Jump to content

கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நாங்கள் எப்படி எந்தவித தயக்கமும் பயமுமின்றி எங்களுக்கு பிடித்தமாதிரி வாழ்கிறோம், அதை செய்ய தன்னினசேர்க்கையாளர்களுக்கும் உரிமையுண்டு.. அவர்கள் தன்னினச்சேர்க்கையென்பதால் தயக்கத்துடனும் பயத்துடனும் வாழவேண்டும் என எதிர்பார்ப்பது பிழை எனக்கூறினால் தனிப்பட்ட முறையில் நீங்கள் அப்படி செய்வீர்களா? இப்படி செய்வீர்களா.. அல்லது அந்த மாதிரி ஆட்கள் etc என வகைப்படுத்துகிறார்கள்.. இந்த மனநிலைகள் எனக்கு விளங்குவதில்லை.. 

இரண்டாவது பெற்றோர்கள் சரியான முறையில் வளர்த்தால் இந்தமாதிரி தன்பாலின கவர்ச்சியுடைய பிள்ளைகள் இருக்கமாட்டார்கள் எனவும் எழுதப்பட்டது.. பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சகல அத்தியாவசிய தேவைகளுடன் கல்வி, கலாச்சாரம், பழக்கவழக்கங்களையும், உணர்வுகளையும் உரிமைகளையும் கற்றுக்கொடுத்தும் மதிக்கவும் சொல்லி கொடுத்து வளர்க்கையில்  பிள்ளைகள் தங்களது உணர்விற்கு மதிப்பளித்து துணையை தேர்ந்தெடுப்பதை எவ்வாறு பெற்றோர் சொல்லிவளர்த்தால் இப்படி செய்யமாட்டார்கள் என கூறமுடியும்? 

இரு மனிதர்கள்(ஆண்-ஆண், பெண்-பெண்) தங்களுக்குள் ஏற்பட்ட இயற்கையான உணர்வை மதித்து சேர்ந்து வாழ்வதையும் தங்களுக்கு பிடித்த சமயத்திலும், சட்டரீதியாகவும் செய்யமுற்படுவதையும் பிழையென கூறமுடியாது..ஏனெனில் திருமணம் என்பது தனியே உடலுறவை மட்டும் சார்ந்தது இல்லை.. அதேபோல கட்டாயம் சந்ததி பெருக்கமாகவும் இருக்கவேண்டியதில்லை.. இரு பெண்கள்/இரு ஆண்கள் விரும்புகிறார்கள், திருமணம் செய்கிறார்கள். குழந்தைகள் வேண்டுமென்றால் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள், அல்லது சமூகத்தின் கண்களில் தகாத உறவினால் பிறந்த பிள்ளைகளை தத்து எடுத்துவளர்கிறார்கள்..இல்லை வாடகைதாய், விந்து/முட்டை தானம் போன்றவற்றின் மூலம் பிள்ளைகளை பெறுகிறார்கள்..

குழந்தை வளர்ப்பும் சட்டசமூக பிரச்சனைகளும் - இதற்காகவே இதை சட்டமாக்கினார்கள்.. நாங்கள் எப்படி கணவனோ மனைவியோ இறந்தால் தனியாகவோ, இல்லை மறுமணம் செய்து, குழந்தைகளுடன் வாழ்கிறோமோ அதுபோலவே அவர்களும் இருக்கிறார்கள்.. குழந்தையும் அதனை வளர வளர தன் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றுகிறது. குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்பு முன்பே ஒழுங்காக இருந்திருக்குமாயின் ஏன் foster cares உருவானதே தெரியவில்லை.. child abusers எல்லா வகையிலும் இருக்கிறார்கள். சட்டமும் சமூகமும் எத்தனை நடவடிக்கைகள் எடுத்தாலும் இந்த செயல்கள் நடந்துகொண்டுதானே உள்ளது.. 

தற்போது இந்த குடும்ப அமைப்புகளைப்பற்றி பாடசாலைகள் தொடங்கி அலுவலகங்கள் விளங்கப்படுத்தப்படுகிறது, தொலைகாட்சி நிகழ்ச்சிகள், பத்திரிக்கைகள் வரை எல்லா சமூக ஊடகங்களிலும் வருகிறது ஏனெனில் இந்த உறவுகள் எங்கள் சமூகத்தில் ஒரு அங்கம் என்பதால்தான், எல்லா சமூகங்களுக்கும் இதை ஏற்றுக்கொள்ள கடினம் என்றாலும் ஏற்றுக்கொண்டு போகிறார்கள், அரசும் தன்னலான நடவடிக்கைகளை எடுக்கிறது.. மக்கள் எதிர்ப்பையும் ஆதரவையும் காட்டுகிறார்கள்..

என்னைப்பொறுத்தவரை இந்த திருமணங்கள், உறவுகள் சமூகத்தில் உள்ளன.. ஏற்பதும் ஏற்காமல் விடுவதும் அவரவர் தனிப்பட்ட விடயம். அதற்காக தன்னினசேர்க்கை என்பதால் தயக்கத்துடனும் பயத்துடனும் வாழவேண்டும் என எதிர்பார்ப்பது பிழையான ஒன்று, மனித தன்மையற்றது
அவ்வளவுதான்.. 

மன்னிக்க வேண்டும் பிரபா , திரும்பவும் முதலில் இருந்தா?...இந்த திருமணத்தை எதிர்ப்பவர்கள் அதற்கான காரணங்களை எழுதி விட்டார்கள் . ஆனால் ஆதரிப்பவர்களோ தொடர்ந்தும் ஒரே பல்லவியான அவர்களது வாழ்க்கை , அவர்களது உரிமை என்று பாடி கொண்டு ...அதை நாங்களும் ஒத்து கொள்கிறோம் ....3 வருசமாய் ஐயரை தேடிக் கொண்டு இருந்தவையாம் . அதுக்கு எவ்வளவு காலத்திற்கு முந்தி ரிலேஷன்சிப் இருந்திருக்கும்?[அதை  பிழை என்று சொல்லவில்லை.]...அப்படியே வாழ்ந்திருக்கலாமே !...அவர்கள் குடும்பங்கள் நிம்மதியாய் இருந்திருக்கும் . ஏன் இந்த ஐயருக்கு கூட பிரச்சனை வந்திருக்காது ....இவர்கள் இத் திருமணத்தை நடத்தினதே தங்களை மற்றவர்கள் ஏதோ புரட்ச்சியாளர்கள் என்று சொல்லட்டும் என்ற காரணத்தினாலும், பெற்றோரை பழி வாங்குவதற்காகவும் தவிர வேறு ஒன்றும் இல்லை .

பெற்றோர் கல்வி ,கலாச்சாரம் ,பழக்க வழக்கம் சொல்லி கொடுக்கிறார்கள் . ஆனால் , ஆண் ,பெண் ரிலேசன்சிப் பற்றி சொல்லிக் கொடுக்கிறார்களா?
 
