Jump to content

கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம்

Recommended Posts

இவ் உலகில் எல்லாரும் வாழ்வதற்கான இடம் உள்ளது. அது மற்றவர்களை பாதிக்காமல், மற்றவர்களின் இடத்தை அபகரிக்காமல், மற்றவர்களின் வாழ்வுக்கு இடையூறு விளைவிக்காமல் இருக்கும் வரைக்கும் எவருக்கும் வாழ்வதற்கு இடம் உள்ளது.

எனக்கு தனிப்பட்ட ரீதியில் இன்னொரு ஆணிடம் ஈடுபாடோ அல்லது காமமோ ஏற்படுவதில்லை. எப்பொதும் எதிர்பாலினருடன் தான் அந்த ஈடுபாடு ஏற்படும். என்னைப் போல் தான் பெரும்பாலானோர். 

ஆனால் எதிர்பாலருடன் எந்தவிதமான ஈடுபாடும் இல்லாத சக பாலருடன் மட்டுமே ஈடுபாடு ஏற்படும் ஒருவருக்கு இருக்கும் தெரிவு என்ன? அவருக்கு இந்த உலகில் இடம் இல்லையா? அவர் கண்டபடி ஒன்றுக்கு மேற்பட்ட சகபாலருடன் உறவு வைக்காமல், தனக்கு என்று ஒருவரைத் தெரிவு செய்து அவருடன் மட்டுமே உறவு கொள்ளவதில் இருக்கும் தவறு என்ன? அப்படி இல்லாமல் அவர் இந்த சமூக நியதிகளுக்காக வேண்டா வெறுப்பாக எதிர் பாலர் ஒருவரைத்தான் தெரிவு செய்து தானும் தனக்கு பிடித்த வாழ்வை வாழாமல், துணையையும் வாழ விடாமல் செய்ய வேண்டுமா?
 
Link to comment
Share on other sites

  • Replies 386
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நிழலி said:

பலமான கேள்வி

மனச்சாட்சியை கேட்காமல் தான் பதில் தருவேன்.😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கைக்கு மாறான உறவை ஊக்கிவிப்பதால் சமூகத்திற்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. இந்த உறவில் அவர்கள் உச்ச பட்ச திருப்தியை ஒருபோதும் அடையப் போவதில்லை. சில பாலியல் ஒமோன் களின் குறைபாடுகளால் அவர்களால் சரியானஎதிர்பாலினத்தை ஈர்க்க முடியாத நிலையில் அல்லது திருப்த்திப்படுத்த முடியாத நிலையில் இவ்வாறான உறவுகளை நாடுகிறார்கள்.அவர்கள் உண்மையில் மாற்றுத்திறனாளிகள் என்ற வகைக்குள் வைத்துப் பராமரிக்க வேண்டியவர்கள். மற்றும்படி இது கிழிந்த ஆடைகளை அணிவது. உள்ளாடை தெரியக் கூடியவாறு லூசான காற்சட்டைகளை அணிவதை ஒரு பாணியாக்கிக் கொள்வது போன்ற ஒரு மனநிலமைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, புலவர் said:

புலவர், ஒத்த பாலினரைக் காமுறுவோரை விசேட தேவையுடையோர் என்கிறீர்கள்! மிகவும் தவறான கருத்து!  இதற்கு மருத்துவ/விஞ்ஞான ரீதியான ஆதாரங்கள் எவையாவது இருக்கின்றனவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓரின சேர்க்கை என்பது அவரவர் உடல்/உள உணர்ச்சி சார்ந்தது. அதை சொல்லி திருத்த முடியாது. அதை அவர்கள் வழியில் வாழவிட்டு வாழ்த்தி விடுவதுதான் பண்பு. ஓரினச்சேர்க்கைக்கு உந்தப்பட்டவர்கள் இப்போது தமக்கென ஒரு சமுதாயத்தையே உருவாக்கி விட்டார்கள்.

இருந்தாலும்...

