Jump to content

மாவீரர்நாள் பாடலைப் பாடிய வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான 'மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி' என்ற பாடல் உட்பட தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர், சங்கீத, மிருதங்க கலாவித்தகரும் இசைக்கலாமணியுமான வர்ண ராமேஸ்வரன் அவர்கள் இன்று சனிக்கிழமை காலை கனடாவில் சாவடைந்துள்ளார்.

 

யாழ்ப்பாணம், அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள். ஆரம்பக் கல்வியை அளவெட்டி சீனன்கோட்டை ஞானோதய வித்தியாசாலையிலும், பின்னர் உயர் கல்வியை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார்.

 

சிறுவயதிலேயே வாய்ப்பாட்டு, பண்ணிசை, வீணை, வயலின் எனும் கலைகளைத் தமது தந்தையாரான 'கலாபூஷணம்' 'சங்கீதரத்தினம்' வர்ணகுலசிங்கம் அவர்களைக் குருவாக் கொண்டு கற்கத் தொடங்கியவர். பின்னர் மிருதங்கம், பியானோ ஆகிய வாத்தியக் கருவிகளையும் முறையாகக் கற்றுக் தேறிய பெருமைக்குரியவர்.

 

வடஇலங்கை சங்கீத சபையினால் நடாத்தப்பட்ட வாய்பாட்டு, மிருதங்கம் ஆகியவற்றுக்கான பரீட்சைகளில் ஆசிரிய தரம் வரை கற்றுத்தேறி சங்கீத, மிருதங்க கலாவித்தகர் என்ற பட்டம் பெற்ற பின்னர், யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுன்கலைக் கல்லூரியில் இசைக்கலாமணி பட்டம் பெற்று, அங்கு நான்கு ஆண்டுகளுக்குமேலாக இசை விரிவுரையாளராகவும் பணியாற்றிவர்.

 

இலங்கை வானொலி மற்றும் தொலைக்காட்சிச் சேவைகளின் நிகழ்ச்சிகளில் இசைக்கலைஞராக இருந்து பல சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றிருந்தார். 

 

இலங்கை இந்து கலாசார அமைச்சினால் இசை நடன ஆசிரியர்களுக்கு என நடத்தப்பட்ட பயிற்சிப் பட்டறைகளை தலைமை தாங்கி நடத்தியிருந்தார்.

 

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இசை மேற்படிப்பை மேற்கொண்ட வர்ண ராமேஸ்வரன், தமிழகத்தின் முதன்மைக் கலைஞர்களில் ஒருவரான திருவாரூர் பக்தவத்சலம் அவர்களிடம் மிருதங்கத்தையும் இசை மேசை ரி.எம். தியாகராஜன் , கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி, ரி.வி கோபாலகிருஷ்ணன் ஆகியோரிடம் இசை நுணுக்கங்களையும் கற்றுத்தேறி, தமிழ்நாட்டில் பல இசைக்கச்சோிகளையும் நடத்திப் பலரதும் பாராட்டைப் பெற்றவர்.

 

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணித்து பல போராட்டத்திற்கா விடுதலைப் பாடல்களைப் பாடியிருக்கின்றார். அதில் மாவீரர் நாளில் மட்டும் ஒலிப்பரப்பாகும் பாடலான மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி என்ற பாடல் வர்ண ராமேஸ்வரானால் பாடப்பட்டது. அத்துடன் பல மாவீரர்கள் நினைவுப் பாடல்கள், போராட்ட வெற்றிச் சமர் பாடல்கள், நல்லை முருகள் பாடல்கள் என அவரால் பாடப்பட்ட பாடல்கள் பல எம்முன்னே இருக்கின்றன.