Link to comment
Share on other sites

  • Replies 386
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

சிறி அண்ணா 17 பக்கம் எண்டு பெரிய அளவில டார்கெட் போட்டுட்டார். ஆனாலும் எல்லாரும் கைபோட்டு 12 ஆக்கியாச்சு.🤣

GIF workplace - animated GIF on GIFER

கோசான்.... இதில் உங்களது கடுமையான, உழைப்பை தான்... கெளரவிக்க வேண்டும்.
300 பதிவுகளில்... 45 பதிவுகள் மட்டும், உங்களுடையது. 👍
கொரோனா கட்டுப் பாட்டுக்குள் வந்தவுடன், உங்களுக்கு ஒரு விழா எடுக்க வேணும். 🤣

நான்கு  நாட்கள்... 64 பதிவுகளிலிருந்து 74 பதிவுகள் போட்டு,  வெற்றி விழா கொண்டாயிருக்கு. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நாங்கள் எப்படி எந்தவித தயக்கமும் பயமுமின்றி எங்களுக்கு பிடித்தமாதிரி வாழ்கிறோம், அதை செய்ய தன்னினசேர்க்கையாளர்களுக்கும் உரிமையுண்டு.. அவர்கள் தன்னினச்சேர்க்கையென்பதால் தயக்கத்துடனும் பயத்துடனும் வாழவேண்டும் என எதிர்பார்ப்பது பிழை எனக்கூறினால் தனிப்பட்ட முறையில் நீங்கள் அப்படி செய்வீர்களா? இப்படி செய்வீர்களா.. அல்லது அந்த மாதிரி ஆட்கள் etc என வகைப்படுத்துகிறார்கள்.. இந்த மனநிலைகள் எனக்கு விளங்குவதில்லை.. 

தன்னின சேர்க்கையாளர்களுக்கு எல்லாவித உரிமையும் உள்ளது அதை யாரும் இங்கு மறுதலிக்கவில்லையே. அதை சமய சடங்குகளுடன் நடத்தும்போது  அதற்கு சமய கலாச்சார அங்கீகாரம் உள்ளதாக நினைத்து அதில் கலந்துகொள்ளும் சிறுவர்களும், டீனேஜ் பிள்ளைகளும் இதை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு நாமும் செய்து பார்க்கலாமே என்ற மனநிலை ஏற்படாதா? ஏன் யாரும் இந்த கோணத்தில் யோசிக்காமல் அது அவர்களின் உரிமை, கூந்தல் மண்ணாங்கட்டி என்று பாடமெடுக்கிறீர்கள் என்று புரியவில்லை! இனி அடல்ட்ஸ் ஒன்லி படங்களுக்கு டீனேஜ் பிள்ளைகளையும் கூட்டிச்சென்றுபார்க்கலாம் என்று சொல்லும் மனநிலைக்கு வந்துவிடுவீர்கள் போலுள்ளது.

இந்த நிகழ்வுகளெல்லாம் பாலிச்சையால் அல்லது குடும்பம் பிள்ளைகள் என்ற பொறுப்புகளை ஏற்கமுடியாதவர்கள் எடுக்கும் ஒரு short term decision மட்டுமே. யாரோ  விலங்குகளிலும் இவ்வாறான நடைமுறை இருப்பதாக எழுதியிருந்தார்கள். அது பக்கத்தில் ஒரு எதிர்பாலின துணை இல்லாதபோது தனது இச்சையை தீர்க்க எடுக்கப்படும் முடிவேயன்றி அவை காலம் முழுவதும் அப்படியே வாழ்வதில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kandiah57 said:

ஒருபால் திருமணத்தின் மூலம் பிள்ளைகள் பெற வாய்ப்பு இல்லை எனவே சட்டப் பாதுகாப்பு தேவையில்லை பிரியும்” போது தனி தனியாக போகவேண்டியாது  தான்    சேர்த்து சொத்து வேண்டி இருத்தல் இரண்டாக பிரியும்  தனி தனியாக வேண்டியதுக்கு சட்டம் தேவைப்படலாம் 

சரியான கருத்தல்ல! biological children பெறமுடியா விட்டாலும் தத்தெடுத்து வளர்க்க, அல்லது வாடகைத் தாய் மூலம் பெற்று வளர்க்க மேற்கு நாடுகளில் அனுமதியுண்டு. அந்தக் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அவசியம் - எனவே தான் இவை சட்ட ரீதியான இணைவாக அங்கீகரிக்கப் பட வேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

இந்த நிகழ்வுகளெல்லாம் பாலிச்சையால் அல்லது குடும்பம் பிள்ளைகள் என்ற பொறுப்புகளை ஏற்கமுடியாதவர்கள் எடுக்கும் ஒரு short term decision மட்டுமே. யாரோ  விலங்குகளிலும் இவ்வாறான நடைமுறை இருப்பதாக எழுதியிருந்தார்கள். அது பக்கத்தில் ஒரு எதிர்பாலின துணை இல்லாதபோது தனது இச்சையை தீர்க்க எடுக்கப்படும் முடிவேயன்றி அவை காலம் முழுவதும் அப்படியே வாழ்வதில்லை!

மன்னிக்க வேண்டும் எப்போதும் தமிழன்! தன்னினச் சேர்க்கையாளர் பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் இந்த அவதானங்களுக்கு ஆதாரங்கள் இருக்கின்றனவா? எனக்கு இது உங்கள் அபிப்பிராயமாகத் தான் தெரிகிறது.

ஆண்டுக் கணக்காக சேர்ந்து வாழும், ஏனைய மனிதர்கள் போல வாழும் ஓரின இணைகள் இப்போது அதிகரித்திருக்கிறார்கள். முன்னர் இவை living together ஆக மட்டுமிருக்க திருமணம் சட்ட ரீதியாக இருக்காமையே காரணம். எனவே உங்கள் இந்த குறுகின பாலுணர்வு விகாரம் என்பது ஆதாரங்களில்லாத அபிப்பிராயம் மட்டுமே!

மேலும்: பிரபாவிடம் நீங்கள் கேட்ட "பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக அமைந்து விடாதா?" என்ற கேள்விக்கு என் பதில்! - இது சகஜமான விடயமென பிள்ளைகளுக்குத் தெரிய வேண்டும். அவ்வாறு தெரிந்தாலும், வளர்ந்த பிள்ளைகள் தங்கள் sexual orientation இனை  இதை வைத்து கட்டாயமாக மாற்றிக் கொள்ளப் போவதில்லை. ஏனெனில் இது நீங்கள் நினைப்பது போல ஒரு பேஷன் அல்ல!

மேலும், இவ்வாறு ஓரின உறவு சகஜம் என்று அறிவூட்டப் படாத பிள்ளைகள் தான் மேலே வளவன் இணைத்த செய்தியில் இருக்கும் வெறுப்பாளர்களாகவும் வன்முறையாளர்களாகவும் மாறுகிறார்கள். எனவே இது இளம் பிள்ளைகளிடையே சகஜமான விடயமாக காட்டப் படுவது நன்மையே! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

தன்னின சேர்க்கையாளர்களுக்கு எல்லாவித உரிமையும் உள்ளது அதை யாரும் இங்கு மறுதலிக்கவில்லையே

 மறுக்கிறீர்கள் எப்படியென்றால் அவர்கள் தயக்கத்துடனும் பயத்தைடனும் வாழ வேண்டும் என்ற கருத்தின் மூலம்.

2 hours ago, Eppothum Thamizhan said:

சமய சடங்குகளுடன் நடத்தும்போது  அதற்கு சமய கலாச்சார அங்கீகாரம் உள்ளதாக நினைத்து அதில் கலந்துகொள்ளும் சிறுவர்களும், டீனேஜ் பிள்ளைகளும் இதை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு நாமும் செய்து பார்க்கலாமே என்ற மனநிலை ஏற்படாதா?

இதற்கான பதில், இருக்காது ஏனெனில் இவை இங்கே இந்த சமயசடங்குகளிற்கு போய்தான் அறியவேண்டுமென்பதில்லை.. பாடசாலைகள் தொடங்கி அலுவலகங்கள், தொலைகாட்சிகள், பத்திரிக்கைகள், ஏன் சனத்தொகை வாக்குஎடுப்பு பத்திரத்தில் கூட கேள்விகள் உள்ளது.. அவர்களுக்கு முன்னுதாரணங்கள் நிறையவே உள்ளது..ஆகையால் இதையெல்லாம் பார்த்துதான் அவர்கள் மாற வேண்டும் என்பதில்லை..  