இந்த ஓரின சேர்க்கை இயற்கைக்கு மாறானது என்பது என் கருத்து. மனித உயிரினத்தை விட்டு வேறு உயிரினங்கள் ஓரின சேர்க்கையில் ஈடுபடுகின்றனவா? யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sasi_varnam said:

சந்ததியின் பெருக்கம் / பாலியல் இச்சை இவை தானே ஆண், பெண் இணைவதற்கான முதல் காரணங்கள்.
உலக சனத்தொகை 6.9 பில்லியனை எட்டுகிறது, சனப்பெருக்கம் கொஞ்சம் குறைவதால் உலகத்துக்கு கேடு எதுவும் இல்லை.

மாறாக பூமிக்கு உதவியாகவும் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

ஆண்களும் இப்போ பல இடங்களில் தன்னின சேர்க்கையாளர்களாக வாழ்கிறார்கள் ஜேர்மனியின் முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் அப்படி வாழ்தவர் அவர் 50....60. வயதிற்குள் இறந்துவிட்டார்

ஜேர்மனியில் இப்போதும் ஓரின சேர்க்கை அரசியல்வாதிகளும் பிரபல்ய ஊடகவியலாளர் இருக்கின்றார்கள். உதாரணத்திற்கு எமது சுகாதார அமைச்சர் மற்றும் எதிர்கட்சியில் இருக்கும் பிரபல பெண்மணி.

எங்கள் சுகாதார அமைச்சரும் அவர் கணவரும்...

Daniel Funke infiziert: Auch Jens Spahns Ehemann positiv auf Corona  getestet - Politik - Stuttgarter Zeitung

 AFD கட்சி தலைவியும் அவரின் மனைவியும். மனைவி சிறிலங்காவை பூர்வீகமாக கொண்டவர். சுவிற்சலாந்தில் வசிக்கின்றார்.

Schäbbigen sein Sohn on Twitter: "Und nach dem Spaziergang mit dem  adoptierten Kind und ihrer Sri Lankischen Lebensgefährtin in der  heimatlichen Schweiz, wird wieder gegen Migranten und #Ehefueralle für ca.  20.000 monatl #

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, குமாரசாமி said:

இந்த ஓரின சேர்க்கை இயற்கைக்கு மாறானது என்பது என் கருத்து. மனித உயிரினத்தை விட்டு வேறு உயிரினங்கள் ஓரின சேர்க்கையில் ஈடுபடுகின்றனவா? யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்.

ஆம்.

https://www.nationalgeographic.com/science/article/homosexual-animals-debate

https://www.news-medical.net/news/2006/10/23/1500-animal-species-practice-homosexuality.aspx

36 minutes ago, குமாரசாமி said:

ஓரின சேர்க்கை என்பது அவரவர் உடல்/உள உணர்ச்சி சார்ந்தது. அதை சொல்லி திருத்த முடியாது. அதை அவர்கள் வழியில் வாழவிட்டு வாழ்த்தி விடுவதுதான் பண்பு. ஓரினச்சேர்க்கைக்கு உந்தப்பட்டவர்கள் இப்போது தமக்கென ஒரு சமுதாயத்தையே உருவாக்கி விட்டார்கள்.

100% சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

இந்த ஓரின சேர்க்கை இயற்கைக்கு மாறானது என்பது என் கருத்து.

உலகில் எதுவுமே இயற்கைக்கு மாறானது இல்லை என நான் நினைகிறேன். ஒரு பொதுவியையும், அதன் விலக்கையும் கொண்டிருப்பதுதான் இயற்கை. எல்லாவறையும் உள்ளடக்கியதே இயற்கை.

எல்லா ஆடுகளும் வெள்ளையாக இருக்கும் போது ஒரு கறுத்த ஆடு அதே மந்தையில் இருக்கும்.

அந்த கறுத்த ஆடு இயற்கைக்கு மாறானது அல்ல. வழமைக்கு மாறானது என்று சொல்லாம். 

இனப்பெருக்கம் செய்யும் உறவுதான் இயற்கையானது என்றால் மலட்டுதன்மை உள்ள, விரும்பி பிள்ளை பெறாது இருக்கும் தம்பதிகளையும் இயற்கைக்கு மாறானவர்கள் என்றல்லவா அழைக்க வேண்டும்?