 

1997 ஆம் ஆண்டு தமிழர்களின் போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் புறநானூறு பாடல்கள் பலவற்றை நவீன இசையில் இசையமைத்து (இவருடன் வேறு நபர்களையும் இணைந்து) இசைநாடகமாக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரகாரன் அவர்கள் முன் அரங்கேற்றி பாராட்டைப் பெற்றிருந்தார். இதில் அன்று இம்ரான் - பாண்டியன் படையணியின் போராளிகள் குறித்த இசை நாடகத்தில் பாடல்களைப் பாடி நடித்திருந்தார்கள்.

 

கனடாவுக்குப் ரொறன்ரோவுக்குப் புலம் பெயர்ந்த வர்ண ராமேஸ்வரன் அவர்கள் மிருதங்க, நடன அரங்கேற்றங்களுக்கு முன்னணிப் பாடகராக விளங்கினார். வர்ணம் இசைக் கல்லூரியை அவர் அங்கு உருவாக்கி பல நகரங்களில் இசை வகுப்புக்களை நடாத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக வர்ணம் ஒன்லைன் இணைய இசைக்கல்லூரியை உருவாக்கி அதனை நிர்வகித்து வந்திருந்தார்.

 

அத்துடன் கனடாவில் தாயப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் தாய் அமைப்புடன் இணைந்து அன்றைய காலகட்டத்தில் நடத்தப்பட்ட பல போராட்டங்களுக்கான பல பாடல்களை இசையமைத்துப் பாடியுள்ளார் என்பது இங்க நினைவூட்டத்தக்கது.

 

அவர் வாழ்ந்த காலத்தில் தாயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடனும் புலம் பெயர் நாட்டில் தாயகம் நோக்கிக் கனடாவில் செயற்பட்ட தாய் அமைப்புடனும் இறுவரை நின்று போராட்டத்தை வலுவாக்கும் இசைத்துறை ஊடான தனது கடமைகளை முடிந்தளவு செய்து தனது இசைப் பணிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அந்தவகையில் எம்முன்னே வாழ்ந்த அந்த தேசப் பற்றாளனை நாமும் ஒரு கணம் நெஞ்சில் நிறுத்தி வணக்கம் செலுத்துவதே அவருக்கு நாம் செய்யும் இறுதி மரியாதையாகும்.

 

புதுவை இரத்தினதுரை அவர்களின் வரிகளில் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் பாடிய மாவீரர் நாள் பாடல் வரிகள் கீழே பார்வையிடலாம்

 

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

 

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

 

இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!

இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!

 

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

 

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

 

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

 

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே

 

வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!

வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!

 

சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!

 

எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

 

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

 

உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!

அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!

அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!

 

உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!

தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!

எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!

எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!

 

எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

 

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

 

https://www.pathivu.com/2021/09/varnarameswaran.html?m=1

  • Sad 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்.

அருமையான கலைஞன். தாயக, இனப் பற்றாளன். பழக இனிமையானவரும் கூட.

புறநானூற்று பாடல் வெளியீடு 1997 இலா நடந்தது ? இவர் 1995 இல் புலம்பெயர்ந்தார் என நினைகிறேன்.

Link to comment
Share on other sites

மிகவும் கவலையான செய்தி. கண்ணீர் அஞ்சலி.

கொரனா இன்னும் எத்தனை நல்லுயிர்களை கொண்டு செல்லப் போகின்றதோ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

கண்ணீர் அஞ்சலிகள்.

  • Sad 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  கனடாவும்  தமிழ் குழந்தைகளும் ஒரு நல்ல ஆசானை இழந்துவிட்டார்கள். ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