2 hours ago, Eppothum Thamizhan said:

இந்த நிகழ்வுகளெல்லாம் பாலிச்சையால் அல்லது குடும்பம் பிள்ளைகள் என்ற பொறுப்புகளை ஏற்கமுடியாதவர்கள் எடுக்கும் ஒரு short term decision மட்டுமே. 

seriously அண்ணா! how do you know? ஏதாவது தரவுகள்? இங்கே நிறையவே இதைப்பற்றி கருத்துகள் பகிரப்பட்டுள்ளன.. 

உங்களுக்கும் எனக்கும் எங்களது எதிர்பாலினத்தில்தான் ஈர்ப்பு வருகிறது.. இது இயற்கையாகவே ஏற்படுகிறது.. யாரும்  என்னை வற்புறுத்தவில்லை, உங்களையும் வற்புறுத்தவில்லை இல்லையா! இயற்கையாகவே வருகிறது.. அதை ஏற்றுக்கொள்ளும் உங்களால் ஏன் இன்னொரு மனிதர் தனக்கு தன்னினத்தை சேர்ந்தவருடன் இயற்கையாகவே வரும் உணர்வை ஏற்க முடியவில்லை..ஏனெனில் வழமைக்கு மாறானது என நீங்கள் நினைப்பதனால்  ஏற்கமுடியவில்லை.. இது உங்களது தனிப்பட்ட கருத்து, அதை எல்லோரும் மதிக்கிறோம். உங்களை மாறவேண்டும் எனக்கூட கேட்கவில்லை.. 

ஆனால் நாங்கள் அவர்களும் எங்களைப்போன்ற சகமனிதர்கள் என்பதால் அவர்களது உணர்வுகளை மதிக்கிறோம்.. என்ற கருத்தை மதிக்க ஏன் உங்களால் முடியவில்லை? 

உங்களுக்கு வாழ்த்த விருப்பமில்லை எனக்கு வாழ்த்த முடிகிறது.. அவ்வளவுதான்..
 
உங்களில் உள்ள மரியாதை, மதிப்பு காரணமாகவே இவ்வளவையும் எழுதுகிறேன்.. இல்லாவிடில் உண்மையில் எழுதியிருக்கமாட்டேன், ஏனெனில்

- இது இயற்கையானது ஆனால் வழமைக்குமாறானது.. 

- இது அடிப்படை தனிமனித உரிமை. ஒப்பிட்டளவில் சிறுபாண்மை என்பதால் அவர்களுக்கான உரிமையை மறுப்பது தவறு

- இதற்கும் பெற்றோரின் வளர்ப்பிற்கும் சம்பந்தமில்லை.. இயல்பாக ஏற்படும் உணர்வு/விருப்பம்/desire ..அதை சமூகத்திற்காக அடக்க சொல்வது தவறு 

- கிட்டதட்ட 30 நாடுகளில் சட்டரீதியாக அங்கரிக்கப்பட்டுள்ளது.. குழந்தைகளின் நலன் கருதி சட்டரீதியாக கொண்டுவரப்பட்டுள்ளது

- சகல இடங்களிலும் இதைப்பற்றிய விளக்கங்கள் உள்ளன

- எங்களது இந்து சமயத்தில் இதைப்பற்றி மெளனமாகவே இருக்கிறார்கள் அதற்கு என்ன காரணம்

- விலங்களிலும் உள்ளன.. 

- இதில் புரட்சியாக செய்வது, முற்போக்காக காட்டுவது என்பதை விட ஒரு மனிதன் இன்னொரு மனிதனை மதிப்பதும் அவர்களது உணர்வுகள் உரிமைகளை மதிப்பது என்ற அடிப்படை உணர்வு 

- யாரையும் வாழ்த்த சொல்லி கட்டயாப்படுத்தவில்லை. 

- கட்டாயம் sexual pleasureதான் இருக்கவேண்டியதில்லை என்பதால் அவர்களது sexual satisfaction பற்றி கவலைப்படத்தேவையில்லை.

- sexual consent  

இதைவிட வேறு ஏதாவது?  Did I miss anything? 

இப்படி பல தரவுகள் கிட்டதட்ட 13 பக்கங்களில் கருத்துகள் பகிரப்பட்டுள்ளன.. 

இதற்கு மேல்.. முடியவில்லை..

இன்னொரு விடயம், இதைப்பற்றி பெரிதுபடுத்த தேவையில்லை என்றால் இதை இங்கே கடந்து போகும் மற்றைய செய்திகள் போல கடந்து போயிருக்கலாம் வாழ்த்துபவர்கள் மனமார வாழ்த்தினால் என்ன இல்லாவிட்டால்தான் என்ன! பெரிதுபடுத்தவேண்டிய விடயம் இல்லை என்றால் கடந்து போயிருக்கலாம் தானே..

 உங்களைப்போன்றே மற்றைய சக கருத்தாளர்களும் தங்களது கருத்தை எழுதுகிறார்கள்..  நீங்கள் எழுதுவது வகுப்பெடுப்பதில்லை என்றால் நான் எழுதுவதும் பாடம் எடுப்பதில்லை அண்ணா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

எதையும் மிஸ் பண்ணவில்லை. மிக நேர்த்தியாக அத்தனை தர்க்கத்தையும் தொகுத்துள்ளீர்கள்👏🏾.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

 மறுக்கிறீர்கள் எப்படியென்றால் அவர்கள் தயக்கத்துடனும் பயத்தைடனும் வாழ வேண்டும் என்ற கருத்தின் மூலம்.

இதற்கான பதில், இருக்காது ஏனெனில் இவை இங்கே இந்த சமயசடங்குகளிற்கு போய்தான் அறியவேண்டுமென்பதில்லை.. பாடசாலைகள் தொடங்கி அலுவலகங்கள், தொலைகாட்சிகள், பத்திரிக்கைகள், ஏன் சனத்தொகை வாக்குஎடுப்பு பத்திரத்தில் கூட கேள்விகள் உள்ளது.. அவர்களுக்கு முன்னுதாரணங்கள் நிறையவே உள்ளது..ஆகையால் இதையெல்லாம் பார்த்துதான் அவர்கள் மாற வேண்டும் என்பதில்லை..  

seriously அண்ணா! how do you know? ஏதாவது தரவுகள்? இங்கே நிறையவே இதைப்பற்றி கருத்துகள் பகிரப்பட்டுள்ளன.. 

உங்களுக்கும் எனக்கும் எங்களது எதிர்பாலினத்தில்தான் ஈர்ப்பு வருகிறது.. இது இயற்கையாகவே ஏற்படுகிறது.. யாரும்  என்னை வற்புறுத்தவில்லை, உங்களையும் வற்புறுத்தவில்லை இல்லையா! இயற்கையாகவே வருகிறது.. அதை ஏற்றுக்கொள்ளும் உங்களால் ஏன் இன்னொரு மனிதர் தனக்கு தன்னினத்தை சேர்ந்தவருடன் இயற்கையாகவே வரும் உணர்வை ஏற்க முடியவில்லை..ஏனெனில் வழமைக்கு மாறானது என நீங்கள் நினைப்பதனால்  ஏற்கமுடியவில்லை.. இது உங்களது தனிப்பட்ட கருத்து, அதை எல்லோரும் மதிக்கிறோம். உங்களை மாறவேண்டும் எனக்கூட கேட்கவில்லை.. 