1 hour ago, புலவர் said:

இயற்கைக்கு மாறான உறவை ஊக்கிவிப்பதால் சமூகத்திற்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. இந்த உறவில் அவர்கள் உச்ச பட்ச திருப்தியை ஒருபோதும் அடையப் போவதில்லை. சில பாலியல் ஒமோன் களின் குறைபாடுகளால் அவர்களால் சரியானஎதிர்பாலினத்தை ஈர்க்க முடியாத நிலையில் அல்லது திருப்த்திப்படுத்த முடியாத நிலையில் இவ்வாறான உறவுகளை நாடுகிறார்கள்.அவர்கள் உண்மையில் மாற்றுத்திறனாளிகள் என்ற வகைக்குள் வைத்துப் பராமரிக்க வேண்டியவர்கள். மற்றும்படி இது கிழிந்த ஆடைகளை அணிவது. உள்ளாடை தெரியக் கூடியவாறு லூசான காற்சட்டைகளை அணிவதை ஒரு பாணியாக்கிக் கொள்வது போன்ற ஒரு மனநிலமைதான்.

நிச்சயம் தன்பாலின ஈர்ப்பு ஒரு பாணி அல்ல. அது ஒரு நோயுமல்ல ஒரு அங்கவீனமும் அல்ல.

பாலின ஈர்ப்பு என்பது ஒரு spectrum என்கிறார்கள். ஒரு extreme இல் எதிர் பாலினத்தவரால் மட்டும் ஈர்க்கப்படும் நம் போன்றோர். எதிர் extreme இல் தன்பாலின கவர்சி மட்டும் உடையோர். இந்த இரெண்டுக்கும் இடையில் bisexual, pansexual இவ்வாறு பலர்.

மனித பாலின அடையாளம் சூரிய ஒளி போன்றது. பார்க்க வெளிச்சம் மாரி இருந்தாலும் அதற்குள் வயலட் முதல் சிவப்பு வரை நிறங்கள் உள்ளன.

இதை குறிக்கவே ரெயின்போ கொடி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

இனப்பெருக்கம் செய்யும் உறவுதான் இயற்கையானது என்றால் மலட்டுதன்மை உள்ள, விரும்பி பிள்ளை பெறாது இருக்கும் தம்பதிகளையும் இயற்கைக்கு மாறானவர்கள் என்றல்லவா அழைக்க வேண்டும்?

மலட்டுத்தன்மை இயற்கை விதிகளுக்குள் வராது. மலட்டுத்தன்மையோ அல்லது ஆண்மையின்மையோ அது ஒருவித குறைபாடு.

 மலட்டுத்தன்மையும் ஆண்மையின்மையும் ஓரளவு மருத்துவத்தால் நிவர்த்தி செய்யக்கூடிய குறைபாடு.
ஓரின சேர்க்கை அப்படியல்லவே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

மலட்டுத்தன்மை இயற்கை விதிகளுக்குள் வராது. மலட்டுத்தன்மையோ அல்லது ஆண்மையின்மையோ அது ஒருவித குறைபாடு.

 மலட்டுத்தன்மையும் ஆண்மையின்மையும் ஓரளவு மருத்துவத்தால் நிவர்த்தி செய்யக்கூடிய குறைபாடு.
ஓரின சேர்க்கை அப்படியல்லவே

இந்த வகையில் பார்த்தால் எனது ஒப்பீடு பிழைதான். தன்பாலின உந்தலை மருத்துவத்தால் குணமாக்க முடியாது என்பது மிகச்சரி.

ஆனால் மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத தானாக அமையும் ஒன்றைதானே “இயற்கையானது” என்போம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால்ஈர்ப்புடைய( lesbian) பெண்களின் திருமணம்👩‍❤️‍👩

திருமண வாழ்த்துக்கள்💐

Bild

  Bild

Bild

💝

டிவிட்டரிலிருந்து......

Bild

புது மண தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்! 💐💐

திருமண வைபவத்தை இந்து முறைப்படி சிறப்பாக செய்து வைத்த ஐயாவுக்கு பாராட்டுக்கள்! ❤️❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நியாயத்தை கதைப்போம் said:

புது மண தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்! 💐💐

திருமண வைபவத்தை இந்து முறைப்படி சிறப்பாக செய்து வைத்த ஐயாவுக்கு பாராட்டுக்கள்! ❤️❤️

நவ நாகரீக உலகு.அதில் ஓரின சேர்க்கையும் அடங்கும்.😷

இங்கு குருக்கள் ஏன் மோனோடை வந்தவர். என்ன மந்திரம் சொன்னவர். ஆகம விதிகளின்படி அது தகுமோ?  ஓரின சேர்க்கைக்கு என்ன  மந்திரம்?
பிளீஸ் ரெல்மீ. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Sasi_varnam said:

உலக சனத்தொகை 6.9 பில்லியனை எட்டுகிறது, சனப்பெருக்கம் கொஞ்சம் குறைவதால் உலகத்துக்கு கேடு எதுவும் இல்லை. 