May be an image of 1 person
 

"ஈழத்து இசைவாரிதி" வர்ணராமேஸ்வரன் அண்ணாவின் பேரிழப்போடு இன்றைய காலை விடிந்திருக்கிறது.
இதே நாளில் எம் ஈகைச் சுடர் தியாகி திலீபன் அண்ணாவின் நினைவிரங்கலைச் செய்யும் போது இப்படியொரு அதிர்ச்சியான செய்தி வந்திருக்கிறது.
ஈழத்தில் அவரின் தாயக எழுச்சிப் பாடல்களைக் கேட்ட காலம் தொட்டு அவரின் ரசிகனாகத் தொடர்ந்த பந்தம் கடல் கடந்த பின்னும் வாட்சாப் வழி தன் புதுப் புது இசைப் படைப்புகளைப் பகிர்வது வரை தொடர்ந்து இப்படிச் சடுதியாக ஓயுமென்று நினைப்பேனா?
வர்ணராமேஸ்வரன் அண்ணாவுடன் 2008 இல் நிகழ்த்திய வானொலிப் பேட்டியில் எழுத்து வடிவம்
பேட்டியின் ஒலி வடிவம்
பாகம் 1
பாகம் 2
மாவீரர் துயிலுமில்லப் பாடல், எழுச்சிப் பாடல்கள் மற்றும் ஈழத்துப் பக்தி இசை இலக்கியங்களின் வழி அவர் எம்மில் வாழ்வார்.
கானா பிரபா
26.09.2021
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

ஆழந்த அஞ்சலிகள்.🪔 இவரின் நல்லை கந்தன் பாடல் இசைத்தட்டு மிக பிரபல்யமானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

"தாயகக் கனவுடன் பாடிய பாடகா - உன்

பாட்டினில் வாழ்வாய் என்றும்!"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

90 களின் இறுதியில் புலம்பெயர்ந்து நோர்வேயிலிருந்தார் என்று நினைக்கிறேன். கனடாவில் வாழ்ந்தார் என்று இப்போதுதான் தெரியும்.

வானொலி நிகழ்ச்சிகளில் தான் பொன் சுந்தரலிங்கத்தின் மாணவன் என்றும் சொன்னதாக ஞாபகம். புலிகளின் கலை பண்பாட்டு குழுவில் இருந்த சாந்தன் சிட்டு வர்ண ராமேஸ்வரன் மூவரும் உச்சம் தொட்ட பாடகர்கள், வர்ண ராமேஸ்வரன் சிட்டுவின் மிக நெருங்கிய நண்பரும்கூட. இன்று மூவருமேயில்லை.

அது ஏன் சாவடைந்தார் என்று ஒரு வார்த்தை?  தன்னால் முடிந்த பங்களிப்பை ஒரு இனத்துக்கு ஆற்றிவிட்டு போன ஒரு கலைஞன் மறைவை கெளரவமாக சொல்ல தமிழில்பல வார்த்தைகள் இருக்கின்றனவே.

கண்ணீர் அஞ்சலிகள் எம் கலைஞனுக்கு,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த  அனுதாபங்கள். சிறந்த இசைக்கலைஞனை இழந்து விட்டோம். 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அற்புத ஈழத்து கலைஞன் வர்ணாராமேஸ்வரனுக்கு அஞ்சலிகள்.

தாயகக் கனவோடு 
சாவினை தழுவிய 
சங்கீத சுரமே 
ஒரு தரம் உனது 
விழியினைக் காட்டியே 
மறுபடி உறங்காயே
உயிர்விடும் வேளையில் 
உன்னது வாயது 
உரைத்ததோ சங்கீதம்
இங்கு கூவிடும் எங்களின் 
குரல்மொழி கேட்கிதா.


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வர்ண இராமேஸ்வரனிற்கு ஈழத்திலிருந்து அஞ்சலி!

 

Warna.jpg


வெறும் வாய்ச்சொல் வீரர்கள் போலன்றி தாயகத்தில் யுத்ததால் வீழ்த்தப்பட்ட அடித்தட்டு மக்களது வாழ்வியலை கட்டியெழுப்புவதன் மூலமே கனவுகளை மெய்ப்பிக்கலாமென செயற்பட்டவர் வர்ண இராமேஸ்வரன் என வடமாகாணத்தின் முன்னணி ஆடை தொழிற்சாலையான இலங்கை நெய்தல் நூற்றல் ஆலை பணிப்பாளர் சபை தெரிவித்துள்ளது.