ஆனால் நாங்கள் அவர்களும் எங்களைப்போன்ற சகமனிதர்கள் என்பதால் அவர்களது உணர்வுகளை மதிக்கிறோம்.. என்ற கருத்தை மதிக்க ஏன் உங்களால் முடியவில்லை? 

உங்களுக்கு வாழ்த்த விருப்பமில்லை எனக்கு வாழ்த்த முடிகிறது.. அவ்வளவுதான்..
 
உங்களில் உள்ள மரியாதை, மதிப்பு காரணமாகவே இவ்வளவையும் எழுதுகிறேன்.. இல்லாவிடில் உண்மையில் எழுதியிருக்கமாட்டேன், ஏனெனில்

- இது இயற்கையானது ஆனால் வழமைக்குமாறானது.. 

- இது அடிப்படை தனிமனித உரிமை. ஒப்பிட்டளவில் சிறுபாண்மை என்பதால் அவர்களுக்கான உரிமையை மறுப்பது தவறு

- இதற்கும் பெற்றோரின் வளர்ப்பிற்கும் சம்பந்தமில்லை.. இயல்பாக ஏற்படும் உணர்வு/விருப்பம்/desire ..அதை சமூகத்திற்காக அடக்க சொல்வது தவறு 

- கிட்டதட்ட 30 நாடுகளில் சட்டரீதியாக அங்கரிக்கப்பட்டுள்ளது.. குழந்தைகளின் நலன் கருதி சட்டரீதியாக கொண்டுவரப்பட்டுள்ளது

- சகல இடங்களிலும் இதைப்பற்றிய விளக்கங்கள் உள்ளன

- எங்களது இந்து சமயத்தில் இதைப்பற்றி மெளனமாகவே இருக்கிறார்கள் அதற்கு என்ன காரணம்

- விலங்களிலும் உள்ளன.. 

- இதில் புரட்சியாக செய்வது, முற்போக்காக காட்டுவது என்பதை விட ஒரு மனிதன் இன்னொரு மனிதனை மதிப்பதும் அவர்களது உணர்வுகள் உரிமைகளை மதிப்பது என்ற அடிப்படை உணர்வு 

- யாரையும் வாழ்த்த சொல்லி கட்டயாப்படுத்தவில்லை. 

- கட்டாயம் sexual pleasureதான் இருக்கவேண்டியதில்லை என்பதால் அவர்களது sexual satisfaction பற்றி கவலைப்படத்தேவையில்லை.

- sexual consent  

இதைவிட வேறு ஏதாவது?  Did I miss anything? 

இப்படி பல தரவுகள் கிட்டதட்ட 13 பக்கங்களில் கருத்துகள் பகிரப்பட்டுள்ளன.. 

இதற்கு மேல்.. முடியவில்லை..

இன்னொரு விடயம், இதைப்பற்றி பெரிதுபடுத்த தேவையில்லை என்றால் இதை இங்கே கடந்து போகும் மற்றைய செய்திகள் போல கடந்து போயிருக்கலாம் வாழ்த்துபவர்கள் மனமார வாழ்த்தினால் என்ன இல்லாவிட்டால்தான் என்ன! பெரிதுபடுத்தவேண்டிய விடயம் இல்லை என்றால் கடந்து போயிருக்கலாம் தானே..

 உங்களைப்போன்றே மற்றைய சக கருத்தாளர்களும் தங்களது கருத்தை எழுதுகிறார்கள்..  நீங்கள் எழுதுவது வகுப்பெடுப்பதில்லை என்றால் நான் எழுதுவதும் பாடம் எடுப்பதில்லை அண்ணா!!

What else can be said more than this? Thank you. !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்னினச் சேர்க்கையாளர்களை வெறுக்கவில்லை, ஆனால் அவர்களை ஊக்குவிக்கவுமில்லை என்று இங்கே கருத்திட்ட சிலருடைய கருத்துகள் உண்மையில் மென்மையான thinly veiled வெறுப்பை வெளிக்காட்டும் கருத்துகளாகவே தெரிகிறது. 

கோவேறு கழுதை உதாரணம்: இணைந்தால் சந்ததி தோன்ற வேணும், இல்லா விட்டால் அவர்களுக்கு மரியாதை சந்ததி உருவாக்கியோரை விடக் குறைவேயென்ற பிம்பம். அப்ப பிள்ளைகள் பெறாமல் இருக்கும் heterosexual இணைகளுக்கும் மரியாதை குறைவா? இது ஊரில் "மூளியை, மலடை, விதவையை சபையில் முன்னே விடாதே!" என்று சில பழசுகள் இரகசியமாகச் சொல்வதன் வேறு வடிவமேயொழிய வேறில்லை!

தன்னினச் சேர்க்கையாளர், இடைப்பாலினர், மாற்றுப் பாலினர் ஆகிய எல்லாருக்கும் ஏனைய மனிதர்கள் போல சாதாரண உணர்வுகளும், வாழ்க்கையும் உண்டு என்பதைச் சுவையாகச் சித்திருக்கும் அரிய புனைவு: அருந்ததி றோயின் அரிய படைப்பு.

வாசியுங்கள், உங்களுக்குத் தெரியாத உலகத்தை முதலில் அறிந்து கொள்ளுங்கள் - பின்னர் அபிப்பிராயங்களை உருவாக்குங்கள்:

புத்தக முகப்பு: நன்றியுடன் அமேசன் தளம்.   

51PRaeOEdAL._SX338_BO1,204,203,200_.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹோமோபோபியா உள்ள பலரின் முகத்தை காட்டிய திரி இது. 
வாழ்த்தத் தேவையில்லை, கடந்து போவோம் என்ற நிலையை கூட நான் புரிந்து ஏற்றுக்கொள்கிறேன். 🙏
அதற்கப்பால் எழுதப்பட்ட; தன்னின உறவுவைத்தோரை மொத்து மொத்தென்று போட்டார்கள், புட்டீன் படைகள் பின்னால் சென்று போட்டார்கள், எல்லா சட்டத்தையும் முதுகில் தூக்க அவசியம் இல்லை, அச்சம், நாணத்தால் அவர்களே இந்த உறவை துண்டிப்பார்கள், மிருகத்தோடும் படுக்க அனுமதிப்பீர்களா? இப்படியான பாலுணர்வு உள்ளவன் சைவனாய் இருக்க மாட்டான், இது ஒரு பிறழ்வு, குறை, போன்ற இது போன்ற பல கருத்துக்களை வெளிச்சம் காட்டிய திரியும் இது தான்.

Link to comment
Share on other sites

1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

 மறுக்கிறீர்கள் எப்படியென்றால் அவர்கள் தயக்கத்துடனும் பயத்தைடனும் வாழ வேண்டும் என்ற கருத்தின் மூலம்.

இதற்கான பதில், இருக்காது ஏனெனில் இவை இங்கே இந்த சமயசடங்குகளிற்கு போய்தான் அறியவேண்டுமென்பதில்லை.. பாடசாலைகள் தொடங்கி அலுவலகங்கள், தொலைகாட்சிகள், பத்திரிக்கைகள், ஏன் சனத்தொகை வாக்குஎடுப்பு பத்திரத்தில் கூட கேள்விகள் உள்ளது.. அவர்களுக்கு முன்னுதாரணங்கள் நிறையவே உள்ளது..ஆகையால் இதையெல்லாம் பார்த்துதான் அவர்கள் மாற வேண்டும் என்பதில்லை..  

seriously அண்ணா! how do you know? ஏதாவது தரவுகள்? இங்கே நிறையவே இதைப்பற்றி கருத்துகள் பகிரப்பட்டுள்ளன.. 