உலக சனத்தொகை எப்படியாவது போவது இருக்கட்டும் நாம் வெளிநாட்டுக்கு ஓடிவந்திட்டம் இனி ஊர் லெவல்ல எதுக்கு யோசிக்கோனும் உலக லெவல்ல யோசிப்பம் எண்டு சுயநலமா இருக்காம நம்ம ஊரில நம்ம சனத்தொகைய பற்றி யோசிப்பம்… இலங்கையில் தமிழனின் சனத்தொகை அதிகமாக இருந்திருந்தால் இத்தனை லட்சம் சனமும் போராளிகளும் சாகாமல் நோகாமல் ஆட்சி எங்கடை கையில இருந்திருக்கும்.. என்னதான் இந்திய அரசியல் சட்டத்தில் இந்தியகுடிமகன் எவரும் பிரதமர் ஆகலாம் என்று இருந்தாலும்(இலங்கையிலும்தான்) இந்தியாவில் உத்தரப்பிரதேசமும் பீகாரும் மத்தியபிரதேசமும்தான் பிரதமரை தீர்மானிக்கின்றன.. அவர்கள் நலன்பற்றி சிந்திக்கும் வடக்கை சேர்ந்த ஒருவர்தான் பிரதமராக வருகிறார்.. எங்களுக்கும் உதவமுடியவில்லை.. இண்டைக்கு தென்மாநிலங்கள் பூரா தமிழன் இருந்திருந்தால் எண்ணிக்கையில் வடக்கைவிட அதிகம் இருந்திருந்தால் மத்தியில் ஆட்சியை தீர்மானிப்பவன் தமிழன் ஆகி இருப்பான்.. கொள்கைவகுப்பவனும் அவனாக இருந்திருப்பான்.. எங்கட நிலமையும் மாறி இருக்கும்.. முஸ்லீம்கள் எப்படி பெருகுகிறார்கள் சொந்த நாடுகளிலும் போய் இறங்கிய நாடுகளிலும் எண்டு யோசிச்சு பாருங்க.. இண்டைக்கு ஜரோப்பாவில் பலநாடுகளில் அரசியலை தீர்மானிக்கும் சக்தி ஆகிக்கொண்டு வருகிறார்கள்.. நாம ஒருபிள்ளை பாதிப்புள்ளயோட அடுத்தவனுக்கு வகுப்பெடுக்கிறம் உலக சனத்தொகை பற்றி.. எங்கட இனத்துக்கு தொலைநோக்கு பார்வை இல்லை.. இப்ப இந்த நொடி இந்த வாழ்க்கை என் குடும்பம் பிள்ளை குட்டி மட்டும்தான்.. இந்த சமூகத்துக்கு நடுவில தன்னையும் தன்குடும்பத்தையும் பற்றி சிந்திக்காமல் தன் சந்ததி பற்றி சிந்தித்த ஒரு தலைவனும் ஒரு கொஞ்ச போராளிகளும் பிறந்தது அதிசயம்தான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அருமையிலும் அருமையான கருத்துக்கள்.👍🏽

அண்மையில் இங்கு ஒரு திரியில் எமக்கு ஏன் வறுமையிலும் பத்து பிள்ளைகள் வேண்டும் என சொல்ல முற்பட என்னை  உச்சியில் அடித்தே படுக்க வைத்து விட்டார்கள்.

