Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தலையும் தலைப்பாகையும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் வாழும் கணபதியும்  கந்தையாவும்   அயல் வீட்டுக் காரர்கள் . க ந்தையர் அந்த  வதிவிடத்தில் பத்து   வருடங்களுக்கு மேல் வசிக்கிறார் . கணபதியார் இங்கு இடம் மாறி  மூன்று வருடங்கள் இருக்கும்.  க ந்தையரும் மனைவியும் பென்சனியார். இரு மகன்மார்  திருமணமாகி குழந்தைகளுடன் வேறு  பகுதியில் வாழ்கின்றனர் . இடைக்கிடை கந்தையர் வீட்டில்  அவர்கள் வந்து  தங்குவர்.  சில சமயங்களில் பாட்டியுடன் சிறார்களை தங்க வைத்து   பலசரக்கு கடை      உடுப்புடவைக் கடை  என சுற்றி விட்டு குழந்தைகளை அழைத்து செல்வர். 

கணபதி வீடு மாறி வந்த புதிதில் அச்சுற்றடலைப்பற்றி கந்தையர் தாமாகவே முன்வந்து பேசுவார்.  இருவரும் காணும் பொது   ஹை  பை சொல்லிக் கொள்வர் . கணபதி  புல் வெட்டும் போது க ந்தையர் கார் தரிக்கும் இடத்திலுள்ள சின்ன ஓடை போன்ற இடத்தையும் வெட்டி  விடுவார் . கந்தையரின் வீட்டில் ஒரு பேரிக்காய் மரம் ( pears ) மரம் .. கணபதியின் வீட்டுக்கு கிளைகளை  பரப்பி  செழித்து வளருகிறது ..காய் க்கும் காலங்களில்  உங்கள் பக்கம் இருப்பதை நீங்களும் ஆய்ந்து  கொள்ளுங்க  எனச் சொல்வார்.

   பூத்து குலுங்கி   காய்கள்  காய்க்கும்  காலங்களில்  கணபதியின் வளர்ப்பு பிராணி  பப்பிக்கும்  கறுத்த அணிலுக்கும்   எடடாப் பொருத்தம் . " இந்தா  பிடித்து  உன்னை இரையாக்குகிறேன் " என  பாய்ந்து பாய்ந்து கலைக்கும் .அது இவருக்கு ஒடடங்காட்டி விட்டு    வேலிகள்   பாய்ந்து சென்று விடும்.  

இப்படியாக கணபதியும் கந்தையாரும் நல்ல நடபு . ஒரு நாள்  சென்ற ஆடிமாதம்  கணபதி ...பிள்ளையை  டியூஷன் கிளாசுக்கு  கொண்டுபோய் வந்து விட்டு ...குளித்து கொண்டு நின்றார்.  மூத்த மகளுக்கு திருமணமாகி  இரண்டுபேரப்பிள்ளைகள் . குளித்து முடியும் தருவாயில் ..கதவு திறக்க ."..அங்கிள் ...கார் அடிபட்டு போச்சு"  என்றார் மருமகன். ஹால் இல்  இருக்கும் போது  சத்தம் கேட்டு ஓடிப் போய் பார்த்தேன் . ..இப்படியாகி விட்ட்து.   

 கந்தையரின் மனைவி   கணவனை  மருத்துவரிடம் கூட்டி சென்று விட்டு ...அவர் இறங்கி வீட்டுக்குள் போக  இவை  பார்க்கிங் என்று   மாறி  அழுத்தினாவோ தெரியாது ....கார் வேகமெடுத்து முன்னுக்கு நின்ற தெரு விளக்கு மரத்தினை இடித்து விழுத்தி   கார்  தரிப்பிடத்தில்  நின்ற கணபதியின் காரை  பயணிகள் பக்கம்  அடித்து ..(இனி திருத்திஓட முடியாதபடி ) அந்தக் கார்  கராஜ் கதவை இடிக்க  அதற்குள்  பார்க்கிங்   இல் நின்ற  சியன்னாவை  இடிக்க  ....அல்லோலகல்லோலமானது .  ( Street light post , Corola car, Garage door , Sienna   .....)  என்ன செய்வது ? 

  கந்தையர் மனைவி காரும் சேதம்.   அவர் கழுத்து நோ என்று  வீட்டினுள் சென்றுவிடடார். ....கந்தையர் ...உடனே மகனுக்கும் போலீசுக்கும் அறிவித்தார்.  இன்சூரன்ஸ் இருந்ததால் கணபதியார்  கொஞ்சம் தப்பினர். கந்தையர் தான் இனி அதிகரித்த இ ன்சூரன்ஸ கட்ட வேண்டும்.  

கணபதியின்  கார் ...கார் இழுவை மூலம் அகற்ற பட்ட்து.  கணபதியருக்கு   பெரும் கவலை .  அஞ்சு வருடமாய்   கட்டின பெண்டாட்டி போல ..பனியோ புயலோ மழையோ ...கடும் வெயிலோ ....தன்னோடு  வாழ்ந்த  கோரோலா ...வகை கார் கையை விட்டு   போய் விட்ட்தே என ஆறாத கவலை.  பார்ட்டிக்கு போய் சற்று "தண்ணி"  போடடாலும்  மனைவி பிள்ளைகளை வீடு கொண்டு   வந்து சேர்க்கும்.   வாகனம் அமைவதெல்லாம்   சாரதிக்கும்  வாகனத்துக்குமான  பொருத்தம் . சிலருக்கு வெள்ளைக்   கார்  அமையாது விபத்துகள் ஏற்படும்.  காலம் அவர் கவலையை மாற்றும்  என அந்த நாளை நினைத்து  வாழ்கிறார். 

"தலைக்கு  வந்தது தலைப்பாகை யுடன் போச்சுதாம் "

 விபத்து எவருக்கும் எந்நேரமும்  ஏங்கும் நடக்கலாம்  நடந்து முடிந்த பின் தான் தெரியும்.

கதை நிஜம்.  பெயர்கள் கற்பனை .

 
  • Like 5
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலசமயம் இப்படி ஏடாகூடமாய் நடந்து விடுவது வழக்கம்தான் .........சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சகோதரி........!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வதற்கு நன்றிகள் சகோதரி.💐

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.