உங்களுக்கும் எனக்கும் எங்களது எதிர்பாலினத்தில்தான் ஈர்ப்பு வருகிறது.. இது இயற்கையாகவே ஏற்படுகிறது.. யாரும்  என்னை வற்புறுத்தவில்லை, உங்களையும் வற்புறுத்தவில்லை இல்லையா! இயற்கையாகவே வருகிறது.. அதை ஏற்றுக்கொள்ளும் உங்களால் ஏன் இன்னொரு மனிதர் தனக்கு தன்னினத்தை சேர்ந்தவருடன் இயற்கையாகவே வரும் உணர்வை ஏற்க முடியவில்லை..ஏனெனில் வழமைக்கு மாறானது என நீங்கள் நினைப்பதனால்  ஏற்கமுடியவில்லை.. இது உங்களது தனிப்பட்ட கருத்து, அதை எல்லோரும் மதிக்கிறோம். உங்களை மாறவேண்டும் எனக்கூட கேட்கவில்லை.. 

ஆனால் நாங்கள் அவர்களும் எங்களைப்போன்ற சகமனிதர்கள் என்பதால் அவர்களது உணர்வுகளை மதிக்கிறோம்.. என்ற கருத்தை மதிக்க ஏன் உங்களால் முடியவில்லை? 

உங்களுக்கு வாழ்த்த விருப்பமில்லை எனக்கு வாழ்த்த முடிகிறது.. அவ்வளவுதான்..
 
உங்களில் உள்ள மரியாதை, மதிப்பு காரணமாகவே இவ்வளவையும் எழுதுகிறேன்.. இல்லாவிடில் உண்மையில் எழுதியிருக்கமாட்டேன், ஏனெனில்

- இது இயற்கையானது ஆனால் வழமைக்குமாறானது.. 

- இது அடிப்படை தனிமனித உரிமை. ஒப்பிட்டளவில் சிறுபாண்மை என்பதால் அவர்களுக்கான உரிமையை மறுப்பது தவறு

- இதற்கும் பெற்றோரின் வளர்ப்பிற்கும் சம்பந்தமில்லை.. இயல்பாக ஏற்படும் உணர்வு/விருப்பம்/desire ..அதை சமூகத்திற்காக அடக்க சொல்வது தவறு 

- கிட்டதட்ட 30 நாடுகளில் சட்டரீதியாக அங்கரிக்கப்பட்டுள்ளது.. குழந்தைகளின் நலன் கருதி சட்டரீதியாக கொண்டுவரப்பட்டுள்ளது

- சகல இடங்களிலும் இதைப்பற்றிய விளக்கங்கள் உள்ளன

- எங்களது இந்து சமயத்தில் இதைப்பற்றி மெளனமாகவே இருக்கிறார்கள் அதற்கு என்ன காரணம்

- விலங்களிலும் உள்ளன.. 

- இதில் புரட்சியாக செய்வது, முற்போக்காக காட்டுவது என்பதை விட ஒரு மனிதன் இன்னொரு மனிதனை மதிப்பதும் அவர்களது உணர்வுகள் உரிமைகளை மதிப்பது என்ற அடிப்படை உணர்வு 

- யாரையும் வாழ்த்த சொல்லி கட்டயாப்படுத்தவில்லை. 

- கட்டாயம் sexual pleasureதான் இருக்கவேண்டியதில்லை என்பதால் அவர்களது sexual satisfaction பற்றி கவலைப்படத்தேவையில்லை.

- sexual consent  

இதைவிட வேறு ஏதாவது?  Did I miss anything? 

இப்படி பல தரவுகள் கிட்டதட்ட 13 பக்கங்களில் கருத்துகள் பகிரப்பட்டுள்ளன.. 

இதற்கு மேல்.. முடியவில்லை..

இன்னொரு விடயம், இதைப்பற்றி பெரிதுபடுத்த தேவையில்லை என்றால் இதை இங்கே கடந்து போகும் மற்றைய செய்திகள் போல கடந்து போயிருக்கலாம் வாழ்த்துபவர்கள் மனமார வாழ்த்தினால் என்ன இல்லாவிட்டால்தான் என்ன! பெரிதுபடுத்தவேண்டிய விடயம் இல்லை என்றால் கடந்து போயிருக்கலாம் தானே..

 உங்களைப்போன்றே மற்றைய சக கருத்தாளர்களும் தங்களது கருத்தை எழுதுகிறார்கள்..  நீங்கள் எழுதுவது வகுப்பெடுப்பதில்லை என்றால் நான் எழுதுவதும் பாடம் எடுப்பதில்லை அண்ணா!!

மிகவும் விரிவாக தகவல்களை தொகுத்து தந்துளீர்கள்.  இது போல தரவுகளை தொகுக்கும் ஆற்றல் எனக்கில்லை. என்னை பொறுத்தவரை பாலின உணர்வு சிறுபான்மையினரான அவர்கள் எம்மை போல் இந்த உலகில் வாழும் உரிமை படைத்த மனிதர்களே. அவர்களுக்கு எது செய்ய வேண்டும் என்று ஆணையிட எம்மில்  எவருக்கும் உரிமை இல்லை.  அடுத்தவன் உரிமையில் தலையிடும் பழமைவாதமும் காட்டு மிராண்டித்தனமும் தான் கலாச்சாரம் என்று புரிந்து வைத்திருக்கும் மனிதர்களை தாண்டி   இந்த உலகம் மேலும் civilization வளர்ச்சி அடைய தான் போகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

ஆனால் இந்த ஐயர் இதை செய்வதை விட, செய்யாமல் விடுவதால் அவருக்கு வரும் பல பொருளாதார இழப்பு, அசெளகரியத்தை தவிர்த்து இருக்கலாம். இவர்களை பார்த்தால் ஐயருக்கு ஆயிர கணக்கில் கொடுப்பவர்கள் போலவும் தெரியவில்லை.

ஜேர்மனியில் Standesamt.  என்ற காரியாலயத்தில் பதிவு செயது. தான் திருமண எழுத்து எழுத முடியும்    கனடாவில் ஐயார்மாரும். அனுமதி பெற்று வீட்டில் மண்டபம்...என.  திருமணம். எழுதுவதாக அறிந்தேன்.  இந்த திருமணம் யார் எழுதியது  மேற்படி ஐயாரா.? எழுத முடியாது என அவர் மறுக்க முடியாது என நினைக்கிறன் அப்படி மறுத்தால். .....சம்பத்தப்பட்ட பெண்கள் முறைப்பாடு செய்யும்போது அனுமதி இரத்து செய்யப்படும் எனவே அவர் எழுதியிருத்தால் சடங்கும் செய்ய கடமைப்பட்டிருக்கிறார்.  இதுபற்றி  மேலதிக தகவல்களை கனடா வாழ். யாழ்கள உறவுகள் அறியத்தருவார்கள். என நம்புகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kandiah57 said:

கனடா விபரம் எனக்குத்தெரியவில்லை. பொதுவாக கலியாணம் நடக்கும் இடமும், நடத்தி வைப்பவரும் லைன்சன்ஸ் உடையவர்களாக இருக்க வேண்டும். 

ஆனால் லைசன்ஸ் இருந்தாலும் தன்பாலின திருமணத்தை கட்டாயம் நடத்தி வைக்கவேண்டும் என்ற கடப்பாடு மத நிறுவனங்களுக்கு இல்லை. 

ஒரு சிவில் ரெஜிஸ்டார் இப்படி செய்ய முடியாது என மறுக்கமுடியாது, ஆனால் ஒரு மதப் போதகர், அமைப்பு மறுக்கலாம். 