நீங்கள் சொன்ன பீகாரும் மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசங்கள் எல்லாம் வறுமை மாநிலங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

உலக சனத்தொகை எப்படியாவது போவது இருக்கட்டும் நாம் வெளிநாட்டுக்கு ஓடிவந்திட்டம் இனி ஊர் லெவல்ல எதுக்கு யோசிக்கோனும் உலக லெவல்ல யோசிப்பம் எண்டு சுயநலமா இருக்காம நம்ம ஊரில நம்ம சனத்தொகைய பற்றி யோசிப்பம்… இலங்கையில் தமிழனின் சனத்தொகை அதிகமாக இருந்திருந்தால் இத்தனை லட்சம் சனமும் போராளிகளும் சாகாமல் நோகாமல் ஆட்சி எங்கடை கையில இருந்திருக்கும்.. என்னதான் இந்திய அரசியல் சட்டத்தில் இந்தியகுடிமகன் எவரும் பிரதமர் ஆகலாம் என்று இருந்தாலும்(இலங்கையிலும்தான்) இந்தியாவில் உத்தரப்பிரதேசமும் பீகாரும் மத்தியபிரதேசமும்தான் பிரதமரை தீர்மானிக்கின்றன.. அவர்கள் நலன்பற்றி சிந்திக்கும் வடக்கை சேர்ந்த ஒருவர்தான் பிரதமராக வருகிறார்.. எங்களுக்கும் உதவமுடியவில்லை.. இண்டைக்கு தென்மாநிலங்கள் பூரா தமிழன் இருந்திருந்தால் எண்ணிக்கையில் வடக்கைவிட அதிகம் இருந்திருந்தால் மத்தியில் ஆட்சியை தீர்மானிப்பவன் தமிழன் ஆகி இருப்பான்.. கொள்கைவகுப்பவனும் அவனாக இருந்திருப்பான்.. எங்கட நிலமையும் மாறி இருக்கும்.. முஸ்லீம்கள் எப்படி பெருகுகிறார்கள் சொந்த நாடுகளிலும் போய் இறங்கிய நாடுகளிலும் எண்டு யோசிச்சு பாருங்க.. இண்டைக்கு ஜரோப்பாவில் பலநாடுகளில் அரசியலை தீர்மானிக்கும் சக்தி ஆகிக்கொண்டு வருகிறார்கள்.. நாம ஒருபிள்ளை பாதிப்புள்ளயோட அடுத்தவனுக்கு வகுப்பெடுக்கிறம் உலக சனத்தொகை பற்றி.. எங்கட இனத்துக்கு தொலைநோக்கு பார்வை இல்லை.. இப்ப இந்த நொடி இந்த வாழ்க்கை என் குடும்பம் பிள்ளை குட்டி மட்டும்தான்.. இந்த சமூகத்துக்கு நடுவில தன்னையும் தன்குடும்பத்தையும் பற்றி சிந்திக்காமல் தன் சந்ததி பற்றி சிந்தித்த ஒரு தலைவனும் ஒரு கொஞ்ச போராளிகளும் பிறந்தது அதிசயம்தான்..

10 பெறுகிற ஆட்கள் பெறட்டுமேன் ஓணாண்டியார்? யாராவது வலுக்கட்டாயமாக கருத்தடை செய்து விட்டிருக்கிறார்களா? இல்லையெல்லோ? பிறகேன் இவ்வளவு பட படப்பு ஐயா? 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நவ நாகரீக உலகு.அதில் ஓரின சேர்க்கையும் அடங்கும்.😷

இங்கு குருக்கள் ஏன் மோனோடை வந்தவர். என்ன மந்திரம் சொன்னவர். ஆகம விதிகளின்படி அது தகுமோ?  ஓரின சேர்க்கைக்கு என்ன  மந்திரம்?
பிளீஸ் ரெல்மீ. 🤣

புதிய உலக ஒழுங்கு.

இன்னும் சில பத்து வருடங்களில் இவை எல்லாம் சாதாரண விடயங்கள் ஆகிவிடும். உங்கள் பேரன்கள், பேத்திகள், பூட்டன்கள், பூட்டிகள் ஒருவருடைய ஒரு பாலின திருமணத்தை காணும் வாய்ப்பு உங்கள் ஆயுள் காலத்தில் கிடைத்தாலும் ஆச்சரியப்பட ஏதும் இல்லை.

