Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

வடக்கிருத்தலின் உன்னத வடிவம் திலீபனின் தியாகம்​​​​​​​


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

வடக்கிருத்தலின் உன்னத வடிவம் திலீபனின் தியாகம்

பிறேமலதா பஞ்சாட்சரம்

spacer.png

ஈழப்போராட்ட வரலாற்றில் திலீபனின் அமைதிவழியிலான ஈகப் போராட்டம் உலகப் போராட்ட  வரலாற்றில் ஒரு புதிய வடிவத்தை அறிமுகப்படுத்திச் சென்றுள்ளது.

ஓர் மனிதன் தான் நேசித்த  மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதிக்காக  தனது இன்னுயிரை ஈகம் செய்தமை உயிர்க்கொடையின் உயர்ந்த நிலையாகவே பார்க்கப்படுத்தல் வேண்டும். அவ்வகையில் திலீபனின் கொள்கைப்பற்றுதிமிக்க வன்முறையற்ற உயர்க்கொடைப் போராட்டத்திற்கு நிகரான போராட்டம் உலக வரலாறில் இதுவரை இல்லை எனலாம் .

பார்த்தீபன் என்ற இயற்பெயர் கொண்ட திலீபன் ஈழத்தில் யாழ்ப்பாண மாவ ட்டத்திலுள்ள  ஊரெழு என்ற கிராமத்தில் திரு திருமதி இராசையா வாழ்விணையர்களின் 4வது மகனாக  1963 கார்த்திகை 29ம் திகதி பிறந்தார் . அவருடைய தந்தையார் ஓர்  ஆசிரியர். பார்த்திபன்  சிறு குழந்தையாக இருக்கும் பொழுதே தாயார் இறந்துவிட்டார். தந்தையாரின் அரவணைப்பிலும் அண்ணன்களின் பாசத்திலும் வாழ்ந்த பார்த்தீபன்  தனது ஆரம்பக் கல்வியை உரும்பிராய் சந்திரோதய வித்தியாலயத்திலும் உயர் கல்வியை யாழ்ப்பணத்தில் புகழ்மிக்க யாழ் இந்துக்கல்லூரியிலும் பயின்று கல்வியில் சிறந்து விளங்கி யாழ் பல்கலைகழகத்தின் மருத்துவ கற்கை நெறிக்கு தெரிவானார்.

ஈழவிடுதலைப்  போராட்டம் ஆயுதப் போராட்டமாக விரிவடைந்த காலப்பகுதியில் அப்போராட்டத்திற்கு கணிசமானளவு கல்வியியலாளர்களை தந்த பெருமை  யாழ் பல்கலைக்கழகத்திற்கு உண்டு. அவ்வகையில் பார்த்தீபனும் 1980 களில்   தனது மருத்துவ கற்கை நெறியினைக்  தியாகம் செய்துவிட்டு  தமிழ்மக்களின் விடுதலைக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில்  இணைந்து பேரினவாத சிங்கள அரசுக்கு எதிராக போராடினார். பார்த்தீபனுக்கு விடுதலைப்புலிகள் இட்ட பெயரே  திலீபன்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் யாழ் மாவட்டத்திற்கான அரசியல் துறையில் இணைந்து அரசியல்துறைப் பொறுப்பாளராக திலீபன் பணியாற்றிக்கொண்டிருந்த காலப்பகுதியில்  ஈழவிடுதலைப் போராட்டத்தை மலினப்படுத்தும் கபட நோக்கில் சிங்கள அரசின் வேண்டுதலுக்கு அமைய இந்திய அரசினால் 29 ஆடி 1987ல்  கைச்சாத்திடப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு அமைவாக இந்திய ஆயுதப்படையினர்   இந்திய அமைதிகாக்கும் படைனர் என்னும் பெயரில் ஈழத்தில் கால்பதித்தனர் .

ஈழத்தமிழர்களின் விடியலை தனது மூச்சாக்கி போராடிய திலீபன்  இந்திய அமைதிப்படை யினரிடம் ( இந்திய  அரசிடம்)  அமைதிப்படையினர் என்ற வகையில் ஈழத்தமிழ் மக்களுக்கு உடனடியாக தீர்க்கவேண்டிய ஐந்து விடையங்களை நிறைவேற்றக் கோரி உண்ணாநோன்பினை நோற்றார்.  அக் கோரிக்கைகளாவன:

1.மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் சிங்கள; குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

2.சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

3. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.

4. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

5. தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

spacer.png

இக் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் தான் உயிர் துறப்பது உறுதி என அறிவித்து நீராகாரரமின்றி வன்முறையற்ற வழியில் திலீபன் முன்னெடுத்த போராட்டத்தின் நோக்கம் நிறைவேற்றப்படாததன் காரணமாக 12ம் நாள் 26 புரட்தாதி மாதம்  1987திலீபனின் உயிர் பிரிந்தது.

திலீபனால் வன்முறையற்ற வழியில் நாடாத்தப்பட்ட  போராட்டம் காந்தியின் வழி நடந்த உண்ணாவிரத போராட்டமன்று. தொல்தமிழரின் மரபில் குறிப்பாக சங்ககாலத்தில்  வழக்கத்தில் இருந்த வடகிருத்தலின் உன்னத வடிவமே ஆகும்.

காந்தி  நீர் அருந்தி மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டங்களுக்கு பிரித்தானிய அரசின் மறைமுக ஆதரவு இருந்தது ஏனெனில் அவர்களுக்கு சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான ஆயுதம் ஏந்திய விடுதலைப்போரை மழுங்கச் செய்வதற்கு காந்தி உண்ணாவிரத போர்களில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்று நிறைவேற்ற வேண்டிய தேவை இருந்தது.இதனை நன்கு அறிந்த காந்தி தன்னுடன் பொது மக்களையும் நீரருந்தி உண்ணாநோன்பிருந்து   பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் மனதை மாற்றிக் கொள்ளும்  வலிய கருவியாக பயன்படுத்தி பயனடைந்தார் என்பதே உண்மையாகும்.

திலீபனின் உண்ணாவிரத  போராட்டத்திற்கு காந்திய தேசத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை. ஏனெனில் இந்திய அரசு திலீபனின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் சிங்கள அரசை பகைக்க விரும்பவில்லை .

ஆயினும் திலீபன் “நான் மனரீதியாக ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன். மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடனும் உங்களிடமிருந்து இறுதி விடைபெறுகிறேன்”. என குறிப்பிட்ததாக தியாகி திலீபன் அவர்களுடன் உண்ணா நோன்பு மேடையில்  உதவியாளராக இருந்த முன்நாள் போராளியான கவிஞர் மு .வே.யோ. வாஞ்சிநாதன் எழுதிய” ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபனுடன் 12 நாட்கள்”என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

திலீபன் தனது கொள்கைப்பற்றுதிமிக்க வன்முறையற்ற உயர்க்கொடைப்  போராட்டத்தின் மூலம் ஈழத்தமிழருக்கு சொல்லிச் சென்ற செய்தி  “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் , சுதந்திர தமிழீழம் மலரட்டும்”.  அதாவது விடுதலையை   வேண்டிநிற்கும் ஈழத்தமிழினம்  தனது விடுதலைக்காக பிறரிடம் சாராது ஒன்றுபட்டு போராடுவதன்  மூலம்  வெற்றியைப் பெற்று தனது தேசத்தை நிறுவ முடியம்.

 