 

கொரோனா பெரும் தொற்றின் மத்தியில் தாயகத்தில் தங்கியிருந்த ஈழப்பாடகன் வர்ண இராமேஸ்வரன் வெறுமனே வீட்டினுள் முடங்கியிருக்கவில்லை.வடமராட்சியின் வல்லையில் இயங்கிவரும்  இலங்கை நெய்தல் நூற்றல் ஆலையினை மேலும் மேம்படுத்தி நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகளிற்கு வேலை வாய்ப்பினை வழங்குவதே வர்ண இராமேஸ்வரனது நோக்கமாகவிருந்தது.

 

கொரோனா தொற்றினால் ஆலை முடங்கிவிடாதிருக்க நாள் தோறும் பயணித்த இராமேஸ்வரன் பணியாளர்களிற்கு நம்பிக்கையூட்ட நாள் கணக்கில் தங்கியிருந்து ஆலோசகைகளை வழங்கியதையும்  இலங்கை நெய்தல் நூற்றல் ஆலை பணிப்பாளர் சபை நன்றியுடன் நினைவுகூருகின்றது.

 

இலாப நோக்கற்ற ஆலையினை வலுப்படுத்தவும் இலாபத்தை பணியாளர்களிற்கு பங்கிட்டு கொடுக்கவேண்டுமெனவும் முன்னின்று இராமேஸ்வரன் பாடுபட்டிருந்தார்.

 

தாயகத்திலுள்ள தனது வயோதிப தாயாரை ஒருபுறம் பாதுகாத்தவாறு கலைகளிற்கான அகடமியொன்றை யாழில் கட்டியெழுப்பிக்கொண்டிருந்த அவர் கனடாவிலுள்ள தனது குடும்பத்தை மீண்டும் தாயகம் அழைத்துவரவும் ஆர்வம் கொண்டிருந்தார்.

 

ஆனாலும் விதி வலியது.கனவுடன் கனடாவிற்குள் தரையிறங்கிய ஈழப்பாடகனை பெருந்தொற்று பலியாக்கிவிட்டது.

 

https://www.pathivu.com/2021/09/Ealam.html?m=1

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள். தாயகப் பாடல்களை இசைத்த கலைஞனை இழந்துவிட்டோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்..