என்னை பொறுத்தவரை இது சரியான நிலைப்பாடும் கூட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பெண்கள் இருவரும் அதே இடத்தில் அதே தினம் ஐயார்  இல்லாமல் மாலையை  மாற்றி  பல படங்கள் எடுத்து   Facebook...You Tube....போன்ற தளங்களில் போடுவதான் மூலமும்.  விளம்பரம் செய்திருக்க முடியும்  இதையும் எமது குழந்தைகள் பார்க்க தான் போகிறார்கள்   உங்களால் தடுக்க முடியுமா?இல்லை அல்லவா 

ஐயார். அல்லது ஐயாரைக கொண்டு செய்த தான் மூலம் விளம்பரம் வந்து விட்டது என்பது எற்க்க முடியாது பிள்ளைகள் பாதிப்பு அடைவாரகள் என்பது எற்க்கக்கூடிய கருத்து இல்லை என்னெனில் பெறும்பாலும். திருமணம் பிள்ளைகள் விருப்பப்படி தான் நடைபெறுகிறது  அந்த பெண்கள் இந்து சமயத்தில் உள்ள பற்று காரணமாக ஐயார் மூலம்  செய்துள்ளனர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

மன்னிக்க வேண்டும் எப்போதும் தமிழன்! தன்னினச் சேர்க்கையாளர் பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் இந்த அவதானங்களுக்கு ஆதாரங்கள் இருக்கின்றனவா? எனக்கு இது உங்கள் அபிப்பிராயமாகத் தான் தெரிகிறது.

ஆண்டுக் கணக்காக சேர்ந்து வாழும், ஏனைய மனிதர்கள் போல வாழும் ஓரின இணைகள் இப்போது அதிகரித்திருக்கிறார்கள். முன்னர் இவை living together ஆக மட்டுமிருக்க திருமணம் சட்ட ரீதியாக இருக்காமையே காரணம். எனவே உங்கள் இந்த குறுகின பாலுணர்வு விகாரம் என்பது ஆதாரங்களில்லாத அபிப்பிராயம் மட்டுமே!

இப்படி ஒருபாலின ஜோடிகளில் எத்தனைபேர் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக வாழ்ந்தார்கள் என்று ஏதாவது ஆதாரமான தரவுகள் இருந்தால் தாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Eppothum Thamizhan said:

இப்படி ஒருபாலின ஜோடிகளில் எத்தனைபேர் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக வாழ்ந்தார்கள் என்று ஏதாவது ஆதாரமான தரவுகள் இருந்தால் தாருங்கள்.

அவர்கள் அப்படி வாழவில்லை என்பதற்கு ஆதாரமான தகவல்களை நீங்கள் தந்த பிறகு நான் numerical data இருக்கிறதா எனத் தேடிப் பார்க்கிறேன்!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

ஹோமோபோபியா உள்ள பலரின் முகத்தை காட்டிய திரி இது. 
வாழ்த்தத் தேவையில்லை, கடந்து போவோம் என்ற நிலையை கூட நான் புரிந்து ஏற்றுக்கொள்கிறேன். 🙏
அதற்கப்பால் எழுதப்பட்ட; தன்னின உறவுவைத்தோரை மொத்து மொத்தென்று போட்டார்கள், புட்டீன் படைகள் பின்னால் சென்று போட்டார்கள், எல்லா சட்டத்தையும் முதுகில் தூக்க அவசியம் இல்லை, அச்சம், நாணத்தால் அவர்களே இந்த உறவை துண்டிப்பார்கள், மிருகத்தோடும் படுக்க அனுமதிப்பீர்களா? இப்படியான பாலுணர்வு உள்ளவன் சைவனாய் இருக்க மாட்டான், இது ஒரு பிறழ்வு, குறை, போன்ற இது போன்ற பல கருத்துக்களை வெளிச்சம் காட்டிய திரியும் இது தான்.

அமெரிக்க படைகளில் காணப்பட்ட இந்த ஓர்பால் சேர்க்கையாளர்களை நோக்கி தான் எச் ஐ வி தோற்றுவிக்கப்பட்டதாகவும் கருதுகோள்கள் உண்டு. 

Several studies have documented elevated rates of both sexually transmitted infections (STIs) and STI risk behaviors and among MSM/MSMW (men who have sex with men/men who have sex with men and women) and WSW/WSMW (women who have sex with women/women who have sex with men and women) populations compared to men and women who engage exclusively in opposite-sex sexual relationships.

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3575167/

மேலும் இந்த ஓர்பால் சேர்க்கை விருப்புக் கும்பல் சொல்லித் திரிவது போல்.. இயற்கை இவர்களை மரபணு தேர்வு மூலம் தெரிவு செய்யவில்லை. அப்படியான ஒற்றை மரபணுக் கூட கண்டறியப்படவில்லை. 

No single gene associated with being gay

A genetic analysis of almost half a million people has concluded there is no single "gay gene".

ஆனாலும் இந்த நடத்தையியலை காண்பிக்கும் கும்பல்கள் மத்தியில் 5 மரபணுத் திரிபுகளை அவதானிக்க முடிந்துள்ளது. அவை எல்லாம் ஒரு சேர அமைவது கூட 1 சதவீதத்திற்கும் குறைவு.  குறிப்பாக 1 மண நுகர்ச்சி மரபணு மாறல்,  4 மற்றவை பால்நிலை ஓமோன்கள் சார்ந்த மரபணு மாறல்களாகும். 

Five specific genetic variants were found to be particularly associated with same-sex behaviour, including one linked to the biological pathway for smell, and others to those for sex hormones.

But together they only accounted for under 1% of same-sex behaviour.

https://www.bbc.co.uk/news/health-49484490

ஆக மொத்தத்தில் ஆய்வாளர்களால்.. இது nature அல்லது nurture காரணமானதா என்பதைக் கூட தீர்க்கமாக முடிவு செய்ய முடியவில்லை. 

ஆனால்.. இங்கு சிலர் இது இயற்கை என்று சொல்லிக்கிட்டு இருக்கிறார்கள். 

உண்மையில்.. இது சில மரபணுத் திரிபுகள் சார்ந்து.. உடல் இரசாயனத் தூண்டல் மூளையில் ஏற்படுத்தும்.. இயல்புக்கு மாறான தூண்டற் பிறழ்வுகள் சார்ந்து (abnormality) மற்றும் சூழல் சார்ந்து ஏற்படுத்தப்படும் ஒரு பழக்கம் என்பதே இன்று ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம்.

அந்த வகையில்.. இவர்களின் உயிரியல் வாழ்க்கை நிலை மனிதர்கள் என்ற வகைக்குள் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.. என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவர்களின் நடத்தையியலை அவர்கள் தங்கள் மட்டில் மட்டுப்படுத்தி வைத்துக் கொள்வதையும் உலகம் எதிர்க்கவில்லை.

ஆனால்.. இதை ஒரு பொது நடத்தையாக.. ஒரு பொது சமூக ஒழுங்காக காட்ட நினைக்கும் கோமாளிகளால் தான்.. இவர்களுக்குப் பிரச்சனை என்பதே நிஜமாகும். யார் இந்தக் கோமாளிகள் என்றால்.. தங்களை தாங்களே சமூக சீர்திருத்தவாதிகள் என்று விளம்பரம் தேடப் பறைசாற்றித் திரிபவர்கள் தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Sasi_varnam said:

கோவேறு கழுதைகளுக்கும் வாழ்க்கை உண்டு...
இந்த வரியை என்ன மன நிலையில் எழுதியிருக்கிறீர்கள் என புரிந்து கொள்ள முயல்கிறேன்.
கோவேறு கழுதை என்றால் என்ன எந்த உயிர்ப்பும் அற்ற ஜடமா? பிரபஞ்சத்தின் படைப்பில் கோவேறு கழுதையோ, கட்டெறும்போ  எந்த வகையிலும் குறையவில்லை. 

