Jump to content

ஜேர்மனியில்... மேர்க்கலுக்குப் பின்னர், யார் ஜனாதிபதி – தீர்மானம்மிக்க தேர்தல் இன்று

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் மேர்க்கலுக்குப் பின்னர் யார் ஜனாதிபதி – தீர்மானம்மிக்க தேர்தல் இன்று

ஜேர்மனியில்... மேர்க்கலுக்குப் பின்னர், யார் ஜனாதிபதி – தீர்மானம்மிக்க தேர்தல் இன்று

அங்கெலா மேர்க்கலுக்குப் பின்னர் யார் பொறுப்பேற்க வேண்டும் என்பதை வாக்காளர்கள் தீர்மானிக்கும் மிக முக்கியமான தேர்தல் இன்று ஜேர்மனியில் நடைபெறவுள்ளது.

இரண்டு பிரதான கட்சிகளுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவி வருகின்ற நிலையில், பிரசாரத்திற்கான இறுதித் தினமான நேற்று, ஜனாதிபதி பதவிக்காகப் போட்டியிடும் அரசியல்வாதிகள் நாடு முழுவதும் பாரிய பிரசாரங்களில் ஈடுபட்டனர்.

பதவியிலிருந்து நீங்கிச்செல்லும் ஜனாதிபதி அங்கெலா மேர்க்கெலின் வலதுசாரி கட்சிக்கும், சமூக ஜனநாயகக் கட்சிக்கும் இடையில் வழமைக்கு மாறாக கடும் போட்டி நிலவுமென கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த தேர்தலில் சமூக ஜனநாயக் கட்சிக்கு 26 வீத வாக்குகள் கிடைக்கும் என கருத்து கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை 16 ஆண்டுகளாக ஜேர்மனியின் ஜனாதிபதியாக உள்ள அங்கெலா மேர்க்கெலின் கட்சிக்கு 25 வீத வாக்குகளும் கிரீன் கட்சிக்கு 16 வீத வாக்குகளும் கிடைக்கும் எனவும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2021/1241271

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bundestagswahl | Gemeinde BorchenKlimawende: Parteien im Klimawahlcheck –Online-Tool zur Bundestagswahl -  energiezukunft

எமது வாக்குச் சாவடியில்... 08:02´வது  நிமிடமளவில், 
இரண்டாவது வாக்கை மகனும், மூன்றாவது வாக்கை  நானும் செலுத்தி விட்டு வந்துள்ளேன். 
முதலாவதாக, ஒரு கிழவி... வாக்கு போட்டவர்.

வாக்கு சாவடியில்... எம் மூன்று பேரைத் தவிர, 
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை, வேறு ஒரு ஆட்களையும் காணவில்லை.  
ஞாயிற்ருக்  கிழமை... சனம், நல்ல நித்திரை கொள்கிறார்கள் போலுள்ளது.
வழமையாக  பத்து  மணிக்குப் பிறகு தான்.. ஆட்கள் மெல்ல, மெல்ல  வருவார்கள். 

நாங்கள், எங்கள் தாத்தா காலத்திலிருந்து... பரம்பரை பரம்பரையாக.... :grin:
CDU க்குத்தான் வாக்கு போடுகிறனாங்கள். இந்த முறை... SPD க்கு வாக்குப் போட்டுள்ளோம்.

தேர்தல் வாக்குச்  சாவடியிலிருந்து... ✍️
யாழ்.கள  நிருபர்... தமிழ் சிறி.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

ஜேர்மனியில்... மேர்க்கலுக்குப் பின்னர், யார் ஜனாதிபதி – தீர்மானம்மிக்க தேர்தல் இன்று

இது  ஜனாதிபதி தேர்தல் இல்லை எண்டு ஆதவன்காரருக்கு தெரியாது போல கிடக்கு....🤣

2 hours ago, தமிழ் சிறி said:

நாங்கள், எங்கள் தாத்தா காலத்திலிருந்து... பரம்பரை பரம்பரையாக.... :grin:
CDU க்குத்தான் வாக்கு போடுகிறனாங்கள். இந்த முறை... SPD க்கு வாக்குப் போட்டுள்ளோம்.

எங்கடை பரம்பரையே SPD க்குத்தான்.....😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

எங்கடை பரம்பரையே SPD க்குத்தான்.....😁

மகனுடன்  வாக்குச் சாவடிக்கு போகும் வழியில்... 
பொதுவான வேறு விடயங்களை, கதைத்துக் கொண்டு போனோம். 

வாக்கு செலுத்திவிட்டு... திரும்பி வரும் போது, 
மகனிடம்... யாருக்கு வாக்கு போட்டனீங்கள்  என்று கேட்டேன்.
அவன்... போனமுறை CDU இந்த முறை SPD என்றான்.  :grin:

மனைவியும், மகளும்... மத்தியானத்துக்குப் பிறகு தான் வாக்குப் போடப் போவார்கள்.
போட்டுட்டு வந்த பிறகு... அவர்களிடம் எதுக்கு.. போட்டனீங்கள் என்று கேட்பம்.  :)

மற்ற மகள்... சுவிஸிலிருந்து, தபால் வாக்கு போட்டுள்ளார்.  📩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

மகனுடன்  வாக்குச் சாவடிக்கு போகும் வழியில்... 
பொதுவான வேறு விடயங்களை, கதைத்துக் கொண்டு போனோம். 

வாக்கு செலுத்திவிட்டு... திரும்பி வரும் போது, 
மகனிடம்... யாருக்கு வாக்கு போட்டனீங்கள்  என்று கேட்டேன்.
அவன்... போனமுறை CDU இந்த முறை SPD என்றான்.  :grin:

மனைவியும், மகளும்... மத்தியானத்துக்குப் பிறகு தான் வாக்குப் போடப் போவார்கள்.
போட்டுட்டு வந்த பிறகு... அவர்களிடம் எதுக்கு.. போட்டனீங்கள் என்று கேட்பம்.  :)

உங்கடை ஏரியா பச்சைக்கட்சி ஏரியா எல்லோ? 😂

Umwelt - Grüne setzen sich für Milliardenförderung für Elektro-Fahrzeuge  ein – HAZ – Hannoversche Allgemeine

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

உங்கடை ஏரியா பச்சைக்கட்சி ஏரியா எல்லோ? 😂

Umwelt - Grüne setzen sich für Milliardenförderung für Elektro-Fahrzeuge  ein – HAZ – Hannoversche Allgemeine

பல வருடங்களுக்கு முன் CDU
இப்ப.. பச்சையும், CDU'வும்...  கிட்டக்  கிட்ட நிற்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லெக்சன் முடிஞ்சு ஒரே இழுபறியும், பேரம் பேசுதலும் இரவுபகலாய் நடக்குது......எப்பிடியும் கிறிஸ்மஸ்க்கு இடையிலை முடிவு வருமாம்...😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.