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது : வட மாகாண போக்குவரத்து குழுமம் தெரிவிப்பு Published By: DIGITAL DESK 7    16 APR, 2024 | 10:14 AM யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நெடுந்தூர பயணிகள் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து தனியார் பேருந்துகளுடன் இணைந்த சேவையை வழங்க முடியாது என இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாண குழுமத்தின் தலைவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் புதிதாக கட்டப்பட்ட நெடுந்தூர பயணிகள் பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள் இணைந்த நேர அட்டவணையில் பயணிக்க முடியும் ஆனால் இணைந்த சேவையை குறித்த தரிப்பிடத்தில் இருந்து வழங்க முடியாது . நேற்றைய தினம் திங்கட்கிழமை வட மாகாண ஆளுநர் செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் ஆகியோர் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து சங்கம் ஆகியவற்றுடன் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இணைந்த சேவையை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இருவரும் இணைந்த சேவையை வழங்குவது தொடர்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில் தொழிற்சங்கங்கள் இணைந்த சேவைக்கு சம்மதிக்க மறுக்கின்றன. அதற்கான காரணங்களும் வலுவாக இருக்கிறது உதாரணமாக வவுனியா பேருந்து தரிப்பிடத்தில் பெரும்பாலான வெளி மாவட்டத்துக்கான சேவையை வழங்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் உள்ளே செல்லாது வெளியில் நின்றே பயணிகளை ஏற்றுகின்றன. இலங்கை போக்குவரத்துச் சபை சாரதிகள் நடத்துனர்கள் தனியார் பேருந்து சாரதி நடத்துனர்களால் தாக்கப்பட்ட சம்பவங்கள் பல தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து சேவையில் ஈடுபடும் போது பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க கூடும் என தொழில் சங்கங்கள் எண்ணுகின்றன. யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கான பேருந்து தரிப்பிடத்தில் இருந்து எமது பேருந்துகள் தனித்துவமான சேவைகளை வழங்கி வரும் நிலையில் அதனை நாம் குழப்புவதற்கு விரும்பவில்லை. வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் தனியாருடன் இணைந்த நேர அட்டவணையில் பயணிப்பதற்கு எமது விருப்பத்தை தெரிவித்துக் கொள்வதோடு இணைந்த சேவையை புதிய பேருந்து தரிப்பிடத்தில் மேற்கொள்வதற்கு சங்கங்கள் விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181189
    • மகிழ்சசியான சுற்றுலா மனித வாழ்விற்கு இன்றியமையாதது. தொடருங்கள். 
    • கடைசி இடத்தில் ஆர்சிபி; தவறு நடந்தது எங்கே? கேப்டன் கூறுவது என்ன? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வீடியோ கேம்ஸிஸ் கிரிக்கெட் பார்த்த, விளையாடிய உணர்வு ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தின்போது ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும். 38 சிக்ஸர்கள், 43 பவுண்டரிகள், ஒரே போட்டியில் 549 ரன்கள், 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிய சோகம், அதிகபட்ச ஸ்கோர் என நேற்றைய ஐபிஎல் டி20 ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை பட்டியலிடலாம். ஆட்டத்தைப் பார்க்க வந்த ரசிகர்களுக்கு கழுத்துவலி கூட வந்திருக்கலாம். ஏனென்றால், கிட்டத்தட்ட 40 ஓவர்களில் 9 ஓவர்களில் வெறும் சிக்ஸர், பவுண்டரிகளாகவே அடிக்கப்பட்டது. மிகச்சிறிய மைதானமான சின்னசாமி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் எப்படி வீசினாலும் பேட்டை நோக்கித்தான் வந்தது என்பதால் பேட்டர்கள் கருணையற்றவர்களாக மாறினர். யாருக்கு எப்படி பந்துவீசுவது எனத் தெரியாமல் ஆர்சிபி பந்துவீச்சாளர்களும், சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களும் திணறி நின்றதைக் காண முடிந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்தது. 