http://www.samakalam.com/வடக்கிருத்தலின்-உன்னத-வட/

 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • போராட்டத்தை வலுவிழக்கச் செய்ய... பலர் முயற்சிப்பதாக சுமந்திரன் குற்றச்சாட்டு வடக்கில் நடத்திய போராட்டத்தை இந்தியாவிற்கு எதிரான போராட்டமாக சித்தரிக்க முயற்சிகள் இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த கோரியே இந்த போராட்டம் இடம்பெற்றது என கூறினார். மீனவர்களுடைய போராட்டத்தினை வலுவிழக்கச் செய்கின்ற செயற்பாட்டில் பலர் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார். இந்த தடைசட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் நேற்றிரவு ஒரு இந்திய மீனவரின் உயிர் பிரிந்திருக்காது என்றும் சுமந்திரன் தெரிவித்தார். மேலும் இந்த சட்டத்தினை மீறி உள்நாட்டிலும் தொழில் செல்பவர்களுக்கு எதிராகவும் இந்த சட்டத்தை பிரயோகிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2021/1245807
  • ஒப்பந்தம் அடுத்த வாரம் கைச்சாத்து: டீசலுக்கு 35, பெட்ரோலுக்கு 18 ரூபாய் இழப்பு என்கின்றார் கம்மன்பில 3.6 பில்லியன் டொலர் கடனை ஓமானிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் அடுத்த வாரம் கைச்சாத்திடப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். 5 வருடத்திற்கு ஒருமுறை என்ற அடிப்படையில்  20 வருட காலத்திற்குள் மீண்டும் அக்கடனை செலுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் அமையும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். உலகளாவில் எரிபொருள் விலை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் நாட்டுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதாக அமைச்சர் உதய கம்மன்பில கூறினார். தற்போது இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் ஒரு லீட்டர் டீசலுக்கு 35 ரூபாய் மற்றும் ஒரு லீட்டர் பெட்ரோலுக்கு 18 ரூபாய் இழப்பை சந்தித்து வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார். https://athavannews.com/2021/1245795
  • அதிகாரத்திற்கு உட்பட வகையில், வடக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பேன் – ஜீவன் தியாகராஜா தனது அதிகாரத்திற்கு உட்பட வகையில் வடக்கு மாகாண மக்களின் உடனடி தேவைகளை நிறைவேற்றுத் தயாராக இருப்பதாக ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேரில் சந்தித்து அவர் இந்த உறுதிமொழியை வலங்கையுள்ளார். மேலும் மக்களின் உடனடி தேவைகளை எழுத்துமூலமாக ஒப்படைக்குமாறும் ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரியுள்ளார். இந்த சந்திப்பின்போது வடக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இரா.சம்பந்தன் சில விடயங்களை முன்னிலைப்படுத்தியிருந்தார் என்றும் ஆளுநர் ஜீவன் தியாகராஜா குறிப்பிட்டார். வடக்கு மாகாண எழுச்சி தொடர்பாக ஆளுநர் தெரிவித்த கருத்தை வரவேற்ற இரா.சம்பந்தன் தனது வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டார். https://athavannews.com/2021/1245801
  • லசந்த கொலை உள்ளிட்ட பல வழக்கு விசாரணைகள் குறித்து மௌனமாக இருக்க அரசாங்கம் முடிவு! ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை மற்றும் ஏனைய சில வழக்குகளின் விசாரணைகள் குறித்து மௌனமாக இருக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. குறித்த வழக்கு விசாரணைகளில் அரசாங்கம் ஏன் மௌனமாக உள்ளதென ஆங்கில ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும, விசாரணைகள் மற்றும் நீதிமன்றத்தின் முன் வழக்குகள் அல்லது சட்டமா அதிபரால் கையாளப்படுவது குறித்து அரசாங்கம் கருத்து தெரிவிக்காது என்று கூறினார். ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை, ஊடகவியலாளர் கீத் நொயார் மீது கடத்தல் மற்றும் தாக்குதல் மற்றும் 11 இளைஞர்கள் கடத்தல் மற்றும் கட்டாய காணாமலாக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகள் குறித்து அரசாங்கம் பெரும்பாலும் மௌனமாக உள்ளது. 11 இளைஞர்கள் கடத்தல் வழக்கில் கடற்படை அட்மிரல் வசந்த கரன்னகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைத் தொடர வேண்டாம் என்று அட்டர்னி ஜெனரல் சஞ்சய் ராஜரத்தினம் சமீபத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு அறிவித்திருந்தார். இந்த சம்பவங்கள் நீதிமன்றத்திற்கு முன்பாகவோ அல்லது அட்டர்னி ஜெனரலால் கையாளப்படும்போதோ, அரசு அதில் ஈடுபடுவது நெறிமுறை அல்ல என்றும் அழகப்பெரும கூறினார். வழக்குகள் தொடர்பாக பல்வேறு கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டு வருவதாகவும், அந்த கருத்துக்கள் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார். எனினும், நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகள் குறித்து அரசு எந்த அறிக்கையும் அளிக்காது என தெரிவித்தார். https://athavannews.com/2021/1245785
  • பசுவதை சட்டத்தை... அமுல்படுத்த, அமைச்சரவை அங்கீகாரம் இலங்கையில் பசுவதை தடைச் சட்டத்தை அமுல்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட ஐந்து யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளைத் திருத்தவும் அதனை வர்த்தமானியில் வெளியிடவும் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. https://athavannews.com/2021/1245681
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.