குதிரை குதிரை வாழ்க்கை வாழட்டும்,  கழுதை கழுதை வாழ்க்கை வாழட்டும், கோவேறு கோவேறு வாழ்க்கை வாழட்டும். நீங்கள் எதை வாழ்த்த, எதை வாழ்த்தாமல் இருக்க நினைக்கிறீர்களோ அது உங்கள் மனநிலை. நான் அதை மதிக்கிறேன்.

அந்த படத்தில் இருந்த உருவங்களை வைத்து நானே ஒரு கருத்தியல் செய்து கொள்கிறேன். மன்னிக்கவும்:   
படிச்சவன், படிச்சவனை போல நடிச்சவன், படிக்காமல் முட்டாளாய்  இருப்பவன்... பார்வையில் எல்லாரும் ஒரு மாதிரி என்பதற்காக நடிக்கிறவனையும், முட்டாளயும்  படிச்சவனா கொண்டாட ஏலாது தான்.

கோவேறு கழுதைகளை தனி இனமாகக் கருதுவதில்லை. காரணம் அவை இயற்கையாக.. தமக்கிடையே இனப்பெருக்கும் தகுதியற்றவை. இந்த ஓர்பால் சேர்க்கை அல்லது தேர்வுக்கும்பலும் கிட்டத்தட்ட நடத்தையியலில்.. அதே வகை தான். 

இதற்குள் படிச்சவன்.. படிச்சவனை போல நடிச்சவன்.. படிக்காத முட்டாள் என்பதை எல்லாம் திணிப்பது பொருத்தமாக இருக்காது. அவசியமற்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

ஹோமோபோபியா உள்ள பலரின் முகத்தை காட்டிய திரி இது. 
வாழ்த்தத் தேவையில்லை, கடந்து போவோம் என்ற நிலையை கூட நான் புரிந்து ஏற்றுக்கொள்கிறேன். 🙏
அதற்கப்பால் எழுதப்பட்ட; தன்னின உறவுவைத்தோரை மொத்து மொத்தென்று போட்டார்கள், புட்டீன் படைகள் பின்னால் சென்று போட்டார்கள், எல்லா சட்டத்தையும் முதுகில் தூக்க அவசியம் இல்லை, அச்சம், நாணத்தால் அவர்களே இந்த உறவை துண்டிப்பார்கள், மிருகத்தோடும் படுக்க அனுமதிப்பீர்களா? இப்படியான பாலுணர்வு உள்ளவன் சைவனாய் இருக்க மாட்டான், இது ஒரு பிறழ்வு, குறை, போன்ற இது போன்ற பல கருத்துக்களை வெளிச்சம் காட்டிய திரியும் இது தான்.

இங்கே எம் மீது கொட்டப்பட்ட அனைத்து அவமதிப்புக்களையும் கண்ணை மூடி கடந்து வந்த தங்களின் மன ஓட்டத்தை மெச்ச வார்த்தைகள் வரவில்லை. நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, nedukkalapoovan said:

அமெரிக்க படைகளில் காணப்பட்ட இந்த ஓர்பால் சேர்க்கையாளர்களை நோக்கி தான் எச் ஐ வி தோற்றுவிக்கப்பட்டதாகவும் கருதுகோள்கள் உண்டு. 

Several studies have documented elevated rates of both sexually transmitted infections (STIs) and STI risk behaviors and among MSM/MSMW (men who have sex with men/men who have sex with men and women) and WSW/WSMW (women who have sex with women/women who have sex with men and women) populations compared to men and women who engage exclusively in opposite-sex sexual relationships.

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3575167/

மேலும் இந்த ஓர்பால் சேர்க்கை விருப்புக் கும்பல் சொல்லித் திரிவது போல்.. இயற்கை இவர்களை மரபணு தேர்வு மூலம் தெரிவு செய்யவில்லை. அப்படியான ஒற்றை மரபணுக் கூட கண்டறியப்படவில்லை. 

No single gene associated with being gay

A genetic analysis of almost half a million people has concluded there is no single "gay gene".

ஆனாலும் இந்த நடத்தையியலை காண்பிக்கும் கும்பல்கள் மத்தியில் 5 மரபணுத் திரிபுகளை அவதானிக்க முடிந்துள்ளது. அவை எல்லாம் ஒரு சேர அமைவது கூட 1 சதவீதத்திற்கும் குறைவு.  குறிப்பாக 1 மண நுகர்ச்சி மரபணு மாறல்,  4 மற்றவை பால்நிலை ஓமோன்கள் சார்ந்த மரபணு மாறல்களாகும். 

Five specific genetic variants were found to be particularly associated with same-sex behaviour, including one linked to the biological pathway for smell, and others to those for sex hormones.

But together they only accounted for under 1% of same-sex behaviour.

https://www.bbc.co.uk/news/health-49484490

ஆக மொத்தத்தில் ஆய்வாளர்களால்.. இது nature அல்லது nurture காரணமானதா என்பதைக் கூட தீர்க்கமாக முடிவு செய்ய முடியவில்லை. 

ஆனால்.. இங்கு சிலர் இது இயற்கை என்று சொல்லிக்கிட்டு இருக்கிறார்கள். 

உண்மையில்.. இது சில மரபணுத் திரிபுகள் சார்ந்து.. உடல் இரசாயனத் தூண்டல் மூளையில் ஏற்படுத்தும்.. இயல்புக்கு மாறான தூண்டற் பிறழ்வுகள் சார்ந்து (abnormality) மற்றும் சூழல் சார்ந்து ஏற்படுத்தப்படும் ஒரு பழக்கம் என்பதே இன்று ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம்.

அந்த வகையில்.. இவர்களின் உயிரியல் வாழ்க்கை நிலை மனிதர்கள் என்ற வகைக்குள் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.. என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவர்களின் நடத்தையியலை அவர்கள் தங்கள் மட்டில் மட்டுப்படுத்தி வைத்துக் கொள்வதையும் உலகம் எதிர்க்கவில்லை.

ஆனால்.. இதை ஒரு பொது நடத்தையாக.. ஒரு பொது சமூக ஒழுங்காக காட்ட நினைக்கும் கோமாளிகளால் தான்.. இவர்களுக்குப் பிரச்சனை என்பதே நிஜமாகும். யார் இந்தக் கோமாளிகள் என்றால்.. தங்களை தாங்களே சமூக சீர்திருத்தவாதிகள் என்று விளம்பரம் தேடப் பறைசாற்றித் திரிபவர்கள் தான். 

நெடுக்கர், உங்கள் விஞ்ஞான, மருத்துவ அறிவை இங்கேயும் ஆயுதமயப்படுத்துகிறீர்கள் போல!

முதல் தகவல் உண்மை: ஆண் ஆண் உடலுறவின் போது அதிகம் abrasions ஏற்படுவதால் அவர்களிடையே எச்.ஐ.வி உட்பட்ட நோய்கள் அதிகம் பரவியது உண்மை. ஆனால், abrasions ஏற்படும் வகையில் ஆண் பெண் உறவு நிகழ்ந்தாலும் இவை அதிகரிக்கத் தான் போகிறது! எனவே, இதெல்லாம் இயற்கைக்கு மாறானது என்பதற்கு ஆதாரமில்லை! (எந்த இயற்கை மீறலால் இன்புழுவன்சா நோய்கள் ஏற்பட்டன? எனவே வைரஸ் நோய்களை வைத்துக் கொண்டு இயற்கை சம்மதிக்கிறதா எதிர்க்கிறதா என்பதெல்லாம் solid science அல்ல!