288 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வி என 8 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறியது. நிகர ரன்ரேட்டிலும் பெரிய ஸ்கோர் அடித்தும் பெரிய முன்னேற்றமில்லாமல் 0.502 ஆக இருக்கிறது. டி20 போட்டிகளில் 250ரன்களுக்கு மேல் அதிகமுறை அடித்த அணி என்ற பெருமையை சன்ரைசர்ஸ் அணி நேற்று பெற்றது. ஆர்சிபி அணியைப் பொருத்தவரை இவ்வளவு பெரிய ஸ்கோரை அடித்தும் தோல்வி அடைந்த முதல் அணியாக மாறிவிட்டது. 7 போட்டிகளில் ஒரு வெற்றி, 6 தோல்விகள் என 2 புள்ளிகளுடன் ஆர்சிபி அணி கடைசி இடத்தில் நீடிக்கிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய ஹைதராபாத் வீரர்கள் சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரிய ஸ்கோரை அமைத்துக் கொடுத்தவர்களில் முக்கியமான பேட்டர் டிராவிஸ் ஹெட் 102 (41பந்துகள், 8சிக்ஸர், 9பவுண்டரி). ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக் கோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்த ஹெட், நேற்றைய ஆட்டத்தில் முதல் சதத்தைப் பதிவு செய்து ஆட்டநாயகன் விருது வென்றார். 39 பந்துகளில் சதம் அடித்து, அதிவேக சதம் அடித்த 4வது பேட்டர் என்ற பெயரை ஹெட் பதிவு செய்தார். சன்ரைசர்ஸ் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த முதல் பேட்டர் என்ற பெயரை ஹெட் பெற்றார். இதற்கு முன் வார்னர் 43 பந்துகளில் சதம் அடித்திருந்தார். மற்றொரு பேட்டர் ஹென்ரிச் கிளாசன் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த சீசன் முழுவதும் பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்னமாக திகழ்ந்துவரும் கிளாசன் 31 பந்துகளில் 67 ரன்கள்(7சிக்ஸர், 2 பவுண்டரி) அடித்து ஆட்டமிழந்தார். இது தவிர மார்க்ரம் 32(17பந்துகள், 2சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்), அப்துல் சமது37(10 பந்துகள் 3 சிக்ஸர்கள், 4பவுண்டரிகள்) என ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த 4 பேட்டர்கள் அடித்த ஸ்கோர்தான் மற்றவகையில் பெரிதாக எந்த பேட்டரும் ஸ்கோர் செய்யவில்லை.   பட மூலாதாரம்,SPORTZPICS சன்ரைசர்ஸ் கேப்டன் கூறியது என்ன? சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் “ நானும் பேட்டராக இருந்திருக்கலாம் என நினைக்க வைக்கிறது. மும்பைக்கு எதிரான ஆட்டத்துக்குப் பிறகு இப்போது மீண்டும் பெரிய ஸ்கோர் அடித்துள்ளோம். போட்டி பேட்டர்கள் ராஜ்ஜியமாகமாறி வருகிறது. இந்த ஆடுகளத்தை படிக்க நானும் முயற்சித்தேன். எங்கள் ஆட்டம் மகிழ்ச்சியாக இருக்கிறது. 4 வெற்றிகள் பெற்றுள்ளோம். பேட்டர்களுக்கு முழுசுதந்திரம் அளித்துள்ளோம். அதனால்தான் பெரிய ஸ்கோர் வருகிறது” எனத் தெரிவித்தார் ஆர்சிபி கொடுத்த பதிலடி ஆர்சிபி அணியிலும் கேப்டன் டூப்பிளசிஸ் 28 பந்துகளில் 62 ரன்கள்(4சிக்ஸர், 7பவுண்டரி), விராட் கோலி 42 (2சிக்ஸர், 6பவுண்டரி), தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 85(7சிக்ஸர், 5 பவுண்டரி) என விளாசினர். இதில் ஆர்சி அணியில் நடுவரிசை பேட்டர்கள் ரஜத் பட்டிதார், வில் ஜேக்ஸ், சவுகான் ஆகிய மூவவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்காமல் தங்களின் பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தால், ஆர்சிபி அணி ஒருவேளை வென்றிருக்கலாம். சன்ரைசர்ஸ் அடித்த ஸ்கோருக்கு தாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்று ரீதியில்தான் கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் ஆக்ரோஷமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகழ்த்தப்பட்ட சாதனைகள் இந்த ஆட்டத்தில் சில சுவையான சம்பவங்கள் நடந்துள்ளன. ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோரான 287 ரன்களை சன்ரைசர்ஸ் அணி பதிவு செய்தது. இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இந்த சீசனில் 277 ரன்கள் சேர்த்ததுதான் சாதனையாக இருந்தது, தன்னுடைய சாதனையை அந்த அணியை முறியடித்தது. ஆடவர் டி20 போட்டியில் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஓட்டுமொத்தமாக நேற்றைய ஆட்டத்தில் 549 ரன்கள் சேர்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன் ஹைதராபாத்தில் இந்த சீசனில் நடந்த மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தில் ஒட்டுமொத்தமாக 523 ரன்கள் சேர்க்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தநிலையில் அந்த சாதனை முறியடிக்கப்பட்டது. ஆர்சிபி அணிக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 22 சிக்ஸர்களை விளாசி, ஒரு இன்னிங்ஸில் ஒரு அணிக்கு எதிராக அடிக்கப்பட்டஅதிகபட்ச சிக்ஸர்களைப் பதிவு செய்தது. இதற்கு முன் 2013-இல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி 21 சிக்ஸர்களை அடித்த நிலையில் அதை சன்ரைசர்ஸ் முறியடித்துவிட்டது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்ந்து 38 சிக்ஸர்களை விளாசின. டி20 போட்டியில் அதிக பட்சமாக 262 ரன்கள் சேர்த்தும் தோல்வி அடைந்த முதல் அணி என்ற பெயரை ஆர்சிபி பெற்றது. இதற்குமுன் 2023ம் ஆண்டில் செஞ்சூரியனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 258 ரன்களை மேற்கிந்தியத்தீவுகள் சேர்த்தும் தோல்வி அடைந்ததுதான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. ஆர்சிபி அணியில் பந்துவீச்சாளர்கள் டாப்ளி(68), யாஷ் தயார்(51), லாக்கி பெர்குஷன்(52), விஜயகுமார்(64) என 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். ஒரு போட்டியில் 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தது இதுதான் முதல்முறை. சன்ரைசர்ஸ் அணியில் நேற்று மட்டும் 4 பேட்டர்கள் ஒரு சதம் பார்ட்னர்ஷிப்பும் உள்பட, 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஐபிஎல் வரலாற்றில் இது 2வது முறையாக நடக்கிறது. இதற்கு முன் 2008-இல் ஆர்சிபிக்கு எதிராக கொல்கத்தா அணியின் 4 பேட்டர்கள் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.   பட மூலாதாரம்,SPORTZPICS ஆர்சிபி இதயத்தை உடைத்த ஹெட் ஆர்சிபி அணி நேற்றைய ஆட்டத்தில் முறையான சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களமிறங்கியது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா என இரு இடதுகை பேட்டர்கள் களத்துக்கு வந்ததும் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளரான ஜேக்ஸை பந்துவீசச் செய்து சோதிதித்துப் பார்த்தது. முதல் இரு ஓவர்கள் மட்டும் பொறுமை காத்த ஹெட், அபிஷேக் அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரி, சிக்ஸர்களாக அடிக்கத் தொடங்கினர். எந்தப் பந்துவீச்சாளர் பந்துவீசினாலும் ஹெட், அபிஷேக் பேட்டிலிருந்து பவுண்டரி, சிக்ஸர்களாக பறந்தன. ஆர்சிபிக்காக முதல்முறையாக களமிறங்கிய பெர்குஷன் 5-ஆவது ஓவரில் ஹெட் சிக்ஸர்களாக விளாசி 18 ரன்களையும், யாஷ் தயால் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் என 20 ரன்களையும் சேர்த்தார். 20 பந்துகளில் ஹெட் அரைசதம் அடித்தார். பவர்ப்ளே ஓவரில் சன்ரைசர்ஸ் 76 ரன்கள் சேர்த்தது. பவர்ப்ளேயில் சன்சைர்ஸ் சேர்த்த 3வது அதிகபட்ச ரன்களாகும். இதற்குமுன் மும்பை அணிக்கு எதிராக 81 ரன்கள், சிஎஸ்கேவுக்கு எதிராக 77ரன்களும் சேர்த்திருந்தது. 7.