியவற்றால் சூழப்பட்ட ஓர் தீவின் நடுவில் 250 ஏக்கர் பரப்பளவில் இந்த பண்டைய நகரம் அமைந்து ள்ளது. இங்குள்ள பௌத்த விகாரையின் பின்பக்கம் இருக்கும் காட்டுப் பகுதியில் இதன் இடிபாடுகள் அதிகளவில் காணப்படுகின்றன. நாகவழிபாட்டில் ஈடுபாடு கொண்ட மகாநாக மன்னனின் நகரில் நாக வழிபாட்டின் சுவடுகளைத் தேடிச் சென்றேன். அப்படிப்பட்ட சுவடுகள் எதுவும் அங்கு கிடைக்கவில்லை. ஆனால் அது சிவபூமி யாக இருந்தது. இங்கிருந்த காட்டுப்பகுதியில் இருந்த இடிபாடுகளின் மத்தியில்.. மொத்தமாக 7 சிவலிங்கங்களைக் கண்டேன். மிகப்பழமையான சிதைந்த லிங்கங்கள் மூன்று. பழமை வாய்ந்த தாரா லிங்கங்கள் மூன்று. பழமையான நாகலிங்கம் ஒன்று. பழமையான ஆவுடையார் ஒன்று. இவை எல்லாமே 1500 வருடங்களுக்கு முற்பட்டவை. 3000 ஆண்டுகளுக்கு முன்பு திருமூலர் குறிப்பிட்ட சிவபூமியின் பண்டைய சுவடுகள்... தென்னிலங்கையில் தான் உள்ளன. ஆம். இதுதான் சிவபூமி. என்.கே.எஸ்.திருச்செல்வம் வரலாற்று ஆய்வாளர் ஈழம்(இலங்கை) அம்பாந்தோட்டை இலங்கையின் தென் மாகாணத்தின்... அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இலங்கையின் தெற்கு கரையோரம் அமைந்துள்ள... நகரசபை ஆகும். இது அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தலைநகரமுமாகும். புவியியலும் காலநிலையும் அம்பாந்தோட்டை கரையோரச் சமவெளி என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 0-15 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 27 பாகை செல்சியஸ் ஆகும். இலங்கையின் இரண்டு பருவபெயர்ச்சிக் காற்றுகளிலும் மழைவீழ்ச்சியைப் பெறாத அம்பாந்தோட்டை குறைவரல் வலயத்தில் அமைந்துள்ளது. 1950 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது. மக்கள் இது சிங்களவர்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு நகரசபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டின் மக்களின அடிப்படையிலான மொத்த மக்கள் தொகையில், மொத்தம்-46777 இதில், சிங்களவர்-37839 தமிழர்-805 இந்திய வம்சாவழி-54 இஸ்லாமியர்-2830 பரங்கியர்-52 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு: மொத்தம்-46777 இதில், பௌத்தர் -37769 சைவம்-590 இஸ்லாம்-8092 கத்தோலிக்கம்-169 ஏனைய கிறிஸாதவம்-141 ஏனையவர்-16 இதிலிருந்து இந்த அம்பாந்தோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்... தமிழர்கள், காலம் காலமாக சைவ சமயத்தோடு பாரம்பரியமாக வாழ்ந்த பகுதிகள், இன்று கை நழுவி... சிங்கள பௌத்த குடியேற்றங்கள் மூலம், சிங்களவர் தேசமாக போன பரிதாபம். https://m.facebook.com/story.php?story_fbid=424281546189401&id=100058226779513 https://www.facebook.com/110874614371759/posts/445613364231214/ வேரடி தேடுவோம். -
By தமிழ் சிறி · Posted
50 நாளில்... 74 வருட அரசியலின், முகமூடியை கழட்டிய, காலிமுகத்திடல் போராட்டம். -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
தேசபந்து தென்னகோனின்... தொலைபேசி இதுவரை, கைப்பற்றப்படவில்லை: சாட்சியங்கள் அனைத்தையும் அழிக்க கால அவகாசம்? சட்டமா அதிபர் பணிப்புரை வழங்கி 5 நாட்கள் கடந்தும் தேசபந்து தென்னகோனின் தொலைபேசியை இதுவரை சி.ஐ.டியினர் கைப்பற்றவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அவரது தொலைபேசியைக் கைப்பற்றி பகுப்பாய்வை மேற்கொள்ள சட்டமா அதிபர் கடந்த 23 ஆம் திகதி சி.ஐ.டியினருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். ஆனால் ஐந்து நாட்களாகியும் அவரிடம் இருந்து தொலைபேசியை பெற்றுக்கொள்ள சி.ஐ.டி. எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஈஸ்டர் தாக்குதலில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன செய்தது போல் சாட்சியங்களை அழிக்க நேரம் கொடுக்கப்படுகின்றது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. https://athavannews.com/2022/1284258
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.