ஒரு ஜீன் வடிவத்தில் இருந்தால் தான் அந்த இயல்பு இயற்கையால் தப்ப வைக்கப் படுகிறது என்ற  கருத்தை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை! இது இங்கே இருக்கும் பெரும்பாலானோருக்கு ஜீன்கள் பற்றிய உயிரியல் புரியாது என்ற நம்பிக்கையில் எழுதியிருக்கிறீர்கள் போல! 

ஜீன்களை மீறிய இயல்புகள் மனிதரிடையே நிலைக்கவேயில்லையா? மத நம்பிக்கைக்கு எத்தனை ஜீன்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12 Animals That Reproduce Asexually

https://www.treehugger.com/animals-that-reproduce-asexually-5112566

பெண்துணை / கலவி இன்றிழும் கூட சந்ததி பெருக்கும் 12 உயிரினங்கள் --> இயற்கை மிக நுட்பமான அட்புதமான விடயம். இது இப்படித்தான் என்று வரையறை போடுதல்  எல்லா சந்தர்ப்பத்திலும் பொருந்துமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

 மறுக்கிறீர்கள் எப்படியென்றால் அவர்கள் தயக்கத்துடனும் பயத்தைடனும் வாழ வேண்டும் என்ற கருத்தின் மூலம்.

அவர்கள் தயக்கத்துடனும், பயத்துடனும் வாழவேண்டுமென்று நான் எங்கும் கருத்தெழுதவில்லை. பொதுவழக்காக இல்லாதஒன்றை ஒருவர் செய்யமுற்படும்போது இவற்றை எதிர்நோக்க வேண்டிவரும் என்பது பொதுவானதே. ஒருபாலினசேர்க்கை அவர்களது விருப்பம். அதை அவர்களோ அல்லது அவர்களின் பெற்றோர்களோ அங்கீகரிக்கப்பட்ட ஒரு சமய சடங்காக காட்ட முற்படுவதுதான் பிரச்சனையே.

இதற்கான பதில், இருக்காது ஏனெனில் இவை இங்கே இந்த சமயசடங்குகளிற்கு போய்தான் அறியவேண்டுமென்பதில்லை.. பாடசாலைகள் தொடங்கி அலுவலகங்கள், தொலைகாட்சிகள், பத்திரிக்கைகள், ஏன் சனத்தொகை வாக்குஎடுப்பு பத்திரத்தில் கூட கேள்விகள் உள்ளது.. அவர்களுக்கு முன்னுதாரணங்கள் நிறையவே உள்ளது..ஆகையால் இதையெல்லாம் பார்த்துதான் அவர்கள் மாற வேண்டும் என்பதில்லை..  

நீங்கள் சொன்ன எந்த இடத்திலும் ஒருபாலின சேர்க்கையை எமது சமய சடங்காக சொல்லவோ காட்டுவதோ இல்லையே.

- விலங்களிலும் உள்ளன.. 

இதற்கான பதிலை ஏற்கனவே எழுதிவிட்டேன். விலங்குகள் எதிர்பாலின இணை அருகில் இருக்கும்போது இதை செய்வதில்லை. அந்தந்த நேரத்தில் எழும் பாலிச்சையை தீர்த்துக்கொள்ளவே அப்படி செய்கின்றன. காலம் முழுவதும் அதையே செய்துகொண்டிருப்பதில்லையே!

- இதில் புரட்சியாக செய்வது, முற்போக்காக காட்டுவது என்பதை விட ஒரு மனிதன் இன்னொரு மனிதனை மதிப்பதும் அவர்களது உணர்வுகள் உரிமைகளை மதிப்பது என்ற அடிப்படை உணர்வு 

ஒருபாலின சேர்க்கையென்பது காலாகாலமாக நடப்பதுதான். அதை அங்கீகரிக்கப்பட்ட சமய சடங்காக காட்ட முற்படுவதைத்தான் புரட்சி என்று குறிப்பிட்டேன்.

உங்கள் விரிவான பதில்களுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Justin said:

நெடுக்கர், உங்கள் விஞ்ஞான, மருத்துவ அறிவை இங்கேயும் ஆயுதமயப்படுத்துகிறீர்கள் போல!

முதல் தகவல் உண்மை: ஆண் ஆண் உடலுறவின் போது அதிகம் abrasions ஏற்படுவதால் அவர்களிடையே எச்.ஐ.வி உட்பட்ட நோய்கள் அதிகம் பரவியது உண்மை. ஆனால், abrasions ஏற்படும் வகையில் ஆண் பெண் உறவு நிகழ்ந்தாலும் இவை அதிகரிக்கத் தான் போகிறது! எனவே, இதெல்லாம் இயற்கைக்கு மாறானது என்பதற்கு ஆதாரமில்லை! (எந்த இயற்கை மீறலால் இன்புழுவன்சா நோய்கள் ஏற்பட்டன? எனவே வைரஸ் நோய்களை வைத்துக் கொண்டு இயற்கை சம்மதிக்கிறதா எதிர்க்கிறதா என்பதெல்லாம் solid science அல்ல!

ஒரு ஜீன் வடிவத்தில் இருந்தால் தான் அந்த இயல்பு இயற்கையால் தப்ப வைக்கப் படுகிறது என்ற  கருத்தை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை! இது இங்கே இருக்கும் பெரும்பாலானோருக்கு ஜீன்கள் பற்றிய உயிரியல் புரியாது என்ற நம்பிக்கையில் எழுதியிருக்கிறீர்கள் போல! 

ஜீன்களை மீறிய இயல்புகள் மனிதரிடையே நிலைக்கவேயில்லையா? மத நம்பிக்கைக்கு எத்தனை ஜீன்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன?

https://www.forbes.com/sites/dawnstaceyennis/2019/08/30/the-gay-gene-is-a-myth-but-being-gay-is-natural-say-scientists/?sh=7b26a9a77fa7

the largest study of its kind failed to confirm the existence of a "gay gene" is not so much a disappointment for those looking to understand the LGBTQ community, as it is an acknowledgement that science does not need to tell us what should be plainly obvious: gays, lesbians, bisexuals and pansexuals are who they are.

The study by Andrea Ganna, lead author and European Molecular Biology Laboratory group leader at the Institute of Molecular Medicine in Finland, said the research reinforces the understanding that same-sex sexual behavior is simply “a natural part of our diversity as a species.”

... 

Genetics cannot tell "the whole story," as Eric Vilain, director of the Center for Genetic Medicine Research at Children’s National Health System, told the Post, about what "makes" somebody gay. But even if people are not "Born This Way," as Lady Gaga sang, at last now we can join Gloria Gaynor in singing, "I Am What I Am."

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழும் புலத்தில் ஒரு தலைப்பு (எனக்கு தமிழ் தெரியாது) அனாதரவாக இருக்கு அது மிக தேவையானதும் கூட. ஆனால் செய்தி திரட்டியில் 13 பக்கம் கடந்து வீறுநடை போடுகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாதவூரான் said:

வாழும் புலத்தில் ஒரு தலைப்பு (எனக்கு தமிழ் தெரியாது) அனாதரவாக இருக்கு அது மிக தேவையானதும் கூட. ஆனால் செய்தி திரட்டியில் 13 பக்கம் கடந்து வீறுநடை போடுகிறது. 

கவுதமனின் திரி: பார்த்தேன். ஆனால், அமெரிக்காவில் அப்படியான முறைப்பாட்டை நான் கேள்வியுறாததால் எதுவும் சொல்லவில்லை!

ஆனால், பேசவேண்டிய விடயம் இதுவும் தானே?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.