Jump to content

சர்வதேச மத்தியஸ்தத்துடன் கோட்டாபயவுடன் பேசத்தயார் - புலம்பெயர் தமிழ் அமைப்புகள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச மத்தியஸ்தத்துடன் கோட்டாபயவுடன் பேசத்தயார் - புலம்பெயர் தமிழ் அமைப்புகள்

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் பேச்சு நடத்த தயாரென சிறிலங்கா அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவில் தெரிவித்திருந்த நிலையில், சர்வதேச மத்தியஸ்தம் மூலம் பேச்சு நடத்த தயாரென புலம்பெயர் 08 தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

கனேடிய தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரஸ்,நோர்வே ஈழத்தமிழர் அவை, அயர்லாந்து தமிழர் பேரவை,தென்னாபிரிக்க அமைதி மற்றும் நீதிக்கான ஒற்றுமை குழு, பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை, அமெரிக்க தமிழர் செயற்பாட்டுக்குழு ஆகிய எட்டு புலம்பெயர் அமைப்புக்களே இவ்வாறு தெரிவித்துள்ளன.

பிரித்தானியா,அமெரிக்கா,இந்தியா ஆகிய நாடுகளில் ஒன்று அல்லது இணைந்த சர்வதேச மத்தியஸ்தத்துடன் இலங்கை அரசுடன் பேச முடியுமென இந்த அமைப்புகள் தீர்மானித்துள்ளன. எனினும் பொறுப்புக்கூறலில் உள்ளகப்பொறிமுறை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்கின்ற சிறிலங்கா அரசின் நிலைப்பாட்டை முற்றாக நிராகரிப்பதாகவும் இந்த எட்டு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் முடிவெடுத்துள்ளன.

சிறிலங்கா அரச தலைவரின் அழைப்பை தாராள மனப்பான்மையின் வெளிப்பாடாக நாம் நம்பவில்லை.சர்வதேச சமுகம் சிறிலங்காவின் நிலைப்பாட்டில் மிகவும் இறுக்கமாக உள்ளது.சர்வதேச சமுகத்தை இந்த நிலைப்பாட்டுக்கு கொண்டு சென்றதில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பங்களிப்பு மிகவும் காத்திரமானது.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை ,சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் நிறுத்தப்படலாம் என்ற பாரிய அச்சம் சிறிலங்காவுக்கு உள்ளது. இதனாலேயே புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை அவர் பேச்சுக்கு அழைத்துள்ளார் என பிரித்தானிய தமிழர் பேரவையின் முக்கியஸ்தர் ஒருவர் ஐ பி சி தமிழுக்கு தெரிவித்தார்.

அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுதலை, வடக்கு ,கிழக்கில் படைத்தரப்பு ஆக்கிரமித்த நிலங்கள் விடுதலை, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம்,பௌத்த ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட வேண்டும்,காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடைநீக்கம் மற்றும் இலங்கையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடனும் பேச்சு நடத்தப்படவேண்டும் ஆகிய விடயங்களை நடைமுறைப்படுத்தி சிறிலங்கா அரசாங்கம் தனது நல்லெண்தை வெளிப்படுத்த வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
https://www.meenagam.com/சர்வதேச-மத்தியஸ்தத்துடன/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, கிருபன் said:

கனேடிய தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரஸ்,நோர்வே ஈழத்தமிழர் அவை, அயர்லாந்து தமிழர் பேரவை,தென்னாபிரிக்க அமைதி மற்றும் நீதிக்கான ஒற்றுமை குழு, பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை, அமெரிக்க தமிழர் செயற்பாட்டுக்குழு ஆகிய எட்டு புலம்பெயர் அமைப்புக்களே

8, 16 , 16.. 32 ஆகும். விடியற்காலையில் ஏதாவது ஒரு அமைப்பு ரிஜிஸ்டர் செய்து கொண்டு வருவினம் கூப்பிடுவதே உள்ளுக்குள் சண்டை மூட்டிவிடத்தான் சூதானாமா இருங்கப்பா.👌

73262722-seminar-and-meeting-room-arrang

முதலில் முட்டல் மோதல் இல்லாமல் என்ன கதைப்பது , நிகழ்ச்சி நிரல் , "கால எல்லை " குறித்து குறைந்த பட்ச செயல் திட்ட வரைவு குறித்து ஆலோசனை செய்யுங்கப்பு..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுரேனின் GTF ஐ காணல…..😆

அவர் தனிய போய் கதைக்கட்டும்…..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஒரு அமைப்புத் தொடங்கப்போகிறேன் யாரவது நல்ல ஒரு பெயர் சொல்லுங்கோ, ஆரம்பத்தில் நான் வாழும் நாட்டின் பெயர் இருக்க வேண்டும் அல்லது ஐரோப்பிய இல்லாவிடில் உலக எனப்பெயர் வரவேண்டும். உதவிசெய்யுங்கோ.