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் நட்பு ரீதியாக பழகினாலே கண், மூக்கு வைத்து நாலு விதமாய் கதைகள் சொல்லி ஆட்களை பிரித்து வைக்கும் எமது சமூகம் ஒரே பாலினத்தை சேர்ந்த இருவர் இந்து முறைப்படி பகிரங்கமாக திருமணம் செய்வதை வாயை மூடிக்கொண்டு சும்மா பார்த்துக்கொள்ளும் என எதிர்பார்த்தால் அது மடமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

Bild

  Bild

Bild

ஒரு திருமணத்திற்கு....  அந்தப் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்,
மடியில் தூக்கி வைத்து... பல்லுக் கொழுக்கட்டை  தீத்திய.. தாய் மாமன், மாமி... 
இல்லாமல்... என்ன கலியாணம் என்று கேட்கிறேன். 

அவர்களே... இந்தத் திருமணத்தை விரும்பாமல், கலியாணத்துக்கு வரமால்,
தண்ணியை தெளித்து.. விரட்டி விட்டார்கள்.

இவர்களின் கலியாணத்துக்கு வந்தவர்களை, படத்தில் பார்த்தால்,
இவர்களை...  "பப்பா" மரத்தில்.. ஏத்தி விட்டு, 
"கூத்து" பார்க்க வந்தவர்களே தவிர... வாழ்த்த வந்தவர்கள் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி, ஓர் பாலினத்தில்...  திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசை இருந்திருந்தால்,
இரகசியமாக அந்த திருமணத்தை, செய்து விட்டு போயிருக்கலாம்.

ஏன்... முகநூல் எல்லாம் பதிந்து, அதனை பிரபலமாக்கி...
பெற்றோருக்கும், திருமணம் முடிக்காமல் இருக்கும் சகோதரங்களுக்கும்,  
வெளியே... தலை காட்ட முடியாத, தலை குனிவை ஏற்படுத்த வேண்டும். 😡

*****

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கைக்கு மாறான எதுவுமே தவறானது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களும் ஓர் பாலின திருமணமும்!
---------------------------------------------------
 
இன்று whatsapp, Facebook என பல தளங்களிலும் பேசுபொருளாக இருக்கும் விடயம்தான் Navreet, Kaythusha ஆகிய தமிழர், சீக்கியர் ஆன இருவரின் ஓர்பாலின திருமணம்தான். இது தொடர்பில் சிலர் ஆதரவாக கருத்திடும்வேளை பலரும் இதனைக் கண்டித்தும் கீழ்த்தரமாகவும் கருத்திடுவதையும் படங்களைப் பகிர்வதையும் காணக்கூடியதாகவும் இருக்கிறது. இவ்வாறு கருத்திடுவோர் அதீத  வெறுப்புணர்வை தெளிவாகவே வெளிப்படுத்துகிறார்கள். வேறு சிலர் நடுநிலையாளர்கள் போல நைச்சியமாக பேசி இது எமது கலாச்சாரத்துக்கு கேடு என்று தந்திரமாக சொல்லி முடிக்கிறார்கள். 

உண்மையில் இவர்களில் சிலர் சொல்வதுபோல இவ்வாறான ஓர்பாலின ஈர்ப்பு வெறுப்புக்குரியதா? இது ஒரு நோயா? அல்லது மனப் பிறழ்வா? 

நிச்சயமாக ஓர்பால் ஈர்ப்பு ஒரு நோயல்ல என்பதும் மனப்பிறழ்வு இல்லை என்பதும் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட விடயமாகும். அது இயற்கையானது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. உலகில் 10% மக்கள் (பத்தில் ஒருவர்) இருபாலின உறவுக்கு ஏற்றவர்கள் அல்ல என பல ஆய்வுகள் சொல்கின்றன. 

மனிதர்கள் தவிர்த்து உலகில் நட்சத்திர மீன் தொடங்கி மனித இனம்வரை 1500க்கு மேற்பட்ட உயிரனங்கள் ஓர்பாலின ஈர்புள்ளன என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். Bonobos என்ற குரங்கினம் மனித இனத்துக்கு நெருக்கமான தொடர்புடைய இனமாக விஞ்ஞானிகளால் அடையாளம் காணப்பட்ட ஒரு விலங்கினமாகும். இந்தக் குரங்கினங்களில் ஓர்பாலின பாலியல் நடத்தைகள் பொதுவாக அவதானிக்கப்படுள்ளது. 