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களை தொட்டது. அபிஷேக் சர்மா 34 ரன்களில் டாப்ளே பந்துவீச்சில் பெர்குஷனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ஹெட், அபிஷேக் 108 ரன்கள் என வலுவான அடித்தளம் அமைத்தனர். கிளாசன் சிக்ஸர் மழை 2-ஆவது விக்கெட்டுக்கு கிளாசன் களமிறங்கி ஹெட்டுடன் சேர்ந்தார். முதல் 5 பந்துகளில் 3 ரன்கள் சேர்த்து மெதுவாகத் தொடங்கிய கிளாசன், அதன்பின் வாண வேடிக்கை நிகழ்த்தினார். டி20 போட்டிகளில் ஆபத்தான பேட்டராக கருதப்படும் கிளாசன், ஆர்சிபி பந்துவீச்சாளர்களை நேற்று வதம் செய்தார். பெர்குஷன், யாஷ் தயால் ஓவரில் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் கிளாசன் பேட்டிலிருந்து பறந்தன. மறுபுறம் டிராவிஸ் ஹெட்டும் சிக்ஸர், பவுண்டரி மழை பொழிந்து, 39 பந்துகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். டிராவிஸ் ஹெட் 102 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 57 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அதிரடியாக ஆடிய கிளாசன் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். 14.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 200 ரன்களைத் தொட்டது. கிளாசன் 67 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீ்ச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த கிளாசன், ஹெட் ஆகிய இரு பேட்டர்களும் ஆட்டமிழந்து சென்றபின் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். கடைசி நேரத்தில் களமிறங்கிய அப்துல் சமது, மார்க்ரம் இருவரும் சூப்பர் கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினர். கடைசி இரு ஓவர்களில் மட்டும் இருவரும் 46 ரன்களைக் குவித்தனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கடைசி வரை போராடியது பெருமை ஆர்சிபி கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “இது முறையான டி20 ஆடுகளம். இன்று சேர்த்த ரன்களை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. அதுவே சாதனையாக மாறிவிட்டது. இந்த ஆடுகளத்தில் 270 ரன்கள்கூட சேஸிங் செய்யக்கூடியதுதான். இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவது கடினம். பாவம் பந்துவீச்சாளர்கள் பல நுணுக்கங்களை பயன்படுத்தி வீசியும் பயன் இல்லை. பேட்டர்கள் பக்கமே ஆட்டம் தொடர்ந்து போவது கடினம்தான். வித்தியாசமாக சந்திக்க வேண்டும். எங்கள் பேட்டிங்கில் சில தவறுகள் உள்ளன. அதை சரிசெய்வோம். பவர்ப்ளேக்குப்பின் நாங்கள் தவறுகளைத் திருத்த வேண்டியுள்ளது. ஆனால் கடைசிவரை எங்கள் வீரர்கள் போராடியது பெருமையாக இருந்தது. பந்துவீச்சைப் பொருத்தவரை பந்துவீச்சாளர்கள் எப்போதும் மனதை உற்சாக வைத்திருக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு நம்பிக்கை அளித்த தினேஷ் கார்த்திக் ஆர்சிபியும் பதிலடி கொடுக்க முயன்று, விக்கெட்டுகளை இழந்திருந்த தருணத்தில் தினேஷ் கார்த்திக் களமிறங்கி, அரங்கில் இருந்த ரசிகர்களுக்கு தனது பேட்டால் விருந்தளித்தார். லாம்ரோருடன் சேர்ந்து 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டிகே, சன்ரைசர்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தார். உனத்கட், மர்கண்டே வீசிய 13 மற்றும் 14வது ஓவர்களில் மட்டும் தினேஷ் கார்த்திக், லாம்ரோர் சேர்ந்து 46 ரன்கள் சேர்த்தனர். டிகே அடித்த ஷாட்களால் ரன்ரேட்டும் வேகமாக உயர்ந்தது, ரசிகர்களுக்கும் ஆர்சிபி வென்றுவிடும் என்ற நம்பிக்கை வந்தது. 23 பந்துகளில் டிகே அரைசதம் அடித்தார். லாம்ரோர் 19 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் போல்டாகினார். அடுத்துவந்த ராவத்துடன் சேர்ந்து தினேஷ் கார்த்திக் வெளுத்துவாங்கினார். அனுஜ் ராவத்துடன் சேர்ந்து 7-வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த தினேஷ் கார்த்திக் 83 ரன்னில் நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். தினேஷ் கார்த்திக் களத்தில் இருந்தவரை ஆர்சிபி ரசிகர்களுக்கு வெற்றி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தனர். ஆனால் அவர் வெளியேறியபின், ரசிகர்களும் கலையத் தொடங்கினர். தினேஷ் கார்த்திக் கடைசிவரை போராடியும், ஆர்சிபி 25 ரன்களில் தோற்றது. https://www.bbc.com/tamil/articles/cj5l2j16y69o
    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.