ஐந்து நட்சத்திர விடுதியில் சட்டை போட்ட கதிரையிலிருந்து எந்த வெக்கையாக இருந்தாலும் ஒரு தடிப்பமான துணியில தைத்த கோட்டுச்சூட்டுப் போட்டுக்கொண்டு அவங்கள் பேசுற மொழி விளங்குதோ இல்லையோ ஆனால் புரிந்ததுபோல நடிச்சு மற்றவையளது முகபாவனையை வைத்து எங்கட முகத்தைச் சிந்திப்பதுபோல வைப்பதா அல்லது கடவாயுக்குள்ள நமட்டிச்சிரிப்புச் சிரிப்பது போல் இருப்பதா அல்லது கெக்கட்டம் விட்டுச் சிரிப்பதா அதைவிட எல்லோரும் சீரியசா கதைக்கும்ப்போது கிடக்கிற பலகாரங்களை எடுத்து லவட்டுறதா என ஒரே காமடிதான் போங்கோ.

ஊருக்குப்போனால் உடும்புக்கறியுடன் விருந்தும், "அம்பல் தியாவுடன்" சிங்களச்சாப்பாடும் சோக்கா இருக்கும்.

Link to comment
Share on other sites

7 minutes ago, Elugnajiru said:

வாழ்க்கை வெறுத்து போச்சா? சந்நிநாசம்போகலாமே? 

13 hours ago, கிருபன் said:

கனேடிய தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரஸ்,நோர்வே ஈழத்தமிழர் அவை, அயர்லாந்து தமிழர் பேரவை,தென்னாபிரிக்க அமைதி மற்றும் நீதிக்கான ஒற்றுமை குழு, பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை, அமெரிக்க தமிழர் செயற்பாட்டுக்குழு ஆகிய எட்டு புலம்பெயர் அமைப்புக்களே இவ்வாறு தெரிவித்துள்ளன.

இந்த அமைப்புகள் 10 வருடங்குக்கு மேலாக இயங்கி வருகின்றன. இது தெரியாமல் இருக்கும் நீங்கள் இலங்கைத் தமிழரின் வரலாற்றுக்கு புதியவராக வந்த புதினம் பார்க்கும் ஒருவராகவே இருக்கும் சாத்தியம் அதிகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

சர்வதேச மத்தியஸ்தத்துடன் கோட்டாபயவுடன் பேசத்தயார் - புலம்பெயர் தமிழ் அமைப்புகள்

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் பேச்சு நடத்த தயாரென சிறிலங்கா அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவில் தெரிவித்திருந்த நிலையில், சர்வதேச மத்தியஸ்தம் மூலம் பேச்சு நடத்த தயாரென புலம்பெயர் 08 தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

கனேடிய தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரஸ்,நோர்வே ஈழத்தமிழர் அவை, அயர்லாந்து தமிழர் பேரவை,தென்னாபிரிக்க அமைதி மற்றும் நீதிக்கான ஒற்றுமை குழு, பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை, அமெரிக்க தமிழர் செயற்பாட்டுக்குழு ஆகிய எட்டு புலம்பெயர் அமைப்புக்களே இவ்வாறு தெரிவித்துள்ளன.

பிரித்தானியா,அமெரிக்கா,இந்தியா ஆகிய நாடுகளில் ஒன்று அல்லது இணைந்த சர்வதேச மத்தியஸ்தத்துடன் இலங்கை அரசுடன் பேச முடியுமென இந்த அமைப்புகள் தீர்மானித்துள்ளன. எனினும் பொறுப்புக்கூறலில் உள்ளகப்பொறிமுறை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்கின்ற சிறிலங்கா அரசின் நிலைப்பாட்டை முற்றாக நிராகரிப்பதாகவும் இந்த எட்டு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் முடிவெடுத்துள்ளன.

சிறிலங்கா அரச தலைவரின் அழைப்பை தாராள மனப்பான்மையின் வெளிப்பாடாக நாம் நம்பவில்லை.சர்வதேச சமுகம் சிறிலங்காவின் நிலைப்பாட்டில் மிகவும் இறுக்கமாக உள்ளது.சர்வதேச சமுகத்தை இந்த நிலைப்பாட்டுக்கு கொண்டு சென்றதில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பங்களிப்பு மிகவும் காத்திரமானது.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை ,சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் நிறுத்தப்படலாம் என்ற பாரிய அச்சம் சிறிலங்காவுக்கு உள்ளது. இதனாலேயே புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை அவர் பேச்சுக்கு அழைத்துள்ளார் என பிரித்தானிய தமிழர் பேரவையின் முக்கியஸ்தர் ஒருவர் ஐ பி சி தமிழுக்கு தெரிவித்தார்.

அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுதலை, வடக்கு ,கிழக்கில் படைத்தரப்பு ஆக்கிரமித்த நிலங்கள் விடுதலை, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம்,பௌத்த ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட வேண்டும்,காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடைநீக்கம் மற்றும் இலங்கையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடனும் பேச்சு நடத்தப்படவேண்டும் ஆகிய விடயங்களை நடைமுறைப்படுத்தி சிறிலங்கா அரசாங்கம் தனது நல்லெண்தை வெளிப்படுத்த வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
https://www.meenagam.com/சர்வதேச-மத்தியஸ்தத்துடன/

இனிமேல் பேசலாம் என்ற பேச்சே எடுக்க மாட்டார் கோத்தபாய

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, விசுகு said:

இனிமேல் பேசலாம் என்ற பேச்சே எடுக்க மாட்டார் கோத்தபாய

கோத்தா இப்படி கூறியதை மறந்து பல நாட்களாகியிருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.