இவ்வாறு விலங்கினங்கள் மத்தியில் ஓர்பாலின செயற்பாடுகள் சர்வசாதாரணமாக ஒரு விடயமாகவே உள்ளது. ஆனாலும் எம்மில் சிலர் தேவையற்ற விடயங்களைப் புனிதப்படுத்தியும் பேசவேண்டிய விடயங்களை பேசாப் பொருட்களாக்கியும் ஒரு மாயைக்குள் மற்றவரையும் தள்ள முயற்சித்ததன் விளைவுதான், இன்று மானுடம் எத்தனையோ மாற்றங்களை ஏற்றுக் கொண்ட பின்னரும் எம்மவர்கள் கீழ்த்தரமாகவும் கேவலமாகவும் ஓர் பாலின இணைகளை விமர்சிப்பதற்கு முக்கிய காரணமாக இருக்க வேண்டும்.

இதைவிட, இலங்கையிலும் இந்தியாவிலும் சிறுவர்களை தமது பாலியல் இச்சைக்குப் பலியாக்கும் சில ஆண்களையே ஒருபாலின ஈர்ப்புள்ள ஆண்கள் என எமது சமூகம் தவறாக இனம் கண்டிருந்ததும் இவ்வாறு ஓர் பாலின இணைகள் மீதான வெறுப்புக்கு காரணமாக இருக்கலாம். அதேபோல தமிழ் சினிமாக்களிலும் transgender நபர்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரிப்பதும் எமது மக்கள் மத்தியில் இந்தச் சிறுபான்மையினர் மீதான இத்தகைய பார்வைக்கு காரணம் என்றும் கூறலாம். மொத்ததில் இன்னமும் தமிழ் சமூகத்தில் LGBTQ தொடர்பான புரிதல் அடிமட்டத்திலேயே இருக்கிறது.

உலகிற்கே பண்பாடு கற்பித்ததாகவும் மொழி, கலை, கலாச்சாரம், விஞ்ஞானம் எல்லாம் கற்றுத் தந்ததாகவும் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு கொண்டதாகவும் சொல்லிக்கொள்ளும் ஒரு   சமூகத்தினால் ஏன் இவ்வாறு இரண்டு பெண்கள் தமது இயல்பான உணர்வின் அடிப்படையில் முடிவெடுப்பதை சகிக்க முடியவில்லை. இவர்களால் ஏன் பொது வெளியில் பண்பாக பேசமுடியவில்லை என்பதுவும் புரியவில்லை. உலகில் 1500க்கு மேற்பட்ட உயிரனங்கள் ஓர்பாலின ஈர்ப்புள்ளனவாக இருந்து வந்துள்ளன என்பதும் உலகின் பல்லினத் தன்மையில் இவையும் ஒரு பகுதி என்பது எப்படித் தெரியாமற் போனது என்பதுவும் புரியவில்லை! 

இந்த விமர்சகர்களில் ஒரு பகுதியினர் கொஞ்சம் நல்லவர்கள். அவர்களுக்கு கனடாவில் இந்த இரண்டும் பெண்கள் ஓர் பாலினத் திருமணம் செய்தது பிரச்சனையில்லையாம். ஆனால் தமிழர்களின் புனிதமான திருமணச் சடங்கை ஐயரை வைத்துச் செய்ததுதானாம் பிரச்னை. இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழகத்தில் இன்னொரு (தேசியக்) கூட்டம் ஆதிக்கப் பிராமணர் புகுத்திய இவ்வாறான திருமணச் சடங்குகள் எமக்குரியவையல்ல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எனவே இவர்கள் எல்லாம் சேர்ந்து கதைத்துப் பேசி, நாம் இன்று பின்பற்றும் திருமணச் சடங்குகள் தமிழருக்கு உரியவையா இல்லையா என்று ஒரு முடிவெடுத்துவிட்டு ஓர் பாலினத்தவருக்கு அறிவுரை சொல்ல வந்தால் நல்லதல்லவா?  

இன்னும் கொஞ்ச நல்லவர்கள் அதற்கும் மேலே யோசித்திருக்கிறார்கள். இந்தத் தம்பதிகளுக்கு ஒரு வாழ்த்துச் சொல்லிவிட்டு, இது ஒரு ஹோர்மோன் மாற்றத்தால் ஏற்படுவதாகவும் ஆனால் இது ஏற்புடையது இல்லையென்றும் விலாங்குமீன் விளையாட்டுக் காட்டுகிறார்கள். இப்படியான திருமணங்களை ஊக்குவிப்பது எங்கள் இளையவர்களுக்கு தவறான உதாரணமாகி விடுமாம். அதால மனித இனவிருத்தி பாதிக்கப்படுமாம். அதனால் பொதுவெளியில் இவர்கள் திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் கருத்துப் பகிர வேண்டாமாம். உண்மையில் இவர்களைவிட நேரடியாக எதிர்ப்பவர்களே பரவாயில்லை என்பதுதான் உண்மை. 

இதில் மிகவும் கவலை தரும் விடயம் என்னவென்றால், இவ்வாறு இந்தத் தம்பதிகளை கீழ்த்தரமாக விமர்சிக்கும் பல தமிழர்கள் இலங்கையின் அல்லது தமிழகத்தின் தமிழ் தேசிய உணர்வுள்ளவர்களாக தமது தனிப்பட்ட பக்கத்தில் காட்டிக் கொள்பவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான். 

அதனால் அவர்களுக்கு விளங்கும் மொழியில் இதனை விளக்கலாம் என்று நினைக்கிறேன். இலங்கையில் பெரும்பான்மையாக உள்ள இனத்தவர் சிறுபான்மைத் தமிழர்கள் வாழும் வடக்குக் கிழக்கில் பௌத்த மத, சிங்கள மொழியை திணிக்க முயல்வதை இலங்கைத் தமிழர்கள் விரும்புவதில்லை. அதேபோல தமிழகத்தில் இந்தி மொழித் திணிப்பை தமிழர்கள் விரும்புவதில்லை. காரணம் இவை இரண்டுமே forcible assimilation என்று சொல்லப்படும் வலிந்து திணிக்கும் செயற்பாடு ஆகும். அதையொத்ததுதான் உலகிலேயே சிறுபான்மையினரான LGBTQS சமூகத்தவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும், யாரைத் திருமணம் செய்யலாம், எந்தச் சடங்கைப் பின்பற்றலாம் என்று உலகில் பெரும்பான்மையினராக இருக்கும் நாம் தீர்மானிக்க நினைப்பதுவும் பேசுவதும் என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
https://m.facebook.com/akkampakkam2/photos/a.102039331303828/416668159840942/?type=3&source=48&refid=52&ref=page_internal&__tn__=EH-R

https://www.facebook.com/101881847986243/posts/416668236507601/?d=n

Link to comment
Share on other sites

29 minutes ago, கிருபன் said:

சிறப்பான பதிவு. இணைப்புக்கு நன்றி கிருபன். அந்த இருவரின் விருப்பங்களை மதித்து அவர்களுக்கு வாழ்த்து சொல்வோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விளக்கத்தை எழுதியவருக்கும் இணைத்த @கிருபன் உங்களுக்கும் நன்றிகள்.. 

இன்னுமொரு விடயம், அடிக்கடி இஸ்லாமியர்களை உதாரணம் காட்டுவதால், இஸ்லாமியர்களுக்கும் எங்களுக்கு எவ்வளவு வித்தியாசங்கள் இருக்கிறது என்பது ஒரு புறம் இருந்தாலும் அவர்களைப்போல தனியே பெண்களை விளைநிலங்களாக மட்டும் எங்களது குடும்பங்களில் பார்ப்போமா? முடியாது என நம்புகிறேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

இந்த வகையில் பார்த்தால் எனது ஒப்பீடு பிழைதான். தன்பாலின உந்தலை மருத்துவத்தால் குணமாக்க முடியாது என்பது மிகச்சரி.

ஆனால் மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத தானாக அமையும் ஒன்றைதானே “இயற்கையானது” என்போம்?

ஆம் அப்போ தனபாலின உந்துதல் இயற்கையானது இந்த திருமணச்சடங்கு தான் செயற்கையானது இரண்டுமே பெண்கள் ஏன் ஒருவரை மாப்பிள்ளை என்று அழைக்க வேண்டும் தோழனுக்குப் பதில் தோழியை நிறுத்தியிருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓர் பாலினக் கூட்டு என்றாலும் அதில் male part & female part என்று உள்ளது.

அதேவேளை இருவரும் மாற்றியும் கொள்ளலாம்

வெள்ளைச் சீலையுடன் உள்ளவர் male part என்றபடியால் (?) 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.